எல்லோரிடமும் விடை பெற்றுக் கொண்டு கிளம்ப ஆயத்தம் ஆனாள். தங்கைகளை கட்டிக் கொண்டவளுக்கு விழிகளில் நீர் நிறைந்துப் போனது. அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரித்தாள்.
“எத்தனை நாள் க்கா. நாலு நாளா, இல்ல ஒரு வரமா?” ஆர்வத்துடன் கேட்ட பிறையை பார்த்து மனம் கனக்க, சிரிப்புடன் எந்த பதிலும் சொல்லாமல்,
“வரேன்” என்றாள்.
“சீக்கிரம் வந்திடு க்கா” என்றாள் குறிஞ்சி. தலை--யை ஆட்டியவள் தயாகரனோடு வெளியே வந்தாள். அவளை வழியனுப்ப வந்த குணா மற்றும் பிபராகரனிடம்,
“என் தங்கைகளை நல்லா பார்த்துக்கோங்க.. ப்ளீஸ்” என்று கேட்டுக் கொண்டவள்,
தன் கண்ணீரை யாருக்கும் காட்டாமல் ஓடிப் போய் காரில் அமர்ந்துக் கொண்டவள் தலையை பின்னுக்கு சாய்த்துக் கொண்டாள். தயாழினியின் உள்மனக் கிடங்கை அறிந்துக் கொண்ட ஏனையவர்களுக்கு பெருமூச்சு மட்டும் தான் வந்தது.
அவள் வந்து அமரவும் நிமிடமும் தாமதிக்காமல் காரை கிளப்பிக் கொண்டு சென்று விட்டான் தயாகரன். இனி தான் போகும் பாதையில் வெறும் முள் மட்டுமே இருக்கும் என்பதை எண்ணியவளுக்கு விழிகளில் நீர் நிற்கவில்லை.
அவள் அழுவதை பார்த்த தயாகரனுக்கு எரிச்சல் மேல் எரிச்சல் வந்த வண்ணமாகவே இருந்தது.
“ஹேய் இங்க பாருடி..” என்று காரை ஓரமாக நிறுத்தி விட்டு வேகமாகவும் கோவமாகவும் அவள் புறம் திரும்பினான். அவனது சத்தத்தில் பக்கென்று ஆகி விட, அழுத விழிகளுடன் அவனை பார்த்தாள். அவள் பார்வையில் இருந்த பாவனையை கண்டு இவனுக்கு தான் ஐயோ என்று ஆனது.
“ப்ச் இங்க பாரு” என்று தன் கோவத்தை கட்டுப் படுத்திக் கொண்டு அவளிடம் பேச ஆரம்பித்தான்.
“உன் நிலைமை புரியுது. அதுக்காக இப்படி அழுதா எல்லாமே நின்று விடுமா? அது கிடையாது இல்லையா? அப்புறம் ஏன் அழுது உன்னை நீயே வருதிக்கிற?” கேட்டான்.
“ஆனா எனக்கு அழனும் போல இருக்கே?” என்று விசும்பலுடன் சொன்னவளை பார்க்க இன்னும் அவனுக்கு மனம் பாரமாகிப் போனது.
“இங்க பாருடி.. மேக்சிமம் உன்னை இதுல இருந்து எவ்வளவு தூரத்துக்கு விலக்கி வைக்க முடியுமோ அந்த அளவுக்கு உன்னை இன்வால்வ் பண்ணாம விலக்கி வைக்க பார்க்கிறேன். முடியாத பட்சத்துக்கு மட்டும் தான் நீ.. உன் ஹெல்ப் தேவை படுத்து.. சோ ப்ளீஸ்.. இப்படி அழுது என்னை மேலும் வேதனை படுத்ததா” என்றான்.
“நான் அழுதா உங்களுக்கு என்ன வந்துச்சு.. உங்களை பார்த்த நாளில் இருந்தது நான் அழுதுக்கிட்டு தான் இருக்கேன். அப்போல்லாம் அழறியா கூட இன்னும் கொஞ்சமா சேர்த்து அழு.. பார்க்க நல்லா இருக்குன்னு வேதனை படுத்துனவரு தானே நீங்க. இப்ப மட்டும் நான் அழுதா என்ன வந்துச்சாம்? அழ வேணான்னு சொல்றீங்க” மூக்கு விடைக்க பேசியவளை ஆழ்ந்துப் பார்த்தவன்,
“வந்தப்ப இருந்த மனநிலையில இப்போ நான் இல்ல.. சொன்னா கேளுடி” என்றான்.
“கேட்க முடியாது.. எனக்கு அழனும் போல இருக்கு.. நான் இப்படி அழ தான் செய்வேன். உங்களால என்ன செய்ய முடியுமோ அதை செஞ்சுக்கோங்க” என்று மீண்டும் கண்களில் கண்ணீரை அவள் வழிய விட,
பொறுத்துப் பொறுத்துப் பார்த்தவன் ஒரு கட்டத்துக்கு மேல் முடியாமல் பட்டென்று அவளின் கழுத்தை வளைத்து தன் முகத்துக்கு நேராக கொண்டு வந்து, அழுகையில் துடித்துக் கொண்டு இருந்த அவளின் உதடுகளை தன் இதழ்களால் சிறை பிடித்துக் கொண்டான். அதில் திகைத்து தடுமாறியவள் அவனிடம் இருந்து விலகப் பார்க்க, அதற்கு அவன் விட்டால் தானே..
“ஒழுங்கா அழுகையை கை விட்டா உன்னை எதுவும் செய்ய மாட்டேன். இல்லன்னா இப்படி தான் நொடிக்கு முன்னூறு முறை உன் உதட்டுல முத்தம் குடுத்துக்கிட்டே இருப்பேன். அப்புறம் எரியுது தொலைக்குதுன்னு சொன்னா என்னால ஒன்னும் பண்ண முடியாது” என்றான்.
“என்ன மிரட்டுறீங்களா?”
“அப்புறம் இல்லையா?” நக்கலாக கேட்டான். அவனது நக்கலில் முறைத்துப் பார்த்தாள்.
“அழாதடி” என்றான். அவனது பேச்சு கொஞ்சமே கொஞ்சம் தன்மையாக இருக்கவும் கண்களை துடைத்துக் கொண்டு நிமிர்ந்து அமர்ந்தாள்.
அதன் பிறகே அவன் வண்டியை எடுத்தான்.
“எங்க போறோம்னு கேட்க மாட்டியா?” அவனே பேச்சை ஆரம்பித்தான். அவள் திரும்பி மட்டும் பார்த்தாள்.
“என்ன ஆச்சு? பேசவே மாட்டிக்கிற?”
“பேசி மட்டும் என்ன ஆகப் போகுது?” சலித்தாள்.
“ப்ச்” என்று முறைக்க,
“நான் கேட்ட கோரிக்கையை கண்சிடர் பண்ணலாமே”
“உனக்கு ஒன்னும் ஆகாம நான் பார்த்துக்குறேன்டி. நீ முழுக்க முழுக்க என்னோட பொறுப்பு” வாக்கு குடுத்தான்.
“எனக்கு தெரியாது.. ஐ வான்ட் யூ” என்றாள்.
அவன் முறைத்துப் பார்த்தான்.
“நீங்க என்ன முறைச்சாலும் சரி.. என் கன்னி தன்மை உங்களால போனா ஓகே. அப்படி இல்லன்னா நான் வேற மாதிரி முடிவு எடுக்க வேண்டியது வரும்” என்றாள்.
“என்னடி மிரட்டுறியா?”
“அப்படின்னா அப்படியே வச்சுக்கோங்க” என்றவள் கண்களை மூடி சாய்ந்துக் கொண்டாள். அதன் பிறகு அவளிடம் எந்த பேச்சும் இல்லை. அசைவும் இல்லை.
நீண்ட மௌனத்தை கடந்து வந்த பிறகு “இறங்கு” என்றான். அப்பொழுது தான் மூடிய விழிகளை திறக்கவே செய்தாள்.
அவ்விடம் கொஞ்சம் வித்யாசமாக இருக்க,
“என்ன இடம்” என்று கேட்டுக் கொண்டே கீழே இறங்கினாள்.
“துறைமுகம்” என்றான் சுருக்கமாக.
“நாம கப்பல்ல போக போறமா?” கேட்டாள்.
“ம்ம்” என்றவன் அவளின் பையோடு தன் பையையும் சேர்த்து எடுத்துக் கொண்டவன் முன்னாள் நடக்க,
“கார்” என்றாள்.
“தம்பிங்க எவனாவது வந்து எடுத்துக்குவானுங்க” என்றவன் அங்கு தயாராய் இருந்த சிறிய வகை உல்லாச படகில் அவளை அழைத்துச் சென்றான்.
அந்த படகில் அதிகம் யாருமில்லை. ஒருசில பேர் மட்டுமே இருந்தார்கள். அவர்களை எல்லாம் பார்த்தவள்,
“இதுல அவனுங்க ஆளுங்க யாரும் இருக்காங்களா?” என்று தான் முதல் கேள்வியே கேட்டாள்.
“ம்ஹும்.. இது முழுக்க முழுக்க நம்ம ஆளுங்க மட்டும்.. அடுத்து கப்பல்ல மாறும் பொழுது தான் அவனுங்க ஆளுங்க எல்லாம் இருப்பானுங்க” என்று சொன்னான்.
“எப்போ மாறனும்?”
“மேக்சிமம் த்ரீ ஆர் போர் டேஸ்” என்றான்.
“அதுவரை நாம கப்பல்ல தான் இருக்கணுமா?”
“ம்ம்” என்றவன், அவளுக்கு என்று ஒரு அறையை காண்பித்தான்.
“இங்க இருந்துக்கோ” என்றவன் அவளை அறையின் உள்ளே விட்டுவிட்டு வெளியே தன் டீமோடு சேர்ந்து என்னென்ன செய்யணும் என்று பக்காவாக சொல்ல ஆரம்பித்தான். ஏற்கனவே போட்ட ப்ளானை சரியாக அவர்களுக்கு புரியும் படி சொல்லிக் கொண்டு இருந்தவனின் செவியில் மெல்லிசையாக கொலுசின் ஓசை கேட்க, தன் கவனத்தை திருப்பினான் அவள் புறம்.
“என்ன பண்ற?” என்றான் படிஏறி மேலே சென்றுக் கொண்டு இருந்தவளிடம்.
“இல்ல வியூஸ்” என்றாள் தயங்கி.
“ஓகே.. கவனமா இரு.. போக போக காற்று வேகம் எடுக்கும்” என்றவன் அந்த கூடத்தில் குழுமி இருந்த தன் டீமில் கவனத்தை வைத்தான்.
அவ்வப்பொழுது நேரத்தையும் பார்த்துக் கொண்டவன், அவாள் கீழே இறங்கி வராமல் போக, அவனால் கவனத்தை நிலை நிறுத்த முடியவில்லை. கால் மணி நேரம் கூட ஆகி இருக்காது.
“ஆப்டர் புட்க்கு பிறகு டீச் பண்றேன்” என்று தலையசைப்புடன் எழுந்துக் கொண்டவன் அவளை தேடி மேலே வந்து விட்டான்.
தயாழினி அங்கே கம்பிகளை பற்றிக் கொண்டு கரையில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாய் நகர ஆரம்பித்த பாதையை பார்த்துக் கொண்டு இருந்தாள். கிட்டத்தட்ட கரையே தெரியவில்லை. ஆனாலும் அவள் வந்த பாதையை விடாமல் பார்த்துக் கொண்டு இருக்க அவளின் பின்னாடி வந்து நின்றான்.
காற்றில் அவள் கட்டி இருந்த புடவை சரசரக்க, முந்தானை பறந்தது.. அதை பிடித்து தோளோடு போர்த்திக் கொண்டாள். அதுவும் சரசரக்க, அந்த சத்தம் பிடிக்காமல் மொத்தமாக இழுத்து தன் இடுப்பில் சொருக்கிக் கொண்டு வேடிக்கை பார்க்க, எடுப்பாக தெரிந்த அவளின் இடுப்பை பார்த்தபடி நின்றவன்,
“என்ன பீலிங்கா?” என்று கேட்டான்.
“ஏன் இருக்கக் கூடாதா?” என்றாள் பதிலுக்கு.
“ப்ச் பதில் சொல்லுடி. அதை விட்டுட்டு திரும்ப கேள்வி கேட்காத” என்றவன் அவளின் இரு புறமும் தன் கைகளை வைத்து சிறை செய்தவன் போல நின்றுக் கொண்டான்.
ஆனாலும் அவனின் உடம்பு அவளை தொடவில்லை. நகர்ந்தே இருந்தான்.
“கீழ எல்லாம் விழ மாட்டேன்” என்றாள்.
“ப்ச்...” என்று சலித்துக் கொண்டவன்,
“கொஞ்ச நேரம் வாயை மூடிட்டு இருடி” சொன்னவன் எந்த வார்த்தையாடலும் இல்லாமல் அவளோடு நீண்ட நேரம் கடற்காற்றை அனுபவித்தபடி நின்றான்.
உச்சி பொழுதுக்கு உணவு உண்ண வர சொல்ல, வா போகலாம் என்றான்.
“இல்ல நான் வரல” என்றாள்.
“எதுக்காக இப்படி அடம் பிடிக்கிற? வா போகலாம்” என்றான்.
“ப்ளீஸ்.. இதுக்காவது என் விருப்பத்தை மதிங்க” என்றாள் இயலாமையுடன்.
“பட்டினி இருந்தா மட்டும் எல்லாம் சரியா போகுமா? இல்ல தானே. வந்து சாப்பிடு. பிறகு எதா இருந்தாலும் பார்த்துக்கலாம். அதோட இப்படி காத்துல நிற்காத.. உடம்புக்கு சேராம போயிடும்” என்றான்.
“சொன்னா கேட்க மாட்டீங்களா? எனக்கு பசிக்கல. உங்களுக்கு பசிச்சா போய் சாப்பிடுங்க. எனக்கு என்னவானா உங்களுக்கு என்ன” என்று கத்தினாள்.
“ஷ்.. எதுக்குடி இப்படி கத்துற? பழைய தயாகரனை எடுத்து வெளில விடவா?” மிரட்டினான்.
“நீங்க எந்த தயாகரனை வெளியே விட்டாலும் எனக்கு கவலை இல்லை. பயமும் இல்லை” என்றாள்.
“ஓ.. அந்த அளவுக்கு வந்தாச்சா?” கேட்டவனின் கேள்வியில் இருந்த ஏளனம் கண்டு பொங்கியவள், வேகமாய் அவன் புறம் திரும்பி அவனின் சட்டையை கோர்த்து பிடித்து,
“ஏன் இப்படி என்னை டார்ச்சர் பண்றீங்க? எல்லாமே உங்க விருப்பம் மட்டும் தானா? எனக்குன்னு எதுவுமே இல்லையா? இல்ல இருக்கக் கூடாதா?” கண்ணீருடன் கேட்டவள்,
“உங்களால முடிஞ்சா என்னை அக்சப் பண்ணிக்கோங்க.. இல்லன்னா விடுங்க எனக்கு சோறும் வேணாம் ஒன்னும் வேண்டாம். இந்த இடத்தையும் விட்டு என்னால வரமுடியாது” என்று வீம்புடன் சொன்னவள் பட்டென்று கடல் புறம் திரும்பிக் கொண்டாள்.
இப்படி இவனிடம் கெஞ்ச வேண்டி இருக்கே என்று உள்ளுக்குள் செத்து மடிந்தாள். அவளின் உணர்வுகளை முழுவதுமாக உள் வாங்கியவன்,
“உன்னோட விருப்பம்.. வந்து தின்னா தின்னு.. இல்லன்னா எப்படியோ போ” என்று விட்டுட்டு கீழே வந்து விட்டான்.
அதன் பிறகு கால் கடுக்க அங்கே தான் இருந்தாள். இறங்கி கீழே வரவில்லை. வெளிச்சம் கொஞ்சம் கொஞ்சமாய் மறைய, அந்தி வானம் சிவந்து நின்றது. அதற்கு மேல் முடியாமல் அப்படியே கீழே அமர்ந்தவளின் பார்வை மீண்டும் அந்த கடலிலே தான் இருந்தது.
கீழே தண்ணீர்... நீல நிறம். மேலே வானத்தை அண்ணாந்து பார்த்தாள். அதுவும் நீல நிறம். வெள்ளை நிற மேகங்கள் கூட இல்லை. அதையே மீண்டும் மீண்டும் பார்த்தவளுக்கு வெறும் வயிற்றை பிரட்டிக் கொண்டு வர, அவளால் ஒன்றுமே செய்ய முடியவில்லை.
அதுவும் கடல் காற்று அவளுக்கு போக போக ஒருவித ஒவ்வாமையை கொடுக்க அவளால் கொஞ்சமும் சமாளிக்க முடியவில்லை.
வேகமாய் கீழே ஓடி வந்து தன் அறைக்குள் இருந்த கழிவறைக்கு சென்று குடலே வெளியே வரும் வரை வாந்தி எடுத்து முடித்து தாழ முடியாமல் படுக்கையில் போய் சரிந்துக் கொண்டாள். கண்களில் கண்ணீர் வந்த வண்ணமாகவே இருந்தது.
அவள் இந்த நிலைக்கு தான் வருவாள் என்று கணித்து இருந்தவன் லெமன் ஜூசை அவளுக்கு பருக கொடுத்தான். வீம்பு பண்ண பார்த்தாலும் அவளின் உடம்பில் கொஞ்சமும் தெம்பு இல்லாததை உணர்ந்து முழுவதுமாக குடித்தாள்.
“கொஞ்ச நேரம் ஆனா பிறகு சாப்பிடு.. இப்போ படு” என்று அவன் இளக்கமாய் சொல்லி விட்டு போக, அவனின் இளக்கத்தில் இவளுக்கு இன்னும் கண்ணீர் அதிகம் வந்தது.
தொடரும்..
நலம் விசாரித்த அத்தனை பேருக்கும் எனது நன்றிகள் தோழமைகளே..
இப்போ பரவாயில்லை.
இனி ரெகுலரா கதை வரும். பொறுமையாக இருந்த நட்புகள் அனைவருக்கும் எனது அன்புகள்