அத்தியாயம் 2

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

“இன்னும் எவ்வளவு நேரம் இப்படியே இருக்க போறதா உத்தேசம்?” அவளிடம் நேரடியாக கேட்டான். அந்த கேள்வியிலே உள்ளுக்குள் பதறிப் போனவள் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.

“என் அறை தெரியும் தானே”

“ம்ம்”

“அங்கயே தங்கு” என்றவன் எழுந்து போய் விட,

“ஏதே ஒரே அறையா?” விக்கித்துப் போனாள் மகரியாள்.

போனவன் அவளின் அதிர்ந்த நிலையை பார்த்து கமுக்கமாக வாய்க்குள் சிரித்தவன்,

“என்கிட்டே என்ன ஆட்டம் காட்டி இருப்ப.. இப்ப வசமா சிக்கிக்கிட்டடி.. இந்த மூணு மாசமும் பாரு உன்னை என்னென்ன பண்றேன்னு” மனதுக்குள் கருவிக் கொண்டவன், மாடி படியில் துள்ளி குதித்து ஏறினான்.

அதை பார்த்தவளுக்கு தொண்டை தண்ணீர் வற்றிப் போனது. வேக வேகமாய் தன் அண்ணனுக்கு போனை போட்டாள்.

“எனக்கு தெரியும் இந்த கடங்காரன் இப்படி தான் ஏதாவது ஏடாகூடமா வம்பு பண்ணுவான்னு. அதனால தான் நான் வர மாட்டேன்னு அவ்வளவு புடிவாதம் புடிச்சேன். ஆனா யார் கேட்டாங்க.. ஏதோ புளி மூட்டையை கொண்டு வந்து தள்ளுவது போல தள்ளிட்டு எனக்கென்னன்னு எல்லோரும் போயிட்டாங்க.. இப்ப நான் தான் மாட்டிக்கிட்டு அவஸ்த்தை படுறேன் இவ கிட்ட” திட்டிக் கொண்டே அண்ணனுக்கு போனை போட்டாள்.

ஆனால் அவனோ எடுப்பேனா பார் என்பது போல அடிக்கும் போனை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருந்தான். அத்தனை பயம் தங்கையின் மீது.

எப்படியும் இப்போ அவள் கத்துவாள்.. அதை கேட்டால் காது இரண்டும் டமாரம் ஆகி விடும் என்று அவனுக்கு நன்கு தெரியும்.. எனவே போனை எடுக்கவில்லை.

அவன் எடுக்காமல் போன உடன் கேசவ்க்கு போனை போட்டாள். அவனும் அவளை டீலில் விட்டுவிட இறுதியாக சிக்கியவர் துளசிநாதன்.. அவரை காய்ச்சு காய்ச்சு என்று காய்ச்சிவிட்டாள்.

“எம்மாடி சுகர் பாடிடா தாங்காது” என்று அவர் அழுதே விட்டார்.

“உங்களை எல்லாம் நம்பி தானே இந்த வீட்டுக்கு வந்தேன்.. அந்த ஆளு என்னன்னா வந்த உடனே என் ரூமுக்கு வான்னு கூப்பிடுறாரு.. இவர் கூட படுக்க தான் நான் இங்க வந்தானா? ஏதோ நீங்க சொன்னீங்கன்னு வீட்டுக்கு பெரியவராச்சேன்னு உங்க சொல்லுக்கு மதிப்பு குடுத்து வந்தா இங்க என்னை என்ன எல்லாம் செய்ய சொல்றாரு..”

“அவர் மனசுல என்னை பத்தி என்ன நினைச்சுக்கிட்டு இருக்கார்.. நான் அப்படியாப்பட்ட பொண்ணா.. அந்த மாதிரி பொண்ணு வேணும்னா வேற யாரையாவது தேடி கண்டு பிடுச்சு வச்சுக்க சொல்லுங்க.. நான் மானஸ்த்தி.. என் கிட்ட வாலட்டணும்னு நினைச்சா ஒட்ட நறுக்கி விட்டுடுவேன்.. அப்புறம் நான் யாருன்னு காட்ட வேண்டிய சூழல் வந்திடும் பார்த்துக்கோங்க” என்று கத்தியவளின் எதிரே வந்து நின்ற உருவத்தை பார்த்து திகைத்துப் போய் போனை நழுவ விட்டாள்.

“ஆத்தி இந்த மனுசன் எப்போ வந்தாரு..” அரண்டுப் போனாள்.

மார்பில் கைகளை கட்டிக் கொண்டு இரண்டு கால்களையும் அகட்டி நின்று இருந்தவனை காண காண சப்த நாடியும் அடங்கிப் போனது அவளுக்கு. இத்தனை நேரமும் சீரும் கடலாய் கொந்தளித்துக் கொண்டு இருந்தவள் இப்பொழுது ஆழ்கடல் போல பம்மி போனாள்.

“இன்னும் எவ்வளவு நேரம் இங்கயே இருப்ப? ஒரு வேலை நான் தூக்கிட்டு வந்தா தான் நீ வருவியோ” நக்கலாக கேட்டவன், அவளை தூக்க வர,

“யம்மாடி” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டவள்,

“இல்ல இல்ல அதெல்லாம் எதுவும் இல்ல.. நான் பெரியப்பா கிட்ட பேசிட்டு இருந்தேன்.. பேசி முடிச்சுட்டு வரலாம்னு இருந்தேன்..” என்றவள் நாலு நாலு படியாக ஓடி அவனது அறைக்குள் போய் நின்றுக் கொண்டாள்.

“கொஞ்ச நேரத்துல என்னையவே பயப்பட வச்சுட்டானே இந்த கடங்காரன்.. இந்த மூணு மாசத்தை எப்படி இவன் கூட ஒண்ணா ஓட்டுறது.. பிரஷன் இங்க இருந்தா கூட அவனை சாக்கு வச்சு தினமும் ஊர் சுத்த கிளம்பி இருக்கலாம்.. இப்போ அதுக்கும் முடியாது.. அந்த எருமை நான் பாரிஸ் போறேன், இத்தாலி போறேன்னு கிளம்பி போயிட்டான்.. இன்னும் இரண்டு மூணு மாதத்துக்கு ஊர் பக்கமே வர மாட்டான்.. ஐயோ இப்போ எப்படி இந்த ஆள் கிட்ட இருந்து தப்பிக்கிறது..” என்று மூளையை போட்டு வாட்டி வதைத்தாள்.

“ம்க்கும்..” தொண்டை கணைக்கும் சத்தம் கேட்க திரும்பிப் பார்த்தாள். ஆதி தான் நின்று இருந்தான்.

“ஆமா இப்போ எதுக்காக இங்க என் வீட்டுக்கு வந்து இருக்க..?” அழுத்தமாக கேட்டான்.

அந்த கேள்வியிலே நீ வந்து இருக்குறது எனக்கு பிடிக்கலன்னு காட்டினான். அதை புரிந்துக் கொண்டவளுக்கு அத்தனை கோவம் முகிழ்த்தது.

அப்படி பிடிக்காதவளை எதுக்கு தன் அறைக்குள்ளே விடணுமாம்.. எங்கோ ஒரு மூலையில் இருந்து விட்டு போகட்டும்னு விட வேண்டியது தானே.. ஆனா அப்படி விட்டு தொலையவும் மாட்டான் இந்த திமிர் பிடித்தவன். பேச்சுல மட்டும் விசம் தடவி பேசுவான்.

“கடுப்பா இருக்கு மை லார்ட்” மனதுக்குள் புலம்பியவள்,

“அது அண்ணன் ஊருக்கு போயிட்டான் அது தான் தனியா இருக்க பயமா இருந்தது.. பெரியப்பா இங்க இருக்க சொல்லி சொன்னாரு” அவர்கள் சொன்ன காரணத்தையே இவளும் சொன்னாள் வேறு வழியில்லாது.

“தனியா ஒரு ஆண் மகன் மட்டும் இருக்குற வீட்டுக்குள்ள வந்து இருக்கியே பயமா இல்லையா?” நக்கலாக கேட்டான்.

“பயமா தான்டா இருக்கு.. ஆனா எங்க உன் நண்பர்கள் விட்டானுங்களா? புளிமூட்டை மாதிரி கட்டி தூக்கிட்டு வந்து போட்டுட்டு போயிட்டானுங்க” மனதுக்குள்ளே புலம்பி தள்ளினாள்.

அவளின் புலம்பல்களை எல்லாம் ஊடுருவி பார்ப்பது போல அவன் பார்த்து வைக்க, பட்டென்று திரும்பிக் கொண்டவள்,

“இங்க பாருங்க உங்களோட ஒரே வீட்டுல இருக்கிறது ஓகே. பட் ஒரே அறையில எல்லாம் இருக்க முடியாது.. என் லவர் என்னை சந்தேகப் படுவான். இன்னும் மூணு மாசத்துல எனக்கும் அவனுக்கும் கல்யாணம்.. நாங்க அமெரிக்கால போய் செட்டில் ஆகப் போரேம். அதனால என் கற்பை காப்பாத்தி என் லவர் கிட்ட பத்திரமா ஒப்படைக்கணும்” என்றவளின் பேச்சில் அத்தனை சிரிப்பு வந்தது அவனுக்கு.

“சரியான காமடி பீஸ்” முணகியவன்,

“இப்ப எங்க இருக்கான் உன் லவர்”

“அவனா எதோ இத்தாலில இருக்கிறதா சொன்னான்” என்றாள்.

“நீ கூட போகலையா?”

“நானா நான் எதுக்கு அவன் கூட போகணும்?” எதிர் கேள்வி கேட்டவளை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன்,

“ஆமாமா நீ எதுக்கு போகணும்.. அவன் அவனோட கேர்ல்பிரெண்ட் கூட இல்ல போவான்” என்றான் நக்கலாக.

“ஹலோ என்ன கொழுப்பா.. அவன் ஒன்னும் உங்களை மாதிரி இல்ல.. அவனுக்கு கேர்ல் பிரெண்ட், டேட்டிங் பிரெண்ட் எல்லாம் நான் மட்டும் தான்” என்றாள்.

“ம்கும் நீயா நினைச்சுக்கிட்டு இருக்க வேண்டியது தான்” என்றவனை முறைத்துப் பார்த்தவள்,

“ஹலோ மிஸ்டர் ரொம்ப பேசாதீங்க.. என் ஆளை பற்றி எனக்கு தான் தெரியும். அவனை பற்றி உங்களுக்கு என்ன தெரியும்னு அவனை பத்தி பேசுறீங்க.. அவன் யாருக்கும் கிடைக்காத லவர் பாய் யூ நோ. அதோட அவன் வேல்ட் பேமஸ் லவர்” என்றவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தான். அவனது பார்வையில் வெகுண்டுப் போனாள்.

“முதல்ல இப்படி பார்க்கிறதை நிறுத்துங்க.. ஒரு நண்பனோட தங்கையை உங்க தங்கையா பார்க்க பழகுங்க. அதை விட்டுட்டு எப்போ பாரு ஆளை முழுங்குற மாதிரி பார்க்குறீங்க.. இப்படி யாராவது ஒரு பொம்பள பிள்ளையை பார்ப்பாங்களா?”

“வேற யார் பார்ப்பாங்களோ இல்லையோ நான் பார்ப்பேன்” என்றவன் அவளை இன்னும் நிதானமாக பார்த்து வைக்க ஏகத்துக்கும் கடுப்பாகிப் போனாள்.

“மிஸ்டர்”

“முதல்ல நீ ஒன்னை கத்துக்கோ.. உன் அண்ணன் பிரெண்ட் உனக்கும் அண்ணன் தான். அதனால இப்போல இருந்து நீ என்னை அண்ணன்னு கூப்பிடுற.. எங்க கூப்பிடு” என்றான் திமிராக.

“ஏதே அண்ணனா?” ஒரு கணம் திகைத்துப் போனாள்.

“அபப்டி எல்லாம் கூப்பிட முடியாது.. நான் அவனையே அண்ணனு கூப்பிட மாட்டேன். இதுல உன்னை..” என்று சொன்னவள், அவன் பார்த்த பார்வையில்,

“உங்களை..” என்று மாற்றிக் கொண்டு,

“போய் கூப்பிடுவனாக்கும். நினைப்பு தான் பொழப்பை கெடுக்குமாம்.. பகல் கனவு காணாம போய் வேலையை பாருங்க மிஸ்டர்” என்றவள் கொட்டும் மழையை வேடிக்கை பார்க்க தொடங்கி விட்டாள்.

குறுங்கண் ஓரம் நின்று அவள் மழையை பார்க்க, நெருங்கி வந்து அவளின் பின்னாடி நின்றவன் அவளின் தோள் வழியாக இவனும் மழையை பார்த்தான்.

அவளை உரசு இன்னும் இரண்டு நூல் அளவே மிச்சம் இருந்தன. ஆனால் உரசவில்லை. தன் முதுகு பக்கம் தான் அவன் இருக்கிறான் என்று புரிந்து அலெர்ட் மோடில் இருந்தாள்.

இருவரும் வெகு நேரம் அப்படியே நின்று இருந்தார்கள் கொஞ்சமும் அசையாமல். அந்த நேரம் பணியால் ஒருவர் சாப்பிட அழைக்க,

“ம்ம்” என்று இண்டேர்காமை கட் பண்ணிவிட்டு,

“வா சாப்பிடலாம்” என்றான்.

“பசிக்கல” என்றாள் எங்கோ பார்த்துக் கொண்டு. அவள் அப்படி சொல்லவும் இவன் போய் படுக்கையில் படுத்துக் கொண்டான்.

“ப்ச் நீங்க ஏன் சாப்பிடாம படுக்குறீங்க? மாத்திரை போடணும் இல்லையா?” என்றவளுக்கு அவன் எந்த பதிலும் சொல்லவில்லை.

“அடம் அடம்..” என்று திட்டியவள்,

“வாங்க ரெண்டு பேரும் போய் சாப்பிடலாம்” என்று சொன்ன பிறகே எழுந்து வந்தான். இருவரும் உண்டு முடித்து விட்டு மேலே வர, அதற்குள் ராஜாவிடம் இருந்து ஆதிக்கு போன் வந்து இருந்தது.

போனை எடுத்துக் கொண்டு உப்பரிகை பக்கம் போய் விட்டான்.

“நான் போன் பண்ணா மட்டும் போனை எடுக்க மாட்டான் அந்த தடிமாடு. இதே இது இவரு போன் பண்ணா மட்டும் உடனே எடுத்துடுறது.. என்னை மட்டும் எல்லோரும் நல்லா ப்ளேம் பண்றாங்க..” புலம்பியவள் சோபாவில் தலையணையை போட்டுக் கொண்டு குளிருக்கு இதமாக பெரிய பெட்ஜிட்டை போர்த்திக் கொண்டு போன் பார்க்க ஆரம்பித்து விட்டாள்.

ராஜாவிடம் பேசி விட்டு இவன் உள்ளே வர, விளக்கை எல்லாம் அனைத்து விட்டு அவள் போன் பார்த்துக் கொண்டு இருப்பதை பார்த்தவன்,

“ப்ச்.. லைட்டை போட்டு போனை பாருன்னு எத்தனை முறைடி சொல்றது” கடுப்புடன் கேட்டுக்கொண்டே விளக்கை ஒளிர விட்டான்.

“ப்ச்.. நல்லாவே இருக்காது லைட்டை போட்டு போன் பார்த்தா.. முதல்ல லைட்டை ஆப் பண்ணுங்க” சிணுங்கினாள்.

“முடியாதுடி” என்றவன்,

“ஆமா இங்க எதுக்கு வந்து படுத்து இருக்க.. அங்க தான் பெரிய பெட் இருக்கே.. அங்க படுக்க வேண்டியது தானே..” என்றான்.

“ஒரு ஆம்பளை பக்கத்துல நான் எப்படி படுக்குறது.. என் கற்பு போயிடுச்சுன்னா?” என்றவளை கடுப்புடன் முறைத்தவன்,

“ஏன் இந்த சோபால படுத்தா மட்டும் உன் மேல பாய மாட்டானா?” பல்லைக் கடித்துக் கொண்டு கேட்டான்.

“அதெல்லாம் சேப்ட்டி காட் போட்டு இருக்கேன்” என்றாள்.

“என்ன கார்ட் அது”

“அது” என்றவள் அவன் காதுக்குள் எதோ ரகசியாமாக சொல்ல, “அடியேய்” என்று அவளை முறைத்தவன் தலையில் அடித்துக் கொண்டு போய் குப்புற படுத்து விட்டான் அவளின் சேட்டை தாங்காது.

நடு இரவில் அவனின் முதுகில் பாரம் படர, “நினைச்சேன் என்னடா இன்னும் காணோமேன்னு” முணகியவன் தன் மேலிருந்தவளை கீழே தள்ளி திரும்பி படுத்து தன் நெஞ்சில் அவளை போட்டுக் கொண்டு தூங்கிப் போனான்.

 

thodarum...

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top