பிரகாஷ் தம்பதியர்களை பெரியவர்களிடம் ஆசீர்வாதம் வாங்க சொல்ல அனு கணேசன் சித்ரா தம்பதியிடம் மட்டுமே ஆசீர்வாதம் வாங்கினாள். சண்முகம் வள்ளியிடம் பிரகாஷ் மட்டுமே ஆசீர்வாதம் வாங்கினான்.
அதில் சண்முக தம்பதியர்களுக்கு சினம் எழுந்தாலும் காட்டிக்கொள்ளவில்லை.
பின் அங்கிருந்த அனைவரும் அவர்களை வாழ்த்தினார்கள். பிறைசூடனுக்கு பெருத்த அவமானமாய் இருந்தது. அருகில் நின்ற ஆராவை தன் பார்வையாலே சுட்டு பொசுக்கினான்.
அவனது வலி புரிந்தாலும் இப்போது எதவும் செய்ய முடியாத நிலையில் இருந்தாள் ஆரா. அங்கு நடக்கும் சடங்குகளை காண பிடிக்காமல் விருட்டென்று பிறைசூடன் கிளம்ப அனுவுக்கு கண்கள் கலங்கியது. இப்போ எது சொன்னாலும் அவர் ஏற்றுகொள்ள மாட்டார் என்று உணர்ந்தவள் அமைதியாக அனுவிற்கு உதவியாக அங்கவே இருந்தாள்.
அதில் பிரகாஷ் கூட வியந்து பொய் ஆராவை பார்த்தான். பின் சிலபல சடங்குகள் செய்துவிட்டு மணமக்களை வீட்டுக்கு அழைத்து சென்றார்கள்.
அங்கே சென்று வீட்டில் விளக்கேற்றி பாலும் பலமும் உண்டுவிட்டு பிரகாஷ் அவனது அறைக்கு சென்றுவிட அனுவிற்கு துணையாய் ஆரா அங்கே வந்து அவளை அத்தையின் அறைக்கு அழைத்து சென்று ஓய்வெடுக்க சொல்ல
“ஏன் என் மேல இப்போ நீ கொலைவெறியில இருக்க தானே” என்று நக்கல் பண்ண
“கண்டிப்பா அதுல உனக்கென்ன சந்தேகம்” என்று சொன்னவள் அனுவின் தலையில் இருந்த அலங்காரத்தை அவளுக்கு வலிக்காமல் எடுத்து விட்டுக்கொண்டு இருந்தாள்.
“ம்ம் பின்ன எப்படி எனக்கு துணையாவே இருக்குற...”
“நான் உனக்கு துணையா இருக்கல.. பிரகாஷ் மாமா பொண்டாட்டிக்கு உதவி பண்றேன் அவ்வளவு தான்” என்று சொன்னவளை கண்ணாடியின் வழியாக ஆராய்ந்தாள் அனு.
ஆராவின் கண்கள் கண்ணீர் இல்லாமல் வற்றி போய் கலங்கிய சுவடு கூட இல்லாமல் இருந்தது.
“ரொம்ப அழுத்தமா இருக்குறடி” என்றாள்.
“அப்படியெல்லாம் ஒன்னும் இல்லை. இந்த புடவை ரொம்ப கனமா இருக்கும். இரு நான் போய் உனக்கு மாற்று புடவை எடுத்துட்டு வரேன்” என்று வெளியே செல்ல
“புடவை வேணாம் டாப் லேகின் எடுத்துட்டு வா” என்றால் அதிகாரமாய்.
“இன்னைக்கு ஒரு நாளாவது புடவை கட்டலாமே”
“ம்கும் புடவை எனக்கு பிடிக்காது” என்றவள் குளியல் அறைக்கு சென்றுவிட்டாள்.
உன்னை மாத்த முடியுமா என்று எண்ணியபடி அனுவின் பையிலிருந்து அவள் கேட்ட உடையை கொண்டு வந்து கட்டிலில் வைத்து விட்டு கதவை சாற்றிவிட்டு சென்றாள்.
இந்த நேரம் சித்ரா என்ன பாடு பட்டுக்கொண்டு இருப்பாரோ என்ற நினைவு வர வேகமாய் அவரிடம் சென்றாள். அங்கு சக்கரநாற்காலியில் அமர்ந்து வெளியில் தெரிந்த வானத்தை வெறித்துக்கொண்டு இருந்தார்.
அவருக்கு பிறைசூடனின் திருமணம் நின்றதில் பெரும் வேதனை சூழ்ந்தது.
ஆரா இனி இங்கே தன்னுடனே இருப்பாள் என்று எண்ணிய எண்ணத்தில் ஒரு லாரி மண் வந்து விழ கண்களில் சோகம் குடிக்கொண்டது.
ஆசை பட்ட மனசு இரண்டும் ஒன்று இணையும் நேரத்தில் எல்லாமே கை தவறி போய் ஆனது போல இருந்தது நிலை.
அவரது வருத்தமும் வேதனையையும் புரிந்துக்கொண்டவள் “அத்தை” என்று அவரின் தோளில் கை வைத்து அவரை தன் பக்கம் திருப்ப
எதுவும் பேசாமல் அவளை நிமிர்ந்து பார்த்தார். “கோவமா” என்றாள்.
“ப்ச் இல்லடா... நீ செஞ்சது சரி தான். ஆனா பிரைசூடனை நினைச்சாதான் கொஞ்சம் கஷ்டமா இருக்கு”
“அவரை நான் பார்த்துக்குறேன் அத்தை நீங்க கவலை படாதீங்க.. உங்க உடம்புக்கு ஏதாவது வந்துட்டா எங்களால தாங்க முடியாது. மனதை போட்டு அலட்டிக்காம ஓய்வெடுங்க” அவரை கை தாங்களாக படுக்கையில் அமர வைத்து படுக்க வைத்தவள் சூடான காபியை கொண்டு வந்து பருக கொடுத்து சிறிது நேரம் தூங்க சொன்னாள்.
பின் பிறைசூடனுக்கு காபி எடுத்துக்கொண்டு அவனது அறைக்கு சென்றாள்.
அங்கே தலைக்கு மேல் கண்களை இரு கரங்களாலும் மறைத்துக்கொண்டு இருந்தவனை கண்டு உள்ளம் துக்கத்தில் இறங்கியது.
திருமணம் நடந்து இருந்தால் இப்போது இவன் இப்படியா இருந்து இருப்பன் என்ற எண்ணம் வர ஆழ்ந்து மூச்சை இழுத்து விட்டு அவனது அருகே சென்று அமர்ந்தாள்.
அவளது வருகையை உணர்ந்தும் அவன் எந்த அரவமும் செய்ய வில்லை.
“மாமா” அவனிடம் எந்த அசைவும் இல்லை.
“என் மேல கோவமா”
“ம்ஹும் என் மேல தான் எனக்கு கோவம். போயும் போயும் உன்னை காதலிச்சேன் பத்தியா என்னை சொல்லன்னும்டி. காதலுச்ச தோட நிறுத்தாம உன்னை கல்யாணமும் செய்யனும்னு நினைச்சி எல்லாம் செய்தேன் பத்தியா எனக்கு இதவும் வேணும் இன்னமும் வேணும்டி” என்று வெடித்தான்.
“மாமா” தயக்கத்துடன் அழைத்தவளை வெறுப்பாய் பார்த்தவன்
“உனக்கு அனு தான் முக்கியமா போய்ட்டா இல்ல.. நானோ என் கவுரவமோ, என் மதிப்போ உனக்கு எதுவும் பெருசா தெரியல இல்ல..
எத்தனை பேர் வந்து இருந்தாங்க தெரியுமா... அமைச்சர் முதல் கொண்டு வர்த்தக துறையில இருக்குற பல மல்டி மில்லினர்கள் எல்லாமே வந்து இருந்தாங்க. அத்தனை பேரின் மத்தியிலும் என் மூஞ்சில கரிய பூசிட்டில்ல..
இனி நீயே வந்து கல்யாணம் செய்யலாம்னு சொன்னாலும் இனி உன்னை கல்யாணம் செய்ய மாட்டேண்டி.” என்று ஆத்திரமாக கத்தியவனை கண்டு கண்கள் கலங்கியது.
காயம் பட்ட ஒரு மனதை பார்த்தவள், தன் செயலால் காயம் பட போகும் மனதை கவனிக்க தவறிவிட்டாள். சொன்னாள் புரிந்து கொள்ளுவான் என்ற நம்பிக்கை இப்போது ஆட்டம் காட்டியது.
“நான் செஞ்சது மன்னிக்க முடியாத தப்பு தான் மாமா.. ஆனா நீயும் என்னை வெறுத்தா நான் யார் கிட்ட போறது” என்று அவன் நெஞ்சில் சாய்ந்து கொண்டு அழுதவளை இரக்கமே இல்லாமல் பார்த்தான்.
அவனுக்கு அத்தனை பேரின் முன்னிலும் ஏற்பட்ட அவமானம் கூட பெரிதாய் தெரியவில்லை. உயிருக்கு உயிராய் கிட்ட தட்ட இருபது வருடங்களுக்கு மேலாக நேசித்த ஒரு உயிர் இன்று தன்னை ஒதுக்கி வைத்துவிட்டதே என்கிற ஆத்திரம் தான் அவனுக்கு.
“எப்படிடி என்னை விட்டு தர மனசு வந்தது. அப்போ நீ என்னை நேசிச்சது பொய் தானே ஆரா” வலியுடன் கேட்டவனை கண்டு குலுங்கி அழுதாள்.
“சத்தியமா இல்ல மாமா... என் காதல் நிஜம்.”
“போய் சொல்லாதடி, உனக்கு அனுவோட மனநிலை தான் முக்கியம். நான் கிடையாது. இல்லன்னா ஒரு நொடியில என் உணர்வுகளை என் எதிர்காலத்தை நீ தூக்கி விசி இருப்பியா...
நான் தான் உன்னை உருகி உருகி காதலிச்சுகிட்டு இருந்திருக்கிறேன். நீ என் மேல பாசம் கூட வைக்காம ஏனோ தானோன்னு தான் இருந்து இருக்குற.. அது கூட புருஞ்சுக்க முடியாத முட்டாளாய் உன்னையே சுத்தி வந்திருக்கிறேன் பாரேன்” என்று ஆற்றாமையாக பேசியவனை கண்டு கண்களில் கண்ணீர் வழிந்தது.
எதுவுமே பேச முடியாத நிலையில் இருந்தாள். எது சொன்னாலும் ஏற்க்க கூடிய மன நிலையில் அவன் இல்லை என்பது புரிய தளர்ந்து போனாள்.
அவனை எதிர்கொள்ள முடியாமல் அவன் முன்பு தலை குன்டிந்து நின்றாள்.
“பதில் எதுவும் பேச முடியல தானே...” என்று காயத்தில் இன்னும் கிளறி விட்டவனை வேதனையோடு பார்த்தாள்.
“பதில் பேசறதுக்கு ஒரு நிமிடம் போதும் மாமா.. ஆனா நீ அதை எதுக்க மாட்ட. இப்போ நீ அந்த நிதானத்துல இல்ல.” மனதோடு பேசினாள். இதையும் வாய் விட்டு சொல்லி அவனிடம் இன்னும் வாங்கி கட்டிக்கொள்ள தெம்பு இல்லாமல் அவனின் முன் ஒடுங்கி நின்றாள்.
ஆற்ற முடியாத வேதனையில் இருந்தான் பிறைசூடன்.
அவனது வேதனை புரிய அவனின் முன் வந்து இன்னும் கோவத்தை தூண்டாமல் ஒதுங்கி இருக்க வேண்டும் என்று முடிவெடுத்துக்கொண்டாள்.
அனுவை அனுசரித்துப் போக
ஆராவுக்கு என்ன வந்தது
அன்பால் திருத்தலாம் என்றோ
அரவணைப்பால் மாற்றி வடலாம் என்று
ஆரா எண்ணுகிறார்களோ??
அதற்கு அவள் காதலை
அடகு வைத்து விட்டாலோ
அவமானத்தில் காதலன்
ஆனாலும் புரிந்து கொள்வான் என
அனு நினைத்து இருப்பாளோ???
இதெல்லாம் கொஞ்சம் கூட நல்லா இல்ல ரைட்டர்.....
இவ என்ன பாம்பை பால் ஊத்தி வளர்த்துட்டு இருக்கா.....
அவளோ செய்த அவளை பார்க்க தெரியுது....
இப்ப வரை அவளை அதிகம் காய பட விடாத அவனை மொத்தமா கொன்னு போட்டுட்டா....
இப்ப என்ன சொல்லி அவனை சமாதானம் செய்வா????
இதே நிலை பின்னாடி வந்தாலும் இப்படி தான் பாதில் விட்டு போருவாலா என்ன??????
இவ வேணாம் சூடன் உனக்கு