வெளியே எங்க போவதற்கும் தேனருவிக்கு அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதனால் அந்த வீட்டை மட்டுமே சுற்றி வர வேண்டிய கட்டாயம் அவளுக்கு.
“வேலைக்கு போறேன்” என்று அவன் முன்னாடி வந்து நின்றாள். அதற்கும் அவன் அனுமதி மறுத்து இருக்க முழுக்க முழுக்க அந்த வீடே கதி என்று ஆகிப்போனது. சுதந்திரமாக சுற்றி திரியும் சிட்டு குருவியை பிடித்து சிறை வைத்தது போல ஆனது அவளின் நிலைமை.
இருந்தாலும் அதையும் சகித்துக் கொண்டு நாட்களை நகர்த்திக் கொண்டு இருந்தாள். பெருமூச்சு விட்டு தன் வேதனைகளை உள்ளுக்குள் போட்டு புதைத்துக் கொண்டு வாழ பழகிக் கொண்டாள்.
அன்றைக்கு காலையில் குளித்து முடித்து வெளியே வந்த நேரம் மலையமான் அவளை நெருங்கி வந்தான். அவனது வருகை எதற்காக இருக்கும் என்பது புரிய, சட்டென்று அவளின் உடம்பில் ஒரு இறுக்கம் வந்தது.
அவனை கொஞ்சம் கூட அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. தங்கைக்காக என்று சொல்லி அவளின் உணர்வுகளில் விளையாடுவது எந்த விதத்திலும் சரியில்லையே. அதை அவனிடம் சொல்லவும் முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தாள்.
அவளின் தவிப்பை எல்லாம் சட்டை செய்யாமல் அவளை நெருங்கி வந்த மலையமான் அவள் மீது மோதாமல் அவளின் கழுத்தில் மட்டும் தன் முகத்தை புதைத்தான். புதைத்த அடுத்த நொடி தன் பற்களால் அவளின் கழுத்தை கவ்வி இழுக்க, வழி உயிர் போய் விட்டது அவளுக்கு. அனிச்சை செயலாக தன்னிடம் இருந்து அவனை தள்ளி “அம்மா” என்று கண்களில் கண்ணீர் நிறைய அலறி விட்டாள்.
அத்தனை வலுவாக கடித்து இருந்தான். இதை கொஞ்சமும் எதிர்பார்க்காத தேனருவிக்கு வலியில் உயிர் போய் விட்டது.
“நீங்க எல்லாம் மனுசன் தானா? ஏன் இப்படி பண்றீங்க..? கொஞ்சம் கூட மனசாட்சி இல்லாம இப்படி நடந்துக்குறீங்களே. உங்களுக்கு என்ன பாவம் பண்ணேன். ஏன் என்னை இப்படி சித்ரவதை செய்றீங்க?” அவனின் முகம் பார்த்து கண்ணீரோடு கேள்வி கேட்டவளை கண்டு கொள்ளாமல்,
“காயம் வெளில தெரியுது தானே..” என்று அவளின் காயத்தை ஆராய்ந்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
தேனருவி திகைத்துப் போய் விட்டாள். இவனிடம் பேசுவதே வீண் என்று சிலையாகி விட்டாள். தன் வலி இவனுக்கு ஒரு பொருட்டே இல்லை அல்லவா? வேதனையில் மனம் சுருங்கிப் போனது.
மனைவி என்கிற இறக்கம் வேணாம். ஆனால் சக மனுசி என்கிற அனுசரணையாவது இருந்து இருக்கலாம் எண்ணியவள் முற்றிலும் தனக்குள் இறுகிப் போய் விட்டாள்.
மலையமானின் மீது இருந்த கொஞ்ச நஞ்ச உணர்வும் செத்துப் போய் விட்டது அவளுக்கு. சுயநல பேயாக அவளின் கண்னுக்கு அவன் தெரிந்தான்.
இரக்கமற்ற அவன் செயலில் நொந்துப் போனவள் அடுத்த முறை அவனை நெருங்கவே விடவில்லை.
“ஏய் என்னடி ரொம்ப பண்ணிட்டு இருக்க. உன்னை எதுகாக்க கூட்டிட்டு வந்தேன்னு தெரியும் தானே.” என்று அவன் கோவமாக கர்ஜித்தான்.
“தெரியும்.. அதை நீங்க செய்யனும்னு இனி எந்த அவசியமும் இல்லை..” என்றவள் தன் நகங்களால் பட்டு போன்ற இதழ்ளை கில்லி நசுக்கி காயம் செய்துக் கொண்டவள், “இதை எனக்கு நானே பண்ணிக்கிறேன்.. இனி நீங்க இதை செய்ய வேண்டாம். இதை செய்யிறதுக்காக என்னை நெருங்கி வரவும் வேண்டாம்..” அழுத்தமாக சொன்னவள், தன் கழுத்திலும் பற்தடம் பதியுமாறு காயம் செய்துக் கொண்டாள்.
அவளுக்கு அவளே காயம் குடுத்துக் கொண்டதை கூர்ந்து பார்த்தவன் தோளை உலுக்கிக் கொண்டு போய் விட்டான். அதன் பிறகு அறையில் வைத்து அவளை நெருங்கவில்லை. ஆனால் அவள் தினமும் எதாவது ஒரு காயம் செய்துக் கொள்கிறாளா என்று மட்டும் பார்த்துக் கொள்வான்.
அதை செய்ய மறந்தால் ஒரு முறை முறைப்பான். அவன் முறைப்பதிலே விசயத்தை யூகித்துக் கொள்பவள் அடுத்த நொடியே தாம்பத்தியத்தில் ஏற்படும் அந்தரங்க காயம் போல செய்துக் கொண்டு கீழே போய் விடுவாள்.
ஆனால் கீழே தங்கையோடு இருக்கும் சமயம் அதுவும் மூணு நேர உணவுக்குப் பிறகும் அவளை இடையோடு இழுத்து தன் நெஞ்சோடு இடித்து நிறுத்தி இணைபிரியா ஆத்மார்த்தமான தம்பதியர்கள் போல, அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொள்ள வழக்கப்படுத்திக் கொண்டான். அப்பொழுது அவளை முழுமையாக தொட்டு உறவாட மட்டும் முடியும் அவனால்.
தனிமை பொழுதில் கண் பார்வையால் கூட அவளை தீண்ட மாட்டான்.
அவளின் இதழ்களில் தன் இதழ்களை மேய விட்டு அவளின் இடையை கசக்கிப் பிடித்து என செய்ய மறப்பதே இல்லை.
அதற்கு ஒத்துழைப்பு குடுக்கவில்லை என்றால் அவ்வளவு தான்.. தேனருவியை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவான். அவனின் வாய்க்கு பாய்ந்து அவன் இழுத்த இழுப்புக்கு செல்லும் ரோபோ போல மாறி இருந்தாள்.
நாட்கள் நகர்ந்ததே தவிர தென்ருவியின் வாழ்க்கையில் எந்த மாற்றமும் இருக்கவில்லை. அப்பொழுது தான் அந்த நிகழ்வு நடந்தது.
காலை நேர உணர்வுக்கு பிறகு அலுவலகம் கிளம்பி மலையமான் வெளியே வர, தேனருவி அவனை வழியனுப்ப வந்தாள்.
வந்தவளை இடையோடு கட்டிப் பிடித்து அவளின் கழுத்தில் முகம் புதைத்தவன் இன்றைக்கு சற்றே எல்லை மீறி அவளின் மார்பில் முகம் புதைத்தான்.
“ஹாங்..” என்று இவள் அதிர்ந்துப் போனாள்.
“என்ன பண்றீங்க? ரொம்ப எல்லை மீறி போறீங்க நீங்க?” பற்களுக்கு இடையில் வார்த்தைகளை வீசினாள். அதை செவி மடுத்த பொழுதும் கண்டுக் கொள்ளாமல், அவளின் மார்பில் தன் முகத்தை வைத்து இன்னும் அழுத்தியவன் நாசியில் அவளின் மணத்தை உள் இழுத்துக் கொண்டான்.
அவனது செயலில் இவள் தான் கூசிப்போனாள்.
“கடவுளே ஏன் இந்த மாதிரி அரக்க தனமா நடந்துக்குறீங்க?” அவனின் காதுக்குள் கேட்டவளை விழிகளை மட்டும் நிமிர்த்தி அவளை பார்த்தவன்,
“உன் மேல ஆசை பட்டு ஒண்ணும் நான் இப்படி நடந்துக்கல.. என் தங்கச்சிக்கு சில விசயங்கள் தெரியவரணும்..” என்றான். அதைக்கேட்டவளுக்கு எங்கிருந்து தான் அவ்வளவு கோவம் வந்ததோ தெரியவில்லை.
“இதுக்கு பேசாம நீங்க என் கூட படுக்குறதை லைவா உங்க தங்கச்சிக்கு காட்டலாமே?” ஆத்திரத்தில் சீறினாள்.
அடுத்த நிமிடம் அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டு இருந்தான் மலையமான். அடியை வாங்கிக் கொண்டவள் கொஞ்சமும் கலங்கவில்லை. இன்னும் அடிக்கிறியா அடி என்பது போல தான் நின்றாள் தேனருவி.
“என்னடி விட்டா ரொம்ப பேசிட்டு இருக்க... தொலைச்சு கட்டிடுவேன் பார்த்துக்க.. யார் கிட்ட பேசுறோம்னு முதல்ல தெரிஞ்சு பேசு.. அதை விட முக்கியம் என்ன பேசுறோம்னு தெரிஞ்சு பேசு.. இல்லன்னா இதை விட அதிகமா அடி வாங்க வேண்டியது இருக்கும்” எச்சரித்தான்.
அவனின் கண்களில் தெரிந்த சீற்றமும் ஆக்ரோஷமும் அவளை கொஞ்சமும் அசைக்கவில்லை.
“நீங்க செய்யிறதுக்கு பெயர் அது தான். இதை சுட்டி காட்டுனா நீங்க அடிப்பீங்களா? அப்படின்னா நான் இதுக்கு மேலையும் பேசுவேன்.. என்னை அடிச்சு கொன்னே போட்டாலும் நான் பேச தான் செய்வேன்.. ஏன்னா நீங்க என்னை ஒவ்வொரு நிமிடமும் கொன்னுட்டு இருக்கீங்க.. என் உணர்வுகளை கொன்னுட்டு இருக்கீங்க.. என் மானத்தை கூறு போட்டுட்டு இருக்கீங்க..” ஆவேசத்துடன் சொன்னவளின் பின்னந்தலை இறுக பற்றி தன் முகத்துக்கு நேராக அவளின் முகத்தை கொண்டு வந்து விழிகளாலே நெருப்பை கக்கியவன்,
“அப்படி நீ பேசுனா.. என் தங்கைக்கு முன்னாடியே உன் கூட படுக்கவும் தயங்க மாட்டேன்” என்றான் பட்டென்று.
தன் கழுத்தில் தாலி கட்டிய கணவனிடம் இருந்து இப்படி ஒரு வார்த்தை கேட்க பெற்றவளுக்கு மூச்சே நின்றுப் போனது. தலையில் வானமே இடிந்து விழுந்தது போல உணர்ந்தவள் அவனை அடிபட்ட பார்வை பார்த்தாள்.
அவளின் விழிகளில் தென்பட்ட வலியை மலையமானும் உணர்ந்துக் கொண்டான். அவனும் வேண்டுமென்று இந்த வார்த்தைகளை சொல்லவில்லை. அவள் பேச பேச இவனுக்கும் கோவம் வந்து விட்டது.. அதனால் வார்த்தைகள் தடித்துப் போய் வந்து விட்டது.
அதுவும் இவள் ஆரம்பிக்க போய் தானே தான் அந்த வார்த்தையை சொன்னது. இல்லை என்றால் என் வாயில் இருந்து ஏன் ஆந்த மாதிரியான வார்த்தைகள் எல்லாம் வரப்போகிறது.. தவறு இவள் மீது தான் என்று சாதித்தான்.
ஆனாலும் அவள் பெரிதாக கலங்கி நின்ற தோற்றம் மலையமானை அசைத்துப் பார்த்தது.
“ஹேய்” என்று அவளை உலுக்க, அவள் அப்படியே உடைந்த சிலையாய் தரையில் வீழ்ந்தாள்.
“ப்ச்..” என்று தலையை நீவிக் கொண்டவன் கைகளில் அவளை ஏந்திக் கொண்டு தன் அறைக்குச் சென்றான்.
அவர்கள் பேசியது எல்லாம் காதில் விழவில்லை. ஆனால் இருவரின் கோவமும் அதன் பிறகு அண்ணன் அவளை தூக்கிச் செல்வதையும் பார்த்துக் கொண்டு இருந்த இளவரசிக்கு என்னவோ போல இருந்தது.
பின்னாடியே போய் அவளுக்கு என்ன ஆச்சு என்று போய் பார்க்கணுமா? என்று அவளின் மனது கேள்வி கேட்டது. ஆனால் அதை செயல் படுத்தவே இல்லை அவள்.
தேனருவியை கையில் ஏந்திக் கொண்டு சென்றவன் படுக்கையில் படுக்க வைத்து விட்டு நிமிர்ந்தவன் அவளின் கண்களை தான் பார்த்தான்.
அவளின் கண்களில் இருந்த மெல்லிய நீர் படலம் அவனை வெகுவாக அசைத்துப் போட்டத்து அந்த நாள் முழுவதும்.





