Notifications
Clear all

அத்தியாயம் 10

 
Admin
(@ramya-devi)
Member Admin

நானேன்பதிலே பல சிக்கல் இதில்

நின் நினைவுகள் வேறு இம்சையாய்...

 

மிருதனா தன்னை நெருங்கியது...! அவள் அதிர்ந்து போய் அவனை பார்க்க அவளின் பார்வையை சட்டை செய்யாமல் அவளின் கழுத்தில் தன் முகத்தை புதைத்துக் கொண்டவன் அவளின் இடையில் தன் கரத்தை மேலும் அழுத்தி பிடித்தான். அதில் அவளின் இடை கன்னிப் போக

“என்ன இவ்வளவு முரட்டு தனம்...!” அவளது வாய் முணுமுணுத்தது... கண்கள் இரண்டும் மூடிக்கொள்ள அவனது வாசம் அவளின் நாசியில் தடையின்றி ஏற, முகம் புதைத்தவனின் மீசை முடிகள் அவளின் கழுத்தை குத்தி கிழிக்க பெரும் அவஸ்த்தைக் கொண்டாள்.

மிக லேசாக அவனது முகத்தை அங்கே வைத்து தேய்க்க அவளது மொத்த உடலும் சிலிர்த்துப் போனது. வாடை காற்றில் அடித்துக் கொண்டிருந்த மழைச்சாரல் அவர்களையும் லேசாக தொட்டுவிட்டு போக குளிரில் அவளது தேகம் நடுங்கியது...

அதை போக்க அவனது கரங்களையும் உதடுகளையும் பயன்படுத்தினான் மிருதன்...! “எ... ன்ன என்ன பண்றீங்க...” என்று அவள் மிகவும் தடுமாறிப் போக மிருதனிடம் இருந்து எந்த சத்தமும் இல்லை. அவன் அவனது வேலையில் மூழ்க மிருதிக்கு தான் வெட்கம் பிடுங்கி தின்றது...!

அவன் அறிமுகப் படுத்தும் உணர்வுகளில் இவள் தொலைந்துபோக அடிவயிற்றில் ஆயிரம் பட்டாம்பூச்சிகள் சிறகடிப்பது போல உணர்ந்தாள். என்ன மாதிரியான உணர்வு... தாங்க முடியாமல் அவளது கால்கள் தடுமாற அவனது கரங்களே அவளை இறுக்கிக் கொண்டது...

“இன்னும் என்னை என்ன செய்ய போகிறாய் அன்பே அன்பே...!

என்னைக் கண்டால் என்னென்னவோ ஆகிறாய் முன்பே முன்பே..!” காதோரம் பாடல் எழ அதில் மொத்தமாய் சித்தம் தொலைந்துப் போனாள்.

மிருதன் கொடுத்த மெல்லிய தொடுகையால் பெண்ணவளால் அங்கே நிற்க முடியாமல் அவன் மீதே சரிந்து ஏடு போல இருந்தாள்.

அவளின் இந்த இணக்கம் மிருதனை சற்றே வன்மையை கூட்ட செய்ய, தன் பிடியை வன்மையாக அவளிடம் காட்ட,

சாரல் மழை இன்னும் வலுவாக பெய்ய அதில் சுதரித்தவள் சட்டென்று அவனிடம் இருந்து விலகப் பார்த்தாள்.

விலகியும் கொண்டாள். விலகிய பின்பு தான் தெரிந்தது அங்கே தான் மட்டும் இருக்கிறோம் என்று... இது நேரம் வரை சுவரில் சாய்ந்து கண் மூடி நின்று இருந்தது புரிய,

தன் தலையிலே அடித்துக் கொண்டாள். ‘இந்த வெண்ணைய்க்கு தான் நான் புடவையே கட்டுறது இல்லை. எப்போ பாரு மனசு பூரா அங்கே தான் இருக்கும்..’ முணகியவள் மீண்டும் அந்த சுவரில் சாய்ந்து அடித்த சாரலில் நனைய ஆரம்பித்தாள்.

புடவை கட்டினாலே அவளுள் பெண்மைக்கே உரிய ஓரு குறுகுறுப்பு உணர்வு தோன்றிவிடுகிறது...! அதிலிருந்து அவளால் மீளவே முடியாமல் இதோ இப்பொழுது போல அவளுள் பல கற்பதங்கள்(கற்பனைகள்) எழும். அதிலிருந்து வெளியே வர முடியாமல் அவளது நினைவுகளும் எதிர்பார்ப்பும் அங்கேயே வட்டமடிக்கும்.

மிருதன் தன் அருகிலே இருப்பது போலவும், அவனை போல இரண்டு பிள்ளைகள் அவளின் காலை சுற்றி வருவது போலவும் என பல ஏக்கங்களை தன் கற்பனை மூலமாகவே நடத்திக் கொள்வாள்.

அதுவும் அதெல்லாம் இந்த சேலை கட்டினால் தான். மற்றபடி ஜீன்ஸ் சேர்ட் போட்டால் அதென்னவோ வேலையை பற்றிய சிந்தனை மட்டுமே அவளிடம் தோன்றும். இது இவளுக்கு மட்டும் தானா இல்லை பருவ பெண்களுக்கு எல்லோருக்குமா என்று தெரியவில்லை.

மிருதி புடவை கட்டினால் என்றாள் மிருந்தனின் பார்வை சற்றே அவளிடம் தங்கி செல்லும். அந்த ஒற்றை பார்வை போதாதா அவளின் கற்பனைகளுக்கு சிறகு முளைக்க... இதோ இப்பொழுதும் அவளின் கற்பனைகள் பறந்து விரிய மீண்டும் கண்களை மூடி ஆழ்ந்து அவனது நெருக்கத்தை தனக்குள் விரித்துக் கொண்டாள்.

தன் மீது மிருதனின் கரங்கள் ஊறுவது போலவே இருக்க அந்த சுகமான நேசத்தில் இருந்து வெளியே வர பிடிக்காமல் இன்னுமின்னும் என்று ஆழ்ந்துப் போனாள். எல்லை மீறிய கரங்களின் செயலில் அவளது முகத்தில் தானாக ஒரு வெட்கம் பரவ, கால்களை நிலத்தில் அழுத்தமாக ஊன்றிக் கொண்டாள்.

மெல்ல அவளின் முகத்தில் மிருதனின் மூச்சுக் காற்றுப் பட, தானாக அவளது இதழ்கள் ஈரமாக்கிக் கொண்டாள். முகத்தில் படிந்த சூடான காற்று மெல்ல மெல்ல அவளின் இதழ் நோக்கி நகர “அம்மா...” என்று சுவரில் சரிந்துக் கொண்டாள்.

இதழ்களை வருடி பின் மெல்ல மெல்ல அவளின் இதழ்கள் வெண்மையில் கரைய அப்படியே சுவரோடு உள்ளே போய் விடும் அளவுக்கு சுவரில் சரிந்து நின்றாள். அந்த நேரம் மிருதனின் ஆண் வாடை மறந்து மெல்லிய பெர்பியூம் வீச, அவள் கொண்ட கற்பனை அனைத்தும் விலகி ஓட கண்களை திறந்து பார்த்தாள்.

எதிரில் அவளை பார்த்தபடி மிருதன் நின்றிருந்தான். “இவரு எப்போ இங்க வந்தாரு...” முணகியவள், அவனிடம் எதுவும் பேசாமல் தலையை குனிந்துக் கொண்டாள்.

அவனது பார்வை அவள் வன்மையாக் மீது அழுத்தமாக படிய, அதில் திகைத்துப் போய் அவனை ஏறெடுத்துப் பார்க்க அவன் கண்கள் போன திசையை கண்டு இவளும் போக ஒரு கணம் அதிர்ந்துப் போனாள்.

“காட்...” முணகியவள் சட்டென்று அவ்விடம் விட்டு விலக பார்த்தாள். ஆனால் அதற்கு மிருதன் விட வேண்டுமே...! ஒரு கரம் மட்டும் சுவரில் பதித்து அவளது விழியை மறைத்து நின்றான்.

வெட்ட வெளியில் கொட்டும் மழையில் இப்படி வெற்றுடம்பாய் நின்றவனின் தேகத்தில் அவளையும் மீறி அவளது பார்வை படிய,

“நோ மிரு...” என்று தன்னை தானே அடக்கிக்கொண்டு முதல்ல இங்க இருந்து போயிடனும் சொல்லிக் கொண்டவள் அவனை தாண்டி போக முடியாமல் தவித்துப் போய் அவனது முகத்தை பார்த்தாள்.

அவனது பார்வை இன்னும் அவளின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. மழையில் நனைந்து போய் அவள் கட்டி இருந்த புடவை அவளின் தேகத்தோடு ஓட்டிப் போய் இருக்க வளைவு நெளிவுகள் அப்பட்டமாய் படம் போட்டு காட்டுவது போல அவள் அணிந்து இருந்த புடவை ஆணவனுக்கு காட்டிக் கொடுக்க ஒரு நிமிடம் கூட அவளால் அவனின் எதிரில் இப்படி ஒரு கோலத்தில் நிற்க முடியவில்லை.

கால்கள் இரண்டும் தள்ளாடியது...! ஒரு பார்வைக்கே இந்த அக்கப்போரா என்று தோன்றியது. ஏதாவது பேசுவான் என்று எதிர் பார்க்க அவனோ வாயையே திறக்கவில்லை. பார்வையை திருப்பவும் இல்லை.

கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி யோசித்ததை எல்லாம் நிகழ்த்தி விடுவானோ என்று அடிவயிற்றில் பயம் பிறக்க, அவனது கரத்தை தள்ளிவிட்டு போக பார்த்தாள்.

இரும்பு கரத்தை எங்கிருந்து தள்ளிவிடுவது... அவளால் இயலவில்லை. மிருதனின் முகம் பார்த்தாள். கையை எடுங்க என்பது போல...

ஆனால் அவன் அதற்கெல்லாம் மசியாமல் அவளையே பார்க்க அதுவும் அவனது பார்வை பதிந்த இடம் எல்லாம் அத்துமீறி இருக்க சட்டென்று அவனுக்கு முதுகு காட்டி திரும்பிக் கொண்டாள்.

“எப்படி பார்க்கிறாரு பாரு...” என்று வாய் முணுமுணுக்க, அவளின் பின் கழுத்தில் சூடான மூச்சுக் காற்றுப் பட அவ்வளவு தான் அட்டென்ஷனில் நிற்க ஆரம்பித்துவிட்டாள்.

எங்கே தான் நெகிழ்ந்துப் போவது அவனது கண்களுக்கு தெரிந்து விடுமோ என்று உள்ளுக்குள் பயம் கொண்டாள். முதல் முதல் நெருக்கம். அவன் தொடும் முன்பே அவனது மூச்சுக்காற்று அவளை தீண்டி செல்ல அவளின் உடல் விரைத்துப் போனது...!

சற்று நேரத்துக்கு முன் வந்த கற்பனை கூட இந்த அளவுக்கு அவளை இம்சிக்கவில்லை. மெல்ல மெல்ல அந்த மூச்சுக்காற்று அவளை நெருங்கி வர வர விரித்து நின்ற உடல் மெல்ல மெல்ல தளர ஆரம்பித்தது..

பின் கழுத்தில் ஏற்பட்ட குறுகுறுப்பு இரு காது மடல்களின் பின்னேயும் கூசி சிலிர்க்க வைக்க பின் புற தேகம் எங்கும் அப்படி ஒரு சிலிர்ப்பு ஏற்பட்டது...! உச்சந்தலை வரை மிருதனின் மெல்லிய சுவாசக் காற்று சிலிர்க்க வைக்க அந்த உணர்வை தாங்க முடியாமல் தள்ளாடினாள்.

பட்டும் படமால் போன மூச்சுக் காற்றுக்கே அவள் இந்நிலைக்கு போய் விட்டாள். இதில் மிருதனின் முரட்டு தனமான தொடுகைக்கு உட்பட்டால் என்ன நிலைக்கு போவாளோ மிருதி..

மெல்லிய மூச்சுக் காற்று சட்டென்று வன்மையாக படிய, “நோ...” என்று அவளின் மனம் அலறியது...! “இது வேண்டாமே... ப்ளீஸ்...” அவளுக்கே கேட்காமல் அவளது வாய் உளறியது...! கண்கள் தானாக மூடிக் கொண்டது...!

மூச்சுக் காற்றின் வேகமும் வெப்பமும் தாங்கமால் அவள் தடுமாற, மிருதனின் முரட்டு இதழ்கள் அவளின் பின் கழுத்தில் பதிந்துப் போக மீண்டும் அவளது உடல் விரைத்தது. நடப்பது ஒருவேளை கனவா என்று திகைத்தாள். ஆனால் அவன் வந்தது உண்மையே...! மிருதனாகவே என்னை நெருங்குகிறானா? அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

மிருதனின் இதழ்கள் அழுத்தமாய் அவளின் பின் கழுத்தில் உரசி ஒவ்வொரு இடமாய் நகர, தேகம் மொத்தமும் சிலிர்த்து போய் நின்றாள். முதல் முதல் நெருக்கம் இருவருக்கும்...

அவனின் சூடான தேகம் அவளின் பின் புறம் படிய கண்களை திறக்கவே முடியவில்லை. திறந்தால் அத்தனையும் கற்பனையாகி விடுமோ என்று பயந்து கண்களை திறக்கவே இல்லை மிருதி. மொத்தமாய் உணர்வு குவியலாய் மாறி இருந்தாள்.

அவளின் உணர்வுகளில் இன்னும் தீப்பற்ற வைத்தான் மிருதன். அதுவரை அவளை தொடாத கரங்கள் மெல்ல மெல்ல அவளது இடையின் இரு பக்கமும் அழுந்தி பற்றிக் கொள்ள அவ்வளவு தான் அவனின் நெஞ்சோடு சாய்ந்தே விட்டாள்.

அதில் மிருதனின் முகத்தில் மெல்லிய சிரிப்பு வர அதை தவற விட்டுப் போனாள் மிருதி. கற்பனையில் மிருதன் மென்மையாக அவளின் இடையை வருடி விட, இங்கோ அதற்கு நேர்மாறாய் வன்மையாக இறுக்கிப் பிடித்தான். அந்த ஒற்றை தீண்டலில் அவனது வலிமை புரிய, அவளின் தேகம் இன்னும் ஏடு போல விரிந்துக் கிடக்க ஆரம்பித்தது...

பெண்ணவளின் இடையில் ஊறிய கரங்கள் ஒரு புறம் அவளை தின்று தீர்க்க, இன்னொரு புறம் ஆணவனின் இதழ்கள் அவளின் கழுத்தில் ஊர்ந்து செய்யாத சேட்டை எல்லாம் செய்ய தொடங்கியது...!

அவனது நெருக்கமும் அவனது விரல்களின் சேட்டையும், இதழ்களின் தேடலும் அவளை நிலைகுழைய செய்ய அவனிடம் முழு சரணாகதியில் நின்றாள் பெண். அதை உணர்ந்தவன் அவளை தன் விருப்பம் போல வளைத்துக் கொண்டான்.

எவ்வளவு நேரம் அப்படியே நின்றார்களோ தெரியவில்லை... அவளை தன் புறமாக திருப்பினான் மிருதன். முதலில் மறுத்தவள் பின் அவனது அடாவடியில் அவன் புறமாக திரும்பி அவனை ஏறிட முடியாமல் அவனது நெஞ்சில் முகத்தை பதித்துக் கொண்டாள். அவளின் இதழ்கள் அவனது நெஞ்சில் பதிந்து போக அதை உணர்ந்தவன் அவளின் முகத்தை தன் நெஞ்சோடு இன்னும் இறுக்கிக் கொண்டான்.

குளிர்வாடை காற்று இதமாக வீச இவர்களும் ஒருவரை ஒருவர் பின்னிக்கொண்டு நின்றார்கள். அவனது கரம் அவளின் லேசாக அத்துமீற முதலில் அனுமதிக் கொடுத்தவள் போக போக அவனது கரத்தின் தேடலை ஏற்க முடியாமல் தளர்ந்துப் போனாள். முக்கிமாக அவனது வன்மையும், முரட்டு தனமும்.

இறுக்கி பிடித்த இடங்களில் எல்லாம் வலிக்க ஆரம்பித்தது...! ஆனால் அந்த வலியும் அவளது உள்ளம் ஏற்க தொடங்க திகைத்துப் போனாள்.

அவளின் காதோரம் சரிந்து மிருதன் கேட்ட கேள்வியில் அவளின் மொத்த உணர்வும் தீப் பட்டது போல வடிந்துப் போக விழிகளில் ஏறிய சிவப்புடன் அவனை ஏறிட்டாள்.

அவனது கரம் பட்டு கலைந்து போய் இருந்த சேலையை சரி செய்துக் கொண்டவள் அவனின் நெஞ்சில் கரம் வைத்து தள்ளி விட்டு வேகமாய் தன் அறைக்குள் நுழைந்து அழுத்தமாக கதவை சாற்றிக் கொண்டாள் உச்ச பட்ச வேதனையுடன்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 29, 2025 11:02 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top