விரக்தி புன்னகை ஒன்று எழுந்தது அவனது முரட்டு இதழ்களில்... யார் அவளுடைய வாழ்க்கையை சின்னா பின்னமாக்கி இருந்தார்களோ அவர்களோடு அமர்ந்தே உண்ணுகிறாள் என்றால் அவளின் வருங்காலம் என்ன என்பதை சூசகமாக உணர்த்துவது போல உணர்ந்தான் கார்த்திக்...
உள்ளுக்குள் நொறுங்கிப் போனான். அதுவும் செல்வநாயகத்தை பற்றி நன்கு அறிந்தும் அவர்களோடு உறவு கொண்டு இருப்பவளை வேதனையுடன் பார்த்தான் கார்த்திக்.
அவனை எப்படி சமாதனம் செய்வது என்று அவள் தடுமாறி நிற்க அதை பார்த்த செல்வனாயகத்துக்கு குதுகலமாய் இருந்தது... தன்னுடைய அடியாளாக இருந்த கார்த்திக் மனம் திருந்தி சகியோடு போய் விட சரி விடு ரெண்டு தொல்லையும் விட்டது என்று தான் நினைத்தார்.
ஆனால் சகி மீண்டும் வர உடனே அவளை பற்றி எல்லாமும் தெரிந்துக் கொண்டார். இவர்களால எந்த ஆபத்தும் இல்லை என்று தான் சற்று நிதானமாக இருந்தார். ஆனால் நேற்றைக்கு சர்வா சகியின் பிணைப்பில் அதிர்ந்து போனார்.
ஆனால் சர்வாவின் வாய் மொழியாகவே சகியை எந்த நிலையில் வைத்திருக்கிறான் என்று அறிந்தவருக்கு சற்றே நிம்மதி தான். ஆனால் இந்த கார்த்தியை அப்படியே விட மனமில்லை. இவன் யாருடைய சார்பாகவும் கத்தியை தூக்குவான் என்று தெரிந்தவருக்கு அவனை அப்படியே விட மனமில்லை.
அதுவும் இன்றைக்கு காலையில் சகி பேசிய பேச்சை கேட்டு கார்த்திக் தான் அவளுக்கு தூணாக இருக்கிறான் என்று அறிந்தவருக்கு அவனை சத்தமில்லாமல் முடிக்க எண்ணினார். ஆனால் அதற்குள் அவருக்கு முன்னாடி இப்படி வந்து நிற்பான் என்று எதிர் பார்க்கவில்லை.
சகி வந்தது போதாமல் கார்த்தியும் அந்த வீட்டுக்குள் வர்றதை விரும்பாத செல்வனாயகம் சகியை ஏளனமாக பார்த்த படி,
“முதல்ல சகி வந்தா சரி இப்ப எதுக்கு அவள சுத்தி இருக்கிற எல்லாரும் வரணுமா சர்வா? இது ஒன்னும் ஆசிரம மடம் கிடையாது. கண்டவங்களும் வந்து போக ஒழுங்கா அவனை வீட்டை விட்டு வெளியே போக சொல்லு...” என்றார் கடுப்பாக.
தன்னால் கார்த்தியும் அங்கே வந்து அவமானபடுவதை கண்டவளுக்கு கண்களில் நீர் கோர்த்தது. அதுவரை இரும்பாக செல்வனாயகத்தை எதிர்த்து நின்றவள் இப்பொழுது கார்த்திக்காக கண்கள் கலங்கினாள்.
அதே நேரம் சகிக்கு ஏதோ தோன்றியது. அதுவும் சரியாக சர்வவுக்கு ஊட்டும் பொழுது கார்த்திக் வந்து நின்றதும் தன்னை அடிபட்ட உணர்வுடன் பார்த்ததும் கண்டு நெஞ்சை கவ்வியது. சட்டென்று சர்வாவை திரும்பி பார்த்தாள்.
அவன் தான் அனைத்துக்கும் காரணம் என்பது போல கால்களை ஆட்டிக் கொண்டு தெனாவட்டாக சகியையும் கார்த்திகையும் பார்த்தான். அதில் பல்லைக் கடித்தாள் சகி.
“செய்யிறது அத்தனையும் மொள்ளமாரி தனம்... இதுல ஒண்ணுமே தெரியாதது போல இருக்க வேண்டியது... பாவம் கார்த்திக்...” என்று சர்வாவுக்கு மட்டும் கேட்பது போல முணகினாள்.
“அதுக்கு நான் ஒண்ணும் செய்ய முடியாது... அடிக்கிறதுன்னா இறங்கி அடிக்கணும் அது தான்டி என்னோட பாலிசி...” என்று அவளுக்கு மட்டும் கேட்பது போல உருமியவன் அவளை பார்த்து கண்ணடித்தான். அதில் பற்றிக் கொண்டு வந்தது அவளுக்கு.
எல்லோரும் சேர்ந்து ஏளனம் செய்தாலும் தொண்டையை அடைத்துக் கொண்டு வந்தாலும் தன் வலியை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் அவனை பார்த்தாள். அதற்குள்,
“என்ன கார்த்திக் என்ன ஆச்சு ஏன் சகியை தேடி இவ்வளவு வந்திருக்க. ஒரு போன் பண்ண வேண்டியது தானே...! ஏதோ அவளுக்காக உன்னை சகிச்கிக்குறேன்... ஆனா இன்னொரு முறை வீட்டுக்குள்ள எல்லாம் வராத...” என்று செல்வநாயகம் சொல்ல அவமானத்தில் உயிர் கருகியது இருவருக்கும்.
அவரின் பேச்சை கேட்டு துடித்த சகி அவரை வெட்டும் பார்வை பார்த்தாள். “மாமா அவன் ஒன்னும் யாரோ எவரோ கிடையாது. அவன் என்னோட சொந்தம். அவனை வெளியே தொறத்தரத்துக்கு நீங்க யாரு...” என்றாள் சற்றே கடுமையாக..
அதோடு “சர்வா என்ன இது உங்க அப்பா இப்படி பேசுறாரு... நீங்க கேட்டுக்கிட்டு சும்மா இருக்கீங்களே... உங்களுக்கு கூடவா கார்த்திக் யாருன்னு தெரியல..” என்றாள் அழுத்தமாக.. அதில் சர்வாவின் பார்வை கூர்மை பெற அவளை அழுத்தம் திருத்தமாக பார்த்தான் அவன்.
அவள் ஒற்றை புருவத்தை ஏற்றி என்ன என்பது போல பார்த்தாள் இதழ்களில் கண்ணுக்கு எட்டா ஒரு ஏளன புன்னகையுடன். அதில் பல்லைக் கடித்தவன் “இதுக்கு நீ என்கிட்டே வாங்குவடி..” என்று கர்ஜித்தான்.
“அதை பிறகு பார்த்துக்கலாம்... இப்போ இதை கவனிங்க...” என்றாள் மிடுக்காக. அதில் பல்லைக் கடித்தவன், வெளியே தன் முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு,
“ப்ச் எதுக்கு இப்போ இவ்வளவு ஆர்பாட்டம்... அவனை நான் தான் வர சொன்னேன்... அதுக்கு என்ன இப்போ?” என்றான் கடுப்பாக..
“நீயா..? நீ எதுக்குடா அவனை வர சொன்ன? அவனுக்கும் உனக்கும் என்ன சம்பந்தம்? எதுக்காக அவன் இங்க வரணும்?” என்றார் படபடப்பாக. ஒரு வேளை தன் குட்டு எல்லாம் வெளியே வந்து விடுமோ என்று பயந்தார்.
அவரது படபடப்பை கண்டு நக்கலாக பார்த்தாள் சகி. தன் கூர் பார்வையை அவர் மீது வீசியவர்,
“ப்ச்... எதுக்கு இப்போ இவ்வளவு சீன க்ரியேட் பண்றீங்க...? எனக்கு ஒரு டிரைவர் தேவைப்பட்டது. அதுக்கு இவன் கொஞ்சம் சூட்டபிளா இருப்பான் அதுக்கு தான் வர சொன்னேன்” என்றான் சர்வா கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“எது டிரைவராவா? உனக்கு என்ன ஆச்சு சர்வா? இவன் யாருன்னு தெரியுமா? இவன் ஜெயிலுக்கு போயிட்டு வந்தவன்... இவன போய் உன் டிரைவரா வச்சுக்கிட்டா உனக்கு தான் அவமானம்” என்றார் படபடத்துப் போய்.
“ஜெயிலுக்கு போனதெல்லாம் ஒரு ப்ராபளமா? எனக்கு ஒன்னும் பிரச்சனை இல்ல.. அப்படியே பிரச்சனை வந்தாலும் அதையெல்லாம் நான் பாத்துக்கிறேன்... நீங்க தேவையில்லாத விசயத்துல தலையிட்டு டென்ஷன் ஆகாதீங்க...” என்றவன் கார்த்தியை டேபிளில் அமர சொன்னான்.
கார்த்திக் சர்வாவை கூர்ந்து பார்த்தான். அவன் எதையும் அலட்டிக் கொள்ளாமல் சர்வ சாதரணமாக எல்லாவற்றையும் எதிர் கொண்டான். ஜெயிலுக்கு போனவனை அமர சொல்லவும் கவிக்கு பற்றி கொண்டு வந்தது.
“சர்வா இதுவரை நீ செஞ்சதெல்லாம் பொறுத்துக்கிட்டேன். ஆனா இப்படி கண்டவனும் வந்து டேபில்ல உட்காற சொல்றதை எல்லாம் என்னால ஏத்துக்கவே முடியாது. நமக்குன்னு ஒரு ஸ்டேட்டஸ் இருக்கு. அந்த ஸ்டேட்டஸ கட்டி காப்பாத்தணும். அத விட்டுட்டு இப்படி நம்ம ஸ்டேட்டஸை காத்துல பறக்க விடுவதெல்லாம் சரி இல்லை” என்றார்.
“ப்ச் லீவிட்...” என்றவன் கார்த்திக்கு கண் காண்பிக்க அவன் செல்வனாயகத்தை பார்த்துக் கொண்டே அவருக்கு அருகில் அமர்ந்தான்.
அந்த அவமரியாதைஏற்க முடியாமல் கவி தன் சாப்பாட்டை ஒதுக்கி தள்ளிவிட்டு எழுந்து போக செல்வநாயகத்துக்கு முகம் கருத்துப் போனது. மேற்கொண்டு சாப்பிட முடியாமல் அவரும் அவ்விடத்தை விட்டுப் போக, கார்த்திக் கண்களில் குழப்பத்துடன் சர்வாவின் எதிரில் வந்து அமர்ந்தான் சகிக்குமே சர்வா இப்படி உடனடியாக கார்த்திக்கு ஒரு வேலை கொடுப்பான் என்று எண்ணியிருக்கவில்லை.
“என்ன மிஸ்டர் சர்வா உங்க பணக்கார திமிரை காமிக்கிறீங்களா?” என்று அடக்கப்பட்ட ஆத்திரத்துடன் சகி கேட்க, அவளை ஒரு பார்வை ஏளனமாக பார்த்தவன்,
“ஆமான்னே வச்சுக்கோடி.. என்னை எதிர்த்தவன் யாரும் நல்லா இருக்கக் கூடாதுன்னு நினைக்கிற எண்ணம் கொண்டவன் நான். நேத்திக்கு இவன் வந்து என்கிட்ட என்னென்ன கேள்வி எல்லாம் கேட்டான்னு உனக்கும் தெரியும் தானே... ? அதோட என் சட்டையை பிடிச்சி மானபங்கம் படுத்தி என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்கியவனை எப்படி சும்மா விட முடியும்..” என்று கர்ஜிக்க சென்றுக் கொண்டு இருந்த செல்வநாயகத்தின் காதில் அவ்வார்த்தைகள் அமிர்தமாய் வந்து விழுந்தது.
“இப்படி எல்லாத்துக்கும் நான் அவனை பழி வாங்க வேண்டாம்.. இல்ல பதிலடி தான் கொடுக்க வேண்டாமா? அப்படி கொடுக்கலைன்னா நான் என்ன ஆம்பளடி” என்று மீசையை முறுக்கினான்.
அதோடு “என்ன கார்த்தி என்கிட்ட டிரைவரா இருக்க சம்மதமா?” என்று நக்கலுடன் கேட்டான் அவனிடமே.
கார்த்திக்குமே வேறு வழி இல்லை சர்வாவிடமிருந்து சகியை காப்பாற்ற தான் அவளுக்கு நிழலாக இருந்தாக வேண்டும் என்று கண நேரத்தில் யோசித்தவன்,
“எனக்கு சம்மதம்...” என்றான்.
“ஆனா எனக்கு சம்மதம் இல்ல...” என்று சகி சொல்ல
“உன்னோட சம்மதம் இங்க யாருக்கும் தேவையே இல்லைடி. அவனே ஒத்துக்கிட்டான் உனக்கு என்ன வந்துச்சாம்...” என்று சகியை ஏளனம் செய்தவன்,
“இந்த நொடியில இருந்து நீ என்னோட ட்ரைவர்... எந்த நேரம் கூப்பிட்டாலும் நீ வரணும்.. அதோட உனக்கும் இரண்டு வருட கெடு... இரண்டு வருடம் முழுவதும் என்கிட்டே தான் வேலை செய்யணும்...” என்று தன் கண்டிஷனை போட்டான்.
“கார்த்திக் நீ இதுக்கு ஒத்துக்காத... வேணாம்.. என்னோட சம்பளமே நம்ம எல்லோருக்கும் போதும். இனி நீ யாருக்கும் கைக்கட்டி வேலை பார்க்கணும்னு அவசியம் இல்ல... சொன்னா கேளுடா” என்றபொழுதே சர்வா நீட்டிய ஒப்பந்த காகிதத்தில் அவளை பார்த்த படியே கையெழுத்து போட்டான் கார்த்திக்.
கார்த்தியை அன்றிலிருந்து தன் டிரைவராக நியமித்துக் கொண்டான். சகியும் கார்த்தியும் இனி சர்வாவின் பிடியில் இனி என்ன ஆகும் என்று தெரியவில்லை பொறுத்திருந்து பார்ப்போம்...





