“ஐ நோ.. ஆனா இனி விலகவே முடியாத அளவுக்கு உங்களோட பின்னி போயிட்டேங்க.. வாழ்ற வாழ்க்கை உங்களோட தான். அப்படி சந்தர்ப்பம் வைக்கலன்னா உங்க நினைவுகளோட வாழணும்னு முடிவு பண்ணிட்டேன். சோ எல்லாத்துக்கும் துணிஞ்சு தான் வந்து இருக்கேன்” என்றவளின் பேச்சில் இருந்த உறுதியும், துணிவும் அவனை நிறைவு செய்ய போதுமானதாக இருந்தது.
அவளை அணைத்து தன் மகிழ்ச்சியை தெரிவித்தான் தயாகரன்.
“ஆனா இந்த மீசை தான்” என்று சிணுங்கியவள்,
“ஏன் அதுக்குள்ள அவசரப் பட்டீங்க...” அவனின் நெஞ்சில் குத்தியவள் அவனோடு தன்னை இறுக்கிக் கொண்டாள். தன் நெஞ்சில் சாய்ந்தவளை இறுக்கி அணைத்துக் கொண்டவனின் மனதில் அவளை தன் கண் போல பார்த்துக் கொள்ள அவனின் தோளில் இன்னும் சுமை அதிகமாகியது. அதை எளிதாக கடந்து விடுவான் என்றாலும் இந்த சூழ்நிலையில் அவளின் பாதுகாப்பு மிக மிக முக்கியமாது அல்லவா...
அவளை எந்த சேதாரமும் இல்லாமல் மீண்டும் தன் கூட்டில் சேர்க்க வேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டான். ஆனால் அதற்கு சோதனையே இவள் தான் என்று அறிந்து,
“இம்சையை கூட்டுறா.. போன்னு சொன்னாலும் இனி ஒரு இஞ்ச் கூட என்னை விட்டு நகர மாட்டா” பெருமூச்சு விட்டவன் அவளை எந்த இடையூறும் இல்லாமல் அடுத்து வந்த இரண்டு நாட்களும் கொண்டாடி தீர்த்தான். அதே போல தன் தம்பிகளை திட்டி தீர்த்தான். எதுக்காக அவளை இங்கே கொண்டு வந்து சேர்த்தார்கள் என்று.
--
“இல்ல அண்ணா” என்று இருவரும் மென்னு முழுங்க,
“என்ன தற்கொலை ட்ராமா பண்ணாலா...?” ஆயாசமாக கேட்டான் தயாகரன்.
இருவரும் தலை குனிந்து நின்றார்கள்.
“சரி ஓகே ரெண்டு நாள் இங்கயே இருங்க” என்று சொன்னவன் தன்னவளுடன் ஐக்கியமாகி விட்டான்.
“ஏதும் ப்ளான் இருக்கா அண்ணா?” தயக்கமாக கேட்டான் பெரியவன்.
“இப்போதைக்கு எதுவும் இல்லடா” என்றவனின் பார்வை மொத்தமும் அவனின் மனைவியிடமே இருந்தது. அவளின் கழுத்தில் இருந்து கழற்றிய தாலியை இன்னும் அவள் கேட்கவில்லை. அவனும் கொடுக்கவில்லை.
நாளைக்கு இந்நேரம் எதிரியின் இடத்தில் இருந்தாக வேண்டும். இதோ அதோ அன்றைய இரவு தொடங்கியது. எல்லோரும் மிதமான பார்ட்டியை என்ஜாய் செய்துக் கொண்டு இருந்தார்கள்.
கடமை கண்ணியம் கட்டுப்பாடு கொண்டவர்கள் தான். ஆனால் சில சமயம் இந்த மாதிரி பார்ட்டி, கேண்டில் லைட் டின்னெர் என தங்களின் இறுக்கமான மனதை இலகுவாக்கிக் கொள்வார்கள்.
அன்றைய நாள் கேண்டில் லைட் டின்னரோடு சேர்த்து மது வகைகளும் பரிமாறப்பட்டது. யாரும் மோடா குடிகாரர்கள் கிடையாது. எல்லாமே அளவு தான். அதுவும் ரா டீமில் இருப்பவர்கள் எல்லோருமே எல்லா நேரமும் விழிப்புடன் தான் இருப்பார்கள்.
அதனால் சரக்கெல்லாம் அவர்களுக்கு மருந்து போல தான். கடும் பணிச்சுமைகளுக்கு இடையில் இந்த இலகு அவர்களுக்கு மிகவும் தேவையாய் இருந்தது. யோசித்து ப்ளான் போட்டு என்று மூளை மிகவும் சூடாகி போகும் தருணம் எல்லாம் இவை இல்லாமல் அவர்களின் பொழுது கழியாது.
எனவே மிதமான பார்ட்டி நடந்தது. அதில் எல்லோரும் கலந்துக் கொள்ள, தயாகரனும் கலந்துக் கொண்டான். அவனின் கை வளைவில் நின்றுக் கொண்டு அவளும் அந்த பார்ட்டியில் கலந்துக் கொண்டாள். வெறும் ஜோசொடு அவள் நின்றுக் கொள்ள, யாரும் அவளை கம்பல் பண்ணவில்லை.
ஹரிணி ஹாட் டிரிங் எடுத்துக் கொள்ள, விழி விரித்து அவளை பார்த்தாள் இவள்.
அதோடு புகைக்கவும் செய்ய, இவளுக்கு தான் இருமல் வந்தது. அவளின் செயல்களை பார்த்து.
“ஹேய் பட்டிக் காடு” என்று அவளின் காதோரம் சீண்டல் குரல் கேட்க,
“ஹலோ தம் அடிச்சா தான் நான் சிட்டி கேர்லா. அப்படி ஒன்னும் எனக்கு இந்த சிட்டி கேர்ல் பட்டம் தேவையில்லை” வெடுக்கென்று சொன்னவள் அவனிடம் இருந்து விலகி அவளின் கொழுந்தன்கள் நின்று இருந்த இடத்துக்கு போய் விட்டாள்.
அவள் போன உடனே அவளின் இடத்தை ஹரிணி வந்து ஆக்கிரமிப்பு செய்ய, தயாகரனுக்கு அலுத்துப் போய் வந்தது.
“தயா ப்ளீஸ்” என்று அவள் அவனிடம் பேச வர,
“ஹரிணி...” என்றான் மிக மிக அழுத்தமான குரலில். அதிலே விலகல் தன்மை தெரிய,
“எந்த விதத்துல நான் உங்களை திருப்தி பண்ணல சார்.. என் கிட்ட என்ன குறை” என்று குரல் அடைக்க கேட்டவளை பாவமாக பார்த்தான்.
“உன் கிட்ட குறை இருக்குன்னு யார் சொன்னா ஹரிணி?” கேட்டவனை அடிபட்ட பார்வை பார்த்தவள்,
“அப்போ என்னை செலெக்ட் பண்ணல நீங்க?” கேட்கும் பொழுதே அவளின் விழிகளில் இருந்து கண்ணீர் துளிர்க்க ஆரம்பித்தது.
“ப்ச் அழாத ஹரிணி.. உன்னை பார்க்கிறதுக்கு முன்னாடியே அவளை பார்த்துட்டேன். அதுவும் புகைப்படத்துல தான். அப்பவே அவக்கிட்ட என் மனசை பறிக்குடுத்துட்டேன்.. அவ என் நண்பனோட தங்கச்சி.. எப்போ அவன் அவளை அறிமுகம் செய்து வச்சானோ அன்றைய நாளில் இருந்து இன்று வரை என் மனசை விட்டு அவ நீங்கல.. இனி நீங்கவும் மாட்டா. இதுக்கு மேல உனக்கு விளக்கம் சொல்ல அவசியம் இல்லன்னு நினைக்கிறேன். சோ இதோட உன் டிராமாவை ஸ்டாப் பண்ணிக்கோ ஹரிணி. இது என்னோட வாழ்க்கையை மட்டும் இல்ல உன்னோட எதிர் கால வாழ்க்கையையும் சேர்த்து பாழாக்கிக்குற மாதிரி இருக்கு.. ஸ்டே அவே” என்று கடுமையாகவே எச்சரித்தவன், அங்கிருந்து விலகி மேல் தளத்துக்கு சென்று விட்டான்.
அவன் பேசியதை சற்று தள்ளி கேட்டுக் கொண்டு இருந்த தயாழினிக்கு அவ்வ்வ்வ்வ்.. என்று வந்தது.
“பயபுள்ள கொஞ்சம் ஸ்மார்ட் தான்” என்று சிலாகித்துக் கொண்டவள்,
“ஓகே கைஸ்.. மார்னிங் மீட் பண்ணலாம்” என்று கொழுந்தன்களிடம் விடை பெற்றுக் கொண்டு கணவன் போன பாதையில் இவளும் சென்றாள்.
அங்கே அவன் இருளை வெறித்துக் கொண்டு இருக்க, அவனின் பின்னாடி போய் அணைத்துக் கொண்டாள். அவன் அசையவில்லை.
அவனிடம் அவளுக்கு எந்த கேள்வியும் எழுப்ப தோன்றவில்லை. தன்னை அவனுக்கு பிடிச்சு இருக்கு. அது ஒன்றே போதும் என்று எண்ணிக் கொண்டாள். அவனும் எந்த பொழிப்புரையும் குடுக்கவில்லை.
அவன் கையில் இருந்த காக்டெயிலை வாங்கி அருகில் வைத்தவள், தன் புறம் அவனை திருப்பி அவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள். அவளின் கழுத்தை சுற்றி தன் கைகளை போட்டுக் கொண்டான் தயாகரன்.
பெரும் அமைதி நிலவியது இருவரிடமும். ஆனால் இருவரும் அதை உடைக்க முன்வரவில்லை. அப்படியே நீண்ட நேரம் அவர்கள் நின்றுக் கொண்டு இருக்க, கீழே சந்தடி எல்லாம் அடங்கியது கொஞ்சம் கொஞ்சமாக.
“அறைக்கு போகலாமா?” என்று கேட்டாள். நின்று நின்று சற்றே கால் வலி எடுக்க ஆரம்பித்தது.
“இன்னும் கொஞ்ச நேரம்” என்றவன் அண்ணாந்து வானத்தை பார்த்தான். பூரண நிலவு வர இன்னும் நாள்கள் இருந்தாலும் வெளிச்சம் நன்றாகவே இருந்தது.
சரியாக பன்னிரண்டு மணி ஆன பொழுது தன் சட்டையில் இருந்த ஒரு சங்கிலியை எடுத்து அவளின் கழுத்தில் எந்த முகாந்திரமும் இல்லமால் அணிவித்தவன், அவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தம் வைத்தான்.
அதை கொஞ்சமும் எதிர் பாராதவள் திகைத்துப் போனாள்.
“இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் திருமதி யாழி” என்றான்.
“தேங்க்ஸ்” என்றவள், “தெரியுமா?” என்று மட்டும் கேட்டாள். அவன் தலையை அசைக்க, மெலிதான தூறல் போட்டது.
“பெர்பெக்ட் டைமிங்” என்று சொன்னவள் அவனின் நெஞ்சோடு சேர்ந்து நின்றுக் கொண்டாள். அவளை ஒரு கையால் வளைத்துப் பிடித்துக் கொண்டவன் நிதானமான அலைகளை அவதானித்துக் கொண்டபடியே,
“ஷெல் ஐ” என்று கேட்டான். புரியாமல் அவள் அவனை பார்க்க,
“பெர்த்டே கிஸ்” என்றவன் அவளின் கழுத்தையும் இடையையும் வளைத்துப் பிடித்து தன் இதழ்களுக்குள் அவளின் இதழ்களை இணைத்துக் கொண்டான்.
முத்தம் நீண்டுக் கொண்டே போனது. அவனின் இடைவிடாத முத்தத்தில் இவள் தான் தடுமாறிப் போனாள். மூச்சடைக்கும் உணர்வு பிறக்க, அவனிடம் இருந்தது விலகியவள்,
“ஏன் இவ்வளவு முரட்டு தனமா?” கேட்டவள் நெஞ்சில் கையை வைத்து பெருமூச்சு வாங்கினாள்.
அவளை அப்படியே கையில் ஏந்தியவன்,
“நீச்சல் தெரியுமா?” கேட்டான்.
“லைட்டா...” என்று சொன்ன நேரம் அவளை தூக்கி ஆழ்கடலில் வீசியவன், கூடவே அவனும் குதிக்க தயாழினிக்கு உயிரே போய் விட்டது.
சொல்லாமல் கொள்ளாமல் இதென்ன இப்படி என்று போனவளுக்கு உயிர் பயம் பிடித்துக் கொண்டது. அவள் குதித்த நேரம் படகின் வேகமும் தூரமும் அதிகரித்துப் போய் விட, பயம் வந்து நெஞ்சை கவ்வியது.
“ஐயோ...” என்று அவள் அலற, படகின் வேகம் முற்றிலும் மட்டுப் பட்டு போய் இருந்தது. அதற்குள் அவளுக்கு சற்றே தயாகரனும் குதித்து இருக்க அதன் பிறகே மூச்சு வந்தது.
“இதென்ன விளையாட்டு” என்று நீரில் நிற்க முடியாமல் தள்ளாடியபடி அவள் அவனிடம் வர முயல, அதற்குள் வேக நீச்சல் போட்டு அவளிடம் வந்து இருந்தான் தயாகரன்.
“ஜஸ்ட் என்ஜாய் திஸ் மொமென்ட்” என்றவன் அவளை நீருக்குள் வைத்து ஆலிங்கனம் செய்ய,
“பயமா இருக்குங்க” என்று கண்களில் நீருடன் சொல்ல,
“என் கண்ணை பாரு” என்றவன் அவளை மெல்ல மெல்ல நீருக்கு பழகி தன்னோடு சேர்த்து நிற்க வைத்தவன்,
“இது போல ஒரு பிறந்த நாள் கொண்டாடி இருக்க மாட்ட.. அதனால பயத்தை விட்டு என்ஜாய் மட்டும் பண்ணுடி” என்றவன், படகை விட்டு சற்று தள்ளி அவளை கூட்டிக் கொண்டு போனவன், அவளோடு நீரில் ஒரு ஜலதரங்கம் ஆட,
இவளுக்கு பயத்தில் உதறல் எடுத்தது. ஆனால் அவளின் பயத்தை முற்றிலும் துடைத்துப் போடும் வித்தை அறிந்தவன் ஆயிற்றே இந்த தயாகரன். பெண்ணவளின் இடையை வளைத்து தன்னோடு நெருக்கமாக நிற்க வைத்தவன் தூறல் போட்டு நனைந்து இருந்தவளின் முகத்தில் தன் இதழ்களை புதைக்க ஆரம்பிக்க, எங்கிருந்து அவளுக்கு பயம் என்கிற உணர்வு வரும்.
வெறும் மோகத்தின் அலையும், காதலின் அலையும் அல்லவா அவளுள் எழுந்து அவளை பாடாய் படுத்தி எடுக்க ஆரம்பித்தது.
சுழல் போல தன்னை சுழற்றி எடுத்து தலைக்கு மேல் தூக்கி பெண்ணவளை அவன் கொண்டாட, அவனின் தோளில் இரு கையையும் பதித்து நின்றவள் குனிந்து அவனின் உச்சந்தலையில் முத்தம் கொடுத்து, இன்னும் சற்றே கீழிறங்கி, அவனின் அழுத்தமான முரட்டு தனம் நிரம்பிய வன் இதழ்களில் தன் மென் இதழ்களை புதைத்தவள்,
அவன் அறிமுகம் செய்து வைத்த மின்சார முத்தத்தை அவனுக்கு கொடுக்க, இருவரின் தேகமும் ஒருங்கே சிலிர்த்துப் போனது..
அவளின் விரலை பிடித்து ஒற்றைக்கல் வைத்த வைர மோதிரத்தை அவளுக்கு பரிசாக போட்டு விட, திகைத்துப் போனாள்.
“என்ன இவ்வளவு கிபிட் குடுக்குறீங்க? எப்போ ப்ளான் போட்டது இதெல்லாம்?” என்று கேட்டவளுக்கு எந்த பதிலும் சொல்லாதவன்,
“ரிட்டேர்ன் கிபிட் வேணும்” என்றான்.
“அது தான் குடுத்தனே” என்று இவள் முகம் சிவக்க சொல்ல,
“இன்னொரு முறை குடுடி.. பத்தவே இல்லை” என்று பேராசைக்காரனாக அவன் கேட்க, அவன் கேட்காததையும் கொடுத்து அவனை மகிழ்வித்தாள் அவனின் மனைவி.
அதில் அவனுக்கு கண்ணில் மின்னல் வந்துப் போக பெண்ணவளுக்கோ முதுகு தண்டில் மின்னல் வெட்டிப் போனது.
மனதை மயக்கும் தீண்டல், வன்மையான தூண்டல், மோகத்தின் ஆரம்ப படியில், வானத்தின் மென் தூரலில், கடலின் மிதமான அலையில் தங்களை மறந்து காதல் செய்துக் கொண்டு இருந்தார்கள் இருவரும்.
கூடலில்லா வெறும் காதல் பொழுதுகள்... மனதை மிக இளமையாக உணரவைக்கும் இணைகளின் நெருக்கம், இதை தாண்டி வேறு என்ன வேண்டும்.. முத்த்தங்களின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்துக் கொண்டே போகும் மாயம் என்னவோ...
சிறிது நேரம் கடல் நீரிலும் வான் மழையிலும் நனைந்து நின்றவர்கள், குளிர் தாங்காமல் அவள் நடுங்கவும் அவளை தூக்கி தன் தோளில் போட்டுக் கொண்டு, படகு இருக்கும் இடம் நோக்கி நீச்சல் போட்டவன் அங்கு தொங்கிக் கொண்டு இருந்த நூல் ஏணியை பிடித்து மேல் தளத்துக்கு வந்து சேர்ந்தான்.
சற்றே காற்று அதிகமாக வீச, “அறைக்கு போயிடலாம்” என்று அவளை அழைத்துக் கொண்டு கீழே சென்று விட்டான். அங்கே அவர்களின் அறைக்கு வந்தவர்கள் வேறு ஆடை உடுத்திக் கொண்டு குளிருக்கு இதமாக ஒருவரை ஒருவர் நாடி தேடலை ஆரம்பிக்க, அந்த இரவு இருவருக்கும் வெகு விரைவாக விரைந்து ஓடியது போல இருந்தது.
நேரம் போதாதது போலவே தோன்றியது. அதை வாய் விட்டும் சொல்லி சலித்துக் கொண்டவனை பார்த்து யாழி சிரித்து வைக்க, அவன் முறைத்தான்.
“சாரி பட்.. இருந்தாலும் சிரிப்பை அடக்க முடியலங்க.. பத்தல பத்தல இன்னும் வேணும்னு கேட்டு வாங்கிட்டு இன்னும் பஞ்ச பாட்டு பாடுனா சிரிக்காம என்ன செய்யிறதாம்?” என்றவள் அவனின் நெஞ்சில் படுத்துக் கொண்டு அவனையே கேலி பண்ணி சிரிக்க,
“ஹேய் என்னையவே கேலி பண்றியாடி நீ?” முறைத்தவன்,
“உண்மையாவே பத்தலடி.. ஐ நீட் மோர் தென்” என்று மட்டும் சொன்னவன் அவளுக்கு ஓய்வே கொடுக்காமல் மீண்டும் மீண்டும் நாட, அவள் அவன்னுக்கு ஈடு கொடுத்த பொழுதும் சோர்ந்து போய் விட்டாள்.
அவளுக்கு சோர்வு நீங்க பாலை கொடுத்து அவளை தெம்பாக்க பார்க்க இன்னும் சிரிப்பு வந்தது அவளுக்கு..
“சிரிக்காதடி” என்று தலையை கோதிக் கொண்டவன் அவளில் ஆழ்ந்து தான் போனான்.