விழிகளில் நீர் இளகி வரும் நேரம் கதவு திறக்கும் சத்தம் கேட்க படுக்கையில் இருந்து எழுந்து அமர்ந்தாள். வேக நடையுடன் உள்ளே வந்தவன் அங்கு இருந்த நறுமுகையை புருவம் சுருக்கி, “யார் நீ...?” என்று ஒரு பார்வை பார்க்க அந்த பார்வையில் தன் மொத்த ஜீவனையும் விட்டுவிட்டாள் பெண்ணவள்.
தன் வலியை வெளியே காண்பித்துக் கொள்ளாமல் வெற்று புன்னகை வீசி, “இன்னைக்கு விடுமுறை” என்று அவளே தான் வீட்டில் இருக்கும் காரணத்தை சொல்ல விக்ரமனுக்கு அப்பொழுது தான் உறைத்தது.
உறைத்தும், “ஓ.!” என்ற ஒற்றை சொல்லோடு நிறுத்திக்கொண்டவன் குளியல் அறைக்குள் நுழைந்துக்கொண்டான். அவனது அந்த ஒற்றை சொல் அவளின் உயிரை பறிக்கும் என்று தெரியாமல் போனான் விக்ரமன்.
வலி நிறைந்த ஒரு புன்னகையை சிந்தியவள் அவன் சாப்பிட உணவை எடுத்து மேசை மீது வைத்து அவனது வருகைக்காக காத்திருந்தாள். குளித்து தன் வேலையை முடித்துக்கொண்டு வெளியே வந்தவன்,
மேசையில் அவனுக்காக காத்திருந்த பெண்ணவளிடம்,
“வரேன்...” என்று கூட சொல்லாமல் ஒரு சின்ன தலையசைப்புடன் கிளம்பிவிட்டான். அவனது இந்த நடத்தையில் பெண்ணவள் இன்னும் அடிபட்டுப் போனாள்.
ஊரில் யாருக்குமே வேலையில்லையா? இல்லை குடும்பம் தான் இல்லையா? அதற்காக எல்லோரும் இப்படியா இருக்கிறார்கள் என்று அவளது சிந்தை போக சட்டென்று அதை இறுக்கிக் கட்டியவள் எழுந்து வெளியே செல்ல கிளம்பினாள்.
‘வீட்டுக்குள்ளே இருந்தால் இப்படி தான் தேவையில்லாத சிந்தனை எழும்.’ என்று தன்னையும் தன் உணர்வுகளையும் அடக்கிக்கொண்டு வெளியே சுற்ற கிளம்பினாள்.
நன்றாக ஒரு படம் பார்த்துவிட்டு வெளியவே உண்டுவிட்டு இரவு ஒன்பது மணிக்கு வீட்டுக்கு வந்தாள். வந்தவள் அங்கு விக்ரமன் இருப்பதைக் கண்டு லேசாக அதிர்ந்தாள்.
ஆனால் அவனோ அவளை சிறிதும் கண்டு கொள்ளாமல் அவனது வேலையில் மூழ்கி இருந்தான். அதில் இன்னும் அவளது உள்ளம் புண்பட்டு போனது.
இருவரின் வாழ்க்கையும் தாமரை இலை தண்ணீர் போல ஒட்டாமல் செல்ல ஆரம்பித்தது. கடமை பெரிது தான் ஆனால் குடும்ப வாழ்க்கை அதை விட பெரியது என்று விக்ரமன் இன்னும் உணரவில்லை. உணரும்பொழுது. என்ன ஆகுமோ தெரியவில்லை.
நாட்கள் அதன் போக்கில் நகர்ந்தது. நறுமுகை வேலைக்குச் சென்று ஒரு மாத காலம் ஆனது. அவள் இரவு நேரமும் பணி பார்க்க ஆரம்பித்தாள். அவள் இருக்கிறாளா இல்லையா என்று கூட விக்ரமன் பார்க்காமல் போனதில் இவளுக்கு வீட்டில் இருப்பது நரகமாக இருக்க இரவு பொழுதும் வேலையைச் செய்ய தொடங்கினாள்.
இதற்கு இடையில் ஒரு மாத காலம் ஆன நிலையில் விக்ரமனுக்கு அதிக பிரஷர் கொடுக்க ஆரம்பித்தார்கள் எல்லா பக்கமும் இருந்தும். இதோடு சேர்ந்து பத்திரிக்கையும், ஊடகவியலாளர்களும் கேள்வி மேல் கேட்டு, அரசியல் களத்தில் இருப்பவர்களும் தங்களின் நிலைக்கு ஏற்றபடி காவல்துறையை கேள்வி மேல் கேள்வி எழுப்பி பொது மக்களை இன்னுமின்னும் தூண்டி விட்டுக் கொண்டு இருந்தார்கள்.
பொது மக்கள் மீம்ஸ் மேல் மீஸ் போட்டு காவல் துறையை அதிகமாக டேமேஜ் செய்துக்கொண்டு இருந்தார்கள். இதெல்லாம் போதாது என்று ஸ்பெஷல் க்ரைம் ப்ரென்ஞ் ஆட்கள் வேறு இவனை எந்த வேலையையும் செய்ய விடாமல் தங்களுக்கு கீழ் பணி செய்ய வைத்து, அவர்கள் சொல்வதை மட்டும் செய்ய வேண்டும் என்று கட்டளை போட்டு அவனை இன்னும் இன்னும் கோவப்பட வைத்தார்கள்.
ஸ்பெஷல் க்ரைம் ப்ரெஞ் தலைமையிடம் இவன் போய் நிற்க அவர்களும் அதையே சொல்ல கட்டுக்கடங்காமல் கோவம் வந்தது. அவர்களும் எதையும் கண்டு பிடிக்கவில்லை. இவனையும் எதையும் கண்டு பிடிக்க விட வில்லை.
அதில் இன்னும் ஸ்ட்ரெஸ் ஆனவனுக்கு மூக்கில் இருந்து உதிரம் கசிய ஆரம்பித்தது. இவனுக்கு ஒரு பாயின்ட் கிடைத்தும் அதை தொடர்ந்து போக விடாமல், “இப்போ நீ என்னத்த கிழிக்க போற. போ, போய் இறந்து போன அந்த பெண்ணோட அப்பா அம்மாவை விசாரணைக்கு வர சொல்லு. ஏதாவது காதல் பிரச்சனையா இருக்க போகுது.” என்று நக்கல் பண்ணி அவனை வெளியே அனுப்பினார்கள்.
அவனும் வேறு வழியின்றி பல்லைக் கடித்துக்கொண்டு அந்த பெண்ணின் பெற்றவர்களை அழைத்து வந்தான். அவனின் கண்ணுக்கு முன்னாடியே இறந்து போன பெண்ணை பற்றி மிக கேவலமாக விசாரணை செய்தார்கள்.
அதில் அவனுக்கு அவ்வளவு கோவம் வந்தது. ஆனால் எதையும் தடுக்க முடியவில்லை. ஒரு கட்டத்துக்கு மேல் அதை பொறுத்துக்கொள்ள முடியாமல்,
“எனஃப்” என்று கத்தியே விட்டான். அவர்கள் எல்லோரும் அவனை முறைத்து பார்த்தார்கள்.
“விக்ரம் தி சிஸ் நாட் அ மீட்டிங். தி சிஸ் எ இன்வெஸ்டிகேஷன். இப்படி தான் இருக்கும். ஏன் இதுக்கு முன்னாடி நீங்க யாரையும் இப்படி விசாரித்தது இல்லையா?” அந்த க்ரூப்பில் இருந்த அருண் கேள்வி கேட்டான்.
“யாரு இல்லன்னு சொன்னது. ஆனா இவங்களுக்கும் இந்த கொலைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. அதோட இறந்த பெண்ணை பற்றி ரொம்ப கேவலமா கேள்வி இருக்கு” என்று கண்டித்தான்.
“எங்க விசாரணை இப்படி தான் இருக்கும்.” என்று முடித்த அருண் மேலும் மேலும் இறந்த பெண்ணின் நடவடிக்கையை ஆராய்கிறேன் என்கிற பெயரில் வக்கிரமாக கேள்வி கேட்டான்.
பெற்றவர்களின் கண்களில் நிற்காமல் கண்ணீர் வந்துக்கொண்டே இருந்தது. அதை பார்க்க முடியாமல் எழுந்து வெளியே சென்றுவிட்டான் விக்ரமன்.
அவனை தொடர்ந்து தீபனும் வர, “பச்சையா தெரியுது. இவனுங்க கேசை திசை திருப்ப பார்க்கிறானுங்கன்னு. இப்போ என்னடா பண்ணலாம்?” தீபன் அவனது தோளை தொட அவனது கண்கள் எல்லாம் சிவந்து போனது அடக்கி வைத்த கோவத்தினால். அவனது உடம்பு வழக்கத்தை விட அதிகமாக இறுகிப்போய் இருக்க தீபனுக்கு உள்ளுக்குள் மணி அடித்தது.
“மச்சான் திரும்புடா.” என்று அவனை திருப்ப விக்ரமனின் மூக்கில் இருந்து உதிரம் வநத்தைப் பார்த்து திகைத்துப் போனான் தீபன். விக்ரமனுக்கு மூக்கில் இருந்து உதிரம் வருவதற்கு முன்பு அவனது உடல் அதிகமாக விரைத்து போகும்.
“மச்சான்...” என்று அலறியேவிட்டான்.
“இன்னும் செத்து போகலடா.” கத்தியவன் அவனை உதறிவிட்டு வேகமாய் வீட்டுக்கு வந்தான். அதற்குள் அவனது நிலையை பற்றி நறுமுகைக்கு சொன்னான் தீபன். அதைக்கேட்டு அதிர்ந்தவள் வேகமாய் வீட்டுக்கு வந்தாள்.
வந்தவள் தலைக்கு மேல் கைவைத்து முகத்தை மூடியபடி அமைதியாக படுத்து இருந்த விக்ரமனை தான் கண்டாள். அவளது வருகையைக் கூட அவன் உணரவில்லை. மேலும் மேலும் தன்னை வேலை செய்ய விடாமல் தடுத்துக்கொண்டு இருக்கும் அந்த க்ரைம் பிரெஞ் ஆட்களை எண்ணி எண்ணி கோவம் கொண்டான். அதனால் அவனது மூக்கில் இன்னும் அதிகமாக உதிரம் கசிய பயந்துப் போனாள்.
வேகமாய் அவனருகில் ஓடி வந்தவள் தன் முந்தானையில் அவனது உதிரத்தைத் துடைக்க முகத்தை மூடி இருந்த தன் கைகளை விலக்கிவிட்டு அவளை பார்த்தான். தவிப்புடன் தன் முந்தானையால் அவனது உதிரத்தைத் துடைத்துக்கொண்டு இருந்தாள் நறுமுகை.
அவளது கண்களில் தெரிந்த பரிதவிப்பிலும் வேதனையிலும் அவனது உள்ளம் சற்றே அமைதி அடைந்தது. விழிகளை எடுக்காமல் அவளையே பார்த்துக்கொண்டு இருந்தான்.
கடமையே கண்ணாக துடைத்துக்கொண்டு இருந்தவள் ஏதோ உந்த வேகமாய் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள். விக்ரமசேனனின் அசையாத பார்வையில் இவளுக்கு உள்ளுக்குள் ஜெர்க்கானது. மெல்ல மெல்ல கைகளை அவனிடமிருந்து விலகிக்கொள்ளப் பார்க்க, அவளையும் அவளது கண்களையும் பார்த்துக்கொண்டே அவளின் கரத்தைச் சுண்டி இழுத்தவன் தன் வெற்று மார்பு மீது போட்டுக்கொண்டான்.
அவனது இந்த அதிரடியில் திகைத்தவள் அவனை அதிர்ந்து பார்க்க அவளை கீழே உருட்டி அவள் மீது படர்ந்தான் எந்த விட முகாந்திரமும் இல்லாமல்.
அவனது அந்த வன்மையான கூடலில் அவளது தேகம் மொத்தமும் அதிர்ந்தது. இவ்வளவு நாள் அவளை தேடாதத் தேடலுக்கும் சேர்த்து அவன் அவளை தேடத் தொடங்க அவனது கைபிடியில் சிக்கி சின்னாப் பின்னமாகிப் போனாள் நறுமுகை.
‘வச்சா குடுமி, வழிச்சா வழுக்கைன்னு இருந்தா என்ன தான் பண்ணுவதோ’ அவளின் மனமும் உடலும் அவனது போக்குக்கு போனது புலம்பியபடி.
தேடாத தேடல்களுக்கும் சேர்த்தே தேட இடம் கொடுத்தவள் அவனின் கையணைவில் இளைப்பாறினாள். தன் வேகத்தில் பிடுங்கி போட்டக் கொடி போல தளர்ந்துப் போய் இருந்தவளை காண அவனுக்கே பாவமாய் போனது. குடிக்க பால் காய்ச்சி எடுத்து வந்தவன் அவளுக்கு பருகக் கொடுக்க அவனது அன்பில் அந்த ஒரு நிமிடம் கலங்கி தான் போனாள்.
“உங்களுக்கு இப்படி தான் மூக்குல இருந்து உதிரம் வருமா?” முதல் முறையாக அவனிடம் தன் தயக்கத்தை உதறிவிட்டு கேட்டாள். அவளது கேள்வியில் அவளது தவிப்பை உணர்ந்தானோ என்னவோ,
“ரொம்ப டென்ஷன் ஆனா இப்படி வரும்.” என்றவன் அவளருகில் படுத்துக்கொண்டு அவளை தூக்கி தன் மேல் போட்டுக்கொண்டு தூங்கிப் போனான். அடுத்து வந்த இரண்டு நாட்களுமே அவன் வீட்டில் தான் இருந்தான்.
அவன் வீட்டில் இருப்பதைப் பார்த்து நறுமுகையும் வேலைக்கு விடுமுறை சொல்லிவிட பகல் பொழுது எல்லாமே அவளுடன் காதலாக, கூடலாக, தேடலாக, வன்மையாக, மோகமாக, காமமாக என எல்லாவிதமகாவும் அவளை நாடினான்.
அவனது நாடலில் இவளும் எதையும் மறுக்காமல் அவன் போக்கிலே சென்று அவனை குளிரச் செய்தாள். பகல் பொழுதை அவளுடன் கழித்தவன் இரவு பொழுதில் படுக்கையில் நன்கு சாய்ந்து அமர்ந்து, அவளை அணைத்து தன் மேல் சாய்த்துக்கொண்டு மோட்டு வலையை வெறித்துக்கொண்டு இருந்தான்.
அவனது சிந்தை எங்கு இருக்கிறது என்று அறிந்தவள் அவனை தொந்தரவு செய்யாமல் அவனது நெஞ்சில் சுகமாக தூங்கினாள். அவளை வருடிக்கொடுத்த படியே அருகில் இருந்த ஒரு குறிப்பேட்டில் தன் சிந்தனையை முழுவதுமாக எழுதி வைத்தான்.
முதல் நாள் இப்படி போக, இரண்டாவது நாள் அருண் போன் செய்து உடனடியாக வர சொன்னான் விக்ரமனை.
“ஒரே குளிர் காய்ச்சலா இருக்கு. படுக்கையை விட்டு நகர முடியல. அதனால என்னால வர முடியாது” என்று திமிராக சொன்ன தன் கணவனை, “ஆஆஆ.” என்று பார்த்தாள். அவளின் பார்வையில் இதழ்களில் ஒரு சிறிய புன்னகை விரிய அதை மீசைக்கு அடியில் பதுக்கியவன்,
“என்னடி?” என்று கேட்டான்.
“ம்ஹும்.” என்று தலையை இரு பக்கமும் ஆட்டி அசைத்தவளை நெருக்கி பிடித்தவன் அவளை மீண்டும் தேடத் தொடங்கினான்.
அவனது தேடலில் முகம் சிவந்துப் போனாள். அவளின் வெட்கத்தை இரசித்தவன் அவளை மேலும் மேலும் வெட்கப்பட வைத்து இன்னும் இரசித்துப் பார்த்தான்.