அதிகாலை பொழுது அழகாய் விடிய சூரியனின் போன் கதிர்கள் ஆராதனாவை துயில் கலைக்க சோம்பேறியாய் எழுந்து அமர்ந்தாள்.
எழுந்து செய்வதற்கு ஒன்றும் இல்லை என்றாலும் அதென்னவோ அஞ்சு மணிக்கெல்லாம் விழிப்பு வந்து விடுகிறது...
பெருமூச்சு ஒன்றை விட்டுகொண்டு எழுந்து படுத்த படுக்கையை ஒழுங்கு செய்தவள் நிதானமாய் காலை கடனை செய்து குளித்துவிட்டு வந்து சாமி படத்தின் முன் நின்று கண்களை மூடாமல் வைத்த கண் வாங்காமல் எதிரில் இருந்த கடவுளின் உருவத்தையே பார்த்தாள்.
அவளுக்கு என்ன வேண்டுவது என்று தெரிய வில்லை. “எப்படியும் நான் கேட்டதை நீ எனக்கு தர போவது இல்லை... பிறகு எதுக்கு உன்னிடம் நான் மனு போட வேண்டும்... நான் சந்தோசமா இருக்கேன்... நீயும் சந்தோசமா இரு...” என்று சப்தமாக கூறிவிட்டு விளக்கை ஏற்றி வைத்துவிட்டு சமையல் அறைக்கு சென்றாள்.
அங்கு காலை உணவையும் மத்திய உணவையும் செய்துவைத்து விட்டு தோட்டத்திற்கு சென்று அங்கிருந்த பூச்செடிக்கு தண்ணீர் விட்டவள் பூக்களை பறித்து தொடுத்து இரு சரம் கட்டி வைத்தாள்.
மணியை பார்த்தவள் அது ஒன்பது என்று காண்பிக்க தலை சீவி புடவை கட்டியவள் காலை உணவை உண்டு விட்டு அவள் வேலை பார்க்கும் பெட்ரோல் பங்குக்கு சென்றாள்.
கணினியில் முதுகலை பட்டம் பெற்றவள். பல நிறுவனங்களை திறன் பட நிர்வகித்தவள். ஆனால் இன்று ஏதோ ஒரு குக்கிராமத்தில் பெட்ரோல் பங்க்கில் மேனேஜராக இருக்கிறாள். அவளின் கீழ் இருபது பேர் வேலை செய்கிறார்கள். எல்லாமே அங்கு அவள் தான்...
அப்பாவுக்கு நெருங்கிய தெரிந்த ஒருவரின் பங்க்கு தான் அது... அதனால் எந்த கெடுபடியும் அவளுக்கு கிடையாது...
அவளின் விருப்பம் போல அங்கு செயல் படலாம்... எல்லாமே அவள் விருப்ப படி தான். அந்த கிராமம் முழுவதும் சவுக்கு மரம் தான் நிறைந்து இருக்கும்... அங்கே பெரும்பாலும் சோளம் மற்றும் சவுக்கு நடவு தான் அதிகம்.. அது தான் அங்கு விவாயம்..
மழை பெய்தால் கறை புரண்டு ஓடும் சிற்றாறு... எவ்வளவு வெயில் காய்ந்தாலும் சித்திரையில் கூட வற்றாத குளம்... என்று சற்று செழிப்பாகவே இருக்கும் அந்த ஊர்...
மக்களின் குடி நீர் தான் சற்று சொல்லும் படி இருக்காது... தூரத்தில் ஒரு ஊற்று இருக்கும் அங்கு தான் குடிநீர் எடுத்து வர வேண்டும்...
அவளுக்கு அந்த சிரமம் இல்லை... வீட்டிலே ஆர்ஓ போட்டு இருந்தார்கள்.
அவளது சொந்த உபயோகத்திற்கு என்று ஸ்கூட்டி இருக்கிறது... கிளம்பி கண்ணாடி முன் நின்றவள் தன்னை ஒரு முறை பார்த்தாள். ஏதோ நினைவுகள் வர அதை ஒதுக்கி விட்டு போட்டிட்டு கொண்டு தொடுத்து வைத்த இரு சர மல்லிகை பூவை தலையில் சூடிக்கொண்டாள். சந்தன கீற்றை வைத்துக்கொண்டவள் வீட்டை பூட்டிக்கொண்டு கிளம்பினாள் வண்டியில் பங்கிற்க்கு
அங்கு பெற்றோல் டீசல் அளவை சோதனை செய்து மார்க் செய்தவள் இருக்கும் ஸ்டாக்கை சரி பார்த்து விட்டு அதையும் எழுதி வைத்து விட்டு கணினியில் இருந்த கணக்குகளை ஆராய தொடங்கினாள்.
இந்த வாரம் கொடுக்க வேண்டிய இழுவை தொகையை தனியாக எழுதி வைத்த சமயம்
“காலை வணக்கம் மேனேஜெர் அம்மா” என்ற குரலில் கலைந்தவள் செல்லமாய் முறைத்தாள் தன் எதிரில் இருந்தவளை கண்டு.
“வணக்கம் சொன்ன பதிலுக்கு வணக்கம் சொல்லணும் அதை விட்டுட்டு இப்படி முறைக்க கூடாது டார்லிங்” என்று மேலும் ஆராவை வம்பு இழுக்க
“காலைலேயே வாடி முடில போய் முதல்ல யுனிபார்ம் போட்டு டூட்டியை மாத்தி விடு தாமு அண்ணா பயங்கர கோவத்துல இருக்காரு..” என்று சிரிக்க
“அவருக்கு என்ன வேலை நீ முதல்ல காலை வணக்கம் சொல்லு” என்று என்ற பாவானியை பார்த்து சிரித்தபடி
“இனிய காலை வணக்கம் அம்மணி... போ போய் வேலையை பாரு” என்று அவளை விரட்டி விட்டுட்டு தன் வேளைகளில் மூழ்கினாள்.
தாமோதரனும் வெங்கியும் டூட்டி மாத்திவிட்டு வர அவர்களுக்கு பணத்தை என்ன உதவி செய்து கணக்கை முடித்து கொடுத்தாள்.
அதன் பின் வந்த பணத்தை சலான் எழுதி மற்றும் ஒரு முறை சரி பார்த்தவள் பணத்தை எடுத்துக்கொண்டு அந்த ஊரில் இருந்த சிறிய பேங்கிற்கு சென்று டெப்பாசிட் செய்ய சென்றாள்.
அந்த ஊரிலே அதிக பணம் புழங்குவது அவள் மட்டும் தான். என்பதால் சிறப்பான வர வேர்ப்பு எப்போதும் உண்டு அவளுக்கு..
பாதி நேரம் நெட் கிடைக்காது அந்த ஊரில்.. அதனால் எப்போதும் கும்பல் இருந்த வண்ணமாய் தான் இருக்கும் பேங்க்கில்..
வந்தவள் வரிசையில் நிற்க
“ரொம்ப நேரம் ஆகும் நீங்க குடுத்துட்டு போங்க” என்று கேசியர் சொல்ல அந்த இளம் கேசியரை பார்த்து புன்னகை செய்தவள் “ஒன்னும் பிரச்சனை இல்லை பரவால” என்று நின்றாள்.
எழுத படிக்க தெரியாதவர்கள் நிறைய பேர் அங்கு பணம் போட்டு எடுக்க வர இருப்பதால் சலான் எழுதி கொடுக்க அந்த நேரத்தை பயன் படுத்திக்கொள்ளுவாள்.
அதை உள் அறையிலிருந்து மேனேஜெர் பார்த்து தனக்குள் சிரித்துக்கொள்ளுவான்.
இவளும் இங்கிருந்த படியே அவனை பார்த்து “ஹாய்” சொல்ல பதிலுக்கு சிரித்து ஹாய் சொன்னவன் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனது பார்வையை பார்த்து “என்ன” என்று கேட்டாள்.
“ம்ஹும் நீ பாரு” என்று திரும்பிக்கொண்டான்.
அதன் பிறகு பன்னிரண்டு மணி வரை அங்கு இருந்தவள் மறுபடியும் பங்கிற்கு வந்து சிறிது நேரம் அங்கு சுத்தி பார்த்தாள்.
பின் புறம் இருந்த தோட்டத்திற்கு வந்தாள். அது அவளின் பிரியமான இடம்... கிராமம் என்பதால் முன் புறம் பங்க்காகவும் பின் புறம் விவசாய பூமியாகவும் விட்டார்கள்.
பறந்து விரிந்த நிலத்தில் பங்க்கை ஒட்டி தோட்டாமாக மாற்றி இருந்தார்கள் மித்த இடத்தை சோளம், மக்கா சோளம், கடலை, வெங்காயம் என்று போட்டு இருந்தார்கள்.
தோட்டத்தில் புளிய மரம், மா மரம், வேப்ப மரம், ஆல மரம் என்று நிழல் தருவதற்காக எல்லா மரத்திலும் ஒவ்வொன்றை வளர்த்து இருந்தார்கள். கூடவே வாழை மரம், சிறிய வகை பலம் தரும் கொய்யா, சீத்தா, சப்போட்டா என்று வகை வகையாய் வளர்த்து இருந்தார்கள்.
போதாதற்கு பனை மரங்களும் தேங்காய் மரங்களும் எண்ணிக்கையில் அதிகமாய் இருந்தது..
அந்த பகுதிகளை சுத்தி பார்த்தவள் பங்கிற்கு முன் புறம் இருந்த பலவகை பொருட்கள் விற்கும் அங்காடிக்கு சென்று பார்த்தாள்.
அங்கிருந்த ஐந்து பேரும் அவளுக்கு வணக்கம் தெரிவித்தார்கள். பதிலுக்கு வணக்கம் செய்து விட்டு அங்கிருந்த இருப்பையும் தேவை படும் பொருட்களையும் எழுதி வைத்து அதை இரு நாட்களுக்குள் கொண்டு வந்து தருமாறு உரிய ஏஜென்சியிடம் சொல்லிவிட்டு அங்கிருந்த கணக்கு வழக்குகளை பார்க்க ஆரம்பித்தாள்.
இங்கு கடன் என்பதற்கு வேலை இல்லை என்பதால் விரைவாகவே முடிந்தது வேலை...
மத்தியம் இரண்டு மணி போல வெளி வந்தவள் மீண்டும் பங்கிற்கு வந்து அங்கு அமர்ந்து பாவனியை அழைத்து சிரித்து நேரம் பேசியவள் அவர்களை சாப்பிட சொல்லிவிட்டு வீடு வந்து சேர்ந்தாள்.
அவள் வீடு வரும் பாதையில் தென்பட்ட அழகிய இயற்க்கை காட்ச்சிகளை நோட்டமிட்டுக்கொண்டே வந்தாள்.
இரு பக்கமும் ஓங்கி உயர்ந்த சவுக்கு மரங்களும் ஆங்காங்கே சோலை கொள்ளைகளும் தென்பட்டது கூடவே சாலை ஓரம் அழகாய் விரிந்து பறந்து பூக்கள் பூத்து இருந்தது பெயர் தெரியாத விருட்ச்சங்கள்..
அதை ரசித்த படி வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றாள். வீட்டுக்கு வந்து சற்று நேரம் தூங்கியவள் பின் எழுந்து முகம் கழுவிக்கொண்டு சாப்பிட்டுவிட்டு மறுபடியும் பங்கிற்கு சென்றாள்.
சென்றவள் மறுபடியும் ஒரு வட்டம் சுற்றி பார்த்துவிட்டு இருக்கையில் அமர்ந்து பணம் வாங்க வேண்டி இருப்பவர்களுக்கு போன் செய்து கொடுக்குமாறு சொல்லிவிட்டு இருக்கையில் கண் மூடி சாய்ந்தாள்.
மூடிய இமைகளின் ஒரு உருவம் தெரிய அடித்து பிடித்துக்கொண்டு எழுந்தாள்.
நிதானமும் நேர்மையும்
நிதம் தொடரும் வேலை
நித்திரைகளும் உன் நினைவு
நிதம் என்னை துரத்துதே
யாரா அந்த பையா????