மெல்ல திரும்பி பார்த்தாள் பயத்தில். மை பூசிய விழிகள் அவனது தொடுகையால் சிவந்து போய் இருப்பதை ரசித்துக்கொண்டே அவளின் வெற்றிடையில் தன் கரத்தை பதித்து அழுத்தி பிடித்தான்.
அதில் ஜெர்க்கானவளின் விழிகள் அகண்டது இன்னும் பெரிதாக. அதையும் ரசித்தவன் அவளின் காதோரம், “இப்பவே போகலாமாடி..?” என்று கேட்டான்.
“ஏ... எங்க...” திணறினாள்.
“அந்த மலை அருவிக்கு தான்...” என்றவனது உதடுகள் அவளின் காதில் உரச, தன்னுள் ஒடுங்கினாள்.
“அது நான் சும்மா பையனுக்காக...” சொல்லி முடிக்கும் முன்பே,
“அம்மா அம்மா...” என்று முன்னிருந்த பொற்கையன் துள்ளிக்கொண்டு அழைக்க, அதில் அவன் கீழே விழுந்து விடாமல் கெட்டியாக பிடித்துக்கொண்டவள்,
“என்னடா ஆச்சு... எதுக்கு இப்படி துள்ளுற...” என்றவளிடம் தூத்தில் தெரிந்த மயிலை சுட்டிக்காட்டினான்.
“மயில் டா அது பேரு... தொகை பாரு எவ்வளவு பெருசா இருக்கு...” மகனுக்கு பதில் சொன்னவளை இம்சை பண்ண பாண்டியனுக்கு மனம் முரண்ட, இடுப்பில் பதித்திருந்த கையை இன்னும் சற்று அழுத்தி பதிக்க ஒரு நொடி திகைத்து போனாள்.
திரும்பி அவனை பார்த்தாள். பார்த்தவளின் இதழ்களை ஒரு நொடி தன் இதழ்களால் பற்றி விடுவித்தவன், கட்டிலில் சென்று படுத்துவிட்டான்.
அவன் விலகி சென்றபின்பே ஆசுவாசம் அடைந்தவள் தன் மகனிடம் கவனத்தை திருப்பினாள். மீனாச்சியம்மையுடன் இன்னும் சில ஆளுக்காரர்களும் உணவினை எடுத்துக்கொண்டு மேலே வந்து பரிமாற,
“இவ பார்த்துக்குவா ம்மா.. நீங்க போய் வந்தவங்களை கவனிங்க...” என்றான்.
“சரிப்பா...” என்றவர் கீழே செல்ல, மாதுமையாள் இரண்டு தட்டில் உணவை போட்டு ஒன்றை பாண்டியனிடம் கொடுத்தவள், இன்னொன்றை கொற்கையனிடம் கொடுக்க,
“ஊட்டி விட சொன்னேனே...” அவன் முறைப்பாக சொல்ல,
“மறந்துட்டேன் டா செல்ல குட்டி..” கையில் தட்டை எடுத்துக்கொண்டு கொற்கையனை இடுப்பில் தூக்கிக்கொண்டு மீண்டும் குறுங்கண்ணோரம் சென்று நின்று வேடிக்கை காட்டிக்கொண்டே உணவினை ஊட்டி விட்டாள்.
அதை அமர்ந்த படி கண்ணெடுக்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் பசும்பூண் பாண்டியன். தன் முதுகில் ஊசி குத்துவதை போல் ஓர் உணர்வு ஏற்பட, திரும்பி பார்த்தாள்.
பாண்டியன் அவளை தான் துளைப்பது போல பார்த்துக்கொண்டு இருந்தான். அவனது பார்வையை கண்டவளுக்கு திக்கென்று இருந்தது.





