அத்தியாயம் 11
பெருகிய கோவத்தை அடக்க முடியாமல் திணறிக்கொண்டிருந்தவன் தூரத்தில் ரவி அந்த நிலத்திற்கு சொந்தமான பாட்டியை கொஞ்சி கொண்டு நிற்பதை கண்டவனின் ஆத்திரம் லேசாய் மட்டு பட்டது...
ஆனால் முழுமையாய் போகவில்லை... அது போகவும் போகாது.. எப்போ முழுமையாய் அவனுடைய ‘ரீகா’ நதி அவனோடு ஒன்றாக கலந்து சங்கமம் ஆகி இனி பிரிவே இல்லை என்று சொல்வாளோ அப்போது தான் அவனுடைய கோவம் ஆத்திரம் எல்லாம் தீரும் அதுவரை சாம்பல் பூத்த நெருப்பு போல அது அணையாமல் அவனுள் இருந்து அவனையும் பொசுக்கி, அவளையும் சுட்டு குளிர் காய்ந்துக்கொண்டு இருக்கும்..
அதன் பிறகு ராயரின் முகத்தில் அவள் விழிக்கவே இல்லை... அவன் இருக்கும் இடம் அறிந்து அவ்விடத்திற்கு செல்லாமல் தன்னை காத்துக்கொண்டாள் அவன் குத்தும் பார்வையிலிருந்து.. அவளது இந்த ஆட்டத்தை கண்டு ராயர் பல்லை கடித்தான். இன்னும் ஒரு பொழுது தான் அவன் இங்கு இருப்பன். அதன் பிறகு அவன் வேலைக்கு செல்ல வேண்டும். அவளோ அவனை நெருங்கவே விட மாட்டேன் என்று பிடிவாதத்துடன் இருந்தாள்.
மாமா வேறு கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று இருக்க, என்ன செய்வது என்று அவனுக்கு ஒன்றும் புரியவில்லை.
நாளைய பொழுது அந்த கார்த்திக்கும் வந்து விடுவான். இன்றைக்கே அவளை பார்த்து பேசினால் தான் உண்டு.. நாளய பொழுது கணக்கில் வராது.. கோவில் குளம் என்று சுற்றவே சரியாய் இருக்கும் என்று யோசித்தவன் இன்றைய இரவு பொழுதை அவளுடன் கழிக்க முடிவெடுத்தான்.
அவனது எண்ணத்தை உணராமல் அவனுடைய ரீகா இங்கே உள்ளத்தால் மடிந்து கொண்டிருந்தாள்.
“நீ திருந்தி இருப்பன்னு நினைச்சேன். ஆனா நீ அதே காட்டு மிராண்டி தான்னு எனக்கு மறுபடியும் புரிய வச்சுட்டடா... வலிக்குது டா..” அன்றைய அவளது வலிகள் இன்னும் பச்சை ரணமாய் அவளை வலிக்க செய்ய உயிர் துடித்து போனாள்.
‘அவனை போல அன்பு காட்டவும் முடியாது.. அதே போல தன்னை சிதைக்கவும் வேறு யாராலும் முடியாது.. அவன் ஒருவன் தான் அவளது ஜனனமாகவும் மரணமாகவும் இருக்கிறான்’ என்று உணர்ந்தவளின் கண்களில் கண்ணீர் மட்டுமே சொந்தமாய் இருந்தது அவளுக்கு.
இரவு உணவுக்கு கீழே வந்தவளை கண்டவனின் நெஞ்சில் வலி எழுந்தது.. ஆனாலும் அதை அவளிடம் காட்டிக்கொல்லாமல் அவனது பார்வை அவளிடமே சுற்றியது..
சிவந்த கண்களை கொண்டே அவள் வெகுநேரம் அழுதிருக்கிறாள் என்ற உண்மை புரிந்தது.. எல்லோரும் காரணம் கேட்க ‘தலைவலி கொஞ்சம் படுத்தேன் கண்கள் சிவந்து விட்டது’ என்று மென்மையாய் சிரித்தவள் அதிகம் யாருடனும் பேசவில்லை.
ரவிக்கு அவளின் முகத்தை பார்த்து மனம் சங்கடாமாய் இருந்தது..
யாரும் கவனிக்கா வண்ணம் “மாமா ஏதாவது சொல்லிடுச்சா” என்று தன்மையாய் கேட்டவனை கண்டு உள்ளம் பொங்கியது.. அதில் கண்களும் கலங்க “இல்லை” என்று தலையாட்டிவிட்டு கீழே குனிந்துக்கொண்டாள்.
அவளது கலங்கிய கண்களை கண்டு மனசு லேசாய் கணத்துபோனது ரவிக்கு..
அவளை காணுகையில் ஏதோ ஒரு சொந்தம் மனசுக்கு நெருக்கமானவள் போலவே அவன் உணர்ந்தான். ஏன் இப்படி எதனால என்றெல்லாம் அவனுக்கு தெரியவில்லை.. ஆனாலும் திகம்பரியை அவனுக்கு ரொம்ப பிடித்திருந்தது..
இரண்டு இட்டலியை கடினப்பட்டு விழுங்கியவள் தூக்கம் வருது என்றபடி பொதுவில் சொல்லிவிட்டு போக, அவளின் பின்னாடியே போக துருதுருத்த காலை அடக்கியபடி சபையில் அமர்ந்திருந்தான் ராயர்.
அவனின் போராட்டத்தை கண்ட ரவிக்கு ‘இப்போ எதுக்கு இந்த ஆளு இப்படி துள்ளிக்கிட்டு இருக்குறாரு.. அந்த பொண்ணுகிட்ட பேசி அழவச்சதெல்லாம் பத்தாதா.. இன்னும் எதுக்கு அதை நோகடிக்க பார்க்கிறாரு.. அந்த புள்ளைய இந்தாளு கிட்ட இருந்து காப்பாத்தணுமே..’ மதியை கவனித்தவன் அவள் சாப்பிட்டு முடித்து இருக்க அவளை லேசாய் உலுப்பி கண் ஜாடையாய் ரவி திகம்பரியை காட்ட
“என்ன” அவளும் ரகசியமாய் புருவத்தை தூக்கி கேட்க... ‘திகம்பரி’ என்று மெல்ல வாயசைத்து சொல்லி ‘போ’ என்றான். எதுக்கு என்று அவள் கேட்க “போடி” என்று அதட்ட “ம்ஹும்” என்று நொடித்துக்கொண்டே கைகளை கழுவிக்கொண்டு திகம்பரி இருந்த அறைக்கு சென்று பார்க்க அவள் மெத்தையின் ஓரம் சுருண்டு படுத்திருந்தாள்.
“அக்கா” மெல்ல அழைத்து பார்க்க
“சொல்லு மதி” என்றவள் விழிகளை அவள் புறமாய் வீசினாள்.
“ரொம்ப முடியலையா கா, நான் வேணா மாத்திரை ஏதாவது தரவா...” ஆதரவாய் கேட்டவளை கண்டு கண்ணீர் வந்து விடுமோ என்று அஞ்சியவள்
“எனக்கு அந்த பழக்கம் இல்ல மதி... நல்லா தூங்குனா சரியாயிடும்.. வா நீ வந்து படு” என்றவள் திரும்பி கண்களை மூடிக்கொண்டாள்.
மதியும் கதவை தாளிட்டு விட்டு தூங்க வந்தாள்.
திகம்பரியிடம் பேசுவதற்காக இருந்த ராயருக்கு அவளின் இந்த செயல் பிடிக்கவில்லை.. “எப்படி நீ என்கிட்டே இருந்து தப்பிக்கிறன்னு நான் பார்க்குறேன்” என்று கருவிக்கொண்டவன் கொக்கு போல அவனது சிந்தனை முழுவதும் ரீகா என்ற மீனுக்காக காத்திருந்தது.
அந்த மீன் அவனின் சொற்களில் காயம் பட்டு வேதனையுடன் விழிகளில் நீரை பாய்த்துக்கொண்டிருந்தது.
“கிட்ட தட்ட மூணு நாலு வருடங்கள் பிரிந்து இருந்தாச்சு... இந்த இடைப்பட்ட நாளில் நடந்த நிகழ்வுகளை பத்தி கொஞ்சமும் யோசிக்காமல் அவனுக்கு என்ன வேணுமோ அதை மட்டும் தான் அவன் பார்த்து கொள்ளுகிறான். குழந்தை என்ன ஆச்சுன்னு என்று ஒரு வார்த்தை கூட இன்னும் கேட்கவில்லை. அதே பிடிவாதம்.. அதே மூர்க்க குணம்..“ மனசுக்குள் ஒரு வேதனை குளிர் போல் படர.. “நான் இங்கே வந்திருக்கவே கூடாதுன்னு இப்போ தோணுது ராய்...
நீ என்னைக்கும் மாற போவது இல்லை... நான் தான் உன்னிடம் ஒவ்வொரு முறையும் முட்டி மோதி என் காதலை யாசித்து என்னை நிருபிக்க அலைந்து கொண்டிருக்கிறேன்.. ஆனால் நீ.. நீ இன்னும் உன் கெத்தை விட்டு ஒரு இம்மி அளவு கூட வெளிய வரல...” என்று அவனது குணங்ககளை அலசிக்கொண்டே தூங்கி போனாள்.
--
அடுத்த நாள் காலை எழும்போதே ஒரு வித அவஸ்த்தையாகவே இருந்தது திகம்பரிக்கு.. ராயரை எப்படி எதிர்கொல்லுவது என்று அச்சமாகவே இருந்தது.. அவனது கண் பார்வையில் இன்னைக்கும் பட கூடாது என்று முடிவெடுத்தாலும் உள்ளுக்குள் உதறல் எடுத்தது..
அவனிடம் மட்டும் அவளது சாமார்த்தியங்கள் அனைத்தும் எப்போதும் தவிடு பொடிதான். அவன் ஒன்று நினைத்துவிட்டால் அதை அடைய என்ன வேணும் என்றாலும் செய்வான். அவனது இந்த தீரம் தான் அவளை பெரும்பாலும் கலங்க செய்யும்.
சொன்னால் சொல் பேச்சும் கேட்கும் குழந்தையா அது... சரியான அராத்து... திட்டுவது போல அவனது காதலின் அவஸ்த்தையை கொஞ்சியும் கொண்டாள்..
அவனை முழுமையாக வெறுக்க முடியவில்லை... மனம் முழுவதும் நிறைந்து போய் இருப்பவன் அவன் தானே... அவனை எங்கனம் வெறுக்க முடியும்.. அவனை வெறுக்க ஆரம்பித்துவிட்டால்.... ம்ஹும் அந்த எண்ணம் கூட அவளது நெஞ்சில் உதிக்காது.. அவ்வளவு ராய் பித்து பிடித்தவள்..
அவனது செயல்களில் மனம் வருத்த படுவாளே தவிர அவனை ஒரு நொடியேனும் வெறுத்தது கிடையாது... அவனை வெறுத்து விட்டால் இந்த ஆன்மா அழிந்து தன் சுயத்தை இழந்தால் மட்டுமே அது சாத்தியமாக கூடும்..
ஜென்ம ஜென்மங்களுக்கும் தொடரும் உறவு... அவனது உறவு... அவனது காதல் தீவிரத்தை கண்டு தான் உள்ளுக்குள் பயந்து போனாள்.
எப்படியும் இன்று அவன் வசம் சிக்கினால் தன்னை ஒருவழி ஆக்கிவிடுவான் என்ற நிதர்சனம் தெரிந்துவைத்திருந்தவளின் சிந்தனை முழுவதும் ராயரிடமே இருந்தது.
தன்னை பற்றி தெரிந்துகொள்ளாமல் ஆதரவு தரும் தில்லையும் மதியும் அவளுக்கு தடுப்பு சுவர் தான்.. ஆனாலும் சில சமயம் அவர்களையும் மீறி ராய் அவளை கைவச படுத்த தானே செய்கிறான்..
எனக்கு இப்போதைக்கு அவனின் நிழல் கூட வேணாம் என்ற நிலையில் இருந்தாள். இப்போதே கிளம்பி போய் விடலாமா என்ற எண்ணம் கூட அதிவேகமாய் வளர, அதை அடக்கியபடி...
குளித்து கீழே வர அங்கிருந்த கார்த்திக் அவளை ஆவலுடன் வர வேற்க்க அதுவரை இருந்த நிலை மாறிபோய் தன் இயல்புக்கு திரும்பினாள்... தன்னை முட்டும் முழுதும் உணரந்த அறிந்த நேசம் அல்லவா அவனுடையது.. அதுவும் கலப்படமில்லா தூய அன்பு எத்தனையோ இக்கட்டிலிருந்து காப்பாத்தி கை தூக்கி விட்டு உறுதுணையாய் நின்ற நேசம் அவனுடையது..
“கார்த்திக்” ஆவலாய் அவனது கையை பற்றிக்கொண்டு “வா” என்று முகம் முழுவதும் புன்னகையுடன் அவனை வர வேற்றாள்.
“நீ மத்தியமா வருவன்னு தானே என் கிட்ட சொன்ன.. இப்போ இந்த காலையில வந்து நிக்குற.. ஏண்டா என் கிட்ட பொய் சொன்ன” என்று அவனது முதுகிலே அடிக்க
“உனக்கு சாக் கொடுக்கலாம்னு தான்..” என்று அவன் கண்ணடிக்க
“போடா நீயும் உன் ஷாக்கும்” என்று அவள் பலிப்பு காட்ட இருவரது சேட்டையயும் காதில் புகையோடும் வயிற்றில் கங்கோடும் பார்த்தான் ராயர்.
அவனது பார்வையை இருவரும் கண்டுக்கொள்ள வில்லை.. “வனா நீ போய் கூட்டிட்டு வந்தியா...”
“ஆமா திகம்பரி”
“என்னையும் கூப்பிட்டு இருந்திருக்கலாம்ல நானும் வந்திருப்பேன்” என்று குறை பட
“ஏய் இதுல என்ன இருக்கு... விடு நீ எப்படி இருக்குற” அவளை நலம் விசாரிக்க
“எனக்கென்ன நான் நல்லா இருக்கேன், அப்பா எப்படி இருக்காங்க போய் பார்த்தியா”
“ம்ம் உன்னை பார்க்கனும்னு சொன்னாங்க எப்போ போற”
“ம்ம் இந்த வாரம் போய்டுவேன்னு நினைக்குறேன்... அங்க போய் அப்பாவோட தான் கொஞ்ச நாள் தங்கணும்”
“அப்போ சரி” என்றவன் அவள் புறம் சரிந்து ஏதோ ரகசியம் பேச அதை பார்த்துக்கொண்டிருந்த ராயரால் சுத்தமாக முடியவில்லை.. அதுவும் கோவிலுக்கு போவதற்காக தலை குளித்து புடவை கட்டியிருக்க அவளது எழிலோவியமான வனப்பு அவனை மேலும் கிறங்கடிக்க அந்த மயக்கம் கூட ராயரை சினம் கொள்ள வைத்தது..
‘இந்த அழகை என்கிட்டே இல்ல இவ காமிக்கணும்... இவ எதுக்கு அவன் கிட்ட உட்கார்ந்து அவன் கிட்ட பேசணும்’ என்று மனம் சண்டி தனம் செய்ய பெருகிய கோவத்தை கட்டுபடுத்த முடியாமல் பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான்.
அவளிடம் தன் கோவத்தை காமிப்பதர்க்காக நேரத்தை எதிர் பார்த்துக்கொண்டிருந்தான் சிங்கமாய்.
அவன் கிட்ட சிக்கவே கூடாது என்று இந்த புள்ளி மான் மிகவும் கவனமாய் இருக்க... அதை கண்டும் சிங்கத்துக்கு கோவம் பெருகியதே தவிர குறைந்த பாட்டை காணோம்..
பசியில் இருக்கும் விலங்கின் வேகத்தை விட உயிருக்காக போராடும் விலங்கின் வேகம் அதிகம் தானே... ரீகா... அந்த உயிருக்காக போராடும் மான் வகையை சேர்ந்தவளாய் இருந்தாள்.
ராயரிடம் மாட்டி மேலும் தன்னை வறுத்தி கொள்ள வைக்கும் சூழ்நிலை வேண்டாம்.. மறுபடியும் அவனது கோவத்தை தாங்கும் வலிமை தன்னிடம் இல்லை என்பதை நன்கு புரிந்து வைத்திருந்தவள்... அவன் காட்டும் கோவத்தில் எங்கே அவனை வெருத்துவிடுவமோ என்று பயந்து போனாள்.
அதனாலே திகம்பரி கார்த்திக் என்னும் கவசத்தை கொண்டு தன்னை பாதுகாத்துக்கொண்டாள்... ஆனால் அவளுக்கு தெரியுமே ராயரின் வல்லமை... உள்ளுக்குள் குளிர் பிறந்தது தான்.. இருந்தாலும் போகும் வரை போகலாம் என்று எண்ணிக்கொண்டு அவனை விட்டு தள்ளியே இருந்தாள்.
கார்த்திக் குளிக்க சென்றிருக்க மற்றவர்கள் கோவிலுக்கு போவதற்காக எல்லா பொருட்களையும் சிறிய வேனில் எடுத்துவைத்து கொண்டிருந்தார்கள். கூட மாடா உதவிய படி திகம்பரியும் அலைந்துக்கொண்டிருந்தாள்.
ராயர் சிந்தனை எங்கும் தன் ரீகாவை பற்றியே இருந்தது. கைகளில் தாளம் போட்டுக்கொண்டே விழிகளை அலைய விட்டவன் தாம்புலத்தை எடுத்துக்கொண்டு சென்ற திகம்பரியை கண்டவன் அவனும் கைக்கு கிடைத்த ஒன்றை எடுத்துக்கொண்டு அவள் பின்னாடியே வேனுக்கு சென்றான்..
அவன் பின்னடி வருவது புரிய சுற்றிலும் ஆட்கள் இருந்தாலும் திகம்பரிக்கு பக்கென்று இருந்தது..
‘கடவுளே இந்த ஒரு வாரம் மட்டும் என்னை இவன் கையில சிக்க விடாம என்னை காப்பாத்து.. அதுக்கு பிறகு இவன் கிட்டவே வர மாட்டேன்... இவன் சொற்களை தாங்கும் வலிமை எனக்கு இல்ல...’ மன்றாடல் வைத்தவளை கொஞ்சமும் கண்டுகொள்ளாமல் ராய் சுற்றி ஒரு பார்வை பார்த்தவன் யாரும் கவனிக்கா நேரம் சட்டென்று அவளை அருகில் இருந்த வைக்கோல் போருக்கு இழுத்துக்கொண்டு சென்றான்.
“ராய் ப்ளீஸ் விடுங்க... நான் வர மாட்டேன்” என்று அவன் பிடியிலிருந்து விலக பார்க்க தன் கை பிடியை இன்னும் அழுத்தி பிடித்தவன்
“ஒழுங்கா வந்து சேரு.. இல்ல தூக்கிகிட்டு போகட்டுமா..” உருமியவன் அவளை தூக்க பார்க்க அதில் மிரண்டவள்
“இல்ல நானே வரேன்” என்று சுத்தி முத்தி பார்க்க தில்லை வந்து கொண்டிருப்பதை பார்த்தவள் அவனுக்கு முன்னே அவனை இழுத்துக்கொண்டு அந்த வைக்கோல் போரில் மறைந்து நின்றுக்கொண்டு எட்டிப்பார்த்தாள்.
அவளின் செயலை கண்டு அவள் பார்த்த திசையை பார்த்தவன் எட்டிப்பார்த்த அவளது தலையை வெடுக்கென்று இழுத்து தன்னை பார்க்க வைத்தான்.
“என்னை பாருடி, அங்க என்ன பார்வை...” கோவத்தில் கர்ஜிக்க
“ப்ச்... கொஞ்ச நேரம் பேசாம இருங்க” ரகசியமாய் சொல்ல
“அடச்சீ இங்க பாருடி” அவள் கவனத்தை தன் பக்கம் திருப்பியவன் அவளை ஆத்திரத்தோடு பார்த்து வைக்க திகம்பரிக்கு முதுகு தண்ட்டில் மின்னல் வெட்டியது...
“அய்யய்யோ கொத்தா மாட்டிகிட்டனே..” உள்ளம் கூப்பாடு போட திகைத்து விழித்தாள்.
“என்னடி திமுரா எனக்கு முன்னாடியே அவன் கிட்ட கொஞ்சிகிட்டு இருக்க.. அவன் என்னமோ உன்கிட்ட ரொம்ப தான் உருகுறான்.. அவன் கிட்ட தள்ளியே இரு இல்ல அவன் முழுசா ஊரு போய் சேர மாட்டன் பார்த்துக்க..” என்று எச்சரித்தவனை
“ஏன் இப்படி பொருக்கி மாதிரி பேசுறீங்க...” என்றவளின் பேச்சில் அவனது சினம் அதிகமாக
“யாருடி பொருக்கி, நானா.. நான் பொருக்கியா....” கழுத்து எலும்புகள் புடைக்க கர்ஜிக்க சட்டென்று அவனது வாயை பொத்தினாள் கலவரத்துடன்.
“ஏங்க இப்படி என்னை படுத்துறீங்க” என்றவள் அவனது சத்தம் கேட்டு யாராவது வந்து விடுவார்களோ என்று பயந்து சுத்திலும் பார்க்க, அவள் தன்னை அலட்ச்சியம் செய்கிறாள் என்று அவன் நினைக்க, திகம்பரியை பார்த்தி விதி சிரித்தது..
அவளின் தலை முடியை கொத்தாக பற்றியவன் தன் முகத்துக்கு நேரே அவளின் முகத்தை கொண்டு வந்து வலிக்குமாறு பிடித்து
“என்னடி என்னை உன் பின்னாடி அலையை வைக்குரியா... அது இந்த ராயர் கிட்ட நடக்காது.. நீயா என்னை தேடி வரணும்... வர வைக்காவா...” ஆண் என்ற திமிருடன் சொன்னவனை கண்டு உள்ளம் நைந்து போனாள்.
“ஏன் மாமா இப்படி பேசுறீங்க” உடைந்து போய் கேட்டவளுக்கு கொஞ்சமும் இளகாமல் “நான் யாருடி உனக்கு...” என்று எகத்தாளத்துடன் கேட்டவனுக்கு திகம்பரி எந்த பதிலும் சொல்லவில்லை..
“சொல்லுடி” என்று இன்னும் இறுக்கி பிடிக்க கண்களில் இருந்து கண்ணீர் வந்தது அவளுக்கு..
“சொல்ல மாட்டல்ல... நீ எப்படி இன்னைக்கு கோவிலுக்கு போறன்னு நான் பார்த்தர்றேன், இன்னைக்கு முழுசும் என் கூட தான் நீ வா..” என்றவன் அவள் யோசிக்கும் முன்னவே அவளின் கூந்தல் அலங்காரத்தை கலைத்துவிட்டு சூடி இருந்த பூக்களை பிய்த்து எரிந்து அவளின் முந்தானையில் கைவைத்து இழுக்க குத்தியிருந்த பின் தெறித்து எங்கோ விழ முந்தானை முழுவதும் அவன் வசமாகி இருந்தது..
அவனது செயலில் முற்றிலும் நிலைகுலைந்து போனவள் அவனிடமிருந்து தன் முந்தானையை பறிக்க பார்க்க அது லேசில் வரவில்லை... “விடுங்க மாமா” கெஞ்சலாய் கேட்டு பார்த்தாள்.
அவனோ கொஞ்சமும் மசியாமல் இறுக்கி பிடித்த நிலையிலே நின்று அவளை ஏளனமாய் பார்க்க அவனது பார்வையை தாங்க முடியாமல் கூனி குறுகி கால்களை மடித்து அந்த வைக்கோல் போரின் மறைவிலே அமர்ந்தவள் தன் தலையை தன் கால்களுக்குள் புடைத்துக்கொண்டாள் விழிகளில் வலிந்த கண்ணீரோடு...
அத்தியாயம் 12
யாராவது தங்களை இந்த நிலையில் பார்த்தல்.... ஐயோ எங்க வந்து என்ன காரியம் பண்ணிக்கிட்டு இருக்கான்... அவனது முரட்டு தனமான செயலில் அவளது உயிர் துடிதுடித்தது... வெட்டு பட்ட கோழியின் நிலையில் இருந்தாள் திகம்பரி...
யார் கண்ணிலாவது தென்பட்டு விட்டால் மொத்தமும் போச்சே... உள்ளம் கதறி அழ.. முகத்தை துடைத்துக்கொண்டு அவனை ஏறிட்டு பார்த்து
“நான் கோவிலுக்கு போகல... ப்ளீஸ் இப்பவாவது விடுங்க” என்றாள்.
“நம்பலாமா”
“தாராளமா” என்றாள் உணர்வுகள் மறுத்து போய்..
அதை உணர்ந்தாலும் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை..
“ம்ம்” என்றவன் அவளது சேலை முந்தானையை அவள் மீது வீசிவிட்டு “எல்லாரும் போனதுக்கு பிறகு வருவேன் எல்லாத்துக்கும் தயாரா இரு” என்று அர்த்தம் பொதிந்த வார்த்தைகளை வீசிவிட்டு சென்றுவிட்டான்.
அவனது செயல் ஒரு வகையில் அவளை கொன்றது என்றால் இப்போ அவனது சொல் அவளை இன்னொரு வகையில் கொன்றது...
“இதுக்கு மட்டும் தான் நான் வேணுமா மாமா உனக்கு...” வேதனையாய் இருந்தது தன் நிலையை எண்ணி அவளுக்கு...
கசங்கி போன முந்தானையை ஒழுங்கா போட்டு பின் குத்த பார்க்க பின் எங்கேயோ தெறித்து போய் கிடந்தது...
அவள் அழகாய் சரமாய் வைத்திருந்த மலர் சிதைந்து போய் பூக்கள் உதிர்ந்து தனியாக வெறும் நூல் மட்டும் தலையில் தொங்கி கொண்டு இருக்க எல்லாத்தையும் உருவி போட்டு விட்டு நீண்டு இருந்த சடை பின்னல் அவனது முரட்டு பிடியில் கலைந்து போய் இருக்க மொத்தமாய் அவிழ்த்து தூக்கி கொண்டை போட்டுவிட்டு முகத்தை அழுத்தி துடைத்து அழுத சுவடு இல்லாமல் ஆக்கியவள் சரிந்த மாராப்பை மீண்டும் நேராக்கி கொண்டு பின் பக்கமாய் இருந்து வருவது போல வந்தாள்.
அவளை முதலில் பார்த்தது ரவி தான்.. பார்த்தவன் திகைத்து நின்றான். சற்று நேரம் முன்பு தான் அழகிய ஓவியமாய் இருந்தாள். ஆனால் இப்போது களைந்த ஓவியமாய் இருந்தவளை கண்டு இது ராயரின் செயலாய் இருக்குமோ என்று எண்ணி அவனின் மேல் பொல்லா கோவம் வந்தது... ஆனால் அதையும் அவனிடம் காட்ட முடியாதே..
வந்ததிலிருந்து அவனும் பார்த்துகொண்டு தானே இருக்கிறான்.. “எதுக்கு மாமா இவங்க மேல உனக்கு இவ்வளவு வன்மம்.” எண்ணியவன் அதற்க்கு மேல் அங்கே நிற்க முடியாமல் திரும்பி போய்விட்டான்.
அதே நேரம் அங்கு வந்த தில்லை அவளை கண்டு “என்ன மா ஆச்சு ஏன் இப்படி இருக்குற..” அதிர்ச்சியாகி கேட்க..
“அது ஒன்னும் இல்லங்கா நான் கோவிலுக்கு வர கூடாது.. அதுதான் குளிக்க போகலாம்னு தலையை கொண்டை போட்டேன்” என்று சொல்லி அவர்களின் முன்பு காட்சி பொருள் போல நின்றவளுக்கு உடம்பு கூசி போனது... கண்கள் கலங்கி விடுமோ என்று பயந்து போனாள்.
ராயரின் மீது வருத்தம் கூடி கொண்டே போனது.. ஆனாலும் அவனை வெறுக்க முடியவில்லை அவளால்..
“ஏன் நாள் தெரியாதா திகம்பரி”
“தெரியும் கா.. இந்த முறை என்னவோ ஒரு வாரத்துக்கு முன்னாடியே வந்திடுச்சு..” என்று கூசாமல் பொய் சொல்ல
“ஓ.. இப்போ எப்படி கண்ணு உன்னை மட்டும் விட்டுட்டு போறது.. நீயும் வருவனுள்ள நினைச்சேன்” வருத்தபட்டவரை கண்டு அவரின் தோளில் சாய்ந்து அழ வேண்டு போல் தோன்றிய எண்ணத்தை அடக்க முடியாமல் “நான் போய் குளிக்கிறேன் கா” வேகமாய் ஓடிபோனாள் அவர்களிடம் சொன்ன பொய்யை நிருபிப்பதற்காக...
என்ன ஆச்சு என்று மற்றவர் கேட்க தில்லை நாசுக்காக சொல்ல “அந்த பாப்பா மட்டும் எப்படி இருக்கும் தில்லை..“ சிவனாண்டி யோசிக்க
“ம்ம் நாம வேனா அங்க இருக்குற நம்ம வீட்டுல திகம்பரிய தங்க சொல்லிட்டு நாம மட்டும் கோவிலுக்கு போகலாமாங்க” யோசனை சொல்ல
“அதுவும் சரிதான், நீ போய் அந்த பொண்ண ரெடியாக சொல்லு” என்று சொல்ல கேட்டுக்கொண்டிருந்த ராயருக்கு அவள் மீது இன்னும் கோவம் வந்தது... “இவ மட்டும் இன்னைக்கு வரட்டும்.. செத்தடி...” என்று முனங்கியவன் யாரையும் கண்டு கொள்ளாமல் காரில் ஏறி உட்கார்ந்தான்.
கார்த்திக் ஆராய்ச்சியாய் ராயரை பார்க்க ‘நீ பார்த்தா எனக்கென்ன பார்க்காட்டி எனக்கென்ன’ என்ற ரீதியில் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்க அமர்ந்திருந்தான்.
சிறிது நேரத்தில் திகம்பரி தலைக்கு குளித்து விட்டு வர வந்தவளை தில்லையும் மதியும் கிளம்ப சொல்ல
“இல்லக்கா எனக்கு வயிறு ரொம்ப வலிக்குது... இதுல ட்ராவல் பண்ணா இன்னும் பெயின் அதிகம் ஆகும்... நான் சமாளிச்சுகுறேன் கா... அதுவுமில்லாமா நான் உங்களோட வந்தா மறுபடியும் நீங்க எல்லாம் குளிக்கணும்... நான் பார்த்துக்குறேன்... நீங்க நல்ல படியா போயிட்டு வாங்க” என்று வழியனுப்பி வைக்க மனசே இல்லாமல் அவர்கள் கிளம்பி சென்றார்கள்.
இடையில் கார்த்திக் ஆவலுடன் அவளுடன் பேச வர, அதை கண்டு ராயருக்கு இன்னுமின்னும் கோவம் பெருகியது...
அவனை கண்களாலே வேணாம் என்று தடுத்து ராயரை காண்பித்தாள். “ப்ச்” சலித்துக்கொண்டான் அவன்.
“யார பத்தியும் எனக்கு கவலை இல்லை..” என்று முணுமுணுத்தவன் “என்ன சொன்னான் நீ ஏன் அந்த கோலத்துல நின்ன. அவன் வர கூடாதுன்னு சொன்னானா” என்று இவன் அவன் மீது கோவ பட
“ஐயோ ப்ளீஸ் கார்த்திக் புருஞ்சுக்கோ... இதை பார்த்தா அவரு இன்னும் கோவ பாடுவாரு.. நீ கிளம்பேன்” கெஞ்சியவளை கண்டு
“காதல் உன்னை கோலையாக்குது திகம்பரி..”
“எனக்கும் தெரியுது கார்த்திக் எல்லாம் இன்னும் ஒரு வாரம் மட்டும் தான் பிறகு நீ உன்னோட திகம்பரிய பார்ப்ப, இப்போ கிளம்பு” என்றாள் உறுதியாக
“கண்டிப்பா நீ மாறனும். உனக்கு இந்த வாழ்க்கை வேணாம். உனக்காக மிக பெரிய பிசினஸ் வேல்டு காத்துகிட்டு இருக்கு..” என்றான் பின் பாதியை காற்றில் விட்டு.
“எனக்கு தெரியும் கார்த்திக். என்னோட வேர் அங்க தான் இருக்கு... ஆனா இந்த ஒரு வார வாழ்க்கை தான் என் மொத்த வாழ்நாள் எல்லாத்துக்கும் ஆதாரம்.. அதனால முழுமையா இதை நான் அனுபவிக்கனும்..”
“பைத்தியம் புடுச்சுடுச்சு திகம்பரி உனக்கு”
“எஸ்.. ராய் என்னை கொன்னாலும் எனக்கு சம்மதம் தான்.. அவருக்கு நான்னா ரொம்ப பிடிக்கும் தெரியுமா... எல்லாத்தையும் மறந்துடுவார் நான் பக்கத்துல இருந்தா.. அவருக்கு நான் மட்டும் தான் தெரிவேன்... மையின்ட் ப்லோயிங்...
எனக்கு அந்த அன்பு மறுபடியும் வேணும்.. அந்த அன்பை மனசு முழுக்க சுமந்துகிட்டு என் காலத்தை முழுவதும் தனியா நான் ஓட்டிடுவேன்.. நாங்க ரெண்டு பேரும் மறுபடியும் அந்த மாதிரி வாழனும்... எதுக்கும் குறுக்க நிக்காத கார்த்திக் இந்த உதவியும் எனக்காக செய்” என்றவளை கண்டு உள்ளம் வெதும்பி போனது..
“இவ்வளவு அன்பு வைக்க அவன் தகுதியானவன் கிடையாது திகம்பரி..” பல்லை கடித்தான்.
“ம்ஹும்.. தவறு கார்த்திக்... அவரோட அன்பு கிடைச்சதுனாலா தான் நான் இத்தனை வருஷம் உயிரோடு உணர்வோடு வாழ முடுஞ்சது... இல்லையினா நீங்க எல்லாம் திகம்பரிங்குற மிசினை தான் பார்த்துருப்பீங்க..”
“திகம்பரி...”
“உனக்கு தெரியாது நான் அவனோட வாழ்ந்த வாழ்வை பத்தி...” கண்களில் கனவு மின்ன சொன்னவளை கண்டு உள்ளம் நெகிழ்ந்து போனது அவனுக்கு..
“பரி..”
“ம்ம்... என்னோட மொத்த உசுரும் அவன் தான் கார்த்திக்... அவன் இல்லாத ஒவ்வொரு நொடியும் நான் உள்ளுக்குள்ள செத்துகிட்டு இருக்கேன்.. அதை நான் வெளிபடையா.... ம்ஹும்.. நான் சொல்ல கூட வேணாம்.... அவன் அதை புருஞ்சு கிட்டாலே, அதுக்கு அடுத்த நிமிஷம் எல்லாத்தையும் தூக்கி போட்டுட்டு, என்னை தூக்கி தோள்ள போட்டுகிட்டு போயிடுவான்... யாருமே வரமுடியாத, யாரையுமே காண இயலாத, யாருமே தேவை இல்லாத ஒரு உலகுக்கு..” சொன்னவளின் கண்களில் ராயருக்கான காதல் முழுமையாக சிந்தி கிடந்தது.
“உன் காதல் கிடைக்க அவன் குடுத்து வச்சுருக்கணும் பரி” நெகிழ்வாய் சொன்னவனை கண்டு
“ம்ஹும் அவன் காதல் கிடைக்க தான் நான் குடுத்து வச்சுருக்கணும் கார்த்திக்... அவன் அப்படி காதலிப்பான்.. அவன் காதல் மன்னன் யூ நோ” சின்ன நகைப்போடு சொல்ல
“ஆமா அது தான் கல்யாணத்திற்கு முன்னாடியே....” என்று சொல்ல வந்தவனை கை நீட்டி தடுத்து
“ஜஸ்ட் சட் அப்.. கார்த்திக்.. இது அவனுக்கும் எனக்கும்மான சம்மந்த பட்ட ஒரு விஷயம்.. இதுல நீ விமர்சனம் சொல்ல கூடாது. இது எங்க தனிப்பட்ட வாழ்க்கை..” சற்றே கோவத்தோடு நிமிர்வாய் சொன்னவளை கண்டு வருத்தம் தான் வந்தது..
“இந்த அன்பை கூட புருஞ்சுக்காம முட்டாளாய் அவன் இருக்கான் பாரு”
“பட் எனக்கு அந்த முட்டாள் தான் வேணும் கார்த்திக்.. அந்த முட்டாள் கிட்ட தான் என் ஜீவன் இருக்கு.”
“முடிவு பண்ணிட்டியா...”
“என்னது” புரியாது கேட்டவளை கண்டு
“இந்த ஒரு வாரம் கணக்கு”
“ம்ம்... ஆனா இடையில் கூட மாறலாம்”
“ஓ”
“சரி கவனமா இரு.. நீயும் காயபடாதா... அவனயும் காயபடுத்தாத..”
“ம்ம் சரி”
“இப்போவே சாரு முகத்துல பயங்கரமா கோவாம் தெரியுது..” என்றவனின் பார்வை ராயர் முகத்திலே இருக்க
“நான் சமாளிச்சுகுறேன் கார்த்திக்”
“வேற வழி, ஆல் தி பெஸ்ட்”
“தாங்க் பா” என்றாள் மலர்வுடன்.
“ம்ம் வரேன்” என்று விடை பெற்று கொண்டு போக ராயரின் பார்வை அவளை கொத்தி கொத்தி எடுக்க....
அவனது பார்வை உயிர் வரை வந்து வேர்த்தது..
ஆயிரம் பத்திரம் சொல்லிவிட்டு சென்ற தில்லையின் மடியில் சுருண்டு கொள்ள வேணும் போல ஏங்கிய மனதை வசபடுத்த தெரியாமல் இரு கால்களையும் கட்டிக்கொண்டு தலையை அதில் புதைய்த்துக்கொண்டு தன் மனம் கவர்ந்தவனின் வருகைக்கு திடும் திடும் என்று அதிரும் உள்ளத்தோடு பயந்த படியே காத்திருந்தாள் தன் அறையில் திகம்பரி.
இன்னைக்கு என்ன செய்ய காத்திருக்கிறானோ.. அன்று அவன் செய்த செயலில் அவள் இயல்பாக ரெண்டு நாள் பிடித்தது.. இன்றும் அதை நினைக்கையில் உள்ளம் உதறல் எடுத்தது..
கோவம் வந்தால் ராயருக்கு கண்ணு மண்ணு தெரியாமல் தான் வரும்.. அது பெரும்பாலும் திகம்பரியின் தலையில் தான் வந்து விடியும்...
அது அவள் வாங்கி வந்த வரமோ... என்னமோ... மூச்சு கூட விட முடியாது அவனிடம்... அந்த அளவு அவளை வார்த்தையால் பொசுக்கி உடலால் வதைத்து முட்டும் முழுவதும் சிதைத்து விடுவான்..
காரில் வந்து கொண்டிருந்தவனுக்கு போன் வர எடுத்து பேசியவன் “ம்ம் நான் வரேன்” என்று வைத்து விட்டான்.
“மாமா எனக்கு ஒரு அவசரமான காரியத்துக்கு போகணும். நீங்க எல்லோரும் போங்க... கோவில்ல போய் பொங்கல் வச்சி முடிக்கிறதுக்குல்ல நான் வந்தர்றேன்” என்று அவர் மறுக்கும் முன் காரை நிறுத்திவிட்டு “ரவி நீ ஓட்டு” என்று அவனை பணித்து விட்டு ஊர் எல்லையிலிருந்து நடக்க ஆரம்பித்தான் யாருக்கும் சந்தேகம் வராமல் அவர்களுக்கு எதிர் திசையில்..
அவனுக்கு இப்படி அடிக்கடி வேலை நிமித்தமாய் போன் வருவதும் இவன் எல்லாவற்றையும் அப்படியே போட்டு விட்டு கிளம்புவது வழக்கம் தான்.. ஆனால் இன்று சிவனாண்டிக்கு தான் லேசாய் வருத்தமாய் இருந்தது.. அவனுக்கு போன் செய்து
“வந்துடுவியா ராயரு...” என்று கேட்டார்
“கண்டிப்பா வருவேன் மாமா.. நீங்க கவலை படாதீங்க வேலை முடுச்சவுடன் வந்துடுவேன்” என்று அவருக்கு ஆறுதல் சொல்லியவன் புயல் போல வீட்டை நோக்கி சென்றான்.
அவனது மனதில் சற்று நேரத்திற்கு முன் கார்த்தியும் திகம்பரியும் அவ்வளவு நேரம் நின்று பேசிக்கொண்டிருந்தது தான் சுழன்று கொண்டிருந்தது.. அதுவும் திகம்பரியின் முகத்தில் மின்னிய உணர்வுகள் தான் அவனை ஆட்டி படைத்தது..
அவ்வளவு காதலாய் எப்படி அவனை பார்க்க முடிந்தது. அப்போ என் கிட்ட இத்தனை வருஷம் காண்பிச்ச காதல் பொய்யா... அதனால தான் என் குழந்தையை சுமக்க மாட்டேன் என்று கருவை கலைத்தாளா...
கருவை கலைத்த அந்த நொடி அவனுள் எழுந்த கோவம் இன்னும் அப்படியே இருக்க அந்த கோவத்தோடே அவளை தேடி வீட்டுக்கு வந்தான். வீடே அதிரும்படி “ரீ....கா...........” என்று கர்ஜிக்க
அவனது அழைப்பில் சர்வாங்கமும் நடுங்கியது அவளுக்கு...
அன்றைக்கு போலவே அவனது அதே அழைப்பு... உயிர் கூடு காலியானது போல் உணர்ந்தாள்.
மெல்ல தன் தலையை நிமிர்த்தி கால்களை கட்டியிருந்த கைகளை விலக்கிக்கொண்டு சுவரோடு ஒண்டியபடி எழுந்து நின்றாள். வேக எட்டு வைத்து நடந்து வந்து அவளது அறைக்குல் நுழைந்தவன் சுவரில் ஒன்றிக்கொண்டு நின்றிருந்தவளை கண்டு சினம் அதிகமாக வந்தது..
“ஓ என்ன பார்த்தா மட்டும் பயம்.. ஆனா அவனை கண்டா மட்டும் ஈஈஈ ன்னு பல்ல காமிக்கிற.. ஏண்டி இப்படி என் கிட்ட நடிக்குற.. நான் உனக்கு என்ன பண்ணுனேன்.. எதுக்கு மறுபடியும் என் வாழ்க்கைக்குல்ல நுழைஞ்ச, நான் பாட்டுக்கு பேசாம உன்னை விட்டு ஒதுங்கி தானே இத்தனை நாள் இருந்தேன்..
என் முன்னாடி வந்து நான் கஷ்ட படனும்னு தானே.. ‘பாரு நீ என்னை விட்டுட்டு போனா நான் நல்லா தான் இருக்கேன்னு காமிக்க வந்தியா’.. சொல்லுடி.” கொத்தாய் அவளது தலை முடியை பற்றி இழுத்து உழுக்க
“மாமா வலிக்குது மாமா பிளீஸ் விடுங்க”
“இன்னும் உனக்கு நல்லா வலிக்கணும் ரீகா.. என் மனசுக்குள்ள இருக்குற உன் நினைப்பு அழியுற வரை உனக்கு வலிக்கணும்” என்று முரட்டு தனமாய் நின்றவனை கண்டு உள்ளுக்குள் ரொம்பவே பயந்து போனாள்.
“மாமா” பரிதவிப்பாய் கூப்பிட
“வேணாம் திகம்பரி... எதுவுமே வேணாம் எனக்கு... ஏண்டி என் பிள்ளைய அழிச்ச.. அது உனக்கு என்ன பாவம் பண்ணுச்சு.. இல்ல நான் தான் உனக்கு என்ன பண்ணுனேன்.. உனக்கு கார்த்திக் தான் பிடிக்கும்னு முன்னவே சொல்லி இருந்தா நானும் என் பிள்ளையும் முழுசா உன்னை விட்டு ஒதுங்கி போயிருப்போமேடி...
இப்படி நம்ப வச்சு கழுத்தை அருத்துட்டியேடி...” வெகுவாய் உள்ளம் உடைந்து போய் குமுறியவனை கண்டு அவனை இழுத்து தன் நெஞ்சுக்குள் புதைத்துக்கொண்டாள்..
“இவ்வளவு நாள் விட்டு இப்போ வந்து கேக்குறியே மாமா” கண்கள் கலங்கியவள் “உனக்கு எதுவும் தெரிய வேணாம் நீ நல்லா இரு எனக்கு அது போதும்” என்றவள் அவனை விட்டு விலகி தன் பைகளை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள்...
அத்தியாயம் 13
ஒரு கணம் மட்டுமே குமுறியவன் அடுத்த கணம் திகம்பரியின் கைகளை பற்றி இழுத்து உள்ளே தள்ளி கதவை அடைத்தவன் “ஏன்னு சொல்லாம நீ இந்த இடத்தைவிட்டு போக முடியாது.. சொல்லுடி” என்று ஆத்திரமாய் அவளை பற்றி இருந்த கைகளில் அழுத்தம் கொடுத்து அவளுக்கு வலிக்கும் படி அழுத்த வலியில் பல்லை கடித்தவள் அவனிடம் தன்னை விடும்படி கேட்கவில்லை..
“போனதை பத்தி கேக்குறியே.. நீ என்னை விட்டு வரும்போது எனக்குள்ள உன் உயிரை விதைச்சுட்டு அதை பத்தி தெருஞ்சும் என்னை விட்டு போனியே அது என்ன ஆச்சுன்னு ஒரு வார்த்தை கேட்டியா?” என்றவளை கூர்மையாகவும் ஏளனமாகவும் பார்த்து
“அதையும் தான் நீ ‘உன் சந்தோசத்துக்காக தடையா’ இருக்கும்னு அழிச்சிருப்ப, அதை உன் வாயால வேற நான் கேட்டு தெருஞ்சுக்கனுமா” என்றான் எகத்தாளமாக.. கண்களில் ஒட்டுதல் இல்லாமல் சொன்னவனை கண்டு திகம்பரியின் மனசு முற்றும் முழுவதும் உடைந்து போனது.. ‘இவ்வளவு தானா மாமா நீ..
இத்தனை வருட பழக்கத்தில் நான் இவ்வளவு தான்னு நினைச்சுட்டியாடா மாமா நீ..’ மனம் விரக்தியில் வீழ்ந்தது.. ‘ஆனா நீ இப்படி நினைக்கிற அளவுக்கு நான் தானே காரணமாய் போனேன்..’ இனி இவன் கிட்ட எதையும் புரிய வைக்க முடியாது..
‘நான் உன்னை விட்டு முழுசா போறேன் மாமா.. இனி உன் கிட்ட வரவே மாட்டேன்..இந்த ஒரு வாராமாவது உன்னுடன் இருக்கலாம் என்று நினைத்தேன் அதுக்கும் இப்போ வழியில்லாமல் போய்விட்டது.’ எண்ணியவள்
“ஓ அப்படியா அப்போ சரி” என்றவள் அதுவரை இருந்த இளக்கம் காணாமல் போய் அவளிடம் திமிரும் கர்வமும் வந்து அமர்ந்தது..
அவனது கையை ஒரு உதரில் உதறி அவனை இன்னும் உள்ளே தள்ளி விட்டு அவன் தடுமாறிய நேரம் கதவை தாளிட்டுவிட்டு வெளியே வந்தவள் அவன் கத்தகத்த திரும்பியும் பாராமல் அந்த வீட்டை விட்டு வெளியே வந்து தன் இருப்பிடமான மதராசபட்டினத்தை நோக்கி பயணப்பட ஆரம்பித்தாள்.
ஒரு கணம் சுதாரிக்கும் முன் தன்னை தள்ளிவிட்டு கதவடைத்து விட்டு சென்றவளின் மீது கட்டுக்கடங்காமல் கோவம் பெருகியது.. கதவின் மீது பலமாக தட்டி தட்டி கதவையும் உடைத்து தன் கைகளையும் உடைத்துக்கொண்டான்..
கதவின் பிசுருகள் அவனது கையை பதம் பார்க்க அதை கவனிக்காமல் ஓடிச்சென்று தன் இரு சக்கர வாகனத்தை கிளப்பி அவள் சென்ற பாதையில் பயண பட்டு நாலு திசைகளிலும் பார்வையை செலுத்தியபடி அந்த சின்ன ஊரை அலசி ஆராய்ந்தான் தன் மனம் கவர்ந்தவளை.
அவன் தன் பின்னாடி நிச்சயம் வருவான் என்று கணித்தவள் அவனது மற்றொரு அறையில் தான் அவனது செயலை கண் கண்காணித்தபடி இருந்தாள் விழிகளில் வழியும் நீரோடு..
தேடி அலைந்து கலைத்து போனவனை அவரது மாமா அழைக்க வேறு வழியில்லாமல் அவரை வருத்தபட வைக்க மனமில்லாமல் கிளம்பி சென்றான்.
“இதுக்கெல்லாம் சேர்த்து என் கிட்ட நல்லா அனுபவிப்படி..” கறுவிக்கொண்டான்.. அவனது தேடுதல் ஏமாற்றத்தை கொடுக்க அதை ஏற்றுக்கொள்ள முடியாமல், இயலாமையில் தொண்டை குழி ஏறி இறங்கி அவனது கோவத்தை பறை சாற்றுவது போல விழிகள் இரண்டும் சிவந்து போய் காட்சி அளித்தான்.
குறிப்பிட்ட நேரம் கழித்து கார்த்திக்கு போன் போட்டு அங்கு ராயர் வந்து விட்டானா என்று தகவல் கேட்டாள்.
“இன்னும் வரல ஆனா பாதி தூரம் வந்துட்டு இருக்குறதா இப்போ தான் வனா சொன்னான்.. ஏன் என்ன ஆச்சு.. என்ன பண்ணீங்க ரெண்டு பேரும்” சற்று கடுமையாகவே கேட்டான்.
“பிறகு சொல்றேன்.. நான் இப்போ மதராஸ் போறேன்.. இங்க நீ வந்த வேலைய முடுச்சுட்டு வா.. அவசர பட்டு யாருகிட்டயும் எந்த உண்மையும் சொல்லி தொலைக்காத.. ராயருக்கு இன்னும் எதுவும் தெரியாது.. கவனம்.. முக்கியமா ரவிகிட்ட..”
“ஏன் ரவிகிட்ட.. அவன் ஒரு டம்மி பீசு..” என்று சொன்ன கார்த்திக்கை
“ஸ்டாபிட் கார்த்திக்.. அவன் பாசமானவனே தவிர நீ சொன்ன மாதிரி டம்மி கிடையாது.. ரவிய நான் இப்போ தான் பார்த்துருக்கேன். ஆனா எனக்கு அவனோட ஆறு வருட சம்மந்தம் இருக்கு.. அவன் கூட மட்டும் இல்ல அந்த குடும்பத்துல இருக்குற எல்லோர் கூடவும் தான்.. ராய் எப்போ என்னோட பழக ஆரம்பிச்சாரோ அப்போதிருந்து எனக்கு அவங்களை பத்தி முழுசும் தெரியும்.
அவருக்கு ரவினா ரொம்ப பிடிக்கும். அவருக்கு மட்டும் இல்ல.. எனக்கும் தான். எனக்கு முன்னாடி அவனை மட்டம் தட்டி பேசாத..” என்றவளின் பேச்சில் கார்த்தியின் முகத்தில் மென் புன்னகை வந்து அமர்ந்தது.
“ரவிய ஒரு வார்த்தை சொன்னதுக்கே இப்படி கோவ படுறியே திகம்பரி.. உன்னால எப்படி இந்த குடும்பத்தை விட்டுட்டு இருக்க முடியும். நீ உன்னையும் ஏமாத்திகிட்டு மத்தவங்களையும் முக்கியமா ராயர ரொம்ப காயபடுத்துற” என்றான்.
அவனது பேச்சில் சட்டென்று உண்மை உறைக்க “எனக்கு தெரியும் கார்த்திக். ஆனா நான் வந்தா அந்த குடும்பத்துல இருக்குற சந்தோஷம் போயிடும்.. எனக்கு அந்த குடும்பம் எப்பொழுதும் போல இப்படி சந்தோசமா இருக்கணும்.. அதுக்காக நான் விலகி போறது தவறே இல்லை..” என்று கம்பீரமாகவே சொன்னாள் திகம்பரி..
“நீ தப்பா புருஞ்சுருக்க திகம்பரி.. ஒரு முறை ராயருகிட்ட பேசு எல்லாமே சரியா போகும்.”
“உனக்கு புரியல கார்த்திக்.. ராயர நான் கிட்டக்க சேர்த்துகிட்டா பிறகு எல்லாமே நாசம் தான்.. நான் சொல்றதை சரியா புருஞ்சுக்கலன்னா எல்லாமே பாழ் தான். என் தலை விதி இது அவ்வளவு தான். அது இருக்கட்டும் நீ யாருகிட்டயும் வம்புக்கு போகாதா.. முக்கியமா ரவிகிட்ட..
நீ தள்ளி போனாலும் என் தோழன் நீ அப்படின்ற காரணத்துக்காகவே உன்கிட்ட ரவி வம்பு இழுத்து உண்மையை தெருஞ்சுக்க பார்ப்பான். அதனால கவனமா இரு.. ராய் இருக்குற கோவத்துல உன் மேல கை வச்சாலும் கை வைப்பாறு.. எதுக்கும் தனியா மாட்டிக்காத..” என்று எச்சரித்தவளை கடுப்புடன்
“உனக்கு உதவியா வந்தா நீ நேக்கா ரவுடிங்க கிட்ட கோத்து விட்டுட்டு அப்படி இரு இப்படி இருன்னு அட்வைஸா பண்ற.. நீ என் கையில சிக்கு வச்சுக்குறேன் உன்னை..” என்று பல்லை கடித்தான்.
“இதை அப்படியே ராய்ட சொல்லு இன்னும் மொத்துவான்” என்று கலகலவென்று சிரித்தவளை நேசமுடன் உள் வாங்கி கொண்டான் கார்த்திக்..
“ப்பா நீ சும்மா வந்தா கூட எனக்கு வேணாம்.. ராயே உன்னை வச்சு கட்டிக்கிட்டு அழட்டும்..” அவளை சீண்ட
“ஹஹஹா போடா... திகம்பரி அருமை என் ராயருக்கு தான் தெரியும்.. நீ ஒன்னும் தேவை இல்லை எனக்கு.. ராயே வச்சு என்னை மேச்சுகட்டும். அவனுக்கு தான் நான் தோதுபடுவேன்” அவளும் சிலிர்த்து ராயரை காதலோடு எண்ணி நெகிழ்ந்து சொல்ல
“என்ன ராய் பைத்தியம் ரொம்ப முத்தி போச்சா..”
“ஆமா அதுல உனக்கென்ன பொறாமை.”
“ஹஹஹா எனக்கு ஏன் மா பொறாமை.. எனக்கு என் ஆளு இருக்கா..”
“இதை கண்டிப்பா ராய்ட சொல்லி எச்சரிக்கணும்.. கலைவாணி பய..” என்று அவனை வார
“அதெல்லாம் யாருக்கும் தெரியாது.. நாங்க சீக்ரெடா வச்சுப்போம்”
“ம் ஆமா காதலிக்குற பொண்ணுக்கு கூட சொல்லாமா சீக்ரெட்டா வச்சுக்கோ” அவள் கேலி பண்ண
“என்னை சொல்றீயே நீ மட்டும் என்னவாம்.. அஞ்சு வருசத்துக்கு பிறகுதான் நீயே சொன்ன.. ராயரை பத்தி என்கிட்ட..”
“சரி சரி விடு.. “ என்று பின் வாங்கியவளை கண்டு சிரித்தான்.
“அது” என்றவன் அவளின் மௌனம் உணர்ந்து “என்ன ஆச்சு” கேட்க அவளிடம் மவுனம் மட்டுமே.. “நான் கிளம்புறேன் கார்த்திக்” என்று சொல்லியவள் போனை அனைத்து வைத்துவிட்டு உடனடியாக அவ்விடத்தைவிட்டு கிளம்பிவிட்டாள்.
==
நகர் புறம் வந்து காரை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு மதராசை நோக்கி பயணமானாள். சென்றவளின் மனதில் ராயரின் எண்ணம் மட்டுமே... செத்து போனாலும் மடியாத சில உணர்வுகள் உயிரோடு இருக்கும் போல..
நினைத்தவளின் விழிகள் நகர்ந்து போகும் மரங்களையோ, மனிதர்களையோ, காட்சிகளையோ என்று எதையும் காண பிடிக்காமல் மூடிக்கொண்டது....
அப்படியே தூங்கி போனவளின் காதில் “ரீகா” மிக மென்மையாக ராயர் அழைக்கும் குரல் கேட்க, தூக்கிவாரி போட்டு விலுக்கென்று கண் விழித்து பார்த்தாள்.
ஓடும் காரில் அவனது குரல் எப்படி என்று திகைத்து சுற்றிலும் பார்க்க அவனை காணவில்லை.
எங்கே அவன் என்று இருக்கும் சூழல் உறைக்காமல் அவனை தேடினாள். காதல் பொழுதுகளில் உயிர் உருகும் குரலில் அவளின் பெயரை சொல்லி அழைக்கும் நிகழ்வு கண் முன்னே விரிய நிதரிசனமும் புரிய அப்படியே சரிந்து தொய்ந்து போனாள்.
கற்பனையா... அப்போ அவன் என் பின்னே வரவில்லையா.. எப்படி வருவான்.. அவனைத்தான் படாத பாடு படுத்திவிட்டு வந்தேனே.. கழிவிரக்கம் அவளை சூழ அவனின் அரவணைப்புக்காக ஏங்கினாள்.
எப்படி எல்லாம் வாழ்ந்தோம்.. யார் கண்ணு பட்டது.. இப்படி பேச ஆரம்பிக்கும் போதே சண்டையில் வந்து நிற்கிறது.. எவ்வளவு விஷயங்கள் பேசி இருப்போம்.. எத்தனை எத்தனை பகிர்வுகள், எத்தனை அருமையான புரிதல்கள்.. எல்லாமே முன் ஜென்மத்தில் நிகழ்ந்தது போல அல்லவா மாறி போய் விட்டது..
இது எல்லாவற்றிற்கும் காரணம் அவன் மீது கொண்ட காதல் மட்டும் தானே... எண்ணியவளின் விழிகளில் கண்ணீர் படலம்..
இந்நிலை என்று மாறும்... ம்ஹும் மாறவே கூடாது.. மாறினால் எவ்வளவு பெரிய அவமானத்தை சந்திக்க நேரும்... வேணவே வேணாம் நீ என் நெஞ்சில் இருந்தாலே போதும்.. உன் நினைவுகள் மட்டும் போதும் எனக்கு..
உன்னோடு சேர்ந்து வாழ்ந்தால் தான் வாழ்வா... உன்னை எண்ணிக்கொண்டு வாழ்வது கூட எனக்கு சுகம் தான்.. நான் தான் உன்னோடு திகட்ட திகட்ட வாழ்ந்து விட்டேனே..
இதுக்கு மேலயுமா ஒரு வாழ்வு வேணும்.. போதும்டா இந்த ஜென்மத்துக்கு தேவையான ஒட்டு மொத்த காதலையும் தான் நீ ஏற்கனவே என்னிடம் காட்டிவிட்டாயே... போதும் ராய்...
“வெண்ணிலவே வெண்ணிலவே கரைந்தது ஏனம்மா...
என் நினைவில் உன் நினைவே சுவர்க்கம் தானம்மா..”
காரில் ஒலித்த பாடலில் மனம் இன்னும் கனத்து போனது...
கிடைத்ததர்க்கரிய உயர்ந்த மாணிக்கத்தை பத்திரமாய் பொத்தி வைக்க தெரியாமல் தெருவில் தெரிந்தே போட்டுவிட்டு துடிக்கும் நிலையில் இருந்தாள் திகம்பரி...
ஆமாம் அவனும் பொத்தல் இல்லாத சுத்த மாணிக்கம் தான்.. நான் தான் அவனை பொத்தி வைக்க தகுதி இல்லாத பாழடைந்த சிதிலமடைந்த நகை பெட்டி எண்ணியவளின் கண்கள் அவனை எண்ணி எண்ணி கலங்கி போய் அவனை தவறவிட்ட நொடியிலிருந்து இப்போது வரை உதிர்த்த கண்ணீரை இப்போதும் வஞ்சனை இன்றி சிந்தினாள்.
ஐ லவ் யூ ராய்... ஐ லவ் யூ சோ மச்... புலம்பியபடியே மீண்டும் கண்களை மூடிக்கொண்டாள்.
மூடிய விழிகளில் சில வருடங்களுக்கு முன் இருந்த ராய் வந்து சிரித்தான். அப்பவே கம்பீரமாய் ஆளுமையுடன் தான் இருந்தான். மெல்ல புன்னகைத்துக்கொண்டு தனக்கு மிகவும் பிடித்த கடந்த கால வருடங்களை மீண்டும் நினைவடுக்கில் அப்போது தான் பதிந்து வைத்தது போல ஒரு துளி கூட மறக்காமல் நினைவு கூர்ந்தாள்.
கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு முன்பு.... திகம்பரிக்கு பதினெட்டு வயது.. கல்லூரியில் முதல் வருடம் பயின்று கொண்டிருந்தாள். ராயர் சட்டமும் தொலை தூர கல்வியில் ஆங்கில இலக்கியமும் எடுத்து படித்து முடித்துவிட்டு மதராசில் புகழ் பெற்ற வழக்கறிங்கரிடம் இளநிலை வழக்கறிங்கராக வேலை பார்த்துக்கொண்டிருந்தான்..
அழகிய காலை பொழுதில் திகம்பரி கல்லூரிக்கும் ராயர் நீதி மன்றத்துக்கும் சென்று கொண்டிருந்தனர்.. அவள் ஏதோ வாங்க எதிர் புறம் இருந்த கடைக்கு செல்ல சரியாய் அவனும் அங்கு வந்து அந்த கடைக்கு போக அவளுடனே சாலையை கடக்க இருந்தான் .
என்ன சிந்தனையில் இருந்தாளோ திகம்பரி சட்டென்று எதையும் சிந்திக்காமல் சாலையை கடக்க ராயர் அருகில் வந்து கொண்டிருந்த காரை கண்டு கொண்டிருந்தவன் அதே சமயம் அவள் சாலை கடப்பதையும் பார்த்தவன் ஐயோ என்று அலறி..
அவளின் கையை பிடித்து பின்னுக்கு இழுப்பதர்க்குள் அந்த கார் அவளை உரசி விட்டு செல்ல பயத்தில் அவள் அலறி சரிய தன்னில் தாங்கி நின்றான் அவன்.
அடுத்து என்ன செய்வது ஒரு கணம் திகைத்து போனவன் முதலில் இவளை உலுக்குவோம் என்று கையில் இருந்தவளை எழுப்ப அவள் எழுந்திரிக்கவே இல்லை. மருத்துவமனைக்கு தான் அழைத்து செல்லனுமா? எண்ணிய நேரம்
“தம்பி அம்மாவுக்கு என்ன ஆச்சு.. அம்மா அம்மா” என்று கார் சீருடையில் ஒரு முதியவர் அவளை எழுப்பிக்கொண்டிருக்க
“இவங்களை உங்களுக்கு தெரியுமா”
“தெரியும் தம்பி இவங்க கிட்ட தான் நான் வேளை செய்யுறேன்” என்றவரின் கண்களில் கண்ணீர் சிந்தியது..
“உங்களை நான் எப்படி நம்புறது”
“ஐயோ இப்போ நம்புறதா முக்கியம் நீங்களும் என் கூட வாங்க... அதுக்கு முன்னாடி அம்மாவா கூட்டிட்டு காருக்கு வாங்க தம்பி மருத்துவ மனைக்கு போவனும்” என்றவர் யாருக்கோ கால் பண்ணினார்.
பின் அவளை எந்த சிரமும் இன்றி தோளில் தூக்கி போட்டுக்கொண்டு அவர் காட்டிய காரில் பின் இருக்கையில் அவளை கிடத்தி தானும் அவளோடு அமர்ந்து கொண்டான்.
பேசியவர் விரைந்து வந்து அந்த ஊரில் உள்ள மிக பிரபலமான மருத்துவமனையில் வந்து காரை நிறுத்தினர். அவரின் அனுமதி இல்லாமலே திகம்பரியை கையில் ஏந்தியவன் உள்ளே சென்று அவளை அனுமதித்தான்.
ஓட்டுனர் மிகவும் ஓய்ந்து போய் இருப்பதை கண்டு அவர் மறுக்க மறுக்க அவருக்கு ஒரு தேனீர் வாங்கி வந்து குடுத்துவிட்டு அவனும் ஒரு தேநீர் குடித்து கொண்டிருந்தான்.
மருத்துவர் வந்து திகம்பரிக்கு பரிசோதனை செய்ய சிறிது நேரத்தில் கண் விழித்தாள்.
“அவங்களுக்கு ஒன்னும் இல்லை மிஸ்டர் ராயர்.. கண்ணு முழுச்சுட்டாங்க போய் பாருங்க..” என்று மருத்துவர் சொல்ல உள்ளே நுழைந்தான்.
காலிலும் கையிலும் மட்டும் லேசாய் ரத்தம் கசிந்து.. அதை சுத்தம் செய்து மருந்து போட்டு அவளை படுக்கையில் படுக்க வைத்து இருந்தார்கள்.
அவனோடு ஓட்டுனரும் வர இருவரும் அவளை பார்த்தார்கள்.
ராயர் பேசும் முன்னவே ஓட்டுனர் முந்திக்கொண்டு
“அம்மாடி என்ன கண்ணு இப்படி பண்ணி போட்டுட்ட.. எனக்கு உசுரே பதறிடுச்சு பாப்பா” அவர் பதட்டம் தாளாமல் சொல்ல
“அப்பவாவது அப்பாவும் அண்ணனும் என்னை பார்க்க வருவாங்கல்ல தாத்தா” என்றவளின் கண்களில் கண்ணீர் மின்னியது.. ஆனாலும் ஒரு சொட்டு கண்ணீர் கூட கீழே விழவில்லை..
அவளது பேச்சில் ராயருக்கு என்னவோ போல் ஆனது..
“அதுக்காக உயிர பணயம் வைப்பியா” என்று சுல்லேன்று ராயர் கேட்க ‘அவன் யார்’ என்பது போல பார்த்து வைத்தாள் அவள்.
அவளது பார்வையய் படித்தவனுக்கு பத்திக்கொண்டு வந்தது...
‘இவளுக்கு இருக்குற குசும்பை பார்த்தியாடா ராயரு..’ முணகியவன் திரும்பி ஓட்டுனரை ஒரு முறை முறைக்க அவனது பார்வை வீச்சில் ஓட்டுனர் தாத்தா நிலையை புரிந்து கொண்டு திகம்பரிக்கு நடந்ததை விளக்க
“ஓ தேங்ஸ்” என்றாள்.
“என்னது தேங்சா..” கடுப்பானான் அவன்.
அவனது கடுப்பில் இவளுக்கு ஒன்னும் புரியவில்லை..
“ஏன் என்ன ஆச்சு”
“ம்ம் இன்னும் என்ன ஆகணும்... இன்னைக்கு என் பொழப்பே போச்சு.. காலையில இருந்து இன்னும் சாப்பிடல மணி பன்னிரண்டு... எல்லாம் உன்னால தான்.” என்று அவளை வைய்ய
“தம்பி... பாப்பா பாவம் அதை எதுவும் சொல்லாதீங்க..”
“எது பாவமா.. என்ன திமுரு இருந்தா வேணும்னே வேகமா வந்த வண்டியில விழ பார்த்திருக்கா இவளுக்கு நீங்க வக்காளத்தா...” என்று கொதித்து போக, திகம்பரியின் மனதில் மெல்லிய சாரல்.. அவனது கோவம் அவளுக்கு ஏனோ இதமாய் இருந்தது...
“தம்பி...”
“ம் போதும்யா உங்க பீப்பாவுக்கு வக்காளத்து வாங்குனது... போய் முதல்ல ரெண்டு செட்டு பூரி.. ரெண்டு மசாலா தோசை... ஒரு கும்பகோணம் டிகிரி காபி.... கூடவே சாம்பார் வடை ஒரு ப்ளேட்.. வாங்கிட்டு வாங்க” என்றான்.
“எனக்கு பசிக்கல” என்றாள் திகம்பரி..
“உனக்கு யாரு வாங்கிட்டு வர சொன்னா எல்லாம் எனக்கு சொன்னது” என்றான்.
“அடபாவி” என்றவளுக்கு புன்னகை தான் வந்தது..
தாத்தாவிடம் தன் பர்சில் இருந்து சில ரூபாய் நோட்டுகளை எடுத்து கொடுத்து வாங்கிட்டு வாங்க என்று பணித்தவள் அவரையும் சாப்பிட சொன்னாள்.
அவர் சென்ற பிறகு “எதுக்குடி இப்படி பண்ணின” என்றவனின் கோவத்தில் இப்போது மெல்லிய பயம் வந்தது அதுவும் அவனின் உரிமையான பேச்சில்...
அத்தியாயம் 14
“சொல்லுடி... இப்படி மௌனமா இருந்தா என்ன அர்த்தம்” சுல்லேன்று கேட்டவனுக்கு பதில் எதுவும் பேசாமல் தலையை குனிந்த படி அமர்ந்திருந்தாள்.
“சொல்லு திகம்பரி”
“மூணாவது மனுசங்க கிட்ட என்னால எதுவும் சொல்ல முடியாது” அவளும் நறுக்கென்று சொல்ல
“யாருடி மூணாவது மனுஷன்...” கர்ஜிக்க அவனது கர்ஜனை லேசாய் பயத்தை கொடுத்தாலும் நிமிர்வாகாவே அவனது கண்களை பார்த்து மறுபடியும் சொன்னாள்.
“நீங்க தான்”
“ஏய்” அவளை அடிக்க கை ஓங்க அவனது உரிமையில் முற்றிலும் திகைத்து தான் போனாள்.
“அப்.....போ என்னை இதுக்கு முன்னாடி தெரியுமா..” லேசாய் ஒருவித எதிர் பார்ப்புடன் கேட்டவளின் விழிகளை கூர்ந்து பார்த்துக்கொண்டே
“ஆமாம்” என்றான்.
“எ... எப்படி”
“ம்ம் உன்னை ஒரு மாசமா பாலோ பண்றேன்” என்றவனது பேச்சில் திகம்பரிக்கு சிரிப்பு தான் வந்தது..
‘அடபாவி ஒரு மாசத்துக்கு தான் இந்த அக்கப்போறாடா.. ஏதோ பல வருசம் கூடவே இருந்து நான் தான் இவனை மறந்தது போல பில்டப் குடுக்குரானே..’ எண்ணியவளின் சிந்தனையை கிழிக்கும் விதமாய்
“என்ன யோசிக்குற”
“ஆ....ங்.... ஒன்னும் இல்ல.. ஆனா நான் உங்களை பார்த்தது இல்லையே..”
“எப்படி பார்ப்ப தரையோட எதோ ஒட்டி பிறந்த பிள்ளை போல கீழ குனிஞ்ச தலைய நிமிர்த்தாமலே போனா எதுத்த மாதிரி வரவன தான் தெரியுமா.. இல்லை பின்னாடி வரவனா தான் தெரியுமா?” அவளை கிண்டல் பண்ண
“ஹலோ ரொம்ப ஓட்டாதீங்க”
“யாருடி நான் ஓட்டுறானா..”
“ஆமா... என்னமோ நான் ட்ரண்டுலயே இல்லாதா மாதிரி பேசுறீங்க... நான் ஒன்னும் அவ்வளவு பழம் கிடையாது” ரோசமாய் சொன்னவளை கண்டவனின் கண்கள் அவளை ஆசையோடு பார்த்தது..
அதை உணர்ந்து கொண்டவளின் நெஞ்சம் பக்கென்று அடித்துக்கொண்டது..
“என்ன” அவளது பயத்தை உணர்ந்தவனாய் கேட்க..
“எதுவும் இல்லை” என்று மண்டையை உருட்டினாள். அது கூட அவளுக்கு அழகாய் இருந்தது..
அவளது ஒவ்வொரு செயலையும் இரசித்தவன் “இப்போ சொல்லு” என்றான்.
“இப்பவும் நீங்க யாருன்னு எனக்கு தெரியாது” என்றவளின் பதிலில் அவனுக்கு பயங்கரமா கோவம் வந்தது..
“ஏண்டி ஒருத்தன் தன் உசுரை குடுத்து உன்னை காப்பாத்தி இருக்கான். அவனை நம்பள, சரி அவனே அவளை ஒரு மாசமா டாவு விட்டு கிட்டு பின்னாடியே நாய் போல வந்திருக்கான் அதுக்கும் கூட மசியல... நீ என்ன அவ்வளவு பெரிய அப்பாடக்கரா.. ரொம்ப சீன் போடாதடி அந்த அளவுக்கெல்லாம் நீ ஒர்த் கிடையாது...” என்றவனை பாரா பட்சம் இல்லாமல் முறைத்தாள்.
“என்னடி முறைக்குர.. உண்மைய தானே சொன்னேன்.” தெனாவட்டாய் சொல்ல
“போடா” சட்டென்று உதடு சுழித்து முகத்தை திருப்பிக்கொண்டாள். திரும்பியவளின் முகம் சிரித்துக்கொண்டு தான் இருந்தது. அதை உணர்ந்தவன் அவளருகில் படுக்கையில் சென்று அமர்ந்து அவளது கைகளை தன் பிடியில் கொண்டு வர திகம்பரி திகைத்து தான் போனாள்.
“ப்ளீஸ் இதெல்லாம் வேணாம்” என்று அவனது பிடியில் இருந்த தன் கைகளை உருவிக்கொள்ள பார்த்தாள்.
“திகம்பரி என் கண்ணை பாரு” ஆழ்ந்த குரலில் சொல்ல
அவனது குரலில் இருந்த ஒரு வித இதமும் இம்சையும் அவளை கட்டாயப்படுத்தி அவனை பார்க்க வைத்தது.
“என்னை நீ வேற யாரோ போல உணருறியா..” உயிரை உறைய வைக்கும் பார்வையில் கேட்டவனை அவள் ஆழ்ந்து பார்த்தாள்.
அவனை வேறு ஆள் போல அவளால் நினைக்க முடியவில்லை.. அவனது கண்களில் கண்ட கரை கானா காதலில் மூழ்கி போனவளாய் வசியப்படுத்தப் பட்டவள் போல “இல்லை” என்று தலை அசைத்து சொன்னவளின் மென்மையில் மனம் பறிகொடுத்தவன் இன்னும் கொஞ்சம் அவளை நெருக்கி அமர அவளுக்கு மறுபடியும் திக்கென்று இருந்தது..
அவனோ அவளது உணர்வுகளை படிக்காமல் “என் மனசு முழுக்க நீ தாண்டி இருக்க... நான் உன்னை பார்த்தது வேணா ஒரு மாசத்துக்கு முன்னாடியா இருக்கலாம்.. ஆனா நான் உன் கூட காலம் காலமா வாழ்ந்த மாதிரி இருக்கு.. உனக்கு என்னோட நினைப்பு, பேச்சு, லூசு தனமா இருக்கலாம்.. என்னைக்கு உன்னை இந்த சாலை ஓரத்துல பார்த்தானோ அப்பவே எனக்குள்ள நீ நுழைஞ்சுட்ட..” என்றவனை வியப்புடன் பார்த்தாள்.
“என்ன பார்க்குற... இந்த ஒரு மாசமா நீயும் நாள் தவறாம அந்த சாலையை கடந்து எதிர் புறம் இருக்க கடைக்கு போயிட்டு தான் இருக்க.. நானும் உன்னை அங்க பார்ப்பதற்க்காவே உன்னோட சாலையை கடந்து செல்வதற்காகவே உன் பக்கத்துல வந்து நிப்பேன்..
நீ ஒரு வித பயத்துடனே படபடப்புடனே இருப்ப.. அப்போ எனக்கு தெரியல உன் படபடப்புக்கு காரணம்.. ஆனா இப்போ புரியுது.. ஒரு மாசமாவாடி விபத்துக்கு ட்ரை பண்ணிக்கிட்டு இருக்க” என்று சிரித்தவனை கண்டு முறைத்தாள்.
அவளது முறைப்பை கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்து “தானா விபத்துல சிக்க அவ்வளவு பயம் இருக்குறவ எதுக்குடி இப்படி ஒரு முடிவெடுத்த” சற்று வலியோடவே கேட்டவனை கண்டு அவளுக்கு கண்கள் கலங்கியது..
“சொல்லுடி”
அவன் தன்னை கண்டு கொண்டுவிட்டான் என்ற எண்ணம் அவளை கலங்க செய்ய அவன் முன் அழுவது தனக்கு இழுக்கு என்ற எண்ணம் இல்லாமல் விழிகளில் கண்ணீர் வழிந்தது..
“ப்ச்... இப்போ எதுக்கு அழுகை... அழுகாதடி.. நீ அழுதா என்னால பார்க்க முடியாது..”
அவளால் அழுகையை அடக்க முடியாமல் இரு கையிலும் வாயை மூடிக்கொண்டு விம்மல் வெடிக்க கண்களில் இருந்து கண்ணீர் சரம் தொடுக்க அவளது நிலை ராயரை ரொம்பவே பாதித்தது..
கொஞ்சமும் யோசிக்காமல் அவளை தன் நெஞ்சில் இழுத்து போட்டுக்கொண்டவன் அவளை ஆறுதலாய் தடவி கொடுக்க.. முதலில் அந்நிய ஆடவன் என்று விலகினாள்.
ஆனால் அவனா விடுவான்.. “ம்ம்” என்று ஒரு அதட்டல் தான். அதிலே அவளது விலகல் நின்று போனது.. அவனது நெஞ்சில் சாய்ந்திருந்தவளுக்கு தான் வேறு ஒரு ஆடவனுடன் தான் இருக்கும் நிலையை கண்டு பயம் நெஞ்சை கவ்வியது..
ஆனாலும் அவனது நெஞ்சில் இருந்து கேட்ட அவனது இதய ஓசை அவளிடம் ஏதோ ஆறுதல் கூறுவது போல இருந்தது. கூடவே அவன் சொன்ன... காலம் காலமாய் வாழ்ந்த ஒரு உணர்வு அவளுக்கும் தோன்றியது...
இது கற்பனையா காவியமா.. என்று மயக்கம் ஒரு பக்கம் என்றாலும் அவனது முரட்டு கரம் அது நிஜம் என்று புரிய வைத்து கொண்டு தான் இருந்தது அவளுக்கு..
அவனது இதயம் லப்டப் என்ற கீதத்தின் மூலம் அவளுடன் பேச அவளும் நடக்கும் நிகழ்வை மறந்து அவனின் மனதோடு பேசுபவள் போல இன்னும் அவனது நெஞ்சில் ஆழ புதைந்தாள்.. அதில் அவளுடைய கண்ணீர் நின்று போனது கூட தெரியாமல் அவனது நெஞ்சோடு உறவாடினாள்.
அவளது இந்த செயல் கண்டு அவனுக்கு அவள் இன்னும் சிறு பிள்ளை போல காட்சி அளித்தாள். ஆனாலும் அவளது ஒன்றுதல் அவனுக்கு அவள் குமரி என்றே புரிய வைத்தது. அதுவும் அன்புக்கு ஏங்கும் பெண்ணாவே தோன்ற, அவளை அவள் அனுமதி இல்லாமல் தன்னோடு இருக்க அணைத்துக்கொண்டான்...
அவனது இருக்கிய அணைப்பு அவளுக்கு நிகழ்வை உணர்த்த தன் மயக்கம் தெளிந்து அவனிடமிருந்து விலக பார்த்தாள். ராயரோ இன்னும் அவளை விடாமல் “நீ காரணத்தை இன்னும் சொல்லல.. சொல்லு உன்னை எதுவும் செய்யாமல் விட்டுடுறேன்” என்று மிரட்ட..
அவனது அந்த மிரட்டல் அவளுக்கு எந்த வித பாதிப்பையும் குடுக்கவில்லை..
“என்னடி அப்படி பார்க்குறா.. நான் உன்னை மிரட்டிகிட்டு இருக்கேன்” அவன் கடுப்படிக்க
“ஓ இதெல்லாம் சொல்லிட்டு செய்யிறது இல்லையா... பாருங்க நீங்க என்னை கொஞ்சுறீங்கண்ணுல நான் நினைச்சுகிட்டு இருக்கேன்” அவனுக்கு ஈடாய் அவளும் நக்கல் பண்ண..
“ஆனாலும் உனக்கு இருக்குற ஏத்தம் இருக்கு பாரு.. வேற எவளுக்கும் வராதுடி..”
“ஓ அப்போ சாரு இதுக்கு முன்னாடி எத்தனை பேரை அப்படி பாத்து இருக்கீங்க..”
“ஏட்டி நான் பின்னால வந்தது உன் ஒருத்தி பின்னாடி தாண்டி... என்னவோ என்னை பொம்பள பொருக்கி மாதிரியே பேசுறவ.. என்ன நக்கலா.. உடம்பு தேறி வா.. உன்னை உருச்சு உப்பு கண்டம் போடுறேன்” மிரட்டலாய்.
“நானா சொன்னேன்.. நீங்க தான் பல பேத்து கிட்ட பழகி பார்த்தது போல பேசி வைச்சிங்க.. இப்போ என்னை உருச்சு உப்பு கண்டம் போட்டுடுவீங்களா.. போடுவீங்க போடுவீங்க ஊராங்க்கூட்டு பொண்ணுன்னு இளக்காரம் தான் உங்களுக்கு”
“ஏட்டி நீ ஊராங்க்கூட்டு பொண்ணா.. பிச்சுடுவேன் பிச்சு... எனக்கு இந்த ராயருக்கு மட்டுமே சொந்தமான பொண்ணுடி நீ...” கண்களில் காதல் மின்ன சொன்னவனை கண்டு உள்ளுக்குள் என்னவோ செய்தது...
இன்னும் அவனுடைய காதலை அவள் ஏற்றுகொள்ள வில்லைத்தான்.. ஆனலும் அவன் பேசும் போது அவளால் சும்மா இருக்க முடியவில்லை..
அவனோடு உறண்டை இழுக்க ஆசை கொண்டது மனம்..
“சொல்லுடி எதுக்கு இப்படி ஒரு விபரீதமான முடிவை எடுத்த...” தன் கலாட்டாக்களை விட்டுட்டு உண்மையான அக்கறையோடு கேட்டவனை நிமிர்ந்து பார்த்தவள் கண்கள் கலங்க
“அப்பா அண்ணனை பாத்து ஆறு மாசம் ஆச்சு. எனக்கு அவங்ககளை பார்க்கணும் போல தோனுச்சு அது தான் இப்படி பண்ணினேன்”
“இதுக்கு நீ ஒரு கால் பண்ணினா வந்துட போறாங்க அதுக்கா இப்படி செய்ய பார்த்த” முறைத்தான்.
“நிறைய முறை கால் பண்ணி பார்த்துட்டேன்.. ம்ஹும் யாரும் வரல.. அது தான் நான் அடி பட்டு விழுந்து கிடந்தாவது என்னை பார்க்க வருவாங்கள்ள” என்று விசும்பியபடி சொன்னவளை இறக்கத்துடன் பார்த்தவன்
“அவங்க எங்க இருக்காங்க..”
“ஏதாவது ஒரு வெளிநாட்டுல வியாபரா சம்பந்தமா யாருகிட்டயாவது பேசிகிட்டு இருப்பாங்க”
“என்னடி இப்படி சொல்ற.. அப்போ எங்க இருக்காங்கன்னு கூடவா தெரியாது..”
“ம்ஹும்” என்று உதடு பிதுக்கியவளை கண்டு அவனுக்கு கஷ்டமாய் போனது..
“நீ மட்டும் தனியாவா இருக்க” அவனது கேள்விக்கு அவனை எதிர் கொள்ள முடியாமல் தலை குனிந்துக்கொண்டு
“இல்ல நிறைய வேலை ஆட்களோடு தான் இருக்கேன்” என்றவனுக்கு தன் உயிர் ஒரு கணம் நின்று துடித்தது போல இருந்தது..
“திகம்பரி”
அவளால் “ம்ம்ம்” என்று கூட சொல்ல முடியவில்லை.. சுயபச்சதாபம் தன் மேலேயே அவளுக்கு ஏற்பட அவனை பார்ப்பத்தை தவிர்த்தாள்.
அவளது உணர்வு புரிய, தன் இருப்பை அவளுக்கு உணர்த்த வேண்டும் போல் ஒரு வெறி வந்தது.. ஆனால் இப்போது அதை உணர்த்தினால் தனது காதல் தவறாய் போகும் என்று அறிந்தவன் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டான் வேறு எதுவும் பேசாமல்.. அந்த நேரம் ஓட்டுனர் தாத்தா வர வாங்கி வந்த பார்சலை அவனிடம் நீட்டீனார்.
கொஞ்சமும் கூச்சமே இல்லாமல் அதை வாங்கி அவளது கட்டிலிலே பிரித்து வைத்து உண்ண தொடங்கினான்..
தாத்தாவிடம் தண்ணீர் கேட்க, அவரும் ஓடி போய் வாங்கி வந்து குடுத்தார்.
பின்பும் அவள் டிச்சார்ச் பண்ண மத்தியம் ஆகும் வீட்டுக்கு போய் அவள் சாப்பிட ஏதுவா உணவு கொண்டு வருமாறு பணிக்க அவர் திகம்பரியை சம்மதமாக பார்த்தார்.
அவருக்கு சம்மதத்தை கொடுத்தவள் அவர் கிளம்பும் வரை அமைதியாக இருந்தவள்
“ஏன் இப்படி பண்றீங்க அவர் வயசானவர், அவரை போய் இப்படி அலைய வக்கிறீங்க பாவம் இல்லையா அவரு..” கடுப்படிக்க
“அப்படியா அப்போ சரி அவர் இங்க உன் கூட இருந்து உன்னை கட்டி பிடுச்சு...” என்று இன்னும் ஏதோ சொல்ல வந்தவனின் வாயை தாவி வந்து தன் கைகளால் பொத்தியவள்
“ஏண்டா இப்படி பேசுற..”
“பின்ன என்னடி.. நானே இத்தனை நாளுக்கு பிறகு இப்போ தான் உன்னிடம் பேச சந்தர்ப்பம் கிடைச்சிருக்குன்னு இருக்கேன்.. இப்போ வந்து உனக்கு சேவகம் பண்ணி அந்த பெரியவருக்கும் சேவகம் பண்ணனுமா சொல்லுடி” என்று கத்தியவனை கண்டு திகைத்து தான் போனாள்.
“ரொம்ப கோவ படுவீங்களா”
“ம்ம்” என்றான் அதையும் உறுமலாக
“என்ன அமைதியாகிட்ட... ஏன் இவன் நமக்கு செட்டாக மாட்டான்னு தோணுதா..” கோவம் கொஞ்சமும் குறையாமல் கேட்டவனை கண்டு முறைத்தாள்.
“ரொம்ப முறைக்காதடி.. இந்தா” என்று அவளுக்கு வாங்கி வந்ததை ஊட்டி விட அவள் மறுப்பாய் தலை அசைத்து வேணாம் என்றாள்.
“அடி பிச்சுடுவேன் மரியாதையா ஆ வாங்குடி” என்றவன் வலுகட்டாயமாய் அவளுக்கு ஊட்டி விட போக
“என்ன ரொம்ப தான் மிரட்டுறீங்க”
“பின்ன நீ பண்ற வேலைக்கு கொஞ்சுவாங்களா... காலையில ஒழுங்கா சாப்பிட்டு இருக்க மாட்ட இப்பாவாவது சாப்பிடு” என்றவனின் அன்பில் உருகித்தான் போனாள்.
“சரி நானே சாப்பிட்டுக்குறேன்”
“எதுக்கு பொறவு கை கழுவ உன்னை நான் வாஸ் பேசனுக்கு தூக்கிகிட்டு போகணும்.. அந்த அளவு என் கிட்ட ஸ்டென்த் இல்ல அதனால நானே ஊட்டி விடுறேன்” என்று ஊட்டி விடுவதுக்கு சாக்கு சொன்னவனை கண்டு சிரிப்பு வர அவனுக்கு சம்மதம் சொல்லி வாயை திறந்தாள். அவனும் எந்த விகல்பமும் இல்லாமல் சிறு பிள்ளைக்கு ஊட்டி விடுவது போல ஊட்டி விட திகம்பரிக்கு கண்கள் கலங்கியது.
அவன் முன் அழுதாள் அவன் திட்டுவான் என்று புரிய கண்ணீரை உள்ளுக்குள் இழுத்துக்கொண்டாள்.
“உங்க அப்பா போன் நம்பெர் குடு..” என்றவன் அவளது மொபைலை பிடுங்கி அப்பா என்று சேவ் பண்ணி வைத்திருந்த எண்ணுக்கு தன் போனிலிருந்து கால் பண்ணினான்.
“டேய் என்னடா பண்ற” அவள் பதறி தடுக்கும் முன் அந்த பக்கம் அவளுடைய அப்பா அவனது காலை அட்டென் பண்ணி விட்டார்.
“ஹலோ யாரு”
“ம்ம் நான் உன் மருமவன் பேசுறேன்.. உன் பேர புள்ள அதாவது என் மகன் உன் பொண்ணு வயித்துல இருக்கான்.. இப்போ மூணு மாசம்.. மருத்துவமனைக்கு செக்கப்புக்கு வந்துருக்கோம்” என்றவனை கண்டு உயிர் நடுங்கி “ஆவ்” என்று வாயை பொத்திக்கொண்டு கணகள் விரிய அதிர்ச்சியுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்தாள் திகம்பரி..
அத்தியாயம் 15
அந்த பக்கம் கேட்டுக்கொண்டிருந்த திகம்பரியின் அப்பா ராஜுக்கு தலையில் இடி இறங்கியது போல் இருந்தது..
“ஹாலோ யா....ரு... யாரு பேசுறது” ஒரு வேலை நம் காது தான் தவறா கேக்குதோன்னு மறுபடியும் கேட்க..
“யோவ் உனக்கு ஒரு முறை சொன்னா பாத்தாதா... ஒரு வேலை காது அவுட்டா...“
“தம்பி பிளீஸ் விளையாடாதீங்க யாரு பேசுறீங்க..” பதறி போனார் அவர். அவரது பதட்டத்திலும் மரியாதையான பேச்சிலும் சற்றே கோவம் குறைய
“நான் உங்க மருமகன் பேசுறேன். உங்க பொண்ணு இப்போ மூணு மாசம்.. டாக்டர் கொஞ்சம் க்ரிடிகல்னு சொல்லி இருக்காங்க ப்ளீஸ் வாங்க..” என்று விட்டு வேறு எதுவும் பேசாமல் உடனே வைத்துவிட்டான்.
தான் கேட்டது சரிதான் என்று உணர்ந்து பதறி அடித்துக்கொண்டு தன் மகளுக்கு போன் போட்டார் அவர்.
அவனிடம் இருந்த தன் போன் அடிக்க, எட்டி பார்த்தவள் அப்பா என்று புரிய இருந்த அதிர்ச்சி விலகி அப்பாவிடம் தன் நிலையை நிருபிக்க நினைத்து அவனிடமிருந்து வாங்க முயன்றாள்.
“குடுங்க” என்று கை நீட்டினாள் மித மிஞ்சிய கோவத்துடன்.
“இப்போ எதுக்குடி கோவ படுற...”
“பின்ன நீங்க செஞ்சு வச்சிருக்குற வேலைக்கு கொஞ்சவா முடியும்.. கடுப்பை கிளப்பாம மரியாதையா இங்க இருந்து போங்க..“ சொல்லும் போதே அவளது விழிகள் கலங்கி விட்டது..
“ஏய் லூசு எதுக்குடி இப்போ அழுகுர”
அவன் கேக்கவும் பட்டென்று வழிந்தது கண்ணீர்..
“எங்க அப்பாகிட்ட என்னை அசிங்க படுத்தீட்டீங்கல்ல”
“உனக்கு உங்கப்பன பார்க்கணுமா வேணாமா”
“பார்க்கணும் தான் அதுக்காக இப்படி தான் செய்யுறதா...”
“கொஞ்சமாச்சும் அக்கறை வேணாமா வயசு புள்ளைய தனியா விட்டுட்டு போனா என்ன மாதிரி விளைய்வுகள் வரும்னு.. அது தான் சின்ன ஷாக்.. நீ அப்படியே உன் கற்பு போன மாதிரி ஓவரா சீன் போடாதாடி.. பொறவு நிஜமாவே ஏதாவது பண்ணிட போறேன்” என்று நக்கல் பண்ண அவனது பேச்சில் காண்டானவள்
”உன்னை என்ன பண்றேன்னு பாருடா எரும..” என்று திட்டியபடி கட்டிலை விட்டு எழுந்து தன் வலியை பொறுத்துக்கொண்டு அவனை அடிக்க வர
அவளது கைகளை பிடித்து தடுத்தபடி
“நீ இப்படி நடந்துகிட்டீனா எனக்கு அப்படி தான் செய்ய தோணுது.. அதுவும் நீ போட்டு இருக்குற இந்த ஜோலி” என்று கூறியவன் அழகாய் சின்ன இடைவெளியில் தெரிந்த அவளது வெற்று இடையை வருடி விட விதிர் விதிர் போனாள்.
“எனக்கு உங்க பேரு கூட தெரியாது.. ஆனா நீங்க பண்ற வேலை சத்தியாமா என்னால கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல.. ப்ளீஸ் விடுங்க” கண்கள் லேசாய் கண்ணீரில் மின்னியது அவளுக்கு..
“ஏண்டி என்னை பார்த்தா என்ன பொம்பள பொருக்கி மாதிரி இருக்கா.. தொட்டவுடனே அழுவுற..” அவன் காய அவனது அந்த கோவமும் அவளை வறுத்தவே செய்தது.
“ப்ச் ஏன் தவறாய் நினைச்சுக்குறீங்க... நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க.. ஒரு மணி நேரமா தான் எனக்கு உங்களை தெரியும். ஆனா நீங்க அதுக்குள்ள இவ்வளவு உரிமை எடுத்துகிட்டா எப்படி... நீங்க யாரு என்னனே தெரியாம எப்படி” என்றவளை கடுப்பாய் பார்த்து தன் அடையாள அட்டையை எடுத்து காட்டினான்.
“இப்போ நம்புறியா”
“ப்ச் அடையாலம்னா இது இல்ல..”
“வேறு என்ன தாண்டி வேணும்..” கடுமையாய் கேட்டவனை கண்டு அதிர்ந்தாலும்
“நான் உங்க கூட அதிக நேரம் பழகணும்.. உங்களை பத்தி எல்லாத்தையும் தெருஞ்சுக்கணும்... அதுக்கு பிறகு என் மனசை உங்களை போல உங்க கிட்ட குடுக்கணும்.. அதுக்கு பிறகு தொட்டுக்கலாம் அதுவரை நீங்க தொடுறது எனக்கு தவறா தெரியுது..” என்று அவள் முடிக்கும் முன்னவே..
“ஓ அப்போ என்னை பார்த்தா உன் கிட்ட பழகி உன்னை ஏமாத்தி புள்ளைய குடுத்துடுவேன்னு நினைக்கிறியா” வெடுக்கென்று கேட்டவனை கண்டு ‘விதி அப்படி தாண்டா நீ செய்ய போற.. ன்னு’ சிரிக்க அந்த சிரிப்பு இருவரின் காதிலும் விலாமல் போனது.. ஐயோ பாவம்..
“ஐயோ நான் அப்படி சொல்லல... சட்டுன்னு ஏத்துக்க முடியல அது தான்.” விளக்கம் வைக்க அதை புரிந்துக்கொள்ளாமல் அவளிடம் மேலும் மல்லுக்கு நின்றுக்கொண்டிருந்தான்..
“என்னத்தடி ஏத்துக்க முடியல.. நான் ஊட்டும் போது மட்டும் வாங்கி கிட்டில்ல.. அப்போ நான் தொடும் போதும் முத்தம் குடுக்கும் போதும் நீ ஏத்துகிட்டு தான் ஆகணும்” என்று சொன்னவனை கண்டு திகைத்து போய் பார்த்தாள்.
‘அட பாவி...சாப்பாடு ஊட்டுறதும் முத்தம் குடுக்குறதும் ஒண்ணாடா...’
“என்ன யோசிக்குற... அப்படியெல்லாம் உன்னை விட முடியாது.. வா வந்து முத்தம் வாங்கிட்டு போய் படுத்துக்க” என்று அதிகாரம் பண்ணியவனை எந்த லிஸ்ட்ல சேர்க்குறதுன்னு தெரியாம உறைந்து போய் நின்றாள் திகம்பரி.
“ராய் ப்ளீஸ்..”
“என்னடி ப்ளீஸ்... என்னை இன்சல் பண்ணுணீள்ள அதுக்கு பனிஷ்மென்ட்”
“டேய் எரும அது இன்சல்ட் பண்ணுனது இல்லாடா..”
“பொறவு வேற என்ன..” எரிந்து விழுந்தவனை கண்டு ஐயோ என்று வந்தது அவளுக்கு...
“ராய் நான் சொல்றதை முதல்ல கேளுங்க..” புரிய வைக்க முயற்சி பண்ண அவனோ
“அதுக்கு முன்னாடி எனக்கு ஒரு முத்தம் குடு..” என்றான் தன் பிடியில் இருந்த படி. அவனது அந்த பேச்சை கேட்டு
“டேய்” பத்திரகாளி அவதாரம் எடுத்து விட்டாள் திகம்பரி...
“என்னடி ஆம்பளைக்கு முன்னாடி குரல் உசத்தி பேசுற.. ரொம்ப பொறுமையா உன் கிட்ட கேட்டு கிட்டு இருக்கேன்.. நீ என்ன ரொம்ப ஓவரா போற... நான் பொறுமையா இருக்குறதுனால தான் நீ இந்த அளவு பேசிகிட்டு இருக்குற.. இல்லைன்னு வைய்யி சேதாரம் ரொம்ப அதிகமா ஆயி போகும் பாத்துக்க..”
‘இப்படி பேசுறவன்ட என்னத்தன்னு போய் பேசுறது’ வெறுத்து போனது திகம்பரிக்கு.
அவள் எதுவும் பேசாமல் கட்டிலில் போய் அமர்ந்துக்கொண்டாள்.. அவளையே பார்த்துக்கொண்டிருந்தவன் பின்பு அவளருகில் ஒட்டி உரசிக்கொண்டு மீண்டும் அவளது போனை எடுத்து அவனது அண்ணனுக்கு போன் போட்டான்.
“ஹலோ யாரு” அந்த பக்கம்
“நான் உன் மச்சான் பேசுறேன்டா... உன் தங்கச்சி மாசமா இருக்கா” என்றவனை கண்டு தலையிலே அடித்துக்கொண்டாள் திகம்பரி..
“ஏய் யாரு பேசுறது..” அதட்டல் அந்த பக்கம் அதிகமாய் இருந்தது..
“கொந்தளிக்காம வந்து சேருடா தாய் மாமா சீரு நீ தான் செய்யணும் சீக்கிரமா வா” என்று திகம்பரியை பார்த்து கண்ணடிக்க அவளுக்கு பத்திக்கொண்டு வந்தது..
அவன் அண்ணனுக்கும் ஒரு குண்டை ஒன்னு போட்டு விட்டு “வாடி நாமா பழகலாம்...” என்று அவளது கையை பிடிக்க வர அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட அவனை கொஞ்சமும் அசைக்க முடியாமல் அவள் தான் பரிதாபமாய் நின்றாள்.
“டேய் ஏண்டா இப்படி படுத்துற..”
“ப்ச் வாடி..” என்று அசால்ட்டாய் அவளை அப்படியே தூக்கி தன் மடி மீது அமர வைத்து அவளின் இடையே சுற்றி தன் கைகளை கோர்த்துக்கொண்டு அவளின் தோளில் முகம் புதைத்து
“உன்னை பத்தி சொல்லுடி” என்றவனின் நெருக்கம் அவளுக்கு அவஸ்த்தையாய் இருக்க அவனது பிடியிலிருந்து நழுவ பார்க்க அதற்கு விடாமல் அவளை இன்னும் நெருக்கிக்கொண்டு
“ம்ம் சொல்லு”
“இப்படி இருந்தா எப்படிடா சொல்ல முடியும்”
“அதெல்லாம் சொல்லலாம் சொல்லு” என்றவன் அவளை வாசம் பிடிக்க அவனது செயல் அவளுக்கு கூச்சத்தையும் குறுகுறுப்பையும் குடுக்க நெளிந்தாள்.
“ராய் ப்ளீஸ்”
“அப்போ ஒரு முத்தம் குடு...” கண்டிசன் போட
“டேய்”
“இது இல்லன்னா அது” டீல் பேசியவனை கண்டு எதுவும் செய்ய முடியாமல் திணறி போனாள்.
இவன் கைக்குள்ள இருக்குறதுக்கு முத்தமே குடுத்துடலாம்.. என்று முடிவெடுத்தவள் அவனது கன்னத்தில் முத்தமிட அதை கை கொண்டு அழித்தவன்
“இதெல்லாம் செல்லாது... அங்க இல்ல இங்க” என்று தன் உதட்டை காண்பித்தான்.
“நான் இந்த வினைக்கே வரல..போடா நீயும் உன் டாவும்(காதலாம்.. இவங்க காதலுக்கு பேரு டாவாம்)” எழ போக பெரிய மனது பண்ணியவன் போல “சரி நீ வேணாம் நானே குடுக்குறேன்” என்று அவள் திணற திணற அவளது இதழ்களில் தன் இதழை புதைத்து உயிரை உருஞ்சும் கால அரக்கனை போல உயிருள்ளவளின் இதழில் இருக்கும் தீஞ்சுவையை அவனது உயிருக்கும் மேலாண உயிரை சுவைத்தான்.
முதல் அனுபவம் இருவருக்கும்... ஏதேதோ செய்தது... காற்றில் பரந்த உணர்வு... சட்டென்று தரை தொட்டது போல் இருந்தது... பனி தேசத்தை இங்கிருந்தே இருவரும் உணர்ந்தது போல குளுமையாய் இருந்தது...
கண்கள் கூட உணர்வின் மிகுதியில் லேசாய் கலங்கி இருந்தது இருவருக்கும்...
இருவரும் ஒரு கட்டத்தில் விலக திகம்பரி அவனுக்கு முதுகு காட்டி சட்டென்று திரும்பி நின்றுக்கொண்டே நடந்து போய் சுவரில் முட்டிக்கொண்டு நின்றாள். அவளால் அவன் எழுப்பிய உணர்வுகளை தாங்க முடியாமல் மூச்சு வாங்கி அந்த இனிமையை உள் வாங்கி கிளர்ச்சி அடைய..
“ரீகா” உயிரை கரைக்கும் குரலில் அவளை கை நீட்டி அழைத்து கண்களில் மிதமிஞ்சிய நேசத்தை வைத்து அவளை பார்த்தான். அவளும் அவனை நிமிர்ந்து பார்த்தாள். அவனது கண்களில் தெரிந்த காதலை தன்னுல் முழுமையாய் உணர்ந்தவள்.. அவனது குரலில் அதுவரை இருந்த தடைகள் விலகி ஓட, ஓடி சென்று அவன் மார்பில் முட்டி மோதி அவனிடம் சரணடைந்தாள்..
தன்னுள் ஒடுங்கியவளை இறுக்க அணைத்தவன்
“இப்போ நான் யாருடி” அவளின் காதோரம் கிசுகிசுப்புடன் கேட்டவனை கண்கள் கலங்க ஏறிட்டு பார்த்தவள்
“நீ என்னோட மூச்சு காத்துடா..” என்றாள் ஒட்டு மொத்த காதலையும் கண்களில் தேக்கி.
அவள் ‘காதலன் கணவன்’ என்று சொல்லுவாள் என்று தான் நினைத்தான். ஆனால் அவள் ‘மூச்சு காத்து’ என்று சொல்லவும் அவளின் நேசம் அவனுக்கு முழுமையாய் புரிந்து போனது..
“நிஜமாவாடி”
“ம்ம்”
“நம்ப முடியலயே” லேசாய் அவளை சீண்டி விட..
“நம்ப வேண்டாம்...” என்றவள் அவனது நெஞ்சில் இன்னும் புதைய... அவளை உச்சி முகர்ந்தவன். மென்மையாய்
“முத்தம் குடுத்ததுனால இந்த மாற்றமா ரீகா..” லேசாய் வலியோடு வந்தது அவனது வார்த்தைகள்.
அதை புரிந்து கொண்டவள் “உன் கண் பார்வை சொல்லாத காதலா.. இல்லை உன் செயல்கள் சொல்லாதா காதலையா உன் முத்தம் எனக்கு சொல்லி விடும்... என் நேசம் உன் முத்தத்தால் வந்ததுன்னா நினைக்குற...” அதைவிட வலியோடு அவள் கேட்க..
“ரீகா” அவளது பதிலில் உள்ளம் நெகிழ்ந்தவன் கண்கள் லேசாய் கலங்க “என் உணர்வு புருஞ்சுடுச்சா கண்ணம்மா..” ஏக்கமாய் கேட்டவனை இன்னும் இறுக்கமாக அணைத்தவள்
“ம்ம்ம் ரீகான்னு நீ கூப்பிட்ட ஒற்றை சொல்லே எனக்கு என் மீதானா உன் காதலை புரிய வச்சிடுச்சு... அதை விட உன் கண் பார்வை” என்று அவனது கண்களை வட்டமிட்டவள்
“இந்த பார்வை எனக்கு முழுசா புரிய வச்சிடுச்சு... நொடி நேரத்துல எப்படிடா இவ்வளவு காதலை உன் கண்ணுல கொண்டு வந்த” வியப்பாய் கேட்டாள்.
“ம்ம் உள்ளுக்குள்ள இருந்துருக்கும்.. அது தான் போக வழி தெரியாமா அப்படியே வெளியே வந்திருக்கும் போலடி..” அவனையே கிண்டல் பண்ணிக்கொள்ள
“இருக்கும் இருக்கும்..” என்று சிரித்தாள்.
“நிஜமா என் மேல அவ்வளவு காதலாடா”
“ம்ம்ம் எப்படி சொல்றதுன்னு எனக்கு தெரியலடி.. எனக்கு ஏன் உன்னை புடுச்சதுன்னு கூட தெரியாது.. ஆனா எனக்கு உன்னை ரொம்ப பிடிக்கும்.. உன்னை தள்ளி நின்னே பார்த்துக்கலாம்னு தான் நினைச்சேன்..
ஆனா ஒரு கட்டத்துக்கு மேல முடியல.. உன் கிட்ட பேசணும்.. என்னளவு நீயும் என்னை காதலிக்கணும்.. எனக்காக நீ உசுர குடுக்கணும்.. என் மேல பைத்தியமா இருக்கணும்.. எனக்காக எல்லாத்தையும் செய்யணும்.. உன் அலாதி அன்புள்ள நான் முழுசா உனக்குள்ள தொலைஞ்சி காணாமா போகணும்னு அவ்வளவு ஆசையா இருக்குடி”
“அது தான் என்னை கட்டு படுத்த முடியாம இன்னைக்கே என்னை தெரிய வச்சுட்டேன்..” என்று அழகாய் புன்னகைத்தவனின் அன்பில் கரைந்து போக விழிகளில் கண்ணீர் வந்தது..
“ப்ச் எதுக்குடா அழற.. அது தான் நான் இருக்கேன்ல... நான் பார்த்துக்குறேன்.. என் ரீகா குட்டிய சரியா...” அவனது வாஞ்சையில் நெகிழ்ந்தவள் தலையை உருட்டினாள்.
“அம்லு...”
“ம்ம்”
“நான் இன்னொரு முறை அப்படி பண்ணவாடி”
“எப்படி டா”
“இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பண்ணுனனே... உன் உதட்டோட..” என்று சொல்ல வந்தவனை மேற்கொண்டு சொல்ல விடாமல் மோத்தி எடுத்தாள்.
“உயிர் காதலி அடி பட்டு ஆஸ்பத்திரியில இருக்கேன்.. அவளுக்கு ஒரு ஜூஸ் கூட வாங்கி குடுக்க முடியல.. இவருக்கு முத்தம் வேணுமா.. முத்தம் இந்தா தரேன்” என்று அருகில் இருந்த அவளுடைய பையை எடுத்து அவன் மீது வீச அதை கேட்ச் பிடிச்சவன்
“என்னடி காதலி சொல்லி ஒரு நிமிஷம் கூட ஆகல.. அதுக்குள்ள பொண்டாட்டி மாதிரி வன்முறைய கையில எடுக்குற..” அப்பாவியாய் கேட்டவனை கண்டு சிரிப்பு பொங்கினாலும் அடக்கிய படி
“பின்ன நீ கேக்குற விசயத்துக்கு உன்னை தூக்கி கொஞ்சவாடா முடியும்.. மரியாதையா போய் எனக்கு ஒரு ஜூஸ் வாங்கிட்டு வா.. வித் ஐஸ்..” என்று சொல்லி விட்டு படுக்கையில் அமர்ந்து கால் மேல் கால் போட்டு கொண்டாள். அவளது அந்த தோரணையில் பல்லை கடித்துக்கொண்டு வேறு வழியில்லாமல் சூசை வாங்கி வர சென்றான்.
‘ஹஹஹா கடவுள் இருக்கான்டா ரவி பயலே.. உன்னை எப்படியெல்லாம் படுத்தி வைப்பேன்.. ஆனா இப்போ இங்க என்னையவே படுத்தி வைக்க ஒருத்தி வந்திருக்காடா... உன்னை படுத்துனதுக்கு இன்னைக்கு நான் அனுபவிக்கிறேண்டா..’ புலம்பிய படி சிங்கம் ஒன்று தன் தோரணையில் இருந்து விலகி எலி போல அரவம் இல்லாமல் சென்றது... ஐயோ பாவம்.....
அத்தியாயம் 16
திகம்பரியின் அப்பாவிடமிருந்து கணக்கில்லாமல் கால் வர உள்ளம் துடித்தாலும், கை பரபரவென்று இருந்தாலும் அதை எல்லாம் அடக்கியபடி ராயரின் முகத்தையே பாவமாய் பார்த்தபடி இருந்தாள்.
கூடவே அவளது அண்ணனுடைய காலும் வர எடுக்க சென்றவளின் கரத்தை பட்டென்று தட்டி விட்டான் முறைப்புடன்.
“போடா ரொம்ப தான் படுத்துற..”
“இன்னும் சில மணி நேரம் தான் அதுக்கு பொறவு உன் பாடு உங்க அப்பா அண்ணன் பாடு.. உனக்கும் எனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை சரியா” என்றான் அதட்டலுடன்.
“அடபாவி அப்போ காதல் சொன்னது.. கட்டி புடிச்சது.. முத்தம் குடுத்தது.. எல்லாம் எந்த கணக்குடா”
“அதெல்லாம் காந்தி கணக்கு... நான் எத சொல்றேன் நீ எத புருஞ்சுக்குற லூசு” திட்ட
“என்னது லூசா”
“பின்ன.. இப்போ உங்க மூணு பேத்துக்கும் இடையில நான் இருக்கேன்.. அவங்க நேருல வந்த பிறகு நான் உங்களுக்கு இடையில குறுக்க நிக்க மாட்டேன்.. உன்னை தடுக்கவும் மாட்டேன்னு சொன்னேன் பக்கி”
“ஓ அப்படி சொன்னியா... நீ..“ என்றவள் பிறகு “என்னடா சந்தடி சாக்குல பக்கிங்குற.. உன் காதலை போய் ஏத்துகிட்டேன் பத்தியா என்னை சொல்லனும்டா” பொய்யாய் அவனிடம் கோவம் கொண்டாள்.
”எது நீ ஏத்துகிட்டியா... ஹலோ மேடம் நான் ஏத்துக்க வச்சேன்” என்றான் திமிராக.
“ஓ இவரு பெரிய உலக அழகன் இவரு சொன்னவுடன் நாங்க ஏத்துகிட்ட மாக்கும்..”
“இல்லையா பின்ன” என்று அவன் மீசையை முறுக்கினான்.
“டேய் அய்யனாரு மாதிரி இருந்துகிட்டு உனக்கெதுக்கு டா இவ்வளவு சீன்” நக்கலாய் அவனை பார்த்து சொன்னவளின் இதழ் வளைவில் உயிரை தொலைத்தவன்
“நீ என்ன வேணாலும் என்னை சொல்லிக்கோடி.. ஆனா நீ என்னை கிண்டல் பண்ற ஒவ்வொரு வார்த்தைக்கும் ஒரு இதழ் முத்தம் குடுத்துடு..” என்றான் அலட்டிக்கொள்ளாமல்.
“அடேய் இது என்னடா பகல் கொள்ளையா இருக்கு..” சிரித்தபடி அவள் அதிர
“சரி அப்போ இரவு கொள்ளைன்னு வச்சுக்கோ. ஆனா அதுக்கு நான் வேற கேப்பேன் பரவலாயா” என்றவனின் பார்வை அவளிடம் மோசமாய் நடந்துக்கொள்ள
அவனது பார்வையில் கூசியவள் “டேய் அந்த பக்கம் திரும்புடா உன் பார்வையே சரியல்ல..” மிரட்ட சிறு பிள்ளை போல அவளது கோவம் இருக்க அவளை மிக நெருங்கி காதில் மெல்ல தன் மீசையை உரச செய்து “சரி நான் கண்ணை மூடிக்கிறேன்.. ஆனா என் கை....” என்று மேலும் ரகசியமாக ஏதோ சொன்னவனின் வார்த்தைகளில் முகம் சிவந்தவள் தன்னுள் எழும் உணர்வுகளை கட்டு படுத்த முடியாமல் பொங்கிய உணர்வுகளை அவனிடமே காட்ட தொடங்கினாள்.
அவளருகில் அமர்ந்து இருந்தவனை ஒரே அடியாக அடித்து கட்டிலை விட்டு கீழே தள்ளிவிட்டு தலையணையில் முகம் பதித்து சிவந்த முகத்தை மறைத்துக்கொண்டாள்.
“ஐயோ அம்மா...” என்று ராயர் அலற அவனது அலறலில் தூக்கிவாரி போட்டு எழுந்து அமர்ந்தவள் சத்தம் கேட்க கீழே எட்டி பார்த்தாள்.
பார்த்தவள் அவன் இருந்த கோலத்தை கண்டு வாய் விட்டு சிரிக்க ஆரம்பித்தாள்.
“ஹஹஹஹா”
“அடியேய் தள்ளிவிட்டு சிரிக்கிறியா இரு உன்னை என்ன பண்றேன்னு பாரு..” என்று எழுந்தவன் அவன் கீழே விழும்போது சாப்பிட்டுட்டு மீதம் வைத்திருந்த சாம்பார் அவள் அவனை தள்ளிவிடும்போது மேஜையில் வைத்திருந்த பொருட்களோடு இதுவும் அவன் கை பட்டு கீழே விழுந்த இவன் மீது விழுந்து சட்டை எல்லாம் நாசம் ஆகி இருந்தது.. மேலும் அதிலே காலை வைத்து எழவும் அவனுக்கு வழுக்கி விட்டது...
மறுபடியும் வழுக்கி விட்டு கீழே விழுந்தான்..
அதை கண்டவள் இன்னும் வேகமாய் சிரிக்க ராயர் காண்டானான்.
“சிரிக்காதடி”
“சாரி டா... ஹஹஹா.. நீ பண்ற சேட்டை அந்த மாதிரி இருக்கு.. முடியல ப்ளீஸ் டா இன்னொரு முறை சிருச்சுக்குறேன்” என்று மேலும் அவனை வெறுப்பேற்ற அவளது முகம் கொள்ளா சிரிப்பில் மனம் கசிந்தவன்
“ரீகா” எப்பொழுதும் போல உயிரை இழுக்கும் குரலில் அவன் அவளை அழைக்க
அதில் அவனை பார்த்தவளின் புன்னகை அப்படியே அடங்கிவிட்டது... அவன் கண்களில் கண்ட காதலுக்கு இணையாய் அவளது கண்ணிலும் காதல் மிளிர அதை பார்த்தவனுக்கு உள்ளுக்குள் சுகமாய் சாரல் வீசியது..
அவனுக்கு இது தானே வேணும்... எந்த கட்டுபாடும் இல்லாமல் எந்த தடையும் இல்லாமல் அவன் மீது அவள் காதல் கொண்டிருக்க வேண்டும்.. ஒரு மணி நேரத்திலே அது அவனுக்கு கிடைத்து விட உள்ளமெல்லாம் பெரு உவகையில் மிதந்தது..
“ரீகா” மீண்டும் அவன் அழைக்க “ம்ம்” என்று கூட அவளால் சொல்ல முடியவில்லை.. ஆனாலும் விழிகளை அவன் கண்களை விட்டு அவளால் எடுக்க முடியவில்லை.. ஏதோ மாய மந்திரத்துக்கு கட்டு பட்டவள் போல அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள்.
அவளின் நிலையை உணர்ந்தவன் தன் மேல் கிடந்து டியுப் ஒயர்கள், அவளுடைய சால், குளுகோஸ் ஏற்றும் ஸ்டிக் எல்லாவற்றையும் எடுத்து போட்டு விட்டு அவளை நெருங்கினான்.
அவன் அருகே வர வர சாம்பார் வாசமும் வர அதில் சுதாரித்தவள் அவனை தன் அருகில் சேர்க்க விடாமல் இரு கரங்களையும் நீட்டி அவனை தொடாமல் தடுப்பது போல
“ராய் ப்ளீஸ் கிட்ட வராதடா...” எச்சரித்தபடியே பின்னோக்கி சென்றாள்.
அது வரை மயக்கத்தில் இருந்தவன்... அவளின் தவிப்பை கண்டு அதிலிருந்து விடுபட்டு கேலியாக சிரித்த படி அவளை இன்னும் நெருங்கினான்.
“வேணாம்டா உடை எல்லாம் பாலா போய்டும் ராய்.. ப்ளீஸ்” கெஞ்சியவளை கண்டு
“அப்போ தொடாம இதழ் முத்தம் ஒன்னு குடு..” என்று கோரிக்கை வைத்தவனை கண்டு பாவமாய் பார்த்தாள்.
“ம்ஹும் முத்தம் வச்சா உன் சட்டையில இருக்குற சாம்பார் என் மேல ஒட்டும் நான் மாட்டேன்..”
“அப்போ சட்டைய கழட்டுறேன் நீ முத்தம் குடு” என்று சட்டையை அவிழ்க்க போக அது இன்னும் மோசம் என்று உணர்ந்தவள்
“இல்ல வேணாம்” என்று பதறி அவனை தடுத்தாள்.
“அப்போ இப்படியே குடு” உள்ளாசாமாய் அவன் கண்ணடித்து கேட்க, அவளுக்கு தான் முகம் சிவந்து, வெட்கத்தில் திணறி போனாள்..
“ராய்” அவளின் கெஞ்சலில் மனம் இறங்கியவன் “எப்போவும் இப்படியே உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு குடுத்து இறங்கி போவேன்னு நினைக்காதடி... சில சமயம் என் அதிரடியில் மூச்சு திணறி போவ.. அது எப்போ வேணாலும் நிகழும்” என்றவன் விலகி குளியல் அறைக்குள் நுழைந்துக்கொண்டு தன்னை சுத்தம் செய்ய ஆரம்பித்தான்.
அவன் சொல்லி விட்டு சென்ற வரிகளில் மனம் வெட்கியவள் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டு “பொருக்கி” என்று சுகமாய் திட்டிக்கொண்டாள்.
அன்றைய பொழுது மருத்துவமனையில் கழிய, இரவு வீடு வந்து அவளை பாதுகாப்பாய் விட்டவன் “கவனமா இரு. உங்க அப்பா அண்ணா வரும் போது நான் உன் கிட்ட இருப்பேன்.. பயப்படாதா.. எதையும் தைரியமா எதிர் கொல்லனும் சரியா..” என்று சொல்லி மனமே இல்லாமல் விடை பெற்றான்.
அதுவரை இருந்த இதம் அவன் விலகி சென்ற பின் காணாமல் போக கண்கள் கலங்கி போனது..
ஏனோ மனம் முழுவதும் பாரம் எரிய உணர்வு.. அவன் அருகில் இருந்தவரை அவளை சீண்டி விட்டு, சிரிக்க வைத்து, முறைக்க வைத்து, செல்ல கோவம் வர செய்து என்று அவளை நொடி கூட தனிமையை உணர விடாமல் ஏதாவது செய்துக்கொண்டே இருந்தான்.
அவனது செயல்கள் அவளை அடியோடு புரட்டி போட்டு மனம் முழுக்க அவனை நிரப்பிக்கொள்ள செய்தது...
இப்போது வெகுவாய் அவனது துணையை நாடிய உள்ளத்தை கட்டு படுத்த தெரியாமல் திண்டாடி போனவள் தட்டு தடுமாறி இன்று காலையில் இருந்து நடந்த சம்பவங்களை அலசி பார்த்தாள்.
ஒரு வேலை இது அத்தனையும் கனவோ.. ம்ஹும் இல்லை அவன் நிஜம்.. அது கனவாகவே முடியாது..
அது நிஜம் தான்.. அவனது கை அணைப்பின் சூடு இன்னும் என் தோளில் இருக்கிறதே.. இல்லை கனவு தானோ.. அவள் குழம்பி போய் நின்ற சமயம் அவளது கை காயம் அவன் நிஜம் என்பதை பறை சாற்ற மெல்ல ஒருவித உணர்வு மேலெழும்பி அவளை ஆசுவாசம் அடைய செய்தது..
மனமோ அவனிடம் முரண்டு கொண்டிருந்தது..
“இப்போ எதுக்கு இவன் போனான்.. என்னுடனே இருந்தால் இவனை என்ன செய்து விடுவேனாம்...” என்று அர்த்தமில்லாமல் அவன் மீது கோவம் கொண்டாள்.
சாப்பாடு கொண்டு வர அதை வேணாம் என்று மறுத்துவிட்டு விழிகள் குளமாக அவனை எண்ணி அழுதவளை கலைத்தது அவளுடைய கை பேசி..
அது யார் என்று பார்க்காமல் “இப்போ எதுக்குடா கால் பண்ற.. அதான் விட்டுட்டு போய்டியே அப்புறம் என்ன நான் சாப்டா உனக்கு என்ன சாப்புடாட்டி உனக்கு என்ன போடா” அவனை திட்டினாள்
“லூசு கதவை திறடி. அப்புறம் திட்டு” என்றவனது குரலில் தாவி வேகமாய் எழுந்து வந்து கதவை திறக்க அங்கே கையில் சாப்பாட்டு தட்டுடன் காசி விஷ்வநாத ராயர் நின்றிருந்தான்.
அந்த பொழுதில் அவனது வருகை அவளை கொஞ்சம் கூட சங்கட படுத்தவில்லை. மாறாக “அப்பாடா வந்துட்டானா” என்று தான் இருந்தது அவளுக்கு.
“விட்டுட்டு போனீல இப்போ எதுக்குடா வந்த போகவேண்டியது தானே..” அவனிடம் முறுக்கி கொள்ள
“ம்ம் உங்க வீட்டு சாப்பாடு நல்லா இருக்குமாம் அதுதான் வந்து சாப்பிட்டுட்டு போகலாம்னு வந்தேன்” என்று நக்கல் பண்ணியவன் அவளுடைய படுக்கையில் அமர்ந்து நெய் மிதக்கும் பொங்கலை அவளை பார்க்க வைத்துக்கொண்டே சாம்பார் சட்னியோடு உண்ண தொடங்க
“டேய் அது என்னோட சாப்பாடு” அவன் வந்தது அவளுக்கு மகிழ்வை தர அவன் சாப்பிடும் அழகை மனம் நிறைய பார்த்தவள் அவனிடம் வம்பிழுக்க தொடங்க அவனும்
“நீ தான் வேணாம்னு சொல்லீட்டீல்ல பொறவு என்னடி போ தர மாட்டேன்” என்று அவளுக்கு முதுகு காட்டி திரும்பி உட்கார்ந்து சாப்பிட்டான். சிறு பிள்ளை போல அவனது செயலில் அவனிடம் வம்பு இழுக்க வேண்டும் போல் தோன்ற
“ம்ஹும் அது என்னோடது குடுடா” என்று இவளும் மல்லுக்கு நிக்க ராய் சிறு சிரிப்போடு அவளுக்கு ஊட்டி விட விழிகள் கலங்க வேறு எதுவும் பேசாமல் அவன் ஊட்டி விட்டதை மறுப்பின்றி நெகிழ்வாய் வாங்கிக்கொண்டாள்.
அன்றிரவு அவன் அவளது வீட்டின் கூடத்திலே தங்கிக்கொண்டான் கூடவே ஓட்டுனர் தாத்தாவையும் வைத்துக்கொண்டான்.
அவன் வெளிகூடத்தில் அங்கவே படுக்க போவதாக சொல்ல அவள் எதுவும் பேசாமல் அவளது அறையின் கதவை திறந்து வைத்துக்கொண்டு சமையல் செய்யும் செல்லதாயை துணைக்கு வைத்துக்கொண்டு படுத்துக்கொண்டாள். அவனது அன்பில் மனம் குலைந்தவள் நள்ளிரவு பொழுது அவன் கேட்டதை குடுக்க வர அதை தடுத்தவன்
“எனக்கு நீ போதும் அது சும்மா உன்னை சீண்டி பார்க்க கேட்டது... நேரமாச்சு நீ போய் படு” என்று புன்னகையுடன் சொன்னவனை கண்டு அவனது நெற்றியில் முத்தமிட்டு விட்டே வந்து படுத்தாள்.
நிம்மதியான உறக்கம் அன்றைக்கு அவளுக்கு..
அடுத்த நாள் பொழுதில் அடித்து பிடித்துக்கொண்டு ராஜும், நந்தாவும் வந்து சேர்ந்தார்கள்.
வந்தவுடனே நந்தா கூடத்தில் இருந்த சொகுசு இருக்கையில் காலை கட்டியபடி தொலைகாட்சி பார்த்துக்கொண்டிருந்த திகம்பரியை பிடித்து இழுத்து அடிக்க வர, கிச்சனிலிருந்து சிக்கன் சூப் குடித்த படியே “ரீகா சூப் செம்மையா இருக்குடி.. நீ எப்போ இந்த மாதிரி செய்ய கத்துக்குவ” என்றபடி வந்த ராயரின் கண்களில் கூடத்தில் நடந்த காட்சி விழ
“டேய் அவளை ஏண்டா அடிக்குற..” என்று பதறி குரல் குடுத்த படியே ராயர் அவர்களிடம் விரைய, நந்தா அவன் யார் என்று ஒரு கணம் யோசித்தவன் பின் ‘திகம்பரியின் கர்ப்பம், இவனது இருப்பு’ என்று ஒன்றோடு ஒன்று தொடர்பு படுத்தி பார்த்தவனுக்கு கோவம் இன்னும் பெருகியது..
அவனை அங்கு அதுவும் தன் வீட்டில் எதிர் பார்க்காத நந்தா வந்த கோவத்தை திகம்பரியை விட்டுவிட்டு ராயரிடம் விரைந்து சென்று அவன் சுதாரிக்கும் முன் அவனது கன்னத்தில் ஓங்கி ஒரு அரை விட்டிருந்தான்..
“நந்தா..”
“அண்ணா..“
என்று அப்பாவும் மகளும் அதிர்ந்து தடுக்கும் முன் நந்தா முந்தி இருந்தான்..
கோவை பழம் போல சிவந்திருந்த கண்களை கொண்டு நந்தாவை பார்த்த ராயர் கண்ணிமைக்கும் நேரம் கூட எடுத்துக்கொள்ளாமல் திருப்பி நந்தாவின் கன்னத்தில் அவனை விட பல மடங்கு வேகத்தில் ஒரு அறை விட்டான்.
அத்தியாயம் 17
நந்தா ராயரிடமிருந்து இப்படி ஒரு பதிலடியை கொஞ்சமும் எதிர் பார்க்கவில்லை.. அடினா அடி அப்படி ஒரு அடி... ஸ்டீரிங் பிடித்த கை அல்லவா.. வலி பயங்கரமாய் இருந்தது.. அதை தாளாமல்
“டேய் என்ன திமுரு இருந்தா என்னை அடிச்சிருப்ப” என்று நந்தா ராயரிடம் எகிறினான்..
“உனக்கு என்ன தைரியம் இருந்தா நீ என்னை அடிச்சிருப்ப” என்று பதிலுக்கு ராயரும் கேட்க
“நீ தப்பு செஞ்ச அது தான் அடுச்சேன்” தெனாவட்டாய் கொஞ்சமும் அலட்டல் இல்லாமல் சொன்னவனை கண்டு
“நான் தப்பு செஞ்சேன்னு நீ பாத்தியா..”
“அது தான் போன்ல சொன்னியே, அது தான் நேருல வந்து காட்டுனேன்” என்று தான் அடிச்சதை நியாயப்படுத்தினான்.
அவனை ஒரு கணம் கூர்ந்து பார்த்தவன் ராஜிடம் திரும்பி “நான் எந்த தவறும் பண்ணல.. இப்போ வரையிலும் உங்க பொண்ணு உங்க பொண்ணாவே தான் இருக்குறா..” என்ற போது அது வரை இருந்த இருக்கம் குறைந்து ஆசுவாசமானார் ராஜ்.
“தம்பி நீங்க சொல்றது..” கண்களில் கண்ணீரே வந்து விட்டது அவருக்கு.
“நான் சொல்றது உண்மை தான் சார்... உங்களை வர வைக்க எனக்கு வேற என்ன சொல்றதுன்னே தெரியல... அதுதான்”
“அப்படி என்ன உயிர் போற விஷயம்னு நீ இப்படி சீன் போட்டு ஓவரா பண்ணிக்கிட்டு இருக்குற.. ஆக்சுவலி நீ யாரு.. எதுக்கு தேவை இல்லாம எங்க வீட்டு விசயத்துல தலையிடுற..” நந்தா துள்ள
“உயிர் போற விஷயம் தாண்டா தண்டம்.. காசு பணம் சம்பாரிச்சா போதுமா.. மொதல்ல உறவுகளுக்கு உயிரை குடு...” என்று அவனை முறைத்தவன் ஓட்டுனர் தாத்தாவை வர சொல்லி என்ன நடந்தது என்பதை சொல்ல சொல்ல அவரும் நடந்ததை கூற
அதை கேட்ட திகம்பரியின் அப்பா சுக்கு நூறாய் உடைந்தார். தாவி சென்று தன் மகளை தன் உயிரல் புதைத்தவர்
“என்னடா கண்ணா இப்படி பண்ணிட்ட அப்பா உனக்காக தானேடா இப்படி போய் சம்பாரிக்கிறேன்.. நீயே இல்லன்னா அப்புறம் நான் இங்க இருப்பனா.. உன் பின்னாடியே வந்துடுவேண்டா..” திகம்பரியை அணைத்துக்கொண்டு கதற..
“இல்லப்பா இனி இப்படி பண்ண மாட்டேன்.. உங்களையும் அண்ணாவையும் பார்த்து ஆறு மாசம் ஆகிப்போச்சா.. உங்க ரெண்டு பேத்தையும் வர சொன்னா நீங்க வரலையா.. அது தான் எனக்கு என்ன பண்றதுனே தெரியல.. சாரி பா” என்று அவளும் அவரை கட்டிக்கொண்டு கதறினாள்.
“இது எல்லாத்துக்கும் காரணம் நாங்க தானேடா நீ எதுக்குடா சாரி சொல்ற... அப்பா சாரிடா...” என்று ஆதரவாய் அவளை அணைத்துக்கொண்டு அவளின் கண்ணீரை துடைத்துவிட்டு உச்சி முகர்ந்தார்.
திகம்பரியின் இந்த செயலை கண்டு நந்தாக்கு கூட கஷ்டமாய் போனது..
தன் மேலும் தவறு இருப்பதை உணர்ந்தவன் திகம்பரியிடம் சென்றவன் அவளது தலை கோத அவனது ஸ்பரிசத்தை உணர்ந்தவள்
“சாரிண்ணா இனி இப்படி பண்ண மாட்டேன்” விழிகளில் வழிந்த கண்ணீருடன் கேட்டவளை பார்த்தவனுக்கு சிறு பிள்ளை போலவே தோன்ற
“உன் தப்பு எதுவும் இல்லடா... நானோ இல்ல அப்பாவோ உன்னை மாத்தி மாத்தி பார்க்க வந்திருக்கணும் பண்ணாதது எங்க தப்பு தானே.. இனி இப்படி நடக்காம பார்த்துக்குறோம்.. ஆனா இனி ஒருமுறை நீ இப்படி எந்த விபரித முடிவும் எடுக்க கூடாது சரியா...” என்று அவன் தன் பாசத்தை காட்ட, அந்த அழகிய குடும்பம் பாசபிணைப்பில் கட்டுண்டு இருந்தது..
அதை பார்த்த நம்ம ராயருக்கு பிடிக்குமா... அதுவும் திகம்பரியை இருவரும் சொந்தம் கொண்டாடுவது புடிக்குமா.. அதை கலைக்கும் விதமாய்
“ம்ம் போதும் உங்க பாச பிணைப்பு நான் ஒரு விஷயம் உங்க கிட்ட சொல்லணும்” என்று அதுவும் குறிப்பாய் நந்தாவை பார்த்து கூற
“டேய் நீ இன்னும் போகலையா..” அவனது பேச்சை கண்டு நந்தா எகிற
“டேய் அடங்குடா.. ஓவரா சீன் போடாத” என்றவன் ராஜிடம் திரும்பி “சார் நான் உங்க பொண்ணை விரும்புறேன் கல்யாணம் பண்ணிக்க ஆசை படுறேன்...” என்று சொல்லி முடிக்கும் முன்னவே
அவனின் சட்டையை கோத்து பிடித்து “எங்க வந்து யாரு பொண்ணை கேக்குற... அவளை காப்பாத்துனீல அதோட எல்லாம் முடுஞ்சுடுச்சு அதை வச்சு காதல், கல்யாணம்னு ஏதாவது பினாத்துநீன்னு வச்சுக்கோ மரியாதை கெட்டுடும்” என்று உறும
“நீ ஏன் எப்போ பார்த்தாலும் சலம்பிகிட்டே இருக்குற.. அடங்கவே மாட்டியாடா நீ” கேட்ட படியே அவனது கைகளை தன் சட்டையிலிருந்து எடுத்த படியே கேட்டவனை கண்டு ஆத்திரம் இன்னும் பெருகியது நந்தாவுக்கு.
“டேய்..”
“ஸ்ஸ்ஸ்ஸ்.. காது வலிக்குது கொஞ்சம் சத்தத்தை குறை..” என்று அவனை அலட்ச்சிய படுத்திவிட்டு
ராஜிடம் மறுபடியும் “எனக்கு உங்க பொண்ணு வேணும்” என்றான் நிமிரவ்வாய்..
நந்தனும் ராயரும் சண்டை இடுவத்தை பார்த்தவளுக்கு உள்ளுக்குள் கிலி பிறந்தது..
‘அய்யோ எப்போ வந்து எதை பேசனுன்னே இவருக்கு தெரியாதா..’ உள்ளுக்குள் நடுங்கி போனாள் திகம்பரி.
“தம்பி இந்த விஷயத்தை நாம அப்புறம் பேசலாமே..” தன்மையாகவே ராஜ் கேட்டார்..
அதை புரிந்து கொண்டாலும் புரியாதவன் போல “சார் நான் உங்களை இவ பார்க்கணும்ங்குறதுக்காக மட்டும் வர சொல்லல.. என் விஷயம் உங்களுக்கு தெரிவிக்கணும் அப்படிங்கிறதுக்காகவும் தான் நான் உங்களை இவ்வளவு அவசரமா வர சொன்னேன்.. எனக்கு என் திகம்பரி வேணும் அவ்வளவு தான்.. உங்களுக்கு விஷயம் தெரிவிக்க மட்டும் தான் வர சொன்னேனே தவிர எனக்கு உங்க சம்மதம் தேவை இல்லை..” நிமிர்வாகவே பேசியவனை கண்டு ராஜூக்கே லேசாய் கோவம் வந்தது..
“தம்பி அவ இன்னும் என் பொண்ணு தான்..” பல்லை கடித்தபடி சொன்னவரை கண்டு
“அதை மாத்த எனக்கு ஒரு நிமிஷம் கூட ஆகாது.. ஆனா அதை முறை படி உங்க கிட்ட சொல்லிட்டு செஞ்சா நல்லா இருக்குமேன்னு தான் உங்க கிட்ட இவ்வளவு நேரம் பேசிகிட்டு இருக்கேன்” என்றவனின் பேச்சில் திமிர் தெரிவதை உணர்ந்த நந்தா
“டேய் எங்க என் தங்கச்சி மேல கை வச்சு பாருடா.. தொட்ட கை வெட்டி வீசுரனா இல்லையான்னு தெரியும்” உடன்பிறப்பாய் அவன் தன் பாசத்தை காமிக்க
இருவரின் போராட்டத்தையும் கண்டவளுக்கு உள்ளுக்குள் திகில் பிடித்தது.. இருவரையும் அவளால் விட்டு குடுக்க முடியாது.. இருவருமே அவளின் இரு கண்கள். இரு கண்களுமே தன் முன் சண்டை இடுவதை பார்த்துக்கொண்டுயிருக்க அவளால் முடியவில்லை.
“எங்க வெட்டி வீசு” என்று சொன்ன படியே திகம்பரியை ஒரே இழுப்பில் தன் கை வளைவுக்குள் கொண்டு வந்து அவளை தன்னோடு இறுக சேர்த்து அணைத்துக்கொண்டான். சின்ன சந்தர்ப்பத்தையும் விடாமல்.
அவனது திடீர் அணைப்பில் அதுவும் தமையன் தகப்பன் முன்னிலையில் இப்படி இவன் செய்ததில் அவளுக்கு உடம்பு கூசி போனது..
“ராய் என்ன பண்றீங்க” பதறி அவனை தடுக்க பார்க்க அவளால் அவனை கொஞ்சம் கூட விலக்க முடியவில்லை..
“டேய் அவளை விடுடா..” நந்தா அவனிடமிருந்து தன் தங்கையை பிரிக்க பார்க்க அவனது இரும்பு பிடியில் இருந்து திகம்பரியை அவனால் சுலபமாக வெளியே இழுக்க முடியவில்லை.
“தம்பி நீங்க பண்றது கொஞ்சம் கூட சரியே இல்லை.. பேசிகிட்டு இருக்கும்போதே இதென்ன இப்படி பண்றீங்க. என் பொண்ணை விடுங்க தம்பி” ராஜ் கெஞ்ச
“அப்பா என்னப்பா நீங்க இவன் கிட்ட போய் கெஞ்சிகிட்டு நிக்குறீங்க..” என்றவன் அருகில் இருந்த பூ ஜாடியை பார்த்தவன் அதில் இருந்ததை உருவி போட்டு விட்டு அதை தூக்கி ராயருக்கு குறி வைக்க திகம்பரிக்கு திக்கென்று இருந்தது.
“அய்யோ அண்ணா வேணாம்” என்று அவனின் அணைப்பின் உள்ளேயே திரும்பி நின்று தன் அண்ணனை தடுக்க பார்க்க
“நீ தள்ளி போ திகம்பரி” என்று மேலும் அவனை நோக்கி வேகமாய் ஓங்கிக்கொண்டு வர
“அண்ணா ப்ளீஸ் வேணாம்... அவர விட்டுட்டு ண்ணா” அவனின் கைகளுக்குள்ளே கை எடுத்து கும்பிட்டவளை கொஞ்சமும் பொருட் படுத்தாமல்
“நீ விலகி போ” என்று அவளை ஒரு கையால் விளக்கி தள்ள
“ம்ஹும் போக மாட்டேன்” என்று அவனுக்கும் தன் காதலனுக்கும் நடுவில் நின்று இருவருக்கும் விபரிதம் எதுவும் நடக்க விடாமல் பாதுகாப்பது போல நின்றிருந்தவளை கண்டு அவளின் அப்பாவுக்கு உண்மை என்ன என்பது புரிந்து போனது..
அப்படியே தளர்ந்து போனார் அவர்.
“ஏய் தள்ளி போடி உன் அண்ணன் அப்படி என்ன செய்யுறான்னு நானும் பார்க்குறேன்” என்று ராயரும் எகுற
“அய்யோ கொஞ்ச நேரம் சும்மா தான் இருங்களேன்” என்று தன் காதலனை அடக்க அவனா அடங்குவான்..
“நீ தள்ளி போடி முதல்ல... உன் அண்ணன் பெரிய ரவுடி பாரு தம்மா துண்டு சில்வருக்கு எதுக்கு இப்போ இவ்வளவு சீன் போட்டுட்டு இருக்குற..” என்றவன் தன் பிடியிலிருந்து அவளை நகர்த்தி நிற்க வைத்தான் ராயர்.
அவளோ அவனை விட்டு போகாமல் இரு கைகளையும் ராயரை வைத்து மறைத்து நிற்பது போல நிற்க நந்தாவுக்கு கோவம் சுல்லேன்று வந்தது..
“தள்ளி போ திகம்பரி..”
“வேணாம் அண்ணா அவர் பாவம்..” இரு கை கூப்பி கும்பிட்டு கேட்க
“என்னது பாவமா.. என்ன தைரியம் இருந்தா அவன் என்கிட்டே வந்து உன்னை கேப்பான்.. அவனை போய் சும்மா விட சொல்றியா” நந்தா பல்லை கடிக்க
“உன்னை யாரு என்னை சும்மா விட சொன்னது.. என்னை வச்சிருந்து மாப்பிளை விருந்து ஆக்கி போடு” என்று ராயர் நக்கல் பண்ணி அவனை இன்னும் தூண்டி விட.. அவனை திரும்பி பார்த்து
“ராய் கொஞ்ச நேரம் அமைதியா இறேன்டா” திகம்பரி கெஞ்ச
“டேய் உன்னை கொல்லாம விட மாட்டேண்டா யாருக்கு யாரு மாப்பிள்ளை” நந்தா இன்னும் கோவ பட
“வா வந்து கொல்லு.. உனக்கு தாண்டா நான் மாப்பிள்ளை..” தெனவட்டாகவே வந்து விழுந்தது ராயரிடமிருந்து பதில்.
“உன்னையெல்லாம் பேசவே விட்டிருக்க கூடாது டா” என்று ஆங்காரமாய் கத்தியவன் திகம்பரி தடுக்க தடுக்க ராயரின் மண்டையை பிளக்க வைக்கும் முயற்சியுடன் அவனின் மண்டையை நோக்கி வீசினான் வெள்ளி பூ ஜாடியை..
அதை அழகாக கேச் பிடித்தவன் “என்ன மச்சான் ஒரு பூ ஜாடிய கூட ஒழுங்கா தூக்கி போட தெரியல.. நீ எல்லாம் பிசினஸ் பண்ணி என்னத்தை கிழிக்கிற” நந்தாவை நக்கல் பண்ணியவனை கண்டு மானசீகமாக தலையிலே அடித்துக்கொண்டாள்.
“ராய் வாய மூட போறியா இல்லையா..” சற்று எரிச்சலுடனே திகம்பரி கத்தினாள். நடக்கும் விபரீதங்களை கண்டு அவள் திகைத்து தான் போனாள்.
“நான் எதுக்கு மூடனும்.. உன் அண்ணனை ஒழுங்கா இருக்க சொல்லு. அவன் தான் தேவை இல்லாம ஆடிகிட்டு இருக்கான்” அவன் கொஞ்சமும் சூழலை புரிந்து கொள்ளாமல் பேச
நந்தாவுக்கு ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. எப்படியாவது ராயரை காய படுத்தியே ஆகவேண்டும் என்ற வெறி எழ
கொஞ்சமும் யோசிக்காமல் அருகில் அழகுக்காக வைத்திருந்த இருந்த இரும்பு தடியை எடுத்து ராயரின் தலையை குறி பார்த்து அடித்து விட்டான் நந்தா...
அவன் அடித்த அடியில் இரத்தம் வெள்ளம் போல பொங்கி உடையை நனைத்து சென்றது..
எல்லாமே ஒரு நிமிடம் தான்.. ராஜ் தடுக்க நினைக்கும் முன் அனைத்தும் கை மீறி போய் விட்டது...
“ஐயோ போச்சே...” அவர் தலையில் கை வைத்து அமர்ந்து விட்டார்..
நந்தா கூட அடித்து முடித்த பின்பு முன்பிருந்த விரோதம் இல்லாமல் போய் செய்த காரியம் கண் முன் நிழல் ஆட உள்ளம் பதறிபோனான்...
அத்தியாயம் 18
தன் கண் முன் நிகழ்ந்த நிகழ்வை நம்ப முடியாமல் ராஜ் பிரமை பிடித்ததை போல நின்றிருக்க, நந்தா தான் செய்த பாதகமான செயலை உடல் தள்ளாட உள்ளம் பதைக்க வேர்த்து விருவிருக்க மறுபடியும் நினைத்து பார்த்தான்.
அதற்குள் ராயரின் “அய்யோ” என்ற கூப்பாடு ராஜை உலுக்கியது... இரத்த வெள்ளத்தில் மிதந்த திகம்பரி ராயரை தன்னவனை தலை முதல் பாதம் வரை பார்த்து
“உங்களுக்கு அடி ஏதும் படலியே” என்று கேட்ட படியே கண்கள் சொருகி மயக்கத்தில் வேரறுந்த மரம் போல தரையில் சரிந்தாள்...
அடி பட்டு இரத்த வெள்ளத்தில் மிதக்கும் போது கூட ‘அவனின் நலனை கண்டறிந்தவளை’ கண்டு உள்ளம் துணுக்குற்றவன் சுதாரித்து அவள் கீழே விழும் முன் தாங்கி அனைத்து பிடித்தவன் அவளின் சாலை கொண்டே மண்டையில் வலிந்த இரத்தத்தை அழுத்தி பிடித்தவன் உறைந்து நின்ற மற்ற இருவரையும் வெட்டும் பார்வை ஒன்றை பார்த்துவிட்டு அவர்களது காரில் ஏறி மருத்துவமனைக்கு விரைந்தான் ராயர்.
எவ்வளவு வேகமாய் வர வேண்டுமோ அவ்வளவு வேகமாய் வந்து ரீகாவை மருத்துவமனையில் சேர்த்தவன் அப்படியே தோய்ந்து மடிந்து அமர்ந்தான்.
சற்று நேரத்திற்கு முன் நடந்த நிகழ்வை அவனால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. நினைக்கும்போதே நெஞ்சை கவ்வி பிடித்து அழுத்தியது வலி. மூச்சுக்கு ஏங்கி போனது அவனது உயிர்.
நந்தா ராயரை அடிக்க வர நெஞ்சை நிமிர்த்தி “அடிடா...” என்று தைரியமாக தன் நெஞ்சை காட்ட
“அடிக்கிறேனா இல்லையான்னு பாருடா” என்று நந்தாவும் அடங்கா ஆத்திரத்தோடு ராயரின் மண்டையை பிளக்கும் எண்ணத்தோடு அவனை நெருங்கி வந்து வேகமாய் அடிக்க வர, கண்ணிமைக்கும் நேரத்தில் ராயரை அவ்விடத்தை விட்டு விலக்கிவிட்டு அண்ணனின் கோவ பசிக்கு திகம்பரி தன்னை இறையாக்கி கொண்டாள்.
தன் கண் முன் ராயர் அடிபடுவதை அவளால் பார்க்க முடியவில்லை. ‘எனக்காக வந்துட்டு நீங்க எதுக்கு அடி வாங்கணும்’ என்ற எண்ணத்தோடு அவனை பிடித்து தள்ளி விட்டுட்டு முழு மனதோடு அண்ணனின் அடியை வாங்கிக்கொண்டாள்.
அதன் பிறகு அங்கே அவளுக்கு மயக்கம் தான்... மயக்கத்தின் போது கூட ஒரு கணம் சுதாரித்து ராயருக்கு அடி ஏதாவது பட்டதா என்று ஒரு கணம் ஆராய்ந்தவள் இல்லை என்னும் விடையோடு தன் அண்ணாவின் புறம் திரும்பி “வே...ணாம்... அ...ண்...ணா.... ப்ளீஸ்” என்று தன் அண்ணாவிடம் ராயருக்காக பேசிவிட்டே முழுமையான மயக்கத்தில் ஆழ்ந்தாள்.
ஆனாலும் அவளின் உள் மனம் ‘அண்ணா மறுபடியும் ராயரை அடிப்பாங்களோ, ஐயோ அவருக்கு விபரீதம் ஏதாவது ஆகி இருக்குமோ’ என்று அஞ்சிக்கொண்டே இருந்தது...
அதை உணராமல் மருத்துவர்களும் தங்கள் பணியை சிறப்புடன் செய்து அவளை பிழைக்க வைத்தார்கள்.
ஆனால் அவள் தான் கண்களை திறக்கவே இல்லை. கிட்டத்தட்ட மூன்று நாட்கள் ஆகிவிட்டது. அவளிடம் எந்த உணர்வுகளும் இல்லை. ஆனால் உள் உணர்வுகள் விழித்து கொண்டு தான் இருந்தது திகம்பரிக்கு... அது தன்னவனின் வருகைக்காக காத்திருந்தது.
அப்பா, அண்ணா, மருத்துவர், செவிலியர் என எல்லா குரலும் கேட்டது. தன் மனம் கவர்ந்தவனின் குரல் மட்டும் கேட்கவில்லை.
‘அண்ணன் அவனை அடித்திருப்பாரோ.. இல்லை இதுவரை பட்டது போதும் என்று விலகி சென்றிருப்பானோ’ அப்படி போய் இருந்தாள் கூட பரவாயில்லை.. இங்கவே இருந்து அவன் கஷ்டபடுவதற்கு விலகி சென்றிருந்தால் நிம்மதி தான்.
அதை நினைக்கும் போதே உள்ளுக்குள் ஏதோ உடைந்தது போல ஒரு வலி நொடியில் இதயம் முழுவதும் பரவி மேலும் வலியை கொடுத்தது..
‘எல்லாமே அவ்வளவு தானா..’ உள்ளே சுருக் சுருக் என்று வலித்தது. ‘இனி கண் முழித்து என்ன செய்ய போறேன்.. இப்படியே அவனது நினைவுகளிலே இருந்து விடலாம் யாருக்கும் எந்த வருத்தத்தையும் கொடுக்காமல்’ என்று ஒரு முடிவெடுத்தவள் கண்களை திறக்க எந்த முயற்ச்சியும் செய்யாமல் அமைதியாகி போனாள்.
வெளியே காத்து நின்றவர்களுக்கு மருத்துவர் “மருந்துனாலயும் மருத்துவத்தினாலயும் எங்களால எவ்வளவு சரி செய்ய முடியுமோ அவ்வளவு சரி செஞ்சுட்டோம்.. ஆனா ஒத்துழைக்க வேண்டிய உங்க பொண்ணு ஒத்துழைக்காமல் தனக்கு இதுவே போதும் என்கிற மன நிலையில இருக்குறாங்க.. அதனால தான் அவங்க இன்னும் கண் விழிக்கல.. அவங்க கண் விழிக்கிறது அவங்க கையில தான் இருக்கு” என்று கூற கேட்ட அனைவரும் உடைந்து போனார்கள்.
“என் ஒரே பொண்ணுக்கு இப்படி ஆகணுமா.. இதுக்கு தான் நான் இப்படி ஓடி ஓடி சம்பாரிச்சேனா... பார்க்கணும் பார்க்கணும்னு சொல்லும் போதெல்லாம் அவளை அலட்ச்சிய படுத்தினேனே அதுக்கு தான் எனக்கு இந்த தண்டனையா..” வயதான காலத்தில் இப்படி ஒரு நிகழ்வை அவரால் தாங்க முடியவில்லை. தலையிலே அடித்துக்கொண்டு அழுதார்.
நடந்து முடிந்த சம்பவங்களில் பெரிதும் காய பட்டு போனான் நந்தா..
ராயரின் மேல் தன் தங்கை எவ்வளவு காதல் வைத்திருக்கிறாள் என்று அவனுக்கு புரிந்து போனது. ஆனால் அதை அவன் மனம் தான் ஏற்றுக்கொள்ள மறுத்தது.
தங்களின் தகுதிக்கு கொஞ்சமும் பொருத்தமில்லாமல், பேசும் வார்த்தைகளில் கூட நாகரிகம் இல்லாமல் இருப்பவனை நந்தாவுக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லை. அவனை கண்டாலே ஏனோ ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.
தன் தங்கையை யாருமில்லா சமயம் பார்த்து மயக்கி வைத்திருக்கிறான் என்று கோவம் தான் வந்தது. அவனை ஏனோ நம்பவே மனம் வரவில்லை.
அதில் ராயரின் தவறு எதுவுமில்லை.
வயதுக்கு மீறிய முதிர்ச்சியும், அந்த வயதிலே தெரிய கூடாததை தெரிந்து கொண்டது. அதற்க்கு அடித்தளம் போட்ட ஓட்டுனர் வேலை. கூடவே சட்டம் படித்த படிப்பு.. படித்த காலத்தில் கல்லூரியில் ரவுடி போல திரிந்தது. அது அப்படியே அவனது பேச்சில் தங்கி விட்டது..
கூடவே நான் இப்படி தான். இப்படி தான் இருப்பேன். அவனிடம் எந்த நாகரீகமும் கிடையாது. மனதில் பதிந்ததை வெளிப்படையாக சொல்லிவிடுவான். அது அவனை படித்த ரவுடி போலவே நந்தாவுக்கு அறிமுகம் படுத்திவிட்டது. அவனது அந்த சுபாவம் தான் நந்தாவுக்கு வெறுப்பை ஊட்டியது.
இப்போது வரை அவனை நம்பவில்லை.. ஆனால் அவனுடைய தங்கை செய்த செயலில் அந்த ரவுடியின் மீது அவள் கொண்டுள்ள காதலை அவனுக்கு புரியவைத்திருந்தது.
ராயரை அடிக்க ஓங்கிய சமயம் திடிரென திகம்பரி உள்ளே நுழைந்து ராயரை தள்ளி விட்டுட்டு இவள் வந்து நிற்க, ஓங்கிய கையை சட்டென்று கட்டுக்குள் கொண்டு வர முடியாமல் அதன் வேகத்தை மட்டுமே அவனால் குறைக்க முடிந்திருந்தது.
அதனாலே மிக பெரிய ஆபத்திலிருந்து தப்பித்து இருந்தாள் திகம்பரி.. ஆனால் என்ன இருந்தும் அவனுடய குரல் கேட்காமல் போனதில் மனதை விட்டவள் அப்படியே தன் காலங்களை கழிக்க முடிவெடுத்து விட்டாள்.
“நீ ஒரு நாள் காட்டிய அன்பே எனக்கு போதும் ராய்.. உன் நினைவுகளிலே வாழ்ந்து விடுவேன், இப்போது வரை என் வேண்டுதல் என் அண்ணன் உன்னை எதுவும் செய்திருக்க கூடாது என்பது தான்.” என்று எண்ணிக்கொண்டு உணர்வுகளை வெளிபடுத்தாமல், விரும்பாமல் அப்படியே படுக்கையில் கிடந்தாள்.
“நீ எப்படி வேணா இருந்துக்கோ ஆனா எனக்கு நீ வேணும்” என்று வன்மையாய் நினைத்துக்கொண்டு மருத்துவர் சொன்ன செய்தியை கேட்டு உள்ளே புயல் போல வந்தவன்
“ஏய் என்னடி நினைச்சுகிட்டு இருக்க. இப்போ கண்ண தொறக்க போறியா இல்லையா.. இல்லன்னா இன்னும் ஒரு அடி உன் மண்டையிலே போடட்டுமா” என்று அவன் கத்த அவனின் சத்தம் கேட்டு அதுவரை பிணம் போல் படுத்திருந்தவளின் உணர்வுகள் செயல் பட தொடங்கியது..
‘நீ இன்னும் போகலயாடா.. எனக்காக இன்ன வரையிலும் இங்க தான் இருக்கியா...’ என்று கண்களில் கண்ணீர் வர தொடங்க
“கமான் கமான்.. ம்ம் அப்படி தான் மிஸ்டர் இன்னும் அவங்க கிட்ட எதாவது பேசுங்க” என்று அருகில் இருந்தபடி மருத்துவர் சொல்ல
“யோவ் போயா அந்த பக்கம் நானே கடுப்புல இருக்கேன் நீ வேற” என்று மருத்துவரை காய கேட்டுக்கொண்டிருந்த திகம்பரிக்கு சிரிப்பு வந்தது.
“எப்படி பேசுறான் பாரேன்” செல்லமாய் திட்டிகொண்டாள் அவனை.
“ஏட்டி திகம்பரி பேசாம உங்க அண்ணனை போட்டு தள்ளிடட்டுமா.. அப்போ தான் நீ கண்ணு முழிப்பியோ”
‘அட பாவி ஏண்டா இந்த கொலை வெறி.. இவனுக்காவே நான் சீக்கிரம் கண்ணு முழிக்கணும் போலவே. இல்லன்னா என்னென்ன கிறுக்கு தனம் பண்ணி வைப்பானோ தெரியலையே’
அருகில் இருந்து கேட்டுக்கொண்டிருந்த நந்தாவுக்கு உண்மையிலே கொலை வெறி எழுந்தது.
“ஏட்டி என்ன இன்னும் தூங்கிக்கிட்டு இருக்குறவ.. வா நான் உன் கிட்ட நிறைய பேசணும்.. அது மட்டும் இல்லாம அன்னைக்கு குடுச்சனே அந்த சிக்கன் சூப் வச்சு குடுடி.. உன் வீட்டு சமையல் ஆளுக்கு கொஞ்சம் கூட நல்லாவே செய்ய தெரியல..” என்றவன் அன்னைக்கு மூணு கப் வாங்கி குடித்தது நினைவுக்கு வர அவளுக்கு சிரிப்பு வந்தது. அது அவளின் இதழ்களில் வெளி பட அனைவரும் அவளையே தான் பார்த்துக் கொண்டிருந்ததால் அவளின் மாற்றம் அங்கிருந்த அனைவருக்கும் தெரிந்தது.
ராஜுக்கு மனம் நிம்மதி அடைய நந்தாவுக்கும் தன் தங்கை நல்ல படியா எழுந்து வந்தாலே போதும் என்ற எண்ணமே நிறைந்திருந்தது.
அதனால் வேறு எந்த ராசா பாசமும் நிகழ்த்த விரும்பவில்லை நந்தா. ராயர் தன் விருப்பம் போல மேலே பேசிக்கொண்டே இருந்தான்.
அவனின் பேச்சில் மயங்கி கண் விழிக்கனும் என்ற எண்ணம் கூட இல்லாமல் அப்படியே இருந்தாள். அதை கண்டு ராயருக்கு உள்ளம் துடித்தது. ஆனாலும் மேற் கொண்டு அவளிடம் பேசிக்கொண்டே இருந்தான்.
அவள் கண் விழிக்காமல் போக ஒரு கட்டத்துக்கு மேல் அதை தாங்கிக்கொள்ள முடியாமல் கண்கள் கலங்கியது...
விழியில் வழிந்த நீருடன் “நான் இவ்வளவு பேசியும் நீ கண்ணு முழிக்க மாட்டியாடி.. என்னால உன்னை இப்படி பார்க்க முடியல. நீ எதுக்கு குறுக்க வந்த, எவ்வளவு அடி வேணாலும் உனக்காக நான் தாங்குவேண்டி.. இந்த உடம்புக்கு எதுவும் உரைக்காது. உன் காதலை தவிற.. இப்படி வந்து படுத்துகிட்டு என்னை பலி வாங்க பார்க்குறியே நியாயமாடி. எனக்கு நீ வேணும் ரீகா.. என்னென்னைக்கும் நீ வேணும் எனக்கு. ப்ளீஸ் வந்துடுடி.. என் கண்ணு முன்னாடி இப்படி நீ உணர்வு அறுந்து கிடப்பதை பார்க்க முடியலடா” வேதனையோடு வெளிவந்த வார்த்தைகளை கேட்டு உள்ளம் துடித்து போனாள்.
அவளும் முயற்சி பண்ணினாள் ஆனால் அவளால் முடியவில்லை.
பெரும் பாரம் கண்களில் தாங்கி இருப்பது போல உணர்ந்தாள்.
“ரீகா” உயிரை உறைய வைக்கும் அவனது அழைப்பில் உள்ளம் நெகிழ்ந்தவள் மேற்கொண்டு அவனது பேச்சில் கவனத்தை திருப்பினாள்.
“ரீகா.... ப்ளீஸ் வாமா... நீ இல்லன்னா நான் இல்லடி. என்னால நீ இல்லன்னா இருக்க முடியாது. அது உனக்கும் தெரியும். நீ இப்படி தான் இருப்பேன்னா அதை பார்க்க நான் உயிரோடு இருக்க மாட்டேன்டி. எனக்கு முழுசா நீ வேணும். நீ.. நீ.. வேணும் கண்ணம்மா“ திக்கியவன் விழிகளை வழிந்த நீரோடு ”ஐ லவ் யூ சோ மச் டி. என் வேதனை உனக்கு புரியுதா..” என்று கேட்க கூட சிரம பட்டவன் முயன்று வரவைத்த புன்னகையோடு
“உனக்கு நான் உன் லிப்ஸ்ல கிஸ் பண்ண பிடிக்காது தானே.. இப்போ நான் உன்னை கிஸ் பண்ண போறேன் எப்படி தடுக்குறேன்னு பார்க்குறேன்” என்று விழியில் வழிந்த கண்ணீரோடு அவளை முத்தமிட நெருங்கினான்.
யார் இருக்கிறார்கள் யார் இல்லை என்று எதையும் கருத்தில் கொள்ளாதவன் அவனின் காதலியின் காய்ந்து போன இதழில் தன் இதழால் நீருட்ற தொடங்கினான்.
“இவ்வளவு வேதனையா யாரும் இதழ் முத்தம் கொடுத்திருக்க மாட்டாங்கடி கண்ணம்மா...” என்றபடியே அவளின் இதழ்களில் புதைந்தவன் அவள் முகம் எங்கும் தன் கண்ணீர் துளி தெறிக்க முத்தம் இட்டான்.
“எப்பவும் வந்து தடுப்பியேடி இப்போ என்ன ஆச்சு கண்ணம்மா... உன் பக்கத்துல தான் இருக்கேன் என்னை தள்ளி விடுடி... தள்ள மாட்டியா...” வேதனையோடு கேட்டுக்கொண்டே முத்தமிட்டவனை அனைவரும் கண்களில் நீரோடு பார்த்தார்கள்.
அவன் அளித்த முத்தம் அங்கு யாருக்கும் விரசமாய் தெரியவில்லை.
அவன் முத்தத்துக்கு அவள் எதிர் வினை எதுவும் நிகழ்த்தாமல் போக உடைந்து போனான் ராயர்.
“உனக்கு அப்படி என்னடி பண்ணுனேன் நான்.. என்னை பார்த்து நாள் கணக்கு கூட இல்லையேடி, உன் கிட்ட காதலை சொல்லி இருபத்தி நாலு மணி நேரம் கூட ஆகல அதுக்குள்ள உன் உயிரை குடுத்து என்னை காத்து ஏண்டி என்னை காப்பத்துன.. இப்படி எதுக்கு என்னை காதலிக்கிற.. உன் காதலுக்கு நான் தகுதி இல்லாதவண்டி..” என்று புலம்பியபடி அவளது இதழில் இன்னும் புதைந்து போனான் விழிகளில் வலிந்த கண்ணீரோடு.
அந்த வேதனையான முத்தம் கூட திகம்பரிக்கு காதலின் உச்சத்திலும் வேதனையின் உச்சத்திலும் கொடுத்த முத்தம் போலவே தென்பட்டது. அவளுக்கு மட்டும் அல்ல அங்கிருந்த அத்தனை பேருக்கும் அப்படி தான் தோன்றியது.
அவன் தன் மேல் கொண்டுள்ள காதலை பறை சாற்றுவது போல தான் இருந்தது அந்த முத்தம்.
“முடியலடி... மாமாகிட்ட வந்துடுடா...” என்றவன் அவளின் முகத்தோடு முகம் வைத்து கதற தொடங்கிவிட்டான்.
ஒரு கட்டத்துக்கு மேல் அவனால் அவளை அந்த நிலையில் காண முடியாமல் ராஜிடம் திரும்பி
“சத்தியமா என்னால இவளை இப்படி பார்க்க முடியல சார்..” என்று கூற கூட முடியாமல் விருட்டென்று அவ்விடத்தை விட்டு வெளியேற முயன்றான்.
அவனது விலகல் அவளை உழுக்க கண்களை மிக சிரமபட்டு திறந்தாள்.
திறந்தவளின் கண்களில் ஒரு துளி கண்ணீர் ஓவியம் போல நின்றது. தன்னவனின் காதலை எண்ணி.. உள்ளம் பூரித்து போனாள்.
யாருக்கு கிடைக்கும் இப்படி பட்ட காதலன். ஆனால் தனக்கு கிடைத்து இருக்கிறானே... உள்ளம் சிலிர்த்தவள் அவன் சென்ற திசையை நோக்கி பார்த்தாள்.
“மாமா” மெல்ல தீனமான குரல் அவனது செவியை தீண்ட ஐம்புலன்களும் சிலிர்த்து நின்றது.. விழியில் வழிந்த கண்ணீரோடு திரும்பியவன் இட கையை அவன் புறம் நீட்டி “வா” என்று தலை அசைத்தாள் திகம்பரி.
ஓடி வந்தவன் அவளின் கைகளை பற்றிக்கொண்டு
“ஏண்டி இப்படி பண்ணுன” என்றவனுக்கு பதில் எதுவும் பேசாமல் அவள் “இன்னும் வா” என்று தலை அசைக்க அருகில் வந்து விழிகளோடு விழிகள் வைத்து அவளையே பார்த்து கொண்டிருந்தான். பின் ஏதோ சொல்ல வருகிறாள் என்று எண்ணி அவனும் அவளின் முகத்துக்கு நேரா தன் காதை வைத்து நிற்க
அவனின் முகத்தை தன் முகம் பார்த்து திருப்பி இன்னும் கொஞ்சம் தாழ்த்தி அவனது படர்ந்த நெற்றியில் முடிகளை ஒதுக்கி விட்டு, விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்து விட்டு தன் இதழை அவன் நெற்றியில் ஒற்றி முத்தமிட்டு அவனை பார்த்து “ஐ டு லவ் யூ..” என்று மெல்ல சொன்னாள்.
அவளது செயலில் மனம் நெகிழ்ந்தவன் மேலும் கண்ணீர் வந்தது அவனுக்கு. அவள் தன்னை உணர்வற்ற நிலையிலும் உணர்ந்து இருக்கிறாள் என்பது புரிய ஆவேசமாய் அவளது இதழ்களை சிறை எடுத்தான்.
அத்தியாயம் 19
அவனின் வன்மையமான செயலில் திகைத்து தான் போனாள். அதுவும் பெற்றவரின் முன்னிலையிலும் சகோதரனின் முன்னிலையிலும் அவன் நடந்து கொண்ட விதத்தில் தவித்து போனவள்.
மெல்ல அவனிடமிருந்து விலக பார்த்தவளுக்கு அவளின் உடம்பு ஒத்துழைக்காமல் போக அவனது ஆளுமையில் ஒன்றவும் முடியாமல் விலகவும் வழி தெரியாமல் தடுமாறி திண்டாடி போனாள்.
ஒரு வழியாய் அவன் விட்ட பின்பு கொஞ்சமும் அவனை காதலுடன் நோக்காமல் முறைத்தவளை கண்டு
“என்னடி” என்பது போல பார்த்தவனுக்கு சுத்திலும் பார்வையை சுழல விட்டு காட்டிய பின்பே தான் செய்த காரியம் புரிய புன்னகயுடன் கூடிய நாணம் அவனது முகத்தில் வந்துதிக்க இதழ்களை கடித்துக்கொண்டான்.
ஆனாலும் அவனது கண்கள் “இதுக்கெல்லாம் மன்னிப்பு கேக்க முடியாது போடி” என்று திமிராகவே கண்ணடித்து அவளை சீண்டி விட்டான்.
“அதானே உன்னை எல்லாம் திருத்தவே முடியாதுடா” அவள் சடைத்துக்கொண்டாள். ஓரளவு இயல்புக்கு திரும்பி இருந்தவளை பரிசோதிக்கணும் என்று அவளின் நேரத்தை மருத்துவர்கள் எடுத்துக்கொண்டார்கள்.
தலையில் அடிபட்டதால் பல பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளதால் கவனமாக அவளை ஆராய்ந்தார்கள் மருத்துவர்கள்.
கிட்டதட்ட ஒரு பொழுது முழுவதும் அதிலே கரைய.. அவள் மறுபடியும் அறைக்கு திரும்பிய பின் இரவு நேரம் அவளோடு யார் இருப்பது என்று சண்டை நிகழ்ந்தது. வேறு யாருக்கு மாப்பிள்ளைக்கும் மச்சானுக்கும் தான்..
“நீ யாருன்னே தெரியாது உன்னை நம்பி என் தங்கச்சியை விட முடியாது.. அது தான் இவ்வளவு நேரம் இருந்தியே இப்போ வெளிய போடா” என்று நந்தா அவனை துரத்த அதற்க்கெல்லாம் அசருபவனா ராயரு.
“டேய் மச்சான் இன்னொரு முறை என்னை யாருன்னு தெரியலன்னு சொன்னன்னு வை திகம்பரிய அடுச்ச கம்பிய வச்சே உன் மண்டைய போலந்துடுவேன் பார்த்துக்க... உன் முன்னாடி தானே உன் தங்கச்சி எனக்கு லிப்ல முத்தம் குடுத்தா... அதை பார்த்தும் எதுக்கு இப்படி நீ துள்ளிகிட்டு திரியிற”
“டேய் நான் எங்கடா லிப்ல முத்தம் குடுத்தேன்.. நீ தானேடா முத்தம் குடுத்த.. நான் பிள்ளை முத்தம் தானே டா குடுத்தேன்.. எல்லாத்துக்கும் முன்னாடி இப்படி அசிங்க படுத்துறானே இவனை...” பல்லை கடித்துக்கொண்டு ராயரை முறைத்துக் கொண்டிருந்தாள் திகம்பரி.
அவளின் முறைப்பை பார்த்தவன் “என்னாச்சுடி..” என்று புருவம் சுருக்கி அக்கரையாய் கேட்க “ம்கும் நான் இதையும் சொல்லி உன் கிட்ட மேலும் அசிங்க படனுமா போடா” எண்ணியவள் அவனை உதட்டை சுளித்து முறைத்து பார்த்துவிட்டு திரும்பிக்கொண்டாள்.
“பாரு என் தங்கச்சிக்கே நீ இங்க இருக்கிறது பிடிக்கல அதுதான் முறைக்கிறாள்” என்று நந்தா சொல்ல
‘டேய் அண்ணா நான் அதுக்கெங்கடா முறைச்சேன்.. நீ வேற ஏண்டா இடையில புகுந்து என்னை அவன் கிட்ட கோத்துவிடுற..’ லேசாய் உள்ளுக்குள் உதறலுடன் ராயரை ஏறிட்டு பார்த்தவளுக்கு திக்கென்று இருந்தது..
ராயர் அவளை கொஞ்சம் கூட வஞ்சனையின்றி முறைத்துக்கொண்டிருந்தான்.
அவள் ‘இல்ல அதுக்காக இல்லை’ என்று தலை அசைத்தாள் கெஞ்சலுடன். ஆனாலும் அவன் அவளை முறைத்துக்கொண்டு தான் இருந்தான்.
“அங்க என்ன பார்வை என்னை பாருடா”
“ஆமா நீ தானே என் காதலி சோ நான் உன்னை தானே பார்த்தாகனும்” என்று நக்கல் பண்ணியவனை கண்டு பல்லை கடித்தான் நந்தா..
“டேய்”
“ஸ்ஸ்ஸ் எதுக்கு இப்போ கத்துற.. முறையா சொல்றேன் நீ வெளிய போ என் பொண்டாட்டிய எனக்கு பார்த்துக்க தெரியும்”
“என்னது பொண்டாட்டியா.. முடியவே முடியாது.. உன்னை என்னால ஏத்துக்கவே முடியாதுடா” ஆங்காரமாய் கத்தினான் நந்தா.
“நான் உன்னை கல்யாணம் பண்ணிக்க கேட்டது போல முடியாதுன்னு சொல்ற.. டேய் நீ ஆம்பளை டா.. உனக்கு அந்த திங்கிக் இருக்கலாம் ஆனா எனக்கு கிடையாது.. நான் ஒரு பொம்பளைய தான் கல்யாணம் செய்ய ஆசை படுறேன்” என்று மேலும் நந்தாவை நக்கல் பண்ண
அவனுக்கு கோவத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் அவனின் சட்டையை பிடித்து வெளிய தள்ள பார்க்க அதுவரை பொறுமையாய் இருந்த ராயர் அதுக்கு மேல் தன் பொறுமையை கை விட்டுட்டு
“டேய் அவ மேல கை வச்ச போதே உன்னை உண்டு இல்லைன்னு பண்ணி இருக்கணும். போனா போவுதேன்னு விட்டு வச்சேன் பத்தியா என்னை சொல்லணும்டா.. இனி நீ திகம்பரிய பார்க்கவே கூடாது.. நீ போடா வெளிய” ராயர் அவனை வெளியே தள்ள பார்க்க அதை பார்த்துக்கொண்டிருந்த திகம்பரிக்கு ‘அய்யோ’ என்று வந்தது..
அவள் பரிதாபமாய் ராஜை பார்க்க அவரும் அவர்களை விளக்கிகொண்டு தான் இருந்தார். ஆனாலும் இரு இளையவர்களின் பலத்திற்கு அவரால் ஈடு கொடுக்க முடியவில்லை. தளர்ந்து போனார்.
அந்த வழியாய் ரவுன்ஸ் போய்கொண்டிருந்த மருத்துவர் இவர்களின் அக்கபோரில் மிரண்டவர்
“இது மருத்துவமனைன்னு நினைச்சிங்களா இல்ல சந்தகடைனு நினைச்சீங்களா.. முதல்ல சண்டை போடுறத நிறுத்துங்க” அவர் பங்குக்கு அவரும் சத்தம் போட
அதை எல்லாம் கொஞ்சம் கூட காதில் வாங்கிகொள்ளாமல் “டாக்டர் எங்களுக்குள்ள நடக்குற பிரச்சனையில நீங்க வந்து தேவை இல்லாம தலை இட்டு வாங்கி கட்டிக்கிட்டு போகாதீங்க” என்று அவரை மிரட்டிய ராயர் நந்தாவை பிடித்து வெளியே தள்ளி கதவை சாத்த
அவனோ கதவை உடைத்துக்கொண்டு உள்ளே வந்து சின்ன பிரச்சனையை பெரிய கலவரமாக்கினான்.
இருவரும் ஒருவரிடம் ஒருவர் மல்லுக்கட்டிக்கொண்டு இருக்க திகம்பரிக்கு மயக்கமே வருவது போல இருந்தது. உள்ளே வந்த நந்தா ராயரின் முகத்திலே ஒரு குத்து விட்டு “போடா வெளிய” என்று கர்ஜிக்க
“எவ்வளவு வாங்குனாலும் நீ அடங்க மாட்டடா” என்று பதிலுக்கு இரைந்தவன் அவனின் முகத்தில் அவன் கொடுத்ததை விட பலமாய் ஒன்னு குடுக்க லேசாய் கலங்கியவன் தாவி வந்து ராயரை வளைத்து முதுகில் அடி குடுக்க சட்டென்று அவனிடமிருந்து தன்னை நிலை படுத்திக்கொண்ட ராயர் அவனது வயிற்றிலே வேகமாய் ஒரு குத்து விட சுருண்டு தான் போனான் நந்தா..
ஆனாலும் சமாளித்துக்கொண்டு அவனை விட அதிக ஆத்திரத்தோடு ராயரை தாக்க வர, அதை தடுக்க நினைக்காமல் ராயர் மறுபடியும் அவனை தாக்க வர இருவரும் சண்டை கோழிகள் போல ஒருவரோடு ஒருவர் மல்லுக்கு நிக்க அதை பார்த்த திகம்பரிக்கும் ராஜுவுக்கும் வேதனையாய் இருந்தது.
“அய்யோ இருவரும் கொஞ்சம் நிறுத்துறீங்களா..” திகம்பரி கத்த ஒரு கணம் தங்கள் கவனத்தை அவள் மீது செலுத்தியவர்கள் பின் அவளை அலட்ச்சிய படுத்திவிட்டு மீண்டும் சண்டை போட தொடங்க
“இப்போ நீங்க ரெண்டு பெரும் நிறுத்தலை நான் என் கைய அருத்துக்குவேன்” என்று கையில் பழம் வெட்ட வைத்திருந்த கத்தியோடு மிரட்டியவளை கண்டு முறைத்து பார்த்தார்கள் இருவரும்.
ஆனாலும் கொஞ்சமும் பதறாமல்
“கத்தியை கீழ போடு ரீகா...”
“கத்தியை கீழ போடு திகம்பரி” இருவரும் குரல் கொடுத்தபடியே மற்றவரை தாக்கும் முனைப்புடனே நிற்பதை பார்த்தவளுக்கு இவர்களை எப்படி அடக்குவது என்று இருந்தது.
“அண்ணா அவரை தான் நான் கல்யாணம் செஞ்க்க போறேன்.. அதனால அவருக்கு உண்டான மரியாதையை குடு” அதட்டியவள் ராயரின் புறம் திரும்பி
”அவரு என்னோட அண்ணா.. உங்க மச்சினன்.. சோ அவருக்குண்டான மரியாதையை நீங்க குடுக்கணும்” என்று இருவரிடமும் சொல்லியவள்
“இதுல இருந்து அதாவது உங்க முறையிலிருந்து நீங்க ரெண்டு பேரும் விலகி போனீங்கன்னா நானும் அவங்களை வெறுக்க நேரிடும்” என்று குண்டை தூக்கி போட்டாள்.
அது இருவருக்கும் கொஞ்சம் கூட பிடிக்கவில்லை.
“முடியாது” இருவரும் கோரசாய் சொல்ல
“முடியாது இல்லையா.. அப்போ ரொம்ப சந்தோஷம்..” என்றவள் “அண்ணா இனி நீ இருக்கும் வீட்டுக்கு நான் வர மாட்டேன்.. என் கிட்ட நீ பேசவும் கூடாது. அப்புறம் நீங்க” என்று ராயரின் புறம் திரும்பி “நீங்களும் என்னை மறந்திடனும். நமக்குள்ள செட்டாகாது.. நாம பிருஞ்சுடலாம்” என்று வெடிகுண்டை எடுத்து வீச இருவரும் ஒரு கணம் திகைத்து தான் போனார்கள்.
ஒரு வேலை இவள் சொல்லிய விஷயம் தவறாய் நம் காதில் விழுந்ததோ... என்று காதை குடைந்து கொண்டவர்களை கண்டு அப்பாவும் பொண்ணும் சிரித்துக்கொண்டார்கள் ரகசியமாய்.
“என்னடி சொல்ற..”
“என்ன சொல்ற”
“நான் சொன்னது தான் நடக்க போவுது. நீங்க ரெண்டு பேரும் இப்படியே சண்டே போட்டு கிட்டு இருந்தா.. உங்களுக்கு நான் வேணும்னா நான் சொன்னதை நீங்க கேளுங்க, இல்லையா என்னை விட்டுடுங்க... நீங்க எப்படியோ அடுச்சுகிட்டு போங்க. எனக்கும் உங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை” என்று வெட்டு ஒன்று துண்டு ரெண்டாக பேசினாள்.
இருவரும் அவளின் பேச்சில் எழுந்த உறுதியை உணர்ந்தவர்கள் என்ன செய்வது என்று ஒரு கணம் திகைத்து தான் போனார்கள்.
பின் இருவரும் ஒருவரை ஒருவர் திரும்பி பார்த்தார்கள். விழிகளிலே வெறுப்பு வழிந்து சிந்தி வெட்டும் பார்வை ஒன்றை பரிமாரிக்கொண்டாலும் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அவர்களின் விலகாத பார்வயை கண்டவளுக்கு “ம்கும் இதுங்க பெரிய காதல் பைங்கிளிங்கள் நினைப்பு. ரெண்டும் கண்ணுலேயே பேசிக்குதுங்க..” நொடித்துக்கொண்டாள்.
“ம்கு...ம்” தொண்டையை சரிசெய்துக்கொண்டு “என்ன முடிவெடுத்து இருக்கீங்க” என்று கேட்டவளை கண்டு
“ஏண்டி இப்ப தானே சொல்லியிருக்க கொஞ்சமாச்சும் நேரம் குடுடி நான் யோசிக்கணும்” என்றான் நந்தாவை பார்த்தபடி.
“ஆமா இன்னும் கொஞ்சம் டைம் குடு.. யோசிச்சு சொல்றேன்” என்று தன் வருங்கால மாப்பிள்ளையோடு ஒத்து ஊதினான் நந்தா.
“எதுல ஒத்துமை இருக்கோ இல்லையோ சண்டை போடுறதுல மட்டும் ஒத்துமையா இருக்குதுங்க... நேரம் குடுத்தா நீங்க என்ன வேலை எல்லாம் பண்ணுவீங்கன்னு எனக்கு தெரியும். ரெண்டும் சரியான ஒழுசல்.. கடைஞ்சி எடுத்த பித்தலாட்ட பசங்க..” எண்ணியவள்
“அதெல்லாம் குடுக்க முடியாது... இப்பவே இந்த நிமிசமே முடிவு எடுத்தாகனும்..” உறுதியாய் சொல்லி தன் அப்பாவை பார்த்தாள்.
அவர் யாருக்கும் தெரியாமல் கட்டை விரலை தூக்கி காட்டி சிரிக்க அவளும் பதிலுக்கு கமுக்கமாய் சிரித்தாள்.
ராஜுக்கு ராயரை பார்த்தவுடனே பிடித்து விட்டது.. அவனது அடவடியான செயலில் முழுவதும் அன்பு மட்டுமே நிரம்பி இருப்பதை உணர்ந்தவர் தன் மகளுக்கு ஏற்றவன் என்று முடிவெடுத்தார்.
அதுவும் மருத்துவமனையில் ராயர் திகம்பரியிடம் நடந்து கொண்ட முறைகளும் அவள் கண் விழிக்காத சமயம் அவன் பட்ட பாட்டை கண்டவர் இவரை விட தன் மகளுக்கு வேறு ஒரு நல்ல பாசமான மாப்பிள்ளை கிடைத்து விட முடியாது என்று முடிவெடுத்தார்.
அதை ராயரும் நந்தாவும் இல்லாத சமயம் அவளை செக்கப்புக்கு கூட்டி செல்லும்போது அவரின் சம்மதத்தை அவளிடம் சொல்ல, திகம்பரிக்கு மனம் முழுவதும் குங்குமத்தையும் மஞ்சளையும் கொட்டியது போல சுகந்தமாய் இருந்தது.
“அப்பா” மனம் மகிழ்ச்சியில் விம்ம
“ஆமாண்டா ஒருத்தங்களை பார்த்தாலே நாம சொல்லிடலாம் இவங்க யாரு எப்படி பட்டவங்கன்னு.. நீ அடி பட்டு இருந்தப்ப நானும் நந்தாவும் ஸ்தம்பித்து நின்னோமே தவிர உன்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு போகணும்னு சட்டுன்னு தோனல..
ஆனா ராயரு ஒரு நிமிஷம் கூட வீணாக்காம உன்னை மருத்துவமனைக்கு கூட்டிட்டு வந்து சேர்த்துட்டு உனக்காக உன் அரை வாசலிலே தவம் கிடந்தார் தெரியுமா..
அந்த மூணு நாள் அவரு செத்து பிழைச்சாறு. நீ அபாய கட்டத்தை தாண்டிய பின்பும் கண் விழிக்கல.. அதனால எங்களை உன்னிடம் பேச சொன்னாங்க.. நாங்களும் வந்து உன் கிட்ட பேசுனோம்.. ஆனா ராயரு மட்டும் உன் கிட்ட பேசல.. நந்தா அதுக்கு பெரும் தடையா இருந்தான்.
நீ கண்ணு முழிச்சாக்கூட நீ இருக்குற தைரியத்துல அவரு ஏதாவது எதிர்த்து பேசுவாரு.. ஆனா நீ தான்..” நிறுத்தியவர் “உன் கிட்டக்க கூட அவரை விடல நந்தா.. எல்லாரும் உள்ள போய் பார்த்துகிட்டு வந்தோம்.. ஆனா ராயரு உள்ள போயிட்டு வந்த அத்தனை பேரையும் ஏக்கம் சுமந்த முகத்தோட பார்த்துகிட்டு ‘யாராவது என் ரீகா எப்படி இருக்கான்னு’ சொல்லுவாங்களான்னு பார்ப்பன்.” என்றபோது திகம்பரியின் கண்களில் கண்ணீர் வந்தது..
“கூட்டி பெருக்குற ஆய்வை கூட விட்டு வைக்கல ராயரு... எல்லாத்துகிட்டயும் கேட்பான்” என்ற போது அழுகையை அடக்க நினைக்க அது விம்மலாய் வெடித்துக்கொண்டு வெளியே வந்தது...
‘எனக்காக ரொம்ப தவிச்சியாடா மாமா’ உள்ளுக்குள் சுகமாய் ஏதோ நிறைவது போல இருந்தாலும் அவன் தனக்காக பட்ட வேதனையையும் அவமானத்தையும் உணர்ந்தவளுக்கு மனசு பாரமாய் இருந்தது. உடைபெடுத்த கண்ணீர் கன்னத்தை நனைத்து அவளின் மார்பையும் நனைத்தது.
“உன் மேல உண்மையான பாசத்தை வைத்திருக்கிறான் மா.. அவனை பத்தி முழுமையா விசாரிச்சுட்டேன்.. நம்ம கம்பெனி லாயர் கிட்டதான் ஜூனியரா வேலை பார்க்கிறான்.” என்றார் புன்னகையாக
“அப்பா அதுக்குள்ளவா..” வியப்பாய் அவரிடம் கேட்டவளை ஆதுரமாய் தலை கோதியவர்
“இது என் பொண்ணு வாழ்க்கை டா.. அப்படியே விட்டுட்டு போய்டுவேன்னு நினைச்சியா..” என்று வருத்தத்துடன் கேட்டவரை கண்டு அவரின் கையை இருக்க பற்றிக்கொண்டவள்
“நான் போய் உங்களை அப்படி நினைப்பனாப்பா நீங்க என் காதலுக்கு சம்மதம் சொல்லுவீங்கலான்னு பயத்துடன் இருந்தேன்.. ஆனா நீங்க முடிவே எடுத்துட்டு என் கிட்ட சொல்றீங்க.. எனக்கு அந்த திகைப்பு தான் பா.. வேற உங்களை தவறா நான் நினைக்கலப்பா” விழிகளை கண்ணீருடன் சொன்னவளை தன் வயிற்றுடன் சேர்த்து அணைத்துக்கொண்டார்.
“எனக்கு தெரியும்டா என் பொண்ணை பத்தி அப்பா சும்மா சொன்னேன் டா..” சமாதானம் செய்தது கண் முன் வர திரும்பவும் தன் தகப்பனை பார்த்து இதமாய் சிரிக்க அவரும் அவளை பார்த்து மன நிறைவுடன் சிரித்தார்.
அத்தியாயம் 2௦
“அப்போ கொஞ்சம் கூட டைம் தர மாட்டியா..” என்று சிறுவன் போல கேட்ட ராயரை கண்டு சிரிப்பு வந்தாலும் அடக்கிக்கொண்டு
“ஆமாம்” என்றாள்.
நந்தாவை நிமிர்ந்து பார்த்தான்.. நந்தாவும் அவனை தான் பார்த்துக்கொண்டிருந்தான். இருவரும் கண்களில் சீற்றத்துடன் பார்த்துக்கொண்டே “சரி இனி நாங்க சண்டை போட மாட்டோம்” என்று கோரசாகவே வெட்டும் விழிகளோடு ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சொன்னார்கள்.
அதை பார்த்தவளுக்கு பெருமூச்சு வந்தது. ‘இருவரையும் அவ்வளவு விரைவாக சரி கட்ட முடியாது.. ரெண்டு ரெண்டு வகை..’ எண்ணியவள் ‘இப்போதைக்கு கொஞ்சம் அடங்கி இருந்தாலே போதும்’ என்ற முடிவோடு ஆறுதல் அடைந்தாள்.
ஆனால் அவ்வளவு விரைவா அவளை ஆறுதல் அடைய விட்டு விடுவார்களா என்ன மாப்பிள்ளையும் மச்சினனும்.
இரவு அவளுடன் யாரு தங்குவது என்று கேள்வி வர ராயர் முந்திக்கொண்டு “நான் பார்த்துக்குறேன்” என்று சொல்ல
“உன்னை எல்லாம் நம்பி என் தங்கச்சிய ராத்திரில விட முடியாது. நீ பகல்ல பார்த்துக்க” என்றான்.
“ஓ நைட் பண்றத என்னால பகல்ல செய்ய முடியாதா” என்று நக்கல் பண்ணியவனை கொலை வெறியோடு பார்த்தான் நந்தா..
இருவரின் பேச்சை கேட்டு திகம்பரிக்கு பத்திக்கொண்டு வந்தது. கூடவே முக சிவப்பு வேறு... கோவமா இல்லை வேற எதுவுமா தெரியலையே.....
ராஜ் இருவரின் வாக்கு வாதத்தை பார்த்து தன் மகளை திரும்பி பார்த்தார். அவளின் முகத்தில் தெரிந்த சிவப்பு அவருக்கு அவளின் நிலையை உணர்த்த தான் இடையிட வேண்டிய நிலை வர
“ராய் நீ பகல்லயே இரேன்” என்றார் ஒரு தகப்பனாக
“இல்ல மாமா இதோட கோர்டுக்கு நாலு நாள் லீவு போட்டுடேன்.. இனி என்னால லீவ் போட முடியாது... அது தான் பகல்ல நீங்க பார்த்துகிட்டீங்கன்னா இரவு நான் திகம்பரி கூட இருந்துக்குவேன்.. நான் உங்க பையன் சொல்ற மாதிரி தவறானா எந்த நோக்கத்திலும் கேக்கல.. என்னோட சூழ்நிலை அப்படி இருக்கு” என்று விளக்கியவனை கண்டு ஒரு கணம் சிந்தனையில் ஆழ்ந்தவர்
“சரிப்பா..” என்று ஒப்புதல் கொடுக்க
“அப்பா இதெல்லாம் கொஞ்சம் கூட சரியில்லை பார்த்துக்கோங்க” என்றான் ஒரு தங்கைக்கு அண்ணனாய் கோவம் கொண்டும் ராயரின் மீது சந்தேகம் கொண்டும்.
“நந்தா... “ என்று அவனை ஒரு கூர் பார்வை ஒன்றை பார்க்க அவரின் பார்வையில் இருந்த தெளிவும் உறுதியையும் படித்தவன் வேறு எதுவும் பேசாமல் விறுவிறுவென அவ்விடத்தை விட்டு அகன்றான்.
“மாமா நான் தவறா நடக்க..” என்று ஆரம்பிக்கும் போதே
“மாப்பிள்ளை நீங்க எந்த விளக்கமும் சொல்ல வேணாம். எனக்கு புரியுது உங்க தவிப்பு.. நானும் திகம்பரி அம்மா உடல் நலம் இல்லாம இருக்கும் போது யாரையும் அவ கிட்ட அண்ட விட்டதே இல்லை.. நான் மட்டும் தான் அவளை பார்த்துக்கணும் என்று அவ்வளவு பிடிவாதமா இருப்பேன்.. ஆனா அவ தான் என்னை தவிக்க விட்டுட்டு போய் சேர்ந்துட்டா..” என்று வருத்தப்பட்டவர் பின் தெளிந்து “அதனால நீங்க கவலை படாதீங்க... உங்க திகம்பரியை நீங்களே பார்த்துக்கோங்க” என்று ஒப்புதல் தந்தவரை ராயருக்கு ரொம்ப பிடித்து போனது.
“நன்றி மாமா” என்றான் நெகிழ்வாக.
“எனக்கெதுக்கு நன்றி... நான் தான் நன்றி சொல்லணும் உங்களுக்கு.. அன்னைக்கு மட்டும் நீங்க இல்லன்னா என்னால நினைச்சி கூட பார்க்க முடியல. என் மகளை என் கிட்ட முழுசா திருப்பி கொடுத்ததுக்கு ரொம்ப நன்றி ராய்..” என்று சொன்னவரை கண்டு திகம்பரிக்கு தன் செயலின் மீது வருத்தம் எழுந்தது.
ராயர் மட்டும் இல்லன்னா இந்நேரம் தான் இல்லாமல் போய் இருந்திருப்போம் அப்பாவின் பாசமும் அண்ணாவின் பாசமும் தெரியாமலே போய் இருந்திருக்குமே..
இனி ஒரு ஒரு போதும் இந்த மாதிரியான தவறு எதுவும் செய்ய கூடாது என்று முடிவெடுத்தவளுக்கு மருந்தின் வீரியத்தில் தூக்கம் வந்தது.
அன்றிரவு சுருங்க சில அறிவுரைகளை சொல்லிவிட்டு நந்தாவும் ராஜும் விடை பெற அவர்களின் தலை மறைவுக்காக காத்திருந்தவன் அவர்கள் சென்றதும் வேகமாய் அவள் அருகில் சென்றமர்ந்து அவளை தூக்கி தன் மீது போட்டுக்கொண்டு அவளை வாசம் பிடிக்க அவனது செயலை கண்டு திகைத்தவன் பின் அவனோடு ஒன்றி போனாள்.
“என்ன மாமா” என்றாள் தவிப்பாக
“ப்ச் கனவா இருக்க கூடதேன்னு பயமா இருக்குடி.. ஏன் கண்ணம்மா இப்படி பண்ணுன.. உன் அண்ணா அடுச்சா அடுச்சுட்டு போறான்னு விட வேண்டியது தானே.. பதிலுக்கு நீ போய் அந்த அடிய வாங்கனுமா... உன்னை ரத்த வெள்ளத்துல பார்க்கவே முடியலடி.. உயிர யாரோ பிழிஞ்சி அப்படியே கையில் எடுத்த மாதிரி இருந்தது தெரியுமா..
அவ்வளவு இரத்தம்டி.. மயக்கமே வந்துடுச்சு ஆனா உன்னை எப்படியாச்சும் மருத்துவமனையில சேர்த்தே ஆகணும்னு வெறியோட காரை ஒட்டி வந்தேன். உன்னை சேர்த்த பிறகு தான் எனக்கு மூச்சே வந்தது.
அதுக்கு பிறகும் நீ கண்ணு முழிக்காம போயிட்டியா... உனக்காக காத்துகிட்டு இருந்த ஒவ்வொரு கணமும் சத்தியமா செத்து போனேன்டி..” என்றவனின் உணர்வுகள் தனக்குள் முழுமையாக வாங்கியவள் அதுவும் அவன் ‘செத்துட்டேன்’ என்று சொன்ன வாக்கியம் அவளை உலுக்கி எடுத்து.
அவன் போனதிற்கு பிறகு தனக்கு மட்டும் இங்க என்ன இருக்கு... அவன் தானே அவளுக்கு எல்லாமே.. கலங்கியவள் சட்டென்று அவன் புறம் திரும்பி..
அவள் எதுவும் பேசாமல் உயிர் நடுங்க அவனை வளைத்து பிடித்து தன் சக்தி எல்லாம் திரட்டியவள் எம்பி அவனின் இதழ்களில் இதழை புதைத்து மேற்கொண்டு அவன் பேசாத வண்ணம் அவனை சிறை செய்தாள் தன் அன்பினால்.
அதில் முழுமையாக நெகிழ்ந்த ராயர் அவளிடம் தன்னை ஒப்பு கொடுத்துவிட்டு காதல் திமிருடன் அவளை வளைத்து இறுக்கிக்கொண்டான் தன்னுடன் சேர்த்து.
அவள் கண்களில் வழிந்த கண்ணீர் அவனை நனைக்க தனக்காக தன் மனம் கவர்ந்தவள் அழுகிறாள் என்ற உணர்வு அவனை முழுமையான ஆண் மகனாய் உணர வைத்து, அவளது காதல் அவனுக்கு செருக்கை கொடுக்க அதை எந்தவித குறைவும் இன்றி ஏற்றுக்கொண்டான்.
இரவு முழுவதும் ஒருவரின் அணைப்பில் ஒருவர் சுகமாய் கண் துஞ்சினார்கள். தொடர்ந்த நாட்கள் இருவருக்கும் சுகமாகவே கழிய ராஜும் நந்தாவும் ஊருக்கு செல்லும் நாளும் வந்தது.
பெரும் தயக்கத்துடன் மகளின் முன்பு வந்து நின்றார் ராஜ்.
“பாப்பா அங்க போட்டது போட்டபடியே வந்துட்டேன்டா.. இப்போ அவசரமா போயே ஆகணும்.. எனக்கு என்ன பண்றதுன்னே புரியலடா..” என்றவரை வாஞ்சையோடு பார்த்தவள்
“அப்பா எனக்கு உங்களை புரியும் பா.. எனக்கு உங்க கூடவே இருக்கணும்னு ஆசை தான்.. ஆனாலும் உங்க வேலை பளு எனக்கு தெரியும் நீங்க என் பக்கத்துல இல்லன்னு நான் வருத்தபட மாட்டேன். ஆனா நான் பார்க்கனும்னு நினைக்கும் போது மட்டும் நீங்க ஒரு முறை வந்து பார்த்துட்டு போங்க பா.. அதனால வருத்த படமா இப்போ போயிட்டு வாங்க..” என்று சிரித்த முகமாக வழியனுப்பி வைத்தவளை கண்டு நிம்மதி எழுந்தாலும் அதை விட அடி பட்டு இருக்கும் மகளின் அருகில் இருக்க முடியாமல் போனதில் வருத்தம் அதிகமாய் இருந்தது.
நந்தாவுக்கு கூட எதையோ இழந்து விட்டது போல இருந்தது. இவ்வளவு நாள் எதுவும் தோணாமல் இருந்தவன் இப்போது ராயரின் மூலம் ராயரோடு போட்டி போட்டு கொண்டு தங்கை திகம்பரியிடம் அதிக உரிமையோடு பழகியதில் அவளை விட்டு செல்ல மனசே வரவில்லை அவனுக்கு.
அதுவும் அவளை வெகுவாக வருத்தும் அளவு அடித்துவிட்டு வருந்திக் கொண்டிருந்தவனை தன் பாசத்தால்
“என்ன அண்ணா இதுக்கு போய் இப்படி வறுத்த பட்டுகிட்டு இருக்குற.. உனக்கு உரிமை இல்லையா என்ன... அதுவும் தெரியாம தானே அடிச்ச விடுண்ணா.. நீ உரிமையா என்னை கொன்னா கூட நான் சுகமா தாங்கிக்குவேன். என் கிட்ட நீ உரிமையா இருக்க தான் ஆசை படுறேன். எனக்கு நீ இன்னொரு அப்பா தான் அண்ணா..” என்ற போதே அவளின் கைகளை பிடித்துக்கொண்டு கதறிவிட்டான் நந்தா.
“அண்ணா என்னண்ணா நீ... இதுக்கெல்லாம் யாராவது அழுவாங்களா” அவள் அவனை தேற்ற இதை எல்லாம் அருகில் இருந்து பார்த்துக்கிட்டு இருந்த ராயர் திகம்பரியின் காதில்
“என்னடி உன் உடன்பிறப்பு ரொம்ப ரசத்தை பிழியிறான் பார்த்து காவேரில தண்ணி வந்துட போவுது..” சன்னமாய் முனக..
சட்டென்று அவனை முறைத்தாள் திகம்பரி..
“என்ன முறைப்பு உண்மைய தான்மா சொல்றேன்” என்று முனகியவன்.
“டேய் போதும்டா உங்க பாசப்பினைப்பு.. பார்க்க முடியலடா” என்று நந்தாவை வம்பிழுக்க
“திகம்பரி அவனை வாய மூடிகிட்டு சும்மா இருக்க சொல்லு”
“முடியாது என்னடா பண்ணுவ” வேண்டும் என்றே வம்புக்கு நின்றான் ராயர்.
“திகம்பரி உனக்காக தான் நான் பொருமையா இருக்கேன்”
“இல்லன்னா என்னடா செய்வ”
“ஏங்க கொஞ்ச நேரம் சும்மா இருங்களேன்” திகம்பரி அவனை அடக்க அவனா அடங்குவான்.
“நீ என்ன உன் பாச மலருக்கு சப்போட்டா..” அவளிடமும் அவன் எகிறினான்.
“ஆமாண்டா அப்படி தான்... அதுல உனக்கு என்னடா வருத்தம்” நந்தா பதிலுக்கு எகுற
“எனக்கு தான் வருத்தம். சரி நீ எப்போ கிளம்புவ” என்றவனை கொலை வெறியோடு பார்த்தாள் திகம்பரி..
“ராய் கொஞ்சம் வாயை மூடுங்க. எப்போ பாரு சின்ன பிள்ளை மாதிரி என் அண்ணா கிட்ட வம்புக்கு நின்னுகிட்டு” முறைத்தவள் நந்தாவிடம் திரும்பினாள்.
“அவரு பேசுறதை கணக்கில் வச்சுக்காதீங்க அண்ணா..” என்றவளை
“எனக்கு இப்பவும் அவனை பிடிக்கல.. என் நண்பன் கார்த்திய தான் உனக்கு பேசி முடிக்கலாம்னு நினைச்சேன் ஆனா நீ என்னன்னா...” வருத்தத்தோடு அவளை பார்த்து முடிக்க
“டேய் உனக்கு அவ்வளவு தான் மரியாதை.. அவ எனக்குன்னு பொறந்தவ” பொங்கினான் ராயர்.
“டேய் வாயை மூடுடா.. உனக்கு என்ன தகுதி இருக்குன்னு என் தங்கையை காதலிக்குற.. எங்க அந்தஸ்த்து என்னன்னு தெரியுமா..” அவன் பெருமையை அள்ளிவிட.
“எனக்கு ஒரே ஒரு தகுதி மட்டும் போதும்டா.. அது என்னன்னா உன்னை சீக்கிரமா என் பிள்ளைக்கு தாய் மாமன் ஆக்குறதுதாண்டா.. அந்த தகுதி எனக்கு இருக்குடா” என்றவனை பார்த்து தலையிலே அடித்துக்கொண்டாள் திகம்பரி.
அதை கேட்டு நந்தாவுக்கு கோவம் வந்தாலும் கூடவே சிரிப்பும் வந்தது..
“எவ்வளவு ரணகளமாய் இருந்தாலும் நீ மட்டும் எதுக்கும் கொஞ்சமும் அசர மாட்டேங்குறடா” என்று அவனை முறைத்தான்.
“இதுக்கெல்லாம் அலட்டிகிட்டா என்ன செயிறது மச்சான். இன்னும் நாமா பார்க்குறதுக்கு எவ்வளவோ இருக்கே..” என்ற படி யாரும் எதிர் பார்க்காத சமயம் நந்தாவை இறுக கட்டி அனைத்து
“பத்திரமா போய்ட்டு வா மச்சான் நான் உன் தங்கச்சியை பத்திரமா பார்த்துக்குறேன்” என்று உறுதி குடுத்தவன் அவனின் கன்னத்தில் முத்தமும் குடுக்க
“அய்ய ச்சீ கருமம்.. தள்ளி போடா” என்று அவனை தள்ளி விட்டுட்டு தன் கன்னத்தை துடைத்துக் கொண்டவனுக்கும் சிரிப்பு பொங்கி வந்தது கூடவே இதுவரை இருந்த ஈகோ எங்கயோ சொல்லிக் கொள்ளாமல் ஓடி போனது போல இருந்தது நந்தாவுக்கு...
ராயரின் சேட்டையை பார்த்த அப்பாவுக்கும் பொண்ணுக்கும் சிரிப்பு தாளவில்லை. கூடவே மனமும் நிறைந்து போனது.
ஆயிரம் பத்திரங்களை சொல்லிவிட்டு இருவரிடமும் விடை பெற்று கிளம்பினார்கள் அப்பாவும் பையனும்.
அதன் பிறகு வாழ்க்கை இலகுவாய் நகர்ந்தது. திகம்பரி கல்லூரிக்கு செல்லவும் ராயர் கோர்டுக்கு செல்லவும் தொடங்கி இருந்தார்கள்.
மாலை நேரம் வீட்டிலே சந்தித்துக்கொண்டார்கள். ராயர் இரவு உணவை அங்கவே முடித்துக்கொண்டு தன் இருப்பிடத்துக்கு திரும்புவான். காலை நேரம் அவளுக்கு நேரம் கிடைக்காது என்பதால் காலை சந்திப்பை ராயர் தவிர்த்துவிட்டான்.
ஆனாலும் போனில் உரையாடலை தொடந்து கொண்டிருந்தான்.
அவ்வபோது ராயரிடம் ராஜும் நந்தாவும் பேசிக்கொண்டார்கள். ஆனால் திகம்பரியிடம் தினமும் ஒரு பத்து நிமிடமாவது பேசிவிடுவார்கள் இருவரும். அதுவே திகம்பரிக்கு போதுமானதாய் இருந்தது.
திகம்பரியை பார்க்கும் நேரம் எல்லாம் கரை உடைக்க காத்திருந்த ஆசை அவளின் படிப்பு கெடும் என்று எண்ணி அவளுக்கு அதிகம் தொந்தரவு குடுக்காமல் தள்ளியே இருந்தான்.
அந்த நாட்களை நினைத்து பார்த்த திகம்பரிக்கு சென்னை இன்னும் சில வினாடிகளில் தொட்டு விடுவோம் என்று புரிய மனம் முழுவதும் பெரும் பாரத்தை தாங்கியது போல உணர்ந்தாள்.
‘என்னை தேடி வருவியாடா... முன்பு போல என்னோடு இருப்பாயா.. எனக்கு நீ வேணும்டா.. நான் உன் கூட இருந்தா தான் நிம்மதியா இருப்பேன் ராய்.. என் வாழ்க்கை உன் கூட தான்.. ஆனா நான் உனக்கு வேணாம் ராய்.. உன் வாழ்வில் கரும் புள்ளியாய் நான் வர விருப்பப்படல” என்று இரு மனமாய் அவளுக்குள் புலம்பியவள் தன்னை தேற்றிக்கொள்ள மறுத்தவளாய் அவனோடு நினைவுகளுக்குள் புகுந்து கொண்டாள்.
அவனை பற்றி நினைக்கும் போதே உள்ளுக்குள் ஐஸ் மலையை வைத்தது போல குளிர்ந்தது..
“எவ்வளவு அடாவடிடா நீ..” அவனை கொஞ்சியவள் மேலும் அவனின் நினைவுகளில் மூழ்கிப்போனாள்.





