இம்சையாய் என்னுள் தேங்கிய சுவடுகளை
கலைக்க இயலா நேசமாய் நீ...!
மிருதனின் தொடுகையில் மெல்ல மெல்ல கரைந்து போய் கொண்டு இருந்தவளின் காதோரம்,
“ரூம் போகலாமா?” என்று கேட்டான் மனசாட்சியை விற்றவனாய். அதில் திகைத்துப் போய் அவனை திரும்பி பார்த்தாள். நேருக்கு நேராய் அவனை நின்று எதிர்க் கொண்டவளின் எழில் கோலத்தை விழிகளில் ஆசை போங்க பார்த்தான்.
அவனை நிமிர்ந்து பார்த்தவளின் விழிகள் இருளை கிழித்துக் கொண்டு கூர் முனையாய் அவனை தாக்கியது. ஆனால் அவனுக்கு அதெல்லாம் உரைத்ததா என்று தெரியவில்லை.
அவளிடமிருந்து பதில் வராமல் போக, “சே எஸ் ஆர் நோ..” என்று மீண்டும் கேட்டான்.
“நான் உங்களை காதலிக்கிறேன் மிருதன்...” என்றாள் ஆயாசமாக..
“அதனால தான் உன்கிட்ட கேட்டேன்.. திஸ் மொமென்ட் ஐ நீட் பிசிகல் ரிலேஷன்ஷிப் வித் யூர்ஸ்” என்றவனை அடிக்க கைகள் பரபரத்தது. குழைந்துப் போன தன் நிதானத்தை கடினப்பட்டு மீட்டுக் கொண்டவள், அவனை வேதனையுடன் பார்த்தாள்.
அவளின் வேதனையை புரிந்துக் கொள்ளாதவன் அவள் மேனி மீது தன் பார்வையை ஓட விட அவனது பார்வையில் தன் கோலத்தை கண்டு நொந்துக் கொண்டவள், அவன் கரம் பட்டு கலைந்து போய் இருந்ததை வேகமாக சரி செய்ய ஆரம்பித்தாள். அதில் அவன் உச்சுகொட்ட நிமிர்ந்து பார்த்தான் அவளது முகத்தை.
இப்பொழுது அவனது முகத்தை பார்க்காமல், வழியை மறைத்துக் கொண்டு இருந்தவனின் நெஞ்சில் கை வைத்து தள்ளிவிட்டு வேகமாய் அவளது அறைக்குள் போய் நுழைந்துக் கொண்டாள்.
அவனிடம் காதலை எதிர்பார்த்தாள் ஆனால் அவன் காதலை காட்டாமல் வெறும் லஸ்ட்டை மட்டும் கேட்கிறான் அவளிடம். அதுவும் காதலை முன்னிறுத்தி... எப்படி அவளால் அவனது விருப்பத்துக்கு ஒப்புதல் தர இயலும்.
சிறுக சிறுக சேர்த்து அவன் மீது வளர்த்த காதல் அல்லவா... அதனால் அவன் என்ன செய்தாலும் வெறுக்க முடியாத நிலையில் மிருதி இருக்கிறாள். கல்லூரியில் தான் இவர்களின் நால்வரும் சந்தித்துக் கொண்டது.
கலை கல்லூரி... கிட்டத்தட்ட அங்கு பயின்ற அனைவருக்கும் திரை துறையில் ஏதாவது சாதித்து விட வேண்டும் என்கிற வெறி இருந்தது.. மிருதி இவர்களுக்கு ஜூனியர்...
அவ்வப்பொழுது நடக்கும் குறும்பட விழாக்களுக்கு அனைவரும் சேர்ந்துக் கொள்வார்கள். அதில் சீனியர் ஜூனியர் என்கிற பாகுபாடெல்லாம் கிடையாது. நல்ல ஸ்க்ரீன் ப்ளே இருந்தால் மட்டும் போதும் என்கிற நிலையில் மிருதி எழுதிய ஒரு கான்செப்ட் மிருதனின் டீமுக்கு பிடித்துப் போக அதன் பிறகு அவளையும் அவர்களோடு ஸ்டோரி டிஸ்கஷன் க்கு கூப்பிட்டுக் கொள்வார்கள். இசை எல்லாமே அவர்களது டீம் தான்.
அப்படி ஒன்றிணைந்து தான் இந்த நால்வர் டீம்... இதில் இன்னொருவன் இருக்கிறான். அவன் மியூசிக் டைரக்டர் க்காக முயற்சி செய்துக் கொண்டு இருக்கிறான். ஒரு பிரபல சினிமா கம்போசரிடம் அசிஸ்டென்ட்டாக வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறான். அதனால் இவர்களுடன் எப்பொழுதும் இருக்க முடியாமல் அவ்வப்பொழுது இவர்களின் கற்பூர தீயில் ஐக்கியமாகுவான்.
கல்லூரி படிப்பு முடிந்தவுடன் மகேந்திரன் மிருதனை வெளியே விடாமல் தங்களின் தொலைக்காட்சி நிறுவனத்திலே பணிக்கு அமர்த்தினார். எல்லா திறமையும் இருந்தும் அவனை பெரிய திரையில் வேலை செய்ய விடாமல் மகேந்திரன் முட்டுக் கட்டை போட்டுவிட்டார்.
சம்பூர்ணவதியும் பெருவுடையாரும் எவ்வளவு எடுத்து சொல்லியும் அவர் கேட்கவில்லை. நீங்க வேற என்ன சொன்னாலும் நான் கேட்டுக்குறேன். ஆனா இந்த விசயத்துல நான் சொன்னது சொன்னது தான். அதை மாற்ற யாராலும் முடியாது... என்று சொன்னவர் மிருதனை அழைத்து தொலைக்காட்சியில் ஒளிபரப்பு ஆகிக்கொண்டு இருக்கும் ஒரு நேரலை நிகழ்ச்சிக்கு அவனை அழைத்து சென்று லைட்மேன் வேலையிலிருந்து மேக்கப் மேன் வேலையிலிருந்து பார்க்க வைத்தார்.
பல நேரம் நடிகர்கள் போட்டுக்கொண்டு இருக்கும் உடைகள் பிட்டாக இருக்க பின் பக்கம் ஊசி வைத்து தைக்கும் வேலையை கூட செய்ய வைப்பார்.
மிருதன் எதுவும் சொல்லாமல் எவ்வளவு அடி மட்டத்தில் இருந்து வேலை வாங்க முடியுமோ அந்த அளவுக்கு அவனை வேலை வாங்கினார் மகேந்திரன். அதற்கெல்லாம் கொஞ்சம் கூட அசைய மாட்டான்.
அப்படியே இரும்பு போல வளையாமல் அவர் சொன்ன வேலை அத்தனையும் செய்து முடிப்பான். அவன் நண்பர்கள் இருவருக்கும் அசிஸ்டென்ட் வேலையை எடுத்த உடனே கொடுத்து விட்டார்.
ஆனால் இவனை மட்டும் புடம் போட ஆரம்பித்தார். அது நல்ல எண்ணத்தில் செய்து இருந்தால் மகேந்திரன் நல்ல தகப்பன். ஆனால் மனதில் வஞ்சத்தை வைத்துக் கொண்டு புடம் போட்டால் அவரின் மீது எங்கிருந்து நல்ல எண்ணம் பிறக்கும் அவனுக்கு.
ஆனால் எதற்காக புடம் போடப்பட்டாலும் தங்கம் மெருகு ஏறத்தானே செய்யும். மிருதனும் புடம் போட்ட தங்கமாய் மெருகு ஏறி இதோ இன்று அனைவரையும் இயக்கம் திறமையில் இருக்கிறான்.
அப்படி அவன் ஒவ்வொன்றையும் கற்றுக்கொள்ள ஆயிரம் துன்பங்களை அனுபவித்து இருக்கிறான். எவ்வளவோ ஏளன பேச்சுக்களை மகேந்திரனிடம் இருந்து வாங்கி இருக்கிறான். எல்லோரின் முன்னிலும் மிருதனை எவ்வளவு அவமானப் படுத்த முடியுமோ அந்த அளவுக்கு அவமானப் படுத்துவான்.
அதே பெருவுடையார் மற்றும் மனைவியிடம் மட்டும் அவன் இதெல்லாம் கத்துக்கிட்டா மட்டும் தான் இந்த பீல்டுல அதிக நாள் நிலைச்சி நிற்க முடியும். இது நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியணும்னு இல்லை... உங்க அனுபவத்துக்கு இது நல்லாவே தெரியும்...” என்று அவர்களின் எதிர்பை ஒன்றுமே இல்லாமல் செய்து விட்டார்.
அப்படி மிருதன் ஒவ்வொரு வேலையும் அவமானப்படும் போதெல்லாம் அவன் இரும்பு மனிதனாய் நிமிர்ந்து நின்று அடுத்த முறை தவறு செய்யாமல் தன்னை தானே செதுக்கிக் கொண்டு தன்னையே புடம் போட்டுக்கொண்டான்.
ஆரம்ப காலத்தில் எந்த தொழில் நுட்பத்தையும் அவனை கத்துக்க விடவே இல்லை. ஏன் செட்டில் வேலை செய்யும் ஆட்களிடம் கூட எதையும் கற்றுக் கொடுக்க கூடாது என்று ஆர்டர் போட்டு இருந்தார். அதனால் ஆரம்பித்தில் கொஞ்சம் தடுமாறிப் போனான்.
ஆனால் அவர்கள் செய்வதை கண்ணால் பார்த்து வேலையை கற்றுக் கொண்டவனின் திறமையை மகேந்திரனால் அழிக்கவே முடியவில்லை. அந்த சமயங்களில் மிருதிக்கு அவன் மீது அசைக்க முடியாத மரியாதையை கொண்டு வந்து சேர்த்தது... அந்த மரியாதை கொஞ்ச மறைந்து பெருமையாக மாறியது. அந்த பெருமை போக போக ஒரு நேச இழையை பின்னியது. நேசம் கொஞ்ச கொஞ்சமாய் விறுவிறுவென்று வளர்ந்து காதலை கொண்டு வந்தது பெண்ணவளிடம்.
அப்படி அவன் துன்பப்பட்ட காலங்களில் கூட இருந்து அவனை பார்த்து பிரம்மித்து, இரசித்து, காதல் கொண்ட காதலை வேரோடு பிடுங்கி பார்ப்பது மிருதனின் செயல் இருக்க அதை அனுமாதிக்காதவள் அவனை விட்டு விலகி அறைக்குள் சென்றுவிட்டாள்.
அவனது பிம்பம் தன் மனதில் இருந்து சற்றே நழுவுவது போல இருக்க கண்களில் கண்ணீர் கோலம் போட்டது. இப்படி செஞ்சா உங்க மேல இருக்கிற மரியாதை போயிடும்னு நினைக்காதீங்க மிருதன்... நானே நினைச்சாலும் உங்க மேல இருக்கிற காதல் குறையாது... சொல்லிக் கொண்டவள் தூங்கிப் போனாள்.
அவளை தொடர்ந்து அவளின் அறை வாசலில் வந்து நின்றவன் பின் நகர்ந்து அவனது அறைக்குள் நுழைந்துக் கொண்டான்.
அடுத்த நாள் காலையில் அனைவரும் கிளம்பி வர இப்பொழுதும் சக்தியும் சுதிரும் மிருதியை பார்த்து சிரி சிரி என்று சிரித்தார்கள்.
“டேய் வேண்டாம்... ஏற்கனவே எனக்கு ரொம்ப கடுப்பா இருக்கேன். இதுல நீங்க வேற ஏன்டா உயிரை வாங்குறீங்க...” அவர்களை திடியவள் பின் பக்கமாக அமர்ந்துக் கொண்டாள்.
அவள் பின் பக்கம் அமர்ந்துக் கொள்ள அவளின் அருகில் சுதிர் அமர வர,
“வரும் போது சொகுசா வந்தீங்கள்ள... இப்போ நான் வரேன்...” என்று அவனை பார்சல் பண்ணி முன் பக்கம் தள்ளியவன், மிருதியோடு அமர்ந்துக் கொண்டான் மிருதன்.
“டேய் ப்ளீஸ்டா.. நேத்திக்கு நைட் தான் குடிக்க விடலல்ல... இப்போ பின்னுக்கு உட்கார்ந்து குடிக்க விடேன்” என்றவனை முறைத்துப் பார்த்தவன்,
“சக்தி நீ இந்த பக்கம் வா.. அவன் வண்டி ஓட்டட்டும்... அது தான் பனிஷ்மென்ட்” என்று உத்தரவாக மிருதன் சொல்லி விட, வேறு வழியில்லாமல் உம்மென்ற முகத்தோடு வண்டியை ஓட்ட ஆரம்பித்தான் சுதிர்.
“குடிக்க விடேன்னு சொன்னதுக்கு எவ்வளவு பெரிய பனிஷ்மெண்டை குடுத்துட்டான் இந்த அரக்கன்... கொண்டை ஊசி வளைவுகளில் வண்டி ஓட்டுவது எவ்வளவு கட்டல்(கஷ்டம்) தெரியுமா?” புலம்பிக் கொண்டே அவன் வண்டியை ஓட்ட, அவனை முறைத்தவன் ஸ்டீரியாவை ஆன் செய்துவிட்டான்.
மெல்ல மெல்ல வண்டி வேகம் எடுக்க, திறந்து விட்டு இருந்த காரின் குறுங்கண் வழியாக மலைக்கே உரிய ஈரக்காற்று வந்து நால்வரையும் தழுவியது..!
அந்த ஈரக்காற்றில் தேகம் சிலிர்க்க, மெலிதான இருந்த முந்தானையை எடுத்து தோளோடு போர்த்திக் கொண்டாள் மிருதி.. அவளின் செயல்களை பாராமல் பார்த்தவன்,
“ராஜ ராஜ சோழன் நான்... எனை ஆளும் காதல் தேசம் நீ தான்...” என்ற பாடலை ஓடவிட்டான். அது எல்லோருடைய விருப்பப் பாடல் என்பதால் எந்த எதிர்ப்பும் இல்லை... அந்த பாடலில் கொட்டி கிடக்கும் காதலை இரசித்தபடி நால்வரும் வர, பாடல் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது...!
“முந்தானை மூடும் ராணி செல்வாக்கிலே
என் காதல் கண்கள் போகும் பல்லாக்கிலே...
தேனோடை ஓரமே
நீராடும் நேரமே
புல்லாங்குழல் தள்ளாடுமே
பொன் மேனி கேளாய் ராணி...” சட்டென்று கார் ஒரு குலுக்கள் குலுங்கி நின்றது... சக்தியும் சுதிரும் பின்னால் திரும்பி மிருதனையும் மிருதியையும் பார்த்தார்கள். மிருதிக்கும் அந்த வரி வந்தவுடன் வேகமாய் திரும்பி மிருதனை தான் பார்த்தாள்.
மூவரும் சொல்லி வைத்தது போல மிருதனை பார்க்க அவனோ யாரையும் கண்டுக் கொள்ளாமல் சீட்டில் நன்றாக சாய்ந்து கால் மேல் கால் போட்டுக் கொண்டு கண்களை மூடியபடி இருந்தான்.
அவனிடம் கேட்க யாருக்கும் தைரியம் இல்லாமல் போக, சுதிரும் சக்தியும் மிருவை கேலியாக ஒரு பார்வை பார்க்க,
“கொன்னுடுவேன் ரெண்டு பேத்தையும் மரியாதையா வண்டியை எடுங்க” என்று மிரட்டினாள்.
“நேத்துல இருந்து பாட்டுலயே சங்கதி சொல்லும் விளையாட்டு சக்க போடு போட்டுக்கிட்டு இருக்குடா மச்சான்...” என்று சக்தி சொல்ல,
“பார்க்க கண்ணுக்கு குளிர்ச்சியா நல்லா தான்டா இருக்கு” என்று ஒத்து ஊதினான் சுதிர்.
“இப்போ வண்டி மூவ் ஆகலன்னா செருப்பு வரும்...” என்று மிருதனின் குரல் வர, வேகமாய் வண்டி அவ்விடத்தை விட்டு செல்ல ஆரம்பித்தது...! பட்டென்று மிருதி தன் முந்தானையை தோளை விட்டு விலக்கிக் கொண்டு வெளியே வேடிக்கை பார்க்க,
“சேலையில வீடு கட்டவா...” அடுத்த பாடலை மாற்றி வைத்தான். அதில் “தாவணி நழுவினால் இதயமும் நழுவுதே...” என்று வர பட்டென்று மூவரும் மீண்டும் அவனை திரும்பி பார்த்தார்கள்.
முன்பு போட்ட பாடலில் மூடி இருப்பதாக சொல்ல தன்னை சுற்றி இருந்த முந்தானையை நழுவ விட்டாள். இப்பொழுது மிருதி முந்தானையை நழுவ விட்டதால் தாவணி நழுவியதால் என்று சிட்சுவேஷனுக்கு தகுந்த மாதிரி பாட்டை போடுபவனை என்ன செய்வது என்று தெரியாமல் மிருதி பல்லைக் கடித்தாள்.
அதோடு சக்தியும் சுதிரும் கேலியாக சிரிக்க பெண்ணவளுக்கு அப்படியே பூமிக்குள் புதைந்து போய் விடலாமா என்று தோன்றியது.
செய்வதையும் செய்துவிட்டு எனக்கும் இதுக்கும் யாதொரு சம்மந்தமும் இல்லை என்பது போல அமர்ந்து இருப்பவனிடம் எதையும் கேட்கவும் முடியாது. கேட்டால் நான் வெறும் பாட்டு தானே போட்டேன் என்று சாதிப்பான்..
தேவையா இது என்று அப்படியே அமர்ந்து விட்டாள். புடவையை மட்டும் குடுத்து விட்டு தன் அன்னையின் மீது மொத்த கோவமும் திரும்பியது...! ஆனால் இப்பொழுது கோவத்தை கூட காட்ட முடியாமல் அவளின் வெட்கம் வேறு தடுக்க கம்மென்று அமர்ந்துக் கொண்டாள்.
இனி அவன் எந்த பாட்டு போட்டாலும் ரியாக்ஷனே காட்ட கூடாது என்று முடிவெடுத்தாள். அவள் முடிவெடுத்தால் மட்டும் போதுமா மிருதன் முடிவெடுக்க வேண்டாமா...?
எவ்வளவு படுத்த வேண்டுமோ அவ்வளவு படுத்த போறான் மிருதியை...! எங்கு அவள் தப்பிப்பாளோ தெரியவில்லை...