அதை வெற்றி பெருமிதத்துடன் கேட்டவன் இன்னும் அவளை சுகமாக துடிக்க விட்டான். கண்கள் கலங்கியே போனது அவளுக்கு.
“ஐயோ எதுக்குங்க இப்படி படுத்துறீங்க...” சுகமாக அலறினாள்.
“அப்போ என் காது குளிர சொல்லுடி...”
“மாட்டேன்...” என்று அவள் மீண்டும் வீம்பு பிடிக்க, பசும்பூண் பாண்டியனிடம் அவளது வீம்பு நிற்க்குமா என்ன... அவளை மீண்டும் மீண்டும் சுகமாக அலறவிட்டவன், மேற்கொண்டு தன் ராஜ்யத்தை அவளிடம் நிலை நாட்டினான்.
அதில் பெரிதும் கலைத்து போனாள் பூம்பொழிலி மாதுமையாள். கண்கள் சிவந்தது அவன் அறிமுகம் செய்த பாடங்களில்.
மூச்சு வாங்கி தளர்ந்து போய் இருந்தாள். விழிகள் தன்னவனை வட்டமிட்டது. ஒற்றை போர்வையில் இருவரும் நெருக்கமாக படுத்து இருக்க, அவனது மார்பில் தலை வைத்து படுத்து இருந்தாள்.
பாண்டியன் கண்களை மூடி இருந்தான். அவனது முகத்தில் மகிழ்வான களைப்பு மீதூறி இருந்தது. அதை விட அகத்தின் மகிழ்ச்சி அதிகம் இருந்தது.
ஆசையுடன் அதை பார்த்தவள் அவனிடம் அசைவு தெரியவும் சட்டென்று கண்களை மூடிக்கொண்டாள். அதை உணர்ந்தவனின் இதழ்களில் மெல்லிய புன்னகை உதித்தது.
“இன்னையில இருந்து கணக்குக்கிட்ட வரவு செலவு எல்லாத்தையும் பாரு... ஆமா கணக்கு பார்க்க தெரியும் தானே..” என்றான்.
திக்கென்றது. அய்யயோ அப்படியே கண்டுக்காம தூங்குற மாதிரியே இருந்துக்குவோம்.. என்று எண்ணி அசையாமல் அப்படியே இருந்தாள்.
“ரொம்ப நடிக்காதடி... ஒழுங்கா வரவு செலவை பாரு... நான் கணக்குக்கிட்ட கேட்பேன். உன்கிட்டயும் கணக்கு கேட்பேன்.. ஒழுங்கா சொல்ற...” மிரட்டினான்.
“கணக்குன்னா இந்த ஒண்ணு மூணு நாலு இருக்குமே அதுவா...?” என்று கேட்டாள். அவளது கேள்வியில் இருந்த தவறை உணராமல் “அதே தான்” என்று சொல்ல,
வேறு வழியில்லாமல் “சரி..” என்றாள்.
பொழுது நன்றாக புலர அவனிடமிருந்து விலகி குளித்து விட்டு வெளியே வரும்பொழுது இன்னொரு புடவை படுக்கையில் இருந்தது.
எடுத்து உடுத்தியவள் கீழே வந்தாள். பாண்டியன் தன் மீது ஒட்டி இருந்த அவளது குங்குமத்தை ரசனையுடன் தொட்டு தடவிவிட்டு அதை அழிக்க மனமில்லாமல் ஒரு சில படங்களை அலைப்பேசியில் எடுத்துக்கொண்டவன் அதன் பின்பே குளிக்க சென்றான்.
சின்ன பாண்டியனுக்கு ராக்காயி உணவு ஊட்டிவிட்டுக்கொண்டு இருக்க, பாண்டியனின் கண்கள் தன்னவளை தேடியது. அவள் அடுப்படியில் இருந்ததை கண்டுக்கொண்டான்.
ஆனாலும் அந்த பக்கமெல்லாம் போய் பழக்கமில்லாததால் அமைதியாக கூடத்தில் வந்து அமர்ந்தான். வெள்ளி அம்பலத்தனை காண பல ஊரின் முக்கியஸ்த்தர்கள் வர, வீட்டின் முன் கூடத்தில் வந்து அமர்ந்தார்கள் இருவரும். மாறன் பூபதி இவர்களின் பின்னே நின்றுக்கொண்டான்.
தாத்தா நின்ற பாண்டியர் சக்கர நாற்காலியில் அமர்ந்தபடி வந்தார். அவரால் நடக்க முடியாமல் போய் கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகி இருந்தது. அப்பொழுதிருந்து சக்கர நாற்காலி தான் எங்கு போவது என்றாலும்.
“என்னப்பா எல்லோரும் ஒண்ணா திரண்டு வந்து இருக்கீங்க. அதுவும் பதினெட்டு பட்டியில இருந்தும். என்ன விசேசம்...” தாத்தா கேட்க,
“ஐயா உங்களுக்கு தெரியாதது ஒண்ணும் இல்ல... நம்ம வடக்கி பட்டில இருந்து வர்ற தண்ணி கிழக்கால பக்கம் திருப்பி விடாம வம்பு பண்ணிக்கிட்டு இருக்காணுவ... ஊர் தலைவரே ஒத்துக்கிட்டாரு. ஆனா சல்லி பயலுங்க ஒத்துக்க மாட்டேன்றானுங்க...” கிழக்கு பக்கம் உள்ள ஊர் தலைவர் பேச,
வடக்கி பட்டி தலைவரை கூர்ந்து பார்த்தார் வெள்ளியம்பலத்தார்.
அந்த நேரம் மீனாச்சி அங்கு வந்திருந்த அத்தனை பேருக்கும் மோரை கலக்கி எடுத்து வந்து கொடுத்தார்.
அதை குடித்தவர்களின் வயிறு குளிர்ந்து போக, அன்னையாய் அனைவரும் அவரை பார்த்தார்கள்.
“நீ என்னவே சொல்ற...” என்று தாத்தா கேட்க,
“எனக்கு சம்மதம் தாணுங்க. பயலுவ தான் வம்பு பண்ணனும்னு இருக்காணுவ...” தலையை சொறிய,
அம்பலத்தார் பாண்டியனை பார்த்தார். அவன் தலையசைக்க,
“இங்க பாரு சொக்கா, நீ புள்ளையையும் கில்லி விட்டு தொட்டிலும் ஆட்டிகிட்டு இருக்குற.. உங்க ஊர்ல என்ன நடக்குதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்... மழை பேஞ்சா கிழக்கால இருந்து வர்ற வாய்க்கால்ல இருந்து தான் உங்க ஊருக்கு தண்ணியே வருது. அதனால தான் அந்த ஏரிய நிறையுது. அது இங்க இருக்க எல்லாருக்கும் தெரியும். அதனால ஏரியில உள்ள தண்ணிக்கு கிழக்கால உள்ள ஊருக்கும் பங்கு இருக்கு.”
“ஒழுங்கா வாய்க்கவுல தண்ணிய திருப்பி விடு... நீர் நிலை எதுக்கு வச்சு இருக்காங்க.. எல்லாருக்கும் உபயோகப் படணும்னு தானே... நீறு மட்டும் வச்சுக்க அது உன்னோட சொந்த கேணி கிடையாது. சல்லி பயலுவ பேச்சை கேட்டுக்கிட்டு ஆடாத..”
“இந்த திட்டத்துக்கு நீ ஒத்து வரலன்னா பதினெட்டு பட்டியில நடக்குற நல்லதுக்கும் சரி கேட்டதுக்கும் சரி உம்மட ஊருல இருந்து ஒரு ஈ காக்கா கூட வரக்கூடாது. அம்புட்டு பேரையும் ஒதுக்கி வச்சிடுவோம்...” வெள்ளியம்பலத்தார் திட்டமாக கூற அந்த ஊரின் தலைவரான சொக்கன் தலை குனிந்தார்.
“ஏம்வே உன்னோட புத்தி இப்படி புல்லு திங்க போவுது... நமக்குள்ள என்னவே வேற்றும... அவன் நல்லா இருந்தா நீ நல்லா இருப்ப. நீ நல்லா இருந்தா அவனும் நல்லா இருப்பான். ஒத்து போய் வாழுங்களே... தண்ணிய விடாம சேர்த்து வச்சி அந்த ஊரு காரன நீ பஞ்சத்துல தள்ளுநீன்னா நாளைக்கு அது உம்மட வம்சத்துகே வந்து விடியும்ல... உன் வம்சம் காலாகாலத்துக்கும் செழிக்கனும் சோக்கா... தண்ணிய கூறு போடாத... போங்களே போயி ஊரோட ஒத்து வாழுங்களே...” தாத்தா சொல்ல ,
“அப்படியே செய்யிறேணுங்க...” சொக்கன் சொல்ல,
“அப்ப சரி... வாங்க எல்லோரும் சாப்பிட்டுட்டு போவீங்க...” தாத்தா எல்லோரையும் அழைக்க, அவர்களுக்கு என்று தனியாக விருந்து நடந்துக்கொண்டு இருக்க, அனைவரும் அரண்மனையின் உள்ளே இருந்த பொதுவாக அமரும் விருந்து கூடத்துக்கு அழைத்து சென்று வயிறார உணவு போட்டார்கள்.
இது போக அரண்மனையில் வேலை செய்யும் பணியாளர்களுக்கு என்று தனியாக விருந்து கூடம் இருக்கும். குடும்ப உறுப்பினர்கள் அமர்ந்து உண்ண தனியாக ஒரு கூடம்... கீழே மட்டும் நான்கு விருந்து கூடமும், முக்கியஸ்த்தர்களுடன் பேசுவதற்காக ஒன்று, நியாயம் சொல்ல ஒன்று, வெளியாட்களுடன் பேச ஒன்று என்று தனி தனியான மூன்று கூடமும் இருந்தது.
பின் பக்கம் விறகு அடுப்பில் எப்பொழுதும் சமையல் வேலை நடந்துக்கொண்டே இருக்கும். பணியாளர்களுக்கு என்று தனியாக தாங்கும் வீடு அந்த வளாகத்திலே இருந்தது.





