மிருதனின் மோக விளையாட்டில் சிறிது நேரம் கட்டுப் பட்டு இருந்தவள் அவனை விட்டு விலக பார்த்தாள். ஆனால் அவன் விடவே இல்லை.
“விடுங்க.. சேலை கசங்குது..” என்று அவனை விட்டு விலக,
“உன்னை யாரு சேலை கட்டிட்டு வர சொன்னா?” என்றவன் அந்த சேலையை உருவி போடும் வேலையில் ஆழ்ந்தான். அவனை கட்டுப் படுத்த முடியாமல் தடுமாறிப் போனவள்,
“விடுங்க போகணும்.” என்றாள் அழுத்தமாய்.
“போய்க்கலாம்” என்றவன் கட்டின மனைவியாய் அவளை நடத்த உயிர் பூ மெல்ல மெல்ல அவிழத் தொடங்கியது அவளுக்கு... அவளை அப்படியே புல் வெளியில் சரிக்க சட்டென்று எழுந்துக் கொண்டவள் அவனை விட்டு ஓட பார்த்தாள். காற்றில் பரந்த முந்தானை அவனது சிக்கிவிட எங்கிருந்து ஓடுவது.
“இதுக்கு மட்டும் தான் நான் வேணுமா?” ஆற்றாமையுடன் கேட்டாள்.
“ஆமாம்...” என்று அழுத்தமாக சொன்னவன் அவளை அந்த புல் வெளியில் சரித்து அவள் மீது தன் முழு எடையையும் படுமாறு படர்ந்தவன் அவளின் இதழ்களை மீண்டும் முரட்டு தனமாக பற்றிக் கொண்டான். அவனது அடாவடியில் வேறு வழியின்றி ஒத்துழைத்தாள்.
பிடரி சிலிர்க்க அவளிடம் ஒன்றியவன் அவளது கரங்களை எடுத்து தன் முதுகில் வைத்தான். அவனது நோக்கம் புரிய,
“இதுக்கொண்ணும் குறைச்சல் இல்லை..” முணகியவளின் முணகல்கள் எல்லாம் அவனது வாய்க்குள்ளே அடங்கிப் போனது.
மெல்ல மெல்ல அவனது இதழ்கள் அவளது மேனியில் பதிய, கண்களை அழுந்த மூடிக் கொண்டாள். வெட்ட வெளியில் இப்படி இருவரும் பாம்பு போல பின்னிக்கொண்டு இருப்பதை கண்டு அவளுக்கு வெட்கமாய் போனது. அவனின் மீது கட்டுக்கடங்கா கோவம் இருந்தாலும் ஏனோ அவளால் அவனை விலக்கி நிறுத்தவே முடியவில்லை.
இந்த நிகழ்ச்சிக்கு கூட அவளை அவன் அழைக்கவில்லை. அழைத்தால் தான் வர வேண்டும் என்கிற நிலையில் அவள் இல்லையே...!
எப்பொழுது அவனுடைய கனவு ப்ராஜெக்ட்டை தூக்கி எந்த தயக்கமும் இல்லாமல் அவளிடம் கொடுக்க வைத்து, கலங்கி நின்றிருந்தவளை கோவத்துடனே ஏற்க வைத்தானோ அப்பவே அவள் முடிவு எடுத்து விட்டாள். மிருதனை எந்த காரணத்துக்காகவும் விட்டு விலக கூடாது என்று. இதை விடவா ஒருவன் அவன் கொண்ட காதலை காட்டிவிட முடியும் என்று எண்ணினாள்.
எதிர்காலத்தை தூக்கி ஒருவனால் எந்த வித தயக்கமும் இல்லாமல் கொடுக்க முடிகிறது என்றால் கொடுக்கப்பட்ட நபர் தானே அவனது எதிர் காலமாக இருக்க முடியும்... அதனால் அவன் சொல்லா காதலை அவன் செயலில் காட்டி விட்டதாக எண்ணியவள் அவனை கொண்டாட தான் செய்தாள்.
அதனால் தான் அவன் தொட்ட உடன் அவனது ஆளுகையில் உடன்பட்டு நின்றாள். இல்லை என்றாள் எப்பொழுதோ அவளது கரம் அவனது கன்னத்தை பதம் பார்த்து இருக்கும்.
அவனுள் ஒளிந்து இருக்கும் காதலை அவன் வாய் வார்த்தையால் சொல்லி தான் அவள் புரிந்துக் கொள்ள வேண்டுமா என்ன? பிறகு இத்தனை வருடம் அவனை காதலித்த காதலுக்கு என்ன பொருள் இருக்கு...
தன் மீது அத்துமீறும் அவனது இதழ்களை கட்டுப் படுத்த முடியாமல் புரண்டு படுத்து விட்டாள். அவளது கூந்தலை ஒதுக்கி வைத்து வெற்று முதுகில் தன் முகத்தை புதைத்தவன் லேசாக கடித்து வைக்க,
“ப்ச் அங்கெல்லாம் எட்டி என்னால மருந்து போட முடியாது..” என்றாள் பட்டென்று.. அவள் சொன்ன ஸ்டேட்மென்ட்டில் புயல் வேகம் கொண்டவன் அவளை புரட்டி போட்டு அவளின் கண்களை கூர்ந்துப் பார்த்தான். அவனது பார்வையை கொஞ்சமும் சலிக்காமல் ஏறிட்டாள்.
அவளது பார்வையில் இருந்த புரிதலில் தன் நெஞ்சில் கொண்ட பாரம் முழுவதும் இறங்கிப் போனதாக உணர்ந்தவன் பொத்தென்று அவளது மார்பில் விழுந்தான்.
அவன் வந்து விழுந்ததில் அவளது நெஞ்சம் வலி எடுத்தது...! அவன் முன்னாடி லேசாய் கூட நீவி விட முடியாத நிலையில் கூச்சம் கொண்டு இதழ்களை கடித்து பொறுத்துக் கொண்டாள்.
ஆனால் அவனுக்கு அப்படி இல்லை போலும்..
“வலிக்குதா?” என்று கேட்டான். ஏன் கேட்கிறான் என்று புரியாமல் ஆமாம் என்பது போல தலை அசைத்தாள். அதன் பிறகு அவனது செயலில் அப்பட்டமாய் அவள் முகம் சிவந்துப் போனது..!
ஒரு கட்டத்துக்கு மேல் அவனை பொறுத்துப் போக முடியாதவள் அவனை தன் மீது இருந்து தள்ளி விட்டு வேகமாக எழுந்து அமர்ந்துக் கொண்டாள். வெட்கம் என்றால் அப்படி ஒரு வெட்கம்...
அவனை ஏறிட்டுப் பார்க்கவே முடியவில்லை அவளால். கூச்சம் அவளை நெட்டி தள்ளியது. ஆனால் அவனை விட்டு விலகவில்லை. அவள் தள்ளி விடவும் அப்படியே மல்லாக்க படுத்து இருந்தான். அவனை ஏறிட்டுப் பார்த்தாள்.
பின் அவனின் நெஞ்சில் வந்து படுத்துக் கொண்டாள். அவனது கரங்கள் அவளை அணைக்க,
“இதுக்கு மட்டும் நான் வேண்டுமா?” என்றவளின் குரலில் எவ்வித மாறுபடும் இல்லை. இயல்பாக கேட்பது போலவே கேட்டாள். ஆனால் அவளின் முகம் அவனது நெஞ்சோடு புதைந்து இருந்தது.
“ஆமாம் வெறும் லஸ்ட் மட்டும் தான் உன் மேல..” என்றான் எப்பொழுதும் போல அலட்டிக் கொள்ளாமல்.
“லஸ்ட் லஸ்ட்... எப்போ பாரு லஸ்ட் லஸ்ட்டுனுட்டு...” என்று அவனது மார்பில் அடித்தவள் சற்று எக்கி அவனது முகத்தை ஆழ்ந்து பார்த்தாள்.
“என்ன என் முகத்துல அப்படி என்ன தெரியிதுன்னு இப்படி பார்த்துக்கிட்டு இருக்க...” கடுப்படித்தான். அவனிடம் எதுவும் பதில் பேசவில்லை. மாறாக பேசும் அவனது இதழ்களை அவளே முன் வந்து சிறை செய்துக் கொண்டாள்.
பொள்ளாச்சியில் தங்கி இருந்த பொழுது முதன் முறையாக அவளே முத்தம் கொடுத்தது போல இன்றும் அவளே அவனது இதழ்களை சிறை செய்ய, அதில் கிறங்கினான் அன்று போலவே...
மெல்ல மெல்ல அவனது கரங்கள் அவளை சுற்றி இருக்க, வேகமாய் அவனது கரங்களை தன் இடையில் இருந்து எடுத்து விட்டாளே தவிர அவனின் இதழ்களில் இருந்து பிரியவில்லை.
“ஏன்டி இப்படி பண்ற...?” கடுப்படித்தான்.
“நீங்க மட்டும் என்ன யோக்கியம்...? ஒரு நேரத்துல ஒரு வேலை தான் செய்யணும்” என்றாள் அவனது கடுமை படர்ந்து இருந்த முகத்தை இரசித்துக் கொண்டே...
“ம்ம்ம்...” ஒரு உருமு உருமியவன் அதன் பிறகு செய்தது எல்லாம் அடாத செயல்கள் தான். வரையருக்கவே இயலா ஒரு முன்னோட்ட காட்சிகள்.
இருளும், புதர்களும், புல் தரையும் மிருதனுக்கு மிக வாகாக அமைய மிருதியை விட்டு கொஞ்சம் கூட நகரவில்லை.
எவ்வளவு நேரம் ஒருவரை விட்டு விட்டு ஒருவர் நீங்காமல் இருந்தார்களோ தெரியவில்லை... நேரம் இன்னும் கடந்து தான் போனது...!
ஒரு சுருக்கம் கூட இல்லா கோட் சூட்டில் கம்பீரமாக சற்று நேரத்துக்கு முன்பு வரை இருந்தவன், இப்பொழுது கோட் எந்த பக்கம் போனது என்று தெரியவில்லை. சட்டை பட்டண்கள் எல்லாம் கழண்டு, அதில் இரண்டு பிய்ந்து போய் எவ்வளவு கசக்க முடியுமோ அந்த அளவுக்கு கசங்கி போய் இருந்தது...!
பெண்ணவளின் கோலத்தை சொல்லவே வேண்டாம். அவள் சூடி இருந்த ரோசாக்கள் எல்லாம் உதிர்ந்து போய் அதில் இருந்த காம்புகள் கூட அங்கொன்றும் இங்கொன்றுமாய் தான் அவளின் முடியில் இருந்தது. மற்றவையோடு குத்தி இருந்த கிளிப்ஸ் எல்லாம் எங்கு போனதோ தெரியவில்லை.
ஒன்றையே போட்டு இருந்த மாராப்பு குத்தி இருந்த பின் தெரித்து போய் இருக்க சுருக்கி கசக்கி அவளின் மார்பை மறைத்து இருந்தது..!
வைத்திருந்த கண் மை கலைந்து, போட்டு இருந்த லிப்ஸ்டிக் முழுமையாக காணாமல் போய் இருந்தது...! இடுப்பில் இருந்து கலையாமல் முன் கொசுவம் முன் புறம் மட்டும் அதன் மடிப்பில் இருந்து கலைந்து கசங்கி போய் இருந்தது...! முடி கற்றைகள் மிருதனின் பிடியில் மிகவும் கலைந்து போய் இருந்தது.
மொத்தத்தில் கலைந்த ஓவியமாய் அவனின் முன்பு இருந்தாள் மிருதி. பார்க்க பார்க்க இன்னும் அவளை கலைத்து போட கரங்களும் இதழ்களும் துடியாய் துடித்துக் கொண்டு இருந்தது..!
ஆனால் இதற்கு மேல் விட்டால் ஒரு சென்சார் சீனாகி போய் விடும் என்பதால் அத்தோடு நிறுத்திக் கொண்டான்.
இருவரும் மேற்கொண்டு எதுவும் பேசவில்லை. மிருதி அவனின் தோளில் சாய்ந்து இருந்தாள். அவளை அணைக்க கரங்கள் பரபரத்தது என்றாலும் அவளை அணைக்காமல் அவளுக்கு தான் தோளையும் மார்பையும் கொடுத்து இருந்தான்.
எப்படியும் இவன் வெளிப்பட மாட்டான், வெளிப்படுத்திக்க மாட்டான் என்று புரிந்தவளுக்கு நெஞ்சில் ஏதோ அடைத்த பாரம். ஆனாலும் அவனின் நிலை என்னவென்று தெரியாமல் அவனிடம் கேள்விகளால் குடைந்து எடுக்க அவளுக்கு மனமில்லை.
ஷூட்டிங் இந்த ஸ்டேஜ்ல இருக்கு என்று அவள் தான் எல்லாவற்றையும் அவனிடம் சொன்னாள். கேட்டுக் கொண்டவன் அவனுக்கு தோன்றிய கருத்துக்களை சொன்னான். அதோடு இன்னும் சில தொழில் நுட்பங்களை சொல்லிக் கொடுத்தான்.
எல்லாவற்றையும் கவனத்துடன் கேட்டுக் கொண்டவள்,
“உங்க ப்ளான்...” என்று கேட்டாள். அவன் வாயையே திறக்கவில்லை. பெருமூச்சு விட்டவள்,
“நம்ம படத்துக்கு மியூசிக் ...” என்று ஆரம்பிக்க,
“தெரியும் உன் நொண்ணன் தானே...” என்றான்.
“அவன் உங்க பிரெண்டு...” என்றாள் அழுத்தமாய்.
“ப்ச்...” வேறு எந்த ரியாக்ஷனும் இல்லை அவனிடம். தெரிந்தும் அவனிடம் சொன்னமே என்று நொந்துக் கொண்டாள்.
அதன் பிறகு அங்கிருந்து இருவரும் கிளம்பி அவரவர் வீட்டுக்கு சென்றார்கள். மிருதி அவளுடைய ஷூட்டிங்கில் பிசியாகிவிட மிருதன் அடுத்த ஆறு மாதம் எங்கு சென்றான் என்று தெரியவில்லை.
அவன் நீண்ட நெடிய நாட்களாக காணமல் போனதில் மகேந்திரனுக்கு மட்டும் ஓவர் கொண்டாட்டமாய் இருந்தது...
“இப்படியே உன்னை பல நாட்களுக்கு காணாம விடுறேனா இல்லையான்னு பாருடா..” என்று கருவிக் கொண்டார். மிருதனை காணாமல் அனைவரும் வேதனையில் மூழ்கிப் போனார்கள். எங்கு இருந்தாலும் அவன் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்கள்.
முறையாக எதுவும் சொல்லவில்லை என்றாலும் யார் யாருக்கு என்னென்ன செய்ய வேண்டுமோ அதை எல்லாம் செய்து வைத்து விட்டு தான் சென்றான்.
குறிப்பாக மிருதிக்கு... ஏனெனில் மகேந்திரனை பற்றி அவனுக்கு தான் நன்கு தெரியுமே.. வில்லாதி வில்லன் மிருதனையே வந்து பாரு என்று சீண்டி விடுவார். அப்படி பட்டவர் மிருதியை மட்டும் சும்மாவா விடுவார்.
அவளது ஷூட்டிங் ஸ்பார்ட்டுக்கு சென்று இந்த சீன வேண்டாம்... அந்த சீன வேண்டாம் என்று கழித்துக் கட்ட பார்த்தார்.
அதில் ஒரு சுணக்கம் வந்தது அவளுக்கு. இன்னும் கொஞ்ச நாட்கள் தான் இருக்கு. அதுக்குள்ள எல்லா வேலையும் செய்யணும். ஆனா மகேந்திரன் எடுத்த சீனை மறுபடியும் வேறு மாதிரி எடுக்க சொல்லி படுத்த டென்ஷன் ஆகாதவள் கூட சில நாட்களாக டென்ஷன் ஆகி விட்டாள்.
ஆனால் அதெல்லாம் இரண்டு நாட்கள் மட்டுமே.. மூன்றாவது நாள் காலையிலேயே பெருவுடையார் ஷூட்டிங்க ஸ்பார்ட்டக்கு வந்து விட்டார். வந்தவர் அவளுக்கு பக்க பலமாகவும் இருந்தார். அவர் இது வரை யாருக்கும் இப்படி பரிந்து பேச மாட்டார். ஆனால் தனக்கு அவரே நேரடியாக வந்து பேசவும் அவளால் நம்பவே முடியவில்லை.
அதில் மகேந்திரனுக்கு செம்ம கடுப்பு. இதுக்கு பின்புலம் யாரு என்று அவளுக்கு தான் நன்கு தெரியுமே... மிருதனை எண்ணி உள்ளம் பூரித்தவள் அதன் பிறகு எங்கும் தேங்கவில்லை. பரபரப்பாக வேலையை செய்ய ஆரம்பித்தாள்.
ஓரளவு அனைத்து ஷூட்டிங்கும் முடிந்து விட்டது. இனி எடிட்டிங் தான். அது மட்டும் பினிஷ் என்றால் முன்னோட்ட காட்சிகள் மூன்று நாளுக்கு போட்டுவிட்டு ரிலீஸ் தேதியன்று படத்தை சொன்னபடி ரிலீஸ் செய்து விடலாம்...
எல்லாமே தயார் ஆனது... முன்னோட்ட காட்சிகளை பார்க்க சில முக்கிய விஐபிகள், டிஸ்ட்ரிபியூட்டர்ஸ், முக்கிய இயக்குனர்கள் என அனைவரையும் அழைத்து இருந்தார்கள்.
எல்லோருமே வந்து இருந்தார்கள். ஆனால் வர வேண்டியவன் வரவில்லை. அவனுக்காக அவளும் போன் மேல் போன் செய்து பார்த்து விட்டாள். ம்ஹும் ரிங் கூட போகவில்லை.
நெஞ்சுக்குள் அடைத்துக் கொண்டு வந்தது. அவளுக்கு வேண்டியபட்டவர்கள் இடத்தில் அவன் தானே முதலில் இருப்பவன். அவனே அங்கு இல்லாமல் இருக்க முதன் முதலில் தனித்து நின்று தன் லட்ச்சியத்தை நிறைவேற்றி இருக்கிறாள்.
ஆனால் வாழ்த்த கூட அவன் இல்லை...! எப்படியும் இங்கு நடப்பது அவனுக்கு தெரியும். அப்படி தெரிந்துக் கொள்ளாமல் அவன் எல்லாவற்றிலும் இருந்து நீங்க மாட்டான். ஏனெனில் அவனது பொறுப்பு அவனுக்கு நன்கு தெரியும். அதை நழுவ விட்டு இவன் போகவே மாட்டான்.
படம் முதல் முதலாக பெரிய ஸ்க்ரீனில் ஒளிபரப்பு ஆகியது...! முன் பெயர் தொகுப்பு மட்டும் இன்னும் எடிட்டிங்கில் இருக்க, மற்றபடி படம் எந்த தொய்வும் இல்லாமல் மிக சிறப்பாக நிறைவு பெற்று இருந்தது.
வாசலை வாசலை பார்த்தாள். ம்ஹும் அவன் வரவே இல்லை. கண்களில் இருந்து கண்ணீர் துளி இறங்கியது...! படம் ஓடி முடித்து அவளை பாராட்டி தள்ளியது.
ஆனால் மிருதனின் வருகை மட்டும் பொய்த்துப் போனது...!