நீண்ட நாட்களாக அவன் தேடிய நிம்மதியான தூக்கம் அவனை வந்து சேர்ந்தது. எந்தவித அலைப்புருதலும் இல்லாமல். கேஸ் பற்றிய எந்த சிந்தையும் இல்லாமல் நிச்சிந்தையாக தூங்கினான்.
அவனது தொடுகையில் தூக்கம் கலைந்தவளுக்கு அதன் பிறகு தூக்கம் என்பதே இல்லாமல் போனது. விடியும் வேளையில் தான் தூக்கம் அவளை தழுவியது. நிம்மதியாக தூங்கி எழுந்தவன் ஜாகிங் சென்றுவிட்டான்.
அவன் வந்த பின்பும் கூட அவள் எழுந்திருக்கவில்லை. அவ்வளவு அயர்வு அவளிடம். அவனும் அவளை தொந்தரவு செய்யாமல் கிளம்பி அலுவலகம் சென்றுவிட்டான்.
விடிந்து வெகு நேரம் ஆகிய பின்பே எழுந்தவள் நெஞ்சோடு நழுவிய போர்வையை இறுக்கிப் பிடித்துக் கொண்டு சுற்றிலும் பார்க்க அவனது அரவம் எதுவும் இல்லை.
‘வர்றது, சாப்பாடு வாங்கிட்டு வந்து சாப்பிடுறது, கேட்டு கேள்வி இல்லாம எல்லாம் செய்யிறது, அப்புறம் கிளம்பிடுறது.’ முணகியவளுக்கு கோவம் கோவமாய் வந்தது அவனது செயல்களைக் கண்டு. ஆனாலும் அதை அவனிடம் வாய் விட்டு கேட்க ஒரு மாதிரி இருக்க இவளும் அமைதியாகிப் போனாள்.
எழுந்து அவளது வேலைகளைப் பார்க்க, ஊரிலிருந்து போன் வந்தது. விக்ரமசேனனின் அம்மா தான் அழைத்து இருந்தார்கள்.
“அம்மாடி நான் தான் அத்தை பேசுறேன்.” என்று பேச, இவளுக்கு யாரு என்றே தெரியவில்லை.
“அத்தையா?” என்று இழுத்தாள்.
“நான் தான்மா விக்ரமோட அம்மா தனம். உன் மாமியார்.” என்று அவர் அவரது பெயரையும், உறவு முறையையும் சொல்ல, அதன் பின்பே நினைவுக்கு வந்தது.
“ஹாங். அத்தை சொல்லுங்க. எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா?” என்று படபடவென்று கேட்டாள்.
“எனக்கென்னம்மா நான் நல்லா இருக்கேன். நீ எப்படி இருக்க? உன்னை அவன் எப்படி பார்த்துக்குறான்?” என்றார் ஆதரவாக.
“நான் நல்லா இருக்கேன். என்னை நல்லா பார்த்துக்குறாங்க அத்தை. உங்களுக்கு உடம்பெல்லாம் பரவாயில்லையா? அங்க ஊர்ல எல்லோரும் எப்படி இருக்காங்க?”
“இங்க நாங்க எல்லோரும் நல்லா இருக்கோம். உன்னை நினைச்சா தான் பக்குன்னு இருக்கு. விக்ரம் உன்னை நல்லா பார்த்துக்குறான் தானே?” தயக்கமாய் கேட்டார்.
“ஏன் அத்தை இப்படி கேக்குறீங்க?” அவளுக்கே ஒரு மாதிரி ஆகிப்போனது.
“இல்லம்மா. கையில ஒண்ணுமே நீ எடுத்துட்டு போகல. உடுப்பு தேவையான அடிப்படை சாமான் கூட அவன் வாங்கிப்போட்டு இருக்க மாட்டான். அது தான். நாங்க வந்தாலும் அவனது வேலைக்கு இடைஞ்சலா இருக்குன்னு வர வேணான்னு சொல்லிட்டான் அது தான் மா” என்றார்.
அந்த பாசமான தாயின் அன்பு புரிய, “அவரு என்னை ரொம்ப நல்லா பார்த்துக்குறாரு அத்தை. நீங்க என்னை பத்தி கவலை படாதீங்க” என்றவள் பின்னாடி ஏதோ அரவம் கேட்க திரும்பி பார்த்தாள். அங்கே கைகளை கட்டிக்கொண்டு சுவரில் சாய்ந்த படி அவளை வைத்த கண் வாங்காமல் பார்த்துக்கொண்டு இருந்தான் விக்ரமசேனன்.
அவனது பார்வையில் இவளுக்கு பக்கென்று இருக்க பேசியபடியே நகர்ந்து போகப் பார்த்தாள். ஆனால் அவளால் ஒரு அடியை கூட எடுத்து வைக்க முடியவில்லை. காலில் ஏதோ இரும்பு சங்கிலி பிணைத்து இருப்பது போல கனத்தது.
குத்தூசியாய் குத்தி துளையிடும் அவனது பார்வையில் தேகம் எங்கும் கூசிப்போக, மெல்ல நகர்ந்து அறைக்குள் நுழைந்துக்கொண்டாள். அவரிடம் பேசியபடியே எதார்த்தமாக கண்ணாடியை பார்க்க அவளது தேகம் எங்கும் இன்னும் கூசிப்போனது.
அப்பொழுது தான் குளித்து முடித்தவள், வீட்டில் யாருமில்லை என்ற உணர்வில் பாவடையை மார்பில் முடிந்தபடி தலையை துவட்ட ஆரம்பித்தாள். அந்த நேரம் அவளது போன் அடிக்க அது கூடத்தில் இருக்கவும் எடுத்து பேசியபடியேக் கூந்தலைக் கோதிக்கொண்டு இருந்தாள். ஆனால் இவன் இப்படி வருவான் என்று தெரியாதவள் அவள் பாட்டுக்கு போன் பேசிக்கொண்டே இருந்தாள்.
அப்பொழுது கூட தான் இருக்கும் நிலை அவளுக்கு உறைக்கவில்லை. அவனது பார்வையின் கூர்மையை தாங்க முடியாமல் தான் உள்ளே வந்தாள்.
உள்ளே வந்த பின்பு கண்ணாடியை பார்த்த பிறகு தான் அவன் ஏன் அப்படி தன்னை பார்த்தான் என்றே தெரிந்தது.
“மடச்சி... மடச்சி....” என்று தலையில் அடித்துக் கொண்டவள், “அத்தை நான் கொஞ்ச நேரம் கழித்து பேசுகிறேன்.” என்று வைத்துவிட்டு வேகமாய் தன் சேலையை எடுத்து உடுத்த ஆரம்பித்தாள்.
வந்தவள் கதவை தாழிட்டு வந்து இருக்கலாம். அதையும் செய்யாமல் வர, விக்ரமசேனன் உள்ளே நுழைந்தான் அழுத்தமான காலடியோடு. அதில் அவளது நெஞ்சம் படக்கு படக்கு என்று அடித்துக்கொள்ள அதிர்ந்து போய் அவனை திரும்பி பார்த்தாள்.
அவளது பார்வையை எதிர்கொண்டபடியே அவளை நெருங்கி வந்தான். அவனது நெருக்கம் அவளுக்குள் பெரும் பிரளயத்தை உண்டாக்க தவித்துப் போனாள்.
அவளது கண்களில் தெரிந்த படபடப்பில் அவளை இன்னும் நெருங்கியவனுக்கு அவளை சீண்டிவிட வேண்டும் போல தோன்றியது. அவன் முகத்தை அவளுக்கு இன்னும் நெருக்கமாக கொண்டு வர அவனது அருகாமை அவளுக்கு பெரும் தகிப்பைக் கொடுத்தது. அந்த உணர்வுகளை தாங்க முடியாமல் கண்களை அழுத்தமாக மூடிக்கொண்டாள்.
உதடுகள் வெளிப்படையாகவே நடுங்க ஆரம்பித்தது. இரவில் அவன் காட்டும் வன்மையிலே சற்று ஓய்ந்து தான் போய் இருந்தாள். இப்பொழுது சற்றே குளிக்கவும் அந்த அலுப்பு போய் இருந்தது. ஆனாலும் அவளுக்குள் மெல்லிய பயம் இருந்தது.
தன் மீசை முடியை கொண்டு அவளை கீறிவிட பார்த்தவன், “சாப்பிட வா.” என்று சொல்லிவிட்டு பின்னால் நகர்ந்து போய் விட அவனது நெருக்கம் விலகிய பின்பு தான் கண்களை திறந்தாள்.
அவன் விலகி அறைக்கு வெளியே செல்லவதைப் பார்த்தவளுக்கு ஆசுவாசமாய் இருந்தது. ஆனால் அவன் வெளியே போகாமல் கதவை அழுந்தி தாழிட்டு விட்டு புயல் வேகத்தில் அவளை நோக்கி வந்தவன் பகல் பொழுதில் அவளை முழுவதுமாக கொள்ளையிட ஆசை எழ அதை அடக்க முடியாமல் அவளிடமே வந்து சேர்ந்தான்.
அவன் இப்படி அதிரடியாக திரும்பி வருவான் என்று எதிர்ப்பார்க்காதவள் திகைத்துப் பார்க்க, அவளின் காதோரம் சரிந்து,
“இருட்டுல ஒண்ணுமே தெரியலடி...” என்று சொன்னவன் அதன் அர்த்தத்தை அவளுக்கு உணர்த்த ஆரம்பிக்க தவித்து போனாள் நறுமுகை.
மென்மையான முத்தம் கொடுத்து அவளை தழுவி கொள்ள ஆரம்பித்தவனுக்கு சுத்தமாக பொறுமை இல்லாமல் எப்பொழுதும் போல அவனது வன்முறை வெளிப்பட, அதுவும் இன்று அவனது வேகம் மிக அதிகமாக இருந்தது. உடலில் ஏற்பட்ட இரகசிய காயங்களில் சிலிர்த்துப் போனவள் அவனுடைய விருப்பத்துக்கு விட்டுக்கொடுத்து நாணத்தைச் சற்றே விலக்கி வைத்து அவனை தன்னில் தாங்கிக்கொண்டாள்.
அலைப்புருதல் எதுவும் இல்லாமல் அவனது போக்கில் அவளிடம் தன் தேவையைப் பூர்த்தி செய்துக்கொண்டவன் அவளையும் அழைத்துக்கொண்டு மீண்டும் ஒரு குளியல் போட்டுவிட்டு சாப்பிட அமர்ந்தான்.
அவனுக்கு பரிமாறிவிட்டு தானும் அமர்ந்து சாப்பிட்டவளிடம் ஒரு தலையசைப்புடன் உண்டு எழுந்து சென்றுவிட்டான்.
அவளுக்கு அவனின் அந்த ஒரு தலையசைப்பே நிறைவைக் கொடுக்க மீண்டும் படுத்துத் தூங்க ஆரம்பித்தாள். சிறிது நேரம் கழித்து எழுந்தவள் தன் மாமியாருக்கு போன் செய்து பேசினாள்.
“எப்போ அத்தை இங்க வருவீங்க?”
“நாங்க வந்தா அவனோட வேலை கெட்டுப் போயிடும்னு வரவேணாம்னு சொல்லிட்டான் ம்மா.” என்றார் அவர்.
அதைக்கேட்டு பெரிதும் அதிர்ந்து தான் போனாள். “அப்போ நீங்க இங்க வந்ததே இல்லையா?”
“எங்க? முதல் முறையா ஒரு ஊர்ல வந்து பால் காய்ச்சியதோடு சரி. இதோட மூணு நாலு ஊரு மாறிட்டான். இன்னைக்கு வரை நாங்க அந்த வீடுகளுக்கு வந்ததே இல்லை.” என்றார் ஒரு பெருமூச்சோடு.
“ஏன் அத்தை அப்படி?”
“என்னத்தம்மா சொல்றது. இவன் வேலைன்னு வந்துட்டா எதையுமே பார்க்க மாட்டான். கடமை கடமைன்னே இருப்பான்.”
“ஓ...!”
“ம்ம்ம், அவனோட வேலைக்கு எந்த விதமான இடைஞ்சலும் வரவிட மாட்டான். நாங்க வந்தா அவன் எங்களை கவனிக்கணும்னு வரவே விட்டது இல்லை. அவன் மட்டும் ஆறு மாதத்துக்கு ஒரு முறை எங்களை வந்து பார்த்துட்டுப் போவான்” என்றார்.
“ம்ம்ம்” என்று கேட்டுக்கொண்டாள்.
“அவன் போடுற உடுப்பு அவனுக்கு ஒரு பகுதி வேலைதான்னு புரியமாட்டிக்கிது. அதை தாண்டி எவ்வளவோ இருக்குன்னு சொன்னா காதுலையே வாங்க மாட்டான். அவனை பொறுத்தவரை ஒவ்வொரு நொடியும் காவலனா இருக்க தான் ஆசை படுறான்.”
“ஏற்கனவே இரண்டு முறை மூக்கில் இருந்து இரத்தம் வந்திடுச்சு. ரொம்ப பிரஷர் எடுத்துக்குறான்னு மேலதிகாரி சொல்லியும் அவன் கேட்க மாட்டிக்கிறான். அவனது மூளை முழுதும் வேலை வேலைன்னே இருக்கு. இந்த சமூகத்தைச் சீர்குழைக்கும் யாரையும் தட்டி கேட்க அவனுக்கு முழு அதிகாரம் உள்ளதாய் ஒரு நினைப்பு.”
“அவனால எங்களுக்கு எந்த இடைஞ்சலும் வர கூடாதுன்னு நினைப்பான். அதனால தான் உன்னையே கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்னு சொன்னான்.” என்று தனம் சொன்னவுடன் உள்ளுக்குள் சுருக்கென்று ஒரு வலி எழுந்தது.
“மருத்துவர் தான் உனக்கு ஒரு மாற்றம் வேணும்னு சொல்லி கல்யாணம் கட்ட வற்புறுத்தினார். அதனால தான் அவனோட மனசு கொஞ்சம் மாறுனது. இதையெல்லாம் நினைச்சி என் மகனை வெறுத்துடாதடா.” என்றார் தயக்கமாய்.
அவளுக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை அமைதி காத்தாள்.
“இதெல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது தங்கம். அவனோட வேலையை எந்த காலத்துலையும் விட மாட்டான். அதே போல உன்னையும் விட மாட்டான். நீங்க ரெண்டு பேரும் இன்னும் நூறு வருடம் நல்லா இருப்பீங்க” என்றார் ஆசீர்வாதமாய்.
நறுமுகைக்கே அவனது குணம் ஓரளவு தெரியும் தான். ஏனெனில் அவனது தனிப்பட்ட பேட்டி ஒருமுறை வந்து இருந்தது ஒரு பத்திரிக்கையில். அதை படித்து பார்த்தவளுக்கு அவனது குணம் ஓரளவு புரிந்து தான் இருந்தது. அதோடு அவளின் தந்தை வேறு விக்ரமனை பற்றி சொல்லி இருந்தார்.
பெண் பார்க்கும் பொழுதே தனம் அவனது குணங்களை பற்றி நறுமுகையின் பெற்றவர்களிடம் சொல்லி இருந்தார். அதை கேட்ட கந்தனுக்கு பெரிதாக எதுவும் தோன்றவில்லை. ஆனால் முத்தழகிக்கு தான் மனது சரியில்லாமல் போனது. சற்றே அவர் முரண்டு பிடிக்க கந்தன் தான் அவரை சமாளித்தார்.
“என் மாப்பிள்ளை சமுகத்தை பார்த்துக்கட்டும்.” என்று எண்ணியே இருந்தார். அதை நறுமுகையிடமும் சொல்லி இருந்தார். அதனால் “புரியுதுங்க அத்தை” என்றாள் தனத்திடம்.
“உன் கையில தான்மா எல்லாம் இருக்கு. அவனுக்கு சமூகத்தை பற்றிய அக்கறை மட்டும் தான் இருக்கே தவிர, குடும்பத்தை பற்றிய சிந்தனை எதுவும் இல்லை. ஒரேடியா அவனை மாற்ற முடியாது. ஆனா கொஞ்சம் கொஞ்சமா உன்னோட வழிக்கு அவனை கொண்டு வந்திடும்மா” என்றார் கோரிக்கையாக.
“சரிங்க அத்தை. நான் பார்த்துக்குறேன்” என்றவளின் எண்ணம் முழுவதும் விக்ரமசேனன் தான் நிரம்பி இருந்தான். பூங்காற்றாய் இழுக்கும் இவளின் இழுப்புக்கு அசையுமா என்ன அந்த விக்ரம ஆலமரம்.