Notifications
Clear all

அத்தியாயம் 17

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

“அண்ணா வயலுக்கு தான் போயிருக்காங்க நீயும் போ” என்று சொல்லி வனாவை அங்கு விட சொல்ல கண்ணீருடன் “சாரி திகம்பரி..” என்று அவளிடமும் மன்னிப்பு கேட்க

“அண்ணி என்கிட்டே எதுக்கு மன்னிப்பு கேக்குறீங்க.. எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் நீங்க போய் முதல்ல அண்ணா கிட்ட பேசுங்க. மீதியை பிறகு பார்த்துக்கலாம்” என்று சமாதனம் செய்து அனுப்பி வைத்தாள்.

வனா ரியாவை கொண்டு போய் நந்தன் இருக்கும் வயலில் இறக்கிவிட்டு திரும்பிவிட ரியா நந்தனை தேடி அவன் இருக்கும் இடத்துக்கு வந்தாள். அங்கே அவளை கண்டவுடன்

அங்கிருந்து செல்ல பார்க்க

“நந்தன் ப்ளீஸ்..” அவனை வழி மறைத்தாள்.

“ப்ச் இப்போ விளக்கம் வச்சு என்ன ஆக போகுது.. மறுபடியும் உன் கிட்ட என்னால தோர்க்க முடியாது சாரி ரியா நீ வேற ஒரு கல்யாணம் பண்ணிக்கோ..” என்றவன் எழுந்து செல்ல

“அப்போ நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க அப்படி தானே..” தீர்மானத்துடன் கேட்டவளை கண்டு ஆமாம் என்று அழுத்தம் திருத்தமாக சொன்னான்..

“அப்போன்னா என் முடிவையும் கேட்டுட்டு போங்க.. நீங்க என்னை கல்யாணம் பண்ணிக்கல என் காதலை எத்துக்கலனா அதோ அங்க ஓடிகிட்டு இருக்குற ஆத்துல குதிச்சுடுவேன்..” என்றாள்.

அவளை ஆழ்ந்து பார்த்தவன் “எனக்கு எந்த அப்ஜெக்சனும் இல்ல..” என்று தோள் குழுக்கியவனை கண்டு பத்திக்கொண்டு வந்தது..

“உங்க அப்பா கிட்ட சொல்லுவேன்” என்று மிரட்டினாள்.

“ரெண்டு பேரும் கூட்டு களவாணிங்க தானே.. என்னவோ பண்ணிக்கோங்க..” அதுக்கும் அசையாதவனை கண்டு

“மாமாவை எதுவும் சொல்லாதீங்க..”

“என்னடி மாமா இல்ல என்ன மாமான்னு கேக்குறேன்.. அந்தாளு என்னவோ உன்னை என் கிட்ட இருந்து காப்பாத்துரேன்ற பேர்ல இத்தனை வருஷம் பிரிச்சு வச்சாரு.. நீங்களும் அவரு பேச்சை கேட்டு அப்படி தான் இருந்தீங்க” கடுப்புடன் மொழிந்தவனை கண்டு இந்த விஷயம் எப்படி உங்களுக்கு தெரியும் வியந்து போய் கேட்டாள்.

“எனக்கு எல்லா விசயமும் தெரியும். என் அப்பா உன்கிட்ட வந்து நந்தனுக்கு உன் மேல காதலா இல்லையான்னே தெரியல அதனால நீ கொஞ்ச நாள் அவனை விட்டு தள்ளி இரு.. அவனே உன் காலடியில வந்து விழுவான். அது வரை நீ கொஞ்சம் பொறுமையா இரு.. நீ அவன் பக்கத்துலையே இருந்தா உன் அருமை அவனுக்கு தெரியாது மா...” அப்படின்னு மாமனாரும் மருமகளும் சேந்து என்னை காய விட்டீங்கள்ள உங்க ரெண்டு பேத்தையும் மன்னிக்கவே மாட்டேன்..

“ஐயோ மாமாவ எதுவும் சொல்லாதீங்க..”

“அப்படி தாண்டி சொல்லுவேன்.. உனக்கு அப்பா அம்மா இல்லன்னு அவரு ரொம்ப தான் தாங்குறாரு.. ஏன் நான் உன்னை தங்களையா..” கடுப்புடனும் மன வருத்தத்துடனும் மொழிந்தவனை கண்டு பாவமாய் போனது அவளுக்கு..

“பெரியவங்க சொல்லும் போது என்னால தட்ட முடியலங்க..”

“சரி அப்போ விடு.. மறுபடியும் ராயர் திகம்பரி பங்சன்ல என்னை பார்த்தல்ல அப்போ எதுக்குடி என்கிட்டே பொய் சொன்ன.. ஆக என் காதலை நீ உணரவே இல்லன்னு தானே அர்த்தம்.. அன்னைக்கு திகம்பரி ரத்தம் வடிய கீழே விழுந்து அப்பாவுக்கு ஸ்ட்ரோக் வந்து எப்படி தவிச்சு போனேன் தெரியுமா.. அதோட திகம்பரி வாழ்க்கையில அவ பட்ட வலி வேதனை அப்பா நினைச்சு பார்க்கவே அவ்வளவு கஷ்டமா இருந்தது. அப்போல்லாம் உன்னை ரொம்ப மிஸ் பண்ணேன் தெரியுமா.. ஆனா நீ ரொம்ப கூலா நரேன் ஆபிஸ்ல வேலைக்கு சேர்ந்துட்ட இல்ல.. இடையில இத்தனை வருசத்துல ஒரு நாள் கூட என் நினைவு வரவே இல்லல்ல.. நான் ஒரு பார்ட்டிக்கு வர்றேன்னு தெருஞ்ச உடனே அந்த பார்ட்டிக்கு நீ வர மாட்ட இல்ல..” என்று கேட்டவனை வியந்து பார்த்தாள்.

“என்னை பாலோ பண்ணிக்கிட்டு தான் இருந்தீங்களா..” உள்ளே காதல் ஊற்று எடுக்க கேட்டவளை முறைத்து பார்த்தான்.

“நான் யாரையும் பாலோ பண்ணல” மிடுக்குடன் சொன்னவனை இறுக்கி அணைத்தவள் போய் சொல்லும் அவனது உதடுகளை சிறை செய்தாள். அவளது முத்தத்தை அனுபவித்தவன் பின்னே தன்னை விட்டு விலக்கி நிறுத்தினான்..

அவளோ அவனை இன்னும் நெருங்கி நின்று “அன்னைக்கு உங்களை அந்த மீட்ல பாத்து இருந்தா நீங்க கூப்பிடலனாலும் நானே உங்கக்கிட்ட வந்து இருப்பேன் நந்தா.. மாமா பேச்சுக்கு மரியாதை குடுக்கனும்னு தான் நான் ஒதுங்கி இருந்தேன்.. ஆனா இப்போ உங்க தங்கச்சி விழால என்னையும் கட்டு படுத்த முடியாம தான் உங்களை ஒருமுறையாவது பார்த்துடலாம்னு தான் வந்தேன்.. அதே போல நீங்க என்னை விடல.. நானும் உங்களை விட்டு போகல.. அது மாமாவுக்கு கொஞ்சம் கஷ்டமா போச்சு..

இப்போ தான் நான் அவன் கிட்ட கல்யானத்தை பத்தி பேசி இருக்கேன்.. நீ அதுக்குள்ள வந்து காரியத்தை கெடுத்துட்டியே.. உன் பேரை லேசா போட்டு வச்சேன்.. உன்னை பிடிக்காத மாதிரி.. அதுக்கே அவன் தவிச்சு போய்ட்டான். உன் பேரை எப்படி நான் தவறா சொல்லலாம்னு என்னை ஒரு பாரவி பார்த்தான்.. அப்படி இருக்கிறவன் இன்னும் கொஞ்ச நாள் இழுத்து பிடுச்சி இருந்தா நம்ம வழிக்கு வந்து இருப்பான்னு மாமா சொல்லவும் சரின்னு தான் நீங்க என் மேல கோவ பட்டத சாக்கா வச்சுக்கிட்டு வேலையை விட்டு போகலாம்னு பார்த்தேன்.. ஆனா ராயர் அண்ணா பேசியவுடன் தான் எனக்கு எவ்வளவு பெரிய தப்பு பண்றோம்னோ தோனுச்சு.. சாரி நந்தன். இனி ஜென்மத்துக்கும் உங்களை விட்டு பிரிய மாட்டேன்.. நீங்க எனக்கு உங்க காதலை வெளிப்படையா சொல்லனும்னு எல்லாம் இல்ல.. உங்க கைக்குள்ள என்னை வச்சுக்கிட்டாலே எனக்கு போதும்..” என்று கண்ணீருடன் சொன்னவளை தன்னோடு அணைத்துக்கொண்டவன்

“நீ என்னை நம்பாம என்னை விட்டு ஒவ்வொரு முறையும் போகும் போதெல்லாம் அவ்வளவு வலிக்கும்டி.. தனிமை ஒரு சில சமயம் வேதனை தெரியுமா.. அந்த வேதனையை தான் நீ இத்தனை வருசமா எனக்கு குடுத்துக்கிட்டு இருக்க.. முதல் முறை நீ என்னை நெருங்கும் போதே உன் கண்ணுல காதல் இருப்பதை நான் புருஞ்சுக்கிட்டேன்.. அதைவிட அடுத்த முறை கால் கேர்ளை அழைக்கும் போது உன் முகத்துல வந்து போச்சே ஒரு வேதனை அதை என்னால இப்பவும் மறக்க முடியாதுடி.. அன்னையில இருந்து நான் உன் கிட்ட மட்டும் தான். இந்த மூணு வருஷ பிரிவிலும் எனக்கு உன்னை தான் தேடியது..” என்று சொல்ல

“அந்த விஷயம் எனக்கும் தெரியும்” பெருமை பட்டாள்.

“அப்போ நீயும் என்னை மாதிரி என்னை பாலோ பண்ணிக்கிட்டு தான் இருந்தேன்னு சொல்லு..” என்றவன் உல்லாச நிலைக்கு சென்றான். அவன் மனதில் உள்ள பாரம் சற்றே இறங்கியது..

“ஆமா என் புருஷனை நான் பாலோ பண்றேன் உங்களுக்கு என்ன” என்று சினுங்கியவளை வன்மையாக அணைத்தவன் சுற்றும் முற்றும் பார்த்தான் தோப்பு வீடு அருகே இருக்க வேகமாய் அவளை அங்கே தூக்கி செல்ல

அவனது பிடியிலிருந்து நழுவி

“ம்கும் இப்போ வேணாங்க மாமா நமக்காக காத்துக்கிட்டு இருக்காரு.. அவருக்கிட்ட போய் நாம நடந்த சொல்லலாம்” என்று சொல்ல

“ஒன்னும் தேவை இல்ல என்னை அலையவிட்டாருள்ள அதனால இப்போதைக்கு எதுவும் சொல்றது கிடையாது.. அவரு கொஞ்சம் டென்சன்லையே இருக்கட்டும்... இப்ப முதல்ல நீ என்னை கவனி.. என் கிட்டயே ரெஜிக்கினேசன் லெட்டர் குடுத்தில்ல.. உன்னை என்ன பண்றேன்னு பாரு..” என்றவன் அவளை இன்னும் வன்மையாக பிடித்து அவளது இடையில் கோலம் போட்டு தன்னோடு நெருக்கமாக்க மூச்சு முட்டி போனது அவளுக்கு..

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top