Notifications
Clear all

அத்தியாயம் 5

 
Admin
(@ramya-devi)
Member Admin

வழியின்றி போகும் பாத சுவடுகளில்

நீங்காமல் ஒட்டிக் கொள்கிறேன் நினைவுகளாக...!

 

அடுத்த அடுத்த பாடல்கள் பாடப்பட்டுக் கொண்டு இருந்தது. அடுத்த ப்ரேக்கும் வந்தது... அனைவருக்கும் சூடான காபி தேநீர் மற்றும் ஸ்நேக்ஸ் எல்லாம் வழங்கினார்கள்.

மிருவிடம் வந்து அவளுடையதை கொடுக்க அவள் வேண்டாம் என்று விட்டாள். அதை ஓரக்கண்ணால் பார்த்தானே தவிர வேறு எந்த ரியாக்ஷனும் காட்டவில்லை.

சக்தியும் சுதிரும் கூட வந்து அவளை சாப்பிட சொல்ல, ம்ஹும் வேண்டாம் என்று மறுத்து விட்டாள்.

“அவன் அடிச்சதை எல்லாம் பெருசா எடுத்துக்காத மிரு. அவன் கேரக்டர் தான் உனக்கு தெரியுமே.. தெரிஞ்சி இருந்தும் இப்படி சாப்பிடாம இருந்தா எப்படி மிரு வேலை செய்வ...”

“அவன் எதுக்கு எடுத்தாலும் உன்னை தான் கூப்பிடுவான். அப்போ நீ சோர்ந்து போய் இருந்தா.. அதுக்கும் சேர்த்து கத்துவான்னு தெரியாதா... சாப்பாடு தான் சாப்பிடல.. அட்லீஸ்ட் இந்த ஸ்நேக்ஸாவது சாப்பிடலாம் இல்ல...” என்று இருவரும் சொல்லி பார்த்தார்கள் ஆனால் அவள் எதுவுமே சாப்பிடவில்லை.

எல்லோரும் அவளை உபசரிப்பதை பார்த்த மிருதனுக்கு பத்திக் கொண்டு வந்தது.! ஆனாலும் எதையும் காட்டிக் கொள்ளாமல் தன் தேநீரை ரசித்துக் குடித்துக் கொண்டு இருந்தான்.

ப்ரேக் முடிந்து மறுபடியும் ஷூட்டிங் ஆரம்பித்த நேரம், அடுத்த ஸ்க்ரிப்ட் கொஞ்சம் குளறுபடியாக இருக்க,

“மிரு...” என்று கர்ஜித்தான். அமைதியாக அவனின் எதிரில் வந்து நின்றாள்.

“இது கூட பார்க்கம அங்க என்ன பண்ற... இப்போ ஆங்கர்ஸ் ரெண்டு பெரும் இந்த டாப்பிக்கை பத்தி பேசணும்.. பேசிட்டு ஜட்ஜஸ் இந்த பாட்டை பெர்பாம் பண்ணனும்... ஆனா இந்த டைலாக் போஷனை பாரு..” என்று அவளின் அருகில் இருந்த மேசையில் தூக்கிப் போட்டான் ஆத்திரத்தில்.

அதை எடுத்து பார்த்தவளுக்கு மிக நன்றாகவே தெரிந்தது இந்த டைலாக் எல்லாம் சொதப்பல் என்று... சட்டென்று சக்தியையும் வர செய்து இருவரும் அடுத்த சில நொடிகளில் அந்த போஷனை மட்டும் மாத்தி எழுதினார்கள்.

அதை மிருதனிடம் காண்பிக்க, அதில் அவன் இன்னும் சில மாறுதல்களை செய்தவன் ஆங்கர்ஸ் கிட்ட இதன் பிரதியை கொடுக்க சொல்லி சுதிரோடு சென்று அமர்ந்து மானிட்டர் பண்ணினான்.

டைலாக் போஷனை மாற்றிக் கொடுத்தவளுக்கு மிகவும் களைப்பாக இருந்தது. ஆனால் யாரிடமும் எதுவும் சொல்லவில்லை. அவளுக்கு கொடுத்த வேலைகளை சரிவர செய்துக்கொண்டு இருந்தாள். அந்த நேரம் ஜட்ஜ் அவளை அருகே வர சொல்ல, கேமராவை பார்த்துக் கொண்டே வந்தாள். சரியாக அவர்களை கடந்து சென்ற பின்பு அவரிடம் சென்றாள்.

“என்ன ஆச்சு மேம்...? எதுவும் வேண்டுமா?” என்று கேட்டாள்.

“இல்ல மிரு.. கொஞ்சம் ப்ரேக் வேணும்...” என்று அவர் சங்கடமாய் சொல்ல,

“புரியிது மேம்... நான் பார்த்துக்குறேன்” என்று அவர் ரெஸ்ட்ரூம் போக உதவியவள், சுதிரை நெருங்கி, ஜட்ஜ் பக்கம் இப்போதைக்கு திருப்ப வேண்டாம். எடிட்ல பார்த்துக்கட்டும்..” சொல்லிவிட்டு ஸ்க்ரிப்ட்டை செக் பண்ணினாள்.

அந்த நேரம் அவளிடம் வந்து ஒருவர் குளிர்பானத்தை நீட்ட, வாங்கி பருக ஆரம்பித்துவிட்டாள்.

“நாங்க குடுக்கும் பொழுது மட்டும் குடிக்கல... இந்த ராத்திரி நேரம் அதுவும் மிட் நைட்ல இப்படி சில்லுன்னு குடிக்கிற... உன்னை புரிஞ்சுக்கவே முடியல மிருதி...” என்றான் சக்தி.

அதை கேட்டு இதழ் பிரியாமல் சிரித்தவள், சற்றே வீங்கி போய் இருந்த கன்னத்தை காட்டினாள்.

அப்பொழுது தான் புரிந்தது அவனுக்கு... ஸ்ஸ் சாரி மிரு... நாங்க இதை கவனிகல... இந்த வலியோட நீ எப்படி சாப்பிடுவ.. அதுவும் டீ, காபி வேற சூடா இருக்கும்...” என்று சொன்னவன்,

“ஆமா, இந்த நேரத்துல எப்படி இவ்வளவு சில்லுன்னு உனக்கு பிரெஷ் ஜூஸ் கிடைச்சது. யாரு போய் வாங்கிட்டு வந்தா...?”

“அது தானே... எனக்கும் தெரியல சக்தி. நம்ம ப்ரொடெக்ஷன் பையன் தான் என்கிட்ட இதை குடுத்து குடிக்கவும் சொன்னான்.” என்றாள் மிருதி..

“ஓ...!” என்று இழுத்தவனின் கண்கள் மிருதனை வட்டம் போட்டது.. அவன் வட்டத்தில் சிக்குமா இந்த சிங்கம்... மிருதன் தன் வேலையில் கவனத்தை எங்கும் திருப்பவில்லை. அடுத்த ஷாட்டுக்கு மேலே இருந்து ரோஜா பூக்கள் கொட்ட வேண்டும்... மேலே அந்த வேலை நடை பெற்றுக் கொண்டு இருந்தது...

அதை ஒரு பார்வை பார்த்தான். அங்கிருந்து தம்சப் காண்பிக்க, திரும்பி மிருவை பார்த்தான். அவள் ப்ரொடெக்ஷன் மேனேஜரிடம் பேசிக் கொண்டு இருந்தாள். அவன் பார்த்தால் எப்பொழுதும் எங்கு இருந்தாலும் இவளும் பார்த்து விடுவாள். இன்று பார்க்கவே இல்லாமல் தவிர்க்க, அவனுடைய கண்டினிவிட்டி தடைப் பட்டு போனது. அதில் பெருத்த கோவம் வர, பொருத்தது போதும் என்று பொங்கிவிட்டான்.

ரோலிங்கில் இருந்த கேமராவை கட் சொன்னவன், “மிருதா...” என்று அந்த அரங்கமே அதிர கத்தி அழைத்தான். அதன் பிறகே தான் செய்த செயல் தவறு என்று புரிந்தவள் அவனிடம் வந்தாள் வேகமாக. வரும் பொழுதே வேர்த்து விட்டது அவளுக்கு. அவளுக்கு தான் தெரியுமே அவனது கோவம் எப்படி என்று..

அதனால் பதறிய நெஞ்சுடன் அவனிடம் வந்தாள். அவளையே கூர்ந்து பார்த்தவன்,

“கெட் அவுட்..” என்றான் ஆத்திரமாக...

“இல்ல மிருதன்... அது...” என்று அவள் தடுமாற, அவளின் தடுமாற்றத்தை பார்த்தவன்,

“இங்க வேலை பார்க்க விருப்பம் இருந்தா வேலை பாரு.. இல்லையா கிளம்பி போய் கிட்டே இரு.. அதை விட்டுட்டு இங்க உன் விருப்பத்துக்கு ஆட இது இடம் கிடையாது.. அடுத்த ஷாட்டுக்கு ரெடியான்னு பார்க்காம அங்க என்ன ...கிட்டு இருந்த... நானும் இன்னைக்கு வந்ததுல இருந்து நோட் பண்ணிக்கிட்டு தான் இருக்கேன்.. நீ ஒண்ணும் சரியில்ல.. முதல்ல இங்க இருந்து வெளியே போ...” என்று அவளை அந்த ஷெட்டை விட்டு வெளியே போக சொன்னான். 

அதில் அதிர்ந்து போய் அவனை பார்த்தாள்.

“இல்ல மிருதன் நான் இனி ஒழுங்கா இருக்கேன்...” என்று அவனிடம் சொல்ல, அவன் அதையெல்லாம் சிறிதும் காதிலே வாங்கிக் கொள்ளவில்லை.

“மச்சான் என்னடா இப்படி பண்ற...” என்று அவனது தோளை தொட்டான் சுதிர்.

“பின்ன என்னடா... அடுத்த ஷாட் எவ்வளவு முக்கியம்.. அதுக்காக எவ்வளவு இன்வெஸ்மென்ட் பண்ணி இருக்கோம். கொஞ்சம் கூட அக்கறையே இல்லாம எனக்கென்னன்னு அரட்டை அடிச்சுக்கிட்டு இருந்தா என்ன தான் பண்றது... முதல்ல அவளை வெளியே போக சொல்லுடா. பார்க்கும் பொழுதே கடுப்பா வருது... சரியான இர்ரெஸ்பான்சிபில் இடியட்...” கருவியவன்,

சக்தியை வைத்து மேற்கொண்டு எல்லா வேலைகளையும் பார்த்துக் கொண்டான். சிறிது நேரம் ஷெட்டுக்கு வெளியே நின்று இருந்தாள். ஆனால் அவன் கொஞ்சமும் திரும்பி பார்க்கவே இல்லை...! அத்தனை பேருக்கு முன்னாடியும் வெளியே போக சொன்னது மனதை அறுத்தது. ஆனால் இவளும் தேவையில்லாமல் பேச வில்லையே...

ப்ரொடியூசர் சொன்ன விசயம் எவ்வளவு பெரியது என்று அறிந்தவள், அதை எப்படி மிருதனிடம் சொல்வது என்று தான் யோசித்த படி இருந்தாள். ஆனால் அதற்குள் மிருதன் கத்தி விட, தன் மீதும் தவறுள்ளது என்று புரிந்து தான் இருந்தது..

ஆனால் இப்பொழுது என்ன செய்வது...! என்று தன்னுடைய தனி அறைக்குள் சென்று அமர்ந்து விட்டாள். இப்போதைக்கு வீட்டுக்கு போக முடியாது. அதோட இந்த விசயம்... எப்படி வெடிக்கும் என்று வேறு தெரியவில்லை..! எப்படியும் மிருதனை சமாளிக்க முடியாது திணற தான் போகிறோம் என்று எண்ணினாள். அதனால் அவள் வீட்டுக்கு போக வில்லை.

சக்தியால் மிருதனை சமாளிக்க முடியவில்லை. அவனது வேகம் ஒரு காரணம் என்றாலும் அவன் எள் என்று சொல்லும் முன்பே எண்ணையாக இருக்க வேண்டும். அப்படி இருப்பவள் மிரு மட்டும் தான். இப்பொழுது அவள் இல்லாமல் போக சக்தி தான் பாவம் அவனிடம் மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டு இருந்தான்.

ஒருவழியாக அந்த நாளுக்குறிய ஷாட்ஸ் எல்லாத்தையும் எடுத்து முடித்தவர்கள் அவரவர் இடத்துக்கு போய் விட்டார்கள். அதில் பெருத்த நிம்மதி சக்திக்கு தான்.

‘யப்பா... ஒருவழியா முடிச்சுட்டான்... இல்ல நம்மளை ஒரு வழியாக்கி கேப்பையை நட்டு இருப்பான்’ என்று எண்ணியவனிடம் ப்ரொடியூசர் வந்து நின்றார்.

“என்ன சார்... இந்த பக்கம்.. எப்பொழுதும் உங்க அசிஸ்டென்ட் தானே இருப்பான்” என்றபடி அவரை அமரவைத்து தானும் அவரோடு அமர்ந்து பேச ஆரம்பித்தான்.

“சக்தி நீங்க மிருக்கிட்ட பேசுனீங்களா...?” கேட்டார்.

“இல்லைங்க சார்... இனிமேல் தான் பேசணும்... என்ன ஆச்சு சார் எதுவும் இம்பார்ட்டனா?”

“நீங்க முதல்ல மிரு கிட்ட பேசுங்க சக்தி. பிறகு நாம பேசுவோம்..” என்று எழுந்துக் கொண்டார்.

உடனடியாக மிருதியை நோக்கி ஓடினான் சக்தி.. அவனுக்காக காத்திருந்தவளாய் அவளும் தூங்காமல் முழித்து இருந்தாள்.

“ப்ரொடியூசர் என்னவோ உன்கிட்ட பேச சொன்னாரு மிரு... என்ன விசயம்? அவரும் டென்ஷனா இருக்காரு. நீயும் டென்ஷனா இருக்க... என்ன ஆச்சு..?” என்று படபடத்தான்.

“சொல்றேன் நீ முதல்ல உட்காரு... ஆமா மிருதன் எங்க இருக்காரு...?”

“ஷூட்டிங் முடிச்சுட்டு எங்க இருப்பான் எடிட்டர் ரூம்ல தான் இருப்பான். தூங்குடான்னா கேட்க மாட்டிக்கிறான்...” என்று சலித்தான்.

“ஆமா இப்போ எதுக்கு அவனை கேட்கிற...?”

பெருமூச்சு விட்டவள்,

“நம்ம டூர் ப்ரோக்ராம் கேன்சல் ஆகிடுச்சு சக்தி. மிஸ்டர் மகேந்திரன் தான் கேன்சல் பண்ணி இருக்கிறதா தகவல் வந்து இருக்கு. அதோட மிருதன் அவர் கிட்ட மன்னிப்பு கேட்டா இந்த டூர் மறுபடியும் அரேன்ஞ் பண்றேன்னு சொல்லி இருக்காறாம்...” என்றாள்.

“ஹேய் இதென்ன மிரு இந்த ஆளு இப்படி எல்லாம் பண்ணிக்கிட்டு இருக்காரு.. எல்லாமே இவரு விருப்பப்படி தான் எல்லாமே நடக்கணுமா...? அதென்ன இந்த ஆளுக்கு இப்படி ஒரு வறட்டு பிடிவாதம்... மிருதனுக்கு மட்டும் இந்த விசயம் தெரிந்தது அவ்வளவு தான் அந்த ஆளை ஒரு வழியாக்கி விட்டுடுவான்...” என்று பீதியானான்.

“எனக்கும் அது தான் பயமா இருக்கு சக்தி. ஏற்கனவே ரெண்டு பேரும் எதிரும் புதிருமா தான் இருப்பாங்க. இதுல ஒவ்வொரு நாளும் இவங்களுக்குள்ள முட்டிக்கிது... இதோ அதுக்கு இந்த ஒன்னு நல்ல உதாரணம். இவங்க சண்டையில மிருதன் அம்மா தான் பாவம்.  யாருக்கும் பரிந்து பேச முடியாமல் தவிச்சு போறாங்க...” என்று மிருதனின் அம்மாவுக்காக வருத்தப் பட்டாள்.

“அதென்னவோ வாஸ்த்தவம் தான். இப்போ மிருதன் கிட்ட இந்த விசயத்தை எப்படி சொல்வது மிரு.. சத்தியமா எனக்கு இப்பவே நாக்கு தள்ளிடுச்சு... எப்படி தான் இவனை இத்தனை வருசமா சமாளிக்கிறியோ..” என்று அப்படியே அங்கிருக்கும் கட்டிலில் சாய்ந்து விட்டான்.

அடுத்த சில நிமிடங்களில் எல்லாம் சுதிரும் வந்து விட்டான். வந்தவனின் முகம் கலவரமாய் இருந்தது..

“என்ன சுதிர்... ஏன் இப்படி வந்து இருக்க? மூஞ்சியே சரியில்ல.” மிரு விசாரிக்க, சக்தி அடித்து பிடித்து எழுந்து அமர்ந்தான்.

“விசயம் மிருதனுக்கு தெரிஞ்சிடுச்சு... கோவமா காரை எடுத்துக்கிட்டு பப் போயிட்டான்டா..”

“வாட்...” என்று இருவரும் அதிர்ந்துப் போனார்கள்.

“அது தான் உங்களையும் கூட்டிட்டு போகலாம்னு வந்தேன். வாங்க போகலாம்...” என்று மூவரும் ஒரு காரில் பயணமானார்கள்.

Loading spinner

Quote
Topic starter Posted : August 26, 2025 11:56 am
Share:

Our Social Media Platforms

Instagram

Facebook Group

Whatsapp

Facebook

Youtube

error: Content is protected !!
Scroll to Top