ரவி ஸ்வராவிடம் இனி வேலைக்கு போக மாட்டென்று என்று சொல்ல ராயரும் நந்தாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
“ஏண்டா..” கோரசாகவே இருவரும் கேட்டார்கள்.
இருவரையும் பார்த்தவன் “எனக்கும் அவளுக்கும் ஒத்து வராது.. அவ எடுக்குற கேஸ் எல்லாமே அநியாயம் செய்யிறவங்க பக்கமா இருக்குற மாதிரி எடுக்குறா.. நான் எப்பவுமே பாதிக்க பட்டவங்க பக்கம் தான். அதனால் என்னால அவ கிட்ட ஜூனியர வேலை பார்க்க முடியாது.. நான் அண்ணாக்கிட்டயே இருந்துக்குறேன்..” என்றான்.
அதை கேட்ட இருவரும் சிறிது நேரம் ஒன்றும் சொல்லவில்லை..
அதன் பின் “இங்க பாரு அவ என்ன கேஸ் எடுக்குறான்றது முக்கியம் இல்லை. அவ கிட்ட இருந்து உன்னால என்னத்தை காத்துக்கொள்ள முடியும் அப்படிங்கறது தான் லேர்னிங்.. உன்னை லேர்ன் பண்ண தான் அனுப்புரனே தவிர பிடித்தம் பிடித்தமில்லைங்கறதுக்காக உன்னை அனுப்பல.. ஜஸ்ட் அவளை கோத்துரு பண்ணு.. இந்த வயசுல அவ இவ்வளவு திறமையா இருக்கான்னா எப்படின்னு கேதர் பண்ணு.. அதை விட்டுட்டு போகமாட்டேன்னு சின்ன பிள்ளை தனமா சொல்லிக்கிட்டு இருக்காத..” என்று ராயர் சொல்ல
“மாமா.. ப்ளீஸ்..”
“இதுல ப்ளீஸ் போட எதுவுமே இல்ல ரவி.. அவ கிட்ட போனா இன்னும் நீ திறமையா வாதாடலாம்.. எப்படி என்ன என்பதை கத்துக்கோ அதை விட்டுட்டு அவ கொள்கையை உன்னை ஏத்துக்க சொல்லல்ல..” என்று நந்தாவும் அவனை வற்புறுத்த வேறு வழியில்லாமல் ரவி கிளம்பி அவளது அலுவலகத்துக்கு சென்றான்.
அலுவலகத்துக்கு வந்த ஸ்வராவுக்கு எதையோ இழந்தது போல இருந்தது.. வந்த உடனே அவனை தேடி அலைந்த விழியை கட்டுக்குள் கொண்டு வந்து தன் வேலையை கவனிக்க ஆரம்பித்தாள்.
அன்றைக்கு எந்த கேசும் இல்லை என்பதால் சற்றே வேலை மந்தமாக தான் இருந்தது.. காவல் துறையிடம் மட்டும் சில விசாரிப்புகள் செய்ய வேண்டி இருந்தது.. அதை கோதண்டமும் மற்ற ஜூனியர்களும் பார்த்துக்கொள்ளுவார்கள். எனவே கண்களை மூடி அமர்ந்துக்கொண்டாள்.
மூடிய கண்களில் அவனது பிம்பமே வந்து நிறைய, கண்கள் கலங்கி போனது.. வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றவனின் மீதே அவளது மையால் இன்னும் இன்னும் பெருக அதிலிருந்து அவளால் அவ்வளவு எளிதாக மீள முடியவில்லை.. அந்த சமயம் “வாங்க ரவி சார்” என்று அவனது பெயர் அடிபட சட்டென்று சோர்ந்து போன உள்ளம் பரபரப்பானது..
“ம்ம் வரேன் கோதண்டம்.. என்ன இன்னைக்கு எந்த கேசும் இல்லையா.. இவ்வளவு ப்ரீயா இருக்கீங்க..” கேட்டபடி இங்கிருந்த மேசையின் மீது ஏறி அமர்ந்தான்.
“இல்ல சார். ஈச்சங்காடு போலிஸ் ஸ்டேசனுக்கு மட்டும் போயிட்டு அந்த கேஸ் சம்மந்தமான டீட்டேயில் விசாரிச்சுட்டு வரணும். மத்தபடி வேற எந்த வேலையும் இல்லை..”
“ஓ சரி எப்போ போகணும்..”
“ஏட்டுக்கிட்ட கேட்டேன்.. எஸ்ஐ இன்னும் வரலையாம்.. வந்த பிறகு போய்க்கலாம் சார்..” என்று சொல்ல
“அப்போ நான் கிளம்புறேன்..”
“ஏன் சார் வந்த உடனே போறீங்க..”
“வேலை தான் ஒன்னும் இல்லையே கோதாண்டம் அதான் கிளம்புறேன்” என்று சொல்லும்போதே உள்ளிருந்து மணி சத்தம் கேட்க
“ஒரு நிமிஷம் சார்..” என்றவன் உள்ளே சென்றான்.
“என்ன கோதாண்டம் ஒரே சத்தமா இருக்கு.. என்ன விஷயம்..”
“ஒன்னும் இல்ல மேம் ரவி சார் வந்தாங்க.. வேலை ஒன்னும் இல்லன்னு சொன்னேன்.. அதான் கிளம்புறேன்னு சொன்னாங்க.. அதை பத்தி பேசிக்கிட்டு இருந்தோம்” என்று சொல்ல அதுவரை இருந்த காதல் மறைந்து வக்கீலாய் அவதாரம் எடுத்தவள்
“அவரு இஷ்டத்துக்கு வந்து அவரு இஷ்டத்துக்கு போறதுக்கு இதென்ன மடமா.. அவனை உள்ள வர சொல்லுங்க..” என்று கத்தியவள் அவனின் வரவுக்காக காத்திருந்தாள்.
உள்ளே வந்தவன் அவளை ஒரு பார்வை பார்க்க அந்த பார்வையில் இன்னும் அவளுக்கு கோவம் தான் வந்தது.
“என்ன மிஸ்டர் உங்க இஷ்டத்துக்கு வந்து உங்க இஷ்டத்துக்கு போறதுக்கு நீங்க ஒன்னும் மடத்துல வேலைக்கு வரல..” என்றாள் சுல்லேன்று.
“ஏய் என்னடி பிரச்சனை உனக்கு எப்போ பாரு என்கிட்டே வம்புக்கு நிக்கிற.. நான் தான் உன்னை வேணான்னு சொல்லிட்டேன்ல பொறவென்ன என்னையே வட்டம் போட்டுக்கிட்டு இருக்குறவ..” அவன் அசிங்கமாய் பேசவும் அவளுக்கு கண்கள் கலங்கி போனது.
“மிஸ்டர் நான் ஒன்னும் என் காதலை ஏத்துக்கோன்னு ஒன்னும் கெஞ்சல.. ஏன் லேட்டா வந்த.. ஏன் போறன்னு தான் கேக்குறேன்.. அதுக்கு பதில் சொல்லாம தேவை இல்லாம நீங்க தான் பேசுறீங்க.. ஒரு விஷயம் நான் ஆசை பட்டு அது கிடைக்காம போனா அதுக்கு தான் நஷ்டமே தவிர எனக்கு இல்ல.. இப்படியாப்பட்ட அன்பை இழந்துட்டு நிக்கிற அவன் தான் வறுத்த படனும்.. அதாவது நீ தான் வைத்த படனும். நான் ஏன் நீ கிடைக்கலன்னு உன்னை டார்ச்சர் பண்ணனும். எனக்கு அதுக்கு எந்த அவசியமும் இல்ல. ஜஸ்ட் உன்னை காதலிச்சேன் அவ்வளவு தான். அதை நீ மறுத்துட்ட.. அவ்வளவு தான்.. அதை அப்படியே விட்டுட்டு அடுத்த வேலையை பார்க்கணும். அதைவிட்டுட்டு இருபத்தி நாளுமணி நேரமும் அதையே நினைச்சுகிட்டு இருக்குறது எனக்கு ஒத்து வராது. நீங்க தான் துக்கம் கொண்டாடுவது போல அதையே நினைச்சுக்கிட்டு இருக்கீங்க.. நான் இல்ல” என்றாள் கம்பீரமாய்..
அவளது பேச்சில் சற்றே அடி வாங்கினாலும் அவளது கண்களில் தென்பட்ட சோகத்தில் அவனது மனம் சற்றே குளிர்ந்து தான் போனது..
ஆனாலும் அதை காட்டிக்கொள்ளாமல் “இதோடா இப்படியெல்லாம் பேசுனா நீ என்னை மறந்துட்டதா அர்த்தம் ஆகுமா..”
“மறக்குறேன் மறக்காம போறேன் அது என்னோட தனிப்பட்ட விஷயம்.. உன்னை ஏதும் தொந்தரவு பண்ணனா.. இல்லல்ல போடா” என்று அவள் பேச
அவளது போடா என்ற அழைப்பில் கடுப்பானவன் “ஏய் என்னடி கொஞ்சம் கூட மரியாதை தர மாட்டியா ரொம்ப ஓவரா பேசுற... வந்தேன்னு வைய்யி பல்லை தட்டி கையில குடுத்துவேன் பாத்துக்க.. இனி நீ மரியாதையா தான் பேசணும். அப்படி மட்டும் பேசாம இரு.. என்ன பண்றேன்னு பாரு..” என்றவன் “நான் கிளம்புறேன்” என்று சொல்ல
“ஹல்லோ எனக்கு அந்த கொலை கேஸ்ல பாயின்ட் எடுக்கணும் வந்து ஹெல்ப் பண்ணுங்க..” ஆட்டோமேட்டிக்கா அவள் மரியாதையுடன் அழைக்க அதை உள்ளுக்குள் ரசித்தவன் “நீ எந்த பக்கம் வாதாடுற அதை முதல்ல சொல்லு..” என்றான் காரராய்..
“அஸ்யுசுவல் கொலை செய்தவனுக்காக் தான்..”
“அப்படின்னா கண்டிப்பா உனக்கு என்னால உதவி செய்ய முடியாது.. நான் கிளம்புறேன்..”
“அப்படியெல்லாம் போக முடியாது மிஸ்டர் ரவி.. நீங்க பாயின்ட் நோட் பண்ணி தான் ஆகணும்” என்றாள் உறுதியாக.
“ஏய் என்னடி உன் இஷ்டத்துக்கு ஆடிக்கிட்டு இருக்குற.. என்ன லந்தா.. எனக்கு பிடிக்காத எந்த செயலையும் நான் செய்ய மாட்டேன்.. அதனால இதுல என்னை எதிர் பார்க்காத”
“மிஸ்டர் இங்க உங்க விருப்பத்தை யாரும் கேக்கல.. பண்ணி தான் ஆகணும்னு பணிஸ் பண்றேன் ஓகே..” என்றாள் கெத்தாய்.
“வேணாம் ஸரா என் பொறுமையை ரொம்ப சோதிக்கிற.. விட்டுட்டு..”
“மிஸ்டர் ஜஸ்ட் இது ஒரு கேஸுன்னு நினைச்சி வேலையை பாருங்க.. இல்லன்னா நான் ராயர் அண்ணா கிட்ட பேசவேண்டியது வரும்” என்ற போதே மேசை மீதி இருந்த பேப்பர் வெயிட் ஸ்டோனை எடுத்து விசிறி அடித்தான். அது சுக்கல் சுக்கலாய் நொறுங்க அவளது உடம்பு லேசாக தூக்கிவாரிப்போட்டது அந்த சின்ன கலவரத்தில்.
“அவ்வளவு தான் உனக்கு மரியாதை. கொஞ்சம் விட்டா ரொம்ப ஓவரா பண்ற.. இப்போ என்னடி உனக்கு அந்த கேஸ்க்காக பாயின்ட் வேணுமா..” என்றவன் எந்த புக்கையும் ரெபர் பண்ணாமல் அவளுக்கு தேவையான பாயின்ட்ஸ் அத்தனையையும் அவன் சொல்ல வாயடைத்து போய் நின்றாள் ஸ்வரா..
“இதை தானே கேட்ட” என்றவன் “என்ன எல்லாத்தையும் நோட் பண்ணிக்கிட்டியா..” நக்கலாய் அவளை பார்த்து கேட்டவன் “இப்போ கிளம்பலாமா” என்றவன் அவளது பதிலுக்கு காத்திருக்காமல் வெளியே சென்றுவிட்டான்.
மழை பேய்ந்து ஓய்ந்தது போல இருந்தது.. அப்படி சரசரவென்று அவன் பாயின்ட் பை பாயின்ட் சொன்னான்.
அவனது திறமையில் அவள் மெர்சலாகி நின்றாள்.
“ம்ம் பரவல நல்லா தான் படுச்சு இருக்கிறான்” என்று சிலாகித்துக்கொண்டவள் தன் வேளைகளில் மூழ்கி போனாள்.
அறைக்கு வந்த ரியாவுக்கு மனமெல்லாம் பாரமாகி இருந்தது.. ராஜன் தன்னிடம் பேசிய பேச்சை கேட்டு கண்கள் கலங்கி கொண்டு வந்தது.. என் வேதனை தீரவே தீராதா.. இன்னும் எத்தனை நாள் இவ்வாறே செல்லும்.. என்று ஏங்கி போனாள்.
அவளை மேலும் தனியே விடாமல் நந்தன் கால் பண்ணி அலுவலகத்துக்கு வர சொல்ல தன் சோக கீதத்தை சற்று தள்ளி வைத்தவள் ஆயத்தமாகி அலுவலகம் சென்றாள்.
அன்று ஒரு முக்கியமான மீட்டிங்.. அடிமட்ட உழைப்பாளர்களுக்கு ஒரு சதவீதம் ஊதியத்தை உயர்த்தலாம் என்பதை பற்றி ஆலோசனை செய்ய அனைவரும் அங்கு கூடி இருந்தார்கள்.
அந்த கருத்து அரங்கில் அவளால் இயல்பாய் இருக்க முடியவில்லை. ஏனோ மனம் அலைபாய்ந்துக்கொண்டே இருந்தது.. நந்தன் அவளை அவ்வப்போது கவனித்துக்கொண்டு தான் இருந்தான்.
ஒரு கட்டத்தில் அவளது கவனம் இங்கு இல்லவே இல்லை என்பதை புரிந்துக்கொண்டவனுக்கு கோவம் சுல்லேன்று வந்தது..
“மிஸ் ரியா இதை பற்றிய உங்க கருத்து என்ன” என்று அவளிடம் கேக்க, அவள் திருதிருவென்று முழித்தாள்.
அவளது அந்த பார்வையில் கடுப்பானான் நந்தன்.
“இங்க எவ்வளவு முக்கியாமான விஷயம் போய்க்கிட்டு இருக்கு. நீங்க என்னன்னா ஏதோ கனவுல இருக்குற மாதிரி இருந்துக்கிட்டு இருக்கீங்க.. கொஞ்சம் கூட ரெஸ்பான்ஸ் இல்லாத இடியட்.. ஜஸ்ட் கெடவுட்..” என்றவன் அவளை வெளியே அனுப்பிவிட்டு மேற்கொண்டு அதை எந்த அளவில் செயல் படுத்தலாம் என்பதையும் தெளிவு படுத்தினான்.
சீனியர் வைஸ் பண்றது பெட்டர்.. அதன்படி இந்த மாசத்துல இருந்து அதை அமல் படுத்தலாம்..” என்று ஒரு முடிவுக்கு கொண்டு வந்து மீட்டிங்கை நிறைவு செய்தான்.
இருக்கைக்கு வந்த ரியாவுக்கு கண்கள் கலங்கிக்கொண்டு இருந்தது.. அத்தனை பேரின் மத்தியிலும் அவன் நடந்துக்கொண்ட முறையை எண்ணி சோர்ந்து போனாள். கூடவே அவனது கோவம் அவளை வருத்த அதை எண்ணி எண்ணியே அவளுக்கு தலை வலி வந்தது..





