Notifications
Clear all

அத்தியாயம் 15

 
Admin
(@ramya-devi)
Member Admin

நெஞ்சமிடை விரித்த காதல் நேயங்கள்

முற்றும் முழுதும் காயங்கள் மட்டுமே...!

 

“உன்னை சுவை பார்க்கட்டுமா?” என்று அவன் கேட்க, மிருதி பதறிப் போய் அவனை ஏறெடுத்துப் பார்த்தாள் திகைத்து... அவளது கண்களில் தெரிந்த பதற்றம் கண்டு அவனின் கண்கள் இடுங்கியது.

“என்னை காதலிக்கிற தானே..?” என்று அழுத்தமாக கேட்டான். அதுக்காக இதற்கெல்லாம் ஒத்துக் கொள்ள முடியுமா? என்று மனம் அவளிடம் முரண்ட விழியகலாது அவனை பார்த்தாள். அந்த பார்வையில் அவன் ஒற்றை புருவத்தை ஏற்றி முறைத்துப் பார்த்தான்.

அவனது பார்வை அவளிடம் கொஞ்சம் கொஞ்சமாக எல்லை மீற தொடங்க இனி அவன் அருகில் நிற்க முடியாது என்று அவள் விலக தொடங்க,

அவளை போக விடாமல் ஒரு புறம் சுவர் தடுக்க இன்னொரு புறம் மிருதன் தடுக்க அவளால் அவ்விடத்தை விட்டு போகவே முடியவில்லை.

“ப்ளீஸ் நான் போகணும்...” என்று வாய்க்குள் முணுமுணுக்க,

அசையும் அவளது இதழ்களை வெட்டும் மின்னல் ஒளியில் ஆழ்ந்து பார்த்தவன் அவனையும் அறியாமல் அவளது இதழ்களை நெருங்கினான்.

முன்ன மாதிரி ஏம்மாற்றுவானோ என்று கொட்ட கொட்ட அவனது விழிகளை பார்த்தாள். தன்னையே பார்த்துக் கொண்டு இருந்தவளின் பார்வையை உணர்ந்தவன் மெல்ல மெல்ல பூவை வருடும் மெல்லிய மாருதமாய் அவளை நெருங்கி,

முகர்ந்தாலே அனிச்சை மலர் வாடிவிடுமே என்று அதையும் விட அதிக மேன்மையுடன் அவளது இதழ்களை நாடினான்.

ஒரே ஒரு கணம் உரசிய இதழ்கள் அடுத்த நொடி ஒன்றோடு ஒன்று கலந்து விட, அதுவரை லேசாக விரைத்து நின்றவளின் தேகம் கொஞ்சம் கொஞ்சமாக ஆசுவாசமாகி நெகிழத் தொடங்கியது.

முதல் முதல் முத்தம். உயிரை அடியோடு வெட்டி சாய்த்துப் போட்டு இருந்தது...! முத்தத்தில் பித்தம் ஏறுமா..? முத்தம் இன்பத்தை கூட்டுமா? ஒரே ஒரு முத்தம் அத்தனைக்கும் ஈடாகுமா? ஆகும் என்று மிருதன் காண்பித்துக் கொண்டு இருந்தான்.

ஒரு நொடியில் காலடியில் நிலத்தை நழுவ செய்தான். அடுத்த நொடி உச்சி சிகரத்தில் கொண்டு சேர்த்தான். இன்னொரு நேரம் சாகரத்தின் நடுவில் விட்டான். அத்தனை உணர்வுகளையும் ஒற்றை முத்தத்தில் காட்டியவனின் பிடரியை பெண்ணவளின் மென்மையான கரங்கள் பற்றிக் கொண்டது.

அவனுக்கு முழு ஒத்துழைப்பும் அவள் வழங்க முத்தத்தின் ஈரம் தொடர்ந்துக் கொண்டே இருந்தது. கொஞ்சம் கூட அவசரமே இல்லை. மிக நேர்த்தியான முத்தம். அழுத்தம் இருந்தது. ஆனால் வலிக்கும் அளவுக்கு கொண்டு செல்லாமல் மென்மையிலே திளைக்க வைத்தான்.

ஆனால் அதற்கு நேர்மாறாக அவனது வலிய கரம் பெண்ணவளின் இடை சேலையை நகர்த்தி அவளின் புடவைக்குள் தன் கரங்களை நகர்த்தி தன் வெற்று நெஞ்சோடு இறுக்கிக் கொண்டான்.

எல்லை மீறும் அவனது கரத்தில் ஒரு வித லயம் இருக்க அவனை தடுக்க முடியாமல் அவனது இதழ் தீண்டலில் இருந்து விலகப் பார்த்தாள். ம்ஹும்.. அவளால் சிறிது கூட நகர முடியவில்லை.

இரும்பு கரத்தின் பிடியோடு அவளை சேர்த்து அனைத்து இருக்க எங்கனம் அவனை விட்டு பிரிவது... மூச்சுக்கு தவித்தவளுக்கு சற்றே இடம் கொடுத்து அவளை போல சுவரில் சாய்ந்துக் கொண்டான் மிருதன்.

மூச்சு வாங்கி அப்படியே அவனது தோளில் சாய்ந்துக் கொண்டாள். ஏனோ கண்களின் ஓரம் கண்ணீர் ததும்பி வழிந்தது. அது மகிழ்ச்சியலா இல்லை வேதனையாலா என்று அவளால் பிரித்து பார்க்கவே முடியவில்லை.

தன் தோள் சாய்ந்து இருந்தவளை அணைக்கவுமில்லை விலக்கி தள்ளவும் இல்லை. அவன் அப்படியே நின்றிருந்தான்.

அவளால் அப்படி நிற்க முடியவில்லை. தானாகவே அவனுக்கு நேர் எதிர் வந்து நின்றவள் கொஞ்சம் கூட தாமதிக்காமல் அவனின் இதழ்களை தன்னுள் எடுத்துக் கொண்டாள்.

அவன் கொடுத்த மென்மையான முத்தத்தை ரசித்தவளுக்கு அது போல கொடுக்க தெரியாமல் அவள் தடுமாற, மிருதனின் இதழ்கள் முதல் முறை புன்னகையை தவழவிட்டது. ஆனால் அதை அவள் தான் அறியவில்லை.

தடுமாருபவளுக்கு தன்னை அழகாக ஏந்திக் கொடுத்தான். அவனது ஒத்துழைப்பில் மனம் நெகிழ்ந்தவள் அவனது வெற்று முதுகில் தன் கரங்களை கொண்டு சேர்த்து தன்னோடு இறுக்கிக் கொண்டாள்.

கொட்டும் மழையின் சாரலில் இவர்கள் நனைந்த படி புது காவியம் ஒன்றை படைத்துக் கொண்டு இருந்தார்கள். மென்மை கொஞ்சம் மறைய மறைய வன்மை அவ்விடத்தை ஆட்சி செய்ய, அதன் பெரும் பங்கு மிருதியை மட்டுமே சாரும்.

தானா இப்படி என்று அவளுக்கு ன்னாம் வந்தாலும் ஏனோ இந்த நிமிடங்களை விட்டால் மீண்டும் இந்த சூறாவளிக் காற்று தன்னிடம் சிக்காது என்று அறிந்து இருந்தாளோ என்னவோ.. அதனால் அவளிடம் ஒரு வேகம் இருந்தது.

அவனே சற்று விலகுவது போல பாவனை செய்ய, அதற்கு அவள் விடவே இல்லை அவனின் முதுகில் கரம் வைத்து தன்னோடு இன்னும் இறுக்கிக் கொண்டாள்.

அவனது மார்புக்குள் அவளது உடல் வெகு வாகாக பொருந்தி இருப்பதை இருவருமே உணர்ந்துக் கொண்டார்கள். எப்படி இந்த பொருத்தம் என்று வியந்து போனாலும் இந்த கணங்களை அவளுக்காக விட்டுக் கொடுத்து அமைதியாக நின்றிருந்தான்.

மெல்ல மெல்ல அவளது வேகம் குறைய அவனை விட்டு விலகி நின்றாள். லேசாக மூச்சு வாங்கியவள் அவனை பார்க்க நாணம் கொண்டு சுவரில் சாய்ந்து எதிரில் தெரிந்த காரிருளை பார்த்தாள்.

அவளின் முத்த சுவையை தன்னுள் உள் வாங்கியவன் அவளை பார்த்தான். அவள் அவன் மீது பார்வையை திருப்பவே இல்லை. முகம் அப்பட்டமாய் சிவந்து போய் இருந்தது... இதழ்களில் இருந்த ஈரம் நடந்த உண்மையை பறைசாற்றிக் கொண்டு இருக்க அவளை இப்படி கரத்தை கட்டிக் கொண்டு பார்க்க அவனால் முடியவில்லை.

அவளோ முத்தம் கொடுத்த தித்திப்பில் திளைத்து இருக்க,

“பெட்டர் நீ வேற யாரையாவது பார்த்து கல்யாணம் பண்ணிக்கோ...” என்றான் அமைதியை கிழித்துக் கொண்டு..

தன் காதில் சரியாக தான் விழுகிறதா அவன் சொன்ன வார்த்தைகள் என அவனை திரும்பி பார்த்தாள். பார்வை முழுவதும் அதிர்வு தான். தடதடத்துக் கொண்டு வந்த நெஞ்சை பிடிக்க முடியாமல் தடுமாறி அடிபட்ட பார்வை பார்த்தாள். அவனது முகத்தில் முன்பிருந்த இலகு எதுவுமில்லை. பாறையாக இறுகிப் போய் இருந்தது. அவளது பார்வை அவனை கொஞ்சம் கூட அசைக்க வில்லை.

“அப்போ இந்த முத்தம்... காதலிக்காமல் அவ்வளவு ரசனையாக கொடுக்க முடியாதேடா” அவளால் அதை அவனிடம் கேட்க கூட கூசி போய் விழிகள் கலங்க வாயடைத்துப் போய் நின்றாள்.

“எனக்கு இந்த காதல் மேல எல்லாம் கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை... சோ என் பின்னாடி சுத்தி உன் எதிர்காலத்தை வீணாக்கிக்காத” என்றான் அழுத்தமாய்.

முதல் முறையாக அவன் வாயிலிருந்து அவனது முடிவை சொல்கிறான். தீவிரமாக கேட்டுக் கொண்டாள்.

“ஏன்?” என்றாள் ஒற்றை வார்த்தையாக. உள்ளுக்குள் எல்லாமே உடைந்துப் போனது போல உணர்ந்தாள். அவளுக்கு முழு விவரமும் வேணும் இல்லையா அவனிடமிருந்து. அதனால் பொறுமையாக கேட்டுக் கொண்டாள் அவனது முடிவை.

“ப்ச்...” என்று விளக்கம் கொடுக்காமல் அவன் விலக பார்க்க,

“இல்ல கொஞ்சம் உங்க பக்கம் விளக்கம் சொன்னா நான் என் மனதை மாற்றிக்க கொஞ்சம் சுலபமா இருக்கும் இல்லையா அதுக்கு தான் கேட்டேன்.” என்று அடைத்துக் கொண்டு வந்த தொண்டையை சரி செய்து கேட்டாள். அவளால் அவனிடம் அதற்கு மேல் கெஞ்ச முடியவில்லை. ‘நீ தான் வேண்டும் என்று...’

போகிறாயா போ.. ஆனால் என் நேசமும் காதலும் உனை விட்டு எக்கணமும் நீங்காது ஏனெனில் அவளுள் இருந்த அன்பு அவ்வளவு தூரம் வேரோடி போய் இருக்கிறது. வெளி உலகத்துக்கு வேண்டுமானாலும் நான் உன்னை மறந்துவிட்டேன் என்று காண்பிக்கலாம். ஆனால் உள்ளுக்குள் உன் மீது கொட்டி தீர்க்கவே முடியாத அளவுக்கு காதலை வைத்துக் கொண்டு இருக்கிறேன். அதை உன் பார்வை கூட படமால் போக்கசமாய் காத்து நிற்பேன் என்று உறுதி எடுத்துவிட்டாள் இந்த கணம் முதல்.

ஆனாலும் அவளுக்கு அவனது விளக்கம் தேவையாக இருக்க அவனிடம் கேட்டாள்.

“ப்ச்...” என்று அவன் புருவத்தை தேய்த்து விட,

“இல்ல உங்களை மறக்க எனக்கு அழுத்தமான காரணம் வேண்டும். ஒரு மாத லவ்னா விட்டுட்டு போயிடலாம். ஆனா என் காதல் கொஞ்சம் கொஞ்சமா சேர்த்து வச்சி ஆண்டுகள் பல வருடம் ஆயிடுச்சு. அதை ஆறுதல் படுத்த வாவது கொஞ்சம் அழுத்தமான காரணம் சொல்லுங்க... அதுக்கு மேல உங்களை தொந்தரவு செய்ய மாட்டேன்” என்றாள் தன் துக்கத்தையும் வேதனையையும் அடக்கிக் கொண்டு.

பெரு மூச்சு விட்டவன், “எனக்கு யாரோடும் செட் ஆகாது. முக்கியமா உன்னோட... இதுக்கு மேல உனக்கு விளக்கம் சொல்ல எனக்கு தோணல. ஸ்டே அவே..” என்று எவ்வளவு அழுத்தமாக சொல்ல முடியுமோ அந்த அளவு அழுத்தமாக சொல்லிவிட்டு போய் விட்டான்.

அவ்வளவு தான் எல்லாமே முடிந்துப் போனது இருவரிடையே.

ரொம்ப சுலபாமாக தூக்கி போட்டுவிட்டு போய் விட்டான் அவளை. அவளால் தான் அவன் விட்டு சென்ற இடத்தில் இருந்து நகரவே முடியாமல் அப்படியே நின்றாள். நெஞ்சமெல்லாம் பெரும் மலையை சுமந்தது போல அப்படி ஒரு வலி.

என் இத்தனை நாள் காத்திருப்புக்கும் காதலுக்கும் எந்த வித பலனுமே இல்லையா...? விழலுக்கு இறைத்த நீராய் தான் போனதா என் நேசம்... காடு மேடு திரிந்து அவனை ஒவ்வொரு நொடியும் எனக்குள் அடக்கி நேசம் வைத்து திரிந்தனே.. அப்போ அதுக்கெல்லாம் ஒரு பொருளும் இல்லையா?

அவளுள் பல கேள்விகள் பிறந்தது... ஆனால் அது ஒன்றுக்கு கூட அவளிடம் விடையில்லை... தன் இதழ்களை தொட்டுப் பார்த்தாள். அதில் ஈரம் இன்னும் காயவில்லை. உதட்டோரம் சிறிய காயம் அவனது வன்மையை பறைசாற்ற கண்ணோரம் ஒரு துளி நீர் பட்டென்று தெரித்து விழுந்தது அவளது நெஞ்சில்.

நெஞ்சம் அக்கினியாய் எரிய அதை ஆற்ற மாட்டாமல் தன் ஒரு கையால் பற்றிக் கொண்டு வலித்த இடத்தை நீவி விட முனைந்தாள்.

ஆனாலும் பெரிய காயம் பட்டு போனதால் அந்த வலி அவ்வளவு எளிதாக மறையவில்லை. சாரல் வலுத்து அதிக மழையை கொண்டு வந்து கொட்டியது. அதை உணரக் கூட முடியாமல் அப்படியே அங்கேயே அமர்ந்து விட்டாள்.

ஈரம் தன்னை முழுமையாக நனைக்கிறது என்று கூட தெரிவில்லை. “நீ வேண்டாம் என்று இது நாள் வரை கூட அவன் சொன்னதே இல்லை. உன் காதல் இவ்வளவு தானா? என்று கேட்டு ஒவ்வொரு முறையும் அவளின் காதலை அவளுக்கே உணர்த்தி இருக்கிறானே தவிர அவனை விட்டு விலகி போகச் சொன்னதே கிடையாது. முதல் முறை அவளால் மறுப்பே சொல்ல முடியாத நிலையில் அவனது எதிர்ப்பையும் காதலிக்க முடியாது என்பதையும் தெளிவாக சொல்லி விட்டான்.”

அவன் அது மட்டுமா சொன்னான்... என்று அவளது நெஞ்சம் துணுக்குற, கண்களில் மீண்டும் கண்ணீர் நிரம்பியது.

“காதலிக்க முடியாது. ஆனா லவ் மேக்கிங் பட்டும் பண்ணலாம்... உனக்கு ஓகேயா” என்று கேட்டானே... இதை விட அவளது காதலை அசிங்கப்படுத்த முடியுமா என்ன...? முற்றும் முழுதாய் ஒழித்துக் கட்டி விட்டு போய் விட்டான் மிருதஞ்சயன்.

எவ்வளவு நேரம் அபப்டியே அமர்ந்து இருந்தாளோ தெரியவில்லை. குளிர் அவளை மிகவும் வாட்டி எடுக்க உடை மாற்றிவிட்டு படுக்கையில் போர்த்திக் கொண்டு படுத்து விட்டாள்.

சும்மாவே ஊட்டி அதிக குளிர். இதில் கொட்டும் மழையில் நனைந்தால் சொல்லவும் வேண்டுமா குளிர் வாட்டி எடுத்து விட்டது மிருதியை. எவ்வளவு போர்வை போர்த்தியும் அவளால் தாக்கு பிடிக்கவே முடியவில்லை. தலையில் இருந்த ஈரத்தை காய வைக்காமல் படுத்த விளைவு வேறு அதிக சேர அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.

அறையின் ஹீட்டர் எவ்வளவு அதிகப் படுத்தி பார்த்தாலும் அவளால் சமாளிக்க முடியாமல் போய் விட வேறு வழியின்றி மிருதனுக்கு போனை போட்டாள்.

அந்த பக்கம் எடுத்த உடனே,

“மிருதன் ப்ளீஸ் ரொம்ப குளிருது... ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போங்க..” என்று சொல்வதற்குள் வாய் தந்தி அடிக்க அந்த பக்கம் அவனுக்கு ஒன்றுமே புரியவில்லை.

ஆனாலும் அவள் பேசிய குரலில் அவளுக்கு உடம்பு முடியவில்லை என்பது மட்டும் புரிய வேகமாய் வந்தான் அவளின் அறைக்கு. கதவை தாளிடாமல் வைத்து இருந்தாள். உள்ளே நுழைந்து அவளை ஆராய,

“ஷிட் மழையில ஏன்டி நனைஞ்ச..” என்று கடுப்பகியவன், அவளுக்கு கைக் கால்களை எல்லாம் பரபரவென்று தேய்த்து விட்டான். லேசாக மிக லேசாக மட்டுமே சூடு பரவியது. அது போதாதே அவளின் நிலைக்கு.

அப்பொழுது தான் அவளது உடம்பு லேசாக சுடுவது போல இருந்தது. இதற்கு மே தாமதிக்க முடியாமல் மருத்துவருக்கு போன் போட்டு வர சொன்னான்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 30, 2025 9:06 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top