சிறிது நேரத்திலே தயாகரன் எழும்பி விட்டான். அவளை தேட, அவள் கண்ணில் அகப்படவில்லை. இந்த போட்டில் அவள் எங்கு போய் இருப்பாள் என்று அறிந்தவன், பிரெஷப் ஆகிவிட்டு கிட்சனுக்கு சென்றான்.
அங்கே அவள் செஃபிடம் பேசி சிரித்துக் கொண்டே பரபரப்பாக வேலை செய்வதை பார்த்து வாசலின் நிலையில் அப்படியே கைகளை கட்டிக் கொண்டு நின்று விட்டான்.
அந்த நேரம் ஹரிணி சார் என்று வர, வாயின் மேல் ஒற்றை விரலை வைத்து அவளை சத்தம் போடாதே என்று தடுத்தவன் மிகவும் இரசனையாக தன்னவளை பார்வையிட்டான் தயாகரன்.
“சார் டிஸ்கஷன் இருக்குன்னு சொன்னீங்களே?” ஹரிணி சத்தமில்லாமல் அவன் அருகில் வந்து கேட்டாள்.
“யா.. பட் அஃப்டர் லஞ்ச்கு தானே சொன்னேன்” என்றவன்,
“ஒரு அப்டேட் வேணும். என் தம்பி பிரபாவை கால் பண்ணி நான் கேட்டதை அனுப்ப சொல்லு” என்று அவளுக்கு வேலையை குடுத்து அங்கிருந்து அனுப்பியவன், அதற்கு மேலும் அங்கு வெளியே நிற்காமல் தானும் அந்த சமையல் அறையின் உள்ளே நுழைந்தான் தயாகரன்.
அவனின் அரவத்தை உணர்ந்து திரும்பி பார்த்தவள்,
“என்ன இவ்வளவு தூரம்?” என்று கேட்டாள்.
“ஒரு மின்ட் சோடா குடு” என்றான்.
“அதெல்லாம் இப்போ குடுக்க முடியாது. சாப்பிட்டுட்டு அப்புறமா ப்ரிப்பேர் பண்ணி தரேன்” என்றவளை முறைத்தான்.
“குடுடின்னா...” என்று அதட்டல் போட்டான்.
“அய்யா ரொம்ப தான். சாப்பிடுற நேரமாச்சேன்னு சொன்னேன்.. எனக்கென்ன” என்று அவன் கேட்டதை செய்துக் கொடுத்தவள்,
“ஆமா என்ன புலி புல்லை திங்குது... நீங்க எப்பவும் சரக்கு தானே அடிப்பீங்க?” போகிற போக்கில் அவனை வாரி விட்டு மீண்டும் அந்த சேப்பிடமே திரும்பிக் கொண்டாள்.
“இவளை” என்று முணகியவன், அங்கேயே அமர்ந்து அவளின் அசைவுகளை பார்த்துக் கொண்டே குடித்துக் கொண்டு இருந்தான்.
சிறிது நேரத்திலே ஹரிணி வந்து பிரபா அனுப்பியதாக சொல்ல, தன் மனைவியை ஒரு பார்வை பார்த்தவன் தன் வேலைகளை பார்க்க கிளம்பி விட்டான்.
அதுவரை தன் முதுகை துளைதுக் கொண்டு இருந்த பார்வை இல்லாமல் போனவுடன் திரும்பி பார்த்தாள். அவன் அமர்ந்து இருந்த நாற்காலி காலியாக இருந்தது.
விழியோரம் ஈரம் கசிந்தது. அதுவரை அவனின் கண்பார்வையில் இருந்தவளுக்கு இப்பொழுது அவன் இல்லாமல் போகவுடன் வெறுமை தட்ட, செப்பிடம் சொல்லி விட்டு மேல் தளத்துக்கு சென்றாள்.
உச்சி வேலை பொழுது. வெயில் மிதமாகத் தான் இருந்தது. அங்கே போட்டு இருந்த நீள் இருக்கையில் பின்னால் சாய்ந்து அமர்ந்துக் கொண்டாள்.
காலை நேரம் தயாகரன் தன் உண்டுக் கொண்டு இருந்த தட்டை பிடுங்கி தின்றது இன்னும் கண்ணுக்குள்ளே இருக்க, அவனின் ஒரே தேர்வு தான் மட்டும் தான் என்று நன்கு புரிந்தது.
அவன் செய்யும் வேலைக்கு திருமணம் எல்லாம் எட்டா தூரம். அவன் அதை பற்றி சிந்தித்துக் கூட இருக்க மாட்டான் என்று சொன்ன பொன்மாரியின் குரல் இப்பொழுதும் கேட்டுக் கொண்டே இருந்தது.
பெருமூச்சு விட்டவளுக்கு விழியோரம் நீர் கசிந்தது. அவளின் ஒரே தேர்வும் இனி அவன் மட்டும் தானே.. அவனை தாண்டி தன்னால் இனி வேறு ஒருவனை யோசித்து விட முடியுமா என்ன?
என் வாழ்க்கையில இன்னும் கொஞ்ச காலத்துக்கு நீ என் கூட இருந்து இருக்கலாம் தயா... அவ்வளவு தானே தவிர இந்த பிரிவு எனக்கு வருத்தம் இல்லை... என்ற பொழுதே ஒரு துளி கண்ணீர் உருண்டு விழுந்தது.
ஆர்பரிக்கும் கடல் சீற்றமில்லாமல் அமைதியாக தான் இருந்தது. அந்த அமைதியை பார்த்துக் கொண்டே தனிமையில் என்னென்னவோ நினைவுகளும் வேதனைகளும் எழுந்த வண்ணம் இருந்தது.
என் எல்லை மீறிய ஏக்கத்தை எல்லாம் எப்பொழுது துடைத்து போடுவாய்.. நீ என் எல்லையில்லா பேராசை அல்லவா... அவளின் மனம் தன் இயல்புக்கு உள்ளத்து ஏக்கத்தை எல்லாம் கொட்டிக் கொண்டு இருந்தது.
ஆமாம் பேராசை தான். எப்பொழுது எந்த நிமிடம் தயாகரனின் மீது அவ்வளுக்கு காதல் வந்ததோ தெரியவில்லை. இதோ இப்பொழுது அவ்வளவு உயரத்துக்கு அவன் மீது காதல் முகிழ்த்துக்கொண்டு இருக்கிறது.
அதை அவளால் அவ்வளவு எளிதாக கடந்துவிட இயலுமா என்று தெரியவில்லை. இங்க இருந்து போனதுக்கு பிறகு அவளின் வாழ்க்கை எப்படி அமையும். எங்க அமையும் என்று எதையும் யோசிக்கவில்லை. முதலில் இங்கிருந்து பாதுகாப்பாக செல்வோமா என்று கூட அவ்வளுக்கு தெரியாவில்லை.
விடை காணா கேள்வி தான் அத்தனையும் அவளிடம். பெருமூச்சு விட்டவளின் சிந்தனை எங்கெங்கோ சுற்றி அலைப்பாய்ந்துக் கொண்டே இருந்தது. இரவெல்லாம் வராத தூக்கம் அப்பொழுது விழிகளை சுழற்றிக் கொண்டு வர, தலையை பின்னுக்கு சாய்த்துக் கொண்டு கண்களை மூடிக் கொண்டாள்.
சிறிது நேரத்திலே தன் வேலையை முடித்துக் கொண்டு வந்தவன், பெண்ணவளை காணாமல் விழிகளால் அவளை தேட, அவள் எங்கும் இல்லாமல் போக வேகமாய் மேல் தளத்துக்கு வந்தான். வந்தவனின் முகத்தில் உப்புக்காற்று மோதியது.
அதை சட்டை செய்யாமல் விழிகளால் பெண்ணவளை அலசினான். இருக்கையில் அமர்ந்தபடி அவள் தூங்கிக் கொண்டு இருந்ததை பார்த்து பெருமூச்சு விட்டவன் தானும் அவளுக்கு அருகில் போய் அமர்ந்துக் கொண்டான்.
காற்றில் அவளது கூந்தல் அலைபாய்ந்துக் கொண்டு இருக்க, அதை அவளின் காதோரம் சொருகி விட்டு, நெற்றியில் முத்தம் வைத்தான். அதில் திடுக்கிட்டு எழுந்துக் கொண்டாள் தயாழினி.
“இங்க என்ன பண்றீங்க?” தன்னை மிகவும் சமீபத்து இருந்தவனை ஆராய்ச்சியாக பார்த்துக் கொண்டே கேட்டாள்.
“என்ன பண்ணா உனக்கு என்னடி?” அமத்தளாக சொன்னவனை முறைத்தவள் எழுந்து கீழே செல்லப் பார்க்க, அவளின் கையை பிடித்து இழுத்து தனக்கு அருகே அமர வைத்தவன்,
“ஆர் யூ சுயர்?” என்று கேட்டான் மொட்டையாக.
“எதுக்கு சுயர்?”
“என்னோட பிசிக்கல் டச் வச்சுக்க தான்” என்றான்.
“ப்ச்” என்று சலித்தவள், “எனக்கு மூட் இல்லை” என்றாள்.
“மூட வரவைக்க வேண்டியது என் வேலை.. நீ ஓகே மட்டும் சொல்லு” என்றான்.
“என்ன திடீர்னு?” கேள்வி கேட்டாள்.
“ப்ச் ஆமாவா இல்லையான்னு மட்டும் சொல்லுடி. அதை விட்டுட்டு இந்த தேவையில்லாத கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்காதா” என்று சொன்னவன் அவளை ஓகே சொல்ல வைத்த பிறகே விட்டான்.
அதன் பிறகு அவளை அம்போன்னு விட்டுட்டு கீழே போய்விட, அவனது செயலில் திகைத்துப் போனாள் தயாழினி.
“அடப்பாவி” என்று முணுமுணுத்தவள் தானும் அவனை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டாள். ஆனால் எண்ணம் முழுக்க அவன் மட்டும் தான் நிறைந்து இருந்தான்.
அன்றைய உச்சி வேலை கழிய, அவரவர் இருப்பிடம் சென்று சிறிது நேரம் ஓய்வெக்க செல்ல, மாலுமியிடம் சென்று ரகசியம் பேசிவிட்டு வந்த தயாகரன் அந்தி வேலை தொடங்கும் நேரம் தயாழினியை அழைத்துக் கொண்டு வெளியே போனான்.
“எங்க போறோம்” என்று கேட்டவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவளின் கை பிடித்து வெளியே அழைத்து வர, அவனிடம் கேள்வி கேட்டுக் கொண்டே வந்தவள் அப்போது தான் தன் எதிரில் இருந்த இடத்தை பார்த்தாள். ஆ.. என்று ஆச்சரியம் ஆனவளுக்கு வாய் மூடவே இல்லை.
அவளின் ஒரு கைப்பிடித்துக் கொண்டு வந்தவனின் இன்னொரு கையில் ஒரு பை இருந்தது.
“வாவ்வ் சூப்பரா இருக்குல்ல இந்த தீவு” என்று கேட்டவள், “சுத்திப் பார்க்க வந்து இருக்கமா?” கேட்டுக் கொண்டே இறங்கியவள், தங்களை மட்டும் விட்டுவிட்டு படகு போவதை பார்த்து,
“அய்யய்யோ நம்மளை மட்டும் விட்டுட்டு படகு போகுதுங்க.. நிறுத்த சொல்லுங்க” என்று அவள் அலற,
“ஷ்.. அமைதியா வாடி” என்று அவளை அழைத்துக் கொண்டு அந்த மாலை நேரத்தில் எதிரில் இருந்த குட்டி மலை குன்றுக்கு கூட்டிக் கொண்டு வந்தான் தயாகரன்.
“யாருமே இறங்கலங்க.. நாம மட்டும் தான் இறங்கி இருக்கோம்.. படகு வேற போகுது.. ஐயோ நிறுத்த சொல்லுங்க” பதறியவளை கொஞ்சமும் கண்டு கொள்ளாமல் மணலில் கால் பதித்து அந்த மலையை நோக்கி நடக்க, இவள் தான் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி அவனின் பின்னாடி ஓடினாள்.
“நான் இவ்வளவு தூரம் சொல்லிட்டே இருக்கேன். நீங்க எனக்கு என்னன்னு போனா என்ன பொருள்? என்னை மனுசியாவே மதிக்க மாட்டீங்களா?” ஆற்றாமையுடன் கேட்டவளை திரும்பி பார்த்தவன் பார்வையில் இவளுக்கு மூச்சை அடைத்துக் கொண்டு வந்தது.
எதுவும் பேசாமல் அவளிடம் ஒரு கையை மட்டும் நீட்டினான் தயாகரன். எச்சில் விழுங்க அவனின் கையை பிடித்தாள்.
“வா” என்று சொன்னவன் அவளின் கையை பிடித்துக் கொண்டு கூட்டிக்கொண்டு சென்றான்.
பெரிதான குன்று என்று சொல்ல முடியாது. ஆனால் பரவலான மண் மேடு அது. மண் மேடு முழுவதும் மரங்களும் புதர்களும் மண்டி இருந்தது. மணலில் நடக்கும் பொழுதே நண்டுகளும் சிப்பிகளும் நத்தைகளும் தட்டுப் பட்டது.
அதை எல்லாம் மிதிக்காமல் பார்த்து பார்த்து காலடி எடுத்து வைத்தவளை ஒரு பார்வை பார்த்தவன் ஒன்றும் சொல்லாமல் அவளுடன் மெதுவாகவே நடந்தான்.
“இங்க எதுக்காக வந்து இருக்கோம்?” என்று கேட்டாள். கடல் அலைகள் பெரிதாக அங்கு எழவில்லை. சன்னமாக தான் இருந்தது. அதையும் இரசித்துக் கொண்டே கணவனுடன் நடந்தவளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவன் செல்ல,
“ம்கும் ரொம்ப தான்” என்றவள் அக்கம் பக்கம் பார்த்துக் கொண்டே நடந்தாள். அந்த கரடின் உள்ளே அவன் அழைத்துச் செல்ல, அவன் கூட்டிக்கொண்டு சென்று நிறுத்திய இடத்தை பார்த்து திகைத்துப் போனவள்,
“எ... என்ன இதெல்லாம்?” என்று அவள் பெரிதும் தடுமாறிப் போனாள். அவன் செய்து இருந்த ஏற்பாடு அப்படி இருந்தது.
“என்ன?” என்று அவனும் அவளை போல கேட்க, சன்னமாக முறைத்தாள் அவனை.
“என்னடி முறைப்பு எல்லாம் பலமா இருக்கு?” கேட்டவன் அவளை தன் கைவளைவில் வைத்துக் கொண்டு, அவளின் காதோரம் “நீ கேட்டியே உன்னோட முதல் அனுபவம் என்னோட இருக்கணும்னு.. அதுக்கு தான்” என்றான்.
திகைத்துப் போனாள்.
“என்னடி மிரண்டு போற.. நீ கேட்டதுக்கு தான் இங்க வந்து இருக்கோம். எனக்கும் இது தான் முதல் அனுபவம். அது தான் இவ்வளவு ஏற்பாடும்” என்றவன், அவளை முன்னாடி வழிநடத்திச் சென்றான்.
அவனின் வழியில் சென்றவளுக்கு அடிவயிற்றில் ஆயிரம் பிரளையம் எழுந்தது. முதுகு தண்டில் பல கோடி மின்னல்கள் வெட்டி சென்றது.
thodarum...