இந்த வசீகரம் போதுமே மன்னவனை மயக்க... அவளின் தோற்றத்தில் முழுமையாக மோகனம் கொண்டவன் தன் இதழ்களால் அவளின் வியர்வையை துடைக்க அடிவயிற்றில் பெரும் பிரளையமே உண்டானது சகிக்கு...
தட்பமாய் இருந்த சர்வாவின் விரல்கள் பெண்ணவளின் மேனியில் ஊர்வலம் போக அப்படியே உறைந்துப் போனாள். அவனை தடுக்க நினைத்த கரங்கள் செயல்படாமல் அப்படியே இருக்க உள்ளம் நொந்துப் போனாள்.
அழுத்தமாய் அவனது உதடுகள் அவளின் தேகத்தில் பதிய ஒட்டு மொத்தமாய் சிலிர்த்து நின்றாள். சூடான மூச்சுக் காற்றும் மீசையின் அழுத்தமும் அவளின் கன்னத்தில் இருந்து மெல்ல மெல்ல நழுவி கழுத்தில் பதிந்துப் போக விழிகளையும் கரங்களையும் இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
அவளின் கழுத்தை ஆராய்ந்து வாசம் பிடித்தவன் தன் இதழ்களை வன்மையாக புதைத்தான் அங்கே...! கரங்களும் தங்களுக்கு பிடித்தமான இடையில் சிக்கிக்கொண்டன... வன்மையான முரட்டு இதழ்கள் கழுத்திலிருந்து சற்றே கீழிறங்கி உடை மறைக்காத இடத்தில் தன் அரசாட்சியை எடுத்துக் கொள்ள துடிதுடித்துப் போனாள்.
தன்னிடமிருந்து அவனது தலையை விலக்கி தள்ள பார்த்தாள். ஆனால் அவன் சிறிது கூட அசையாமல் அவளோடு ஒட்டிக் கொண்டு நிற்க வாலிப உணர்வுகள் இருவருக்குள்ளும் ஊற்றெடுக்க ஆரம்பிக்க நடுநடுங்கிப் போனாள்.
சர்வாவின் பிடிவாதத்தில் தேகம் உதறல் எடுத்தது..! எப்படி இவனிடமிருந்து விடுபடுவது..! என்று அவள் அதிர்ந்து வாசலை பார்த்தாள். அங்கே ஏதோ நிழல் தென்பட
“ஐயோ போச்சு..!” என்று அவள் அச்சம் கொள்ள ஆரம்பிக்கும் பொழுதே அந்த நிழலுக்கு உரிய உருவங்கள் உள்ளே வர பட்டென்று தன்னை விட்டு சர்வாவை பிரித்து எடுத்து அவனை விட்டு விலகி உள்ளே வந்த ஆட்களிடம் தஞ்சம் அடைந்தாள்.
அவளது விலகலில் கோவம் வர வேகமாய் வாசலை திரும்பி பார்த்தான். அங்கே அவனது குழந்தைகள் இருவரும் நின்றுக் கொண்டு இருக்க சட்டென்று ஒரு இலகு தன்மை வந்தது அவனிடம்..
தலையை கோதிக் கொண்டு மூவரையும் பார்த்தான். அவனது உணர்வுகள் இன்னும் ஒரு கோட்டில் வர மறுத்தது... விலகி போனவளை மீண்டும் தன் கை சிறையில் வைத்து “ஏன்டி விட்டுட்டு போன...” என்று அவளை இன்னும் வதைக்க தோன்றியது. கண்கள் சிவப்பேற அவளை நிமிர்ந்து பார்த்தான். அவனது கரம் பட்டு சற்றே விலகி இருந்த சேலையை பிள்ளைகளிடம் பேசிக்கொண்டே சரி செய்துக் கொண்டு இருந்தாள்.
‘ம்ஹும்... அப்படி பண்ணாதடி... எனக்கு உன் கலைந்த தோற்றம் கூட அப்படியே வேணும்...’ மனம் கூச்சல் போட்டது... ஒரு பெரு மூச்சு ஒன்றை விடுத்து தன்னை அமைதி படுத்திக் கொண்டவன்,
“குழந்தைகள் உன்னை பார்க்கணும்னு ஒரே அடம். அது தான் கூட்டிட்டு வந்தேன்... பார்த்துக்க எனக்கு வேலை இருக்கு. ஈவினிங் நானே வந்து பிள்ளைகளை பிக்கப் பண்ணிக்கிறேன்” என்றவன் அனுமதி எதுவும் கேட்காமல் அவன் பாட்டுக்கு பிள்ளைகளை ஒப்படைத்து விட்டு போய் விட்டான். போகும் பொழுது கிருஷ்ணன் உள்ளே வர வெறுமென தலையை ஆட்டி விடைபெற்றுக் கொண்டான்.
அவன் சென்ற பிறகே மூச்சை விட்டவள் உள்ளே நுழைந்த தந்தையை சங்கடமாய் பார்த்தாள்.
“இல்ல ப்பா அவரு தான். பிள்ளைகளை கொண்டு வந்து விட்டுட்டு...” என்று அவள் சொல்ல ஆரம்பிக்கும் பொழுதே,
“அதனால என்னடா இருக்கு... வா பிள்ளைகள் பாரு உன் முகத்தை பார்க்கிறாங்க... ஏதாவது சாப்பிட குடு” என்றார்.
“உங்களுக்கு வருத்தம் எதுவும் இல்லையா ப்பா” என்று சங்கடமாய் கேட்டாள்.
“அதெல்லாம் எந்த சங்கடமும் இல்லை... நீயும் மிருவும் பிள்ளைகளுக்கு சாப்பிட ஏதாவது எடுத்துட்டு வாங்க. அது வரை பிள்ளைகளிடம் நான் இருக்கேன்” என்றவர் அவர்களுடன் சரிக்கு சமமாக கீழே அமர்ந்து அவர்களுடன் விளையாட ஆரம்பித்தார்.
அவருக்கும் அந்த பிள்ளைகளின் வருகை மனதில் ஒரு சொல்லொண்ணாத வசந்தத்தை கொடுக்க அவர்களை தன் மடியில் அமர வைத்து கதை சொல்ல ஆரம்பித்தார். அப்படியே சகி இரு பிள்ளைகளுக்கும் சாப்பாட்டை ஊட்டி விட்டாள்.
மிருவும் அவர்களுடன் அமர்ந்துக் கொண்டாள். கிருஷ்ணன் கதை சொல்லி முடித்துவிட,
“மிரு நீ ஒரு கதை சொல்லு...” என்று ஆது அவளிடம் தாவ, அவனை வாங்கிக் கொண்டவள் சூப்பரான பைட் ஸ்டோரி சொல்ல சாப்பாடு அது பாட்டுக்க உள்ளே இறங்கி கொண்டு இருந்தது.
அப்படியே மிருவுக்கும் கிருஷ்ணனுக்கும் ஊட்டி விட்டாள். முடிக்கும் சமயம் கார்த்திக் வர அங்கு நடக்கும் கூத்துகளை முறைத்து பார்த்து விட்டு அறைக்குள் போய் குப்புற படுத்துக் கொண்டான்.
அவனின் பின்னாடியே சென்று அவனது காலரை பிடித்து வந்து கூடத்தில் இழுத்து போட்டவள் அவனுக்கும் ஊட்டி விட்டாள். அதில் அவனது முகத்தில் ஒரு பெருமிதம் வந்து ஒட்டிக் கொண்டது.
அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டு கூடத்தில் பாயை போட்டு அமர்ந்து விட்டார்கள். கார்த்திக் சகியின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டு தொலைகாட்சி பார்க்க
“இது என்னோட சகி.. நீ ஏன் படுத்து இருக்க... எழுந்திரி” என்று ஆதுகுட்டி கார்த்தியிடம் முறைத்தான்.
“எது உன் சகியா ஏன்டா சொல்ல மாட்டீங்க... அப்பனுக்கும் மகனுக்கும் ஒரே புத்தி...” என்று ஆதுவை முறைத்து பார்த்தான். அவனது பேச்சில் சட்டென்று சகி அவனை கில்லி வைத்தாள்.
அதில் சுதாரித்து அவளை முறைத்தான்.
“வாயை வச்சிக்கிட்டு சும்மாவே இருக்க மாட்டியாடா...” என்று கிருஷ்ணனை பார்த்து கண் காட்டி முணகினாள்.
“ம்கும்... இதுக்கெல்லாம் ஒண்ணும் குறைச்சல் இல்லை...” என்று முறைத்தவன் ஆதுவை வம்பிழுக்க ஆரம்பித்தான்.
குழந்தைகள் தன் தோற்றத்தை பார்த்து பயப்படுவதாக சர்வா சொல்லவும் அடுத்த நாளே தாடியை எடுத்து க்ளீன் சேவ்ல தலை முடி கூட அழகாக நறுக்கி கம்பீரமாக அலுவலகம் வந்தான்.
அவனது அந்த தோற்றம் கண்டு மூச்சடைக்க நின்றாள் மிரு. ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் கண்களாலே ரசித்துக் கொண்டவள் கல்லூரிக்கு கிளம்பி விட்டாள்.
அதன் பிறகு தான் பிள்ளைகள் அவனிடம் வரவே ஆரம்பித்தது. அதற்கும் ஒரு போராட்டம் தான். அதுவும் இனி இருக்கிறாளே வரவே மாட்டேன் என்று ஒரே அடம்...
ஆதுவும் முதலில் அடம் பிடித்தான். ஆனால் கார்த்திக் முரட்டு தனமாக அவனை இழுத்து மேலே தூக்கி போட்டு அவனை பயம் காட்ட தொடங்க, அது ஆதுவுக்கு மிகவும் பிடித்து போய் விட அதன் பிறகு அவனை விட்டு இரங்கவே மாட்டான்.
எங்கே அவனை கண்டாலும் என்னை தூக்கி போட்டு பிடி என்று அவனது காலை கட்டிக் கொண்டு அடம் பிடித்து விடுவான். ஆதுவும் கார்த்தியும் மிக நெருக்கமாக மாறிவிட இனி குட்டி அவனை அவ்வப்பொழுது பார்ப்பதோடு சரி. அவனோடு ஒட்டவே மாட்டாள்.
“நீ இப்படியே பண்ணிக்கிட்டு இரு... உன்னை பூச்சாண்டி கிட்ட பிடிச்சி குடுக்குறேன்” என்று மிரட்டினான்.
“அதுக்கு எதுக்கு பூச்சாண்டியை தேடுற.. அது தான் நீ இருக்கியே... நீ பூச்சாண்டியை விட மோசம்” என்று அவன் மீது ஏறி குதித்தான் ஆது குட்டி.
“என்னையவா பூச்சாண்டின்னு சொல்ற... படவா என் கால் உசரம் கூட இல்ல... என்னையவே கிண்டல் பண்றியா?” என்று அவனை பயமுறுத்துவது போல மேலே தூக்கி போட்டு பிடிக்க அவன் எங்க பயந்தான். கேக்க பிக்கவென சிரிக்க ஆரம்பித்தான்.
இப்படி தான் இவர்கள் எலியும் பூனையுமாக மாறி இருந்தார்கள். ஆனால் இருவருக்கும் பிணைக்க முடியாத ஒரு அன்பு இழையோடியது.
வாய் தான் கார்த்தியிடம் சண்டை போட்டுக் கொண்டு இருந்ததே தவிர ஆள் அவனின் நெஞ்சில் ஏறி படுத்துக் கொண்டது... முடி அடர்ந்த பறந்து விரிந்து இருந்த தேகம் ஆது குட்டியை சுகமாக சுமந்தது...! அவனது இடை பக்கம் அமர்ந்து இருந்த மிரு ஆது குட்டியை தட்டிக் கொடுத்துக் கொண்டு இருக்க, கிருஷ்ணனோ இரு பிள்ளைகளின் தலையையும் தடவி விட்டுக்கொண்டு இருந்தார்.
அவரின் அனுபவங்களை நான்கு பிள்ளைகளுக்கும் கதை போல பகிர்ந்துக் கொண்டு இருந்தார். அவரின் பேச்சில் ஒரு காதை கொடுத்து இருந்தவன்,
இனியே ஒரு பார்வை பார்த்தான் கார்த்திக். அது சொகுசு பூனையாக சகியின் இந்த பக்கம் மடியை விட்டு அங்கும் இங்கும் எங்கும் அசையவில்லை.
“நீ இப்படியே பண்ணிக்கிட்டு இரு.. உன்னை ஒரு நாள் கடத்தி எங்காவது தூரமா விட்டுட்டு வந்துடுறேன்” என்று மீரட்டினான்.
“போ...” என்று அவனது தலையை பிடித்து அடித்து விட்டு சகியின் மார்பில் தன் முகத்தை வைத்து மறைத்துக் கொண்டாள்.
அந்த நேரம் உள்ளே நுழைந்த சர்வா அங்கு இருந்த உயிரோட்டத்தை பார்த்து ஒரு கணம் அசைவற்று தான் போனான். அந்த கூட்டத்தில் தன் பிள்ளைகளும் இருப்பதை பார்த்து மனம் சற்றே ஆறுதலாய் உணர்ந்தான்.
இந்த அன்பும் பாசமும் என் பிள்ளைகளுக்கு ஏன் நிரந்தரமாய் கிடைக்காமல் போனது...! என்று எண்ணியவனுக்கு மனதில் பாரம் ஏறி அமர்ந்தது. இலை சுமக்கும் இதயம் இமையத்தை சுமக்க தொடங்க சிறிது நேரம் அசைவற்று தான் அந்த காட்சியை பார்த்துக் கொண்டு இருந்தான்.
எல்லோருக்கும் நடுவில் செல்ல பிள்ளையாய் இருந்த கார்த்தியை பார்த்து பொறாமையாய் இருந்தது சர்வாவுக்கு. அந்த இடத்தில் தான் இருந்தால் என்ன என்று எண்ணியவனுக்கு தன் செல்வமும் வளர்ப்பும் தடையாக இருப்பதை உணர்ந்தவன் பெருமூச்சு ஒன்றை வெளியிட்டான்.





