போகும் அவளையே கவலை தேய்ந்த முகத்துடன் பார்த்தார்கள் இருவரும்... ஆனால் அந்த கவலை சிறிதும் இன்றி உள்ளத்தில் வஞ்சனையோடு சர்வேஷ்வரின் வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தாள் சங்கரேஸ்வரி.
அந்த காலைப்பொழுதில் அதுவும் எட்டு மணி கூட ஆகாத நிலையில் தன் வீட்டுக்குள் வந்து நின்றவளை நிமிர்ந்து பார்த்தார் செல்வநாயகம். இவ்வளவு விரைவாக வந்து நின்றவளை சிறிதும் கூட எதிர்பார்க்கவில்லை அவர்.
ஒரு கணம் அதிர்ந்து தான் போனார். கைகளில் இருந்த செய்திதாள் சற்றே நழுவ, அதை இருக்கிப் பிடித்தவர் அவளின் நோக்கம் என்னவாக இருக்கும் என்று எண்ணினார்.
அந்த எண்ணம் போன போக்கில் பல்லை கடித்தவர் அவளை வெறுப்புடன் பார்த்தார். அப்படியே வாசலுடன் அனுப்ப எண்ணினார் அவளை. ஆனால் சகியை அப்படி அனுப்பி விட முடியுமா என்ன?
“நீ எதுக்காக இவ்வளவு தூரம் வந்து இருக்கன்னு எனக்கு ரொம்ப நல்லாவே தெரியும். ஆனா உன்னோட நோக்கம் நிறைவேறாது. அதுக்கு நான் விடவும் மாட்டேன்... என்ன பத்தி உனக்கு இன்னும் முழுதாக தெரியலன்னு நினைக்கிறேன். ஏற்கனவே கொஞ்சம் சாம்பிள் காட்டி இருக்கேன். அந்த சாம்பிளுக்கே எழுந்து நிக்கிறதுக்கு நான்கு வருடங்கள் முழுதாக உனக்கு தேவைப்பட்டு இருக்கு... இன்னும் பட போறியா நீ?” என்று எகத்தாளம் பேசியவரை ஏளன சிரிப்போடு பார்த்தால் சங்கரேஸ்வரி.
“ப்ச்... அதெல்லாம் முடிந்து போன கதை சார்...” என்று சொன்னவள்,
“ம்ஹும்... மாமா அது தான் சரியா இருக்கும்...” என்று நக்கலாக சொன்னவள், அவரை இன்னும் ஆழமாக நோக்கி
“எந்த வாழ்க்கை எனக்கு கிடைக்கக்கூடாது என்று கார்த்தியை வைத்து என்னை கடத்தினீங்களோ அதே வாழ்க்கை இப்போ என் காலடியில் கிடக்கு. நான் தான் உங்க மகனை கொஞ்சம் அலையவிடனும் என்பதற்காக என் பின்னாடி நாய் மாதிரி சுத்த வச்சிருக்கேன். எனக்கு எப்ப தோணுதோ அப்போ உங்க மகனை கல்யாணம் பண்ணி, இதோ இந்த வீட்ல முழு சர்வ அதிகாரத்துடன் நான் வருவேன். வந்து நிற்பேன்... வந்து நின்னு உங்களுக்கு பதிலடி கொடுப்பேன்...” என்றால் சகி. அவளது அந்த ஸ்டேட்மெண்டில் ரத்தம் கொதிக்க, கண்கள் எல்லாம் சிவந்து போக, ஆத்திரத்தில் நரம்பு புடைக்க எழுந்து நின்றவர்,
“அது நான் உயிரோட இருக்கிறவரையிலும் நடக்காது நடக்க நான் விடமாட்டேன். உன் கண்ணு முன்னாடியே என் மகனுக்கு என் ஈக்குவல் ஸ்டேட்ஸ்ல உள்ள என் நண்பனோட மகளை கல்யாணம் பண்ணி வைப்பேன். நீ அன்னைக்கு மாதிரி ஓடி ஒளிஞ்சு போவ... இது கண்டிப்பா நடக்கும்...” என்றார் வன்மத்துடன்.
அவரது வன்மத்தை கண்டு கொஞ்சம் கூட கலங்காமல்,
“முன்னாடி நடந்தது என் அறியாமை தனத்தினால் எல்லாத்தையும் நம்பினேன்... அதனால ஏமாந்துப் போனேன் உங்க திட்டத்தைப் பற்றி அறியாமல். அதனால ரொம்ப சுலபமா என் வாழ்க்கையை நாசமாக்கிட்டீங்க... அதோட எவ்வளவு கீழ்தரமா எங்க அப்பாவை அவமானப் படுத்துநீங்கலோ அதுக்கெல்லாம் நீங்க பதில் சொல்லியாகணும்... சொல்ல வைப்பேன்...” என்றவளின் எண்ணங்கள் எல்லாம் நான்கு வருடங்களுக்கு முன் சென்றது...
விடிந்தால் கல்யாணம் என்கிற நிலையில் அனைவரும் கல்யாண மண்டபத்தில் கூடி இருந்தார்கள். அங்கும் இங்கும் எங்கும் கலகலப்புக்கு கொஞ்சமும் குறையில்லை... அப்பொழுது தான் வரவேற்பு முடிந்து இருந்தது...
வரவேற்புக்கு செய்திருந்த அலங்காரங்களை எல்லாம் எடுத்துக் கொண்டு இருந்தவளை சர்வா வந்து அழைத்தான்.
“டு மினிட்ஸ்... மேக்கப் கொஞ்சம் ஹெவியா இருக்கு.. அதே போல உடையும்... இலகுவான உடை மாற்றிக்கிட்டு வரேன்...” என்றாள்.
ஆனால் அவனுக்கு இந்த கோலத்தில் பார்க்க தான் ஆசை.
“நீ நீட்... கொஞ்ச நேரம் கழிச்சு வந்து மாத்திக்கோ...” என்றவன் விடாபிடியாய் அவளை அழைத்துக் கொண்டு கிருஷ்ணனிடம் அனுமதி கேட்டுவிட்டு காரில் கூட்டிக்கொண்டு கிளம்பி விட்டான்.
“எங்க போறோம்...? அதுவும் இந்த நேரத்துல..” என்று தயங்கி தயங்கி கேட்டாள்.
“ஏன் உன்னை எதுவும் செய்திடுவேன்னு பயமா?” கண்சிமிட்டி கேட்டான் சர்வா.. அதில் குப்பென்று முகம் சிவந்தவள் பதில் எதுவும் சொல்லாமல் வெளிப்புறம் திரும்பிக் கொண்டாள்.
அவளின் அந்த வெட்கம் சுமந்த முகம் இன்னும் வெகுவாய் அவனை கவர,
“பதில் சொல்லுடி...” என்று தூண்டி விட்டான்.
“இப்படி எல்லாம் பேசினா எனக்கு தூக்கம் வந்திடும்... பிறகு நான் தூங்கிடுவேன்...” என்று தன் வெட்கத்தை விடுத்து அவனை மிரட்டினாள் சகி.
“ம்ஹும்... எங்க தூங்கி பாரு...” என்றவன், அவளின் புறம் சரிந்து, “தூங்கினா எனக்கு இன்னும் வசதி தான்...” என்று சொல்ல அவளுக்கு அப்படியே எங்காவது புதைந்து போனால் நன்றாக இருக்கும் என்று தோன்றியது.
சர்வா அதோடு நிறுத்தாமல், “நீ தூங்கி போனா எனக்கு எழுப்பும் மந்திரமும் தெரியும்...” என்றான் மீசையின் குறுகுறுப்போடு. அதில் தேகம் மொத்தமும் சிவந்து போனாள் சகி...
காதோரம் கவி பாடும் மீசையை பிடித்து இழுத்து ‘ஏன்டா இப்படி அவஸ்த்தை பண்ற...?’ என்று கேட்டுவிட அவளது இதழ்களும் கரமும் துடிதுதித்தது. இதழ்களை பற்களால் கட்டுப் படுத்தியவள், விரல்களை ஒன்றோடு ஒன்று கோர்த்து அடக்கிக் கொண்டாள்.
அவளின் அவஸ்த்தை புரியாமல் அவளது வெட்கத்தை மட்டும் உணர்ந்தவன் வழி நெடுக அவளை இது போலவே சீன்டிவிட்டுக் கொண்டு வந்தான்.
“கல்யாணத்துக்கு பிறகு எனக்கு பேட்டே வேணாம்...” என்றான்.
“ஏன்?” என்பது போல அவள் அவனை திரும்பி பார்க்க,
அவன் வாய் சொல்லாத வார்த்தைகளை அவனது கண்கள் சொல்ல பட்டென்று இரு கரங்களாலும் அவளின் முகத்தை பொத்திக் கொண்டாள்.
“ரொம்ப கஷ்டம் போல...” என்றான் பெருமூச்சு விட்டு...
‘இது எதுக்கோ...’ என்று அவள் மௌனம் காக்க,
“இல்ல இப்படி வெட்கப்பட்டுக் கிட்டே இருந்தா நான் எப்படி மேற்கொண்டு போறது...” என்றான்.
அதில் இன்னும் சிவந்துப் போனவள் அவனை ஏறிட்டுப் பார்க்கவே இல்லை.
“பாரு நான் சொன்னதை அப்படியே நிரூபிச்சுக்கிட்டு இருக்க... வெட்க ஆடையை நீ விலக்கி வச்சா தான் என்னை போர்வையா போத்திக்க முடியும்...” என்று சொல்லும் முன்பே எக்கி அவனது வாயை தன் கரம் கொண்டு பொத்தினாள்.
அதில் கார் சடுதியில் தடுமாற அதை எல்லாம் கணக்கிலே எடுத்துக் கொள்ளாமல் ஓரம் கட்டியவன்,
“இந்த போர்வையை தான் இனி நீ தினமும் போர்த்திக்கணும்...” என்று மேலும் பேச, அவளால் தாங்கவே முடியவில்லை... சுற்றி முற்றி ஒரு பார்வை பார்த்தவள், எக்கி ஹெட்லைட்டை ஆப் செய்தவள் அவனை இழுத்து வன்மையாக அவனின் இதழ்களை பேச விடாமல் செய்தாள்.
அவளின் அந்த தண்டனையில் உல்லாசம் கொண்டவன் அவளின் இடையோடு இறுக்கிக் கொண்டான். இருவரின் நெருக்கமும் அந்த கணம் இருவருக்குமே அதிக தேவையை கொடுக்க,
சர்வா மிக நிதானமாக அவளின் எல்லைகளை கடக்க ஆரம்பித்தான். ஆனாலும் பார்டர் தாண்டாமல் அவளை சுகித்தவன் தன் நெஞ்சில் இருக்கும் ஆசையை அவளுக்கு உணர்த்த தவறவில்லை.
முதல் முதல் தனித்த பயணம்... இளம் காதலர்கள்... நாளைக்கு திருமணம் என்கிற உரிமை, போதையூட்டும் இரவு, அத்தனை அம்சமும் கலவிக்கு உகந்ததாக இருந்தது. ஆனால் அவர்கள் சற்று கூட தங்களின் நிலையிலிருந்து நழுவவில்லை.
அவனது தோளில் மனம் விட்டு சாய்ந்து இருந்தாள் சகி... அவளை தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்தவன் எந்த சீண்டலும் இல்லாமல் அவளை தன்னில் தாங்கியபடி இருந்தான்.
ஆர்பாட்டமெல்லாம் ஓய்ந்து இருந்தது அவனுக்கு... ஒரே ஒரு முத்தம் சர்வாவை மொத்தமும் பித்தமாக்கி இருந்தது... அவன் கொண்ட பசிக்கு அது சோளப் பொரி தான். ஆனால் அவளாக கொடுத்த ஒற்றை முத்தம் அவனை செயலிழக்க வைத்தது. காதல் கொண்டு பெண்ணவளை பார்த்தான்.





