Notifications
Clear all

அத்தியாயம் 7

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

ராயரை தொடர்ந்து ரவி, திகம்பரி, ராஜன் என்று அனைவரும் வந்தார்கள். ரியா அவர்களை பார்த்து புன்னகைத்துவிட்டு மீண்டும் வேலையை செய்ய ஆரம்பித்தாள். திகம்பரி அனைவருக்கும் காபி கொண்டு வந்து குடுத்துவிட்டு அவளும் அமர்ந்துக்கொண்டாள்.

ரியா ராஜனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை..

 

ராஜனின் கூறிய பார்வை அவளையே வட்டம் போட, திகம்பரியிடம் நந்தனிடம் பேசுமாறு ஜாடை காமிக்க அதை புரிந்துக்கொண்டவள்

“அண்ணா வனாவுக்கும்  மதிக்கும் கல்யாணம் செய்யலாம்னு முடிவு பண்ணி இருக்குறோம்.. அதுக்குள்ள உன் திருமணத்தை செய்தா இன்னும் நல்லா இருக்கும்.. மூத்தவன் நீ இருக்கும் போது அவனுக்கு பண்ணா சரியா இருக்காது..

அதனால உனக்கு ஒரு பொண்ணை பாத்து வச்சு இருக்கேன்.. இந்தா போட்டோ” என்று தன் செல்லில் இருந்த போட்டோவை அவனுக்கு காண்பித்தாள்..

“திகம்பரி நான் இப்போ ஒரு முக்கியமான வேலையா இருக்கேன்.. இது முடுஞ்சதுக்கு பிறகு நீ சொல்றதை நான் கேக்குறேன்..  இப்போ நீ எது சொன்னாலும் என் காதில் ஏறாது..” என்றவன் தீவிரமாக வேலையில் ஆழ்ந்தான்.

ராஜன் ரியாவை ஒரு பார்வை பார்த்தார்.

அவள் தலையே நிமிரவில்லை. ஆனால் அவளது உணர்வுகளை துல்லியமாய் அளந்துக்கொண்டு இருந்தார் அவர்.

கொட்டேஷனை ஒருவழியாய் அனுப்பிவிட்டு சோம்பல் முறித்தவன் “ம்ம் இப்போ சொல்லு பரி.. என்ன விஷயம்..” என்றான்.

“இல்லண்ணா உனக்கு பொண்ணு பாத்து இருக்கேன்.. அதான்..”

“ப்ச் எனக்கு கல்யாணத்துல இஷ்டமே இல்ல பரி.. அதனால அந்த பேச்சை விடு..” என்றான் உறுதியாய்.

“இப்படியே எத்தனை நாளுக்கு இருக்க போற நந்தா.. தப்பு டா மாமாவ பாரு இப்பவே ரொம்ப ஒடுஞ்சு போய் இருக்காரு.. அவருக்கும் தன் பேரனை பேத்தியை பார்க்கனும்னு ஆசை இருக்காதா..” ராயர் அவனை மடக்க

“அதுக்கு தான் தீஷிதன் இருக்கனே..”

“ப்ச் அது ஆசைக்கு வேணா இருக்கலாம்.. ஆனா ஆஸ்த்திக்கு உன் மகன் தான் வேணும் நந்தா புருஞ்சுக்கோ..”

“இல்லடா எனக்கு சரி வராது..”

“அப்போ லிவ்விங் லைப் தான் ஒத்து வருமா” சுருக்கென்று ராஜன் ரியாவை பார்த்த படியே கேட்க

“அப்பா..” என்றான் சற்றே தடுமாற்றமாக.

“புருஞ்சுக்கோடா எனக்கு உன் மகனையோ மகளையோ பார்க்கணும்.. இவ்வளவும் எதுக்காக சம்பாரிச்சு வச்சு இருக்கேன்.. அவங்க வந்து வாழணும்னு தானே.. அவங்களை என் நெஞ்சுல போட்டு நான் வளர்க்கணும் அந்த குடுப்பனையை எனக்கு குடுடா..” என்றவரின் கோரிக்கையை தட்ட முடியவில்லை. ஆனால் அதை ஏற்க்கவும் முடியவில்லை அவனால்..

“கொஞ்சம் டைம் குடுங்க யோசிக்கிறேன்..” என்றவன் எழுந்து மேலே செல்ல

“உன்னால வனா கல்யாணமும் தடை பட்டு நிக்குது.. பாத்துக்கோ..” என்றவர் சக்கர நாற்காலியை தள்ளிக்கொண்டு போக, ரியா அவருக்கு உதவி செய்து அவரின் அறைக்கு கொண்டு சென்று விட்டாள்.

அப்போது அவளையே முறைத்து பார்த்தார் அவர்.

அவரது பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் வேறெங்கோ பார்த்துக்கொண்டு இருந்தாள்.

“என் பேச்சை கேட்கவே கூடாதுன்னு இருக்கல்ல..” கசப்புடன் கேட்டவரை கண்டு கண்கள் கலங்கி போனது அவளுக்கு..

“சார்..”

“பேசாதா.. தயவு செஞ்சு பேசாத.. அவ்வளவு சொல்லியும் நீ உன் பாட்டுக்கு தானே இருக்க.. பெரியவன்னு என் பேச்சுக்கு நீ என்ன மரியாதை குடுத்த..” எரிந்து விழுந்தார்.

“சார்” என்றாள் தவிப்பாக

“போ இங்க இருந்து போ முதல்ல...” கடுப்படித்து அவளை விரட்டி விட்டவர் இருக்கையில் அப்படியே சாய்ந்து அமர்ந்துக்கொண்டார் கண்களை மூடிக்கொண்டு..

நந்தன் என்ன முடிவை எடுப்பானோ என்று பயந்துக்கொண்டு இருந்தார். என்ன முடிவென்றாலும் சற்று விரைவாக எடுத்தா நல்லா இருக்கும்.. என்று எண்ணியவர் அப்படியே எண்ணங்களை அலைய விட்டார்.

ரியா அழுதுக்கொண்டே வருவதை கண்ட ரவிக்கு யோசனையாய் இருந்தது..

“ரியா..” ரவியின் அழைப்பில் சட்டென்று தன்னை சரி செய்துக்கொண்டவள்

“சொல்லுங்க ரவி..” என்று புன்னகை முகமாக அவனை ஏறிட்டாள்.

சடுதியில் மாற்றிக்கொண்டவளை கண்டு ஏனோ மனம் கனத்து போனது..

“ரியா..” என்றான் தயக்கமாய்.

“சொல்லுங்க ரவி..”

“இல்ல நீங்க அண்ணாவை காதலிக்கிறீங்களா..” போட்டு உடைத்தவனை கண்டு திகைத்து போனாள்.

“அப்படியெல்லாம் இல்ல ரவி..” தன்னை சமாளித்த படி சொன்னவளை கண்டு

“உங்க முகமே சொல்லுது ரியா உண்மை என்னன்னு.. ஒரு நண்பனா சகோதரனா என்னை நீங்க பாவிக்கலாம்.. அதே போல ஏதாவது பிரச்சனைன்னாலும் என்கிட்டே சொல்லலாம்.. என்னால முடுஞ்ச உதவியை நான் செய்வேன்” என்றவனை கண்டு மென்னகை சிந்தியவள்

“தாங்க்ஸ் ரவி..” என்றவள் அங்கிருந்து விலகி தான் தங்கி இருக்கும் ஹோட்டல் விடுதிக்கு சென்றாள்.

மனமெல்லாம் பாரமாகி இருந்தது.. நந்தனின் செயலில்.. அவளுக்கு அவன் மீது காதல் அரும்பி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கடந்து இருந்தது..

அவளுடைய காதல் நந்தன் அறியாதது..

முதல் முறை அவனிடம் வேலைக்கு வரும்போதே அவனை பற்றிய அனைத்து தகவல்களையும் அவள் அறிந்து வைத்து இருந்தாள். அதே போல நிறுவனத்தை பற்றிய அனைத்து தகவல்களையும் திரட்டி வைத்து இருந்தாள்.

அதிலே நந்தன் இம்ப்ரெஸ் ஆகிவிட தன்னுடைய பிஎவாக அவளை நியமித்தான்.

அவளது சுறுசுறுப்பு அவனுக்கு தேவைப்பட்டது.. அவன் ஒன்றை பற்றி யோசிக்கும் முன்பே அதை பற்றிய தகவல்களோடு அவன் முன்பு நிற்ப்பாள். அவளது ஸ்ம்ர்ட் அவனை வெகுவாக கவர்ந்தது..

இயல்பு போலவே அவர்களுள் கலவி ஏற்பட்டது.. பார்டிக்கு போய்விட்டு வரும் சமயம் அவனுக்கு உணர்வுகள் அதிக மாகியது.. அதை கண்ணியமாய் அவளிடம் வெளிப்படுத்தினான்..

“டூ யூ லைக் மீ..” ஒரு எதிர் பார்ப்புடன் அவளை பார்த்து கேட்டான். அவள் “ம்ம்” என்று அழகாய் சம்மதம் தர

“கேன் வீ கோ டு நெக்ஸ்ட் லெவல்.. ஐ வான்ட் யூ.. வித் அவுட் தட் யூ ஆர் வெரி அட்ராக்ட்டடு டு மீ.. திஸ் மொமென்ட் யூ வான்ட் டு ஹெர் மை எவெரி அடோம். ப்ளீஸ் டூ பேபி..” என்றவன் அவளுடைய சம்மதத்தை எதிர் பார்க்காமல் அவளை அப்படியே தூக்கி சென்றவன் தன் சொகுசு படுக்கையில் கிடத்தி அவள் மீது பரவி தன் ஆண்மையை அவளுக்கு உணர்த்தினான்..

அவன் மீது காதல் கொண்டதால் அவளுக்கு அவனுடைய செயல் தவறாய் படவில்லை.

அவனை முழுமையாக தன்னுள் ஏற்றுக்கொண்டாள் ரியா. அடுத்து வந்த நாட்கள் இயல்பு போல நகர அதன் பிறகு நந்தனை தேடி ஒரு பெண் வர முதல் முறை மனதளவில் அடி வாங்கினாள் ரியா.. அவனது அறையிலே உட்கார்ந்து வேலை செய்வதால் அவர்களுக்கிடையே நடந்த உரையாடலை கேட்டவளுக்கு அவளின் காலடியில் நிலம் இரண்டாய் பிளப்பது போல இருந்தது.. அந்த அளவு வேதனையும் துக்கமும் கொண்டாள்.

நந்தன் பெண் பித்தன் இல்லை என்றாலும் தன் உணர்வுகளை தொலைக்க பெண்ணை தேடுவான் அதும் எப்பொழுதாவது தான்.. ரியாவின் அதிஷ்டம் முதல் முறை ரியாவிடம் தான் நந்தன் கூடினான்.

அடுத்த முறை தான் இந்த பெண்ணை வர சொல்லி சொல்லியிருந்தான். ரியா கூட இருந்ததால் அவளுக்கும் இந்த விஷயம் தெரிய வந்தது.

கண் முன்னே நடக்கும் நிகழ்வை எவ்வாறு தடுப்பது என்று புரியாமல் தவித்துக்கொண்டு இருந்தவளை காப்பது போல அவனது போன் ஒலித்தது.. கூடவே ஒரு பிரச்சணையை அது கூட்டி வர, நந்தனின் சிந்தனை அந்த பெண்ணிடம் இருந்து பிரச்சணையை எப்படி தீர்ப்பது என்று சிந்திக்க ஆரம்பித்தது..

அதனால் அந்த பெண்ணை அனுப்பி வைத்தவன் ஒரு மீட்டிங்கை ஏற்பாடு செய்து கலந்து உரையாடி என்ன செய்யலாம்.. என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெளிவாக கேட்டு அறிந்தவன் தன்னுடைய கருத்தையும் அவர்களுக்கு சொல்லி அதை அனைவரையும் ஏற்றுக்கொள்ள வைத்தவன் அதை செயல் படுத்த ஆரம்பித்தான்.

அதனால் அவனது எண்ணம் முழுவதும் மாறி போய் இருந்தது. அதில் ரியா கொஞ்சம் ஆறுதல் அடைந்தவள் அவனுக்கு என்ன என்ன உதவி செய்ய முடியுமோ அத்தனை உதவியையும் அவள் நேரம் காலம் பார்க்காமல் செய்துக்கொடுக்க நந்தன் அவளை அழைத்து மிக இயல்பாக அவளது நெற்றியில் முத்தம் குடுத்து தன் மகிழ்ச்சியை பகிர்ந்துக்கொண்டான்.

அவனுக்கு அது ஒரு நிமுட நிகழ்வு தான்.. ஆனால் ரியாவுக்கு அது பொத்தி வைத்துக்கொள்ள கூடிய அழியா பொக்கிஷம் போன்ற நிகழ்வு.

காமத்தால் ஆயிரம் முத்தம் குடுத்தாலும் காதலால் ஒற்றை முத்தம் உணர்ந்து குடுத்தால் அது தான் சுவர்க்கம்.. அது சுவர்க்கம் என்று தெரியாமலே நந்தன் அவளுக்கு அதை கொடுத்தான். ஆனால் அதை வாங்கியவளுக்கு அது தான் சுவர்க்கம் என்று தெரியுமே.. தன் உயிரின் ஆழ் மூச்சில் சேகரித்துக்கொண்டாள்.

அன்றைய இரவுக்கு அவன் அந்த பெண்ணை அழைக்க ரியாவுக்கு மனம் பாரமாகி போனது.. என்ன செய்வது என்று தெரியாமல் கலங்கி போனாள். ஆனால் அடுத்த நொடி எதையும் யோசிக்காமல் நந்தனின் முன் நின்று அன்றைக்கு அவன் கேட்டது போலவே இவளும் கேட்க அவளை ஒரு கணம் ஆழ்ந்து பார்த்தான்.

இது நாள் வரை அவனை மயக்க என்று அவள் ஒரு துரும்பை கூட கில்லி போட்டது கிடையாது.. இவ்வளவு ஏன் எவ்வளவோ பார்டிக்கு இவளை மாடன் உடைகளை போட சொல்லி இவனே சொல்லி இருக்கிறான்.. அப்போதெல்லாம் இவள் ரொம்ப அழகாய் மறுத்து விடுவாள். ஏன் இவனை ஒரு ஆழ்ந்த பார்வை கூட பார்த்தது இல்லை.. அப்படி பட்டவள் இன்று வந்து இப்படி கேட்க அவனால் நம்ப முடியவில்லை.. ஆனால் மனதுக்குள் ஒரு சின்ன சந்தோச ஊற்று பிறப்பெடுக்க தான் செய்தது..

விசில் அடித்த படி அவளை மேலிருந்து கீழாக ஒரு பார்வை பார்த்தவன்

“ம்ம் இப்படி ஒரு அழகு ப்யூட்டி கூப்பிட்டா எப்படி என்னால மறுக்க முடியும்.. நானும் ஆவலா அதுக்கு தான் காத்துக்கிட்டு இருக்கேன்.. லெட்ஸ் கோ பேபி..” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கே சென்றான்..

அவனது வீட்டை பார்த்து திகைத்து போனாள். அவ்வளவு ஆடம்பரமாய் இருந்தது அந்த வீடு.. வெளிநாட்டில் அதுவும் இவ்வளவு பிரம்மாண்டத்தை எதிர் பார்க்காதவள் சற்றே தடுமாறி போனாள்.

தன் எண்ணத்தின் போக்கை இவன் அறிந்தால் தன்னை எவ்வளவு மட்டமாய் நினைப்பானோ என்று கலக்கமாகவும் இருந்தது..

“செல்லா இடத்தில் தன் எண்ணத்தை கொண்டு போய் வைத்த இறைவனை என்ன செய்வது” என்று கண்ணீரும் சொரிந்தாள்..

அழைத்து சென்றவன் அவளை முழுமையாக ஆள அவளால் முழுமையாக அவனுக்கு ஒத்துழைக்க முடியவில்லை.. முதல் முறை இருந்த ஒத்துழைப்பு அவளிடம் இல்லை என்பதை உணர்ந்தவன் எழுந்துக்கொள்ள, சட்டென்று தன் தவறை புரிந்தவளாய் அவனை கைபிடித்து அழைத்தவள் அவனுக்கு முன்பு போல இல்லாவிடிலும் ஓரளவு அவனுக்கு வகை செய்து தர நந்தன் திருப்தியானான்..

ரியாவுக்கு ஏதோ தவறு செய்வது போல இருக்க தன் செயல்களை ஒரு முறை அலசி ஆராய்ந்தாள்.. அதில் நந்தனிடம் தன் காதலை சொன்னால் கண்டிப்பாக கேலி கூத்துக்கு ஆளாகுவோம் என்று முடிவெடுத்தவள் அதை மறைத்து அவனுக்கு எப்போதும் போல பிஎவாக இருக்க முடிவெடுத்தாள். அதே போல அவனுடன் இனிமேல் கூடலும் கூடாது என்று எண்ணிக்கொண்டாள்.

அதெல்லாம் கொஞ்ச காலம் மட்டுமே.. மீண்டும் அவன் வேறு ஒரு பெண்ணை நாடும்போது சட்டென்று அவளே முன் வந்து நின்றாள் அவளையும் அறியாமல். அப்போதும் புருவம் சுருக்கினானனே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை..

அவளே ஒப்புதல் தந்த பிறகு அவன் சும்மா இருப்பானா.. மஞ்சத்தை போர்களம் ஆக்கி வெற்றி கொடி நாட்டி அவளையும் வெற்றி பேர செய்து தன் இணையை இன்னும் மகிழ்வித்தான்.. அதன் பின் அவன் எந்த பெண்ணையும் நாட வில்லை... அவனுக்கு வேணும் என்கிற போது கூச்சமே இல்லாமல் அவளை தான் நாடுவான்.

அவளே சிலசமயம் மறுத்தாலும் அவன் விடமாட்டான். அவளுடன் தான் அவனது உறவு என்று அவன் முடிவெடுத்து விட்டான். அதனால் அவளை அவனால் விட முடியவில்லை..

இரண்டு வருடம் இவ்வாறே இருக்க ராஜன் ஒரு நாள் ரியாவை பார்க்க வந்தார்.

அதன் பிறகு ரியா நந்தனை விட்டு விலகி சென்றுவிட்டாள். அதன் பின்பு இப்போ சில தினங்களுக்கு முன்பு பார்த்தது தான். இருவரின் பிரிவுக்கு இடையிலும் நந்தனிடம் பலமுறை திருமணத்தை பற்றி பேச்செடுத்து விட்டார். ஆனால் அவன் எந்த பதிலும் சொன்னதில்லை..

அதற்கு முக்கிய காரணம் திகம்பரியின் வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகள். அதன் பின் அவளது வாழ்க்கை சரியான பிறகு தான் சற்றே நிம்மதியில் இருந்தான் நந்தன். அதனாலே இன்று யோசிக்கிறேன் என்று சொல்லி இருக்கிறான்.

அவளிடம் கூடும்போது அவனுக்கு எந்த உறுத்தலும் இதுவரை வந்தது இல்லை. அவ்வபோது ஏதோ ஒரு எண்ணம் மட்டும் இருக்கும்.. ஆனால் அதை அவன் பெரிதாக எடுத்துக்கொண்டதும் கிடையாது. ஏதோ ஒரு எண்ணத்துடன் நந்தன் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறான்.. அவன் எண்ணம் என்ன என்று அறியவரும்போது ரியாவின் முடிவு என்னவாக இருக்குமோ.. பொறுத்திருந்து பார்ப்போம்..

 

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top