“ம்ஹும்...” என்று ம்ஹாரம் கொட்டியவன்,
அவளின் காதோரம் இன்னும் நெருங்கி, “எனக்கு நீ வேணும்டி... கல்யாணம் பண்ணிக்கலாமா?” என்று தன் மனதில் உள்ளதை சொல்லி கேட்டான்.
அதில் அவள் அதிர்ந்து பார்க்க,
“இந்த கண்ணுல எனக்கு மட்டுமேயான தேடலை பார்க்கணும்டி. அதுக்கு நான் உன்கிட்ட இருக்கணும்.. இவ்வளவு தள்ளி இருந்தெல்லாம் பார்க்க நினைச்சா நான் தான் ஏமாந்து போவேன். இனி என்னை ஏமாற்றம் அடைய விடாம உன் நெஞ்சுல பூட்டி வச்சுக்கோடி... நானும் என் பிள்ளைங்க மாதிரி தான் உன்னையே தேடி தேடி வரேன்... ஆனா நீ என்னை மட்டும் ஒதுக்கி வைக்கிற... அது என்னை எவ்வளவு வேதனை படுத்துது தெரியுமா?” என்றவன் அவளின் இடையில் கைக்கொடுத்து தன்னோடு அவளை சேர்த்து அணைத்தான்.
“சர்வா... ப்ளீஸ்... உங்க குணத்தை என்னால அவதானிக்கவே முடியல... இதுல இப்படி தொட்டு தொட்டு பேசி... இதெல்லாம் வேணாம்” என்றவளை அடிபட்ட பார்வை பார்த்தான்.
அவனது முகத்தில் தெரிந்த வேதனை அவளையும் வறுத்த,
“சர்வா... நான்...” என்று அவனை சமாதனம் செய்ய பார்க்க,
“என்னை நீ தள்ளி வைக்கும் போது தான் சகி உன் மேல கட்டுக்குள்ளே அடங்காத அளவுக்கு கோவம் கோவமா வருது. மத்தபடி எனக்கு உன் மேல எந்த கோவமும் இல்லைடி... அன்னைக்கு உன் வீட்டுக்கு வரும் போது கார்த்தி மட்டும் உன் மடியில படுத்து இருந்தான். என்னையும் உன் மடியில படுக்க வச்சிக்கலாம்ல..” என்றவனது வார்த்தையில் திகைத்துப் போய் பார்த்தாள்.
“உனக்கு கார்த்தி எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி உனக்கு நானும் முக்கியமா படணும்டி... இது பொசஸிவ் எல்லா இல்ல... அவனோட சேர்த்து என்னையும் பார்த்துக்கோ” என்றான். அதில் அவளுக்கு மூச்சடைத்துடுக் கொண்டு வர,
“சர்வா நீங்க சொல்றது... என்னை... சந்.... தேக... படுறீங்களா?” விழிகள் கலங்கியது நொடியில்.
“ஏய்... ச்சீ உன் புத்தி ஏன்டி இப்படி போகுது...” என்று கடிந்தவன்,
“உனக்கு கார்த்தி தானே எல்லாமே...” அவன் கேட்க அவள் தலை அசைந்தது.
“அதை தான் சொன்னேன்...” என்றவன் ஒழுங்காக கிளியர் பண்ணாமல் அந்த பேச்சை அப்படியே விட்டுட்டு, அவளின் காதோரம் வந்து தன் மீசை முடி உரச, இடையோடு தன் கரத்தை படரவிட்டவன் தன் நெஞ்சோடு அவளது பின்புறம் படுமாறு இறுக்கிக் கொண்டவன்,
“இப்போ ஊருக்கு போறேன்... அடுத்த வாரம் உன்னை பெண் பார்க்க வரேன்... அதற்கு அடுத்த ஒரு வாரத்தில் உனக்கும் எனக்கும் திருமணம்” என்றான். அவனது வார்த்தையில் பூகம்பம் வந்தது போல அதிர்ந்து அவனை திரும்பிப் பார்த்தால் சகி.
“என்னடி அதிர்ச்சியா இருக்கா? இனி உனக்கும் எனக்கும் இடையில யாரும் வர கூடாது... போதும் இவ்வளவு நாள் தனியா இருந்தது....” என்று அவன் சொல்ல,
அவள் எதுவும் பேசவில்லை. மௌனமாக நின்றாள்.
‘இது சாத்தியமே இல்லை’ என்று அவளுக்கு நன்கு புரிந்தது. ஏனெனில் சர்வாவின் அப்பாவை அடித்து மிதித்து அவமானப் படுத்திய பிறகு சர்வாவுடன் திருமணம் என்றெல்லாம் அவள் நினைத்துக் கூட பார்க்கவில்லை...
அந்த மௌனத்தில் இருக்கும் அழுத்தம் சர்வாவை சிந்திக்க வைத்தது என்றாலும் தன் நிலையை அவளுக்கு புரிய வைத்து விட்டோம் என்று இதழோடு ஒரு குறுநகை எழுந்தது. எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் பிடியிலேயே அவளை வைத்திருந்தான்.
அந்த நேரம் சர்வாவின் தந்தை உள்ளே நுழைய, சகிக்கு பக்கென்று ஆனது. திடுக்கிட்டு அவனிடமிருந்து அவள் விலக பார்க்க, சர்வா அதற்கு விடவில்லை. தன் கை வளைவில் அவளை வைத்தபடி உள்ளே வந்த தந்தையை கேள்வியாக பார்த்தான்.
தான் வந்தும் இரண்டு பேரும் சற்று கூட விலகாததை பார்த்த சர்வாவின் தந்தைக்கு மிக ஆத்திரமாக வந்தது. சகியை மறைமுகமாக முறைத்தார்.
“என்னை எவ்வளவு அசிங்கப்படுத்தி அவமானப் படுத்தி எடுக்க முடியுமோ அந்த அளவுக்கு பண்ணிட்டு உனக்கு என் மகன் வேணுமா?” என்று கருவிக் கொண்டார் என்றாலும் அதை அடக்கிக் கொண்டு,
“சர்வா, நீ என்ன பண்ணிட்டு இருக்கன்னு புரியுதா உனக்கு...” என்று அவர் படபடத்து போய் கேட்டார்.
“எஸ் ஐ நோ... எனக்கு சகி வேணும்... தட்ஸ் ஆல்...” என்றான் பிடிவாதமாய்.
“அது எப்படி முடியும் சர்வா? இரண்டாம் தரமா கல்யாணம் பண்றதுக்காக நான் நம்ம தூரத்து ரிலேஷன் மைதிலியை பெண்ணை பார்த்து, அந்த பெண்ணோட அம்மாவுக்கு வாக்கு கொடுத்துட்டேனே. இப்ப வந்து இப்படி சொல்றியே சர்வா...” என்று அவர் பரிதவித்து போய் கேட்க,
“அதெல்லாம் எனக்கு தெரியாது. எனக்கு சகி தான் வேணும். நாலு வருடத்துக்கு முன்னாடி எப்படி என்னை அத்தனை பேரின் முன்னிலையிலும் அவமானப்படுத்திட்டு போனாளே, அந்த அவமானத்தை என்னால இன்ன வரையிலும் மறக்கவே முடியல. யார் முன்னாடியும் யாருக்கிட்டயும் நான் இப்படி அவமானப்பட்டதே இல்லை. அதனால யார் யாருக்கு முன்னாடி எல்லாம் நான் அவமானப் பட்டனோ அவங்களுக்கு முன்னாடியே அந்த அவமானத்தை தொடச்சி எறியனும். ஒரு பிசினஸ் மேனா இருந்துகிட்டு என்னால அந்த அவமானத்தோட தலை நிமிர்ந்து வாழ முடியாது. சோ எனக்கு இந்த சகி தான் வேண்டும்...” என்று சொல்லியபடியே அவளது இடையில் ஒரு அழுத்தம் கொடுத்தான் சர்வா.
அந்த அழுத்தத்தில் சகி நிமிர்ந்து சர்வாவை பார்த்தாள். அவனது இந்த பேச்சில் அவளுக்கு பத்திக் கொண்டு வந்தது. அவனை முறைத்துப் பார்த்தாள். ‘சற்று நேரத்துக்கு முன்பு உருகிய உருகல் என்ன...? இப்போ அவரோட அப்பாக்கிட்ட பேசுற பேச்சு என்ன? ச்சீ இந்த ஆம்பளைங்களே இப்படி தான் இருப்பாங்க போல...’ எண்ணியவள் தன்னை வெட்டிப் போடுவது போல பார்த்துக் கொண்டு இருந்த செல்வநாயகத்தின் பார்வையில் கூனி குறுகிப் போனாள்.
அவனோ அவளது உணர்வுகளை புரிந்துக் கொள்ளாமல் தன் தந்தையே பார்த்துக் கொண்டிருந்தான்.
“சர்வா நீ பண்றது தப்பு... இப்போ தான் சகியோட அப்பாவை பார்த்துட்டு வரேன்... அவரு சகிக்கும் கார்த்திக்கும் கல்யாண ஏற்பாடு செய்ய இருக்கிறதா சொல்றாரு... அதோட நாளும் பார்த்துட்டாங்க. இன்னும் இரண்டு வாரத்துல கல்யாணம் வச்கிக்குறதா சொல்லி இருக்காங்க... இப்போ போய் நீ இடையில புகுந்து இப்படி அவங்க வாழ்க்கையில விளையாடுறது ரொம்ப ரொம்ப தப்பு...” என்று அவர் சொல்ல,
அவனது புருவம் ஒரு கணம் மேலேறியது...
“நீங்க எதுக்கு அவரை போய் பார்க்கணும்?” என்று கூர்மையாக அவரை ஆராய்ந்தா படியே கேட்டான். அதில் ஒரு கணம் திணறி தான் போனார்.
ஆனாலும் தன்னை சரி செய்துக் கொண்டு, “இல்ல அவரே என்னை தேடி வந்தாரு...” என்றார்.
“உங்களையா உங்களை எதுக்கு அவர் தேடி வரணும்? அதுவும் தேடி வந்து இந்த கல்யாண செய்தியை சொல்ற அளவுக்கு என்ன நடந்தது” என்று ஆணித்தரமாக அவன் கேட்க,
“ஐயோ இவன் என்ன இப்போதைக்கு விட மாட்டான் போலையே...” என்று நொந்தவர்,
“அ,... து அது... வந்து சகியும் கார்த்தியும் லவ் பண்றாங்கன்னு...” என்று சொன்னவர், பின் சுதாரித்து, “இல்ல... அது...” என்று திணறியவர்,
“நீ இப்படி சகிக்கிட்ட...” என்று இருவரது நெருக்கத்தையும் சுட்டிக் காட்டி, “இப்படி பண்றத சகி விரும்பல.. அதை அவங்க அப்பாக்கிட்ட சொல்லி வேதனை பட்டாளாம். அது தான் அவர் மனசு தாங்காம ‘என் பொண்ணு வாழ்க்கையில உங்க பையனை விளையாடாம இருக்க சொல்லுங்கன்னு என்கிட்ட வந்து உன்னை பத்தி கம்பளைண்ட் பண்ண வந்தாங்க. அப்போ தான் இவங்க ரெண்டு பேருக்கும் கல்யாணம் வச்சு இருக்காதா சொன்னாரு அவரு” என்று அவர் தடுமாறியபடி சொன்னவர்,
“வேணும்னா நீ சகிக்கிட்டையே கேட்டு பாரு...” என்று அவர் நேக்காக சகியை சர்வாவிடம் கொத்து விட, அவனின் பார்வை சகியை நோக்கியது.
“பயப்படாம சொல்லு மா.. ஆமாம் தானே சகி...” என்று அவளையும் அவருடன் கூட்டு சேர்க்க சர்வாவின் இதழ்களில் புன்னகை இழைந்தது...
“சொல்லுமா உன் அப்பாகிட்ட என்னென்ன சொன்னியோ அதை அப்படியே சர்வாக்கிட்ட சொல்லு...” என்று அவர் மேலும் சகியை ஊக்குவிக்க சர்வாவை நிமிர்ந்து பார்த்தாள் சகி.
அவளது பார்வையில் என்ன இருந்தது என்பதை நன்கு படித்த சர்வாவுக்கு அவனது புன்னகை இன்னுமே விரிந்தது. ஆனால் உள்ளம் கொதியாய் கொதித்து கொண்டு இருப்பதை அறிந்தவனுக்கு தன் கோபத்தை காட்டும் வழி தெரியாமல் அவளின் இடையிலே தன் கரங்களைப் பதித்து இன்னும் இன்னும் அவளை தன்னோடு நெருக்கினான்.
அதில் அவளுக்கு இடுப்பு வலி எடுக்க அவளையும் அறியாமல் அவளது உதடுகள் இருந்து சட்டென்று சத்தம் எழுந்து விட்டன. அதோடு அவளது ஒரு சில துளி கண்ணீரும் சர்வாவின் கரங்களில் பட்டுவிட்டன.. அது சர்வாவின் பிடியிலா அல்லது சர்வாவின் தந்தை செல்வநாயகத்தின் பேச்சிலா என்று புரியவில்லை.
“பாருடா நீயே சகியை பாரு... அந்த பொண்ணு எப்படி அழுதுனு பாரு...” என்று சகியின் கண்ணீர் துளியை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டார் செல்வநாயகம்.
“எனக்கு யாரோட வாழ்க்கையும் பத்தி கவலை இல்லை... அதோட யாரோட கண்ணீரை பற்றியும் எனக்கு தேவையே இல்லை. எனக்கு என் வாழ்க்கை மட்டும்தான் முக்கியம். என் வாழ்க்கையில யார் வரணும்னு நான் தான் முடிவெடுப்பேன். அதுல இவளோட சம்மதம் கூட எனக்கு தேவையில்லை. சோ எனக்கு சகி தான் வேணும்... அதுல உறுதியா இருக்கேன்... சீக்கிரம் பொண்ணு பார்க்க இவ வீட்டுக்கு போகணும். எல்லா ஏற்பாடும் பண்ணிடுங்க” என்று அவன் முரட்டுத்தனமாக முடிவெடுத்ததை கண்டு செல்வநாயகம் உள்ளுக்குள் பெரிதும் அதிர்ந்து போனார்.
“சர்வா நம்ம வாழ்க்கை முறை வேற, அவங்க வாழ்க்கை முறை வேற. நாலு வருசமா அவங்க ஒண்ணுமே இல்லாம வாழ்ந்து இருக்காங்க... அந்த நாகரீகம் எல்லாம் மறைந்து போய் இருக்கும். அதோட அவங்களுக்கு நம்ம ஸ்டேடஸ் புதுசா இருக்கும். நீ புதுசா கொண்டு போய் ஒரு விசயத்தை திணிச்ச அப்படின்னா அவங்களால டக்குனு ஏத்துக்க முடியாது சர்வா. நம்ம ஸ்டேட்டஸ்க்கு யாரு தகுந்தவங்களோ அவங்கள மாதிரி தேர்ந்தெடுத்துக்கோ...” என்று பணம் இல்லாத காரணத்தை குத்தி காட்டி பேசவும் சகிக்கு இன்னுமே வேதனையாகிப் போனது.
ஆனால் அதெல்லாம் கேட்டுத்தான் ஆகவேண்டும். இதெல்லாம் கடந்து தான் ஆக வேண்டும் என்கிற நிலைக்கு கொண்டு வந்திருந்த சர்வாவை அவள் வெட்டும் விழிகளால் வெட்டிப் போடுவது போல முறைத்து பார்த்தாள். அவளது பார்வையை சிறிதும் கண்டுகொள்ளாமல் அவளது இடையில் இருந்த இறுக்கத்தை சற்றே தளர்த்தியவன், மிருதுவாக தடவிக் கொடுத்தான்.
சேலை மறைவில் அவனது கை ஊர்வலம் நடப்பதை உணர்ந்து அதுவும் அவனது தந்தைக்கு முன்பு இப்படி எல்லாம் நடந்து கொள்வது பெரும் அவமானமாக இருக்க முகம் சிவந்து போனது ஆத்திரத்தில். அதை அவளது முகம் அப்பட்டமாக வெளிப்படுத்த அதை உணர்ந்தவன் அவளது காதோரம் யாரும் அறியாமல் மிக மிக ரகசியமாக ஒரு வார்த்தை சொல்ல அதிர்ந்து போய் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.
அவளது அதிர்ந்த பார்வையை கண்டவன் ஒற்றை கண் சிமிட்டி இதழ்களை குவித்து முத்தமிட்டவன், மீண்டும் காதோரம் சரிந்து எதையோ சொல்ல அவனது தொடுகை அவளுக்கு அது அவமானமாக தெரியவில்லை உயிரை கொல்லும் ரண வேதனையாக இருந்தது. அதன் பிறகு அவனது கைப்பிடியில் பொம்மையாக நின்று இருந்தாள்.
செல்வநாயகம் எவ்வளவு எடுத்துச் சொல்லியும் சர்வா கேட்கும் நிலையில் இல்லை. இதோ சகியை பெண் கேட்டு அவளது வீட்டு வாசலில் நிற்கிறார்கள். நிற்கிரவர்களுக்கு காட்சி பொருளாய் இதோ சகியும் கார்த்தியும்...!
ஒரு பெண்ணை பேச கூடாத வார்த்தைகள் எல்லாம் பேசி எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அசிங்கப்படுத்திவிட்டார் கவிதா. அதற்கு பக்கத்தாளம் செல்வநாயகம்.





