சகி வரவில்லை என்றவுடன் கார்த்தியும் அன்று விடுமுறை எடுத்து இருந்தான். அவன் கோவமாக இருந்ததால் அவனை மிரட்டி வேலைக்கு அனுப்பவில்லை சகி. இல்லை என்றால் அவனை விடுமுறை எடுத்திருக்க விட்டு இருக்க மாட்டாள் சகி.
முதலில் கிருஷ்ணன் தான் சர்வாவை பார்த்தார்.
“வாங்க தம்பி...” என்று அவனை வரவேற்க,
“தேங்க்ஸ் சார் பிள்ளைகளை பத்திரமாக பார்த்துக்கிட்டதுக்கு...” என்று சம்பிரதாயமாக பேசியவன் சகியை பார்த்தான்.
இரண்டு நாட்களுக்கு முன்பு நடந்த நிகழ்வுகள் கண் முன் வந்து போனது...
அலுவலகத்தில் பரபரப்பான வேலைகள் கிடையே சர்வ வின் கண்கள் அடிக்கடி சகியை நோட்டமிட்டு கொண்டே இருந்தது அதை உணர்ந்தாலும் சகி பெரிதாக எதையும் கண்டு கொள்ளவில்லை நீ பார்த்தா பாரு என்பது போல அவளது நடவடிக்கை இருக்கும். அதை உணர்ந்த சர்வாவினுள் ஏதோ ஒன்று உடைந்தது போல உணர்ந்தான்.
அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் மிக தீவிரமாக அவளை பார்க்க ஒரு கட்டத்துக்கு மேல் சகியால் அவனது பார்வையை தாங்கிக் கொள்ள முடியவில்லை. நிமிர்ந்து அவனது கண்களை நேருக்கு நேராக பார்த்தாள்.
"இப்படி பாக்குறதுனால என்ன மாறிட போகுதுன்னு நீங்க பாத்துட்டு இருக்கீங்க…" என்று அவள் சற்று கடுமையாகவே கேட்க,
"இதோ இவ்வளவு நேரம் நீ என்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. ஆனா இப்போ என் பார்வையோட குறுகுறுப்பு தாங்காமல் என்னை திரும்பி பார்த்த… இந்த மாற்றம் போதாதா…" என்று சர்வா சொல்ல, பெருமூச்சு ஒன்றை விட்டவள்,
"நானும் நீங்களும் டீன் ஏஜ் பருவம் கிடையாது. அந்த பருவத்தை நாம தாண்டி எப்பவோ முதிர்வுக்கு வந்துட்டோம். அதுவும் உங்களுக்கு திருமணம் ஆகி இரு பிள்ளைகள் வேறு இருக்கிறார்கள். இந்த நேரம் நாம இப்படி நடந்து கொள்வது நம்ம தகுதிக்கு அழகு இல்லன்னு எனக்கு தோணுது…" என்று அவள் சொல்ல,
"அப்போ பிள்ளைகள் இல்லன்னா எப்படி வேண்டுமானாலும் நடந்த்துக்கலாமா…?" என்று அவன் எதிர் கேள்வி கேட்டான்.
"நான் என்ன சொல்ல வரேன். நீங்க அதை எப்படி புரிஞ்சிக்கிறீங்க இதுதான் உங்க மெச்சூரிட்டியா?" என்று சினம் பொங்க கேட்டவளை ஆழ்ந்த விழிகளால் நிதானித்து பார்த்தான்.
"சரி இப்ப அதுக்கு என்ன பண்ணலாம்…?" என்றவனை இப்பொழுது அவள் ஆழ்ந்து நிதானித்து பார்த்தாள். இருவரது பார்வையிலும் இருந்த மெச்சூரிட்டி தனத்தை இருவரும் உணர்ந்தார்கள்.
ஆனாலும் சர்வா செய்வதை அவளால் கொஞ்சம் கூட ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவளது உள் நெஞ்சில் அவன் தான் இருக்கிறான் என்றாலுமே அவனது இந்த திடீர் மாற்றத்தை அவளால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இது திடீர் மாற்றம் இல்லை என்பது சர்வாவுக்கு மட்டும் தானே தெரியும். அதை அவளிடம் விளக்கப்படுத்தும் எண்ணம் அவனுக்கு இல்லை. ஒரு வேலை விளக்கப்படுத்தி இருந்தால் இங்கு மிக நல்ல மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கும். ஆனால் சர்வா எதையும் வெளிப்படுத்த வில்லை ஒருவேளை தன் விருப்பத்தை சொல்லி அவளிடம் தான் மொக்கை வாங்குவதை அவன் விரும்பவில்லையோ என்னவோ…
அதை உணர்ந்து தான் சர்வா தன் உள்ள கிடங்கை அவளிடம் வெளிப்படுத்தவே விரும்பவில்லை போல… தனக்கு மட்டுமே இந்த உணர்வு இருக்கிறது என்பதை அவன் ஆழமாக எண்ணினான். அவன் கொண்ட அதே உணர்வு அவளிடமும் இருக்கும் என்பதை ஆழ்ந்து கவனிக்க தவறினானோ என்னவோ…
தான் எடுத்த காரியத்திற்காக அவளுடன் இணைந்து நிற்கிறான் அவ்வளவே. ஆனாலும் அவனையும் மீறி இதோ இப்பொழுது போல அவனது உணர்வுகள் அவளிடம் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன என்பதை அறிந்தாலும் அவனால் அவனை கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை என்பது மட்டுமே இங்கு நிதர்சனம்.
தன் உணர்வுகளுக்கு அவளிடம் எந்த பதிலும் இல்லாமல் போக அவனது உள்ளத்தில் இன்னும் மூர்கம் நிரம்பியிருந்தது. அதை அவ்வப்பொழுது அவளிடம் காட்டவும் செய்கிறான்.
ஆனால் அதை சகியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. முன்பின் தெரியாத கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக எந்த தொடர்பிலும் இல்லாத ஒருத்தியிடம் அதுவும் தன் மீது தேவையில்லாத கோபத்தை திணிக்கும் போது அவனைப் பொறுத்தவரையில் நான்கு வருடங்களாக அவள் முன்பின் தெரியாதவள் தான் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாள். இவ்வாறு நடந்து கொள்வது என்பது அவன் மீது இருந்த மதிப்பை குறைத்துக் காட்டியது போல தோன்றியது.
தன் மனதில் அவனது உயரம் குறைவதை கண்டு வருந்தினாள். அந்த வருத்தத்தை கூட வெளியே காட்டிக் கொள்ளாமல் கல் போல இறுகிப்போனாள். உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் அவன் அறியாமல் போனது ஒருவிதம் என்றால் அவனது உள்ளுக்குள் இருக்கும் உள்ளுணர்வுகள் அறியாமல் போனாள் இவள்.
இவ்வளவு தவறாக இரண்டும் இரு வேறு விதத்தில் முட்டிக் கொண்டிருக்க என்ன ஆகுமோ என்று தெரியவில்லை. இவர்களுக்குள் நடக்கும் இந்த போராட்டத்தை உணராமல் அடுத்த கட்டத்திற்கு சர்வா அவளை இழுத்து சென்றான்.
“நாளைக்கு வீட்டுக்கு வா...” என்று அவன் சொல்ல அவள் திகைத்து போய் அவனை பார்த்தாள்.
“நாளைக்கே எப்படி வருவது, இப்போ தானே வந்துட்டு போனேன்.. எனக்கு கொஞ்சம் டைம் கொடுங்க ப்ளீஸ்” என்று அவள் கேட்க,
“இதுக்கு மேல என்னால தள்ளி போட முடியாது நீ உடனே வீட்டுக்கு வரணும். பிள்ளைங்க உங்கிட்ட பேசணும்னு சொன்னாங்க வா...” என்று அவன் அழைத்துக் கொண்டு போனான். அடுத்த நாள் காலையிலே அவளுடைய வீட்டுக்கு வந்தான் வீட்டுக்கு வந்தவனை கார்த்தி முறைத்து பார்த்தான். பார்வையாலே வெட்டி போடும் மந்திரம் அவனது கண்களில் கண்ட சர்வாவுக்கு ஏனோ அவனை இன்னும் சீண்டி பார்க்க தோன்றியது.
ஆனால் இந்த நேரம் அதற்கான சந்தர்ப்பம் இது இல்லை என்று உணர்ந்து அமைதியாக வெறும் கண்களால் மட்டும் அவனை “என்ன...?” என்பது போல சீண்டி விட்டு,
“எப்படி?” என்பது போல சீண்டி விட்டு அமர்ந்து இருந்தான். வீட்டுக்கு வந்தவனுக்கு காபி போட்டு உபசரித்தாள் சகி. அவளைக் கிளம்ப சொல்லிவிட்டு அவளுடைய தங்கை உபசரிக்க, கார்த்திக்கு இன்னும் கோபம் வந்தது. அதோடு கிருஷ்ணனும் அவன் அருகில் அமர்ந்து என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கி பின்,
“பிள்ளைகள் எப்படி இருக்கிறார்கள்?” என்று கேட்க கார்த்திக்கு சொல்லவும் வேண்டுமா. தன்னை கொஞ்சம் கூட பொருட்படுத்தாமல் மூவரும் அவனை விழுந்து விழுந்து கவனிப்பது கண்டு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
“என்ன மிஸ்டர் கார்த்திக் ரொம்ப கோவம் வருது போல?” என்று கிருஷ்ணனுக்கு தெரியாமல் காதோரம் சரிந்து கார்த்திக்கை வம்பிழுக்க, அவனோ எதுவும் பேசாமல் பல்லை கடித்தான்.
அதற்கும் “பார்த்து வாயில இருக்க பல் எல்லாம் விழுந்துட போகுது...” என்று மேலும் அவனை வம்பு இழுத்தவன் கிளம்பி வெளியே வந்த சகியை பார்த்து எழுந்து கொண்டான்.
அவன் எழுந்ததை பார்த்து கார்த்தியும் எழுந்து அவனுக்கு மிக நெருக்கமாக நின்று,
“இதோட உன் ஆட்டத்தை நிறுத்திக்கோய்யா. இதுக்கு மேல நீ ஆடுனா நீ ஆடும் ஆட்டத்துக்கு உன் உடம்புல உயிர் இருக்காது...” என்ற எச்சரித்தவன் சகியின் புறம் திரும்பி புன்னகை மன்னனாக வாயெல்லாம் பல்லாக காண்பித்து,
“சகி நான் அந்த வழிய தான் போறேன். வா விட்டுட்டு வரேன்...” என்றும் அவன் சர்வாவுக்கு முன்னாடி கையில் பைக் கீயை சுழற்றிக்கொண்டு வெளியே போனான். அதில் ஒரு விடுதலை உணர்வு வந்தது சகிக்கு. ஆனால் சர்வா பல்லை கடித்து தன் கோவத்தை வெளிப்படுத்த முடியாமல் கிருஷ்ணனை எண்ணி கட்டுக்குள் கொண்டு வந்தவன் ஒன்றும் சொல்லாமல் காரில் ஏறி போய்விட்டான்.
“இதுதான் உன்னுடைய முதல் தோல்வி இதுக்கு மேலயும் நீ என்கிட்ட வாலாட்டுன அப்படின்னா உனக்கு முழுக்க முழுக்க தோல்வி மட்டும்தான் காண்பிப்பேன்...” என்பது போல கார்த்திக் சர்வாவிடம் எச்சரிக்கை செய்தான்.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்கிக் கொள்ளாமல் சகியை தினமும் வீட்டுக்கு கூட்டிட்டு போக ஆரம்பித்தான் சர்வா. அதில் சகிக்கு சற்று பிடித்தமில்லை. அதோடு கார்த்திக் வேறு அவளை எச்சரித்தான். ஆனால் சர்வாவிடம் சகியின் மறுப்புகள் எல்லாம் அனல் பட்ட துளியாய் காணாமல் போய் விடுகையில் அவளால் மட்டும் என்ன செய்ய முடியும் பாவம்.
அதை அறிந்த கார்த்திக்கு கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது.. தன் ஒட்டுமொத்த கோபத்தையும் பிடித்து வைத்தவன் அன்று போல யாரும் இல்லாத நேரம் சர்வாவை சந்திக்க சென்றான்.
முன்பிருந்த கோவம் அவனது வார்த்தையில் இல்லை...





