இருவரும் சேர்ந்து வருவதை பார்த்த ராஜுக்கு ஓரளவு இருவரும் சமாதனம் ஆகிவிட்டது புரிய
“நந்தா” என்றார் பாசமாய்
“ஒன்னும் வேணாம் ப்பா.. என்னை இவ்வளவு நாள் தவறா தானே நினைச்சுக்கிட்டு இருந்தீங்க.. எந்த சமாதானமும் வேணாம்..” என்றான் பிடிவாதமாய்..
“டேய் அது அப்படி இல்லடா..”
“உங்களுக்கு உங்க மருமக மேல பாசம் இருக்கட்டும் யாரும் வேணான்னு சொல்லல.. அதுக்காக பெத்த மகனை இந்த அளவு நம்பாம இருக்க கூடாது..” என்றான் வேதனையாக..
“அப்போ இதுல வில்லன் மாமா தானா..” வனா கேட்க
“டேய் அவனே திட்டுரதோட விட்டுட்டான் நீ வில்ல ரேஞ்சுக்கு பில்டப் பண்ணாதடா அவன் இன்னும் வேறு ஏதாவது சொல்லிட போறான்” ராஜன் சிறுபிள்ளையாய் பேச
“ஆகா நீங்க மச்சானுக்கு பயபடுற ஆள தான்.. இதை நாங்க நம்பணுமாக்கும்” மேலும் அவன் அவரை கிண்டல் பண்ண எல்லோருக்குமே சிரிப்பு வந்தது.. அன்றிரவு அனைவரும் மொட்டை மாடியில் அமர்ந்து கூட்டாஞ்சோறு உண்ட படி பேசி கலகலத்துக்கொண்டு இருந்தார்கள்.
அங்கே தென்றலும் சுகந்தமாய் வீசி செல்ல தங்களுக்குள்ளே ஒருவரை ஒருவர் வாரிக்கொண்டு இன்பமாய் இருந்தார்கள்.
கூடவே நந்தா வனா திருமணத்துக்கு தேதி குறிக்க ரவி சோகமாய் இருந்தான்.
“விடுடா இன்னும் ஆறு மாசத்துல உனக்கு கல்யாணம் ஏற்பாடு செஞ்சிடலாம்” என்று ராயரும் நந்தாவும் அவனை தோளோடு அனைத்து வெறுப்பேத்த
இவருடைய கைகளையும் தட்டி விட்டுட்டு
“ஒரு சின்ன புள்ளைய இப்படி நம்ப வச்சு ஏமாத்த கூடாது சொல்லிட்டேன்.. இந்த கன்னி பையன் சாபம் உங்களை சும்மா விடாது.. சாந்தி முகுர்த்த நாள் இன்னும் தள்ளி போகணும்னு கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன்..” என்று அப்போதே கண்களை மூடி சாமிகும்பிட போக ஸ்வரா அவனுடைய சேட்டையை கண்டு செல்லமாய் முறைத்தாள்.
“வாய் வாய பாரு.. முதல்ல என் மருமக கிட்ட சொல்லி அந்த வாய் மேலையே ரெண்டு அடி போட சொல்றேன்” என்று தில்லை அவனை வைய்ய
“ஏன் ஆத்தா உனக்கு மட்டும் இந்த ஓர வஞ்சனை நானும் நீ பத்து மாசம் சுமந்து பெத்த புள்ளை தானே.. என்னை விட சின்ன பொண்ணு மதி.. அவளுக்கு சீக்கிரமா கல்யாணம் வச்சு இருக்க.. ஆனா அவளை விட பெரியவன் நான் எனக்கு மட்டும் ஆறு மாசம் கழிச்சு.. இதெல்லாம் என்ன நியாயம்.. அதெல்லாம் எனக்கு தெரியாது எனக்கும் இவிங்க கல்யாணத்தப்பவே கல்யாணம் செய்யணும்.. இல்லன்னா இவிங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நீ உனக்கு ஸ்வரா மாசமா இருக்கான்ற செய்தி வரும் பாத்துக்க” என்றவனை மொத்தி எடுத்தார் தில்லை..
“எரும எரும எப்போ பாரு அந்த நினைப்போட தான் இருப்பியாடா” சொல்லிக்கொண்டே மேலும் அடி குடுக்க அந்த இடம் இன்னும் கலகலவென்று மாறியது..
அனைவரும் தூங்க செல்ல திகம்பரி ராயரை கண்ணடித்து அறைக்கு வர சொல்ல
“நிஜமாவா” என்று ஜொள்ளுவிட்டபடி கேட்க
“ம்ம் திக்ஷ்தன் அண்ணிகிட்ட தூங்குறான்” ரகசியமாய் சொன்னவளை அள்ளிக்கொண்டவன்
“நிஜமா என்னை மன்னிச்சுட்டியா கண்ணம்மா..”
“மன்னிக்க முடியல ஆனா மறந்துடலாம்னு முடிவு பண்ணிட்டேன் மாமா..” என்றவளை ஆசையாக பார்த்தவன் அவளை அள்ளிக்கொண்டவன் அவளது காதல் மழையில் நனைய ஆரம்பித்தான்.. திகம்பரியும் ராயரின்
மதி வனாவின் அறைக்கு பால் எடுத்து செல்ல அவனுக்கு அவளது வருகை உவகையை கொடுக்க திருமண தேதி முடிவான சந்தோசத்தை தங்களின் முறைப்படி இருவரும் கொண்டாடி மகிழ்ந்தார்கள். அவனது நேசம் அவளுள் ஆழமாய் இறங்க அவன் அவளை வதைக்கும் செயலை காதளுடனே ஏற்றாள் மதி..
ரவிக்கு காவலாய் ஆண்டியும் கந்தனும் அவனோடு படுத்து இருக்க அவனால் ஸ்வராவை தனியாக சென்று ரொமான்ஸ் பண்ண முடியாமல் தவித்துக்கொண்டு இருந்தான்.
அவனுக்கு நேர்மாறாய் நந்தா ரியாவை தூக்கிக்கொண்டு மொட்டை மாடிக்கு சென்று தன் வேலைகளை எல்லை மீறாமல் அவளிடம் காட்ட, பெருகிய காதலோடு அவனை தன் மேல் தாங்கிக்கொண்டாள். ஒன்று பட்ட மனதோடு இருவரும் கூடல் இல்லாமல் அந்த இரவு பொழுதை அழகாய் களித்து கழித்தார்கள்.. அடுத்து வந்த ஹியரிங்கில் செழியன் சஞ்சையிடம் வாங்க வேண்டிய தகவல்களை வாங்கிக்கொண்டு அவனை சுட்டுவிட்டான்..
இவனை உயிரோட வச்சு இருந்தா இன்னும் இந்த கேங் பல தவறுகளை செஞ்சுக்கிட்டே இருக்கும்.. இப்போதைக்கு இவன் தலைமறைவு என்பதை மட்டும் சொல்லுவோம்.. என்றவன் சஞ்சய் கொடுத்த தகவல்களை வைத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது போல பேசி இந்த கேசின் மிக முக்கிய திருப்பம் இனி மேல் தான் என்பதை தெளிவு படுத்திவிட்டு தான் கணித்து வைத்து இருந்தவற்றை ராயர், ரவி, கவி, ஸ்வரா நால்வரிடமும் பகிர்ந்துக்கொண்டவன் எப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை பற்றியும் திட்டம் போட்டுக்கொண்டார்கள். அதன் படி செயல் படவும் ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் கழித்து:
அனைத்து சொந்தமும் நட்பும் ரவியின் திருமணத்தில் கூடி இருந்தார்கள். தன்னை முறைத்துக்கொண்டு இருந்த சதாசிவத்தை கண்டு தன் அருகில் அமர்ந்து இருந்த ஸ்வராவை லேசாக இடித்து
“ஏய் உங்க அப்பன் முறைக்கிராண்டி..” அவளிடம் கம்ப்ளைன்ட் பண்ண
“இதென்ன சின்ன பிள்ளை தனமா கம்ப்ளயின்ட் பண்ணிக்கிட்டு.. ஏன் பதிலுக்கு உங்களுக்கு முறைக்க தெரியாத..” கடுப்படித்தவளை கண்டு
“இல்ல முறைப்பேன்.. ஆனா இன்னைக்குன்னு பாத்து உனக்கும் எனக்கும் சாந்திமுகுர்த்தம்.. இப்பன்னு பார்த்து நான் ஏதாவது ஏடாகூடமா செஞ்சு வச்சு நீ முருக்கிக்கிட்டின்னா என் பாடு கஷ்டம்..” என்று அவன் அவன் காரியத்திலே கண்ணாய் இருப்பதை கண்டு வெட்கத்தோடு கோவமும் வந்தது..
“நீங்க என்ன பண்ணாலும் இன்னைக்கு கன்பாம் போதுமா..” என்று பல்லை கடித்துக்கொண்டு சொன்னவளை கண்டு
“இந்த ஸ்டேட்மென்ட் போதுமடி தங்கம்.. மாமா ஆக்சன இப்போ பாரு..” என்றவனின் மனதில் ஸ்வராவை பெண் கேட்டு மொத்த குடும்பத்தோடு அவரது வீட்டு வாசலில் நின்றது.. கூடவே ஸ்வரா அவர்களை வீட்டுக்குள் அழைத்து சதாசிவத்தை எங்கேயும் பேசவிடாமல் அவரை வெறுமெனே தலையை மட்டும் ஆட்டுமாறு பார்த்துக்கொண்டாள்..
“அப்பா என் ஆசைய இப்படி நிறைவேத்தி வைப்பீங்கன்னு நான் நினைச்சி கூட பார்க்கல..” என்று சொல்லியபடி “வாங்க அத்தை மாமா.. அண்ணா அண்ணி..” வரவேற்றவள் வாங்க அப்பா” என்று அவரின் கையை பிடித்து அழைத்துக்கொண்டு உள்ளே சென்று அனைவரயும் அவரின் முன்னிலையிலே உபசரித்தவள் தன் தகப்பனை ஆராய்ந்து பார்த்தாள்.
அவர் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தடுமாறிக்கொண்டு இருந்தவரை கண்டு ஒரு பக்கம் பாவமாகவும் ஒரு பக்கம் சற்றே சந்தோசமாகவும் இருந்தது..
நந்தனின் மூலம் இன்னும் என்னவெல்லாம் பேச்சி இருக்கிறார் தன் தந்தை என்று அறிந்தவளுக்கு வேதனையாய் இருந்தது..
ரவியின் வலிக்கு நியாயம் செய்ய வேண்டும் என்று உணர்ந்தவள் ரவியை திடுதிப்பென்று கிளம்பி வர செய்துவிட்டாள். கூடவே ராஜனும் ராயரும் வர சதாசிவம் நல்லவர் என்கிற வேஷத்தை கலைக்காமல் அப்படியே நடிக்கவேண்டியதாய் போனது.. ஆனால் ரவியிடம் தனியாய் பேசணும் என்று சொல்ல அவன் ஒத்துக்கொண்டு அவரை மீட் பண்ணினான்.
“நான் அவ்வளவு தூரம் சொல்லியும்..” என்று அவர் ஆரம்பிக்கும் முன்பே
“மாமனாரே.. அவ என் பொண்டாட்டி.. நீங்க ஓவரா தில்லுமுல்லு பண்ணிக்கிட்டு இருந்தீங்க.. உங்க அனுமதி கூட கேக்காம என் மாமன் செஞ்சாருல அது போல எங்க கல்யாணத்துக்கு முன்னாடியே நீங்க தாத்தா ஆகவேண்டியது வரும்.. உங்க உணர்வு எனக்கு புரியுது.. ஆனா அதுக்காக மத்தவங்க குடும்பத்தை பத்தி தவறா பேச கூடாது.. இது தான் நீங்க என் குடும்பத்தை பத்தி தவறா பேசுறதா இருக்கணும்.. இன்னொரு முறை ஏதாவது பேசுநீங்கன்னா அப்புறம் உங்க பேரபிள்ளை தான் பேசுவான் பாத்துக்கோங்க..” அதிரடியாய் பேசிவிட்டு வந்துவிட்டான். அப்போது இருந்து சதாசிவம் எதவும் பேசுவது இல்லை. வெறும் பார்வையாலே முறைத்துக்கொண்டு மட்டும் இருப்பார். அதும் யாரும் பார்க்காமல் இருக்கும் போது மட்டும். பெண்ணே அவனை ஆதரிக்கும் போது தான் என்ன செய்து அவளை அவனிடமிருந்து மீட்பது.. என்றதோடு ரவியின் அடவாடியின் முன் அவரால் எதையும் செய்ய முடியாமல் போனது..
அதை எண்ணி பார்த்தவனுக்கு இதழ்களில் புன்னகை வந்தது.. அது அவருக்கு அவரை பார்த்து தான் நக்கலாய் சிரிப்பது போல இருக்க இன்னும் அதிகமாய் முறைத்தார்.. அவரது முறைப்பு அவனை உசுப்பி விட அழுத்தம் திருத்தமாய் ஸ்வராவின் கன்னத்தில் முத்தம் ஒன்றை வைத்து மிதப்பாய் அவரை பார்த்தான் ரவி..
ராயரோ திகம்பரின் பின்னாடி வால் பிடிக்காத குறையாய் அவளோடு சுத்திக்கொண்டு இருந்தான்.. வனாவும் கார்த்தியும் தன் இணைகளை விடாமல் சையிட் அடித்துக்கொண்டு கிடைக்கும் சிறுசிறு இடைவெளியில் முத்தம் கொடுத்தான் அவர்களை படுத்திக்கொண்டு இருந்தார்கள். செழியனும் அஞ்சலியும் நீதுவோடு ரவியின் கல்யாணத்தில் கலந்துக்கொண்டார்கள். அவர்கள் எப்போதுமே திருவள்ளுவர் சொன்னது போல சமூகத்தோடு வீடு பேற்றையும் சேர்த்து வாழ்ந்துக்கொண்டு இருந்தார்கள்..
நந்தனோ காலையில் ரியாவை எழும்பவிடாமல் படுத்திக்கொண்டு இருந்தான்.
“மாமா ப்ளீஸ் விடுங்க நேரம் ஆகிட போகுது.. நான் இன்னும் புடவை கட்டி முடிக்கிறதுக்குள்ள எனக்கு போதும் போதும்னு ஆகிடும்..” கெஞ்சியவளின் கெஞ்சல்களை எல்லாம் சிறிதும் கண்டுக்கொள்ளாமல்
மூணு வருஷம் நீ என்னை காரணமே இல்லாம தள்ளி வைச்சில்ல அதுக்கெல்லாம் வட்டியும் முதலுமா வசூலிக்க வேணாமா. அந்த கணக்கை கொஞ்சம் நான் நேர் பண்ண வேண்டி இருக்கு.. என்று இருவருக்கும் சேர்த்து போர்வையை போர்த்தி விட்டு அவன் தன் ஆட்டத்தை ஆரம்பிக்க
“இதை இதை சொல்லி தான் தினமும் படுத்துறீங்க நந்தன்..” சிணுங்கலுடன் அவனுக்கு வகை செய்து கொடுக்க
“நீ சாகும் வரையிலும் நான் இப்படியே தான் பேசிக்கிட்டு இருப்பேன்.. ஏன்னா அந்த மூணு வருசத்துல உன் பிரிவு எனக்கு ஆழமான காயத்தை குடுத்து இருக்கு.. அதை நீ தான் ஆத்தணும்.. எனக்கென்னவோ இந்த காயம் நான் சாகும் வரியிலும் ஆராதுன்னு தோணுது.. அதனால நீ என்ன பண்ற தினமும் எனக்கு மருந்து போட்டுவிடு” என்று சொல்லி தன் காரியத்தை வாழ் நாள் முழுவதும் சாதிக்க ஏற்பாடு செய்துக்கொண்டான்..
ஒருவழியாய் நந்தனை விட்டு விலகி எழுந்தவள் பரபரப்புடன் மண்டபத்துக்கு கிளம்பி சென்றாள் தன் கணவனுடன்..
அங்கே போய் மீதமிருக்கும் வேலையை எல்லோரோடும் சேர்ந்து பார்க்க தொடங்கியவளை மன நிறைவுடன் பார்த்துக்கொண்டு இருந்தான் நந்தன்.. ரியாவுக்கு தாயாய் தந்தையாய் தில்லையும் ஆண்டியும் இருந்து அவளை நந்தனுக்கு கல்யாணம் செய்து வைத்தார்கள். நெகிழ்வுடன் அவர்களை பார்த்தாள் ரியா.. இவ்வளவு சொந்தமும் நந்தனால் மட்டுமே.. அண்ணன் தம்பி நண்பனாய் ராயர், ரவி, வனா, கந்தன், கார்த்தியும், தங்கை நாதனாராய் மதி, ஸ்வரா, கவியும், திகம்பரி, அப்பா அம்மா மாமா என்று மொத்த குடும்பத்தையும் உறவாய் அவளுக்கு ஆக்கி இருந்தான் நந்தன். எல்லாருமே ஒரு புரிதலோடு நெருக்கத்தோடு நட்போடு இருந்தார்கள். இவர்களின் நட்பை கண்டு சிலசமயம் சதாசிவம் கூட நெகிழ்ந்து தான் போவார்.. ஆனாலும் ரவியை முறைத்துக்கொண்டு தான் இருப்பார். அது அன்பினால் கூட இருக்குமோ...
குறித்த நேரத்தில் மனம் நிறைய காதலுடன் ரவி ஸ்வராவின் கழுத்தில் தாலியை கட்டி தன்னில் சரி பாதியாய் ஆக்கிக்கொண்டான்.. தங்களின் ஜோடிகளை தங்களின் அணைப்பிலே வைத்துக்கொண்டு அந்த நொடியை அனுபவித்தார்கள் ஆண்கள்.. பெண்கள் தங்களின் இணைகளின் அணைப்பை உயிர் வரை சேகரித்துக்கொண்டார்கள்..
இந்த கல்யாணத்தின் மூலம் இன்னும் தன் பிள்ளைகள் அதிக சந்தோசத்துடன் இருப்பதை கண்டு ராஜுவும், சதாசிவமும், சிவனாண்டியும் தில்லையும் மகிழ்ந்து போனார்கள்.
இந்த நட்பும் அன்பும் என்றும் நிலைக்க வேண்டும் என்று அனைவரும் வேண்டிக்கொண்டார்கள்..
நம்மை காணுகிற கண்கள்
நம்மோடு சேர கெஞ்சும்..
சேர்ந்து வாழுகிற இன்பம்
அந்த ஸ்வர்கம் தன்னை மிஞ்சும்..
ஒரு நாள் கூட இங்கு வரமாகும்
உயிர் எங்கள் வீடாகும்.
சுகமாய் என்றும் இங்கு
விளையாடும் நிரந்தர ஆனந்ததம்..
நம் ஜென்மங்கள் மாறிடும்
நேரத்திலும் சொந்தங்கள் சேர்ந்திருப்போம்
அனைவரின் அன்பில் ஆயுள் கூடிடுமே..
எங்களுக்குள்ளே வளைந்துடுவோம்
நாணலை போல் தானே..
நம் ஒற்றுமை காட்டிட நின்றிடுவோம்
தூண்களை போல் நாமே
அடை மழையாக பெய்யும் சந்தோஷம்..
ஆசை ஆசையாய் இருக்கிறதே
இது போல் வாழ்ந்திடவே..
அடுத்த ஒரு மாதம் கழித்து ஆறு தம்பதியர்களும் ஹனிமூனுக்கு மலைப்பாங்கான இடத்திற்கு சென்றார்கள்.. இதே உர்ச்சாகத்தோடும் மகிழ்வோடும் பயணப்பட்டார்கள்.. அந்த பயணத்தை அடுத்த கதையில் காணலாம்..
உயிருருக தன் இணையின் வசம் ஆனார்கள் அனைவரும்...





