அவரின் சொல் படி பிரைசூடனும் ஆறாவிடம் சற்று உரிமையாக நடந்து கொள்ளுவான். அவனின் உரிமையில் ஆராவின் மனம் நெகிழ்ந்து போனது. பிரைசூடனுக்கும் அப்படியே.
எவ்வளவு வேலை இருந்தாலும் எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு இருவரும் கொஞ்ச நேரம் நடை பயிற்ச்சி மேற்கொள்ளுவர். அப்போது பேச வேண்டிய விஷயங்கள் பகிர பட வேண்டிய விஷயங்கள் இருந்தாள் இருவரும் பகிர்ந்து கொள்ளுவார்கள்.
இதுக்கு என்ன மாதிரி முடிவெடுக்கணும் என்று குழம்பும் சமயமெல்லாம் பிறைசூடன் ஆராவுக்கு உதவி செய்வான். அவனின் ஆழ்ந்து அலசி ஆராயும் குணம் ஆராவுக்கு அப்படியே இருந்தது.
இருவரையும் ஜோடியாக பார்த்தாள் சித்ராவுக்கு மனம் நிறைந்து போகும். ஆனால் இருவரையும் சேர்ந்து பார்த்தாள் அனுவுக்கு உள்ளே எரிமலை வெடிக்கும்.
இருவரையும் பிரிக்க வேண்டும் என்று பல திட்டங்கள் போட்டு மண்ணை கவ்வியது தான் மிச்சம்.
இருவரின் நட்பையும் கொஞ்சம் கூட அசைக்க முடியவில்லை அவளால். அதுவே அவளுக்கு பெரும் ஆத்திரத்தை கொடுத்தது.
கணபதி சித்ராவுக்கு இரு மகன்கள். மூத்தவன் பிறைசூடன் இளையவன் பிரகாஷ்.
பிரகாஷ் குடும்பத்தில் அதிகம் ஒட்டாமல் தனி தீவாக அவனின் அப்பாவை போலவே இருப்பன். ஆனால் பிறைசூடன் சித்ராவை போல். உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பன். உயிராய் பழகுகிறவர்களுக்கு உயிரையும் கொடுப்பவன். அதுவும் ஆரா என்று வந்துவிட்டால் அவனின் நியாய தர்மங்கள் அவளை சார்ந்ததாக மட்டுமே இருக்கும்.
அது அவன் நினைத்தாள் கூட மாத்திக்கொள்ள முடியாது. அந்த அளவு அவளின் மீது பைத்தியமாக இருக்கிறான். ஆனால் அவன் வெளியே ஒருநாளும் கான்பித்துக்கொண்டது கிடையாது. பாசம் அன்பு நேசம் கருணை என்று எல்லாவற்றையும் வெளியே காண்பித்தவன் காதல் என்பதை மட்டும் உள்ளே பூட்டி வைத்திருந்தான்.
அதையும் ஆரா உணரும் காலம் வந்தது.
ஆராவிடம் பிறைசூடன் எதுவும் சொல்ல வில்லை என்றாலும் இயற்கையாகவே அவன் மீது காதல் எழுந்தது. அவனின் ஒரு பார்வை கூட வெளிபடுத்தாத காதலை தன் நெஞ்சு முழுக்க சுமந்தாள் அவள்.
ஆயிரம் பிரச்சனைகளுக்கு இடையே ஆராவுக்கு சந்தோஷம் தருவது அவனது நினைவுகள் மட்டுமே. அவன் நினைவில் அவள் ‘வாழ்ந்து’ கொண்டு இருக்கிறாள்.
எப்பவும் அவளுக்கு அவன் மட்டுமே... அவனுக்கு ஆயிரம் தோழமைகள் இருந்தாலும் எல்லாவற்றையும் பகிர்வது அவளிடம் மட்டுமே.. கோவம் வெறுப்பு ஆற்றாமை எல்லாமே வெளிபடுத்துவது அவளிடம் மட்டுமே.
வெளியே இருந்து பார்ப்பவர்களுக்கு குறிப்பா அனுவுக்கு இருவரும் சண்டை போட்டு கொள்கிறார்கள் என்றே என்ன தோன்றும். ஆனால் இருவரின் மனதிற்கு மட்டுமே தெரியும் அது உரிமை கலந்த காதல் என்பது.
சூடன் அவளை திட்டும் போதெல்லாம் அனு ஆராவை ஏளனமாக ஒரு பார்வை பார்ப்பாள். ஆராவோ “நீ சரியான லூசு.. சூடா என்னைக்கும் என்னை வெறுக்க மாட்டன். அவனது வடிகாலே நான் என்பதால் மட்டுமே அவன் இவ்வாறு நடந்து கொள்ளுகிறான். கோவம் இருக்கும் இடத்தில் மட்டும் தான் குணம் இருக்கும்.. அதேங்கே உனக்கு தெரிய போகிறது” என்று எண்ணிக்கொண்டு சென்றுவிடுவாள்.
அனு அவ்வாறு சொல்லவும் பிறைசூடனிடம் எந்த தகவலும் சொல்லாமல் அண்ணன் தங்கை இருவரும் நிச்சயத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார்கள். அவர்கள் சொல்ல வில்லை என்றாலும் பிறைசூடனுக்கு தகவல் தெரிந்து தான் இருந்தது.
ஆரா ஏதாவது செய்வாள் என்று எதிர் பார்த்தான். ஆனால் அவள் நீரில் போட்ட கல்லை போல பேசாமல் அமைதியாக இருந்தாள். அவளின் அந்த மௌனம் சூடனை வெகுவாக பாதித்தது.
மற்ற எல்லாவற்றையும் போல இதையும் அவளுக்கே கொடுத்துவிட்டு நிற்க போகிறாளா... மற்றதுக்கும் எனக்கும் வித்யாசம் இல்லையா..
மற்றதெல்லாம் உயிரற்ற பொருள். ஆனால் நான் அவளது வாழ்க்கை இல்லையா.. வாழ்க்கையே விட்டு குடுத்துவிட்டு ஒதுங்கி போய்விடுவாளா என்று ஆத்திரமாய் வந்தது அவனுக்கு.
என்னதான் செய்கிறாள் என்று கடைசி வரை பொறுத்து இருந்து தான் பார்க்கணும். இதுவரை அமைதியாய் இருந்தது போதாதா.. தன் வாழ்க்கை போகும் சமயத்தில் கூட எப்படி இவளால் அமைதியாக இருக்க முடிகிறது என்று ஆற்றாமை பட்டான்.
ஆரா சூடன் ஏதாவது செய்வான் என்று எண்ணி இருந்தாள். அவனது நோக்கம் தெரியாமல் அவள் அமைதி கொண்டாள். எப்படியும் சூடன் ஏதாவது செய்வான் என்று.
அவளது அந்த நம்பிக்கை அவன் மீது கொண்டுள்ள காதலினால் வந்தது. ஆனால் சூடன் அதை தவறாய் எடுத்துக்கொண்டு அவள் கொலை என்று பட்டம் சூட்டி அவளை வெறுத்து ஒதுக்கினான்.
நிச்சய நாளும் இனிதாய் விடிய அனைவரும் கிளம்பி மண்டபத்திற்கு சென்றார்கள். மாப்பிளை பெண் உறவினர்கள் என்று அனைவரும் சபையில் கூடி இருக்க அய்யர் மன ஓலை வாசித்தார்.
நிகழும் மங்களகரமான .... ஆண்டில் என்று ஆரம்பித்து கணபதி சித்ரா தம்பதினரின் மூத்த மகன் பிறைசூடன் அவர்களுக்கும் சண்முகம் வள்ளி மகளின் இளைய மகள் ஆராதானாவுக்கும் வரும் முகுர்த்தத்தில் திருமணம் நிச்சயிக்க படுகிறது. என்று வாசிக்க கூடி இருந்த அனைவரின் முகமும் குழப்பத்தில் சூழ அனுவுக்கு எரி குழம்பை உடல் மீது பூசிக்கொண்டது போல எரிந்தது.
“எது நடக்க கூடாதுன்னு நினைத்தேனோ அது நடக்கிறதே.. எல்லாவற்றிலும் கவனமாய் தானே இருந்தேன்” என்று ஆராவை கண்டு வன்மம் எழ
ஆராவோ அதிர்ச்சியாய் சூடனை பார்த்தாள்.
பெரியவர்கள் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள்.
“அய்யா பொண்ணு பேரு தவறா இருக்கு.. ஆரா இல்ல அனு” என்று வள்ளி சொல்ல அடிபட்ட பார்வை ஒன்றை தன் தாயின் மீது வீசினால் ஆரா.
“இல்லையே பையன் ஆரான்னு தானே சொன்னாப்பல”
“இல்லைங்க என் மூத்த பெண் அனுவுக்கும் பிரைசூடனுக்கும் தான் திருமணம் நிச்சயம் ஏற்பாடு செய்தோம் ஆரா இருக்குற இடத்துல அனுவோட பேர் மாத்துங்க” என்றார்.
பிறைசூடன் அமைதியாக இருந்தான். உள்ளுக்குள் எரிமலையாய் வெடிக்க தயாராய் இருந்தான்.
ஆனால் வெளியே அமைதியாக இருந்தான். ஆரா என்ன தான் செய்வாள் என்று காத்திருந்தான். ஆனால் அவ்ளோ இருக்கும் இடத்தை விட்டு கொஞ்சமும் அசையவில்லை. ஏன் நிமிர்ந்து கூட பார்க்கவில்லை.
அனுவுக்கு மனம் உலைக்கலாமாய் கொதித்தது. நிச்சயம் செய்ய இருக்கும் நாளுக்கு பத்து நாள் முன்பிருந்தே மேடிகுர் பெடிகுர் சிகை அலங்காரம், ப்ளீச்சிங் என்று அழகுநிலையத்திலேயே குடியிருந்தாள்.
அத்தனை அலங்காரத்திலும் இன்று ஒட்டு மொத்தமாய் கரி பூசினது போல ஆக்கிய பிறைசூடனை வன்மத்துடன் நோக்கினாள்.
நீ என்ன வேணா பார்த்துக்குஒ ஆனா எனக்கு என் ஆரா தான் வேணும் என்பது போல ஆராவின் செயல்களுக்காக அவன் காத்திருந்தான்.
அவளோ யாருக்கு வந்த விருந்தோ என்கிற ரீதியில் இருந்தாள். சித்ராவுக்கு மனது சந்தோசமாய் இருந்தது. தான் நினைத்தது தான் தன் மகனும் எண்ணி இருக்கிறான் என்று உவகையில் இருந்தார்.
வள்ளி மறுபடியும் அய்யரை மாற்றி படித்து காண்பிக்க சொல்ல
ஆரா எதுவும் செய்யாமல் இருப்பதை கண்டு சூடன் ஆத்திரத்தில் உச்சிக்கு சென்றான். அய்யர் வாசிக்க ஆரம்பிக்க
“அவசியம் இல்லை. நான் கல்யாணம் செய்ய நினைப்பது ஆராவை தான் அணுவை இல்லை.” என்றவனின் பேச்சை கேட்டு பெரியவர்கள் மூவரும் அவனை கண்டிக்க ஆரம்பித்தார்கள்.
“என்ன பா இது கடைசி நேரத்துல வந்து இப்படி சொல்ற.. அனுவுக்கு தானே உன்னை பேசி வச்சோம். இப்போ வந்து இப்படி சொன்னா என்ன அர்த்தம்” என்று வள்ளியே கேள்வி கேட்க அவரை கூர்ந்து பார்த்தவன்
“எனக்கு ஆராவை தான் பிடிக்கும்” என்றான்.
“அதை நீ முன்பே சொல்லி இருக்கணும் பிறைசூடன் இப்படி கடைசி நேரத்துல வந்து சொல்ல கூடாது” என்று கணபதி அவனை கண்டிக்க
“நீங்க யாராவது என் கிட்ட வந்து இப்படி சம்மந்தம் பேசி முடுச்சு இருக்கோம்னு சொன்னீங்களா... யாரும் சொல்லாம என்னை குத்தம் சொன்னா நான் எப்படி பொறுப்பாவேன். எனக்கு ‘எப்பவுமே’ அனுவை பிடிக்காது. ஆராவை தான் பிடிக்கும்.. அது தெருஞ்சு வச்சுக்காம போனது உங்க தவறு.” என்றான் பொட்டில் அடித்தது போல.
“அதெல்லாம் சரி தான். நாங்க சொல்லலன்னாலும் இப்படி பேச்சு போயிட்டு இருக்குன்னு உனக்கு தெரியும் தானே அப்பவே சொல்லி இருக்கலாமே பா” என்று சண்முகம் கேட்க
“சொல்லி இருக்கலாம் தான் ஆனா நீங்க பண்ணதுக்கு இந்த பனிஷ்மென்ட் சரியாய் இருக்கும்” என்று சொல்ல
“எங்களுக்கு சரி ஆனா அனுவுக்கு”
“அவளுக்கும் இந்த பனிஷ்மென்ட் தேவை தான். நான் ஏற்க்கனவே ஆராவை காதலிப்பது அவளுக்கு நல்லாவே தெரியும். தெருஞ்சும் இப்படி செய்தா நான் எப்படி பொறுப்பாவேன். அவ பண்ணதுக்கு அவ அனுபவிக்கிறா.. வர போற முகுர்த்தத்துல எனக்கும் அவளுக்கும் கல்யாணம் பிக்ஸ் பண்ணி இருக்கேன். என்றவன் அவர்களிடம் தன் திருமண பத்திரிக்கையை நீட்டினான்.
அங்கிருந்த அத்தனை பேருக்கும் பெரிய மூக்குடைப்பாய் அது இருக்க
“நாங்க என்ன செத்தா போய்ட்டோம்” என்று கணபதி கேட்க
“எனக்கு எப்படி தெரியும்” என்று மிக அலட்சியமாக பதில் சொன்னவனை கண்டு கோவம் இன்னும் பெருகியது.
தந்தையை சகித்துக் கொள்ளலாம்
தாயை பொறுத்துக் கொள்ளலாம்
தமக்கையை அனுசரித்துப் போலாம்
தன் மனம் கவர்ந்தவனும்
தன்னைப் போல இருக்க சொல்ல முடியுமோ???
தனக்கு வேண்டியதை
தான்தான் போராடி பெற வேண்டும் தடைகளை தகர்த்து எறிந்து
தன்னவளாக தட்டி
தூக்கிக்கொண்டான் பிறைசூடன்....
Wow சூப்பர் சூப்பர்👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻
நீ இப்படியே இரு மா....சும்மா சும்மா அடிப்பட்ட பார்வை பார்த்திட்டு🤦🤦🤦🤦🤦