Notifications
Clear all

அத்தியாயம் 48

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 961
Topic starter  

சர்வா இப்படி ஒட்டு மொத்தமாக தங்களை மொட்டை அடிப்பான் என்று எதிர் பார்க்காதவர்கள் அதிக அழுத்த மின்சாரம் தாக்கியது போல உணர்ந்தார்கள்... அதில் கைகால் பறிக்கப்பட்டு எவ்வளவு வேதனை கொண்டு இருப்பார்களோ அதை விட அதிக வேதனை கொண்டார்கள் இருவரும்.

தன் தங்கை வாழ்க்கையை பரித்த போது வலிக்காத இதயம், தன் வயிற்றில் பிறந்த பிள்ளையை அனாதையாக தெருவில் விட்ட போது வலிக்காத இதயம், தன் மருமகளாய் வீட்டுக்கு வந்தவளை பிரசவலி தீரும் முன்பே குத்தி கொன்ற பொழுது வலிக்காத இதயம், தங்களின் மகனே பொது மனித தர்மத்தை கையிலெடுத்த போது வலிக்காத இதயம், சொத்து சுகத்தை பறிக்கும் பொழுது மட்டும் உச்ச வேதனையில் துடித்தது...! ஏதோ இருவரின் உயிரும் அந்த சொத்தில் இருப்பது போல அந்த துடி துடித்துப் போனார்கள்.

“டேய் நான் உன் தகப்பன் டா... என்னை போய் ஏன்டா இப்படி மாட்டி விடுற... நாங்க இனி எந்த தப்பும் செய்ய மாட்டோம். எங்களை விட்டு சர்வா... நாங்க திருந்தி வாழ எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் குடு...” என்று கெஞ்சினார்கள்.

அதை காதிலே வாங்கிக் கொள்ளாமல்,

“உங்களை எல்லாம் வெளியே விட்டா சொத்துக்காக இன்னும் என்ன என்ன அக்குறுமம் எல்லாம் பண்ணுவீங்களோ... எத்தனை குடும்பம் சீரழிந்து போகுமோ தெரியாது. அதனால நீங்க கம்பி என்றது தான் எல்லோருக்கும் நல்லது... அதோட சிறுத்தை எப்பொழுதும் தன்னுடைய புள்ளிகளை மாற்றிக் கொள்வதே கிடையாத. அது போல தான் நீங்களும். திருந்த நினைப்பவர்கள் தண்டனை தான் அனுபவிக்க எண்ணுவார்கள். உங்களை மாதிரி காலை பிடிக்க மாட்டாங்க... இதுல இருந்தே தெரியல நீங்க எவ்வளவு சந்தர்ப்ப வாதின்னு... நீங்கல்லாம் ஒரு நேர சொத்துக்கு பிச்சை எடுத்து தின்னா தான் ரத்தத்துல இருக்கிற கொழுப்பு எல்லாம் குறையும்... இனி குறைஞ்சிடும்னு நினைக்கிறேன்...” என்ற சர்வாவின் பேச்சில் தீப்பொறி பறந்தது. அதிக இரத்தம் ஒருங்கே இதயத்தில் பாய்ந்து நொடியில் உயிரை குடிக்கும் நோய் தாக்கியது போல மொத்தமும் சுருண்டு போனார் செல்வநாயகம்.

அத்தகைய பெரும் அதிர்ச்சியை தாங்க முடியாமல் கவிதாவுக்கு நெஞ்சே வெடித்துக் கொண்டு வருவது போல ஆனது... அந்த இடத்தில் சுவாசிக்க காற்றே இல்லாதது போல தவித்துக் கொண்டு இருப்பது போல முழி பிதுங்கிப் போனார்.

செய்த பாவங்கள் கொஞ்சமா நஞ்சமா? அனைத்தும் தாங்கள் பெற்ற மகனின் வடிவிலே வந்து பழிவாங்கும் என்று நினைத்துக் கூட பார்த்து இருக்க மாட்டார்கள்.

“நீங்க செய்த பாவத்துக்கு உங்களை எப்படி வேணாலும் பழி வாங்கி இருக்கலாம். ஆனா நாங்க வாழவேண்டிய வாழ்க்கையை உங்களுக்காக பாலாக்க விரும்பல... அதனால தான் நீங்க தப்பிச்சீங்க... இல்லன்னு வைங்க உங்க ரெண்டு பேருக்கும் சமாதிய நானும் என் தம்பியுமே கட்டிடுவோம்” என்றான் சம்கார மூர்த்தியாய்...

சர்வா தம்பி என்று சொல்லவும் அனைவரும் கார்த்தியை பார்த்தார்கள். சர்வா அவனது பிறப்பை பற்றி சொன்னதை கேட்டு எந்த நிலையில் உருக்குலைந்து போய் இருப்பான் என்று புரிய பார்வையாலே அனைவரும் அவனை வருடிக் கொடுக்க,

எந்த உணர்வும் இன்றி அவனது பார்வை எதிரில் இருந்த கவிதாவிடமும் செல்வநாயகத்திடமும் மட்டுமே நிலைத்து இருந்தது...

சொந்த பிள்ளை என்று கூட பார்க்காமல் தெருவில் ஒரு நேர வயித்து பசிக்கு எத்தனை பேரிடம் கையேந்தி இருப்பான். ஒடுங்கிக் கொள்ள ஒரு குடிசை இல்லாமல் எத்தனை நாள் பேருந்து நிலைய கூடத்தில் படுத்து இருந்து இருப்பான்.

அதோடு மட்டுமா அவனது துயரம், நடை பாதையில் படத்து இருந்தால் காவலர்கள் பொய் கேசுக்காக அவனை உள்ளே தள்ளி எத்தனை நாள் லாடம் கட்டி இருப்பார்கள்.

அவர்களால் தானே இவன் சிறைக்கே போனான்... ஒன்றும் செய்யாமல் சிறைக்கு போவதற்கு எதாவது செய்துவிட்டு போ என்று சின்னஞ்சிறு பிள்ளையிலே ஒரு நேர சோத்தைக் கொடுத்து அவனது மனதில் நஞ்சை விதைத்து போன செல்வனாயகத்தின் தேவைக்கு இவன் அடியாளாக சென்ற நாட்கள் எல்லாம் கண் முன் வந்தது.

இத்தனை வருடங்களாக எதுவும் தெரியாமல் அவர் தூக்கிப் போடும் பிச்சை காசுக்காக நாயாக பேயாக அடிமட்ட வேலை செய்திருக்கிறான். தெருவில் இறங்கி நடந்துப் போனால் ஒருவன் கூட மதிக்க மாட்டான்.

உணவு விடுதியில் சாப்பிட சென்றால் கூட அவனுக்கு தனி மேசையில் தான் உணவு பரிமாறப்படும். ஒரு நல்லது கெட்டதுக்கு கூட இதுநாள் வரை சென்றது இல்லை.

அவ்வளவு ஏன் தனக்காக வேண்ட அவன் கோயிலுக்கு கூட சென்றது இல்லை. குடும்பம் குடும்பமாக செல்பவர்களை கண்டு எவ்வளவு நாள் அவனுக்கு மனம் பிசைந்து இருக்கும் வேதனையில்.

தனக்கு என்று ஒரு குடுப்பம் கூட இல்லையே என்று எவ்வளவு நாள் தனக்குள்ளே மறுகிப் போய் இருக்கிறான். கூட அமர்ந்து சாப்பிட ஒரு ஆள் இல்லாமல் எவ்வளவு துன்பத்தில் உழன்று இருப்பான்... அதெற்கெல்லாம் விடிவு தர வந்த தேவதையாய் சகி அவனது வாழ்வில் வந்தாள்.

அவள் மட்டும் வரவில்லை என்றால் இன்னும் இந்த ஈன தொழில் செய்து தான் காலம் கழித்து இருப்பன். அதோடு இன்னுமே அவனது உள்ளத்து வேதனையும் ஏக்கமும் தீரா ரணமாகி அவனை இன்னும் மூர்கனாக மாற்றி இருக்கும் அல்லவா? எல்லாவற்றையும் அவனது மனம் நொடிக்குள் அலசி ஆராய்ந்துக் கொண்டு இருந்தது...

தாயாய் மடி தாங்க வேண்டியவள் குப்பையில் வீசிவிட்டு என் பெயரில் உள்ள சொத்துக்களை மட்டும் எடுத்து சென்றுள்ளாள் என்றால் இவள் எப்பேர்பட்ட மிருகமாக இருப்பாள் என்று எண்ணினான்.

ச்சீ இவள் வயிற்றிலா நான் வந்து பிறந்தேன் என்று அசிங்கமாக தோன்றியது. இதற்கு நான் அனாதை என்று அப்பா அம்மா யார் என்று தெரியாமலே இருந்து இருக்கலாம். திரும்பி நில்லு என்று சொல்லி முதுகில் குத்தி படு பாதளத்தில் தள்ளி விட்டது போல உணர்ந்தான்.

அவனுக்கு உணர்வுகள் எல்லாம் மறுத்துப் போனது. பழி வாங்க அவனது மனம் துடித்தது. ஆனால் அதற்கு அவன் மனம் கொஞ்சம் கூட செயல் படாமல் இறுகிப் போய் இருந்தது... இவர்கள் செய்வதை செய்து விட்டார்கள். ஆனால் அதற்கு பின்னால் இருக்கும் ஒரு சிறுவனின் உணர்வுகள் இந்த முப்பது வருடங்களாக என்ன பாடு பட்டு இருக்கும், எதற்ககெல்லாம் ஏங்கி இருக்கும் என்று உணர்ந்தவன் செயலற்று அப்படியே அமர்ந்து விட்டான்.

அவனது இந்த செயலாற்ற உணர்வை தாங்க முடியாமல் அனைவரும் அவனுக்காக கலங்கிப் போனார்கள். கலங்குவது என்பது சிறிய வார்த்தை... உள்ளமே கழன்று நெருப்பில் விழுந்தது போல இருந்தது...! எவ்வளவு துன்பத்தை அவன் இத்தனை நாட்களில் கடந்து வந்து இருப்பான் என்று குமுறிப் போனார்கள். நல்ல தாய் தந்தையின் கரத்தில் தவழ்ந்து இருக்க வேண்டியவன் உதவி செய்யவதாக சொல்லி வந்த அரக்கியினால் வாழ்நாள் பாதியில் துன்பத்தை துயரத்தை அனுபவித்துக் கொண்டு இருந்தான்.

நினைக்கும் பொழுதே மூச்சு முட்டியது... என்ன வார்த்தை சொல்லி அவனை தேற்றுவது என்று அறியாமல் அனைவரும் பரிதவித்துப் போய் இருந்தார்கள். ஏன் அவனை நெருங்கவே அஞ்சிப் போனார்கள் நால்வரும்.

முக்கியமாக சகி... பிள்ளையாய் பார்த்தவனின் மன வேதனை அப்பட்டமாய் அவளுக்குள்ளும் இறங்கி இருக்க அவனை தேற்ற முடியாமல் தடுமாறிப் போனாள்.

ஆனால் அவனை பற்றிய கரத்தை மட்டும் விடவே இல்லை. முன்பை விட அவளது பற்றுதலில் இறுக்கம் கூடிப் போய் இருந்தது. அவளால் இந்த சமயத்தில் இதை மட்டுமே செய்ய முடிந்தது.

எப்பொழுது சகியை பார்த்தானோ அப்பொழுது தான் தான் வாழும் வாழ்க்கையில் ஒரு நெறி இருப்பதையும் ஒழுக்கம் இருப்பதையும் கற்றுக் கொண்டான். ஆனால் அதற்கு எவ்வளவு கட்டல்(கஷ்டப்) பட்டான் என்று அவனுக்கு தானே தெரியும். ஓடியாடி விளையாட, தளர்ந்த நேரம் தோள் கொடுக்க, அவ்வப்பொழுது பல பரிட்ச்சை செய்து சண்டை போட உற்ற துணையாய் அண்ணன் இருக்க அதை கூட மறைத்து வாழ்ந்த நாட்கள் கண் முன் வர கலங்கிப் போனான்.

இதோ தனக்காக இப்பொழுது கூட அவனை பெற்ற தாய் தந்தையிடம் சண்டை போட்டுக்கொண்டு இருக்கிறான். ஏனோ சர்வேஸ்வரனின் மீது அளவுக் கடந்த அன்பு நொடியில் பெருகியது. காதல் மட்டுமா பார்த்த உடன் வளரும்..

எதிர்பாரா நெஞ்சங்கள் ஒன்றிணைந்து விட்டால் உற்ற நேசம் விருச்சமாய் நொடியில் வளருவதும் இயல்பு தானே... இங்கும் அதே தான் நிகழ்ந்தது...! தனக்காகவும் சேர்த்து யோசித்த அண்ணனின் வார்த்தயில் உலகமே ஒரு நொடியில் பூமழை பொழிந்தது போல இருந்தது..!

இந்த பாசமும் நேசமும் தானே அவன் எதிர்பார்த்தது...! தன் முன் சம்கார மூர்த்தியாய் நின்றவனை வைத்த விழிகள் எடுக்காமல் பார்த்தான்.

சர்வேஸ்வரனோ கோவம் சிறிதும் கூட குறையாமல் அவன் முன் நின்றிருந்த பெற்றவர்களை அடங்கா ஆத்திரத்துடன் சினம் பெருக்கெடுக்க பார்த்துக் கொண்டு இருந்தான்.

“ஏசிபி சார்... இவங்களை பத்தி நான் குடுத்த கம்ளைன்ட்டுக்கு இந்தாங்க ஆதாரம்..” என்று இதுவரை தான் சேகரித்த ஒட்டுமொத்த தகவல்களையும் அவரிடம் ஒப்படைத்தவன்,

“கைது பண்ணுங்க சார்... எக்காரணத்தை கொண்டும் இதுங்களை வெளியே விட்டுடாதீங்க... பண பேய்ங்க... பணத்துக்காக என்ன வேணாலும் செய்யும் கேவலமான ஆட்கள்... அதோட மைதிலி அம்மா குடுத்த கொலை மிரட்டல் கம்ளைண்டும் இருக்கு இதையும் பைல் பண்ணிடுங்க... எப்போ சாட்சி சொல்ல கூப்பிட்டாலும் நாங்க வருவோம். அதோட இது கார்த்திக்கும் அவங்களுக்கும் எடுத்த டிஎன்ஏ ரிபோர்ட்... என் வக்கீல் உங்கக்கிட்ட முறைப்படி பேசுவார்” என்று சொல்ல,

“கண்டிப்பா மிஸ்டர் சர்வேஸ்வரன்... உங்களை மாதிரி நாலு பேர் ஊருக்கு இருந்தா போதும் நாடு முன்னேறிடும்... ஊரு உறவுன்னு பார்க்காம குற்றம் யார் செய்தாலும் தவறுன்னு நீதிக்கு தலைமகனா நிக்கிற உங்களை பார்க்க ரொம்ப பெருமையா இருக்கு..” என்று கைக்குலுக்கினார் மாவட்ட ஏசிபி விக்ரமசேனன்.

“தேங்க்யூ சார்...” என்று இவனும் கைக்குலுக்கியவன் அவர்களுக்கு விடை கொடுத்தான். எடுத்த காரியத்தை எந்த தொய்வும் இல்லாமல் சிறப்புற செய்து முடித்தான். அது அவனது முகத்திலே நன்கு தெரிந்தது.

அவனது இந்த வெற்றிக்கு பின்னால் இருந்தது சகி தான். ஆம் சகி முதல் முறையாக சர்வாவின் வீட்டில் காலடி எடுத்து வைக்கும் பொழுது கவிதாவின் ஆர்ப்பாட்டமும் செல்வநாயகத்தின் நிதானமும் அவனை யோசிக்க வைத்தது. அதன் படி ஒரு துப்பறிவு நிறுவனத்திடம் சகியின் கடந்த காலத்தை துப்பறிந்து தர சொன்னான்.

அதன் படி, அலுவலகத்தில் ஊட்டி சுற்றுலா செல்வதற்கு முன்பு “சார் இதோ நீங்க கேட்ட டீடைல்ஸ்...” என்று சர்வாவின் பியே கிரி கொண்டு வந்து ஒரு கோப்பையை கொடுக்க அதை திறந்து பார்த்தான்.

அதில் சகியை பற்றிய அனைத்து தகவல்களும் நிறைந்து இருந்தது. அதோடு அவர்களின் குடும்ப சொத்தும் பற்றிய தகவல்கள் அடங்கி இருக்க அதையும் எடுத்து பார்த்தான். அதில் தன் தந்தையின் பெயர் இருக்க கண்டு செல்வனாயகத்தை அவர் அறியாமலே தோண்டி துருவி பார்க்க ஆரம்பித்தான்.

அப்பொழுது தான் செல்வநாயகம் தினசரி குறிப்பு எழுதும் பழக்கம் உள்ளவர் என்பது நினைவுக்கு வந்தது. அதை யோசித்தவன் அவர் அசந்த நேரத்தை பயன் படுத்திக் கொண்டான். அவரது கைவசம் இருந்த ஒரு டைரி கிடைத்தது சர்வாவுக்கு. அதை எடுத்து பார்த்தவனுக்கு பெற்றவர்கள் செய்த அனைத்து கொலைகளும் வியாபாரத்துக்கு செய்த பல தில்லுமுல்லுகளும் வெளியே வந்தது...

அதன் படி ஒவ்வொரு இடமாக இவன் ஆராய்ந்து பார்க்க தொடங்கினான். அதன் முதல் படி தன் மனைவி இறந்த மருத்துவ மனைக்கு சென்று ரிப்போர்ட் கேட்டான். அவர்கள் ஒரிஜினல் கொடுக்க மறுக்க, தன் பண பலத்தை வைத்து அவர்களை சரி கட்டியவன் சத்தமில்லாமல் அதை எடுத்துக் கொண்டான். அதே போல செல்வநாயகத்தின் சொந்த ஊருக்கு சென்று விசாரித்தான்.

அங்கு தான் அண்ணன் தம்பி இருவரும் ஒன்றாக வாழ்ந்ததை சொன்னார்கள். பிறகு கவிதாவின் தங்கையே அவருடைய தம்பிக்கு கட்டிக் கொடுத்ததாகவும், தங்கைக்கு வாரிசு வர கூடாது என்பதற்காக அவருக்கு சாப்பிடும் சாப்பாட்டில் மருந்து வைத்து மலட்டு தன்மையை வர வைத்து இருந்ததாகவும் ஒரு மருத்துவச்சி பாட்டி சொல்ல அதையும் சேகரித்துக் கொண்டான்.

அதோடு செல்வநாயகத்தின் வீட்டில் வேலை செய்த ஒரு அம்மாவும் அங்கு நடந்த அக்கப்போருகளை ஒன்று விடாமல் சொல்ல எல்லாவற்றையும் வீடியோ எடுத்துக் கொண்டவன் தக்க ஆதாரத்தை திரட்டிக் கொண்டான். அதன் படி முதலில் இவர்களின் ஆதாரமான சொத்தை தன் பெயரில் எழுதிக் கொண்டவன் அதன் பிறகு தன் ஆட்டத்தை ஆட ஆரம்பித்தான்.

இதோ இப்பொழுது கையும் களவுமாக பிடித்து காவலரிடம் ஒப்படைத்து விட்டான்.

“சர்வா இது கொஞ்சம் கூட சரியில்ல டா... நீ இதுக்கெல்லாம் நல்லா அனுபவிப்ப... நான் மறுபடியும் வந்து உன்னை வாழ விடமா பண்றனா இல்லையான்னு பாரு..” என்று சொன்ன பெற்றவர்களை கண்டு வெறுத்துப் போனவன்,

“ப்ச்... முதல்ல உங்களை யாரு வெளிய எடுக்க இருக்குறாங்கன்னு பாருங்க. அதுக்கு முன்னாடி உங்களுக்கு வாதாட முதல்ல வக்கீலை பாருங்க. ஆமா வக்கீலுக்கு பீஸ் குடுக்க காசு இருக்கா..” என்று நக்கலாக கேட்டவன், கொஞ்சமும் யோசிக்காமல் தன் தாயின் கழுத்தில் இருந்த அத்தனை தங்க சங்கிலியையும் கழட்டிக் கொண்டான்.

“ஏய்... விடுடா... விடுடா.. அதையாவது எங்களுக்காக குடுடா” என்று அவர் அவனை தடுக்க வர, பாவம் அவரது இரண்டு கையும் பெண் காவலர்கள் கையில் இருந்தது.

“சும்மா ஆடாம இரும்மா..” என்று அவர்கள் வேறு வல்லென்று விழ எச்சில் கூட்டி விழுங்கினார் தங்களின் எதிர்காலத்தை எண்ணி...

அதோடு மட்டும் விடாமல் தன் தந்தையின் அருகில் சென்றவன் அவரின் கிரிடிட் கார்ட் ல இருந்து செல்போன் வரை அனைத்தையும் பறித்துக் கொண்டவன், ஒரு பைசா காசு இல்லாமல் இருவரையும் சிறைக்கு அனுப்பினான்.

“காசு காசுன்னு அலைஞ்சிங்களே... அதுக்காக சின்ன உறுத்தல் கூட இல்லாம எவ்வளவு பேரோட உயிரை எடுத்து இருக்கீங்க... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்லாம நம்பின அத்தனை பேருக்கும் துரோகம் பண்ணிய உங்களை எல்லாம் சும்மா விட்டா இறந்து போனவங்க மனம் கொஞ்சம் கூட ஆறாது. அதுக்காக தான் இப்படி பண்ணினேன். இனி ஒரு பைசா ன்னாலும் உங்க வியர்வையை சிந்தி உழைச்சி பாருங்க. அப்போ தெரியும் மத்தவங்களோட உழைப்பை பத்தி... இதோட விட்டுட்டுன்னு மட்டும் நினைக்க வேண்டாம்.. நீங்க செஞ்ச அத்தனைக்கும் வட்டியும் முதலுமா திருப்பி தருவேன்... ஓட ஓட விரட்டுவேன். அதுக்கு நீங்களே தற்கொலை செய்துக்குறது பெட்டர்னு நினைக்க வைப்பேன்....” என்று உருத்து விழித்தவனின் உருத்திர தாண்டவத்தில் இருவருக்கும் உயிர் போகாதது ஒண்ணு தான் குறை... மற்றபடி ஐந்து உயிரும் ஆடி அடங்கிவிட்டது. இனி அது எதுக்கும் எழுந்திருக்காது..

“இந்த தண்டனை ரொம்ப கம்மியா தான் இருக்கு... ஆனா நானும் என் தம்பியும் கரை படியாம வாழணும் அது ஒண்ணுக்காக மட்டும் தான் உங்க ரெண்டு பேரையும் விட்டு வைக்கிறேன். இல்ல மண்ணோட மண்ணா ஆக்கி இருப்பேன்.. ச்சீ... பண பேய்ங்க... வாழ்நாள்ல இந்த மூஞ்சிங்களை பார்க்கவே கூடாது” ஒற்றை விரலை நீட்டி எச்சரித்தவன், 

“மிஸ்டர் விக்ரம் சப்போஸ் இவங்க சிறையிலேயே செத்து போனாங்கன்னா எனக்கு தகவல் சொல்லவெல்லாம் வேணாம். அனாதை போனமா நீங்களே எரிச்சிடுங்க...” என்றவன் கிருஷ்ணனின் வீட்டுக்குள் போய் அமர்ந்துவிட்டான்.

அவனது மனம் எரிமலையாக கொதித்துக் கொண்டு இருந்தது. எவ்வளவு குற்றங்கள்.. கொஞ்சம் கூசாம அத்தனையும் செய்துட்டு இனியும் செய்யிறதுக்கு ப்ளான் போட்டு வச்சிருக்கிற இந்த ஜென்மங்கள் என்னைக்கும் திருந்தாது என்று எண்ணியவன் விக்ரமனோடு சேர்ந்து ஒரு திட்டத்தை வகுத்தான்.

சர்வாவை தொடர்ந்து அனைவரும் இறுகிய மனதோடு உள்ளே வர,

சர்வாவோ கால் மேல் கால் போட்டு ஆட்டியபடி,

“மிஸ்டர் விக்ரமசேனன்...” என்று போனில் பேசிக்கொண்டு இருந்தான்.

“சொல்லுங்க மிஸ்டர் சர்வேஸ்வரன்...” என்று இந்த பக்கம் எடுத்து பேசினான் ஏசிபி விக்ரமசேனன் கம்பீரமாக.  

பெருமூச்சு விட்டவன், “இதுங்களை சிறையில அடைச்சாலும் அங்க இருக்குறவங்களையும் கெடுத்து குட்டி செவுரா ஆக்குவாங்க... அதனால...” என்று இழுத்தான்.

“ம்ம்... சொல்லுங்க அதனாலா...” என்று அவன் ஊக்கினான்.

“அதனால அதுங்க ரெண்டையும் ஒரு செங்கல் சூளையில வச்சி உயிரோட நெருப்பு மூட்டிடுங்க” என்றான். அவனது வாயிலிருந்து வந்த வார்த்தையை கேட்டு மூவரும் அவனை அதிர்ந்து போய் வாயில் கைவைத்தார்கள்.

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top