அடுத்த இரண்டு நாளில் ராயர் அனைவரையும் கிளப்பிக்கொண்டு ஊர் வந்து சேர்ந்தான்.. ரவிக்கு அடிபட்ட செய்தி கேட்டு அவ்வளவாக பதறவில்லை என்றாலும் லேசாய் கலங்கி தான் போனார்கள் தில்லையும் ஆண்டியும்.. மதியும் கந்தனும் ரவியை அணைத்துக்கொண்டு கண்ணீர் விட, வனா ரவியை தோளோடு தாங்கிக்கொண்டு தன் பாசத்தை காண்பித்தான்..
சிவனாண்டி எல்லோரையும் ஒய்வு எடுக்க சொல்லிவிட்டு தீஷிதனை தூக்கிக்கொண்டு வெளியே சென்றுவிட்டார். நந்தன் தன் தந்தையை அவருடைய அறைக்கு அழைத்து சென்று தூங்க ஏற்பாடு செய்துவிட்டு வயல் பக்கம் செல்ல அவனோடு ராயரும் சென்றான்.
“எனக்கு ஒன்னும் இல்லடா நான் மேனேஜ் பண்ணிக்குவேன்” என்றான்..
“நானும் உன்னை தாங்கி தடுக்குல தூக்கிக்க வரலடா உன் கிட்ட கொஞ்சம் பேசணும். ரவிய பக்கத்துல வச்சுக்கிட்டு என்னால எதையும் பேச முடியாது அதான். அதோட இல்லாம ஸ்வராவை இங்க வர சொல்லலாம்னு இருக்கேன்.. நீ என்ன சொல்ற”
“எனக்கும் அது தான் சரின்னு படுது.. அவ மட்டும் அங்க தனியா இருக்குறது ஸேப் கிடையாதுன்னு சொல்லி ரவியிருக்குற இடத்துல அவளையும் கொண்டு வந்து வச்சா ரெண்டு பேருக்கும் இடையில ஓரளவு ப்ராப்ளம் சால்வ் ஆய்டும்னு தோணுது டா..”
“ம்ம் அதுக்கு தான் நானும் ஏற்பாடு பண்ணி இருக்கிறேன்.. எப்படியும் இன்னைக்கு இல்ல நாளைக்குள்ள ஸ்வரா இங்க வந்துடுவா..”
“ம்ம்..”
“அவ வந்தா ஓரளவு எல்லாம் முடிவுக்கு வரும்.. ஆனா”
“இன்னும் என்னடா..”
“அவன் பிரச்சனைக்கு முன்னாடி உன்னோடது நிக்குதுடா..”
“எனக்கு கல்யாணாமே வேணாண்டா..” என்றான் எரிச்சலோடு
“மாமாவை நினைச்சி பாரு மச்சான்..”
“ப்ளீஸ் ராய்” என்றன் கெஞ்சலோடு.
“என்னன்னு என் கிட்ட மட்டுமாவது சொல்லுடா..” என்றவனை வேதனையோடு பார்த்தான் நந்தன்.
“சொல்லு மச்சான்” என்றவன் அவனை தன் தோளோடு அணைத்து தூண்டி விட்டு
“என்னால இதுல எதாவது உதவி செய்ய முடுஞ்சதுன்னா செய்வேன்ல டா..” ஆதுரமாய் கேட்டவனின் அன்புக்கு முன் தலை தாழ்ந்தவன் பேரு மூச்சோடு எல்லாவற்றையும் சொல்லி முடித்தான்.. கேட்ட ராயருக்கு மனம் கனத்து போனது..
“உன் கோணத்துல இருந்து பார்க்கும் போது சரி தாண்டா.. ஆனா ரியாவோட சூழ்நிலை என்னன்னு தெரியதுல நமக்கு..” என்றவனை அடிபட்ட பார்வை பார்த்தான்.
“அவளுக்கு எப்பவுமே சூழ் நிலை சரியதாண்டா இருக்கும்” என்றவன் அவளை பற்றிய சுய தகவல்களையும் சொன்னவன்
“விடு ராயரு என் தலையில இப்படி தான்னு எழுதி இருந்தா அதன் படியே நடந்துட்டு போகட்டும்.. இந்த விசயம் யாருக்கும் தெரிய வேணாம்” என்றான்.
“நீ பண்றது தவறு டா.. ரியாக்கிட்ட சொன்னா தானே அவளோட பக்கம் என்ன என்பதை சொல்லுவா.. இல்லையா அந்த சூழல்ல அவ என்ன பிரச்சனையில மாட்டிக்கிட்டு இருக்கான்றதும் நமக்கும் தெரியும்..”
“நீ சொல்றது எல்லமே சரி தாண்டா.. ஆனா என்னால அவளை இனிமே ஏத்துக்க முடியாதே.. அப்புறம் எதுக்கு விளக்க உரை நடத்தனும்.. அப்பாவோட சேர்ந்துக்கிட்டு என்னை தள்ளி வச்சாள்ள.. இத்தனை வருஷம் சேர்ந்து வாழ்ந்ததுல நம்பிக்கைன்ற ஒன்னு இல்லாமலே போச்சுல்ல.. இனி என்ன செஞ்சு என்ன ஆக போகுது.. மறுபடியும் ஒருமுறை அவளுக்கு வாய்ப்பு குடுத்தேன்.. ஆனா அவ எனக்கு குடும்பம் ரெண்டு குழந்தை இருக்குன்னு சொல்லி என்னை ஏமாத்திட்டா.. அப்பாவும் அவளை விட மனசு இல்லாம தான் என் கூடவே வச்சுக்கிட்டேன்.. ஆனா அவ காதலை நான் அபெக்சன்னு சொன்ன உடனே எந்த விளக்கமும் கொடுக்காம வேலைய விட்டு போறேன்னு சொல்றா.. இப்படி இருக்குறவக்கிட்ட என் காதலை ப்ரூவ் பண்ண சொல்றியா டா.. எதுவும் வேணாண்டா.. மறுபடியும் அவ என்னை விட்டு போன சத்தியமா நான் உடைஞ்சி போய்டுவேன்.. இன்னும் இன்னும் என் ரணம் கூடிகிட்டே தாண்டா இருக்கும். எதுக்கு நானே வழிக்க போய் என்னை நோகடிச்சுக்கணும் சொல்லு.. அதனால அவங்கவங்க அவங்கவங்க வழியில போறது தான் நல்லது.. கிண்டி கிளரிகிட்டு இருந்தா வேதனை தான் மிச்சம். அது ரெண்டு பேருக்கும் கஷ்டம்.” என்றவன் அப்படியே மர நிழலில் கால் நீட்டி படுத்துவிட்டான்..
அவனது இந்த முகத்தை கண்டு சோர்ந்து போன ராயரின் மனதில் இதை எப்படி சரி செய்வது என்ற எண்ணமே குடி கொண்டு இருந்தது..
ரவி அடுத்த நாள் காலையில் கண்விழிக்கும் போதே ஸ்வராவின் குரல் கேட்டு தான் விழித்தான். அவள் எப்படி இங்க என்று அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தவனுக்கு முதுகில் ஏற்பட்ட வலியில் சுருண்டு போனான்.
அவனது அசைவை கண்டு எல்லோரும் கூடத்திற்கு வந்தார்கள்.
ரவி கூடத்தில் தான் படுத்து இருந்தான். அதனால் எல்லோரும் அங்கே வந்தார்கள்.
“எதுக்குடா இப்படி அவசர பட்டு எழுந்திரிக்கிற ஒழுங்கா இருக்க மாட்டியா” என்று கடிந்த படியே தில்லை அவனை கடிய, அருகில் இருந்த நந்தனும் ராயரும் அவனுக்கு கை கொடுத்து எழுப்பி உட்கார வைத்தார்கள்.
எழுந்து அமர்ந்தவனின் கண்களுக்கு அவளை தவிர வேறு யாரும் தெரியவில்லை..
“எதுக்குடி இப்போ இங்க வந்த நான் உன்னை வர சொன்னனா..” எடுத்த எடுப்புடன் அப்படி கேட்டவனை கண்டு சுல்லேன்று கோவம் வந்தது தில்லைக்கு.
“ஏலேய் எடுபட்ட பயலே.. ஒழுங்கா பொம்பளை புள்ளைக்கு மரியாதை கொடுத்து பேசுலே.. இப்படி தான் நான் உன்னை வளர்த்தனா..” அவனை திட்ட
“ம்மா நீ வேற கொஞ்ச நேரம் பேசாம இரு..” என்றவன் ஸ்வராவிடம் திரும்பி
“என்ன ஸ்வரா இதெல்லாம். என் பேச்சுக்கு நீ மரியாதை குடுக்கவே மாட்டியா..” என்றவனை தயக்கத்துடன் பார்த்தாள்.
“இல்ல ரவி..”
“பேசாதடி” கடுப்படித்தவனை கண்டு
“டேய் அவளை ஒன்னும் சொல்லாத நாங்க தான்டா வர செய்தோம்.. அங்க அவளுக்கு அவ்வளவா ஸேப் இல்ல”
“அண்ணா நான் உங்கிட்ட என்ன சொன்னேன்..” என்று நந்தனை பார்த்து வலியுடன் கேள்விக்கேட்டவனை சமாதன படுத்தும் நோக்கத்துடன்
“டேய் இது உயிர் சம்மந்தமான விசயம்டா. அதான் ரிஸ்க் எடுத்து கூட்டிட்டு வந்துட்டேன்.. நீ எதையும் மனசுல ஏத்திக்கமா ரெஸ்ட் எடு.” என்றவன் எல்லோரையும் அழைத்துக்கொண்டு சென்றுவிட ரவி தலையின் மீது கை வைத்து அமர்ந்துக்கொண்டான்.. அவனது தவிப்பை கண்டு ஸ்வராவுக்கு பாவமாய் இருந்தது..
‘நிஜமா எனக்கு உன்னை வருத்த பட வைக்க விருப்பம் இல்லடா.. ஆனா நான் சொன்னா நந்தன் கேக்கவே இல்ல.. நான் என்ன பண்ணட்டும்’ மனதோடு பேசியவள் எழுந்து சென்றுவிட்டாள்.
அதன் பிறகு அவனருகிலும் சரி அவன் கண் பார்வையிலும் அவள் படவே இல்லை.. அவனை விட்டு நன்றாகவே தள்ளி இருந்தாள்.
அடுத்த ஹியரிங்க்கு தேவையான பாயின்டும் சில எவிடன்சும் தயாராகவே இருக்க ராயரும் சரி ஸ்வராவும் சரி அலட்டிக்கொள்ளவே இல்லை.. கூடவே ராயர் சஞ்சையை தன் ஊருக்கே கொண்டு வந்து தனக்கு உரிமையான இடத்தில் அவனை பதுக்கி வைத்துவிட்டு செழியனிடம் சொல்லிவிட்டான்.
“இது தப்பு ராயர்..”
“ப்ச் இவன் பண்ண வேலைக்கு இதெல்லாம் கம்மி டா.. இவனை வச்சு இன்னும் சில விசயங்கள் எல்லாம் செய்ய வேண்டியது இருக்கு.. அதனால நீ என்ன பண்ற சஞ்சய் சிறையில இருந்து தப்பி ஓடிட்டான்னு சொல்லிடு.. கூடவே தேடிக்கிட்டு இருக்கோம் அப்படின்னும் சொல்லிடு.. வர்ற விளைவுகளை பிறகு பார்த்துக்கலாம்..” என்று வைத்து விட்டான்.
செழியனுக்கும் அவனை விசாரிக்க வேண்டியது இருந்தது.. அதனால் சரி என்று ஒத்துக்கொண்டு உடனடியாக அவனும் கிளம்பி வந்தான்.
ஸ்வராவை கண்ணில் காண முடியாமல் தவித்தவன் அவளோடு பேச வேண்டும் போல இருந்தது.. இதுக்கு மேலும் அவளது வாழ்வை பாலாக்க மனம் வர வில்லை அவனுக்கு. பெருமூச்சு விட்டவன் தானே அவளை தேடி சென்றான்.
பின் கட்டில் திகம்பரியோடு பேசிக்கொண்டு இருந்தவளை தன் அருகே அழைத்தான்..
முதலில் திகைத்தவள் பின் அவளிடம் சொல்லிக்கொண்டு ரவியின் அருகில் வந்து நின்றாள்.
“என்ன ரவி..”
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் வரியா..” என்றான்.
“இந்த நிலைமையில வேணாம் ரவி.. நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு.. பிறகு எதா இருந்தாலும் பேசிக்கலாம்..” என்று சொன்னவளின் அன்பில் நெகிழ்ந்தவன்
“வா ஸரா..” என்றவன் முன்னே நடந்து செல்ல அவன் பின்னாடி இவளும் சென்றாள் என்ன பூகம்பம் இருக்கோ என்று.. ஏனெனில் அவனிடம் எப்பொழுதும் ஒரு பரபரப்பு இருக்குமே தவிர இன்று போல ஓய்ந்து போய் தளர்ந்து இருக்க மாட்டான் என்பதால்..
தன்னுடைய அறைக்கு சென்று கதவை தாளிட்டவன் அவளை பார்த்து புன்னகைத்தான்..
“ரவி..” என்றாள் பயத்துடன்..
“ம்ம் உக்காரு ஸரா” உபசரித்தவனை கண்டு மேலும் பயமே வந்தது.. தன் காதல் நிராகரிக்க பட்டு விடுமோ என்று..
“நீ நினைக்கிற மாதிரி தான்.. உன் காதல எனக்கு ரொம்ப பிடிக்கும் ஸரா.. ஏன் உன்னையும் உன் ஆட்டிட்டியுடையும் ரொம்ப பிடிக்கும்.” என்றவனை கண்டு வருத்தமாய் புன்னகைத்தாள்..
‘இதே இது நீ அதித காதலில் சொல்லி இருந்தா நான் ரொம்ப சந்தோசப்பட்டு இருப்பேன் ரவி’ மனதோடு சொல்லிக்கொண்டாள்.
“எப்பவும் நீ இதே போல்டோட இருக்கணும்.. அது தான் உன் அடையாளம்.. நான் இப்படி பட்ட ஆளே இல்ல தெரியுமா.. எனக்கு வளவளன்னு பேச தெரியாது.. அதோட இல்லாம எனக்கு பிடுச்சா நான் தட்டி தூக்கிக்கிட்டு போய்ட்டே இருப்பேன்” என்றான் சற்றே புன்னகையோடு.
“இப்பவும் அப்படியே செஞ்சு இருக்கலாமே ரவி..”
“இப்போ என் குடும்பம் நடுவுல நிக்குதே ஸரா..”
“ரவி..” என்று அதிர்ந்தாள்.
“ம்ம்ம் உன்கிட்ட ஜூனியரா சேர்ற அன்னைக்கு காலையிலேயே உன் அப்பா என்னை கூப்பிட்டார்” என்றபோதே ஸ்வராவுக்கு ஓரளவு என்ன வர போகிறது என்று தெரிந்து போனது.
“என்ன சொன்னாரு..” என்று கேட்டாள் கலவரத்துடன்.
“தேர்ந்த வக்கீல் இல்லையா.. அதான் ரொம்ப சிம்பிளா சொல்லிட்டாரு.. உனக்கும் எனக்கும் ஒத்து வராதுன்னு.. முக்கியமா அந்தஸ்த்துல”
“அதுக்கு நீ என்ன சொன்ன..”
“நான் என்ன சொல்லுவேன்னு நீ நினைக்கிற..”
“உங்க பொண்ணுக்கு மூணு நேரம் சோறு திங்கிற அளவுக்கு சம்பாரிக்க முடியும்னு சொல்லி இருப்ப.. கூடவே அவ மனச சந்தோச படுத்த என்னால முடியும்.. நீங்க ஆயிரம் பொன்னு சீர் வரிசை செஞ்சு கட்டி குடுத்தாலும் உங்க பொண்ணு யாரையும் விரும்ப மாட்டா.. அப்படி தானே சொன்ன” என்றாள் பெருமையாக.. அவனை பற்றி முழுமையாக அறிந்து இருந்ததாள்.. அவள் அப்படி சொல்லும் போது ரவிக்குமே பெருமையாய் இருந்தது.. தான் காதலிக்கும் பெண் தன்னை பத்தி சரியாக கணித்து இருக்கிறாள் என்று.
“கிட்ட தட்ட அப்படி தான்.. ஆனா உங்க அப்பா அடுத்த பாயின்ட் சொன்னாரு பாரு நான் பிளாட்..” என்று வருத்தமாக சிரித்தான்.
“ரவி..” என்றாள் அதிர்வாய்.
வாய் குவித்து காற்றை வெளியே ஊதி தன்னை சமன் படுத்த முயன்றவன்.





