ஆர்பாட்டமெல்லாம் ஓய்ந்து இருந்தது அவனுக்கு... ஒரே ஒரு முத்தம் சர்வாவை மொத்தமும் பித்தமாக்கி இருந்தது... அவன் கொண்ட பசிக்கு அது சோளப் பொரி தான். ஆனால் அவளாக கொடுத்த ஒற்றை முத்தம் அவனை செயலிழக்க வைத்தது. காதல் கொண்டு பெண்ணவளை பார்த்தான்.
இவளோடு வாழும் வாழ்க்கை மனம் நிறைந்த ஒன்றாக இருக்கும் என்று மகிழ்ந்தான். அதே உணர்வை அவளுக்கும் சர்வா கொடுத்தான். அவன் உணர்த்திய உணர்வுகளை உள்ளுக்குள் போக்கசம்(பொக்கிசம்) போல பொத்தி வைத்துக் கொண்டாள் சகி.
பேச்சு அரவம் எதுவும் இல்லை அங்கே.. வெறும் உயிர் கலந்த சங்கமம் மட்டுமே இருந்தது... இருவரின் கரங்களும் ஒன்றோடு ஒன்று இறுக்கி இருக்க, சர்வாவின் கவனம் பெண்ணவளின் விரல்களில் நிலைத்து நின்றது...
வெண்டை பிஞ்சு விரல்களில் அவன் அணிவித்த வைர மோதிரம் மின்னிக்கொண்டு இருந்தது... அதை அணிவிக்கும் பொழுது அவளிடம் அவன் செய்த சீண்டல் கண் முன் எழ அவனையும் மீறி அவனது இதழ்களில் புன்னகையில் விரிந்தது...
“சோ சாப்ட்டி நீ...” என்றான்.
அதில் வெட்கம் கொண்டவள், “நீங்க அதுக்கு எதிர்பதம் சர்வா...” என்றாள் பதிலுரையாக...
அதில் வாய் விட்டு சிரித்தவன்,
“கல்லு பாறைக்குள்ள தானே மிக மேனமையான வேர் துளிர் விடும்... இயற்கையே இங்க முரண் பட்டு நிற்கும் பொழுது நாமெல்லாம் எம்மாத்திரம் சகி... இந்த கல்லு தான் உன்னை காலம் பூரா சுமக்க போகிறது...” என்று காதலுடன் உரைத்தவன்,
அவளை இன்னும் நெருங்கி காதோரம் சரிந்து,
“ஆனா இரவு மட்டும் நீ தான் என்னை சுமக்கணும்...” என்று பேசி வைக்க அவனின் நெஞ்சில் தன் முகத்தை முழுவதுமாக மறைத்துக் கொண்டவளுக்கு நாணத்தில் முகம் செங்கொழுந்தாக சிவந்து போனது... அதையும் விடாமல் இரசித்தவன்,
“நான் வாழாத வாழ்வை உன்கிட்ட வாழணும்னு நினைக்கிறேன்டி... என்ன கட்டிக்கிட்டு என்னை வாழ வைப்பியா?” என்று கேட்டான். அதில் புரியாமல் அவனை பார்த்தாள் நிமிர்ந்து. அவளின் பார்வையிலே அர்த்தத்தை புரிந்தவனுக்கு மனதில் சொல்லொண்ணாத வேதனை எழுந்தது.
தன் வேதனையை முழுக்க அவளிடம் கொட்டிவிட எண்ணினான். ஆனால் பாவம் அவள் இப்பொழுதே மிரண்டு விடுவாள் என்று எண்ணி தன்னை தேற்றிக் கொண்டவன்,
“சும்மாடி...” என்று சிரித்தவன் காரை மீண்டும் மண்டபத்துக்கு விட்டான். அதன் பிறகு உடையை மாற்றி கண்ணயர சென்றாள் சகி. ஆனால் அதற்கு சர்வா விட வேண்டுமே...!
அப்பொழுது தான் இலகுவான உடைக்கு மாறி இருந்தாள். உடனே கதவு தட்டும் சத்தம் கேட்டது. அறையில் மிருவும் இவளும் மட்டுமே இருந்தார்கள். கிருஷ்ணன் இவர்களது அறையை ஒட்டி தனி அறையில் இருந்தார்.
உறவுகளும் எல்லாருமே அருகருகே இருந்தார்கள். கிருஷ்ணன் தான் இவர்களுக்கு தொந்தரவு கொடுக்க கூடாது என்று தனியாக வைத்திருந்தார்.
அது சர்வாவுக்கு மிக தோதாக போய்விட்டது... நினைத்த நேரம் வந்து நின்றான் அவளின் அறையில். ஆனால் உள்ளே நுழைய மாட்டான். வெளிவே நின்று அவளை பார்த்தான். அது போதாது என்று உணர்ந்து அவளை மொட்டை மாடிக்கு வர செய்தான்.
அதுவும் அவளை மிக இலகுவான உடையில் பார்த்த பின்பு மனம் பித்தம் கொள்ள அவளை கைகளில் அள்ளிக்கொள்ள பரபரத்தது...
அதை உணர்ந்தவள் இவன் சரிபட்டு வர மாட்டான் என்று உணர்ந்து இலகுவான உடையை மாற்றிவிட்டு தளர்வான ஷிபான் சேரியில் மாடி ஏறினாள் சர்வாவை காண...
கும்மிருட்டில் ஊதல் காற்று சற்று அழுத்தமாக வீசிக் கொண்டு இருக்க, மூன்றாம் பிறை தான் தாண்டி நான்கு நாள் ஆகி இருக்க மிக மெலிதான நிலா வெளிச்சம் வீசிக் கொண்டு இருந்தது அங்கு. அதுவும் மேகத்தில் ஒளிந்து விளையாடிக் கொண்டு இருக்க அவ்வப்பொழுது சற்றே இருளும் ஏற்பட்டுக் கொண்டு இருந்தது.
அதை பார்த்துக் கொண்டு இருந்தான் சர்வா... வெற்று மார்பில் கரங்களை கட்டியபடி தூரத்து தெரிந்த காரிருளை வெறித்துக் கொண்டு இருந்தான்.
அந்த நேரம் சகி மேலே வர அவளின் கொலுசொலி அவனை கலைக்க ஆர்வத்துடன் திரும்பினான். பார்த்தவனின் கண்களில் ஒருவித ஏமாற்றம் தெரிய அதை கண்டவளுக்கு முகம் நாணத்தில் சிவந்தது. அவனது எதிர்பார்ப்பு என்ன என்று அறிந்ததால் தானே அவள் உடை மாற்றி இருந்தாள். அதனால் உள்ளுக்குள் ஒரு குறும் புன்னகை விரிந்தது...
அவளின் முகத்தில் தென்பட்ட புன்னகையில் அவன் முறைத்துப் பார்த்தான் அவளை. அதில் இன்னும் சிரிப்பு வர,
“ரொம்ப தெளிவு தான்டி..” என்று பல்லைக் கடித்தான்.
“பின்ன நாளைக்கு வரை நான் என் அப்பாவுக்கு மகளா இருக்கணும்ல...” என்றாள் முகம் கொள்ளா சிரிப்புடன்...
“நிச்சயம் முடிஞ்சாலே பாதி பொண்டாட்டிடி... அதனால எனக்கு முழு உரிமை இருக்கு...” என்றவனின் கண்கள் அவளை வன்மையாக தின்று பார்க்க தொடங்கியது. அதில் தேகம் கூச,
“ம்கும்... நினைப்பு தான்...” என்ற நேரம் சல்லென்று காத்து வீச வயிறு பகுதியை மறைத்துக் கொண்டு இருந்த மாராப்பு சேலை நன்றாக விலக அவளின் இடையும் வயிறும் நன்றாக அவனது கண்களுக்கு காட்சியானது.
அதை இழுத்து மூட பார்க்க, இயற்கையே எனக்கு உதவி செய்யுதுடி... என்றவன் அவளது கரத்தை தன் கரத்தினுள் பிடித்துக் கொள்ள அவனின் முன்பு தன் இரகசியம் அம்பலமாவதை கண்டு நாணிப் போனாள்.
“விடுங்கங்க...” என்று அவனது பிடியில் இருந்து நழுவ பார்க்க அவன் விட்டால் தானே...! காற்று தழுவிய பாகங்களை தன் கரங்களும் இதழ்களும் வருட வேண்டும் என்று முரண்டு பண்ணி காதல் அட்டகாசத்தை அவன் தொடங்க,
அதற்கு அவள் கட்டி இருந்த சேலையும் உதவி புரிய சர்வாவின் வேகம் அதிகரித்தது... கன்றி போய் இருந்த தன் இடையையும் உதட்டையும் கண்ணாடியில் பார்த்தவளுக்கு அப்பட்டமாய் முகம் சிவந்துப் போனது.
“ரொம்ப மோசம் இவரு... திருமணத்துக்கு பிறகு எப்படி தான் இவரை சமாளிக்க போறேன்னு தெரியல...” என்று அவன் ஏற்படுத்திய தாக்கத்தில் அப்படியே போய் படுத்துக் கொண்டாள்.
சர்வா நிம்மதியாக கண்களை மூடி அவனது அறையில் படுத்தான். பெண்ணவளின் நாணம் அவனை கட்டிப் போட்டது... எதுவும் வேண்டாம் என்று தான் அவனது மனம் இருந்தது... திருமணம் செய்துக் கொள்ளவேண்டும். அது ஏதோ ஒரு பெண்ணாக இருந்தாலும் சரி தான். ஜஸ்ட் பிசினெஸ்க்கு ஹெல்ப் பண்ற மாதிரி இருந்தா போதும் என்று தான் அவனது தேடல் இருந்தது.
அவனை பொறுத்தவரை திறமை இருந்தால் போதும். காசு பணம் எதுவும் வேண்டாம். அது என்கிட்டே இருக்கு. வருகிற பெண்ணுக்கு நல்லா ட்ரைனிங் குடுத்து பிசினெஸ் லைன்ல கொண்டு வந்து விட்டுட்டா பிறகு அவளே நல்லா சாமாரித்து விடுவாள் என்று தான் அவனது கணக்கு.
அவன் வளர்ந்த விதமும் அப்படி தான். அவனை சுற்றி முழுக்க முழுக்க பிசினெஸ் மட்டும் தான்... பணம் சம்பாதிப்பது எப்படி, செலவு செய்வது எப்படி, ஒரு பார்ட்டி கொடுத்தால் கூட அதை வைத்து எப்படி பிசினெஸ அடுத்த லெவலுக்கு கொண்டு செல்வது என்றும், அதனால் என்ன லாபம் என்று மட்டுமே பார்க்க கற்றுக் கொடுத்து இருந்தார்கள் செல்வநாயகமும், கவிதாவும்..
பரம்பரை பணக்காரர்கள் தான். பிசினெஸ் வட்டாரத்தில் கொடி கட்டி பறக்க கூடிய ஆட்கள் தான். அதனால் தான் ஸ்டேட்ஸ் என்கிற பித்து அவர்களை பிடித்து ஆட்டிக் கொண்டு இருந்தது. எல்லோரும் அப்படி இல்லையே...! என்று சர்வாவின் மனம் அவ்வப்பொழுது கேள்வி எழுப்பும்.
பல பணக்கார குடும்பங்கள் உறவுகளுக்கு மரியாதை கொடுத்து குடும்பத்தோடு நீரால் செலவிட்டு சிரித்து பேசி பழகி இருப்பதை அவனும் பார்த்து இருக்கிறான். அதனால் தான் அவர்களின் குடும்பத்தோடு தன் குடும்பத்தையும் ஒப்பிட்டு பார்த்தான்.
மூவரும் ஒன்றாக அமர்ந்து பேசி சிரித்தது கிடையாது. ஏன் ஒரு நேர உணவு கூட ஒன்றாய் அமர்ந்து சாப்பிட்டது கிடையாது. அந்த அளவுக்கு செல்வநாயகமும் கவிதாவும் பிசினெஸ் பிசினெஸ் என்று அலைந்துக் கொண்டு இருந்தார்கள்.
அவர்களின் அன்புக்காக சர்வா மழலையில் ஏங்கி இருந்தான். எவ்வளவு ஏங்கியும் அவனை கண் கொண்டு பார்ப்பர் யாரும் இல்லை என்பதால் தன்னை தானே வார்த்துக் கொண்டான் சர்வா...
நீ என்னை ஒதுக்கும் முன்பே உன்னை விட்டு நான் பத்தடி ஒதுங்கி இருப்பேன் என்பது தான் அவனது கோட்பாடு...! அதன் படி தான் இத்தனை நாளும் வந்து வந்தான்.
திருமணம் பற்றிய கனவு அவனுக்கும் இருந்தது. ஆனால் செல்வநாயகமும் கவிதாவையும் எண்ணி அந்த கனவை கூட தனக்குள் புதைத்துக் கொண்டான். ஏனெனில் வருகிற பெண்ணும் எப்படியும் பிசினெஸ் உலகில் இருந்து தான் பார்க்க போகிறோம். அந்த பெண்ணும் என்னை போலவோ இல்லை என்னை விட பிசினெஸில் மொத்த கவனத்தையும் வைத்து இருந்தால் எதிர்பார்ப்பு மொத்தமும் ஏமாற்றமாய் முடியும். ஏமாற்றம் எப்பொழுதும் வெறுமையை கொடுக்கும். வெறுமை தன்னையே வெறுக்க வைக்கும். என்று உணர்ந்து எந்த எதிர்பார்ப்பையும் வைத்துக் கொள்ளவில்லை.
ஆனால் சகி அவனை ஒவ்வொரு முறையும் உயிர்த்தெழ வைத்துக் கொண்டு இருப்பதை உணர்ந்தவனுக்கு தன் கனவு வாழ்க்கை தான் சிரமப்படமாலே கையில் வந்து விழுந்ததை கண்டு பெருமகிழ்ச்சிக் கொண்டான்.





