பார்த்தவளின் விழிகளில் இருந்த இரத்த சிவப்பு அவனது கண்ணையும் சிவக்க வைக்க,
ஒரே ஒரு இழுப்பில் அவளை தனக்கு முன் கொண்டு வந்தவன், அவளது கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான். அவளின் மெல்லிய இடையை சுற்றி தன் கரங்களை கோர்த்துக் கொண்டு தன்னோடு இன்னும் நெருக்கினான்.
அதோடு ஒற்றை கரத்தால் அவளின் இடையை அழுந்தப் பற்றி தன் தாபத்தை அவளிடம் காட்ட, பெண்ணவளின் கண்களை இன்னும் சிவந்துப் போனது... காதல் முற்றி போன பெண்களின் கண்களில் இந்த சிவப்பு என்பது இயல்பு... அந்த சிவப்பை உணர்ந்துக் கொண்டவன் அவளின் கழுத்தில் தன் முகத்தை சற்று ஆழமாக புதைத்தான்.
மீசி முடி உரசி செல்லாமல் பதிந்து குத்தி போனதில் சகிக்கு சொல்லொண்ணாத பல உணர்வுகள் பொங்கி எழுந்தது...
மேற்கொண்டு வடு ஆகாமல் பல் கொண்டு கடித்து அவளை வேதனை செய்ய ஆரம்பித்தான் சர்வா... தான் கொண்ட காதல் பெண்ணவளும் கொண்டு இருக்கிறாள் என்பது அவளது கண் பார்வையிலே படித்து விட்டான். அதனால் அவனுக்கு எந்த விளக்கமும் தேவையில்லை.
ஆனால் பெண்ணவளுக்கு இன்னும் சிலதை பற்றி பேச வேண்டி இருந்தது. ஆனால் அதற்கு சர்வேஸ்வரன் விட வேண்டுமே.. நீங்காமல் அவளை இறுக்கி நெருக்கியவன், அவளின் காதோரம் சரிந்து,
“தடையேதும்மில்லை அல்லவா?” கேட்டுக் கொண்டே அவளின் வயிற்றில் தன் கரத்தை பதித்தவன் மெல்ல அழுத்தி பிடிக்க அதற்கு மேல் அவளால் அவனிடம் நெருங்கி நிற்க முடியவில்லை. வேகமாய் அவனை விட்டு விலகி உள்ளே போக, போனவளின் முந்தானையை பற்றி இழுத்தான் மிக வேகமாக.
அதில் முந்தானையில் குத்தி இருந்த பின் தெரித்து விழ, மன்னவனுக்கு இனி எது தடை போட முடியும்... இன்னும் வேகமாய் இழுத்தான். எங்கே புடவை மொத்தமும் அவன் வசம் ஆகிடுமோ என்று பயந்து மார்போடு புடவையை அழுத்தி பிடித்துக் கொண்டாள் சகி.
அவளின் கலவரத்தை இரசித்தவன், புடவையை பிடித்து நீர் இறைப்பது போல செய்து அவளை நெருங்கியவன், அவளை மறைத்துக் கொண்டு இருந்த கரத்தில் கூடலுக்கான முதல் முத்தத்தை பதித்தான். அவ்விடத்தில் சர்வாவின் சூடான முத்தம் பதிய சிலிர்த்துப் போனாள்.
“ம்ஹும்..” என்று அவனிடமிருந்து விலகி முதுகு காட்டி நின்றாள். அவளின் முதுகை நெருங்கியவன் ஆடை மறைக்கத அவளின் தேகத்தில் முகம் புதைத்து இடைவிடாத முத்தம் வைக்க அவளது உடல் மெல்ல மெல்ல நெகிழ ஆரம்பித்தது... அதுவரை மார்போடு புடவையை பிடித்து இருந்தவளின் ஒரு கரம் பின் பக்கம் சென்று சர்வாவின் தலையை பற்றிக் கொண்டது.
அதை அறிந்தவனுக்கு இதழ்களில் ஒரு புன்னகை எழ வேகமாய் அவளை சுழற்றி தன் முன் வரவைத்தவன், கண் இமைக்கும் நேரம் கூட ஆகாமல் அவளை மறைத்து இருந்த துகிலை உருவ பட்டென்று அவனது நெஞ்சோடு ஒட்டிக்கொண்டு தன்னை அவனது பார்வையில் படமால் காத்துக் கொண்டாள் சகி...
அதில் கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றம் கொண்டவன், அவளின் எலும்புகள் நொறுங்க தன்னோடு இறுக்கி அணைத்தவன், சட்டென்று தன் பிடியை தளர்த்தி அவள் எதிர் பாரா சமயம் சட்டென்று கீழே குனிந்து அவளின் நெஞ்சில் தன் முகத்தை பதித்துக் கொண்டான்.
அதில் தான் தோல்வி அடைந்ததை தாங்க முடியாமல் தன்னை விட்டு அவனின் தலையை தள்ளி விட பார்த்தாள். வெற்றி பெற்ற வேங்கையவன் அவளை சிவக்க வைத்து செம்மாதுளையாக மாற்றினான்.
மெல்ல மெல்ல அவனது கரங்கள் இடம் மாற, முகம் சிவந்தவள் அவனோடு சேர்த்து தன் புடவையை போர்த்திக் கொண்டவளுக்கு வெட்கம் பிடுங்கி தின்றது...
“கண் தூங்கும் நேரத்தில் நீ நீங்க கூடாது...
காதோரம் உன் மூச்சின் தீ வேண்டுமே...
தொடும் எல்லாமே தீயென... தீ மாற்றுமே..
அது போல தீண்ட நீ என...
நான் வேண்டுவேன்....” அவனின் காதோரம் அவள் பாட... அவனது வேகத்தில் தீ பற்றிக் கொண்டது... அது போல அவன் கை தீண்டும் அனைத்திலும் அவளே நிறைந்து போனாள்...
“காரணங்கள் ஏதும் தெரியாமல்...
நாட்கள் போக கண்டேனே...
உன்னிடம் வந்தேன் அந்த நொடியே ஓர் அர்த்தம் சேர்ந்ததே...
ஒரு கணம் கூட விலகாமல் உன் உயிரானேன்...
இறுதி வரை கைகள் நழுவாமல்
உனை ஏந்துவேனடி என் உயிரில்...”
என்று அவளின் காதோரம் தன் மனதில் உள்ளதை அப்படியே பாடியபடி தன் கைகளால் அவளை அளக்க ஆரம்பித்தான்.
“ப்ச்... விளக்குங்க...” என்று அவள் சிங்காரமாய் சிணுங்க, சர்வாவுக்கு மனம் எகிறி குதித்தது... வேகமாய் விளக்கை அணைத்தவன் அதே வேகத்தோடு தன்னவளையும் அணைத்து அடுத்த கட்டத்துக்கு சென்றான்.
அவனது பிடியில் முகம் குங்குமாமாய் சிவந்தவள் அவனது மார்பிலே தன் முகத்தை புதைத்து தூங்கிப் போனாள்.
அடுத்த நாள் காலை இனிதாக அனைவருக்கும் விடிந்தது... முகம் முழுக்க பொலிவுடன் அங்காங்கே தான் கொடுத்த காயத்துடன் குளித்து விட்டு வந்தவளை இரசனையுடன் பார்த்தான். குளியல் அறையிலே பாதி உடை போட்டுக் கொண்டு வந்தவள், புடவையை மட்டும் அவனின் முன்பு மாற்றிக்கொண்டு இருந்தாள். அவளின் இந்த செயலில் கொஞ்சமே கொஞ்சம் ஏமாற்றம் அடைந்தவன், தன்னை ஏமாற்றியவளை பழிவாங்க அவளை அப்படியே தூக்கி படுக்கையில் போட்டு அவளை மறைத்த உடைகளை தன் கரம் கொண்டு விலக்கியவன் அவளின் உடையாக சர்வா மாறிப் போனான்.
“வேணாங்க... பிள்ளைங்க முழிச்சி இருப்பாங்க...” என்ற அவளது சிணுங்கல்கள் எல்லாம் காற்றில் கரைந்து தான் போனது..! இடைவிடா கூடலில் அவளது தேகம் மொத்தமும் சிவந்து தான் போனது. அதோடு அவன் கொடுத்த வன் காயத்தில் அங்கும் இங்கும் கன்றிப் போய் இருந்தது. அதை ஆசையாக அவனது இதழ்கள் வருடி விட, எரிச்சலையும் மீறி ஒரு குறுகுறுப்பு உணர்வு அவளை ஆக்கிரமித்தது.
ஒருவழியாய் அவளை விட்டு நீங்கியவன் அவளையும் தூக்கிக் கொண்டு குளியல் அறைக்குள் சென்றான். அதன் பிறகு வெளியே வர இன்னும் இரண்டு மணி நேரம் ஆனது...
அவனது அருகாமையில் மூச்சு முட்டிப் போனது அவளுக்கு... “காலையிலயே ஏன் இப்படி பண்றீங்க சர்வா... சத்தியமா முடியல...” என்றவளை உடை மாற்றி கட்டிலில் கிடத்தியவன்,
“புதுசா இனிப்பு கிடைத்த பிள்ளைடி நான்... எனக்கு தோணும் போதெல்லாம் கவரை பிரிச்சி மிட்டாய் எடுத்து சாப்பிடும் சிறு பிள்ளையாய் உன்னை பிரித்து என் மனம் போல மேய்ந்து போவேன்... முடிந்தவரை தாங்கிப் பழகு...” என்றான் திமிராய்...
அதில் கடுப்பானவள், “உவமையை பாரு... ச்சை...” என்று முகம் சிவந்தவள் எழப் போக,
“இப்போ எதுக்குடி எழற அது தான் உன்னால முடியலல்ல... படு கொஞ்ச நேரம்..” என்றான் அதட்டலாய்.
“ம்கும் காலை ஒடிச்சிட்டு கரிசனை வேறயாக்கும்... பிள்ளைங்க தேடுவாங்க நகருங்க... நான் கீழ போறேன்” என்றாள்.
“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். பிள்ளைகளை இங்க வர சொல்றேன்” என்றபடி கிருஷ்ணனுக்கு கால் பண்ணினான் அவளது மடியில் படுத்துக் கொண்டு.
அவனை தள்ளி விட பார்க்க, இடை சேலை விலகி அவளது இடுப்பு பளீர் என தெரிய அதில் தன் பற்களை கொண்டு கடித்து வைத்தவன்,
“இதே மாதிரி தள்ளி விடு... எங்கேங்க கடிப்பேன்னு எனக்கே தெரியாது...” என்று முறைத்தவன் கிருஷ்ணனிடம் பேச ஆரம்பித்தான்.
அவனது அடாவடியை இரசித்துக் கொண்டே அவனுக்கு தலையை கோதி விட்டு அவனது முக வடிவை தன் விரல்களால் அளந்தாள். காது மடல்களை மெல்ல நீவி விட்டு அதில் முத்தம் வைத்தாள். பின் அவனது குறும்பு தனத்தை எண்ணியவள், தானும் அவனை சிவக்க வைக்க எண்ணம் வர, மெல்ல அவனது காது மடலை தன் பற்களால் கடித்து வைக்க சர்வாவின் கண்களில் மின்னல் வெட்டியது.
பட்டென்று அவளது வயிற்றில் ஆழமாக முகம் புதைத்துக் கொண்டவன், இடையில் இருந்த மாராப்பை ஒதுக்கி தள்ளிவிட்டு அவளின் வயிற்றில் வாயை வைத்து ஊதி அவளுக்கு குறுகுறுப்பை ஊட்ட உள்ளங்கால் வரை துடித்துப் போனாள்.
“ம்மா...” என்று அவனது தலையை பிடித்து விலக்க பார்த்தாள். அவளை அப்படியே படுக்கையில் சாய்த்து அவளின் மார்பில் தன் முகத்தை புதைத்தவன் அவளின் வாசத்தை நாசியில் வாங்கி உன்மத்தம் ஏறியவன், தன் தலையை அங்கும் இங்கும் புரட்டி எடுக்க துடிதுடித்துப் போனாள்.
கூடல் இல்லா கூடலில் அவளை மொத்தமும் சிவக்க வைத்தவன் அவளது மார்பில் முகம் புதைத்துக் கொண்டான். அவன் கொண்ட தேடலின் பொருள் மொத்தமும் அவன் கைவசம் ஆனது போல இருந்தது...!
“அம்மாடி... அம்மாடி...!” என்று எங்கோ கானம் இசைக்க தன்னை நொடி நொடியாக துடிக்க விட்டவனின் தலையை தன்னிடமிருந்து தள்ளிவிட பார்த்தாள். ஆனால் அவளது கரங்களே அவளுக்கு எதிராய் சதி வேலையில் இறங்கியது. ஆம்... தள்ளிவிட இருந்த கரங்கள் மன்னவனை தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டன...!
அதில் சர்வா ஒரு விசிலை போட செக்க செவேலென சிவந்துப் போனாள். அவளின் வெட்கத்தை சிறிதும் வீணாக்காமல் கண்களில் பருகியவன் அந்த சிவப்பை இன்னும் அதிகம் ஆக்க பார்க்க அதற்குள் பிள்ளைகள் கதவை வந்து தட்ட ஆரம்பித்தது.
வேகமாய் அவனை விலக்கி விட்டவள் நழுவி போன மாராப்பை எடுத்து போட்டுக் கொண்டாள். அதற்குள் பிள்ளைகளை கூட்டிக்கொண்டு வந்து அவள் மடியில் பொத்தென்று படுத்துக் கொண்டான்.
அவனது படர்ந்த நெஞ்சில் பிள்ளைகள் இருவரும் குதித்து விளையாட ஆரம்பிக்க சொல்லொண்ணாத இதமும் நேசமும் காதலும் பெருகியது சர்வாவுக்கு.
அவன் எதிர் பார்த்த நேசமும் அரவணைப்பும் இது தானே... இவளால் தானே தன் ஏமாற்றம் மொத்தமும் தீர்ந்துப் போனது... ஏங்கிய ஏக்கமெல்லாம் இதோ வழித்து துடைத்து போட்டுவிட்டாள் நேற்றைய நொடியில் இருந்து.
அவளின் இந்த நெருக்கம் போதுமே சர்வேஸ்வரன் வாழ் நாள் முழுவதும் மன மகிழ்வுடன் வாழ... அதே போல சங்கரேஸ்வரி வாழ இந்த சர்வா வேண்டும் அல்லவா? அவன் காலம் முழுவதும் அவளுடன் கைக்கோர்த்து வர சாசனம் எழுதிவிட்டானே... இனி எங்கிருந்து பிரிவு... எல்லாமே சுபம் தான்.
காலை தேநீரை சகியே அனைவருக்கும் கொடுக்க மிருவின் சிவந்த முகம் அவர்களது நல் வாழ்வை சொல்ல உச்சி முகர்ந்தாள் தங்கையை..
கார்த்திக் ஆரபாட்டமாய் சர்வாவின் பிள்ளைகளிடம் விளையாட அவனை வாஞ்சையாய் கிருஷ்ணனும் சர்வாவும் பார்த்துக் கொண்டு இருந்தார்கள்.
அவன் வெறுத்த தனிமை அவனை விட்டு ஓடியே போய் விட்டது. அதைவிட மிகப்பெரிய சொந்தம் அவனது கைவசமாகி இருக்க இதை விட வேறு என்ன வேண்டும்.. அவனது முகம் முன்பை விட இப்பொழுது அதிக புத்துணர்ச்சியோடு இருந்தது. அதிலே அவனது உள்ள மகிழ்வை அனைவரும் புரிந்துக் கொண்டார்கள்.
அவனது மகிழ்வை பார்த்து மிருதுளா மனம் கொள்ளா அளவு மகிழ்ந்தாள். அவள் நேசித்த நேசம் அவளது கைவசம் சேர்த்து விட்டதே...! அந்த பூரிப்பு அவளது முகத்தில் நன்கு தெரிந்தது.
தன் இரு மகள்களின் வாழ்வும் மலர்ந்து இருப்பதை பார்த்த கிருஷ்ணனுக்கு மன நிறைவாய் போனது... அவர் எதிர் பார்த்த தருணம் இது தானே... எல்லோருக்கும் எல்லாருடைய எதிர்பார்ப்பும் ஆசையும் நிறைவேறி இருந்தது அந்த நொடியில்.
எல்லாமே நல்லதாக நடந்து இருந்தாலும் இன்னும் சர்வாவும் சகியும் மனம் திறந்து பேசவில்லை... அதற்கான நேரமும் வாய்த்தது... பிள்ளைகள் எப்பொழுதும் கிருஷ்ணனோடு படுக்க போக,
“இல்லப்பா பிள்ளைகள் எங்களோடு தூங்கட்டும்.. அவங்களுக்கும் ஆசை இருக்கும் இல்ல...” என்று சொன்னவள் பிள்ளைகளை தூக்கப் போக,
“எனக்கு இனி இந்த பிள்ளைகள் தான்மா ஆதரவு... அவங்களுக்கு கதை சொல்லி தூங்கவைத்து அவங்க கேக்குற கேள்விக்கு பதில் சொல்லி அழுத்து கலைத்து போனா தான் தூக்கமே வரும். இப்பொழுது எல்லாம் நான் தூக்க மாத்திரையே போடுறது இல்லை. என்னோட ஸ்லீப்பிங் டேப்ளட்ஸ் இவங்க தான்... என்று தன் படுக்கையில் படுத்து இருந்த பிள்ளைகளின் தலையை ஆதரவாக தடவிக் கொடுத்தார்.
“அப்பா...” என்று அவள் தயங்க,
“அது தான் மாமா சொல்றாரு இல்லையா? உன்னை விட மாமா பிள்ளைகளை நல்லா பார்த்துக்குவாங்க... நீ வா... அதோட பொழுதுக்கும் உன் கூட தானே இருக்காங்க. கொஞ்சம் அவங்களும் உன்னை விட்டு இருக்க பழகிக்கட்டும்...” என்றவன் அவளது முறைப்பை சட்டை செய்யாமல் அவளை கூட்டிக்கொண்டு போய் விட்டான்.
அவர்கள் செல்வதை புன்னகையுடன் பார்த்தவர்,
“ம்ம்... தாத்தா கத...” என்று மழலையில் பிள்ளைகள் கேட்க,
“ஜோஜ்ஜோ....” என்று தட்டிக் கொடுத்த படியே கதை சொல்ல ஆரம்பித்தார் கிருஷ்ணன்...
தன் முந்தனையை பிடித்துக் கொண்டு வந்த கார்த்தியை காதலுடன் பார்த்தாள்.
“ப்ச்.. சொல்லுடி... எப்போ என் மேல உனக்கு காதல் வந்தது... சொல்லாம என்னை ரொம்ப இழுத்து அடிக்கிறடி...” என்று மிருவிடம் முரண்டிக்கொண்டு இருந்தான்.
“அதெல்லாம் இரகசியம் சொல்ல கூடாது... சொன்னா சாமி கண்ணை குத்துமாம்...” என்று குறும்பு சிரிப்பு சிரிக்க,
“உன்கிட்ட இருந்து எப்படி வாங்குறதுன்னு எனக்கு நல்லாவே தெரியும்டி...” என்று அவள் மீது தாவி ஏறியவன், அவளை கொள்ளை இட ஆரம்பிக்க,
அவனது வேகத்தில் முகம் சிவந்தவள்,
“லைட்டுங்க...” என்று சிணுங்கினாள்.
“நான் லைட்ட ஆப் பண்ணனும்னா நீ ஒழுங்கா சொல்லு... இல்ல எல்லாமே வெளிச்சத்துல தான் நடக்கும் சொல்லிட்டேன்..” என்று மிரட்டினான். அவளது கொள்ளை காதலை அவனும் உணர ஆசையாய் இருந்தது அவனுக்கு.
“மாட்டேன்...” என்று அவனை அவள் பின்னாடி அலைய வைத்தாள். அதில் அவளுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி... ஆறடி ஆண் மகனை முந்தானையில் முடிந்து வைத்து இருப்பதில் மனம் கொள்ளா ஒரு கர்வம் மிருவிடம்...
“அப்போ நானும் விளக்கை அணைக்க மாட்டேன்டி...” என்றவன் அவளது உடைகளை கலைக்க ஆரம்பித்தான்.
“ம்சு... ஆப் பண்ணுங்க” என்று அவனின் காதை கடித்தாள்.
“ப்ளீஸ் டி... இருட்டுல ஒண்ணும் தெரியல... இன்னைக்கு ஒரு நாள் வெளிச்சத்துல நல்லா பார்த்துக்குறனே...” என்றவன் அவளிடம் தன் ஆசையை சொல்ல மனம் கவர்ந்தவனின் காதல் கோரிக்கைகளை எல்லாம் நிறைவேற்றி வைக்கும் வள்ளலாய் ஆனாள் மிரு... எல்லாம் முடிந்து தன் காதல் கொண்ட நாட்களையும் கார்த்தியை மடியில் போட்டு சொன்னாள்.
“உன் காதல் கிடைக்க நான் குடுத்து வச்சி இருக்கணும் செல்லம்மா... நானும் உன்னை உன்னை விட அதிக தீவிரமா காதலிக்கிறேன்டி...” என்று சொன்னவன் திருமணம் ஆன நாளில் இருந்து அதிக காதல் தீவிரவாதியாக தான் மாறிப் போனான். அவனது காதலில் அகமகிழ்ந்து போனாள் மிரு.





