Notifications
Clear all

அத்தியாயம் 1

 

Admin
(@ramya-devi)
Member Admin
Joined: 12 months ago
Posts: 960
Topic starter  

கண்ணாடி முன் நின்று தன்னை சரி செய்துக்கொண்டு இருந்தாள் ரியா.. எல்லாம் திருப்தி அளிக்க, கிளம்பி விழா நடக்கும் விடுதி கூடத்திற்கு வந்து சேர்ந்தாள். கூடவே பரிசு பொருளோடும் வந்தாள்.

அவளை ஆவலுடன் வரவேற்றனர் அங்கிருந்த அனைவரும்.. “வெல்கம் ரியா... நீங்க வந்ததுக்கு பிறகுதான் இந்த இடமே வெளிச்சமானது போல இருக்கு..” என்று ஆண் பெண் பாராமல் அவளை புகழ அனைவரின் அன்பையும் சமமாக ஏற்றுக்கொண்டவள் தன் நெருங்கிய தோழமைகளுடன் அமர்ந்துக்கொண்டாள்.

 

“அண்ணா என்ன இது.. என்னால இந்த சாக்கை எல்லாம் போட்டுட்டு நிக்க முடியாது..” கடுப்படித்துக்கொண்டு இருந்தான் ரவி..

“அடேய் தினமும் அதை போட்டுக்கிட்டு தாண்டா நான் வீட்டை விட்டே வெளியே போறேன். பொசுக்குன்னு இப்படி சாக்குன்னு சொல்லிட்ட..” பரிதாபமாய் நந்தன் கேட்க

“அப்படி கஷ்ட பட்டுக்கிட்டு இந்த பந்தா வேணுமா.. காட்டன் சட்டியிலயே நீ நல்லா தான் இருக்க.. பொறவெதுக்கு உனக்கு இது”

“மீட்டிங்னா இது அவசியம்டா..”

“அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.. முதல்ல இந்த துணிய தலைய சுத்தி தூக்கி ஏறி..” என்றான் கடுப்புடன்.

“சரி விடு இன்று உனக்காக நான் இதை போடல டா..” என்றவன் போட்டு இருந்த கோட்டை கழட்டி விசிவிட்டு ரவியை கூட்டிக்கொண்டு கீழே வந்தான். கீழே ராஜும் தயாராய் இருக்க மூவரும் சேர்ந்து விடுதிக்கு வந்து அங்கிருந்த தங்களுக்கு என்று இருந்த அறைக்கு சென்றார்கள்.

அங்கு ராயரின் குடும்பம் கிளம்பிக்கொண்டு இருக்க அவர்களோடு இவர்களும் சேர்ந்துக்கொண்டார்கள்.

“எல்லா ஏற்பாடும் சரியா இருக்குல்ல நந்தா..” மீண்டும் ஒரு முறை கேட்டுக்கொண்டார் ராஜ்.

“அதெல்லாம் பக்காவா இருக்கு பா... ராயரும் திகம்பரியும் வந்தா ஆரம்பிச்சுடலாம்.. நீங்க பொறுமையா வாங்க, நானும் ரவி வனா மூணு பெரும் கீழ போறோம். வந்தவங்களை வரவேற்க்கனும்..” என்று சொல்லிவிட்டு இருவரையும் அழைத்துக்கொண்டு கூடத்திற்கு வந்து அனைவரையும் வரவேற்றான்.. எல்லாம் சரியா இருக்கிறதா என்று மேற்பார்வையும் பார்த்துக்கொண்டான்.

வனா பத்திரிக்கையாளர்கள் எல்லாரும் வந்துட்டாங்க தானே, அதே போல ஊடகவியலாளர்களும் வந்துட்டாங்க தானே... ராயர் திகம்பரி நியுஸ் எந்த கருப்பு புள்ளியும் இல்லாம முறையா நடந்தது போல காட்டனும்.. கவனமா இரு..

“அதெல்லாம் நான் பாத்துக்குறேன் மாமா.. நீங்க கவலை படாதீங்க.. வந்தவங்களை சிறப்பா கவனிச்சுக்கோங்க.. ரவி கூட இருந்து பார்த்துக்குவான்.” வனா சொல்ல அவனை தோளோடு அனைத்து கொண்டவன்

“தேங்க்ஸ் டா..”

“நமக்குள்ள என்ன மாமா..” என்றவன் வேலைகளை கவனிக்க செல்ல ரவி நந்தனின் சட்டையை பிடித்து இழுத்தான்.

“என்னடா..”

“இல்ல என் சீனியர் வராரா..”

“பின்ன அவரு தானே டா நம்ம ஆபிஸ் வக்கீல்.. அவரு இல்லாம எப்படி”

“ஏன் அண்ணா இப்படி என் வாழ்க்கையில விளையாடுற... அவரு இங்கேயும் ரூல்ஸ் பேசி சாவடிப்பாறு..” கதறினான்.

“டேய் அதுக்குன்னு வரவேணாம்னு சொல்ல சொல்றியா..”

“ப்ச் போடா நான் கோவமா போறேன்” என்று சென்றவனின் சட்டை காலரை பிடித்து இழுத்துக்கொண்டு மேடை பக்கம் சென்றான்.

“அண்ணா உன் மேல நான் கோவமா இருக்கேன்..”

“சரி இருந்துக்கோடா அதுக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்..”

“கோவமா இருந்தா யாருக்கிட்டயும் பேச மாட்டாங்க தெரியுமா”

அவனது தலையில் தட்டியவன் “நேரம் காலம் தெயரியாம காமடி பண்ணிக்கிட்டு.. வாடா வேலை இருக்கு..” என்றவன் மேடை ஏறி அனைவருக்கும் வணக்கம் சொன்னவன்

“இந்த விழாவுக்கு வருகை தந்த அத்தனை பேருக்கும் எனது நன்றி.. என் தங்கை திகம்பரிக்கும் அவளுடைய கணவன் இப்போ சமிபமா செய்தி துறையில் அதிகமா பேசப்பட்ட பேமஸ் லாயர் மிஸ்டர் காசி விஸ்வநாத ராயர் அவர்களின் புதல்வன்.. அவனுக்காக தான் இந்த அறிமுக விழா...” என்றபோதே ராயரும் திகம்பரியும் கைகோர்த்தபடி விழா அரங்கிற்க்கு வந்தார்கள். பின்னோடு தில்லையும் சிவனாண்டியும் பிள்ளையோடு வர விழா கலை கட்டியது.

ராஜின் நாற்காலியை கந்தனும் மதியும் தள்ளிக்கொண்டு வந்தார்கள்.

“கூடவே நந்தா க்ருப்ஸ் ஒப் கம்பெனியின் ஒன் அப் த பாட்னரா திகம்பரியை நியமித்து இருப்பதற்காகவும் இந்த விழா ஏற்பாடு செய்ய பட்டு இருக்கிறது..” என்று நந்தா தொடர்ந்து சொல்ல அனைவரும் கரகோஷம் செய்தார்கள் மிக நாசுக்காக..

அதன் பின் அவர்கள் வாழ்த்து சொல்ல மேடை ஏற நந்தன் கீழிறங்கி வந்து, வந்து இருந்தவர்களை விருந்தோம்பல் செய்ய ஆரம்பித்தான்.

கூடவே மிக முக்கியமானவர்கள் வரும்போது இவனும் மேடை ஏறி தம்பதியினருக்கு அறிமுகம் செய்துக்கொண்டு இருந்தான்.

அப்போது ரியா மேடை ஏறி ராயர் திகம்பரிக்கு பரிசு பொருளை கொடுத்துவிட்டு அவர்களின் கையில் இருந்த அவர்களது மகன் தீஷிதனை கொஞ்சிக்கொண்டு இருக்க, எதார்த்தமாய் மேடை பார்த்தவனின் கண்களில் ரியா வந்து விழுந்தாள்.

“இவ இங்க எப்படி..” யோசனையுடன் மேலேறி வந்து

“ஹாய் ரியா..” நந்தனின் ஆளுமையான குரலில் நிதானமாய் திரும்பி பார்த்தவள்

“ஹாய் மிஸ்டர் நந்தன்..” இயல்பாய் அவனை வரவேற்றாள்.

“எப்படி இருக்க ரியா.. இவ்வளவு நாள் கழிச்சு அதும் என் ஆபிஸ் கம் ஹோம் பங்க்சன்ல நீ எப்படி..” அவன் கேட்க அவனது என் என்பதில் மெல்லியமாக புன்னகைத்தவள்

“நரேன் சார்பா வரவேண்டியதா போச்சு நந்தன்..”

“ஓ ஏன் அவன் சார்பா..”

“அவரோட பியே சோ..”

“பட் உனக்கு பியே வேலை போரடுச்சு போயிட்டதா சொன்ன..”

“சொன்னேன். ஆனா நரேன் விடல..” புன்னகைத்தாள்.

“அப்போ நரேன் விழாவுக்கு வர மாட்டானா..”

“கொஞ்சம் தாமதாம் ஆகும்னு சொல்லி தான் என்னை அனுப்பி விட்டாங்க முதல்ல. கண்டிப்பா சார் வருவாங்க.. நான் கிளம்புறே நந்தா” என்றவளை

“இரு சாப்பிட்டு போகலாம்..” என்றவன் ரவியை அழைத்து ரியாவை கவனிக்க சொல்ல பெருமூச்சுடன் அவனுடன் சென்றாள் மறுக்க முடியாமல்.

அதன் பிறகு நந்தாவுக்கு வேலை இன்னும் அதிகமானது..

ஒரு அரை மணிநேரம் கழித்து மீண்டும் ரியா அவனிடம் வர

“கொஞ்ச நேரம் வெயிட் பண்ணு நான் உன் கிட்ட பேசணும்” என்று சொல்லிவிட்டு அவன் சென்றுவிட “இவனை” பல்லை கடித்துக்கொண்டு அவ்விடத்திலே அமர்ந்தாள்.

அவளுடன் வந்த தோழமைகள் எல்லாம் செல்ல இவள் மட்டும் தனியாக அமர்ந்து இருந்தாள்.

நரேன் கூட நந்தாவை பார்த்து பேசிவிட்டு செல்ல போகும் பொது ரியாவை அழைத்தான். ஆனால் நந்தா விடவில்லை. ராஜ் அவள் அமர்ந்து இருப்பதை கண்டு

“ப்ரியா நீ இங்க எப்படி மா..” அவளது திடீர் வருகையை கண்டு கொஞ்சம் குழப்பமானார். அவரது குழப்பம் கண்டு நெஞ்சில் பெரிதாய் அடிவாங்கிய ப்ரியா “இல்ல நரேன் சார்பா வந்தான் சார்..” என்றாள் தயங்கிய படி.

“அதுக்கெதுக்கு மா இவ்வளவு தயக்கம்.. முதல்ல உக்காரு..” என்று மரியாதையாக எழுந்து நின்றவளை அமர சொன்னவர்

“சாப்டியா மா..”

“ம்ம் சாப்பிட்டுட்டேன் சார்.”

“ஆமா இப்போ எங்க வேலை பாக்குற..”

“நரேன் சார் கிட்ட வேலை பாக்குறேன் சார்.. மும்பைல”

“ஓ உனக்கு இன்னும் நல்ல எச்பீரியன்ஸ் கிடைச்சு இருக்கும்ல... லைப் எப்படி போகுது மா.. எத்தனை பேபிஸ். உன் ஹஸ்பெண்ட் என்ன வொர்க் பண்றாங்க..” அவளை பற்றி இயல்பாய் விசாரித்தார்.

“அவரும் மும்பைல தான் வேலை பாக்குறாங்க சார்.. ரெண்டு குழந்தைங்க.. அழகான குடும்பம் சார்” என்று ரசனையுடன் சொன்னவளின் முகத்தில் இருந்த வெளிச்சம் ராஜ்க்கும் சந்தோசத்தை கொடுத்தது..

“உன் மனசுக்கு நீ நல்லா இருப்ப மா.. ஏதாவது கஷ்டம்னு சொன்னா உடனே என்னை கூப்பிடு.. அப்பாவா நான் எப்பவும் உனக்கு இருப்பேன்” என்றார் அன்புடன்.

“கண்டிப்பா சார்..” என்றவள் அவரிடம் விடை பெற்றுக்கொண்டு கிளம்பி வெளியே வந்தாள்.

அதே நேரம் நந்தாவும் வெளியே வந்தான்.

“ரியா நில்லு உன்ன தான் உன்னை வெயிட் பண்ண சொன்னனே. ஏன் அதுக்குள்ள வந்த. சரி வா நானே உன்னை ட்ராப் பண்றேன்” என்று அவளுக்கு முன் போக

“தேவை இல்ல சார் நானே போய்க்குவேன்..”

“இதென்ன சில்லி தனமா பிஹேவ் பண்ற.. வா ரியா..” என்றவன் அவளை கட்டாயபடுத்தி கூட்டி சென்றான்.

அதோடு கூடவே “நீ நாளைக்கு என் ஆபிஸ்க்கு வந்துடு” என்றான்..

“புரியல சார்..”

“ப்ச் என்ன புரியல மெயின் பிராஞ்சுக்கு வந்துடு..”

“எதுக்கு..” தயக்கமாய் இழுத்தாள்.

“எதுக்கா வேலை பாக்க தான். என்ன ஆச்சு உனக்கு அவ்வளவு சார்ப்பா இருப்பியே நீ” என்று அவளை பார்ஹ்த்து பேசியவனை கண்டு அவளுக்கு தான் தலை சுத்தியது..

“அதான் எதுக்கு வரணும்னு கேட்டேன் நந்தா..”

“என் கிட்ட வேலை செய்ய தான்..”

“இல்ல நான் நரேன் கிட்ட..”

“அவன் கிட்ட பேசியாச்சு நீ நாளையில இருந்து ஆபிஸ் ல ஜாயின் பண்ணிக்கோ..” என்றான் அசால்ட்டாய்..

“இல்ல சார் அது ஒத்து வராது..”

“இதுக்கு முன்னாடி நீ பாத்தா வேலை தானே.. மூணு வருஷம் கேப்லாம் பெரிய விசயமே இல்ல.. அதோட உன் அளவு யாரும் பெர்பெக்ட்சனா செய்யிறது இல்ல.. என் வேகத்துக்கு உன்னால தான் ஈடு குடுக்க முடியும்.. சோ ஜாயின் பண்ணிடு” என்றவன் “எங்க போகணும்” என்று வழிகேட்க

அவள் தான் தங்கி இருக்கும் விடுதி பெயரை சொல்ல அவன் அங்கு இறக்கிவிட்டு சென்றான்..

அவனிடமிர்ந்து விடைபெற்று வந்த பொது தான் சற்றே நிம்மதியாய் இருந்தது..

“எப்போதுமே அவன் வைத்தது தான் சட்டமா..” என்று எரிச்சல் தான் வந்தது..

விழாவுக்கு கட்டிக்கொண்டு போய் இருந்த புடவையை அவிழ்த்து விசியவள் கோவத்துடன் தன்னை கண்ணாடியில் பார்த்தாள்..

சிறிது நேரம் கூட அவளது கண்களை அவளாலே பார்க்கமுடியவில்லை.. தலை குனிந்துக்கொண்டவள் மாற்று புடவையை எடுத்து கட்டிக்கொண்டு தூங்க ஆரம்பித்தாள்.

திரும்பி வந்த நந்தா அனைத்து வேலைகளையும் சிறப்புடன் முடித்து விட்டு அனைவரையும் வீட்டுக்கு அழைத்து வந்து சவுகாரியம் செஞ்சு குடுக்க அவனது அன்பை கண்டு திகம்பரி நெகிழ்ந்து போனாள்.

ஒரு காலத்தில் எப்படி இருந்தவன்.. இன்று அப்படியே அதற்க்கு எதிர் பதம்.. அத்தனையிலும் அவன் தன் மீது வைத்து இருந்த பாசமே புரிய நந்தனை நெகிழ்வுடன் அணைத்துக்கொண்டாள் திகம்பரி..

ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போது யாரோ கதவை தட்ட வேகமாய் எழுந்து சென்று கதவை திறந்தாள். அந்த அர்த்த ராத்திரியில் கண்களில் லேசான சிவப்புடன் தன் முன் நின்று இருந்தவனை கண்டு திகைத்து போனாள் ரியா..

“என்ன சார் இந்த நேரத்துல..” தயக்கத்துடன் கேட்டவளை இழுத்துக்கொண்டு உள்ளே நுழைந்தவன்

“இதெல்லாம் உனக்கென்ன புதுசா..” என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைக்க கேட்டுக்கொண்டு இருந்தவளுக்கு உயிர் போகாகது தான் குறை..

“சார்..”

“ப்ச் நந்தா...ம்ம் நந்தான்னு கூப்பிடு” என்றவன் அவளை படுக்கையில் தள்ளிவிட்டு அவளோடு அவனும் சரிந்து அவள் மீது படர ‘ஏன் உயிரோடு இருக்கிறோம்’ என்ற எண்ணம் வந்தது ரியாவுக்கு..

 

தொடரும்..

Loading spinner


   
Quote
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top