Notifications
Clear all

அத்தியாயம் 50

 
Admin
(@ramya-devi)
Member Admin

முகமூடிக் கொண்டு மறைத்துக் கொண்டு இருந்த கிரிமினலை பார்த்த தயாகரன் பெண் உருவில் இருந்தான். அவனுக்கு உள்ளுணர்வு ஒன்று சொன்னது. கண்டிப்பாக இவனாக இருக்க மாட்டான் என்று.

ஆனாலும் அவனது பேச்சில் எந்த ஐயமும் இல்லாமல் கலந்துக் கொண்டான். அந்த கிரிமினல் அருகில் வாட்ட சாட்டமாக இருந்தான் ஒரு கையாள். அவனை பார்க்கும் பொழுதே தயாகரனுக்கு சிரிப்பு வந்துவிட்டது. அதை முயன்று அடக்கிக் கொண்டு பேசிக் கொண்டு இருந்தான். பெண் குரல் தான். மிமிக்கிரி செய்வதில் அவன் வல்லவன் ஆயிற்றே. அதனால் தயாழினியின் குரலில் வெகு சுலபமாக பேசினான்.

கைகளில் இருந்த துப்பாக்கி, செல்போன் என அனைத்தும் பறித்துக் கொண்டார்கள் இவர்களிடம் இருந்து. எந்த தற்காப்பு பொருள்களும் அவர்களிடம் விட்டு வைக்கவில்லை.

முழு சோதனை போட்டப் பிறகே அவர்களை உள்ளே விட்டு பேச்சை ஆரம்பித்தார்கள். செந்தமிழ் தயாகரன் மாஸ்க் போட்டு இருந்த காரணத்தால் அவனிடம் தான் பேச்சு வார்த்தை நடந்தினான் அந்த கயவன்.

பேசி ஓரளவு இவர்களை பற்றி தெரிந்துக் கொண்ட பிறகே, தயாகரன் பக்கம் திரும்பி,

“ஓகே.. இப்போ உன் அண்ணனை பார்க்க போகலாம்” என்று அவன் சொல்ல,

“நீங்க சொல்றதை எல்லாம் கேட்டா என் அண்ணனை விட்டுடுவீங்களா? உங்களை நம்பலாமா?” ஆவலுடன் தயாழினி பேசுவது போல அண்ணன் பாசத்தில் உருகினான் தயாகரன். அவளின் பயத்தை அப்படியே இவன் பிரதிபலித்தான் விழிகளில்.

கூட இருந்த விஜய் கூட மிரண்டு தான் போனான். செம்ம நடிப்பு. தத்ரூபமான நடிப்பு நடித்தான் தயா.

“சார்.. செம்ம.. அதுவும் உங்க ஹிப் அல்டிமேட்..” என்ற செந்தமிழை யாருக்கும் தெரியாமல் அவனின் காலை போட்டு மிதித்து எடுத்து விட்டான்.

அவன் அலறக் கூட முடியமால் எச்சிலை விழுங்கி வெளியே சிரித்து வைத்தான்.

“லெட்ஸ் கோ” என்ற முரட்டு சத்தத்தில் அனைவரும் முன் நடக்க, எதிரியின் கையால் போல இருந்தவன் இவர்களை எல்லாம் முன்னாள் நடக்கவிட்டு பின்னால் நடந்தான்.

தயா இரகசியமாக விஜய்க்கும் செந்தமிழுக்கும் குறிப்புக் காட்ட, பிடித்துக் கொண்டார்கள் அவன் சொல்ல வந்ததை.

சிறிது நேரத்திலே குறிப்பிட்ட இடம் வந்து விட, “நீங்க எல்லோரும் இங்க இருங்க.. தயாழினி மட்டும் வரட்டும்” என்று அவளை மட்டும் அழைத்துக் கொண்டு உள்ளே போய் கதவை சாற்றிக் கொண்டார்கள்.

அந்த கதவை பார்த்த மற்றவர்கள் மிரண்டு தான் போனார்கள். ஏனெனில் அந்த கதவு எதை கொண்டு அடித்தாலும், துளைக்காத அளவுக்கு எஃகால் செய்யப்பட்டு இருந்தது. மிகவும் கனமாகவும் அழுத்தமாகவும் இருக்க எப்படி தயாகரனுக்கு உதவுவது என்று தவித்துப் போனார்கள்.

“என்னடா இப்படி ஆகிடுச்சு?” செந்தமிழ் விஜயிடம் கேட்க,

“எனக்கும் ஒன்னும் புரியலடா.. சார் மட்டும் உள்ள போயிட்டாரு.. அவருக்கு ஏதாவது உதவின்னா எப்படி இந்த கதவை உடைச்சுட்டு போய் உதவுறது..” கவலையுடன் கேட்டான்.

“எனக்கும் அதே கவலை தான் விஜய்.. எப்படியாவது இந்த கதவை தாண்டி போனா மட்டும் தான் நாம `நம்ம சாரை மீட்க முடியும். அதுவரை வேடிக்கை கூட பார்க்க முடியாது போல” என்றவனின் கவலை மற்றவர்களையும் கட்டிக் கொண்டது.

ஆனால் அவ்வளவு பெரிய இரும்பு கதவை எதை கொண்டு தகர்ப்பது என்று யோசித்துக் கொண்டு இருந்தவர்களின் கவலையை பற்றி அறியாமல் உள்ளே வந்த தயாகரன் விழிகளால் அவ்விடத்தை அலசி ஆராய்ந்தான்.

“என்ன பொண்ணே ரொம்ப ஆராயிர?” அவனுக்கு பின்னாடி இருந்து குரல் கேட்க,

“இல்ல இந்த இடம் இவ்வளவு அழகா இருக்கே.. ஆனா உண்மையிலே இந்த இடத்துல இருக்குற கோரம் இந்த அழகுல மறைஞ்சி போயிடுச்சே.. அதை பத்தி தான் யோசனையா இருக்கேன்” என்றான் தயா.

“நீ இவ்வளவு யோசிப்பியா? இவ்வளவு அறிவா உனக்கு” வியப்புடனே கேட்டான் பின்னால் இருந்தவன்.

“இதுல யோசிக்க என்ன இருக்கு? அறிவு எங்க இருந்து வந்தது... சாதாரண யோசனை தானே” கேட்ட தயாகரன்,

சட்டென்று பின்னால் வந்துக் கொண்டு இருந்தவனை திரும்பிப் பார்த்தான். இவனது கூர்மையான பார்வையில் புருவத்தை நெரித்தான் அவன்.

“என்ன பார்வை?”

“இல்ல இவ்வளவு அழகா இருக்கீங்களே.. உங்க பாடி செம்ம கட்ஸ்.. உருண்டு திரண்டு அவ்வளவு அழகா இருக்கு” என்றான் தயா தயாழினியின் உருவில் இருந்தபடி.

“ஓகோ.. காம்ப்ளிமென்ட்டா, ஆனா நான் வெறும் அடியாள்” மட்டும் தான். முன்னாடி போறவர் தான் இங்க பாஸ்” என்றான்.

“இருந்துட்டு போகட்டும். அவரை பார்த்தா சோதா மாதிரி இருக்கு. உங்களை பார்த்தா தான் ஆம்செல்லாம் வச்சு பக்காவா இருக்கீங்க” என்றான் பெண் குரலில்.

“பரவாயில்ல அந்த தயாகரன் உன்னை நல்லா தான் ட்ரைன் பண்ணி இருக்கான் போல சொன்னவன், தயாகரனை இடையோடு இழுத்தான் அவன்.

“அட கிராதகா நான் ஆம்பளைடா” என்று மனதுக்குள் அலறினாலும், அவனோடு இயைந்து நின்றான்.

“நீயும் நல்லா வெட்கோழியா தான்டி இருக்க” என்று கமென்ட் வேறு செய்ய,

“இன்னும் எவ்வளவு நேரம் இவனோட மல்லுக் கட்டுவது” மனதுடன் பேசிக் கொண்டவன், வெளியே நெளிவது போல காட்டிக் கொண்டான்.

“எல்லாம் என் மச்சானை பார்க்கிற வரை தான். அதுக்கு பிறகு இருக்குடா உனக்கு” வசை பாடிக் கொண்டவன் அவனோடு சேர்ந்து நடந்தான் தயாகரன்.

தயாவை இடையோடு சேர்த்து பிடித்தவன் கொஞ்சம் கொஞ்சமாய் அவனின் இடுப்பில் தன் முரட்டு கையை வைத்து அழுத்திப் பிடித்து மேலே செல்லப் பார்க்க,

“சார்” என்று முன்னால் இருந்தவன் அழைத்தான்.

“வாட் சாரா? இவரா? நீங்க தானே பாஸ்” என்ற தயாகரன், அதன் பிறகு அதை பெரிய விசயமாக எடுத்துக் கொள்ளவே இல்லை.

உண்மையான பாஸ் பல்லைக் கடித்துக் கொண்டான். அதில் சுதாரித்த அந்த கையாள், “இல்ல ஷின் சும்மா கூப்பிட்டு பார்த்தேன்” என்று அவன் சமாளிக்க,

ஷின் என்னும் மாபியா தலைவன் மறைவாக வைத்து இருக்கும் துப்பாக்கியை அவன் புறமாக நீட்டி எச்சரித்தான் தயாவுக்கு தெரியாமல்.

அதில் உயிர் பயம் வந்து விட்டது அவனுக்கு. ஈரக்குலை நடுங்க உடல் வெடவெடத்துப் போனது.

அங்கு நடக்கும் அத்தனையையும் கவனித்துக் கொண்டே, கவனிக்கதவனாய் “வாவ்.. நைஸ் பெயிண்டிங்” அங்கு அழகுக்காக மாட்டி இருந்த ஓவியத்தை பார்த்து மெய் மறந்து அதன் அருகே செல்வது போல பாவ்லா செய்தான்.

அவன் தான் வந்த உடனே கண்டு கொண்டானே யார் மாபியா தலைவன் என்று. அதனால் இவர்களின் பேச்சையும் சம்பஷனையையும் கண்டுக் கொள்ளதவனாய் அவர்களிடம் காட்டிக் கொண்டான் தயா.

“உனக்கு பெயிண்டிங்னா ரொம்ப பிடிக்குமா?” அர்த்தமில்லாமல் கேள்வி கேட்டான் மாபியா தலைவன்.

“ம்ம் பிடிக்கும்” என்றவன், “எப்போ என் அண்ணனை காட்டுவீங்க?” அல்லக்கையிடம் கேள்வி கேட்டான்.

அவன் “சீக்கிரம் பார்க்கலாம்” என்று விட்டு கேங் லீடரை ஒரு பார்வை பார்த்தான். அவன் கண்ணை அமர்த்தி செய்கை காண்பிக்க சுதாரித்துக் கொண்டவன்,

“உன் அண்ணன் மேலா அம்புட்டு பாசமா?” என்று கேட்டான்.

“பாசமாவது மண்ணாவது.. என்னை இந்த நிலைக்கு ஆளாக்கியவனை சும்மா விட மனசு இல்லை. அது தான் நறுக்குன்னு நாலு வார்த்தை உயிரை பிடுங்குற மாதிரி கேட்கணும்.. அதுக்கு பிறகு என்னக்கு என்ன ஆனாலும் சரி தான்” என்றான் தயாழினியின் இடத்தில் பொருந்தி.

“அது சரி” என்றவன், “முன் அனுபவம் இருக்கா?” கேட்டான். இதை கேட்டவன் மாபியா தலைவன். அவன் புறம் திரும்பி பார்த்தவன்,

“ம்ம்.. தயாகரனே பலமுறை என்னை கண்டம் பண்ணிட்டான்...” என்று குமுறினான்.

“அப்போ நீ அணில் கடிச்ச பழமா?” இப்பொழுது அல்லக்கை அவனிடம் நெருங்கினான்.

அதை மாபியா தலைவன் விரும்பவில்லை. பார்வையாலே அவனை எச்சரிக்க, சட்டென்று விலகிக் கொண்டான் அல்லக்கை.

“அடச்சீ ஒரு ஆம்பளைக்கு இத்தனை போட்டியா?” மனதுக்குள் கேட்டுக் கொண்டவன்,

“டேய் மச்சான் உன்னை பார்ப்பதற்குள்ள நான் கண்டம் ஆகிடுவேன் போலடா இவனுங்க கிட்ட” மனதுக்குள் புலம்பிக் கொண்டவன் சுற்றி இருப்பதை எல்லாம் அவதானித்தபடியே அவர்களின் பேச்சுக்கு ஈடு கொடுத்துக் கொண்டு இருந்தான் ரா ஆபிசெர் மிஸ்டர் தயாகரன்.

Loading spinner

Quote
Topic starter Posted : September 10, 2025 9:58 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top