அவள் பொருக்கி என்ற சொல்லில் கடுப்பு வந்தாலும் தான் நடந்துக்கொண்ட முறை முறையற்றது தானே.. என்ற எண்ணம் வர அதி பெரியவிசயமாக ஆக்காமல் விட்டுவிட்டான்.
இவனும் கோதாண்டமும் அலுவலகத்துக்கு வர அவனை உருத்து விழித்தவள் அவனை மட்டும் இருக்க சொல்லிவிட்டு அனைவரயும் போக சொல்லியவள்
“போய் அந்த மோசடி வழக்குல என்ன ஹின்ட் கிடைச்சி இருக்குன்னு காவல நிலையத்துக்கு போய் எஸ் ஐ கிட்ட விசாரிச்சுட்டு வா..” என்று அவனிடம் சொன்னாள் ஸ்வரா..
ரவி ஒன்றும் சொல்லாமல் அங்கு மாட்ட பட்டு இருந்த கடிகாரத்தில் நேரம் பார்த்தான். அவனை தொடர்ந்து அவளும் பார்த்தாள்.
அதில் மாலை ஐந்து மணி என்று காட்டியது..
“சாரி அலுவலக நேரம் முடுஞ்சி போச்சு.. என்னால போக முடியாது..” என்று திமிராய் பதில் சொன்னான்.. அவள் இயல்பாய் கேட்டுக்கொண்டு இருந்தாள் இவனும் எந்த நேரம் என்று கூட பார்க்க மாட்டன். இந்நேரம் கிளம்பி போய் தகவலோடு வந்து இருப்பான். ஆனால் இவள் வேண்டும் என்றே அவனை அலைய வக்க நினைக்க அதை கேச் செய்தவன் முறுக்கிக்கோண்டான்.
“உனக்கு யாரு சொன்னா அலுவலக நேரம் முடுஞ்சதுன்னு.. உனக்கு ட்வென்டி பை செவென் மைன்ட் இட்..”
“ம்ஹும் நீ சொன்னா நான் அப்படியே கேட்டுக்குவன்னா.. என்னால முடியாது.. உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கடி..” என்றவன் அவளின் முன்னே கால் மேல் கால் போட்டு பத்தாதுக்கு அதை தூக்கி அவளின் மேசை மீதே போட, அவளுக்கு பத்திக்கொண்டு வந்தது..
அவனை உருத்து பார்த்தவள் போனில் சில இலக்கங்களை தட்டிவிட்டு அவன் முன் போனை வைத்து ஸ்பீக்கரில் போட்டாள்.
‘யாருக்கு போன் பண்றா..’ யோசனையுடன் அவளையே பார்த்தான்.
அதே நேரம் பொன் அங்கு எடுக்க பட்டு ராயரின் குரல் கேட்க திகைத்து போய் பார்த்தான் அவளை.
“சொல்லு ஸ்வரா.. இப்போ தானே பாத்துக்கிட்டோம் அதுக்குள்ள என்னடா.. ஏதும் பிரச்சனையா..” ராயரின் பாசம் மிகுந்த குரல் கேட்க ரவி ஜெர்க்கானான்..
“அவரு கிட்ட இவ எப்படி.. அதும் இவ்வளவு உரிமையா..” யோசித்தவனுக்கு அப்போது தான் சதாசிவத்திடம் வேலை பார்க்கும் பொது இவள் அறிமுகமாகி இருப்பாள் என்று புரிய
“ஆகா இடம் தெரியாம மோதிட்டமோ..” லேசாய் பயம் மனதை கவ்வியது.. ஆனால் அடுத்த நொடி “ம்ஹும் இவளுக்கெல்லாம் அவ்வளவு சீன் கிடையாது.. வெத்து வெட்டு..” என்று எண்ணியவன் அவளை ஆழ்ந்து பார்த்தான்.
அவள் நக்கலாய் அவனை பார்த்துக்கொண்டே “அண்ணா உங்க மருமகன் ஒழுங்கா வேலை செய்ய மாட்டிக்கிறாங்க.. எது சொன்னாலும் நீ என்ன எனக்கு வேலை சொல்ற.. உன்னை விட நான் தான் பெரியவன். அதனால நான் சொல்றதை தான் நீ கேக்கணும்னு சொல்லி என்னை அடுச்சுட்டாங்க.. இப்போ கூட ஒரு தகவல் வேணும் போய் விசாரிச்சுட்டு வர சொன்னா என்னால முடியாதுன்னு சொல்லிட்டு அவங்க பிரண்டோட எங்கேயோ பார்க்கு போறாங்களாம்..”
“இல்லையே அவன் குடிக்க மாட்டானே மா..”
“முன்ன அப்படி இருந்து இருக்கலாம் அண்ணா ஆனா இப்போ ரொம்ப மோசமா மாறி இருக்காகங்க...” என்று மேலும் அவனை பற்றி அவதூறு சொல்லிக்கொண்டு இருந்தவளை கண்டு அவ்வளவு வன்மம் வந்தது..
இல்லை என்று அவன் மறுத்து பேச வர சட்டென்று போனை எடுத்துக்கொண்டு ஸ்பீக்கரில் இருந்தும் எடுத்துவிட்டு அவனை தாண்டி செல்ல பார்த்தவளை ஒரே அமுக்காக அமுக்கி தன் கைவளைவுக்குள் கொண்டு வந்தவன் அவளை உருத்து விழித்தான்.
அவளின் காதோரம் குனிந்து “ஒழுங்கா நீ சொன்னதெல்லாம் இல்லன்னு சொல்லு” என்று அவளை மிரட்டினான்.. அவனது கைவளைவுக்குள் இருந்த படியே “முடியாது போடா” என்றவள் அந்த பக்கம் ராயரின் பேச்சை கவனித்த படியே இவனது பிடியிலிருந்து வெளிவர பார்த்தாள்.. ஆனா அவனோ அவளது போனை வாங்கி ஸ்பீக்கரில் போட்டுவிட்டு அவளை உருத்து விளித்து “சொல்லுடி” என்று வாயை மட்டும் அசைக்க
அவனை பார்த்துக்கொண்டே முடியாது என்று தலை அசைத்து மேலும் “அண்ணா உங்க கிட்ட சொல்ல கூடாதுன்னும் சொல்லி என்னை மிரட்டுறாங்க.. அதோட இல்லாம சொன்னா என்னை அடிப்பாங்களாம்” என்று முடிக்கும் முன்பே ஸ்வராவை இன்னும் நெருக்கி தன்னுள் இருக்கியவன் அவளது புடவையின் உல் கை நுழைத்து அவளின் வயிற்றில் கரம் பதித்து மிகவும் அழுத்தமாய் அவளது வயிற்றை பிடிக்க
“ஹக்” என்று மூச்சை அடக்கினாள் ஸ்வரா.. அவனது இரும்பு பிடியோடு கூடவே அவன் கொடுக்கும் அழுத்தமும் பற்றி இருந்த இடமும் அவளுள் ஒரு கலவரத்தை ஏற்படுத்த போனில் பேசிக்கொண்டு இருந்த ராயருக்கு பதில் குடுக்காமல் வேகமாய் அவனை பக்கவாட்டில் திரும்பி பார்த்தாள்.
அவன் அவளது பார்வையில் இன்னும் அதிக அழுத்தம் கொடுத்து பற்ற அவளுக்கு வலி எடுத்தது..
“என்ன பண்றீங்க ரவி.. விடுங்க..” அவனிடம் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்கும் போதே போனை அனைத்து போட்டவன் “அப்போ என் கிட்ட வம்புக்கு வர மாட்டேன்னு சொல்லு..” என்றான்.
“முடியாது.. நீ மட்டும் ஒழுங்கா.. என்னை எதுக்கு எப்போ பாரு சீண்டி விட்டுக்கிட்டே இருக்குற.. நீ முதல்ல திருந்து..” என்றவள் அவனிடமிருந்து விலக பார்க்க அவன் அதை கொஞ்சமும் அனுமதிக்காமல்
இன்னும் நெருக்கம் கொடுத்தவன் பற்றி இருந்த சதைகளை விட்டுவிட்டு அவளது இடையை வருடி விட அதை விட இது பெரும் அவஸ்த்தையாய் போனது அவளுக்கு.
“ஐயோ என்ன பண்றீங்க விடுங்க.. ப்ச் கூசுது ரவி ப்ளீஸ்..” என்று கெஞ்சியவளின் கெஞ்சல் காதில் விழுந்தாலும் அவளின் உடல் தரும் போதையை அவ்வளவு எளிதாக விட முடியாமல் இன்னும் அதிகமாக அவளை வதைக்க ஆரம்பித்தான். காதோரம் தன் மீசை முடியை வைத்து குறுகுறுப்பு ஊட்ட அவன் அறிமுக படுத்தும் அவஸ்த்தையை தாங்கமுடியாமல் தடுமாறி போனாள். கைகள் வேறு அவளது உடலில் அங்கேயும் இங்கேயும் அலைய அதில் எழுந்த உணர்வை அடக்க முடியாமல் தடுமாறி உதடு கடித்து அடக்கியவள் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் சற்றே அவன் மார்பில் சாய்ந்து அவனது தோளில் கடித்து வைத்தாள்.
அவனது கடி இன்னும் அவனுக்கு போதையை கூட்ட வன்மையுடனே அவளை கையாண்டான். அவனது வன்மை அவளுடம்பும் ஏற்றுக்கொள்ள அவனுக்கு சற்றே இசைந்தாள். இருவரது பிணைப்பையும் கண்டு அங்கிருந்த அத்தனை பொருட்க்களும் சிவந்து போய் கண்களை மூடிக்கொண்டது..
“ப்ளீஸ்..” என்ற சத்த்ஹம் மட்டுமே அங்கு கேட்டுக்கொண்டு இருந்தது.. அவளது ப்ளீஸ் என்ற சத்தமே அவனுக்கு இன்னும் இன்னும் உணர்வுகளை தூண்டி விட தன்னுள் முழுமையாக அவளை இறுக்கி தலுவியன் ஒருகட்டத்துக்கு மேல் தாங்காமல் தரையில் சரித்து அவள் மீது கவிழ சரியாய் அவளது போன் ரீங்காரம் போட சட்டென்று உணர்வுகளில் இருந்து இருவருமே மீண்டார்கள்.
அப்போது தான் இருக்கும் நிலை புரிய அவனிடமிருந்து வேகமாய் முதுகு காண்பித்து திரும்பிக்கொண்டாள் ஸ்வரா.
அவளது அந்த வெட்கம் கண்டு பின்னோடு அணைத்தவன் எட்டி அவளது போனை ஆண் செய்து அவளது காதிலே வைத்தான்.
அதில் லேசாய் அவனை திரும்பி பார்க்க கன்னத்தோடு கன்னம் வைத்து உரசி “பேசுடி..” என்றான். அவனது நெருக்கம் அவளுள் பல உணர்வுகளை தூண்டிவிட அதை அடக்கியபடி போனில் யார் என்று பார்த்து பேசினாள்.
அவள் பேசிக்கொண்டு இருக்க ரவியோ அவளை ஆராந்துக்கொண்டு இருந்தான். அவனது தொடுகையில் பேச முடியாமல் போக திரும்பி அவனை முறைத்தாள்.
ஆனால் அதையேல்லாம் கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் அவளது மேனியில் கதை படிக்க அவஸ்த்தை பட்டு போனாள் ஸ்வரா..
“இல்ல அண்ணா சும்மா தான் சொன்னேன்.. ரவி அப்படி யெல்லாம் பண்ண மாட்டாங்க.. ம்ம் ஆமா அண்ணா..” மேற்கொண்டு பேசிக்கொண்டு இருந்தவளின் குணம் கண்டு புன்னகைத்தவன் அவளின் கழுத்தில் தன் முகத்தை வைத்து திருப்பியவன் அங்கு சிறு சிறு முத்தங்களும் வைக்க பெரிதும் தடுமாறி போனாள் அவள்.
ராயர் மேற்கொண்டு பேச வர “அண்ணா நான் பிறகு பேசுறேன்” என்று வைத்துவிட்டு ரவியை தன்னிடமிருந்து பிரித்தாள். அதில் அவனது சுகம் களைய
“என்னடி..”
“என்ன டி யா.. மரியாதையா பேச தெரியாதா மிஸ்டர்”
“ப்ச் இப்போ உனக்கு என்ன வேணும் அதை முதல்ல சொல்லுடி..” என்றவன் மீண்டும் அவளை நாட..
கடுப்புடன் அவனை தடுத்த படியே
“ரவி..”
“ப்ச் எல்லாம் தெரியும் உனக்கும் எனக்கும் திருமணம் பேசி இருக்காங்க கூடவே நீயும் நானும் பழகி பார்க்க தான் இந்த ஏற்ப்பாடு சரியா.. அதோட இல்லாம மேடம்க்கு என் மேல ரரொம்ப ஆசையாமே அதான் கொஞ்சமா செக் பண்ணேன்.. பரவால நல்லா தான் என்னை காதலிக்கிற” என்றவனின் பேச்சில் திகைத்து போய் பார்த்தாள்.
“என்ன முழிக்கிற எல்லாமே எனக்கு தெரியும்.. என்ன ஒன்னு இதை எல்லாம் நானே முயன்று தெருஞ்சுக்கிட்டேன்.. எல்லாரும் சேர்ந்து என்னை முட்டாளாக்க பார்த்தீங்கள்ள..” சற்றே கோவமாய் கேட்டவனை பார்த்து
“அப்படி இல்லங்க..”
“எப்படி வேணாலும் இருந்துட்டு போகட்டும் ஆனா நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க முடியாது.”
“ஏன் ரவி..” பரிதவிப்புடன் கேட்டவளை பார்த்து
“எனக்குன்னு ஒரு கொள்கை இருக்கு ஸரா.. அதுல நீ பொருந்த மாட்ட.. நமக்குள்ள செட்டும் ஆகாது..”
“ரவி..” அதிர்ச்சியுடன் கத்தினாள்.
“ஆமாண்டி உனக்கும் எனக்கும் செட் ஆகாது.. மாமா தானே இந்த கல்யாணத்தை ஏற்பாடு செஞ்சாரு.. அவரு கிட்டயே நான் பேசிக்கிறேன்..”
“இல்ல ரவி நீங்க தவறா புருஞ்சுக்குறீங்க..”
“எனக்கு எந்த விளக்கமும் தேவை இல்ல ஸரா.. உன் கிட்ட கொஞ்சம் அதிகமாவே எல்லை மீறி நடந்துக்கிட்டேன்.. அதுக்கு சாரி எல்லாம் கேக்க முடியாது.. எனக்கு உன்னை பிடிக்கும் ஆனா ஏத்துக்கிட்டு வாழ முடியாது.. உனக்குன்னு வேற ஒருத்தன் வருவான் அவனை கல்யாணம் பண்ணிக்கோ.. இது தான் நாம மீட் பண்ற கடைசி மீட்டா இருக்கணும்” என்றவன் அவளை அப்படியே விட்டுட்டு விலகி சென்றுவிட்டான்.
அவன் விலகி செல்வான் என்று அவள் கொஞ்சம் கூட எதிர் பார்த்திருக்கவில்லை.. எதில் அவனுக்கு தன்னை பிடிக்காமல் போனது என்று தன்னையே ஆராயந்துக்கொண்டு இருந்தாள்.
விலகி வந்தவனோ ஸராவின் நினைவுகளுடனே இருந்தான்..
எதற்க்காக அவளை வேணாம் என்று சொன்னோம் என்பதை நினைத்தது பார்த்தவனுக்கு மனமெல்லாம் கனத்து போனது..
விழிகளில் நீர் கோர்த்து போனது..
நந்தா அவனை அவளிடம் வேலைக்கு செல்லுமாறு கூறும் போதே அதன் பின்னணியில் என்ன இருக்கும் என்று ஆராய்ந்து பார்த்தவனுக்கு ஸராவின் காதல் புரிய இதழ்களில் புன்னகை வந்தது..
“ம்ம் நம்மளையும் ஒருத்தி காதலிச்சுக்கிட்டு இருக்குறா அதுவும் நேரில் பார்க்காமலே.. குடுத்து வச்சவன்டா ரவி நீ” உற்ச்சாக ஊற்று பிறப்பெடுக்க அதை அனுபவித்த படி வெளியே கெத்து காட்டிக்கொண்டு இருந்தான்.
ஆனால் நடந்தது என்னவோ வேறாகி போனது.. அதை எண்ணி பார்த்தவனுக்கு மனமெல்லாம் கசந்து கசிந்து போனது..
“இன்றைய ஒரு நாளே எனக்கு போதும் டி உன்னோட நினைவோட என் ஆயுசு முழுசும் வாழ்ந்துடுவேன்.. இன்னைக்கு கொஞ்சம் அதிகமா தான் உன் கிட்ட நடந்துக்கிட்டேன். ஏன்னா எனக்கு உன் வாசம் வேணும் டி. அதான்” புலம்பிய படி வீட்டுக்கு வந்தான்.
அங்கே ராயரும் திகம்பரியும் இருக்க சட்டென்று தன் முகத்தை சரி செய்துக்கொண்டு அவர்களை உற்ச்சாகமாக வரவேற்றான்..
“பார்றா ஒரு கால் கூட குடுக்காம சர்ப்ரைஸ் பண்றாய்ங்க நம்மள” நக்கல் பண்ணியபடியே தீஷிதனை அள்ளி எடுத்து தலைக்கு மேலே போட்டு பிடித்து அவனது வயிற்றில் தன் முகத்தை புரட்டி கூச்சம் வர செய்துவிட்டு தன் தோளில் இருபக்கமும் கால் போட்டு அவனை உட்கார வைத்து கொஞ்சியவனை பதிலுக்கு அவனும் அவனது உச்சந்தலையில் முத்தம் கொடுத்து கவனித்தான் அவனது மருமகன்.





