சிதறிப் போகும் நினைவுகளில்
நீங்காமல் உலாப்போகிறாய் இரக்கமற்று...
அடுத்த வாரம் வர போகும் நேரடி நிகழ்வை இன்று எடிட் செய்துக் கொண்டு இருந்தார்கள். “பாடாத பாட்டெல்லாம்..” என்கிற டைட்டிலோடு அந்த நிகழ்வு ஆரம்பமாகியது...
இதுவரை பாடிய பாடல்களை தவிர்த்துவிட்டு பழைய காலத்தில் இருந்து இன்னும் வெளிச்சத்துக்கு வராத பல நல்ல பாடல்களை தேடி கண்டுபிடித்து பாடகர்கள் பாடுவது தான் இந்த நிகழ்ச்சி. அதுவும் எல்லாமே புதுமுகம் தான்.
கலைத்துறையில் கால் பதிக்க நினைத்து வாய்ப்பு கிடைக்கமால் முட்டி மோதிக் கொண்டு இருக்கும் பலருக்கு இந்த வாய்ப்பு சினிமா துறையில் நுழைய ஒரு என்ட்ரிகார்டு.. அதனால் பல பாடகர்கள் அதில் கலந்துக்கொள்ள ஆர்வம் கொண்டு பங்கேற்று இதோ மூன்று வாரம் ஷோ முடிந்து இருந்தது...
இது நான்காவது வாரம்... இதை எடிட் செய்து அனுப்பிய பிறகு தான் அடுத்த வேலை பார்க்க முடியும்.. அதற்கான வேலைகள் பலமாக நடந்துக் கொண்டு இருந்தது..
அந்த வேலையில் ஒரு கண் வைத்தவன், அன்று மாலை காமெடி ஷோ நடக்க இருக்க அதற்கு தேவையான ஸ்க்ரிப்டை தயார் செய்துக்கொண்டு இருந்தான் மிருதன்.
ஏற்கனவே அசிஸ்ட் பண்ணின வேலை தான். இருந்தாலும் இவன் ஒரு முறை ஏ டு இசெட் வரை சரி பார்த்தான். லைட் கேமரா முதற்கொண்டு எல்லாமே ஸ்க்ரிப்ட்டில் இருப்பதை கவனமாக வாசித்தான்.
சக்தியும் மிருதியும் அந்த ஷோவுக்கான இடத்தை மேற்பார்வை செய்ய போய் இருந்தார்கள். ஆர்டிஸ்ட் அனைவரும் வந்து மேக்கப் போட்டுக்கொண்டு இருந்தார்கள்.
ஸ்க்ரிப்ட் பேப்பர் அவர்களுக்கும் கொடுத்து இருக்க அனைவரையும் படித்து பார்க்க சொல்லி சொல்லிவிட்டு தன் வேலைகளில் இருவரும் பிசியாக இருந்தார்கள்.
இன்றைய ஷூட்டிங் முடிந்த பிறகு ஊட்டி டூருக்கு கிளம்ப வேண்டும். அதனால் எல்லோரின் முகத்திலும் ஒரு புன்னகை இருந்தது. அந்த உற்சாகத்துடனே அனைவரும் வேலையை பார்த்தார்கள்.
மிருதன் செட்டுக்குள் நுழைய ஒரு மணி நேரத்துக்கு முன்பே எல்லாம் சரியாக இருக்க வேண்டும். இன்னும் டிஜே வரவில்லை.
“சக்தி டிஜேவுக்கு கால் பண்ணி பார்த்தியா? எங்க இருக்காறாம்...” என்று கேட்டவள் ஒரு லைட் டிம்மு டிப்பு அடித்துக் கொண்டு இருக்க அதை எலெக்ட்ரிஷியனிடம் மாத்த சொல்லி சொன்னாள்.
“நானும் போன் போடுறேன். அவன் எடுக்கவே மாட்டேங்குறான் மிரு... என்ன பண்றதுன்னு தெரியில...” என்று போன் அவனுக்கு போட்டுக்கொண்டே சொன்னான்.
“கடைசி நிமிசத்துல காலை வாரி விடாம பார்த்துக்க சக்தி... இல்லன்னா மிருதனை சமாளிக்கவே முடியாது... ஊட்டி டூரும் வேணாம் ஒண்ணும் வேணான்னு எல்லாத்தையும் பேக்கப் பண்ணிடுவான்”
“எனக்கும் புரியுது... ஆனா என்ன பண்ண சொல்ற மிரு... நம்ம அவசரம் யாருக்கு புரியலயே..” சொன்னான்.
“ப்ச்... இப்போ என்ன பண்றது சக்தி...” பதட்டமனாள்.
“இரு நம்ம அனதர் ஷோ டிஜே ப்ரீயான்னு கேக்குறேன்” என்றவன் அவருக்கு கால் பண்ண ஆரம்பித்தான்.
தன்னுடைய அசிஸ்டென்ட் பரதனை அழைத்து ஆர்டிஸ்ட் ரெடியா என்று பார்க்க சொன்னாள். அப்படி ரெடியாக இருக்கும் ஆட்களை அமரவைத்து க்ளோசப் ஷார்ட்ஸ் எடுக்க சொல்லி கேமரா மேனின் அசிஸ்டண்டை பணித்தாள். அதோடு, “ஜட்ஜ் எல்லோரும் வந்துட்டாங்கங்ன்னா அவங்க மேக்கப் முடிஞ்சி ட்ரெஸ் கலர்ஸ் எல்லாம் கேமராவுக்கு சூட் ஆகுதான்னு ஒருமுறை செக் பண்ணிடு வசந்த். இல்லன்னா சாருக்கிட்ட பேச்சு வாங்க முடியாது என்றாள்.
“நான் பார்த்துக்குறேன் மிரு. நீ டென்ஷன் ஆகாத...” என்றவன் தன்னுடைய வேலையை பார்க்க ஆரம்பித்தான்.
சக்தியின் அசிஸ்டென்டை அழைத்து, “ஆங்கர்ஸ் டைலாக்ஸ் எல்லாம் சரியா இருக்கா... எந்தெந்த இடத்துல என்னென்ன பெர்பாம் பண்ணனும்னு ஞாபகம் இருக்கான்னு செக் பண்ணிட்டு அப்படியே... ஸ்க்ரிப்ட் ரீடர் ரெடியான்னு பாரு... கொஞ்சம் கூட ப்ளோ கட் ஆக கூடாது சிமி” என்று சொன்னாள்.
இந்த பக்கம் எடிட்டிங்கில் பிசியாக இருந்தவன் கிட்டத்தட்ட முடியும் தருவாயில் இருந்தது.
“ஓகே சந்துரு.. இனி நீ கண்டினியூ பண்ணிக்கோ... புல்லா முடிச்சுட்டு ஏதாவாது சேர்க்கணும்னா சேர்த்துக்கலாம்..” என்றவன் அந்த எடிட்டிங் ரூமிலே அப்படியே கை குட்டையை நனைத்து முகத்தில் போட்டுக்கொண்டு சேரில் அமர்ந்த படி படுத்துவிட்டான்.
அப்படி மிருதஞ்சயன் படுத்துவிட்டால் அவனது கிட்ட கூட போக முடியாது... இந்த பக்கம் ஷோவுக்கு எல்லாமே தயாராக இருந்தது. இறுதி கட்ட ஒப்பனை கூட தயார். எந்தெந்த ஸ்பான்சர் என எல்லாவற்றையும் ஆங்கர்க்கு தெரியப்படுத்திவிட்டு, அந்த ப்ராடெக்ட் எங்கேங்க இருக்கோ அதை எல்லாம் க்ளோசப் எடுத்து வைத்துக் கொண்டான், அதோடு ஆங்கர்ஸ் இருவரையும் மூன்று நான்கு க்ளோசப், மிடில் என வகை வகையாக ஸ்பான்சர் லிஸ்ட்டை சொல்ல வைத்து எடுத்துக் கொண்டான் வசந்த்.
விசிட்டர்ஸ் அனைவரும் வந்து அமர்ந்து விட்டார்கள்... அவர்களையும் கொஞ்சம் க்ளோசப் எடுத்துக் கொண்டான். அதை சுதிரிடம் காட்டி ஓகே பண்ணிக் கொண்டான்.
எல்லாம் தயாராக இருக்க ஒரு கசங்கிப் போன கார்க்கோ சட்டையில், சாண்டில் நிற பேண்டில் ரொம்பவும் எளிமையாக அந்த செட்டுக்குள் நுழைந்தான் மிருதஞ்சயன்.
அது வரை அங்கும் இங்கும் அலைந்துக் கொண்டு இருந்த அசிஸ்டென்ட் அனைவரும் கப்சிப் என்று அவர்களுக்கு உரிய இடத்தில் செட்டில் ஆகிவிட்டனர்.
எல்லாம் ஓகேவா... என்று ஒரு முறை கண்களை ஓட்டி செக் செய்தவன்,
“எஸ்... ஸ்டார்ட் கேமரா...” சுதிரிடம் கை காண்பித்தான்.
ஆங்கர் “வெல்கம் டு... அவர் பாடாத பாட்டெல்லாம்... ஸ்பான்சர் பை...” என்று நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள்.
கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் அந்த நிகழ்ச்சி எந்த இடைவெளி இல்லாமல் போய் கொண்டு இருந்தது... ஒருவர் பின் ஒருவராக பாடல்களை பாடி, அதற்கு ஜட்ஜ்மெண்ட் சொல்லிக் கொண்டு இருந்தார்கள்.
அதை எல்லாம் மானிட்டர் மூலமாக பார்த்துக் கொண்டு இருந்த மிருதஞ்சயன் நெற்றியை நீவ ஆரம்பித்தான். அவன் அப்படி செய்தாலே யார் தலையாவது உருள போவது உறுதி...
மிருதனை விட்டு சற்று தள்ளி நின்று யாரும் சொதப்பாமல் கைட் பண்ணிக்கொண்டு இருந்தவளை கோவமாக அழைத்தான்.
“மிருதன்..” என்று அவள் அடித்து பிடித்துக் கொண்டு வர,
“கொஞ்சம் அந்த ஜட்ஜை திங்கிறத நிறுத்த சொல்லு... எப்போ பாரு அசை போட்டுக்கிட்டே இருக்கிறது தான் வேலையா... இன்னும் வந்து இரண்டு பாட்டுக்கு கூட ஒழுங்கா ஜட்ஜ் மென்ட் சொல்லல... அதுக்குள்ள திங்க ஆரம்பிச்சாச்சு...” என்று கடுப்படித்தவன்,
“இதையெல்லாம் கவனிக்காம அங்க என்ன ... இருந்த” என்று மட்டு மரியாதையே இல்லாமல் வசவினான்.
அவனது வார்த்தை பழகிப் போனதால் “நான் இதோ என்னன்னு பார்க்கிறேன் மிருதன்” சொன்னவள் வேகமாய் அந்த ஜட்ஜிடம் சென்று,
“மேடம் கேமரா இப்போ இந்த பக்கம் வரும் உங்க வாயை கொஞ்சம் அசைக்காம இருங்க... பிறகு அந்த பக்கம் போனவுடன் சாப்பிடுங்க. இல்லன்னா சார் பயங்கரமா டென்சன் ஆகிடுவாரு.. எத்தனை முறை தான் சொல்றது...” என்று சற்று கடுமையாகவே சொன்னவள் கேமரா மேனுக்கு தம்சப் காட்டினாள்.
எல்லாம் பக்காவாக போய்க் கொண்டு இருந்தது. மேற்கொண்டு ஒரு மணி நேரம் ஷூட்டிங் போனது... அதன் பிறகு ப்ரேக் என்று சிறு இடைவெளி விட, அனைவரும் கலைந்தார்கள்.
அடுத்த கட்ட ஷூட்டிங்க்கு அசிஸ்டென்ட் அனைவரும் தயாரிக்கொண்டு இருக்க, என்னென்ன டையலாக் என்று மிரு பேப்பரை பார்த்துக் கொண்டு இருந்தாள். அப்பொழுது சக்தி அவளிடம் வந்து நின்றான்.
“என்னடா?” என்றாள் பேப்பரில் இருந்து பார்வையை விலக்காமல்..
“அது...” என்று அவன் தயங்க,
“சொல்லுடா... என்ன பிரச்சனை...?” கேட்டாள்.
“அது வந்து சிங்கர் ஒருவருக்கு எமர்ஜென்சியாம். சோ இன்னைக்கு ஒரு நாள் மட்டும் லேபிட் ஆகிக்கவா அப்படின்னு கேக்குறாங்க மிரு.. என்ன சொல்றது” என்றான்.
“வாட்?”
“ஆமாம் மிரு. ரொம்ப எமர்ஜென்சியாம்.. வர சொல்லவா?”
“சரி வர சொல்லு...” என்றவள் அந்த சிங்கரிடம் பேசி பார்க்க அவளோ,
“ப்ளீஸ் மிரு... நீ தான் எப்படியாச்சும் இன்னைக்கு ஒரு நாள் லீவ் குடுக்கணும்.. என் லைப்.. என் லவ்வருக்கு எமெர்ஜென்சி. நான் கண்டிப்பா அங்க இருக்கணும்” என்றவளின் உணர்வுகள் புரிய இதை அப்படியே மிருதனிடம் சொல்ல முடியாதே... என்று யோசித்தவள்,
“நீ இரு நான் போய் பேசி பார்க்கிறேன்..” என்றவள் வேறு வழியில்லாமல் அவள் சொன்ன காரணங்களை மிருதனிடம் வந்து சொல்ல நெருப்பில் இறங்காதது தான் குறை அந்த அளவுக்கு கொதித்துப் போய் பார்த்தான்.
“உங்களுக்கு எல்லாம் விளையாட்டா போயிடுச்சா...” என்று அமர்ந்து இருந்த சேரை பின் தள்ளி எழுந்து அந்த அரங்கம் முழுவதும் அதிர கத்தினான்.
“இந்த ஷோ பத்தி தெரியும் தானே... தெரிஞ்சி இருந்தும் லீவ் கேட்டா என்ன பண்றது... வாரத்துல ஒரு நாள் தானே ஷூட்டிங் நடக்குது. அதை கூட ஒழுங்கா அட்டென் பண்ண முடியலன்னா நீங்கல்லாம் எதுக்கு இதுல பார்டிஸ்பெஷனா கலந்துக்குறிங்க... உங்களை விட திறமையான பேர் இன்னும் எத்தனையோ பேர் இருக்காங்க... உங்களை தூக்கிட்டு அவங்களை போட ஒரு நிமிடம் ஆகாது... எனக்கு என்னோட ஷோ ரெஸ்பான்சிபிளிட்டி ரொம்ப முக்கியம். சோ யாரும் எங்கும் போக கூடாது.” என்றவன்,
“ஸ்டார்ட்...” என்று இருந்த இடைவேளை நேரத்தையும் ஏறக்கட்டி விட்டு தன் வேலையை ஆரம்பிக்க, எல்லோருக்கும் அல்லு விட்டது... எப்பொழுதும் ஷூட்டிங் நடந்து பாதி நாளுக்கு மேல் தான் கோவப்படுவான்.
இன்று ஆரம்பிக்கும் பொழுதே கோவமாக இருக்க, எல்லோரின் மனதிலும் புயல் அடிக்காதது தான் குறை... எப்படி மிருதனை எதிர்க்கொண்டு இன்றைய நாள் முழுவதையும் கடத்தப் போகிறோம் என்று அஞ்சிக்கொண்டு இருந்தார்கள்.
அதன் படி யாரும் சிறு பிழை விட்டாலும் வெடித்துக்கொண்டு தன் கோவத்தை அப்படியே கொட்டினான். ஒரு கட்டத்தில் அனைவருக்கும் திகிலாய் போக, அதில் சரியாக இருப்பவர்கள் கூட தடுமாற ஆரம்பிக்க, சக்தி மிருவுக்கு கண்ணை காட்டினான்.
“ஏன்டா என்னை மட்டும் கோத்து விடுறதுலையே குறியா இருக்கீங்க..” முணகியவள், ஒரு ப்ரஷ் ஜூசை எடுத்துக் கொண்டு அவனை நெருங்கினாள். உள்ளுக்குள் மனம் பெரும் படபடப்புடன் இருந்தது. அவன் இருக்கும் கோவத்தில் இந்த ஜூஸை வாங்கி மூஞ்சில் ஊத்தி அபிசேகம் பண்ணினாலும் ஆச்சரியம் இல்லை... என்று எண்ணிக்கொண்டே அவனிடம் நீட்டினாள்.
அவளையும் அவள் கையில் இருக்கும் ஜூஸையும் மாறி மாறி பார்த்தவன்,
“நான் உன் கிட்ட கேட்டனா?” முறைத்தான்.
“இல்ல மிருதன்... மத்தியம் வேற நீங்க எதுவும் சாப்பிடல இல்லையா. அது தான்... ப்ளீஸ் இதை மட்டும் குடியேன்...” என்று அவனிடம் கெஞ்சினாள்.
“ஓ...! காதலை காட்டுறியா..?” என்று நக்கல் பண்ணினான்.
“ப்ச்...” என்று அழுத்தவள், கொஞ்சம் செட்டை பாரு... எல்லாரோட முகமும் எப்படி இருண்டு போய் இருக்குன்னு... கொஞ்சம் காம்டவுன் ஆகுங்க...” என்று அனைவரையும் சுட்டிக் காட்டினாள்.
அப்போது தான் எல்லோரையும் பார்த்தான். “ப்ச்...” என்று உச்சுக் கொட்டியவன், வாங்கி ஒரே மூச்சில் குடித்து முடித்து அவளிடம் வெறும் கிளாசை கொடுத்தான்.
“அப்படியே குக்கிங் டிப்பார்ட்மென்ட்ல புட் வந்து இருக்கு... சாப்பிடுறீங்களா?” கேட்டவளை முறைத்து பார்த்தான்.
“இடம் குடுத்தா மடத்தை பிடுங்க பார்க்காத... போய் ஒழுங்கா எல்லாரும் வேலை செய்யிறங்கலான்னு பாரு...” என்றவன் காய்ந்து இருந்த வயிறால் அதிகம் கோவம் கொண்டவன், இப்பொழுது குளிர்ந்த பழசாரால் சற்றே தன்மையாக இயக்கினான் அந்த ஷோவை..
ஆனால் அவனை கூல் செய்தவளே அவனை மிருகமாக்க போகிறாள் என்று தெரியாமல் ஷூட்டிங் ஸ்பாட்டில் வளைய வந்துக் கொண்டு இருந்தாள்.