“நீங்க என்ன வேணா நினைச்சிக்கோங்க. எனக்கு இந்த வேலை முக்கியம் அதோட, நான் இந்த வேலையை விட்டா நீங்க தான் அக்ரிமெண்ட்ல இழப்பீடு தொகை போட்டு இருக்கீங்களே. என்னால இப்போதைக்கு அவ்வளவு பெரிய தொகை எல்லாம் பிறட்ட முடியாது. அதுக்காக மட்டும் தான் நான் இங்கே வேலை செய்ய ஒத்துக்கிட்டேன். மற்றபடி நீங்க சொன்ன பச்சோந்தி குணம் எனக்கு கிடையாது. இல்ல என் குணம் அப்படி தான்னு நீங்களே ஒரு கன்க்லூசன் வச்சி இருந்தா அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது” என்றாள் நிமிர்வாக.
அவளது நிமிர்வை உற்று நோக்கியவனின் கண்களில் அதை சுக்கு நூராக்கிப் பார்க்க ஆசை வந்தது. அதை அவனது கண்களும் வெளிப்படுத்த முதுகு தண்டுக்குள் ஒரு கோடி மின்னல் வெட்டிப் போனது அவளுக்கு.
அதை காட்டிக்கொள்ளாமல் “என்னக்கு வேலை இருக்கு. நான் போகணும்” என்று அவள் சொல்ல,
“போறதுக்கு முன்னாடி ஒரு காபி போட்டுட்டு வந்து குடு” என்றான் திமிராக. அதை கேட்டவளுக்கு தன்னை அவன் வேணுமென்றே அவமானப்படுத்துகிறான் என்று புரிய,
“லுக் மிஸ்டர் சர்வேஸ்வரன், நான் எம்பிஏ கோல்ட் மெடலிஸ்ட் ஓகேங்களா? உங்களுக்கு காபி போட்டு எடுத்துட்டு வர்றதெல்லாம் என்னோட வேலை இல்லை. நான் இங்க பர்சேசிங் டிப்பார்மென்ட்ல ஹையர் போஷிசன்ல இருக்கேன். மைண்டிட்” என்று சகி சொல்ல, அவனது இதழ்களில் ஏளன புன்னகை தோன்றியது.
“ம்ஹும்...” என்று நக்கல் பண்ணியவன், மேனேஜருக்கு போன் போட்டு உள்ளே வர சொன்னான். அவரும் வேகமாய் உள்ளே வர,
“இவங்க க்வாலிபிகேஷன் க்கு எதுக்கு பர்சேஷிங் டிப்பார்மென்ட் குடுத்து இருக்கீங்க. அது எவ்வளவு பெரிய கான்பிடன்ஷியல் டிப்பார்மென்ட் தெரியுமா?” என்று அதட்டியவன்,
“இனி இந்த சகி என்னோட பியேவா கன்வெர்ட் ஆகிடுவாங்க. அதுக்கான எல்லா ப்ரோசிஜரையும் செய்துடுங்க... இப்போதுல இருந்து இவ... ங்க.. என்னோட பி.ஏ. ஓகேவா” என்று அவளை பார்த்துக்கொண்டே மேனேஜருக்கு சொல்ல, சகிக்கு பத்திக்கொண்டு வந்தது.
“நீங்க சொன்னா சரிங்க சார்” என்றவருக்கு சகியின் லண்டன் கிராஜுவேட் க்வாலிபிகேஷன் கண் முன் வர ஒன்றும் சொல்லாமல் போய்விட்டார்.
அவர் போன பிறகு சகியை அழுத்தமாக ஒரு பார்வை பார்த்தான். இப்போ நான் சொல்வதை செய்வது மட்டும் தான் உன்னுடைய வேலை. என்று அவனது பார்வை சொல்லாமல் சொல்ல தன் நிலையை எண்ணி ஒரு கணம் பயந்து தான் போனாள்.
முதல் நாளே இவன் இந்த அளவுக்கு இறங்கி அடிக்கிறான் எனில் இனி போக போக தன் நிலையை எண்ணிப் பார்க்கவே அவளுக்கு பயமாக இருந்தது. ஆனாலும் தன் பயத்தை அவனிடம் காட்டிக்கொள்ள கூடாது என்பதில் கவனமாக இருந்தாள்.
“இப்போ நீ தான் என்னோட காபி மேக்கர் சோ நான் காபி கேட்கும் போதெல்லாம் நீ...” என்று அவளை பார்த்து ஒற்றை விரலை சுட்டிக் காட்டி, “நீ மட்டும் தான் எனக்கான காபியை போட்டுக் கொண்டு வரணும். அதுவும் இந்த வருடம் முழுவதும் காடிட்.." என்று அவன் திமிராக சொல்ல, அந்த திமிர் அவளை மிகவும் காயப்படுத்தியது. தன் வேலை மிகவும் கடுமையாக இருக்கும், அதுவும் அவமானம் மிக பிரதானமாக இருக்கும் என்று அவளுக்கு நன்கு புரிந்துப் போனது.
ஒரு கணம் அசையா சிலையாக அவள் நின்று இருக்க, “இன்னும் ஒரு நிமிடத்தில் எனக்கான காபி என் டேபிளில் இருக்கணும்...” என்று அவன் கர்ஜிக்க அதில் உடல் தூக்கிவாரிப் போட்டது அவளுக்கு.
அவளையும் அறியாமல் அவள் தலை அசைக்க அவன் இடத்தை சுட்டிக் காட்டினான். வேகமாய் அவனுக்கான காபியை நடுங்கும் கரங்களால் போட்டுக்கொண்டு இருக்க மனமோ பலமாய் அடி வாங்கியது.
“இதுவும் ஒரு வேலை தான் சகி. வேலையை வேலையா மட்டும் பாரு... வேறு எதையும் பற்றி யோசிக்காத.. யோசித்தால் உன்னால் இங்க வேலை செய்ய முடியாது” என்று தன்னை தானே தேற்றிக்கொண்டவள் அவனுக்கான காபியை கொண்டு வந்து அவன் முன்பு வைத்தாள்.
எடுத்து சுவை பார்த்தவன், “நாட் பேட்...” என்று சிலாகித்தவன், “கட்டிலிலும் உன் வித்தை நல்லா தான் இருக்குமோ...?” என்று அவன் கேட்க, அவன் கேட்ட கேள்வியில் உடம்பும் மனமும் ஒருசேர அதிர்ந்துப் போனது.
கண்கள் தெறிக்கும் அளவுக்கு அவனை அதிர்வாக பார்த்தாள். அவளது அதிர்வை அவதானித்த படியே,
“இந்நேரம் என் கையால தாலி வாங்கி இருந்து இருந்தா உன் திறமையை நான் பார்த்து இருப்பேன். ஆனா இப்போ உன் திறமை எப்படி இருக்கும்னு எனக்கு தெரியாதுல்ல அது தான் கேட்டேன்.” என்றான் மிகவும் கூலாக.
அவளுக்கு தான் எரிச்சல் மண்டியது. தேவையில்லாத வரம்பு மீறிய பேச்சில் பற்றிக்கொண்டு வந்தது சகிக்கு.
“மிஸ்டர் வேலைன்னா வேலையை மட்டும் பேசுங்க. அதை விட்டுட்டு தேவையில்லாம என்கிட்டே பேசிக்கிட்டு இருக்காதீங்க. மரியாதை கெட்டுப் போயிடும்..” அவள் எச்சரிக்க,
அவளது எச்சரிக்கையை கால் தூசிக்கு கூட எடுத்துக்கொள்ளாமல் நக்கலாக அவன் விசிலடிக்க அவளுக்கு கடுப்பாய் வந்தது.
“லுக் மிஸ்டர்...” என்று அவள் கோவத்துடன் ஆரம்பிக்க,
“ஹேய் என்னடி நானும் அப்போத்துல இருந்து பார்த்துக்கிட்டு இருக்கேன். மிஸ்டர் மிஸ்டர்னு கூவிக்கிட்டு இருக்க... என்ன நக்கலா?” அவன் வேகமாக அவளை நெருங்கி,
“காபி மட்டும் இல்லடி... எனக்கு எல்லா வேலையும் நீ தான் செஞ்சாகணும். இன்க்லூடிங் நான் ட்ரெஸ் சேன்ஞ் பண்ணிவிட சொன்னா அதையும் நீ செய்து தான் ஆகணும்” என்றவனை அதிர்வாக நோக்கினாள்.
சர்வாவிடம் இருந்து இப்படியான பேச்சு வார்த்தைகள் வரும் என்று எதிர்பாராதவள் பெரிதும் அதிர்ந்து தான் போனாள். அவளது அதிர்வை கண்டு மனம் சற்றே மகிழ்ந்தது என்றாலும் முழுதாக அவளை விரட்டி அடித்து குளிர்காய விட வெறிக் கொண்டது அவனுக்கு.
“இருடி மொத்தமா முடிச்சு விடுறேன்...” என்று தன் மனதுக்குள்ளே எண்ணிக்கொண்டவன் அவளுக்கான வேலைகளை அவன் சொல்ல ஆரம்பித்தான்.
அவனுடைய அன்றாட பிஏவான கிரியை அழைத்து, “புதுசா இவ... ங்க பிஏ வேலைக்கு வந்து இருக்கா... ங்க... கைட் பண்ணு... நீ அவுட் சைட் பார்த்துக்கோ. இவ... ங்க... இன் சைட் பார்த்துக்கட்டும்” என்று சொன்னவன் தன் வேலையில் மூழ்கிவிட்டான்.
அலுவலகத்தில் சர்வாவுடனான முதல் நாள் அனுபவமே அவளுக்கு கண்ணை கட்டிக் கொண்டு வந்தது. எந்த அளவுக்கு அவளை டார்ச்சர் பண்ண முடியும் அந்த அளவுக்கு அவளை டார்ச்சர் செய்தான் சர்வேஸ்வரன். இருந்தாலும் எதையும் மனதில் போட்டுக் கொள்ளாமல் தனக்கு கொடுத்த வேலைகளை அவள் சிறப்பாகவே செய்து முடித்தாள்.
அன்றைய பொழுது எப்படியோ ஓரளவு கடத்தியவள் வீட்டுக்கு வந்தாள். வீட்டுக்கு வந்தவளிடம், “இன்னைக்கு எப்படிமா போனது. வேலை ஒண்ணும் கடினம் இல்லையே...” என்று தகப்பன் கேட்க,
அலுவலகத்தில் நடந்தை எல்லாம் தன் மனதின் அடி ஆழத்தில் போட்டு புதைத்துவிட்டு,
“பிடிச்சிருக்கு, பரவாயில்லப்பா ஓரளவு நல்லா தான் இருக்கு. ஒண்ணும் பிரச்சனை இல்ல.. போக போக சரியாகிடும்” என்று அவரிடம் சொல்லி சமாளித்தவள், தன் தங்கையும் தன் நண்பனையும் பார்த்தாள்.
இருவரிடமும் அதே பதிலை சொல்லியவள் தன்னுடைய அறைக்குள் நுழைந்து பிரஷ் ஆகி வந்தவள் இரவு உணவுக்கான வேலைகளை ஆரம்பிக்க, கூட உதவியாக அவளுடைய தங்கையும் நண்பனும் வர மூவரும் பேசி சிரித்துக் கொண்டு அந்த பொழுதை இனிமையாக கழித்தார்கள்.
குடும்பத்தாரிடம் சர்வாவின் கம்பெனிக்கு தான் வேலைக்கு போவதை மறைத்து விட்டாள். அவர்களும் எந்த கம்பெனி என்ன என்று கேட்கவில்லை. எங்கு இருக்கிறது என்பது மட்டும் கேட்டுக் கொண்டார்கள்.
“இது யாரோட கம்பெனி. நான் விசாரிச்சு பார்க்கிறேன்...” என்று அவளுடைய நண்பன் கார்த்தி கேட்க,
“நான் நெட்ல பார்த்து தான் சர்ச் பண்ணி போனேன். அது நல்ல கம்பெனி தான். பல வருடமா லீடிங்கல இருக்கு. பேட் இந்த ப்ரான்ஞ் இப்பதான் புதுசா ஆரம்பிச்சு இருக்காங்க போல...” என்று இவள் சொல்ல,
“அப்படியா... ரெண்டு வருஷம் தான் ஆகுதா” என்று நெற்றியை சுருக்கி இவன் கேட்க,
“இப்பதான் அது வளர்ந்து வந்துக்கிட்டு இருக்கு கார்த்தி...” என்று அப்பட்டமாக பொய் சொன்னாள்.
சர்வாவின் கம்பெனி காலங்காலமாக தலைமுறை தலைமுறையாக இருப்பதை அப்படியே மறைத்து விட்டாள் அவர்களிடமிருந்து. அங்கு தான் வேலைக்கு போவது தெரிந்தால் உடனடியாக அந்த வேலையை விட்டுவிட வேண்டும் என்பதுதான் அவர்களின் முதல் கோரிக்கையாக இருக்கும் என்பதால் அவர்களிடம் பொய் உரைத்தாள்.
வீடு இருக்கும் நிலையில் யாராவது ஒருவராவது வேலைக்கு போக வேண்டும். போயே ஆக வேண்டும் தங்கை இன்னும் கல்லூரியில் தான் படித்துக் கொண்டிருக்கிறாள். சகியின் அப்பா எங்கும் வேலைக்கு செல்லவில்லை. அவருக்கு உடல் மிகவும் தளர்ந்து விட்டது. ஏகப்பட்ட கடன்களால் அவர் நிலை குலைந்து போயிருந்தார். அவரை வெளி வேலைக்கு சகி அனுப்பவில்லை. ஏனெனில் அவரே பல தொழில்களை கட்டி ஆண்டவர். அவரை போய் ஒருவரிடம் கைக்கட்டி வேலைக்கு அனுப்ப இவள் தயாராக இல்லை.
அதேபோல தங்கையும் படித்துக் கொண்டு இருப்பதால் அவளையும் எங்கும் வேலைக்கு அனுப்பவில்லை. அவள் நண்பனான கார்த்திக் வேலைக்கு போகிறேன் என்று சொல்ல அவனுக்கு எங்கும் வேலை கிடைக்கவே இல்லை. ஏனெனில் அவன் முன்பு பார்த்த வேலை அந்த மாதிரி என்பதோடு அவனுடைய முன் கோபமும் எங்கும் அவனுக்கு வேலை கிடைக்க விடவில்லை.
அவனை எங்கேயும் வேலைக்கு எடுத்துக் கொள்ளவில்லை என்பதோடு இவள் தான் இவ்வளவு நாட்களும் தன் குடும்பத்தை பார்த்துக்கொண்டு இருக்கிறாள். இவ்வளவு நாளும் வேலைக்கு போக வேண்டிய அவசியம் இல்லாமல் ஓரளவு சமாளித்து விட்டாள். ஆனால் இப்பொழுது போக வேண்டிய சூழல். அதோடு அவளை நம்பி தான் இந்த குடும்பமே இருக்கிறது.
அப்படிப்பட்ட சூழலில் தான் சர்வாவிடம் வேலைக்கு போகிறேன் என்று சொன்னால் நிச்சயமாக இவர்கள் விட மாட்டார்கள். பிறகு பட்டினியில் கிடைக்க வேண்டியது தான். என்னதான் கோல்ட் மெடலிஸ்ட் என்றாலும் இவ்வளவு நாட்களாக ஒரு எக்ஸ்பீரியன்ஸும் இல்லாமல் வீட்டிலிருந்து ஓரளவு சமாளித்துக் கொண்டிருந்தாள். சகியின் அப்பா கிருஷ்ணனுக்கு தன் மகளை வெளியே வேலைக்கு அனுப்ப மனமே வரவில்லை.
இவ்வளவு நாளும் அவர் தான் இவளை வேலைக்கு அனுப்பாமல் இழுத்து பிடித்தார். ஆனால் இப்பொழுது காலம் அப்படி இல்லையே... அடுத்த நேர உணவுக்கு கூட மிகவும் கட்டலாகி(கஷ்டமாகி) போனது.
இப்பொழுது வேலைக்கு போயே ஆக வேண்டும் கட்டாயத்தில் நிதி நெருக்கடியில் பல கடன்களாலும் வேலைக்கு போகும் முடிவை எடுத்து இருந்தாள். அதனால் தன் உறுதியை தளர்த்தி விட்டு வேலைக்கு அவசர அவசரமாக ஓடும் தன் மகளை கைக்கட்டிக் கொண்டு பார்க்கும் நிலைக்கு வந்தார் கிருஷ்ணன்.
எப்பேர்பட்ட குடும்பம். நாலு தலைமுறை உட்கார்ந்து தின்று தீர்த்தாலும் தீராத சொத்து உடையவர் கிருஷ்ணன். தன் ஏக போக நிறுவனத்தை கட்டி காப்பாத்தவே தன் முதல் மகளை ராணி போல வளர்த்தார். தனக்கு தெரிந்த மேனேஜ்மென்ட், சூசகம், எப்படி அடித்தால் எப்படி விழும் என்கிற நாசுக்கு என முழுவதையும் தன் மகளுக்கு சொல்லி சொல்லி வளர்த்தார்.






