நேரம் போதாதது போலவே தோன்றியது. அதை வாய் விட்டும் சொல்லி சலித்துக் கொண்டவனை பார்த்து யாழி சிரித்து வைக்க, அவன் முறைத்தான்.
“சாரி பட்.. இருந்தாலும் சிரிப்பை அடக்க முடியலங்க.. பத்தல பத்தல இன்னும் வேணும்னு கேட்டு வாங்கிட்டு இன்னும் பஞ்ச பாட்டு பாடுனா சிரிக்காம என்ன செய்யிறதாம்?” என்றவள் அவனின் நெஞ்சில் படுத்துக் கொண்டு அவனையே கேலி பண்ணி சிரிக்க,
“ஹேய் என்னையவே கேலி பண்றியாடி நீ?” முறைத்தவன்,
“உண்மையாவே பத்தலடி.. ஐ நீட் மோர் தென்” என்று மட்டும் சொன்னவன் அவளுக்கு ஓய்வே கொடுக்காமல் மீண்டும் மீண்டும் நாட, அவள் அவனுக்கு ஈடு கொடுத்த பொழுதும் சோர்ந்து போய் விட்டாள்.
அவளுக்கு சோர்வு நீங்க பாலை கொடுத்து அவளை தெம்பாக்க பார்க்க இன்னும் சிரிப்பு வந்தது அவளுக்கு..
“சிரிக்காதடி” என்று தலையை கோதிக் கொண்டவன் அவளில் ஆழ்ந்து தான் போனான். தன்னில் அவனை தாங்கிக் கொண்டவளுக்கு தூக்கம் கண்களை இழுக்க,
“ரொம்ப தூக்கம் வருதுங்க...” என்று அவனிடம் கூறியபடியே தூங்கிப் போனாள். அவள் தூங்குவதை பெருமூச்சு விட்டுப் பார்த்தவன், வேக வேகமாய் செயலில் ஈடுபட ஆரம்பித்தான்.
அவளின் கலைந்துப் போன உடைகளை விடுத்து இலகுவான உடையை அவளுக்கு அணிவித்து விட்டவன், தானும் உடை அணிந்து வெளியே வந்தான்.
அந்த நடு சாம வேளையிலும் தயாராக இருந்த குணா “அண்ணிய தூங்க வச்சுட்டீங்களா ண்ணா” கேட்டான்.
“ம்ம் பால்ல தூக்க மாத்திரை குடுத்துட்டேன். அதனால நல்லா தூங்குறா.. எப்படியும் அவ எழுந்திரிக்க நாளை மத்தியத்துக்கு மேல ஆகிடும். சப்போஸ் அவ எழுந்தா கொஞ்சமும் இரக்கம் காட்டாம அவளுக்கு மயக்க மருந்தை குடுத்திடுங்க.. நான் வர வரை அவளை தூக்கத்திலையும் மயக்கத்திலையும் வச்சு இருங்க. இல்லன்னா அவளை அவ்வளவு சுலபமா சமாளிக்க முடியாது. உங்களுக்கு டிமிக்கி குடுத்துட்டு என்னை தேடி வந்திடுவா..” என்றான் தயாகரன்.
“சரிங்கண்ணா” என்று கேட்டுக் கொண்டவனிடம் மீண்டும் எச்சரித்தே அனுப்பினான்.
குணாவோடு தயாழினியை மட்டும் வேறு படகில் அனுப்பி விட்டவன், பிரபாகரனை தன்னோடு வைத்துக் கொண்டான்.
“கேர்புல் குணா. அவ வெளில இருக்கிறது இன்னும் ரிஸ்க்.. ரெண்டு ரிட்டயர்ட் கர்னல் உனக்கு பாதுகாப்பா உன் கூட வருவாங்க. தரைக்கு போன பிறகு நம்ம செக்க்யூரிட்டிஸ் உங்களை சுத்தி வளைச்சிடுவாங்க. சோ பயம் இல்ல. இருந்தாலும் கேர்புல்” என்றான்.
“சரிண்ணா நான் பார்த்துக்குறேன்” என்று சொல்லி அண்ணியை தன் கையில் தூக்கிக் கொண்டான். அவளின் நெற்றியில் குனிந்து முத்தமிட்ட தயாகரன்,
“சேபா பார்த்துக்கடா” என்றான். அவளை விட்டு விலகவே அவனுக்கு மனம் வரவில்லை. ஆனால் அவளை அருகில் வைத்துக் கொண்டு சண்டை போடுவது எல்லாம் ரிஸ்க் தான். சண்டையின் போது அவளை குறிவைத்து ஏதாவது நிகழ்ந்து விட்டால் அவனை அவனாலையே மன்னிக்க முடியாது.. தூங்கும் பெண்ணவளின் இதழ்களில் மீண்டும் முத்தம் வைத்தவன், தம்பியிடம் ஆயிரம் கவனம் சொல்லி அனுப்பினான்.
அவர்கள் அங்கு தரை இறங்கவும் இங்கே இவர்கள் எதிரியின் இடத்தை வந்து அடையவும் சரியாக இருந்தது.
துவண்டு கிடந்த தயாழினியை பார்த்து வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் கலங்கிப் போய் குணாவின் சட்டையை பிடித்து கேள்வி கேட்க,
குணா எதையும் மறைக்கவில்லை. ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை அனைத்தையும் சொல்லி விட்டான்.
மலரும் சந்தானமும் உடைந்து சுக்கு நூறாய் சிதறிப் போனார்கள். பொன்மாரிக்கும் லிங்கத்துக்கும் அவர்களை தேற்றவே சரியாய் இருந்தது.
குறிஞ்சி தன் கணவனை குற்றம் சுமத்தும் பார்வை பார்த்தவள் கலங்கிய விழிகளை அவனிடம் காட்டிக் கொள்ளாமல் அக்காவின் கையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள்.
பிறையும் அழுத விழிகளுடன் தன் அக்காவின் இன்னொரு கையை பிடித்துக் கொண்டு அமர்ந்து விட்டாள். அவளின் கோவம் வெளிப்படும் இடம் எல்லாம் பிரபாகரன் மட்டும் தானே.. அவன் அருக்கில் இல்லாததால் அவளின் மன உளைச்சல் அதிகமாகிக் கொண்டே போனது.
கத்தி ஆர்பாட்டம் செய்து சண்டை போட்டு அவனின் சட்டையை கிழித்தால் மட்டுமே அவள் கொண்ட ஆவேசமும் கோவமும் குறையும். இல்லை என்றால் அவளுக்கு உள்ளுக்குள் கிடந்து அழுத்திக் கொண்டே தான் இருக்கும்.
“இன்னும் இங்க ஏன் நிக்கிறீங்க... உங்களால என்ன செய்ய முடியுமோ அது அத்தனையும் தான் செஞ்சுட்டீங்களே.. இதுக்கு மேல என்ன சார் இருக்கு செய்ய...” குறிஞ்சி வெடித்து விட்டாள்.
“ப்ச்... குறிஞ்சி ட்ரை டூ அண்டெர்ஸ்டான்ட்... இது உங்க அண்ணணுக்காக எடுத்த ரிஸ்க். உங்க குடும்பத்தை எந்த சேதாரமும் இல்லாம பாதுகாக்க மட்டும் தான் இந்த மிஷன். புரிஞ்சுக்கோடி” என்றான் தன்மையாக.
அவனின் தன்மையான பேச்சில் அவனை நிமிர்ந்துப் பார்த்தாள்.
“இங்க வா” என்று வாயசைத்து அவளை அழைத்தான். அவள் வேகமாய் தலையை ஆட்ட,
“வந்துட்டு உடனே போயிடு” என்று அவ்வறையை விட்டு அவன் வெளியே போக, குறிஞ்சியும் சிறிது நேரம் கழித்து வெளியே வந்தாள்.
தங்களின் அறைக்கதவு திறந்து இருக்கவும் அங்கே போனவளை தன் நெஞ்சோடு இழுத்துக் கொண்டவன்,
“நீ மெச்சூடுன்னு நினைச்சேன். உனக்கு எந்த விளக்கமும் தேவை படாதுன்னு நினைச்சேன்டி” என்றான்.
“நீங்களா நினைச்சுக்கிட்டா நான் என்ன பண்ண முடியும்” என்றவளின் குரலில் பிசிறு தட்டியது.
“அப்போ அக்கா ஹனிமூன் போகலையா? எங்களுக்காக உயிரை பணையம் வச்சு எதிர்க்கிட்ட போகப் போனாளா?” கண்கள் கலங்கியது.
“ப்ச் அழக்கூடாது” என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டவன்,
“ஆமா தான். ஆனா அண்ணன் இதை ஹனிமூனா மாத்திக்கிட்டாரு” என்றவன் சுருக்கமாக கப்பலில் ஏறியதில் இருந்து எல்லாவற்றையும் சொன்னான்.
“உன்னோட அக்காவை அண்ணா கூட்டிட்டு போகச் சொன்னாரு. ஆனா உன் அக்கா என் அண்ணன் மேல வச்ச காதல்ல இன்னொரு படி மேல உசந்துட்டாங்க.. தற்கொலை செஞ்சு எங்களுக்கு பயத்தை காட்டி, மறுபடியும் அண்ணன் கிட்ட விட வச்சு. ஒரு வழி பண்ணீட்டாங்கடி” என்றான் ஆசுவாசமாய்.
“அப்போ ரெண்டு பேரும் ரொம்ப அண்டெர்ஸ்டான்டிங்கா தானே இருக்காங்க.. என்னவோ பயமா இருக்குங்க” கவலையுடன் சொன்னவளை நெஞ்சோடு அணைத்துக் கொண்டு ஆறுதல் கூறியவன்,
“டோன்ட் ஒரிடி.. உன் அண்ணனும் என் அண்ணனும் சேபா வீட்டுக்கு வருவாங்க.. அதுக்குண்டான எல்லா ஏற்பாடும் செஞ்சாச்சு...” என்று அவளை தேற்றினான்.
இந்த பக்கம் குறிஞ்சி போன பிறகு முதல் முறையாக தன்னவனுக்கு அழைத்தாள் பிறை.
“என்ன குண்டூரு கார மிளகா நமக்கு போனை போடுறா?” யோசனையுடனே போனை எடுத்து காதில் வைத்தவனின் ஸ்பீக்கர் போயே போயிந்தி..
“நீ எல்லாம் மனுசனாடா... உனக்கு எல்லாம் மனசுன்னு ஒன்னு இருக்கா? அப்படி இருந்தா அதுல கொஞ்சமாச்சும் ஈரம் இருக்கா?” என்று எடுத்த உடனே பொட்டு பட்டாசாய் வெடித்தாள் பிறை.
போனை தன் காதை விட்டு தள்ளி வைத்துக் கொண்டான் கொஞ்ச நேரம். அவளின் முதல் கட்ட கோவம் எல்லாம் வடிந்த பிறகு போனை காதில் வைத்தவன்.
“ஹேய் பிறை” என்று அவன் ஆரம்பிக்க, அந்த பக்கம் விசும்பல் சத்தம் கேட்டது.
அதை கேட்டவனுக்கு மனது பாரமாய் போய் விட,
“ஹேய் என்னை எவ்வளவு வேணாலும் திட்டுடி.. அதை விட்டுட்டு இப்படி அழாத” என்று சொன்னவனின் பேச்சை கேட்டவளுக்கு இன்னும் அழுகை வெடித்துக் கொண்டு வந்தது.
“பிறை” என்றான்.
“ம்ம்” என்றாளே தவிர அழுகையை குறைக்கவில்லை.
“அழாதடி”
“அழுகையா வருது. நீ தான்டா என்னை அழ வைக்கிற”
“சரி அப்போ நான் வராம போயிடுறேன்.. நீ நிம்மதியா இரு” என்றான்.
அந்த பக்கம் இருந்து எந்த சத்தமும் வராமல் போக திகைத்துப் போனவன்,
“பிறை” என்றான் சத்தமாக.
“நீ என்னை எவ்வளவு கொடுமை படுத்திய போதும் நீ சாகனும்னு நான் ஒரு கணம் கூட யோசிச்சது இல்லை. அப்பவே அப்படின்னா இப்போ நீ என் கழுத்துல தாலி கட்டி இருக்க.. அப்படி இருக்கும் பொழுது நீ சாகனும்னு நான் நினைப்பேனாடா...” என்று அடித்தொண்டையில் இருந்து கேட்டவள்,
“நீ சாக வேண்டாம்.. நானே ஒட்டு மொத்தமா போயிடுறேன்.. நீ நிம்மதியா இரு” என்ற நேரம் அங்கிருந்து இடைவிடாத முத்தசத்தம் கேட்க, திகைத்துப் போனாள்.
அடுத்த நொடி வீடியோ கால் வர, அவள் எடுக்க யோசித்துக் கொண்டு இருந்த நேரமே அவளின் விரல் பட்டு ஆன் ஆனது கால்.
அங்கே அழுத விழிகளுடன் கசங்கி வாடிப்போய் இருந்த பெண்ணவளை கண்டு நெகிழ்ந்துப் போன பிரபாகரன்,
“லவ் யூ டி” என்றான் அழுத்தம் திருத்தமாக அவளை பார்த்து. அதில் இன்னும் கோவம் தான் வந்தது.
“பேசாம போயிடு. இல்லன்னு வை நீ திரும்பி வந்த பிறகு சத்தியாமா உன்னை நான் கொலை பண்ணிடுவேன்டா” கத்தினாள்.
அவளின் கத்தலை ஆசையாக பார்த்தவன், மீண்டும் லவ் யூ டி என்றான். அவள் அவனை முறைத்துப் பார்த்தாள்.
“உன் அக்கா சேப் தானே” பேச்சை மாற்றினான்.
“ஹனிமூன் ட்ரிப்புன்னு சொல்லி என்னடா பண்ணி வச்சு இருக்கீங்க என் அக்கவை..” பார்முக்கு வந்து விட்டாள்.
“ஹனி மூன் தான்டி.. ஆனா கொஞ்சம் வித்யாசமா” என்று படகில் நடந்ததையும் தனி தீவில் அவர்கள் இரண்டு நாள் தங்கினதையும் சொன்னான்.
அதன் பிறகு தயாழினி கடலில் குதித்து தற்கொலை பண்ணிக் கொண்டதையும் சொல்லி, அதனால தான் அண்ணன் பயப்படுறாரு.. அவரு யாருக்கும் எதுக்கும் பயந்ததே இல்ல தெரியுமா? ஆனா அவரையே உன் அக்கா என் அண்ணி பயம் காட்டிட்டாங்க. எப்போ எந்த நேரம் என்ன செய்வாங்கன்னே தெரிய மாட்டிகிதுடி. சோ அவங்களை அனுப்பி வச்சுட சொன்னாரு. அதுவும் அண்ணன் வரும் வரை அவங்களை கண் விழிக்க விடாம பார்த்துக்கடி.. இல்லன்னா விபரீதமா ஏதாவது செஞ்சி வச்சிடப் போறாங்க” எச்சரித்தான்.
“ம்ம்ம்” என்றாள்.
“சரி.. டேக் கேர் பை” என்று அவன் வைக்கப் போக, பெரும் தயக்கத்துக்கு பிறகு,
“சேபா வந்து சேருங்க... ஆயிரம் பேர் என்னை சுத்தி இருந்தாலும் நீங்க இருக்குற மாதிரி இருக்காது.. நான் காதலிக்க நீங்க வேணாம்.. ஆனா எனக்கு சண்டை போட கண்டிப்பா நீங்க வேணும்” என்றாள் கண்கள் கலங்கி.
அவளின் அன்பு அந்த வார்த்தைகளிலும் அவளின் கண்ணீரிலும் தெரிந்துக் கொண்டவன்,
“உன்னை கொடுமை படுத்தி துன்புறுத்தவே நான் சீக்கிரமா வருவேன்டி” என்று தன் காதலையும் மறைமுகமாக சொன்னான் பிரபா.
“ம்ம்ம்” என்றவளிடம் விடை பெற்றுக் கொண்டு, அண்ணன் இட்ட பணிகளை படகில் இருந்தபடி தொடர்ந்தான்.
தயாகரனும் அவனின் ஆட்களில் இரண்டு மூணு பேர் மட்டும் எதிரியின் இருப்பிடத்துக்கு அனுமதி வாங்கி சென்றார்கள் அதில் பெண் வேடம் போட்ட ஒரு ஆணும், தயாழினியின் வேடம் போட்ட தயாகரனும் கூடவே ஹரிணியும் சேலை கட்டி வந்தாள். இவர்கள் மூவருடன் திடகாத்திரமான செந்தமிழும் விஜயும் கூட வந்தார்கள். இதில் தயாகரனை போல செந்தமிழ் மாஸ்க் அணிந்துக் கொண்டான்.
பிரபாவோடு ஜனாவும் இன்னும் சிலரும் படகில் இருந்துக் கொண்டான். டேவிட்டும் தனாவும் எதிரியின் கையாள். ஏற்கனவே தயாகரனையும் தயாழினியையும் அவர்கள் பார்த்து இருந்த காரணத்தால் அவர்களை எங்கும் தேக்கிப் பிடிக்கவில்லை. அவர்களை தாண்டிச் சென்ற பிறகே அடுத்தக் கட்ட சோதனைகள், அது இது என்று பல தடைகளை தாண்டி அந்த இண்டேர்னேஷ்னல் கிரிமினலிடம் சென்றார்கள் ஐவரும்.