காயங்கள் மட்டுமே தந்த நெஞ்சிடம்
தஞ்சத்தையும் சேர்த்தே யாசிக்கிறது பாழும்மனது...!
உதகை போய் வந்து இதோடு ஒரு மாத காலம் நிறைவடைந்து இருந்தது...! அன்றைக்கு கடும் காய்ச்சலில் அவதியுற்று நலிந்துப் போனாள் மிருதி.
அவளை அப்படியே விடாமல் மருத்துவருக்கு போன் போட்டு வர செய்து மருத்துவம் பார்த்தான் மிருதன். அதோடு அவளின் தலையில் உள்ள ஈரத்தை ஹேர் ட்ரையர் போட்டு காய வைத்து சுடு தண்ணீரை அவளுக்கு பருக கொடுத்து தன் போர்வையையும் எடுத்து அவளுக்கு போர்த்தி விட்டு சேவை செய்தான்.
மிருதியால் முடியாத ஒரே காரணத்துக்காக மட்டுமே அவனது சேவைகள் அவளை வந்து சேர்ந்தது. இல்லை என்றால் அவன் திரும்பி கூட பார்த்து இருக்க மாட்டான்.
மருத்துவர் வந்து மருத்துவம் பார்த்து சென்றவுடன் அவளின் அருகில் இருந்தான். விடிய விடிய விழித்து இருந்தவன் அதிகாலை வேளை சக்தியையும் சுதிரையும் எழுப்பி மிருதியை ஒப்படைத்து விட்டு கிளம்பிவிட்டான் மதராசை நோக்கி.
காலையில் கண்விழித்து தன் அருகில் இருந்த சுதிரை கேள்வியாக ஒரு பார்வை பார்த்தாள்.
“அம்மாடி நைட்டு நடந்தது எதுவும் தெரியாதா உனக்கு...?” என்று அவளுக்கு சத்துமாவு கஞ்சியை கலக்கிக்கொண்டு வந்தான் சக்தி.
“ப்ச்.. எதுவும் நினைவில் இல்லை. தலையெல்லாம் ரொம்ப பாரமா இருக்கு சக்தி..” என்று எழுந்து அமர்ந்தாள்.
“அது சரி...” என்று அலுத்துக் கொண்டான் சுதிர்.
“ஏன் அப்படி என்ன பண்ணிட்டேனாம்... நீங்க தண்ணி போட்டு அலப்பரையை கூட்டுவதை விடவா ரொம்ப பண்ணிட்டேன்... ரொம்ப தான் பேசுறீங்கடா... வாயெல்லாம் கசக்குது சக்தி” என்று சுதிரிடம் முறைத்து விட்டு சக்தியிடம் பாவமாய் சொன்னாள்.
“அப்படி தான் இருக்கும். இந்தா இந்த கஞ்சியை குடி... உடம்புக்கு கொஞ்சம் தெம்பு வரட்டும்” என்று அவளுக்கு பருக கொடுத்தான். அவள் வாங்கி குடிக்க, அவளது கையை தட்டிவிட்டான் சக்தி.
“அது தான் நான் பிடிக்கிறேன்ல. அப்புறம் எதுக்கு நீ வேற பிடிச்சுக்கிட்டு...” என்று கொஞ்ச கொஞ்சமாய் அவளுக்கு பருக கொடுத்தான்.
“எனக்கு என்னடா ஆச்சு...? ஏன் இப்படி பிகேவ் பண்ணிக்கிட்டு இருக்கீங்க...?” என்றவளுக்கு மிருதனை பற்றி கேட்க வாய் வந்தது என்றாலும் மனது அதை தடுத்து விட, முயன்று இயல்பாக இருப்பது போல காட்டிக் கொண்டாள். அவளின் தலையணைக்கு அடியில் அவள் எப்பொழுதும் போடும் த்ரீ போர்த்தும், டீ சேர்ட்டும் இருக்க சில செட் இருக்க கண்டுக் கொண்டாள்.
ஆனால் அதை பற்றி எதுவும் கேட்டுக் கொள்ளவில்லை.
“விடாம நைட்டு பூரா குளிர் காய்ச்சல்.. நாங்க தான் மாத்தி மாத்தி பார்த்துக்கிட்டோம். ஒரு சொட்டு தூக்கம் கூட இல்ல தெரியுமா?” என்றான் சுதிர்.
சக்தி அவனை ஒரு பார்வை பார்க்க, அவன் கண்களை மூடி திறந்தான் பொருள் நிறைந்த பார்வையுடன். பெருமூச்சுடன் அதை ஆமோதித்தான் சக்தி.
“அப்படியா எனக்கு எதுவும் தெரியல... சரி மத்த எல்லோரும் கிளம்பிட்டாங்களா...? நாம எப்போ கிளம்புறது?” என்று கேட்டாள்.
அப்பொழுது தான் அவள் மிருதனை பற்றி கேட்கவே இல்லை என்று இருவரும் உணர்ந்தார்கள். மீண்டும் இருவரின் பார்வையும் சந்தித்து மீண்டது மிருதி அறியாமல்.
“அதெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம். இப்போ முதல்ல நீ கொஞ்சம் படுத்து தூங்கு” என்று ஒரு அதட்டல் போட்டு அவளை மருந்து கொடுத்து தூங்க வைத்து விட்டு இருவரும் வெளியே வந்து கூடத்தில் அமர்ந்தார்கள்.
“என்னடா இது இவங்களுக்குள்ள எல்லாம் சரியா போகும்னு நினைச்சேன். ஆனா இப்போ என்னன்னா எல்லாமே தலைகீழா போயிடுச்சு...” சுதிர் கவலை பட்டான்.
“விடு சுதிர் பார்த்துக்கலாம். மிருதன் ஆரம்பத்துல இருந்து மிருதி மேல ஆர்வமே இல்லாம தானே இருந்தான். மிருதியா தானே அவன் மேல காதல் வச்சா... இப்போ அவனை முழுதா குற்றம் சொல்ல முடியாதுடா. மிருதன் கொஞ்சமே கொஞ்சமே ஆர்வம் காட்டி இருந்தா கூட அவன் சட்டையை பிடிச்சு கேள்வி கேட்கலாம். ஆனா இப்போ அபப்டி எதுவும் பண்ண முடியாது. ஏன் இன்னைக்கு காலையில ஊருக்கு போகும் போது கூட என்ன சொல்லிட்டு போனான்னு ஞாபகம் இருக்கு தானே” என்றான் சக்தி.
“ம்ம்... நல்லாவே ஞாபகம் இருக்கே... நான் தான் இரவு முழுசும் அவளை கவனிச்கிக்கிட்டேன்னு தெரிந்தா இன்னும் காதல் கிறுக்கு அவளுக்கு முத்தி போகும். அதனால நான்னு சொல்லாம நீங்க அதன் அவளை பார்த்துக் கிட்டதா சொல்லுங்க..” என்றுவிட்டு அந்த அதிகாலை நேரத்திலே வந்த காரை இவர்களுக்கு கொடுத்து விட்டு வேறு ஒரு காரை அரேஞ் பண்ணிக்கொண்டு கிளம்பி விட்டான் மிருதன்.
இந்நேரம் மதராசே சென்று இருப்பான் என்று எண்ணிக் கொண்டார்கள்.
“ஏன்டா மிருதனுக்கு மிருதியை பிடிக்காம போச்சு..? ரொம்ப நல்லவாடா மிரு” என்ற சுதிரை முறைத்துப் பார்த்தான்.
“நீ தேவையில்லாத ஆணியை பிடுங்க பார்க்காத சுதிர். இது அவங்களோட பெர்சனல். இதுல நாம தலையிட முடியாது. அவங்கவங்களுக்குன்னு ஒரு விருப்பம் இருக்கும். ஒருத்தவங்க விருப்பத்தை நிறைவேற்ற இன்னொருத்தவங்க விருப்பத்தை விட்டுக் கொடுக்க முடியாது” என்றான் தெளிவாக.
“டேய் என்னடா இப்படி சொல்ற...?” ஆற்றாமையுடன் கேட்டவனை அழுத்தமாக பார்த்தான். அவனது பார்வையில் தன் மன ஆத்தமையை விடுத்து எழுந்து போய் விட்டான் சுதிர்.
போகிறவனை பெருமூச்சுடன் பார்த்தவனின் போன் அழைக்க, எடுத்து பார்த்தான். இவர்களின் கேங்கில் இருக்கும் இன்னொருவன். மியூசிக் டைரெக்டர்.
“சொல்லு மச்சான்...” என்றான்.
“அங்க என்ன தான்டா நடக்குது...?” எடுத்த உடனே கத்தி தீர்த்தான்.
“ப்ச் அதுக்குள்ள சொல்லிட்டானா இந்த சுதிர்...” கடுப்படித்தான் சக்தி.
“அவனை விடு நீ. மிரு எப்படி இருக்கா... போன் போட்டேன் எடுக்கல. தூங்குறாளா?”
“ம்ம்... இப்போ கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி தான் எழுந்தா எழுந்து பத்து நிமிடத்திலேயே தூங்க வச்சுட்டோம்.” என்றான் இயலாமையுடன்.
“ஏன்டா...?” பரிதவிப்புடன்.
“என்னன்னு சொல்ல சொல்ற...” அலுத்துக் கொண்டவன், இங்கு நடந்த அத்தனையையும் அவன் சொல்ல,
“என்னடா இவன் இப்படி பண்ணிக்கிட்டு இருக்கான்...?” அவனுக்கும் ஆற்றாமையாய் போனது.
“என்னை என்னடா பண்ண சொல்ற..? எதையாவது வாய் விட்டு பேசுனா தானே அவன் மனதுள என்ன இருக்குன்னு நமக்கு தெரியும். எதையும் சொல்றது இல்லை. எதுக்கு தான் நாம பிரெண்டா அவன் கூட இருக்குறோம்னு எனக்கும் தெரியல..”
“அதை சொல்லு... நான் போய் இன்னைக்கு அவனை நேர்ல பார்க்கிறேன்” என்றான்.
“டேய் டேய் அவசரப் படாத.. அவன் இன்னைக்கு தான் அங்க வந்து இருக்கிறான். வந்த உடனே நீ எதையும் ஆரம்பிக்காத. பிறகு சாமியார் எங்கயாவது கிளம்பி போயிட போறான்”
“ம்கும் இப்படியே அவனுக்கு சோம்பு தூக்கிக்கிட்டே இருங்கடா... பின்ன அவன் ஆடாம என்ன பண்ணுவான்” கடுப்படித்தான்.
“ப்ச் அப்படி இல்லடா. அவனோட பக்கத்தையும் கொஞ்சம் பார்க்கணும்னு தான் சொல்றேன்” என்றான் தன்மையாக.
“சக்தி...” என்றான் கோவமாக.
“சுதிருக்கு சொன்னது தான் உனக்கும். இது அவங்க வாழ்க்கைடா”
“அப்புறம் என்ன இதுக்குடா இத்தனை வருடம் அவள் பின்னாடி சுத்தி சுத்தி வரும் போதெல்லாம் ஒண்ணும் சொல்லாம இப்ப வந்து வெட்டி விட்டுட்டு போறான்”
“ஏன் அவனை மட்டும் குத்தம் சொல்ற.. நீ ரொம்ப யோக்கியமாடா” என்றான் அவனை விட கடுப்பாக.
“சக்தி...” என்றான் கோவமாக.
“ஏன் மிருதனை சொல்றியே நீ ரொம்ப யோக்கியனா? நீயும் தானே ஒரு பெண்ணை உன் பின்னாடி ரொம்ப நாளா அலைய வைக்கிற.. இதுல அவனை குற்றம் சொல்ல வர்ற...”
“சக்தி ப்ளீஸ்... இதோட நிறுத்திக்க”
“ஏன் நிறுத்தனும்... எதுக்கு நிறுத்தனும். நீங்க எல்லோருமே ஒரே குட்டையில ஊறின மட்டைங்கடா.. மிரு உன் தோழின்ற காரணத்துனால நீ அவ பக்கம் நிக்கிற. இதே அந்த பொண்ணு யாரோன்னு தானே அவளை அலைய விட்டு வேடிக்கை பார்க்கிற...” என்று கேட்டவனுக்கு எந்த பதிலையும் சொல்ல முடியாமல் சட்டென்று போனை கட் பண்ணி விட்டான் மியூசிக் கம்போசர்.
சக்தியின் தோளில் ஒரு கரம் விழ வேகமாய் திரும்பி பார்த்தான் சுதிர் நின்றிருந்தான்.
“என்னாடா?” என்று எரிந்து விழுந்தான்.
“இல்லடா..” என்று அவன் தடுமாற,
“நீ சொன்னதுனால ஒரு நன்மையும் நடந்து இருக்கு...” என்றவன் சுதிரை தன் நெஞ்சோடு அணைத்துக் கொண்டான்.
“ஏன்டா இவனுங்க எல்லாம் இந்த பொண்ணுங்களை இப்படி அலைய விட்டுட்டே இருக்காணுங்க... பாவம் தானே அவங்க எல்லாம்” என்று சொன்னவனை நட்புடன் பார்த்தவன்,
“சீக்கிரம் அம்மாக்கிட்ட சொல்லி உனக்கு ஒரு பெண்ணை பார்க்கணும்டா...” என்று சிரித்தான் சுதிர் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல்.
“ப்ச் பதில் சொல்ல மாட்டல்ல..” என்று கடுப்படித்தான்.
“இந்த கேள்விக்கு நான் எங்க இருந்து பதில் சொல்றது. உன் வாழ்க்கையில ஒரு பொண்ணு வருவால்ல அப்போ நீயே இந்த கேள்விக்கு பதிலை உணர்ந்துக்குவ” என்றவன் அவனை அழைத்துக் கொண்டு மிருதியை பார்க்க சென்றான்.
அவள் குடித்த கஞ்சியில் தூக்க மருந்தை கலந்து கொடுத்து இருந்தான். இல்லை என்றாள் இப்பொழுதே சென்னை போக வேண்டும் என்று அடம் பண்ணி இருப்பாள்.
அவள் இருக்கிற நிலைக்கு இப்போதைக்கு ட்ரவல் செய்வது வேண்டாம் என்று மருத்துவர் சொல்லி இருக்க அதை மிருதன் இவர்களிடம் சொல்லி இருந்தான். அதோடு சில தூக்க மாத்திரையையும் கொடுத்து விட்டு தான் போய் இருந்தான் மிருதன்.
இல்லை என்றால் அவளை அடக்க முடியாதே... அதனால் அவனது யோசனை படி சக்தி அவளுக்கு மருந்து கொடுத்து இருந்தாள்.
மிருதனின் பின்னாடி அலைந்து அலைந்தே சரியான ஓய்வு இல்லாமல் போனது மிருதிக்கு. அந்த அலைச்சலுக்கு எல்லாம் சேர்த்து வைத்து தூங்க வைத்தான் மிருதன்.
தான் எப்போ பாரு தூங்கிக் கொண்டே இருக்கிறோம் என்று புரியாமலே இரண்டு நாட்களும் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். மூன்றாம் நாள் காலையில் எழாமல் கொஞ்சம் முன்னதாகவே எழுந்துக் கொண்டவளுக்கு உடம்பெல்லாம் அடித்து போட்டது போல ஒரே வலியாக இருக்க எழுந்து குளிக்க சென்றாள்.
கட்டிலை விட்டு ஓரடி எடுத்து வைக்க முடியாமல் அவளது கால்கள் எல்லாம் தள்ளாட பிடிக்க பிடிமானம் இன்றி படுக்கையிலே பொத்தென்று அமர்ந்து விட்டாள். தலையை பற்றிக் கொண்டு அப்படியே சிறிது நேரம் அமர்ந்து இருந்தாள்.
நாட்காட்டியை பார்த்தாள். மிருதன் பேசிவிட்டு சென்று இதோடு மூன்று நாட்கள் ஆகி இருப்பது புரிய கண்களில் அவளையும் அறியாமல் கண்ணீர் வந்தது.
கொண்ட நேசங்கள் அவளை அலைக்கழிக்க, அதற்கு நேர்மாறாய் நண்பர்களே தூக்க மாத்திரை உதவியுடன் தன்னை இரண்டு நாள் தூங்க வைத்துக் கொண்டு இருப்பது உணர்ந்துக் கொண்டவளுக்கு அதிலும் ஏமாற்றமே மிஞ்ச,
தள்ளாடிய கால்களை உறுதி படுத்திக் கொண்டவள் எழுந்து குளித்து விட்டு பிரெஷாக படுக்கையில் அமர்ந்து இருந்தாள்.
கதவை திறந்துக் கொண்டு வந்த சக்தி அவள் இப்படி பிரெஷாக அமர்ந்து இருப்பதை கண்டு, அதுவும் அவளின் கண்களில் தெரிந்த தீர்கத்திலும், குற்றம் சாட்டும் பார்வை பார்த்துக் கொண்டு இருந்தவளை பார்த்து உள்ளுக்குள் கொஞ்சமே கொஞ்சம் ஜெர்க்காகினாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல்,
“மேடம் எழுந்துட்டீங்களா? இந்தாங்க சாப்பாடு..” என்று திட உணவை கொண்டு வந்து நீட்டினான். அதை வாங்காமல் அவனையே பார்த்தாள் மிருதி.
“நீ கூட என்னை எம்மாதுறல்ல...” என்று குற்றம் சாற்றியவளை எந்த சமாதானமும் படுத்தாமல்,
“வாங்கி சாப்பிடு மிரு. இன்னைக்கு நாம சென்னை போகணும்” என்றான்.
“மச்சான் இன்னைக்கு புட்ல மாத்திரை போடலையா? ஒரே ஒரு டேப்லட் மட்டும் மிச்சம் இருக்குடா. அதையும் போட்டுட வேண்டியது தானே” என்று கேட்டுக் கொண்டே வந்த சுதிரை என்ன செய்வது என்று தெரியாமல் சக்தி பல்லைக் கடிக்க, மிரு அவனை வேதனையுடன் பார்த்தாள்.
கண்களில் இருந்து கண்ணீர் இப்பவோ அப்பவோ வரவா என்று கேட்கும் நிலையில் தழும்பி இருந்தது. அப்பொழுது தான் அவள் எழுந்து அமர்ந்து இருப்பதே புரிந்தது சுதிருக்கு. எப்பொழுதும் இவர்கள் தான் அவளை எழுப்புவார்கள்.
அதனால் சுதிர் எதார்த்தமாக கேட்டுக்கொண்டே மிருவின் அறைக்கு வந்தான். இன்று நேரமே அவள் எழுந்து இருக்க சுதிர் விழித்தான் என்ன சொல்வது என்று தெரியாமல்.
“மிரு அது வந்து...” அவன் பேசவர,
“நீங்களும் ஏம்மாத்திட்டீங்கள்ள” அவள் பட்டென்று வலிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
இருவரும் ஆளுக்கு ஒரு பக்கமாய் அமர்ந்து அவளின் கரங்களை எடுத்து தங்களின் கைகளுக்குள் வைத்துக் கொண்டார்கள்.
“மிரு...” என்று அவளை சமாதானம் செய்ய பார்க்க,
“எப்போ கிளம்புறோம்?” என்றவள் அவர்களின் கையில் இருந்து தன் கரங்களை எடுத்துக் கொண்டவள் அவர்களை பார்ப்பதை தவிர்த்து விட்டாள்.
“மிரு...” சுதிர் பேச வர, சக்தி எதுவும் பேச வேண்டாம் என்று தலையை ஆட்டி சொல்ல,
“ம்ம்ம்” என்றவன் புறப்பட எல்லா ஏற்பாடும் செய்தான். சக்தி அவளுக்கு உதவி செய்ய, மறுக்கவில்லை.
காரில் முன் பக்கம் ஏறி அமர்ந்துக் கொண்டாள். புடவைக்கு ஒரு பெரிய முழுக்கு போட்டவள், அங்கு வாங்கி வைத்திருந்த டீசெர்ட், மற்றும் த்ரீ போர்த்தும் அணைந்துக் கொண்டாள்.
அதன் ஏற்பாடு யார் என்று அறிந்துக் கொண்ட சுதிரும் சக்தியும் ஒரு பார்வை பார்த்துக் கொண்டார்கள். அவர்களை பொறுத்தவரை மிருதணும் மிருதியும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார்கள்.
ஆனால் அது வெறும் எண்ணமாக மட்டுமே இருக்கும் என்று யாரறிவார்.