நாட்கள் பல கடந்துப் போனாலும்
கடந்து செல்ல முடியா நிலையிலே இருக்கிறேன்...!
வீட்டுக்கு போக மனமே இல்லை. தாய் தந்தையின் ஊட்டிக்கு போகலையா என்ற கேள்வியை எதிர்நோக்க மனதில் வலு இல்லாதாதால் மத்தியத்தில் இருந்து இப்படியே சுற்றிக் கொண்டு இருக்கிறாள். கையில் இருந்த போனை பார்த்தாள்.
அதையும் அனைத்துப் போட்டாகி விட்டது. வீட்டிலும் இருக்கவில்லை. சோ என்னை காண்டேக்ட் பண்ண இருக்க எல்லா சூழலையும் அவள் முடக்கிப் போட்டு விட்டாள். ஆனாலும் அலைப்பாயும் நெஞ்சத்தை அடக்க முடியவில்லை.
மிருதனோடு போனா தான் இந்த ட்ரிப் உனக்கு இனிக்குமா ஏன் மத்தவங்க மாதிரி பேருந்துல போனா என்னவாம்... என்று அவளின் மனதே அவளிடம் முரண்டிக் கொண்டு இருந்தது.!
ப்ச் எந்த சிந்தையும் வேண்டாம்... என்று அப்படியே சீட்டில் தலை சாய்த்து படுத்து விட்டாள். ஒர்க்கிங் டேய் என்பதால் அதிகம் கும்பல் இல்லை. சீட்டுக்கு ஒருத்தர் இரண்டு பேர் தான். அதனால் இவள் அமர்ந்து இருந்த தனி சீட்டில் பயமில்லாமல் கண்களை மூடிக் கொண்டாள்.
விழியோரம் நீர் கசிய பார்க்க, அதை அடக்க பெரும் பாடு பட்டுப் போனாள். அவளையும் மீறி வழியும் கண்ணீரை துடைக்க கரங்கள் எழ, இல்லை இந்த கண்ணீர் எனக்கு வேணும்... என்று அவளது கன்னம் அடம் பிடித்ததோ என்னவோ கண்களில் வழிந்த ஈரத்தை கன்னம் பதித்துக் கொண்டது...!
ஒவ்வொரு முறையும் மிருதன் எடுத்து எரிந்து பேசும் வார்த்தையில் மனம் வாடி வதங்கிப் போய் மண் விடுத்த வேராய் போனாள்.
எப்படியும் இந்நேரத்துக்கு கிளம்பி இருப்பார்கள் என்று அவளின் மனம் யோசிக்க,
“ப்ச்...” என்று அடக்கிக்கொண்டாள்.
ஏசிக் காற்றில் வழிந்த கண்ணீர் காய்ந்து தன் சுவட்டை மறைத்து இருந்த நேரம் அவளை அருகில் யாரோ அமரும் அரவம் கேட்க வேகமாய் கண்களை விரித்து பார்த்தாள். அவளின் இரு பக்கமும் சுதிர் சக்தி அமர, திகைத்துப் போனாள்.
“நீங்க இங்க எங்கடா...? இங்க என்ன பண்றீங்க?” எழுந்து சரியாக அமர்ந்தாள்.
“உன்னை கூப்பிட்டு போக தான். மிருதன் வெளியே வெயிட் பண்றான். வா போகலாம்” என்றனர்.
“எனக்கு ஊட்டிக்கு வர விருப்பம் இல்ல. நீங்க போயிட்டு வாங்க” என்றாள்.
“ப்ச் பிடிவாதம் பிடிக்காத மிருதி... அவனே இறங்கி வந்து இருக்கான்.”
“அப்படி யாரும் பெரிய மனசு பண்ணி எனக்கு இறங்கி வர வேண்டாம் சக்தி. உண்மையாவே எனக்கு ஊட்டி வர விருப்பம் இல்ல. நேரத்தை வீண் பண்ணாம கிளம்புங்க..” என்றாள் பிடிவாதமாய்.
“இப்போ நீ வரலன்னா பாதி வழியில போயிட்டு இருக்க இரண்டு பஸ்ஸும் ரிட்டேர்ன் ஆகிடும் மிரு” சுதிர் சொல்ல,
“எப்படிடா இப்படி எல்லாம் பிளாக்மெயில் பண்றீங்க...” பல்லைக் கடித்தாள்.
“பின்ன உங்கள மாதிரி லூசுங்களை வச்சுக்கிட்டு நாங்க ரெண்டு பெரும் என்ன பண்றது... முதல்ல கிளம்பு” என்றனர்.
“எது இப்படியேவா..?” அதிர்ந்து போனாள்.
“பின்ன வீட்டுக்கு போய் ஆறாமர கிளம்பி வர்றியாக்கும்... அதுக்குள்ள வெளியே நிக்கிறவன் மனசு மாறி எல்லாத்தையும் கேன்சல் பண்ணி போட்டுட்டு போயிடுவான்... வாம்மா உனக்கு புண்ணியமா போகும்” என்று அவளை பிடித்து இழுத்துக் கொண்டு போனார்கள்.
“டேய் என்னோட ஸ்கூட்டி இருக்குடா.. ட்ரெஸ் எல்லாம் ஒண்ணும் எடுக்காம எப்படிடா...” அவள் தடுமாற,
மிருதனின் கார்ட்ஸில் ஒருத்தர் வந்து அவளிடம் அவளின் ட்ரவல் பேகை கொடுத்துவிட்டு அவளது ஸ்கூட்டி சாவிக்காக கை நீட்டினான்.
அதில் பல்லைக் கடித்தவள் கடுப்புடன் சாவியை கொடுத்துவிட்டு பையை வாங்கி மிருதன் இருந்த காரின் டிக்கியில் போட்டுவிட்டு முன்னால் வர பின் பக்கம் சுதிரும் சக்தியும் அமர்ந்துக் கொண்டார்கள். முன் பக்கம் ட்ரைவர் சீட்டுக்கு பக்கத்தில் இருந்த சீட்டில் மிருதன் சேட்டை சாய்த்து படுத்து இருந்தான்.
“கடுப்பேத்துறானுங்களே...!” கடுப்புடன் வண்டியை ஸ்டார்ட் செய்து ஊட்டிக்கு மேப்பை போட்டு விட்டு ஹைவேஸ் நோக்கி வண்டியை விட்டாள்.
அதன் பிறகு வண்டி ஓட்டுவதில் கவனத்தை வைக்க எந்த தடுமாற்றமும் இல்லாமல் வண்டியை ஓட்டினாள் மிருதி. போகும் பொழுது அப்பா அம்மாவுக்கு அழைத்து சொல்ல,
“மிருதன் தம்பி வந்து சொல்லுச்சு தங்கம். கவனமா போயிட்டு வா...” என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்கள் இருவரும்.
ஒரு முறை மிருதனை திரும்பி பார்த்தாள். அவன் எந்த சலனமும் இல்லாமல் படுத்து இருக்க பெருமூச்சு விட்டவள் அப்படியே பின்னாடி திரும்பி பார்க்க, பல்லைக் கடித்தாள்.
“டேய் என்னடா பண்றீங்க ரெண்டு பேரும்...? வண்டியில போயிட்டு என்ன காரியம்டா செய்யுறீங்க”
“ப்ச் இதெல்லாம் கண்டுக்காத மிரு...” என்று இருவரும் தண்ணி அடித்துக் கொண்டு இருந்தார்கள்.
“கிரகம்டா உங்களோட...” கடுப்படித்தவள் வண்டியை ஓட்டுவதில் ஒட்டு மொத்த கவனத்தையும் வைத்தாள். தொடர்ந்து இரண்டு மணி நேரம் ஓட்டிக் கொண்டு இருக்க சோல்டர் ரெண்டும் லேசாய் வலி எடுக்க சாலை ஓரம் இருந்த தேநீர் விடுதியில் நிறுத்தினாள்.
பின்னால் இருந்த இருவரும் வேற உலகில் இருக்க, முன் இருக்கையில் இருந்தவன் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்க யாரையும் கலைக்காமல் தான் மட்டும் சூடாக ஒரு தேநீரை குடித்து விட்டு சாப்பிட கொஞ்சம் ஸ்நேக்ஸ் வாங்கிக் கொண்டு வந்தாள். அதன் பிறகு இன்னும் ஒரு மணி நேரம் ஓட்டினாள்.
அதற்குள் அவள் கொஞ்சம் தளர்ந்து விட, ஹாயாக தூங்கி எழுந்த மிருதன் ஓட்டுனர் இருக்கைக்கு மாறிக் கொண்டான். பெட்ரோல் போட்டு வண்டியை நிரப்பி விட்டுட்டு அப்படியே ஓய்வறைக்கு சென்று விட்டு திரும்பி வந்தவள் தன் இருக்கையில் மிருதன் இருக்க கண்டு அவன் இருந்த இருக்கைக்கு சென்று அமர்ந்து விட்டாள்.
அவன் தூங்கவும் பாடலை போடாமல் இருந்தவள் இப்பொழுது இடைக்காலத்து பாடல்களை போட்டு விட்டாள்.
“ஏகாந்த வேளை...
இனிக்கும்.
இன்பத்தின் வாசல்...
திறக்கும்ஆரம்ப பாடம்
நடக்கும்
ஆனந்த கங்கை
சுரக்கும்..” பாடல் ஒலிக்க திரும்பி மிருதியை ஒரு பார்வை பார்த்தான் மிருதன்.
அதில் ஜெர்க்காகி வேறு பாடலை ஒலிக்க விட்டாள்.
“நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே
நான் நிகழ்வதுவா கடந்துவா பதில் மொழியே...
உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை
தண்ணீர் கமலம் தானா...?
முகம் காட்டு நீ முழு வெண்பனி
ஓடாதே நீ என் எல்லையே...
இதழோரம் சிறு புன்னகை நீ காட்டடி
என் முல்லையே...!” என்று கொஞ்சி பாடல் ஒலிக்க அதற்கும் மிருதன் முறைத்துப் பார்க்க அட போங்கடா என்று சலித்தவள்,
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்ல... நான் தான்டா என் மனசுக்கு ராஜா...” என்று பாடலை போட்டு விட்டாள்.
அதில் கொண்டாட்டமாகி தண்ணியடித்து மட்டையாகி இருந்த இருவரும் தலையில் தண்ணீர் பாட்டிலை வைத்துக் கொண்டு உட்கார்ந்தபடியே ஆட ஆரம்பிக்க அதற்கும் மிருதன் அவளை முறைத்து வைக்க,
“அடச்சை... நான் பாட்டே கேட்கல...” என்று ஸ்டிரீயோவை ஆப் பண்ணி போட்டுவிட்டாள்.
ஹெட் சேட்டை எடுத்து காதில் மாட்டியவள் வெளிப்புறத்தில் பார்வையை பதித்துக் கொண்டாள். அந்த நேரம் அவள் ஹெட் சேட்டை தாண்டிவெளியில் இருந்து ஒரு இசை கேட்க வேகமாய் தன் ஹெட்செட்டை ரிமூவ் செய்ய,
“விழி அதில் விழுவேனா
இனி உன்னை விடுவேனா
விரலுடன் அட விரல்
கடத்திய காதல மறப்பேனா
உடன் வருவேனா
உயிர் தொடுவேனா
இலை நுனியில ஒரு துளியென
தவிக்கிறேன் சரிதானா...?
நினைக்கும் நொடி எல்லாம்
அருகில் இருக்கணும்...
அருகில் இருக்க
நீ இறுக்கி பிடிக்கணும்...” என்று காதில் விழ பக்கென்று மிருதனை திரும்பி பார்த்தாள். அவ்விடத்தில் ஒரு ரியாக்ஷனும் இல்லை... இவள் தான் குழம்பிப் போனாள். அந்த பாடலில் உள்ள வரிகளை கேட்டு...
“வாவ் பாட்டுக்கு பாட்டு போட்டி சூப்பரா கலை கட்டுது இல்ல மச்சான்...” என்று சக்தி சுதிரிடம் கேட்க,
“ஆமா மச்சான்... என்ன பீலிங்கா பாட்டு போகுது.. பக்கத்துலையே இருக்கனுமாம்.. பக்கத்துல இருக்குறதோட சும்மா இருக்கம இறுக்கி அணைக்கனுமாம்..” என்று தண்ணி போதையில் இருவரும் புலம்பிக் கொண்டு வர, அதை பெரிதாக எடுத்துக் கொள்ள மனம் வரவில்லை என்றாலும் இருவரும் சொல்லிய விசயத்தை கேட்டு மிருவுக்கு கன்னம் சூடாகிப் போனது.
மிருதன் அதற்கும் எந்த ரியாக்ஷனும் கொடுக்காமல் அவன் பாட்டுக்கு வண்டியை ஓட்டிக் கொண்டு இருந்தான். ஊட்டியை நோக்கி பாதி தூரம் கடந்து வந்தாச்சு... பொள்ளாச்சி வரவும் அங்கே இருந்த கெஸ்ட் ஹவுசில் இரவு தங்கிவிட்டு காலையில் மலை ஏறலாம் என்று முடிவு செய்து மிருதனின் கெஸ்ட் ஹவுசுக்கு வந்து சேர்ந்தார்கள் நால்வரும்.
அப்பொழுதே இரவு ஏழு ஆகி இருக்க குளிர் வாடைக் காற்று வீசத் தொடங்கியது...! சுதிர் சக்தி இருவரும் தலைக்கு தண்ணீரை ஊற்றி தெளிவாகி வர, மிருதனும் மிருதியும் பயண களைப்பு தீர குளித்து வந்தார்கள்.
வந்த மிருதியை பார்த்து இருவரும் சிரிக்க தொடங்கினார்கள்.
“டேய் பன்னிங்களா சிரிச்சீங்க... கொன்னுடுவேன்டா” என்று பல்லைக் கடித்தாள்.
“பின்ன எப்பொழுதும் மாடன் மங்காத்தா மாதிரி சேர்ட் ஜீன்ஸ்ன்னே சுத்துவ... இப்ப இப்படி புடவையில பார்க்க சிரிப்பு வரமா வேற என்ன வருமாம்” என்று நக்கல் பண்ணி சிரிக்க தலையை துவட்டிக் கொண்டே கூடத்துக்கு வந்த மிருதன் மிருவை புருவம் ஏற்றி மேலிருந்து கீழ் வரை ஒரு பார்வை பார்த்தவன், தோளைக்குழுக்கிவிட்டு துண்டை அவள் மீது வீசிவிட்டு இருக்கையில் போய் பொத்தென்று அமர்ந்து விட்டான்.
தன் மீது விழுந்த ஈர துண்டில் மிருதனின் ஆண்மை வாசம் வர உள்ளுக்குள் பெரும் உணர்வுக் குவியல் எழுந்தது... இதென்ன இப்படி பண்றான்.. என்று எண்ணியபடியே தன் தாய்க்கு போன் போட்டாள் கடுப்புடன்.
“ம்மா...” என்று எடுத்த எடுப்பிலே கத்த,
“சாரி செல்லம்.. நீ சொன்னாலும் கேட்க மாட்டேங்குற அதான். இப்படி உன்னை பழிவாங்க ஒரு சான்ஸ் கிடைக்கவும் யூஸ் பண்ணிக்கிட்டேன்” என்றார் அவர் சிரிப்புடன்.
“ம்ம்மா...” பல்லைக் கடித்தாள்.
“பின்ன கோயிலுக்கு வந்தா கூட ஜீன்ஸ்லயே தானே வர்ற, புடவை தான் கட்டல... அட்லீஸ்ட் சுடியாவது போட போடலாம்ல... அதையும் செய்ய மாட்டிக்கிற. அது தான் என் மனம் போல பழி வாங்கிட்டேன். என்ன ஒண்ணு பக்கத்துல இருந்து நீ புடவையில இருக்குற அழக பார்க்க முடியல... இட்ஸ் ஓகே சக்தியையும் சுதிரையும் போட்டோ எடுத்து அனுப்ப சொல்லி இருக்கேன்.” என்று அவர் சொல்ல,
“வந்து உங்களை வச்சுக்குறேன்... போறது ஊட்டிக்கு... இதுல புடவையா வச்சு இருக்கீங்க.. மாத்திக்க எமர்ஜென்சிக்கு ஒரு ஜீன் சேர்ட் கூட வைக்கல...” சுதாவை கடித்து துப்பியவள் பட்டென்று போனை வைத்து விட்டாள்.
கடுப்பாக வந்தது...! மிருதனின் முன்பு புடவையுடன் ஐயோ நினைச்சாவே உள்ளுக்குள் என்னவோ பண்ணியது... அங்கு உட்கார முடியாமல் எழுந்து உள்ளே போக சுதிரும் சக்தியும் விடவில்லை.
“நீ போயிட்டா போரடிக்கும் உட்காரு...” அவளை பிடித்து வைத்துக் கொள்ள அதன் பிறகு அவர்களுடனே நேரம் சென்றது. சமைத்து வைத்து விட்டு அவர்கள் நால்வரையும் பணியாளர்கள் அழைக்க,
ஒருவருக்கு ஒருவர் பேசியபடி பரிமாறி சாப்பிட ஆரம்பித்தார்கள். மிருதன் அப்பவும் அமைதியாக இருந்தான். எதுவும் பேசவில்லை. ஆனால் அவர்களை விட்டு தனியாகவும் போகவில்லை.
நேரத்திலே அனைவரும் படுக்க போய் விட மிருதிக்கு தூக்கம் வரவே இல்லை புது இடத்தில். எழுந்து வெளியே வந்தாள். அங்கே முன் பக்கம் மிருதன் மட்டும் இருளை வெறித்துக் கொண்டு இருந்தான்.
அவனிடம் போக மனம் சொன்னாலும் போகாமல் வேறொரு பக்கம் கதவை திறந்துக் கொண்டு வெட்ட வெளிக்கு சென்றாள்.
மெல்லிய சாரல் போட மனம் அந்த பொழுதில் ஏகாந்தமாய் இருந்தது. ஏனோ காரில் வரும் பொழுது கேட்ட பாடல் மீண்டும் காதில் ஒலிப்பது போல இருக்க, அவளின் வாயும் அந்த பாடலை முணுமுணுத்தது..
“ஏகாந்தவேளை இனிக்கும்...
இன்பத்தின் வாசல் திறக்கும்...
ஆரம்ப பாடம் நடக்கும்...
ஆனந்த கங்கை சுரக்கும்...” என்ற நேரம் அவளின் இடையோரம் முரட்டு கரம் ஒன்று படிந்தது... திகைத்துப் போய் திரும்பி பார்க்க விழிகளில் ஏறிய சிவப்புடன் மிருதன் நின்றிருந்தான்.
அவனது கண்களில் இருந்த சிவப்பு உள்ளுக்குள் ஒரு பயத்தை கொடுக்க, அதை விட அவளின் இடையில் படிந்து இருந்த அவனது முரட்டு கரத்தில் உள்ளுக்குள் பெரும் பிரளையமே உண்டானது பெண்ணவளுக்குள்...