“உன்னை கல்யாணம் பண்ணிட்டு வந்தது எதுக்குன்னு சொல்லி இருக்கனா இல்லையா?” நிதானமாக கேட்டான் மலையமான்.
அவனது நிதானத்தில் உள்ளுக்குள் பயம் பிடித்துக் கொண்டது தேனருவிக்கு.
“இல்ல.. சாரி..” என்று முணகியவள்,
“அப்பா கூட இருக்கணும் போல இருந்தது.. இதுநாள் வரை நான் அவங்களை விட்டு பிரிஞ்சதே இல்ல” தலையை குனிந்துக் கொண்டே தான் சொன்னாள். அவனை நிமிர்ந்தே பார்க்கவில்லை.
நிமிர்ந்து பார்த்தால் பதிலுறையே அவளால் குடுக்க முடியாது போகும். எனவே அவனை பார்ப்பதை தவிர்த்தாள்.
“அப்பா கூடவே இருக்கணும்னா என்னை எதுக்கு கல்யாணம் பண்ணிக்கிட்ட? உன் அப்பன் கூடவே இருக்க வேண்டீயது தானே..” சுல்லேன்று கேட்டான்.
இவளுக்கு கண்கள் கலங்கியது. பதில் எதுவும் பேசவில்லை.
“பேசி தொலை.. இப்படியே இரிடேட் பண்ணிட்டு இருந்தன்னு வை. உன்னை எதுவும் செய்ய மாட்டேன். உன் தொம்பி இருக்கான் இல்லையா அவன் சோலியை முடிச்சுட்டுடுவேன் பார்த்துக்க” அப்பட்டமாக மிரட்டினான்.
அவனது மிரட்டலில் தேகம் மொத்தமும் நடுங்கிப் போனது.
“என் இயலாமையை உங்களுக்கு ஆதரவா யூஸ் பண்ணிக்கிறீங்க” குற்றம் சுமத்தினாள்.
“வேற வழியில்லை.. என்கிட்டே கை நீட்டி உங்கப்பன் பணம் வாங்கி இருக்கானே.. உன்னை காசு குட்டுத்து வாங்கி இருக்கேனே.. நட்டம் ஆகிப் போச்சுன்னா என்ன பண்றது” நக்கலாக சொன்னான்.
“எங்கப்பா பணம் வாங்கல.. என்னை விற்கவும் இல்லை” மனதுக்குள் சொல்லிக் கொண்டவள், அதன் பிறகு அவனை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசவில்லை. அவளின் மௌனத்தை பார்த்தவன்,
“இப்படியே என் கிட்ட வாய் பேசாம இருந்தா தான் உனக்கு நல்லது.. உன் குடும்பத்துக்கும் நல்லது.. இல்லன்னா உனக்கு குடுக்குற குடைச்சலை விட உன் குடும்பத்துக்கு அதிக குடைச்சலை குடுக்க வேண்டியது வரும்..” எச்சரித்தவன்,
“இது தான் முதல் முறையா இருக்கணும் உன்னை தேட விடுறது.. இன்னொரு முறை உன்னை தேடுற அளவுக்கு வச்கிக்கிட்டன்னா என்னோட இன்னொரு முகத்தை உனக்கு காட்ட வேண்டியது வரும்..” அடிக்குரலில் உறுமினான். எதிர்த்து பேசிவிட மனம் துடித்தது. ஆனால் அதை ஒதுக்கி விட்டு தலையை ஆட்டினாள் ஒப்புதலாக.
அதன் பிறகு வந்த நாட்கள் அனைத்தும் அவன் கண் எதிரில் கூப்பிடும் தூரத்திலே இருந்துக் கொண்டாள். அவன் போன பிறகு தான் இந்த வீட்டை வளம் வருவாள். வெறுமென சுத்தி மட்டும் தான் பார்ப்பாள். மற்ற படி அந்த ஆடம்பரங்களை ஒரு பொழுதும் அவள் உபயோகப்படுத்துவதே இல்லை.
முன் கூடத்தில் போட்டு இருந்த பெரிய கண்ணாடி ஊஞ்சல் அவளை மிகவும் ஈர்த்தது. ஆனால் கணவனின் சுடு சொல் அவளை நாட விடவில்லை.
தோட்டத்துக்கு போவாள். கல் இருக்கையில் அமர்ந்து வெகு நேரம் வேடிக்கை பார்ப்பாள். சும்மா இருப்பது அத்தனை அலுப்பாக இருந்தது.
தெண்டச்சோறு என்று அவன் அவ்வப்பொழுது வசைப்பாடுவது நெஞ்சை குத்திக் கொண்டே இருக்க, முந்தானையை இடுப்பில் சொருகிக் கொண்டு தோட்டத்தில் இறங்கி விட்டாள்.
வெளியே வேலைக்கு செல்கிறேன் என்றவளுக்கு தடை போட்டு விட்டான். வீட்டில் வேலை செய்ய நிறைய ஆட்கள் இருந்தார்கள். எனவே அவள் சுதந்திரமாக உலாவ இந்த தோட்டத்தை எடுத்துக் கொண்டாள். அதே போல தன் உணவை தானே சமைத்துக் கொண்டாள்.
வேணாம் மேடம் நாங்க செய்து தரோம் என்று பணியாளர்கள் பயந்து கேட்ட பொழுது கூட “போர் அடிக்கிது. அவங்க ரெண்டு பேருக்கும் நீங்க செய்து குடுங்க. எனக்கு நான் செஞ்சுக்குறேன்” ஒரேடியாக மறுத்து விட்டவள் தனக்கு வேண்டிய உணவுகளை எளிமையாக சமைத்துக் கொண்டாள்.
அவள் குடுக்கும் தாளிப்புக்கே அங்கு பணி புரியும் அத்தனை வேலையாட்களும் அடிமை.
“சூப்பரா சமைக்கிறீங்க மேடம்.. வாசமே கட்டி இழுக்குது” பணியாளர்களும் சேர்ந்துக் கொள்வார்கள் ஆவலுடன். இவளும் டேஸ்ட்டுக்கு அவர்களுக்கு குடுப்பாள்.
அவர்களுக்கும் சேர்த்து செய்ய சொல்லி ஆசை தான். ஆனால் அவள் முதலாளி ஆயிற்றே.. எனவே சொல்ல முடியாமல் அவள் நீட்டும் சிறிதளவு உணவை வாங்கி வாயில் போட்டுக் கொள்வார்கள் பிரசாதம் போல..
கீரை விதை வாங்கி வர சொல்லி, வீட்டிலே பதியம் போட்டு கீரை வளர்த்தாள். தோட்டத்தில் வேலை பார்க்கும் ஆட்களுடன் இவள் சேர்ந்துக் கொண்டு வேலை செய்வதை அவ்வப்பொழுது பார்ப்பான் தான். ஆனால் பெரிதாக அலட்டிக் கொள்ள மாட்டான்.
“செய்யட்டும் தின்னுட்டு சும்மா தானே இருக்கிறாள்” என்று நக்கல் பண்ணிக் கொள்வான்.
“ம்மா இந்த வகை செடி மட்டும் சரியாவே வேர் பிடிக்க மாட்டிக்கிது.. நானும் என்னென்னவோ செய்து பார்த்துட்டேன். காய்ஞ்சி போகுது, இல்ல அழுகி போகுது.. தழையவே மாட்டேங்குது கொஞ்சம் பாருங்களேன்” என்று பணிவாக பணியாளர் சொல்ல,
அந்த செடியை பார்த்தாள். பூ வைக்கும் வகையை சார்ந்ததாக இருந்தது. மணிவாணனோடு வயலுக்கு சென்று இருந்ததால் பயிர்களை பற்றி தெரிந்து வைத்து இருந்தாள். அதோடு அவர்கள் ஊரில் அக்ரிகல்ச்சர் படித்து விட்டு கல்லூரியில் பேராசிரியராக பணி புரிந்து வரும் பெண்மணியோடு அவளுக்கு நல்ல பழக்கம். எனவே அவர் பல விசயங்களை அவளுக்கு கற்று குடுத்து இருந்தார்.
இவளுக்கு அக்ரிகல்ச்சர் படிக்க வேண்டும் என்று தான் ஆசை. ஆனால் வீட்டு சூழ்நிலை அவளை வெறும் டிகிரியை தேர்ந்தெடுக்க வைத்தது.
அந்த பேராசிரியர் வீட்டிலே சின்ன நர்சரி மாதிரி வைத்து இருந்தார். அதில் இவளும் போய் வேலை பார்த்து வருவாள் விடுமுறை நாட்களில்.
அப்படி கற்றுக் கொண்டது தான் என்ன செடிகளுக்கு என்ன மருந்து வைப்பது, இயற்கை உரம் தயாரிப்பது எப்படி என்று. அதிக மகசூல் பெறுவது என எல்லாமே அவளுக்கு அவர் சொல்லி குடுத்து யிருந்தார் சின்ன வயதிலே. இங்கு சிட்டிக்கு வந்த பிறகும் கூட தாங்களின் வீட்டை சுற்றி அமைத்து இருந்த தோட்டத்துக்கு அவரின் வழிகாட்டுதல் படி தான் உரமும் மருந்தும் வைத்து வளர்த்தாள். அவளுக்கு உதவியாக நன்மாறனும் தந்தையும் வந்து விடுவார்கள்.
அப்பொழுது எல்லாம் ஒருவரை ஒருவர் கேலி கிண்டல் பண்ணிக் கொண்டு ஒரே கலாட்டாவாக தான் இருக்கும். இன்றைக்கு பேசக்கூட ஆட்கள் இல்லாமல் தனித்து நிற்கும் நிலையை எண்ணி நெஞ்சில் வேதனை எழுந்தது. அதை ஓரம் கட்டி வைத்து விட்டு வேலையில் ஈடுபட்டாள்.
கருப்பு திராட்சி கொத்துக் கொத்தாக காய்த்துக் இருக்க, ஒருவரும் அதை பறிக்கவில்லை.
“என்ன ஆச்சு..? ஏன் பழம் எல்லாம் அப்படியே இருக்கு.. ஒருத்தவங்க கூட பறிக்கல..” கேட்டாள்.
“மேம் அது ரொம்ப புளிக்கும்.. வாயிலே போட முடியாது. அது தான் யாரும் பறிக்கல” எனவும் அதை வாயில் போட்டு பார்த்தவளின் முகம் சுளித்துப் போனது.
“அதுக்காக இப்படியே இதை விட்டுடுவீங்களா?” கேட்டவள், அன்றிரவு தன் கணவன் முன்பு வந்து நின்றாள்.
மற்ற நேரம் என்றால் அவன் வருவதற்கு முன்பே போய் படுத்து விடுவாள். உணவு உண்ணும் நேரம் மட்டும் தான் அவளுக்கு டியூட்டி. அவனின் தங்கைக்கு முன்னாடி தொட்டு தடவி முத்தம் குடுத்து என செய்ய வேண்டும். மற்ற நேரம் எல்லாம் நீ யாரோ நான் யாரோ என்ற கதை தான்.
ஆனால் அவன் எப்பொழுதும் கூப்பிடும் தூரத்திலே இருக்கவேண்டும்.. மற்றபடி அனாவசியமாக அவன் முன்பு வந்து நிற்க மாட்டாள். அதில் மலையமானுக்கு சற்றே ஆச்சரியம் தான் ஆனால் காட்டிக்க மாட்டான். அதே போல அவள் உடுத்தும் உடை எல்லாமே புடவை தான். சிறிதும் அலட்டல் இருக்காது அவளிடத்தில்.
எல்லா பொருளும் அதது வைத்த இடத்தில் அப்படியே இருந்தது. எதையும் அவள் மாற்றவில்லை. குறிப்பாக எதிலும் மூக்கை நுழைக்கவில்லை. அதுவே மலையமானுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது. ஏனெனில் அவனது முன் அனுபவம் அந்த மாதிரி.. மிக மோசமாக இருந்தது அந்த அனுபவம். நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை அவனால்.
அவனையும் அறியாமல் அவனது கண்கள் எப்பொழுதாவது தேனருவியின் பக்கம் செல்கிறது தான். அடுத்த நொடியே அதை துச்சமாக உதறி விட்டு போய் விடுவான்.
சிலர் பட்டு தான் திருந்த வேண்டும் என்று இருந்தால் அதை யாரால் மாற்ற முடியும்.. கடவுளே வந்து வழிகாட்டினாலும் சிலர் தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்று நிற்பார்கள். அந்த வகையை சேர்ந்தவன் தான் இந்த மலையமானும்.
பைல் பார்த்துக் கொண்டு இருந்தவன் தன் எதிரில் நிழலாடுவதை கண்டு நிமிர்ந்து பார்த்தான். இவளின் கை வண்ணத்தில் கொத்து கொத்தாக பூத்த புது மலர்களை தொடுத்து தலையில் சூடி இருந்தாள்.
இளவரசிக்கு குடுக்க,
“என்ன கண்றாவி இது.. இதெல்லாம் ஒன்னும் வேணாம் முதல்ல இதை எல்லாம் எடுத்துட்டுப் போ.. இந்த ஸ்மெலே ஓமட்டுது..” என்று மூக்கை பிடித்துக்கொண்டாள்.
பூ வாசம் பிடிக்காத பெண்ணவளை முதல் முறையாக அதிர்ந்துப் போய் பார்த்த தேனருவி சத்தமில்லாமல் அங்கிருந்து வந்து விட்டாள்.
பூசை அறைக்கு போய் பூக்களை போட்டு விளக்கு மற்றும் ஏற்றி விட்டு வந்து விட்டாள். ஏனோ மிகவும் உரிமை கொண்டவள் போல அவளால் பூசை எதுவும் செய்ய மனம் வரவில்லை. கண்களை மூடி ஆழ்ந்து இலயித்து சாமி கும்பிட்டு விட்டு வெளியே வந்து விட்டாள்.
சாமி கும்பிட்டதின் அடையாளமாக அவளின் நெற்றியில் குங்கும கீற்றும் திருநீறு கீற்றும் இருந்தது. தலையில் சூடி இருந்த மல்லிகைப்பூவின் ஒரு சரம் முன்னாடி வந்து விழுந்து இருந்தது. அதை உற்று ஒரு கணம் பார்த்தவன்,
“இப்ப எதுக்கு என் முன்னாடி வந்து நிக்கிற? என்ன உன் கூட படுக்கணுமா? அதுக்கு தான் என் முன்னாடி இப்படி வந்து நிக்கிறியா? மயக்க பார்க்குறியா?” நக்கலாக கேட்டான்.
அதில் பெண்ணவளின் மனம் துடித்துப் போய் விட்டது. ச்சீ என்று அறுவெறுத்துப் போனவள் அதன் பிறகு எதற்காகவும் அவன் முன்னாடி வந்து நிற்கவில்லை.
வேலையாள் மூலமே தனக்கு வேண்டிய பொருளை வாங்கிக் கொண்டு வந்தவள் அந்த திராட்சை கொடியின் வேருக்கு போட்டாள்.
அடுத்த சீசனில் அந்த பழங்கள் எல்லாம் அத்தனை இனிப்பாக தித்ததது.. தேனருவியை போலவே.. சுவை பார்க்க வேண்டிய மலையமானோ தள்ளி நின்று வெறுத்து ஒதுக்குகிறான். என்றைக்கு இந்த தேனருவி மலையமானுடன் இணையுமோ தெரியவில்லை.
போடா பக்கி.....வாயா இல்ல அது வேற ஏதுமா😤😤😤😤😤😤
போடா பக்கி.....வாயா இல்ல அது வேற ஏதுமா😤😤😤😤😤😤
வாய் தான் வாய் தான்.. வாய் மட்டும் தான் மலையமானுக்கு. பின்னாடி வாங்குவான் இதுக்கு எல்லாம் சேர்த்து வச்சு





