“இந்த விஷயம் மாமாவுக்கு கண்டிப்பா தெரிய கூடாது.. தெருஞ்சா ரொம்ப வேதனை பாடுவாரு.. ஏற்க்கனவே அவரு வாழ்க்கையில ரொம்ப வேதனை பட்டுட்டாரு.. இனியும் அவரை என் வழில நானும் கஷ்ட்டப்படுத்த விரும்பல.. அதனால இந்த விசயம் நமக்குள்ளே முடியனும்னு நான் நினைக்கிறேன்..” என்றான். அதற்க்கு ஒப்புதலாய் தலை அசைத்தவள் திரும்பி நடக்க “இன்னொன்னு சொல்லணும் ஸ்வரா” என்றான் சற்றே உள்ளடங்கிய குரலில்.
அதிலே அவனது சங்கடம் தெரிய “என்ன ரவி” என்றாள் முட்டிய கண்ணீரை அடக்கிய படி.
“எங்களை விட உன் அப்பா பெரிய கிரிமினல் லாயர். கூடவே செக்யூரிட்டியும் அதிகமாவே இருக்கும். சோ கவலை பட எதுவும் இல்லை.. அது உனக்கே தெரியும். ஆனா நீயும் நானும் சேரணும்னு தான் நந்தன் அண்ணா உன்னை இங்க கூட்டிட்டு வந்தாரு.. அது இனி எப்போதுமே நடக்கதுன்னு தான் நமக்கு தெரியுமே.. அதனால நீ இன்னைக்கே இந்த ஊரை விட்டு போய்டுறியா ப்ளீஸ்..” என்றவனின் பேச்சில் ரொம்பவும் அடிபட்டு போனாள். பின் அவனது நிலையிலிருந்து யோசித்தவள் மெல்லிய புன்னகையில் தன் சம்மதத்தை சொன்னவள் வெளியே வந்துவிட்டாள்.. வந்தவளின் விழிகளில் அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் சரம் தொடுக்க ஆரம்பித்தது..
கிட்ட தட்ட நான்கு வருட காதல் அவளது.. அது நொடியில் இல்லை என்று ஆன உடன் பெரும் துயரம் சூழ்ந்தது அவளை.. யாரிடம் சொல்லி ஆறுதல் பெற.. ஒருவரிடமும் சொல்ல முடியாது.. குறிப்பா ராயருக்கு இந்த விஷயம் தெரியவே கூடாது.. எண்ணியவள் என்ன சொல்லி இந்த வீட்டை விட்டு போறது என்று யோசித்தாள்.
பாசத்துடன் பழகிய தில்லையையும் மதியையும் எண்ணி மனம் கரைந்தாள்.
எனக்கு குடுப்பனை இல்லை போல இவர்களோடு சேர்ந்து வாழ எண்ணியவள் கொண்டு வந்த பையை எடுத்துகொண்டு கூடத்துக்கு வந்தாள்..
ரவி எதுவும் உடைத்து பேசவில்லை என்றாலும் அவனது கண்ணின் சிவப்பே தன் தந்தை பேசியதை அவன் இன்னும் முழுமையாக தன்னிடம் சொல்லவில்லை என்பதை அறிந்துக்கொண்டவள் அது ரொம்ப பெரிய விசயமாக இருக்கும் அதோட அது ரவியை வேரோடு சாய்த்து போட்டு இருக்கும் என்பதை கணித்துக்கொண்டாள். அதனாலே அவன் கிளம்ப சொன்னவுடன் அமைதியாக கிளம்பினாள். தன்னால் அவன் மேலும் வருந்துவது பிடிக்காமல்.
அவளது பயணத்தை கண்டு நந்தாவும் ராயரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“என்ன மா அதுக்குள்ள கிளம்பிட்ட ஒருவாரம் இருந்துட்டு போகலாம்னு வந்துட்டு இப்படி வந்த அன்னைக்கே போறியே..” ஆண்டி அவளை விசாரிக்க
“ஏங்கண்ணு இங்க இருக்க ஒப்பலையா..” தில்லையும் கேட்க
இருவரையும் பார்த்தவளுக்கு கண்கள் கலங்கியது. அடக்கிக்கொண்டு
“அப்படியெல்லாம் இல்லங்க ஆண்டி அப்பா உடனடியா ஊருக்கு வர சொன்னாங்க. புதுசா கேஸ்ல ஒரு திருப்பம் வருது போல. அதை கவனிக்க வர சொன்னங்க.. அதான்” என்று சமாளித்தவளை கண்டு திகம்பரிக்கு யோசனையாய் இருந்தது.. அவள் தன் அண்ணனையும் கணவனையும் பார்க்க இருவரும் கண்களை மூடி ‘நாங்க பாத்துக்குறோம்’ என்பது போல தலை அசைக்க சரி என்று திரும்பிக்கொண்டாள்..
“சரிமா கவனமா போயிட்டு வா.. அய்யா ராயரு புள்ளைய பத்திரமா கொண்டு போய்விட்டுட்டு வா” என்று அவளை வழியனுப்பி வைக்க நந்தாவும் ராயரும் அவளை அழைத்துக்கொண்டு செல்ல பாதை வேறு எங்கோ செல்வதை கண்டு
“அண்ணா” என்றாள் தயக்கமாய்.. அவளது தயக்கத்தை கண்டு
“இப்போதைக்கு நீ கவி வீட்டுல இரு.. நாங்க ரெண்டு பேரும் பாத்துக்குறோம்” என்றவர்கள் அவளை பேசவிடாமல் கவி வீட்டில் கவியிடம் மட்டும் விசயத்தை சொல்லி தங்க ஏற்பாடு செய்துவிட்டு அப்போது தான் ஊருக்குள் வந்த செழியனை அழைத்துக்கொண்டு தோப்பு வீட்டுக்கு சென்றார்கள். அங்கே சஞ்சயை காண்பித்து என்ன செய்வது என்று ஆலோசனை செய்தார்கள்.
அவனது முகத்தில் தெரிந்த ரத்த கரையில் “இதுக்கு மேல அடிச்சா தாங்க மாட்டான் ராய்.. இனி இவனை பேச வச்சி என்னவெல்லாம் ரெக்கார்ட் பண்ண முடியுமோ அதுவும் எல்லாம் நமக்கு சாதகமா இருக்குற மாதிரி பாத்துக்கணும் ராய்..” என்ற செழியனை பார்த்தவன் இது வரை அவனிடம் வாங்கி வைத்து இருந்த தகவல்களை காட்டினான் ராயர்.
அதை வாங்கி பார்த்த செழியன் அதை நல்ல நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்க தொடங்கினான். சில தகவல்களை அவனிடம் பரிமாறவும் அவனும் அவனுடைய கருத்துக்களை சொன்னான்.. பிறகு இருவரும் மேற்கொண்டு என்ன செய்வது என்று முடிவெடுத்துக்கொண்டார்கள்..
அதன் படி இவனுடைய பேரின் பின்னே ஒளிந்து இருக்கும் சமுகவிரோதியை எப்படி வெளியே கொண்டு வருவது என்று திட்டம் தீட்டிக்கொண்டர்கள்..
நந்தன் ரவியின் அறைக்கு சென்று அவனை பார்க்க அவன் மிகவும் சோர்ந்து போய் இருந்தான். அவனது தலையை வருடி விட அந்த இதத்தில் கண் விழித்தவன்
“ஏண்ணா நான் தான் வேணான்னு சொன்னேனே.. பொறவெதுக்குண்ணா அவளை இங்க வர வச்சீங்க..” ஆற்றாமையுடன் கேட்டவனை
“உனக்கு அவ மேல கொஞ்சமும் ஆசை இல்லைன்னு உண்மைய சொல்லு நான் இப்போவே இந்த விஷயத்தை விட்டர்றேன்..” என்று அவனை ஆழம் பார்த்தான்.
“ப்ச் வாழ்க்கைக்கு பிடிக்குது பிடிக்கல அதெல்லாம் முக்கியம் இல்லன்னா.. நமக்கு ஒத்து வருமான்னு தான் பார்க்கணும்.. எனக்கு இந்த ஊரு பொண்ணு தாண்ணா செட் ஆகும்.. என் அம்மாவோட நாளுக்கு ரெண்டு சண்ட போட்டு என்னையும் எங்க அப்பாவையும் பஞ்சாயத்து பண்ண வர சொல்லி வம்பிளுதுக்கிட்டு இருக்குற பொண்ணு தான் சரி.. மெத்த படுச்ச பொண்ணெல்லாம் சரி பட்டு வராதுண்ணா” என்று மனம் கலங்க பேசியவனின் பேச்சில் திகைத்தவன்
“மனசு தொறந்து சொல்லுடா என்ன ஆச்சு..” என்று கேட்டவனிடம் மனம் தாங்காமல் அனைத்தையும் சொன்னவன் முகத்தை மூடிக்கொண்டு கதறினான்.
“அம்மாவையும் மதியையும் அப்படி சொல்லிட்டாருண்ணா என்னால அதை ஏத்துக்கவே முடியல. இதைவிட மாமாவை கண்டமேனிக்கு பேசிட்டாரு அவரு.. இதுக்கு மேல அவருக்கிட்ட போய் உங்க பொண்ணு தான் வேணும்னு குடும்பத்தோட போய் அவமான பட சொல்றீங்களா.. வேணாண்ணா என்னோடையே அந்த காதல் முடியட்டும்..” என்றான்.
நந்தனுக்கு அவ்வளவு ஆத்திரம் வந்தது.. இப்படி உள்ள விசத்தை வச்சுக்கிட்டு வெளிய நல்லவர் மாதிரி வேஷம் போட்டுக்கிட்டு இருக்கும் அவரை எல்லாம் என்ன செய்வது அவரின் வழியிலே போய் மடக்கி விடலாமா என்று யோசித்தவன்
“ஏண்டா ரவி நீ நிஜமாவே ஆண்பிள்ளை தானா..” என்று கேள்வி கேட்டான் நந்தன்..
“அண்ணா..”
“என்னடா அண்ணா.. இங்க பாரு அத்தையையும் மதியையும் அவ்வளவு கீழ்தரமா பேசி இருக்காரே அவருக்கு தக்க பதிலடி குடுக்குறது இல்ல.. இல்ல உன் மாமனை இப்படி பேசி இருக்காரே அந்த ஆளை அப்படியே சும்மா விட எப்படி டா மனசு வருது.. ஆண் பிள்ளையா இருந்தா இப்படி தான் கோழை மாதிரி இங்க வந்து படுத்து இருப்பியா.. சிங்கமா போய் ஸ்வராவை உன் பொண்டாட்டியா ஆக்கிட்டு வருவியா அதை விட்டுட்டு இப்படி அவருக்கு போய் பயந்துக்கிட்டு இருக்க”
“என்ன ண்ணா இப்படி பேசுற...”
“வேற எப்படிடா பேச சொல்ற... ஒழுங்கா நான் சொல்றதை கேளு... இதோ பாரு அவர் எப்படி உன்னை யாருக்கும் தெரியுமா கூப்பிட்டு வச்சு அசிங்க படுத்துனாரோ அதே போல நீயும் அவரை தனியா மேனேஜ் பண்ணு அதை விட்டுட்டு இப்படி புறமுதுகு இட்டுக்கிட்டு வராதடா.. இது உனக்கு செட் ஆகாது.. உன் கேரக்டரும் அது கிடையாது டா..” என்று அவனை நன்கு தெரிந்தவனாய் சொல்லி விட்டு மேலும்
“கவி கல்யாணத்தோட உன் கல்யாணத்தையும் நடத்த ஏற்பாடு பண்றோம்” சொன்னான். அவனது பேச்சில் திகைத்து போனான் ரவி.
“அடேய் அண்ணா..”
“டேய் தம்பி நாம நல்லவனுக்கு நல்லவன்டா..” என்று கண்ணடித்து ஒருகையை தூக்கி அவனுக்கு காண்பிக்க
“அதானே நாம் தான் ரொம்ப நல்லவனுங்க ஆச்சே..” என்று சிரித்து நந்தனின் கையில் அடித்து பழைய பார்முக்கு வந்தான் ரவி... உடனே ஸ்வராவை போனில் அழைத்து
“ஏய் எங்கடி இருக்க உடனே வீட்டுக்கு வா நம்ம கணக்கு பைசல் பண்ணாம இருக்கு.. பண்ணிட்டு கிளம்பிக்கலாம்” என்று சொல்ல கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு மயக்கமே வந்தது..
இது தானே அவளுடைய ரவி..
“ரவி..” என்றாள் திகைத்து
“வாடி” என்றான் ஆளுமையுடன்.
“ப்ச் நான் ஊருக்கு வந்துட்டேன்..” போக்கு காட்டினாள் மலர்ந்த மனதுடன்.
“செத்தே போனாலும் நீ எனக்கு வேணும். அதனால இப்போ உடனே கிளம்பி வா அண்ணனை அனுப்புறேன்” என்றவன் வைத்து விட்டு நந்தனை பார்க்க அவன் சிரிப்புடன்
“நீ நடத்துடா தம்பி பயலே” சொல்லிவிட்டு ஸ்வராவை அழைத்து வந்தான்.
வந்தவுடனே அவனை பார்க்க விளைந்தவள்
வேகமாய் அவனது அறைக்கு சென்று அவனை பல நாள் பிரிந்தவள் போல அதித காதலுடன் “ரவி” என்று அழைத்தான்..
“நானே தாண்டி வா..” என்று ஒரு கை நீட்டி அவளை அழைக்க அவனின் கரத்தை பிடித்து அவனருகே வந்தவள்
“மறுபடியும் என்னை போக சொல்ல மாட்ட தானேடா..”
“சாரி டி.. இனி இப்படி நடந்துக்க மாட்டேன்.. என் வாழ்க்கை முழுசுக்கும் நீ வேணும் என் இறுதி பயணம் உன்னோட தான்” என்றவனை நெஞ்சோடு அணைத்துக்கொண்டவள்
“எனக்கு இது போதும் டா..” என்று தன்னுள் அவனை ஆழ புதைத்துக்கொண்டாள்.
“ஆனா உங்க அப்பா கிட்ட”
“அதை பத்தி எனக்கு எதுவும் தெரியாது தெரியவும் வேணாம்.. அது மாமனார் மருமகன் பிரச்சனை. அதில் என்னை உள்ள நுளைக்காதீங்க” என்றாள் பட்டென்று..
“இததாண்டி நானும் நினைச்சேன்.. நீ அப்படியே சொல்லிட்ட.. என் செல்லம் டி நீ..” என்று அவளை கட்டிக்கொண்டவன் அவனது ஆட்டத்தை ஆட தயாரானான்..





