“நாளைக்கு டெஸ்ட்டை வச்சுக்கிட்டு ஓபி அடிக்க வர்றியா? போய் படி...” என்று துரத்தியவனையும் ஜிம்முக்கு துரத்தி விட்டவள் தன் தந்தைக்கு கைகால் அழுத்தி விட்டு அவருடன் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருந்தாள்.
அப்பொழுது தான் தங்களது அலுவலகத்தில் ஏற்பாடு செய்திருந்த உல்லாச பயணத்தை பற்றி சொன்னாள்.
சர்வாவின் நிறுவனத்தில் வருடம் தோறும் உல்லாச பயணம் ஏற்பாடு செய்யப்படும். இந்த வருடமும் அதை அறிவித்து இருந்தார்கள். அதில் ஃபேமிலியாக கலந்து கொள்ளலாம் என்று சொல்லவும் நிபந்தனையின் பேரில் ஒரு குடும்பத்திற்கு மொத்தம் ஐந்து பேர் என்கிற கணக்கு சொல்லப்பட்டிருக்க அதை தான் தன் தந்தையிடம் சொன்னாள்.
கிருஷ்ணனுக்கு பெரிதாக அதில் விருப்பமில்லை. அவரது நிறுவன சார்பில் எத்தனையோ உல்லாச பயணங்களை இவர் ஏற்பாடு செய்திருப்பார். ஆனால் இன்று யாரோ ஒருவர் குடுக்கும் சலுகையில் தான் போக வேண்டுமா என்று மனம் அவரை அறுத்துப் போட வேதனையுடன் வேண்டாம் என்றார். அந்த நேரம் சரியாக மிருவும் கார்த்தியும் வர...
அவர்களிடமும் இதுபோல என்று விசயத்தை சொல்ல மிருவுக்கு கண்களில் ஒரு மின்னல் வந்து போனது. அதை விட கார்த்திக்கு முகம் முழுவதும் ஆசையின் சாயல் தெரிய சகி இருவரின் முகத்தையும் தன் தந்தைக்கு கண் சாடைக் காட்டினாள்.
அதை கண்ட கிருஷ்ணனுக்கு பெருமூச்சு எழுந்தது. யாருக்காக இல்லை என்றாலும் கார்த்திக்குகாகவாவது போய் ஆக வேண்டும் என்று கண்களை மூடி தன் மகளுக்கு சம்மதம் சொன்னார்.
“ஆனா அப்பாவுக்கு இதுல விருப்பம் இல்லடா...” என்று மிருவை பார்த்து சகி சொல்ல,
"ப்ளீஸ் ப்பா... நம்ம தனியா அவ்வளவு தூரம் செலவு செய்து போக முடியாது. நம்ம இருக்கிற சூழ்நிலையில டூர் எல்லாம் நினைச்சிக் கூட பார்க்க முடியாது… அதுவும் ஊட்டி வேற… பேமிலியா போகவே முடியாது நம்ம பட்ஜெட்ல… ப்ளீஸ் ப்பா ஒகே சொல்லுங்க. நாம எல்லாரும் சேர்ந்து போலாம் அக்கா… நீ சொன்னா அப்பா கேட்பாங்க... அதுவும் நம்ம நாலு பேரும் ப்ளீஸ் ப்ளீஸ்…" என்று மிரு கெஞ்ச, சகி திரும்பி தன் தந்தையை பார்த்தாள்.
அவர் சம்மதமாய் சிரிக்க அனைவரும் ஊருக்கு கிளம்பினார்கள் உற்சாகத்துடன். உல்லாச பயணம் மிக அருமையாக ஆரம்பித்தது. அந்த ட்ரிப்பில் தனியாக சர்வாவும் வந்திருந்தான் தன் பிள்ளைகளுடன். இவர்களுக்கெல்லாம் ஹோட்டலில் தங்க ஏற்பாடு செய்திருந்தவன் அவனுக்கு மட்டும் தனியாக கெஸ்ட் ஹவுஸ் ஏற்பாடு பண்ணிக் கொண்டான். அதோடு இல்லாமல் அங்கு சில முக்கிய மீட்டிங்கும் ஏற்பாடு செய்திருந்ததால் சர்வாவோடு சகியும் கிரியும் வர வேண்டி இருந்தது.
அதனால் சகி காலையிலையே கிளம்பி சர்வாவின் கெஸ்ட்ஹவுஸ்க்கு சென்று விடுவாள். கிருஷ்ணான், மிரு, கார்த்திக் மூவரும் மற்றவர்களுடன் சேர்ந்து ஊட்டியை சுற்றிப் பார்த்துக் கொண்டு இருந்தார்கள். கிட்டத்தட்ட அந்த ஏற்பாடு மூன்று நாள் பயணமாக இருந்தது. மூன்று நாளும் சர்வாவுடன் தான் அவளது பொழுதுகள் கழிந்தது. ஏன் எதற்கு என்று அவளால் கேள்வி கேட்கவும் முடியவில்லை. அங்கு வேலை இருப்பது அவளது கண்கூடாக தெரிய அவளால் எதுவும் சொல்ல முடியாமல் வேலையை மட்டும் பார்க்க முயன்றாள்.
ஆனால் அவளது வேலையை கெடுக்க வென்று அவனது பிள்ளைகள் இரண்டும் இருக்க அவளால் வேலை செய்ய இயலாமல் போனது. அதை பெரிதாக கண்டு கொள்ளவும் இல்லை சர்வா. ‘இதற்கு பேசாமல் கேர் டேக்கரையாவது இந்த அறைக்குள் உள்ளே விட்டு இருக்க வேண்டியது தானே...!’ என்று அவள் முணகினாள்.
ஆனால் அதை காதல் வாங்கிக் கொண்டும் கேட்காதவன் போல கடந்து சென்று விட்டான். அவனது எண்ணங்களில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் ஒரு கணம் அவனைக் கூர்ந்து நோக்கினாள். இது இப்படியே தொடர்வது நல்லதர்கல்ல என்று அவளது உள் மனம் எச்சரிக்க பிள்ளைகளிடம் சற்று கடுமையாகவே நடந்து கொள்ள வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வந்தாள்.
உல்லாசப் பயணம் வந்து இதோடு இரண்டாம் நாள் தொடங்கியது. அன்றும் அதுபோல பிள்ளைகள் அவளுடன் ஒண்டிக்கொள்ள பார்க்க பிள்ளைகளை அழைத்து கேட்டக்கரிடம் ஒப்படைத்தவள்,
“இனி நீங்க பார்த்துக்கோங்க எனக்கு ஆபீஸ்ல முக்கியமான வேலை இருக்கு. சோ என்னால பிள்ளைகளை கவனித்துக் கொள்ள முடியாது. அவங்களுக்கு என்ன வேண்டுமோ அதை பார்த்து செய்ங்க.... இன்னும் இரண்டு பேரும் சாப்பிடலன்னு நினைக்கிறேன். இரண்டு பேருடைய வயிறும் ஒட்டிப் போய் கிடக்கு...” என்று கேட்டகரிடம் சொல்லியவள் பிள்ளைகளின் புறம் திரும்பி,
“நீங்க வெளியில விளையாடுங்க. எனக்கு இங்க ஒரு முக்கியமான வேலை இருக்கு. அதனால தொந்தரவு பண்ண வேண்டாம்...” என்று ஆதுவிடம் சற்று கடுமையாகவே பேசிவிட்டு திரும்ப எதிலோ மோதி தடுமாறி நிற்க,
என்ன இது நடு பாதையில... என்று நிமிர்ந்து பார்க்க சர்வா தான் பனைமரம் போல விரைப்பாக நின்று கொண்டு இருந்தான்.
அவனது முகத்தில் இருந்த கடுமை எதற்கு என நன்கு புரிந்தாலும் புரியாதவள் போல அவனை ஒரு முறை முறைத்தவள் அவனை தாண்டிப் போக முயன்றாள். போனவளின் கரங்களை பிடித்து நிறுத்தியவன்,
“இப்படி தான் பிள்ளைகள் கிட்ட பேசுவியா? கொஞ்சம் கூட தன்மையா பேச முடியாதா? அதுவும் எம்டியோட பிள்ளைகள்னு கொஞ்சம் கூட மரியாதை இல்லையா?” என்று அவன் கோவத்தோடு பேச, அவனது கரத்தில் இருந்த தன் கரத்தை முறைத்துப் பார்த்தாள்.
அதை அவன் கண்டு கொண்டால் தானே. கண்டு கொண்டாலும் அவளது கையை விட்டு இருக்க மாட்டான் இந்த பிடிவாதக் காரன்.
“அதே தான் மிஸ்டர் நானும் சொல்றேன். நான் ஒண்ணும் உங்க பிள்ளையை பார்த்துக்க இங்க வரல. நான் உங்க பியேவா வேலை பார்க்க வந்து இருக்கேன். ஐ ஆம் நாட் பார் சைல்ட் கேர் டேக்கர்...” சற்று கடுமையாகவே பேசியவள் அவனது கரத்தில் இருந்து தன் கரத்தை விடுவிக்க கையை ஆட்டி ஆட்டி அசைத்து அசைத்துப் பார்த்தாள்.. அவன் விடவே இல்லை.
“அது உனக்கு இப்போ தான் தெரியுமா? நீ வேலைக்கு வந்த அடுத்த நாளில் இருந்து என் பிள்ளைகள் உன் கிட்ட பழகிட்டு இருக்காங்க. அப்போ எல்லாம் தோணாத ஒன்று இன்றைக்கு தோணி இருக்குன்னா என்ன அர்த்தம்...?” சர்வா விடாமல் அவளை கார்னர் பண்ணினான்.
“லுக் மிஸ்டர் சர்வேஸ்வரன்... என்னை ஆராய்ச்சி பண்ற வேலையை விட்டு பைலை பார்த்து சைன் பண்ணி குடுத்தா அடுத்த பிராசசை ஸ்டார்ட் பண்ணுவேன்...” என்றாள் கொஞ்சம் கூட வளைந்துக் கொடுக்காமல்.
“ஹேய்... நான் என்ன சொல்றேன் நீ என்ன பேசிக்கிட்டு இருக்க...” என்று அவளை கொலைவெறியோடு பார்த்தான்.
“நான் என் வேலையில கவனமா தான் இருக்கேன். நீங்க தான் என்னை டிஸ்டப் பண்ற மாதிரி ஏதோ ஒரு வகையில் என்னை லாக் பண்ண பார்க்குறீங்க... உங்க எண்ணங்களை என் கிட்ட துணிக்காதீங்க... அதுக்கு நான் ஆள் இல்லை..” என்றாள் கடுமையாகவே.
“உன்னை வேலைக்கு எடுக்கும் பொழுதே நான் போட்ட கண்டிஷனை நீ மறந்துட்டியா ச....கி...” மிக அழுத்தமாக அவளது பெயரை உச்சரித்தான் சர்வா. அவனது வாயிலிருந்து வந்த சகி என்கிற ஒற்றை வார்த்தை தன்னை ஏன் இந்த அளவுக்கு பாதிக்கிறது என்று தன்னையே நொந்துக் கொண்டவள்,
“முதல்ல என் கையை விடுங்க. இது போல தொட்டு பேசுற வேலையெல்லாம் வேணாம்... உங்க மோட்டிவேஷன் என்னன்னு எனக்கு புரியல. ஆனா என்னை எதிலோ சிக்க வைக்க நினைக்கிறீங்கன்னு நல்லா புரியது... சோ நீங்க ஆடுற கேம்ல நான் வெறும் செஸ் காயினா இருக்க விரும்பல..” என்றவளின் புத்தி கூர்மையை மேச்சியவன், வேண்டுமானளவு அவளது கரத்தில் அழுத்தம் கொடுத்து ஒரு பிடி பிடித்தவன், அதன் பிறகு அவளது கரத்தை விட்டுவிட்டு தன் பிடியில் சிவந்து போன அவளது கரத்தை இரசித்த படியே,
“உன்னை வெறும் சோல்ஜர் காயினா இருக்க சொல்லல... கிங்குக்கே பவர் கொடுக்குற குயினா இருன்னு சொன்னா கூட ஆட்டத்துக்கு வர மாட்டியா ச...கி....” என்று ஒற்றை புருவத்தை தூக்கி கேட்க, அவன் சொல்ல வந்த விசயத்தை கேட்டு திகைத்துப் போனாள். அதை விட அவனது பிடியும், அவனது பிடியினால் வந்த வலியும், வலியோடு கன்றி போய் இருந்த இடத்தையும் தன்னுள் மிக ஆழமாக உணர்ந்தவள் இன்னும் திடுக்கிட்டுப் போனாள்.
அதோடு அவன் சரியாக தான் பேசினானா என்று அவனை அதிர்ந்துப் போய் பார்த்தாள். அவனது தோரணையான உருவம் கண்டு இவன் தன்னை வம்பிழுக்கவே இப்படி தேவை இல்லாததை எல்லாம் பேசிக் கொண்டு இருக்கிறான் என்று உணர்ந்தவள்,
“நான் யாருக்கும் ராணியா இருக்க விரும்பல.. என் அப்பாவுக்கு ப்ரின்சசா இருக்க தான் ஆசை. சோ லீவிட்...” என்றவள்,
“எனக்கு இன்னைக்கு இதுக்கு மேல வேலை செய்ய முடியாது... நான் போய் ஊட்டியை சுத்தி பார்க்க போறேன்” என்றவள் தன் கை பையை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டாள்.






