தனியாக மருத்துவமனையில் அமர்ந்து இருந்தவனுக்கு என்னென்னவோ நினைவுகள் வந்து செல்ல அத்தனையையும் அடக்கிக்கொண்டு ரவி அனுமதிக்க பட்டு இருந்த அவசர பிரிவு வாசலையே பார்த்துக்கொண்டு இருந்தான்..
ம்ஹும் எல்லாம் இருந்தும் ஒரு இக்கட்டுன்னா அதை நான் மட்டும் தான் அனுபவிக்கனும் போல.. இது தானே என் தலைவிதி.. மெல்லியதாய் ஒரு கோவம் வந்தது. அது யார் மேல என்று அவனுக்கு மட்டும் தானே தெரியும். ஆனால் அதை.. என்று மேற்கொண்டு எண்ண பிடிக்காமல்
முதலில் ரவியை கவனிப்போம் என்று தன் சிந்தனையை ரவியிடம் வைத்து பொறுமையாக காத்துக்கொண்டு இருந்தான் ரவிக்காக . ஒரு வழியாய் மருத்துவர் வெளியே வந்து ரவிக்கு ஒன்றும் பயமில்லை என்று சொன்ன பிறகு தான் நந்தனுக்கு உயிரே வந்தது..
“டாக்டர் அவனுக்கு உள்ளூர எந்த உறுப்பும் பாதிக்க படல தானே.. நான் அவனை பார்க்கலாமா..” பரிதவிப்புடன் கேட்டவனை கண்டு மெலிதாய் புன்னகைத்தவர்
“அவருக்கு ஒன்னும் இல்ல மிஸ்டர் நந்தன்.. யூ டோன்ட் வொரி.. ஹி இஸ் பெர்பெக்ட்லி ஆல்ரைட்.. கண்ணு முழிச்சதுக்கு பிறகு நீங்க போய் பாருங்க” என்று அவனுக்கு நம்பிக்கையை கொடுக்க, அதன் பிறகே நந்தனுக்கு இலகுவாய் மூச்சு வந்தது..
ரவி நந்தனை இரண்டு மணி நேரம் படுத்திய பிறகே கண் விழித்தான்.. அவனை பார்த்த ரவிக்கு
“என்னண்ணா ரொம்ப படுத்திட்டேனா..” என்று சிரித்தவனின் தலையை வாஞ்சையுடன் தடவிக்கொடுத்தவன்
“அப்படீல்லாம் ஒன்னும் இல்லடா... நீ குணமானா எனக்கு அதுவே போதும்..” என்றவனின் அன்பில் நெகிழ்ந்தவன்
“ண்ணா மாமா ஸ்வரா எல்லாரும் ஸேப் தானே..” கேட்டவனுக்கு தலை அசைத்தவன் “ஸ்வரா தான் ரொம்ப அழறா பேசுறியா...”
“வேணாண்ணா..”
“ரொம்ப பயந்து போய் இருக்குறா டா..”
“ப்ச் வேணாண்ணா.. நாம கொஞ்ச நாள் ஊருக்கு போகலாமா...” என்றான் தவிப்புடன்..
“ஏண்டா.. நான் உன்னை நல்லா பாத்துக்குவேண்டா..” அவனது பேச்சில் மனம் லேசாய் அடி வாங்கியது.
“ப்ச் அண்ணா அது காரணம் இல்ல. உன்னை விட நீ என்னை நல்லா பாத்துக்குவ இது அதுக்கு இல்லண்ணா.. உன்னையும் சேர்த்து தான் கூப்பிடுறேன்..” என்றான் எங்கேயோ பார்த்துக்கொண்டு.
“என்ன ஆச்சு ரவி.. ஏதும் மனசு சங்கட்டமான விசயமா..” அவனது நாடியை பிடித்து விட்டான்.
“ம்ம் என்கிட்டே எதுவும் கேக்காதண்ணா.. ஆனா எனக்கு ஊருக்கு போகணும்னு இருக்கு கூட்டிட்டு போறியா..”
“இப்போ எப்படி டா.. திடிர்னு போய் நின்னா அப்பா அம்மா எல்லாரும் சந்தேக படுவாங்கடா”
“அதான் கவி கார்த்திக் கல்யாணம் வருதுல்ல அதை வச்சு அப்படியே ஊருக்கு போகலாம்.”
“ஸ்வராவுக்கு சொல்லலையா..” என்று அவனை ஆழம் பார்த்தான்.
“அவ கிட்ட எதுக்கு சொல்லணும்..” முறைத்தான் தன் அண்ணனை..
“அடேய் அவ உன் ஹெட்டுடா..”
“ஆமா அதான் தலைக்கு மேல ஏறி நின்னுக்கிட்டு என்னை பாடா படுத்துறாளே” முனகியவன் சற்று யோசித்து
“அவ ஸேப் தானே ண்ணா..” மறுபடியும் கன்பாம் பண்ணிக்கொண்டான்.
“சேபா தாண்டா இருக்குறா.. அதை விடு இப்போ எப்படி அவளை ஊருக்கு கூட்டிட்டு போறது..” என்று ஒரு புது குண்டை போட்டான் நந்தன்.
“எவ அவ..” என்று கேட்டான் ஒன்றும் புரியாமல்.
“அடேய் அவ தான் உன் ஆளு..”
முறைத்து பார்த்தான் நந்தனை..
“இப்போ எதுக்கு சாரு முறைக்கீறீங்க.. இல்லாததையா சொல்றேன்.. அவளுக்காக தானே சாரு இப்படி கத்தி குத்தி வாங்கி படுத்துக்கிட்டு இருக்கீங்க. இதுல முறைப்பு வேற.”
“அண்ணா இது ஒத்து வராதுண்ணா..” தவிப்புடன்.
அவனது தவிப்பை பார்த்தவனுக்கு என்னவோ போல் ஆனது.. “ஏண்டா இப்படி சொல்ற...” சற்றே ஆதரவாய் கேட்டவனை கண்டு விரக்தியாய் சிரித்தவன்
“ப்ச் காரணமெல்லாம் தெருஞ்சு என்ன பண்ண போறோம் விடுண்ணா.. நாம ஊருக்கு போகலாம்..”
“பிசினெஸ் இருக்குடா..”
“இப்போ தான் எல்லாமே செல்போன்ல பண்றியே அப்புறம் என்ன இதையே நீ அங்க வந்து பண்ணு..”
“முடிவே பண்ணிட்டியா..”
“எனக்காக இதை பண்ணு ண்ணா.” அவனின் கையை பிடித்து கெஞ்சியவனை கண்டு இறக்கம் பிறக்க “சரி போகலாம்.. அதுக்கு முன்னாடி உன் காயம் ஆறட்டும்..” என்றான்..
“எனக்கு ஒன்னும் இல்லண்ணா..”
“அதையே டாக்டர் சொல்லட்டும் உடனே கிளம்பலாம்..”
“அண்ணா.. ப்ளீஸ்”
“அடேய் ஒரு ரெண்டு நாளாவது இங்க இருடா.. பிறகு ஊருக்கு போகலாம்..” முடிவாக சொல்லிவிட்டு அவனை தூங்க வைத்தவன் அவனது கட்டிலிலே இவனும் தலை கவிழ்ந்து தூங்கி போனான்.
ரவி தான் முதலில் கண்விழித்தான்.. தன் அருகில் தலைவைத்து படுத்து இருந்த நந்தனை கண்டு உள்ளம் அன்பில் நிரம்பி வழிந்தது..
உயிரை குடுத்து பார்த்துக்கொள்ளும் இவனை போன்ற ஒரு உறவு கிடைத்தால் போதும் அவர்களுக்கு வாழ்வில் பெரிதாக எதுவும் தேவைப்படாது என்று எண்ணிக்கொண்டான் நந்தனின் அன்பை நினைத்ததுக்கொண்டு..
ராயர் இவர்கள் இருவருக்கும் மாற்றி மாற்றி போன் போட இருவரது போனையும் நந்தன் எடுக்கவே இல்லை.. இருக்க இருக்க டென்சன் ஏறிக்கொண்டே போனது ராயருக்கு.. அவனின் அருகில் இருந்து பார்த்துக்கொண்டு இருந்த திகம்பரிக்கு பயமாய் போனது இவனது கோவத்தை எண்ணி.. கண்கள் இரண்டும் சிவந்து போய், தலை களைந்து சட்டையை கூட சரிவர போடாமல் அங்கும் இங்கும் கூண்டில் அடைபட்ட சிங்கத்தை போல உறுமிக்கொண்டு போனை வேறு அடிக்கடி கீழே மேலே போட்டு யாருக்கோ போன் செய்து பேசிக்கொண்டும் இன்னும் ஆத்திரத்துடன் அதை எடுத்து நந்தனுக்கு மீண்டும் முயற்சி செய்துக்கொண்டு இருந்த ராயரை பார்க்கவே பயமாய் இருந்தது.. திகம்பரி வேறு தனியாக இருவருக்கும் போன் செய்து பார்த்தாள்.. அவளுக்கும் எந்த விடையும் கிடைக்கவில்லை..
ஸ்வராவுக்கு போன் செய்து என்ன நடந்தது என்று கேட்டவளுக்கு இன்னும் பயமாய் போனது.. அதும் அவளது அழுகையே திகம்பரிக்கு கூடுதலான அச்சத்தை விளைவிக்க கடவுளின் முன் மண்டியிட்டு அமர்ந்து கண்ணீர் வடித்துக்கொண்டு இருந்தாள் ரவியை எண்ணி.. ஓடியாடி குறும்பு செய்துக்கொண்டு இருப்பவன் இன்று ஒரேடியாய் படுக்கையில் படுத்து இருக்கும் செய்தி கேட்டு ஒரு தாயாய் கலங்கி போனாள்.
ராயர் அதுக்கு மேல்.. அவன் வளர்த்த பிள்ளை இல்லையா.. காயம் அவனுக்கு என்றாலும் இவனுக்கு ரொம்பவே வலித்தது.. இப்பவே அவனை பார்க்கவேண்டும் என்று தவித்து துடித்து போனான். அதை செய்ய விடாமல் செய்துக்கொண்டு இருந்த நந்தனின் மீது கட்டுகடங்காமல் கோவம் வர என்ன செய்வது என்று புரியாமல் தவித்து தடுமாறி போனான்.. அதெலாம் எல்லாம் கொஞ்ச நேரம் தான்.. உடனே தன் ஆட்களுக்கு அழைத்து “எங்க இருக்கானுங்க ரெண்டு பேரும் விசாரிங்கடா.. இன்னும் கொஞ்ச நேரத்துல எனக்கு எல்லாம் தெரியவரனும்.” என்றவன் திகம்பரியை அழைத்து
“கவனமா இருடி.. நான் வந்தர்றேன்” என்று அவளிடம் சொல்லிவிட்டு காவலுக்கு போட்டு இருந்த ஆட்களை ஒருகை பார்த்துவிட்டு ராயர் கிளம்பி வெளியே செல்ல அவனுக்காகவே காத்து இருந்ததை போல ஒரு வண்டி வேகமாய் வந்து அவனை இடிக்க வர சட்டென்று சுதாரித்துக்கொண்டு ஒதுங்கிக்கொண்டவன் தீ விழி விழித்தான் அந்த வண்டியை ஓட்டிக்கொண்டு இருந்தவனை கண்டு..
ஆனால் அவன் மிக அலட்சியமாக அவனை கடந்து சென்றுவிட அவனது மனதில் ஒரு பொறி தட்டியது..
“ஆகா ஆடு தானாவே வந்து மாட்டுதே..” எண்ணியவன் இரு கையாளும் சோம்பல் முறித்தவன் தன் ஆட்களுக்கு ஒரு அலெர்ட் மெசேஜை பாஸ் செய்தவன் மிக ஸ்லோவாக தன் இருசக்கரத்தை ஓட்ட, அவனை பின் தொடர்ந்தது ஒரு வாகனம்..
அதை கவனித்தவனின் இதழ்களில் ஒரு புன்னகை வந்து உதித்தது..
“எதிர் பார்த்தேண்டா..” முனகிவன் நிதானமாகவே வண்டியை ஓட்டினான்..
“முதல்ல ரவியை பார்த்த பிறகு தான் இவனுங்களை பார்க்கணும்..” எண்ணிக்கொண்டவன் தன் கையாட்களின் தகவல்களுக்காக காத்துக்கொண்டு இருந்தான்.
அப்படி இப்படி என்று ஒரு மணி நேரம் தன்னை பின் தொடர்ந்து வருபவர்களுக்கு போக்கு காட்டியவன் தன் செல் பேசி அலற வேகமாய் அருகில் வந்த சந்தில் தன் வாகனத்தை திருப்பி அவர்களின் கண்ணில் இருந்து தப்பியவன்
“என்னடா” என்று போனை எடுத்து பேசி தகவல்களை வாங்கியவன் உடனடியாக அந்த மருத்துவமனைக்கு விரைந்தான்..
திடிரென்று ராயர் காணமல் போனதை கண்டு திகைத்தவர்கள் அவனை தேடி சுற்றும் முற்றும் அலைந்தார்கள். ஆனால் அவன் அவனது கண்களுக்கு தட்டு படவே இல்லை.. மிகவிரைவாக அந்த மருத்துவமனையை அடைந்தவனின் பின் தலையில் யாரோ பலமாக அடிக்க திகைத்து போய் யார் என்று பார்த்தான்..
அங்கே அவன் யாருக்கு ஜாமீன் வழங்க கூடாது என்று நீதி வாங்கி கொடுத்தானோ அவனே அந்த சஞ்சய் தான் நின்றுக்கொண்டு இருந்தான்..
அவனை அங்கு எதிர் பாராத ராயர் சற்றே தடுமாறி தான் போனான்.
“என்ன பாக்குற.. செயில்ல தள்ளியவன் இங்க எப்படின்னா..” நக்கலுடன் கேட்டவனை கண்டு ராயர் கொஞ்சமும் அதிரவில்லை..
ஏனெனில் அவனது செல்வாக்கு தான் ராயருக்கு தெரியுமே..
“இதுல ஆச்சர்யம் என்ன வேண்டி கிடக்கு.. நாலு எலும்பு துண்ட போட்டா பல நாய்ங்க வாலை ஆட்டிக்கிட்டு கூழை கும்பிடு போட்டுக்கிட்டு சிறை கதவை திறந்து விட தயாரா காத்துக்கிட்டு இருக்கும் போது நீ வெளில வந்தது ஆச்சர்யம் இல்ல...” என்றான் ராயர் திமிராய்..
“ம்ம்ம் பரவால எல்லா டீட்டேயில்சும் தெருஞ்சு வச்சு இருக்குற..” நக்கலாய் பேசியவனை கண்டு அவனை விட இன்னும் படு நக்கலாக
“உன்னை மாதிரி ஓனாய்களை வேட்டையாட வரும்போது கொஞ்சமே கொஞ்சம் அதுங்களை பத்தி ஸ்டடி பண்றது தப்பு இல்லையே..” என்றான் ராயர்..
“ப்ச் ஓநாயா.. நோ வக்கீல் சார் சிங்கம்னு சொல்லுங்க.. அது தான் கெத்தா இருக்கு..” என்றான் தந்திரமாய்..
“எனக்கும் அப்படி சொல்லனும்னு தான் ஆசை.. ஆனா பாரு நீ ஓனாய விட மாக மட்டமான பிறவி.. அப்படி இருக்கும் போது காட்டு ராஜாவானா சிங்கத்தை போய் உனக்கு அடை மொழியா கூப்பிட சொல்ற மனசு வலிக்குது..” நக்கலுடன் சொன்னவனை கண்டு
“ஆள் தெரியாம மோதுற ராயர்.. நான் யாருன்னு தெரியுமா..”
“எல்லா வெளக்கெண்ணையும் தெரியும்டா நொண்ண.. இத பாரு மோதுறதுன்னா என்னோட மோதணும். அதை விட்டுட்டு எங்க ஆளுங்க மேல கைவச்ச.. வைக்கிற அந்த கையை வெட்டி பொளிபோட்டுட்டு போய்கிட்டே இருப்பேன்..” என்றான் கர்ஜணையாய்..
“அதையும் தான் பார்க்கலாம் எப்படி என் கையை ஒடிக்கிறன்னு” என்றவன்
“ஆமா உனக்கு ரொம்ப அழகான மனைவியும் ஒரு பையனும் இருக்காங்களாமே.. அப்படியா” என்று நக்கலுடன் கேட்டவனை கண்டு கொஞ்சமும் அஞ்சாமல்
“ஆமா என் மனம் கவர்ந்த அழகான காதலி பிளஸ் மனைவி.. அதோட ரொம்ப அறிவான ஆளுமையான என் மகன் பேரு தீஷிதன்..” என்றான் பெருமையாய்..
“ஓ சாருக்கு ரொம்ப பெருமை போல அவங்களை எண்ணி..”
“யா கண்டிப்பா..” என்றான் மீசையை முறுக்கியபடி..
“அப்பன்னா உனக்கு இப்போ ஒரு கால் வருமே..”
“ஹஹஹா” என்று சிரித்த ராயர் அவனது சட்டை பையை நோக்கி கை காண்பிக்க, சரியாய் சஞ்சையின் செல் அலறியது..
‘இதென்னடா ட்விஸ்ட்’ என்று யோசித்த படியே எடுத்து பேசியவனின் கண்கள் ராயரையே வெறித்தது..
“என்ன சார் பார்க்குறீங்க.. என் பொண்டாட்டிய ஒன்னும் பண்ண முடியலையா.. அதோட என் மகனோட விரல் நகத்தை கூட தொட முடியளையாமே உண்மையா” நக்கலுடன் கேட்டவனை கண்டு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது அவனுக்கு..
“கூல் டா பக்கி.. கிரிமினல் லாயர் அதுவும் KVR வைப்.. கூடவே தி கிரேட் பிசினெஸ் மேன் நந்தனுடைய ஒரே தங்கை மிச்செஸ் திகம்பரி ராயர்.. அவங்க மேல அவ்வளவு சுலபமா கையை வச்சுடுவீங்களா என்ன.. அவ என் காதலியா இருக்குறப்பவே காரத்தே.. துப்பாக்கி சூடு.. கத்தி வீச வால் வீச பழக்கி குடுத்து இருக்கேன்.. அதனால் அவக்கிட்ட தள்ளியே இருங்க.. நெருங்குனா அத்தனை பேரும் பொனமா தான் போவிங்க.. என்ன புருஞ்சதா” என்று ஒற்றை புருவம் உயர்த்தி கேட்டவனின் மேனரிசத்தில் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது அவனுக்கு..
“ராயர் வேணாம்..” கர்ஜித்தான்.
“நானும் வேணான்னு தான் சொல்றேன்.. இதோ பார் மோதுறதுன்னா என்னோட மோது.. அதை விட்டுட்டு என் குடும்பத்துமேல கண்ணு போச்சு எவனும் உயிரோட இருக்க மாட்டீங்க.. நான் வெறும் புத்தகத்தை மட்டும் படுச்சிட்டு இங்க வரல.. ஸ்டீரிங் புடுச்ச கை.. காளை மாட்டை அதனோட மூர்க தனத்தோட அடக்கியவன்.. கருக்கருவா புடுச்சு வளர்ந்தவன்.. ஞாபகம் வச்சுக்கோ.. வெட்டி சீவிக்கிட்டு போய்கிட்டே இருப்பேன்..” எச்சரித்தவன் படிகளில் ஏறி உள்ளே செல்ல அவனை மீண்டும் தான் வைத்து இருந்த கட்டையாலே தாக்க முயல.. திரும்பாமலே அவனது குறியை தன் ஒற்றை கையால் தடுத்து அந்த இரவு பொழுதில் யாருக்கும் தொந்தரவு தராமல் அந்த கட்டையாலே நன்றாக வெளுத்து வாங்கியவன்
“சொன்னா கேக்க மாட்டியாடா” என்று அவனது முகத்திலே ஒரு குத்து குத்தியவன் தன் ஆட்களை வர செய்து அவனது கஸ்டடியை எடுத்துக்கொண்டு முக்கியமான இடத்தில் அவனை மயக்கத்திலே வைத்து இருக்கும் படி சொன்னவன் ரவியை காண உள்ளே சென்றான் ராயர்.





