Notifications
Clear all

அத்தியாயம் 7

 
Admin
(@ramya-devi)
Member Admin

குமுறும் மனதனில் செல்லா காசாய்

சேர்த்து போகின்றன பொக்கசங்கள்...!

 

வீட்டுக்குள் கூட்டிக்கொண்டு வந்த மிருதனை அவனது அறைக்குள் பிங்கர் பிரின்ட் வைத்து உள்ளே நுழைந்து அவனை படுக்கையில் விட்டுவிட்டு நிமிர இரு கரங்களையும் கட்டியபடி நின்றிருந்தார் சம்பூர்ணவதி. அவரை அந்த நேரம் எதிர் பார்க்காத மிருதி கொஞ்சம் ஜெர்க்காகி விட்டாள்.

“மேடம் அது...” என்று அவள் தடுமாறினாள் அவரை எதிர்நோக்க முடியாமல். அவளது தடுமாற்றத்தை கூர்ந்து பார்த்தவரே தவிர வேறு எதுவும் சொல்லவில்லை. அப்படியே தான் நின்றிருந்தார். அதிலே நன்கு புரிந்தது மிருதிக்கு தான் வாய் திறக்காமல் அவர் எதுவும் பேச போவது இல்லை என்று..

பெருமூச்சு ஒன்றை இழுத்து விட்டவள்,

“அது சார் இன்னைக்கு கொஞ்சம் அப்செட் மேம்... அதனால நண்பர்களா சேர்ந்து கொஞ்சம் ட்ரிங்க்ஸ் பண்ணாங்க...” என்றாள் உள்ளே போன குரலில்..

“எது இது தான் கொஞ்சமா ட்ரிங்க்ஸ் பண்ணுனதா மிருதி...” அழுத்தமாக கேட்டார் தன் மகன் படுக்கையில் பரப்பிக்கொண்டு படுத்து இருக்கும் லட்சணத்தை காட்டி.

“அது...” என்று அவள் தடுமாறி நின்றாள். எவ்வளவு தான் அவளும் சமாளிப்பாள் பாவம்ல...

“லுக்... உனக்கு எத்தனை முறை சொல்றேன். இவனுங்களோட சேராதன்னு... சொன்னா கேட்கவே மாட்டியா... குடிக்கிறது இவனுங்க... ஆனா உனக்கு தான் கெட்ட பெயர் கிடைக்கும்னு தெரியுமா தெரியாதா. இதனால உன்னோட பியூச்சர் தான் பாதிக்கும்னு கூடவா தெரியாது மிருதி...” ஆதங்கத்துடன் கேட்டவரை பாவமாக பார்த்தாள்.

இவனுங்களை தவிர்த்து அவளுக்கு ஏது தனி பியூச்சர். எங்க போனாலும் இந்த மூணு பேருடன் தான் அவளுக்கு பொழுது விடியும். அதுவும் இவரது மகனுடன் தான் எல்லாமே.. அபப்டி இருக்கும் பொழுது எப்படி இவர்களை தலை முழுகுவது.

தண்ணி அடிச்சிட்டு எங்காவாது குப்புற கிடப்போம். எங்கள சேபா லேண்டிங் பண்ண தான் உன்னை எங்க கூடவே வச்சு இருக்கோம் என்று காரில் அவளை அள்ளிப் போட்டுக்கொண்டு போவது பாவம் இவருக்கு தெரியாதே...

“அயோக்கிய ராச்க்கல்ஸ்ங்களா என்னை விட்டு தொலைங்கடா...” என்று எவ்வளவு கெஞ்சினாலும் ம்ஹும்... காதிலே வாங்கிக் கொள்ள மாட்டார்கள். இத்தனைக்கும் எல்லாம் பெரிய பெரிய இடத்தில் இருக்கும் எருமை மாடுகள். எவ்வளவு பெரிய ஆட்களின் பிள்ளைகள். ஆனாலும் இவளிடம் மட்டும் எந்த தகுதியும் யாரும் பார்க்க மாட்டார்கள் மிருதணும், சக்தியும், சுதிரும்.

இந்த நட்பு சிக்கலை தாண்டி அவள் நினைத்தால் கூட வெளியே வர முடியாது. அப்படியே வந்தாலும் இந்த குட்டி கழக கும்பல் விடாது.

இதை தன் எதிரில் இருப்பவரிடம் புரிய வைக்க முடியாமல் பாவமாய் முழித்துக் கொண்டு இருந்தாள்.

“மேம்...” என்றாள்.

“இங்க பாரு இன்னொரு முறை நீ இவனுங்களோட சுத்துரத பார்த்தேன். அப்புறம் அவ்வளவு தான்..” என்று எச்சரித்தவரிடம்,

“என்ன மம்மி செய்வ அவளை... சொல்லேன் நானும் கேக்குறேன்” என்று இவர்களின் பாதி பேச்சை கேட்டு தன் தாயிடம் வம்பிழுத்தான்.

ஏற்கனவே இங்க மாரியாத்தா ஜங்கு ஜங்குன்னு குதிக்கிது... இதுல இவரு வேப்பிலையை வேற குடுகுறாரே... நொந்துக் கொண்டவள் முதல்ல இங்க இருந்து போறது தான் சரி...

எண்ணியவள்,

“மேம் ரொம்ப நேரமாச்சு நான் கிளம்பவா..?” என்று பவ்யமாக கேட்டாள். அவளது பணிவில் சம்பூர்ணவதிக்கு கோவம் தான் வந்தது.

“உன் வாழ்க்கையை நீயே கெடுத்துக்காத மிருதி அவ்வளவு தான் சொல்வேன்..” என்று எச்சரிக்கை செய்தார். தலையை தலையை ஆட்டிவிட்டு கிளம்பிவிட்டாள்.

வெளியே வந்தவள் மிருதனின் காரை எடுத்துக் கொண்டு கிளம்ப போக,

“இந்த நேரத்துல தனியா எப்படி போவ.. இரு ட்ரைவரை துணைக்கு அனுப்புறேன்” என்றவர் டுவீலரில் அவளை பாலோ செய்ய சொல்லி பணித்தார்.

அவரிடம் தேங்க்ஸ் சொல்லிவிட்டு தன் வீட்டை நோக்கி சென்றாள். நடு இரவையும் தாண்டி விட்டது இவள் வீடு போய் சேரும் பொழுது. ட்ரைவரிடம் தேங்க்ஸ் சொல்லிவிட்டு காபி எதுவும் வேணுமா ண்ணா போட்டு தரவா என்று கேட்டாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் ம்மா.. நான் பார்த்துக்குறேன்...” என்று கிளம்பி விட்டார்.

உள்ளே வந்தாள். உள்ளே வந்தவளிடம் என்னம்மா எல்லோரையும் அவங்கவங்க வீட்டுல இறக்கி விட்டுட்டியா என்று கேட்டார் பரவாசு.

“ஆமாம் ப்பா இன்னிக்கு கொஞ்சம் அப்செட்...”

“ஏன்டா?” என்றபடி சுதாவும் அவளின் அருகில் வந்து அமர்ந்தார்.

“மிருதனோட அப்பா ஊட்டி ப்ரோக்ராமை கேன்சல் பண்ணிட்டாரு... அதனால மிருதன் ரொம்ப டென்சன் ஆகிட்டான். அவனை கூல் பண்ண போய் இவனுங்க ரெண்டு பேரும் மட்டை ஆகிட்டானுங்க”

“அது சரி...” என்று நொடித்துக் கொண்டவர், “இந்த மகேந்திரன் ஏன் எப்போ பாரு அந்த புள்ளைக்கிட்ட மல்லுக்கு இக்கிறாரு. பெரிய மனுசனா இருந்துக்கிட்டு இப்படி சில்லரை வேலையெல்லாம் பார்த்துக்கிட்டு இருக்காரு..”

“ப்ச்... என்ன காண்டோ... அந்த ஆளு பழி வெறியில பாவம் இந்த பிள்ளை தான் நொந்து போறான்... எப்போ தான் இந்த பிள்ளைக்கு வழி கிடைக்குமோ தெரியல” என்று பரவாசும் சுதாவும் அங்கலாய்த்துக் கொண்டார்கள்.

“எதுவும் சாப்பிடுறியாடா... எதாவது செய்து தரவா?”

“அதெல்லாம் எதுவும் வேணாம் ம்மா செம்ம டையர்ட்... நான் தூங்கப் போகவா..? குட் நைட் ப்பா... ம்மா குட் நைட்...” என்றவள் எழுந்துக் கொண்டாள். காலையிலிருந்து மிருதனின் பின்னாடி ஓடி ஓடியே ரொம்பவும் களைத்துப் போய் இருந்தாள்.

“சரிம்மா நீ போய் தூங்கு...” என்று அவளுக்கு குட்நைட் சொன்னவர்கள் தாங்களும் தூங்க போனார்கள்.

இருந்த அலுப்பில் அப்படியே தூங்க தான் உடம்பு கெஞ்சியது. ஆனால் அப்படியே படுத்தா இன்னும் கொஞ்ச நேரத்தில் தூக்கம் கலைந்து விடும் என்பதால் போய் குளித்து விட்டு அதன் பிறகே தூங்க வந்தாள்.

குளிக்கவும் இன்னும் கொஞ்சம் புத்துணர்வாக இருந்தது... சிறிது நேரம் உப்பரிகையில் வந்து நின்றாள்.

அன்பே அன்பே உன்னைக் கண்டேன்

கண்ட பொழுதிலே நெஞ்சில்

அள்ளி வைத்துக் கொண்டேன்..

இதயம் உருகியதே முன்பே

நானும் நீயும் ஒன்றாய் சேர்ந்து வாழ்வோம்

சென்ற நூறு ஜென்மம் ஜென்மம்

அதனை அறிந்ததனால் தான்

இரவிலே தீயின்றி எறிந்திடும் நிலாவே

ஏதோ ஒன்று என்னை இன்று

உந்தன் பக்கம் வா வா என்று

காந்தம் போல ஈர்க்குதே ஈர்க்குதே...!

என்கிற பாடல் அவளது கை பேசியில் ஒலித்துக் கொண்டு இருக்க... தேகம் எங்கும் இரவில் வீசும் ஈரக் காற்றில் சிலிர்த்துப் போனாள்.

பெருமூச்சு வந்தது அவளிடமிருந்து மிருதனை எண்ணி.. இன்னும் எத்தனை நாள் தான் இப்படி தனித்தே இருக்க முடியும் என்கிற கேள்வி அவளுள் எழுந்து அவளை அலைக்கழித்துக் கொண்டே இருந்தது...!

ஆனால் அதற்கான விடை தான் தெரியாமல் திண்டாடிப் போனாள். எப்படியும் மிருதன் மனம் இறங்கப் போவது இல்லை என்று அறிந்தவளுக்கு நெஞ்சில் சுருக்கென்று வலி எழுந்தது.

இப்படியே கவலை பட்டுக் கொண்டு தூக்கத்தை தொலைத்து நின்றால் நாளைக்கு அவனிடம் தூங்கி விழுந்து திட்டு வாங்க வேண்டியது இருக்கும் என்று அறிந்து தூங்கச் சென்றாள்.

காதோரம் பாடல் ஒலித்துக் கொண்டே இருந்தது. அது தான் மிருதிக்கு தூக்க மாத்திரை... பாடல் கேட்ட படியே ஆழ்ந்த நித்திரைக்கு சென்றாள். அப்படியே டைமர் முடிந்த பிறகு பாடல்களும் ஒலிப்பதை நிறுத்தி இருந்தது.

காலையில் இருந்து தொடர்ச்சியாக செய்த வேலையில் அடித்து போட்டது போல நன்கு தூங்கிப்போனாள்.

இந்த பக்கம் மிருதணும் சக்தியும் சுதிரும் காலை பொழுதில் அவரவர் இல்லத்தில் எழுந்து தலையை பிடித்துக் கொண்டு அமர்ந்து இருந்தார்கள். நேற்றைக்கு குடித்த சரக்கு இன்று வேலையை காட்டியது.

தலையில் யாரோ பெரிய மலையை வைத்தது போல இருந்தது. உதறிக் கொண்டு எழப் பார்க்க சற்றே தள்ளாடி தான் போனார்கள்.

சமாளித்து அலுவலகம் கிளம்பி வெளியே வந்தான் மிருதன். சாப்பிட அமர்கையில் சம்பூர்ணவதி எதையும் காட்டிக் கொள்ளாமல் அவனுக்கு உணவு வைத்தார். ஆனால் அவரின் விழிகள் சிவந்து போய் இருப்பதை பார்த்து தலை குனிந்தவன் ஒன்றும் பேசாமல் சாப்பிட்டான்.

தாய் சாப்பிடாமல் அவ்விடத்தை விட்டு போவதை பார்த்து வேகமாய் அவரின் கரத்தை பற்றினான். சம்பூர்ணவதி அப்படியே நின்றார்.

“சாப்பிடுங்க வாங்க...” என்று அழைத்தவன் அவருக்கு தட்டை வைத்து பரிமாற, அவனை பார்த்துக் கொண்டே இருந்தார் அவர்.

“ப்ச்... முதல்ல சாப்பிடுங்க பிறகு என்னை பார்க்கலாம்...” என்றவன் ஒரு வாய் சாப்பாட்டை அவரை நோக்கி நீட்ட பட்டென்று அமர்ந்துக் கொண்டார் அவனின் அருகில்.

அதன் பிறகு அவனது கையாலே முழு சாப்பாட்டையும் ஊட்டிக் கொண்டவர்,

“மார்னிங் மீட்டிங் இருக்கு..” என்றார்.

“பார்த்துக்கலாம் ம்மா.. நீங்க முதல்ல சாப்பிடுங்க..” என்று அவருக்கு ஊட்டி விட்டுக் கொண்டு இருக்கும் பொழுதே அவனின் தங்கை மிருலாணியும் வந்து விட அவளுக்கும் ஊட்டி விட்டான். அவனது கழுத்தை கட்டிக் கொண்டு செல்லம் கொஞ்சியவளை ஆதுரத்துடன் தலை கோதி விட்டார் சம்பூர்ணவதி.

மூவரின் கொஞ்சலையும் மேலே இருந்து பார்த்த படியே படிகளில் இறங்கிக் கொண்டு இருந்தார் மகேந்திரன். அவரின் கண்களில் அப்படி ஒரு பழி வெறி மின்னியது. ஆனால் அதற்கெல்லாம் அசந்தால் அவன் மிருதன் இல்லையே...!

அவரது பார்வைக்கு பதில் பார்வைக் கொடுத்தவன் அன்னையிடமும் தங்கையிடமும் அதற்கு நேர்மாறாய் பாசமழை பொழிந்தான். பெருவுடையாள் பாட்டியும் அந்நேரம் வந்து விட, அவருக்கு சேர்த்து வைத்து ஊட்டி விட்டவன் அனைவரிடமும் தலையை ஆட்டிவிட்டு வெளியே கிளம்பிவிட்டான்.

வெளியே வந்தவன் அங்கு அவனது கார் இல்லாததை பார்த்து டென்சன் ஆகிவிட்டான். மிருதிக்கு போன் போட்டு காச் மூச்சென்று கத்த ஆரம்பிக்க,

அவனது கார் அவன் வீட்டு வாசலில் வந்து நின்றது. ஏறி மிருதியின் பக்கம் வந்து அமர்ந்துக் கொண்டவன் அப்படியே சீட்டை பின்னால் சரித்து முகத்தில் கைக்குட்டையை விரித்து தூங்க ஆரம்பித்து விட்டான்.

‘இந்த ட்ரைவர் வேலை மட்டும் தான் பார்க்கல... இன்னைக்கு அதையும் செய்ய வச்சிட்டான்...’ கடுப்புடன் எண்ணிக் கொண்டவள் போகிற வழியில் சுதிர் மற்றும் சக்தியையும் அழைத்துக் கொண்டு செட்டுக்கு சென்றாள்.

நேற்றைக்கு எடுத்த சூட்டை இன்னைக்கு கொஞ்சம் எடிட் செய்து வைக்கலாம் என்று எண்ணியே வந்தார்கள் நால்வரும்... எது எது வேண்டும். எந்த பக்கம் இருந்து பார்த்தாலும் கோர்வை சரியாக இருக்க வேண்டும் என்று எல்லாவற்றையும் லிஸ்ட் போட்டு செய்துக் கொண்டு இருந்த நேரம்

“மீட்டிங் ஸ்டார்ட் ஆக போகுது சார். உங்களை கூட்டிட்டு வர சொன்னாங்க...” என்று பணியாள் சொல்ல, அந்த பில்டிங்லையே மேலே தனி ப்ளோர் இருந்தது. அது முழுக்க முழுக்க கான்பிடன்ஷியலான விசயம் டிஸ்கஸ் பண்ண, போர்ட் மெம்பர்ஸ் மட்டும் யூஸ் பண்ணுவதற்காக ஏற்பாடு செய்து இருந்தார்கள்.

அந்த மீட்டிங் ஹாலில் அனைவரும் கூடி இருந்தார்கள். பெருவுடையார் மிருதஞ்சயன், சம்பூர்ணவதி, மகேந்திரன், மிருளாணி, மற்றும் சக போர்ட் மெம்பர்ஸ் என பத்துக்கும் குறைவானவர்கள் அங்கு இருந்தார்கள்.

மிருதன் எதற்கும் அலட்டிக் கொள்ளவில்லை. மிருதன் என்று இருந்த நாற்காலியில் வந்து தோரணையாக அமர்ந்தான்.

அவனது தோரணையில் இதழ் விரிய இருக்க அடக்கிக்கொண்டு தன் மகனை பார்த்தார் சம்பூர்ணவதி. என் மகன் மிருதஞ்சயன் என்கிற பெருமை எப்பொழுதும் அவருக்கு உண்டு. அவனது ஆளுமையும் சரி நேர்த்தியும் சரி, அவனது திறமையும் சரி அவரை எப்பொழுதுமே வியந்து பார்க்க வைக்கும். அதில் ஈடு இணையில்லா பெருமையும் அவருக்கு.

“இந்த மீட்டிங் எதுக்குன்னா...” என்று பெருவுடையார் ஆரம்பித்தார்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 26, 2025 12:00 pm
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top