அவனுக்கு அவ்வளவு தான் பொறுமை. உடனே காரிலிருந்த வாட்டர் பாட்டிலில் இருந்த நீரை எடுத்து அவள் மூஞ்சியில் விசிறி அடிக்க, அடித்துப் பிடித்துக்கொண்டு எழுந்தாள். அப்பொழுது தான் அவளுக்கு சுற்றம் உரைத்தது.
“சாரி, தூங்கிட்டேன்” என்றாள் முகத்தை துடைத்துக்கொண்டு. அவன் ஒன்றும் பேசாமல் கதவை திறந்துக்கொண்டு உள்ளே செல்ல இவளும் அவனை தொடர்ந்து உள்ளே நுழைந்தாள்.
வீட்டில் சொல்லிக் கொள்ளும்படி எந்த பொருளும் இல்லை. வாங்கும் நியூஸ் பேப்பர் கூட இரண்டு வாரத்துக்கு ஒரு முறை பழைய பேப்பருக்கு சென்றுவிடும். அதனால் அந்த வீட்டில் பெரும்பாலும் எந்த பொருளுமே இல்லாமல் போனது.
அவனுக்கு குப்பை சேர்ப்பது அறவே பிடிக்காது. உடை கூட எண்ணி பத்து தான் வைத்திருக்கிறான். சுற்றி பார்த்தவளுக்கு பெரிதாக ஒன்றும் தெரியவில்லை.
பசி வயிற்றைக் கிள்ளியது. சாப்பிட ஒன்றும் இல்லை என்று பார்த்த உடனே தெரிந்து போக தண்ணீரை குடித்து போக்கிக்கொள்ளலாம் என்று எண்ணி சமையல் அறைக்குச் சென்றாள்.
அங்கு தண்ணீர் சுத்தகரிப்பு இயந்திரம் மட்டும் ஒழுங்காக இருந்தது. மத்த பொருட்கள் எல்லாம் எதுவும் இல்லை. அதன் மேலே ஒரு எம்ப்டி வாட்டர் பாட்டில் பிடித்து குடிப்பதற்காக இருந்தது.
அதை எடுத்து நீர் நிரப்பி குடித்தவள் அப்பொழுது தான் மாற்று உடை கூட தான் எடுத்து வரவில்லை என்பது உரைத்தது. சரி இந்த மேக்கப்பையாவது கலைப்போம் என்று எண்ணினாள். ஆனால் எந்த அறைக்குள் போவது என்று தெரியாமல்,
“ரெஸ்ட் ரூம் போகணும்” என்றாள் தன் மௌனத்தை உடைத்து. அவன் பாத்ரூமை நோக்கி ஒரு விரலை காட்டினான். அந்த அறையைத் திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தவள் ஆளுயர கண்ணாடியில் தன்னை பார்த்து தன் தலையில் அங்கும் இங்கும் குத்தி இருந்த பின்களை எல்லாம் கழட்டி வைத்து கசங்கியப் பூக்களை எடுத்து குப்பைத் தொட்டியில் போட்டவள் ஹேர் ஸ்ப்ரே அடித்து இருந்ததால் மொற மொறவென்று இருந்த கூந்தலை சீவி சிக்கெடுத்து தலை குளிக்க கொண்டைப் போட்டவள் சேலையில் குத்தியிருந்த பின்களைக் கழட்டிவிட்டு போட்டிருந்த நகைகளையும் கழட்டி வைத்தவள் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
குளிர் நீர் ஜில்லென்று மேனியில் பட, சோர்வாய் இருந்த உடம்புக்கு சற்றே தெம்பாக இருந்தது. குளித்து முடித்து அங்கிருந்த துண்டை எடுத்து தலைக்கு கட்டியவள் இன்னொரு துண்டை எடுத்து உடம்பு முழுவதும் சுற்றிக்கொண்டாள்.
வெளியே வந்தாள். யாருமில்லை. ஆனால் கட்டிலின் மீது மட்டும் ஒரு செட் ஆண்கள் உடுத்தும் துணி இருந்தது. அதை எடுக்கலாமா வேணாமா? என்று அவள் தயங்கி நிற்க,
“இப்போதைக்கு இதை போட்டுக்கோ...!” வெளியே இருந்து குரல் வர, வேகமாய் அதை எடுத்து தன் உடலை மறைத்துக்கொண்டவள், கட்டி இருந்த கூரை புடவையை துவைத்து வைத்தாள். எங்கே காயப்போட என்று தெரியவில்லை.
அதை எடுத்துக்கொண்டு வெளியே வர, அவளது உருவத்தைப் பார்த்தான். அவனது உடை அவனுக்கு மிக கச்சிதமாக இருக்கும். ஆனால் இவளுக்கு பெரிதாக இருந்தது. அதுவும் தலையில் துண்டோடு அவள் கையில் அவளின் புடவையோடு வந்து நிற்க வீட்டு சுற்று சுவரின் உள்ளே இருந்த கொடியைக் காண்பித்தான்.
அதில் காயப்போட்டுவிட்டு உள்ளே வந்தாள். அங்கு இருவருக்கும் சாப்பாடு தயாராக இருந்தது. அவனை தேடினாள். அவனும் குளிக்க போய் இருந்தான். அதற்குள் இவள் தண்ணீர் பிடித்து வைத்துவிட்டு மேசையில் வந்து அமர்ந்தாள்.
சிறிது நேரத்தில் அவனும் வந்துவிட எந்த வித பேச்சுகளும் இன்றி அமைதியாக அந்த உணவு வேளை நகர்ந்தது. கண்களைச் சுழற்றிக்கொண்டு தூக்கம் வர விக்ரமசேனன் கையைக் காட்டினான் அறை எது என்று. அங்கு ஒரு ஆள் படுக்கும் கட்டில் இருக்க கீழே போர்வையை விரித்து படுத்துவிட்டாள் அவனை எதிர் பார்க்காமல்.
சிறிது நேரம் அந்த கேசை பத்தியே யோசித்துக்கொண்டு இருந்தவனுக்கு கலைப்பில் தூக்கம் வர எழுந்து உள்ளே சென்றான்.
அங்கே தரையில் படுத்து இருந்தவளை பார்த்து தோள்களை குலுக்கியவன் கட்டில் முழுவதும் தன் கால்களை நீட்டி பரப்பி தூங்கிவிட்டான்.
நடு இரவில் ஏதோ சத்தம் கேட்க எழுந்து அமர்ந்தான். கீழே பார்க்க ஏசி அதிகமாக இருந்ததால் குளிரில் போர்வையின்றி நடுநடுங்கி கொண்டு இருந்தாள் நறுமுகை.
ஏசியின் அளவை குறைத்துவிட்டு தூங்க போக குளிர் இல்லாமல் அவனுக்கு தூக்கம் வரவில்லை.
“என்னடா இது?” என்று எரிச்சல் பட்டவன் அவசரத்துக்கு அதிகமாக கூட போர்வை இல்லாதை உணர்ந்து வேறுவழியின்றி அவளை தூக்கி கட்டிலில் போட்டுவிட்டு ஏசியின் அளவை அதிகரித்தவன் நடுங்கும் அவளை தன் மேல் இழுத்து போட்டுக்கொண்டு தூங்கிவிட்டான்.
குளிருக்கு அது இதமாக இருக்க நறுமுகையும் எதுவும் சொல்லவில்லை. அதோடு முதல்முறை கிடைத்த அவனது அருகாமையில் அவளுக்கு பேச வாயும் வரவில்லை.
அவன் இழுத்து தூக்கியதில் அவள் போட்டிருந்த டி-சர்ட் சற்றே மேலேறிக்கொள்ள அவனது முரட்டு கரம் அவளது இடையில் அழுந்த பதிந்தது. அவனுக்குமே அது முதல்முறை என்பதால் கையை விலக்கிக்கொள்ள தோன்றவில்லை.
அதோடு அவளின் இடை மிக வழுவழுவென்று இருக்க அதை அவனது கரம் ஆராய்ந்து பார்க்க நறுமுகை தவித்துப் போனாள். அவனை தடுக்கவும் முடியாமல் மேற்கொண்டு செல்லவும் முடியாமல் அமைதியாக அவனது கைப்பிடியில் இருந்தாள்.
விக்ரமசேனனோ அவளது இடையிலிருந்து கை எடுக்க வேண்டும் என்று எண்ணினாலும் ஏனோ அவனையும் மீறி அவனது கை அவளது இடையில் விளையாடியது.
இன்னும் கொஞ்சம் மேலே போக படபடத்து போனாள். அவனது வருடல்களில் அவளையும் அறியாமல் நெளிய, அவனோடு இன்னும் சற்று ஒட்ட வேண்டி வந்தது. அவளின் அருகாமை அவனை எதையும் யோசிக்கவிடவில்லை. ஏசியை இன்னும் அதிகமாக வைத்தவன் அவளின் உடைகளைக் கலைந்து அவளிடம் ஒன்றினான்.
அவனது இதழ்கள் அத்துமீறி அவளது முகத்தில் பதிந்து போனது. மீசை முடி குத்த குத்த அவளை முத்தமிட்டு ஆரத்தழுவி அவளுள் மெல்ல மெல்ல முகிழ்த்து அவளில் கரைந்து போனான்.
ஒரு பேச்சு வார்த்தையில்லா கூடல். முதல்முறை என்பதால் அவளுக்கு ரொம்பவும் பயமாய் இருந்தது. ஆனாலும் அதை அவனிடம் காட்டாமல் அதிக வலி எடுக்கும் போது, “அம்மா” என்று அலறிவிட்டாள்.
அதற்கு கூட அவன் சமாதானம் செய்யவில்லை. மாறாக அவன் எழுந்து செல்லப்பார்க்க, அவனது முகத்தில் வந்து போன நிராசையை உணர்ந்து, அவனது தோளில் கை வைத்து இழுத்தாள். நறுமுகையின் மனதில் அவன் எப்பொழுதோ நிறைந்து போய் இருந்தான்.
அதனால் அவனை தவிக்க விட அவளுக்கு மனம் வரவில்லை... தன்னை நோக்கி அவனை இழுக்க, அதில் அவனது முரட்டு மீசையின் கீழ் இருந்த ஆதாரத்தில் மெல்லிய புன்னகை வந்தது. அதை அவள் கவனிக்கும் முன்பே மறைத்துக்கொண்டவன் அவளிடம் ஒன்றிப்போனான்.
விடிய விடிய அவளிடம் கூடியவன் விடிந்தவுடன் வேலைக்குச் சென்றுவிட்டான். இரவு அவன் படுத்திய பாட்டில் மத்தியம் இரண்டு மணிக்கு தான் எழுந்தாள் நறுமுகை.
எழுந்தவளுக்கு சாப்பிடாதது ஒரு மாதிரி கிறக்கமாக இருக்க மெல்ல எழுந்து குளியல் அறைக்கு சென்று தலையில் தண்ணீரை ஊற்றிக்கொண்டு குளித்து முடித்தவள் வெளியே வந்து அவனது உடைகளில் ஒன்றை எடுத்துப் போட்டுக்கொண்டாள்.
பசி வயிற்றைக் கிள்ள கூடத்துக்கு வந்தாள். அங்கே இரண்டு பார்சல்கள் இருந்தது. ஒன்றை எடுத்து பிரித்து பார்க்க அதில் இட்லி இருந்தது. இன்னொன்றை எடுத்து பார்க்க அதில் சூடான மத்திய உணவு இருந்தது.
‘ஆளை காணோம். ஆனா சாப்பாடு மட்டும் சூடா இருக்கு.’ எண்ணியவள் இது தனக்கு தான் வைத்து இருக்கிறார் என்று சாப்பிட ஆரம்பித்தாள்.
வீடு கொஞ்சம் சுத்தமாகவே இருந்து. சாப்பிட்டுவிட்டு அந்த வீட்டை முழுமையாக சுத்தி பார்த்தாள். தனி வீடு. மூன்று அறை. ஒரு சமையல் அறை, கூடம், பின் கட்டு, முன் பக்கம் வராண்டா இருந்தது. அதில் இரண்டு கதவு இருக்க மர கதவு பூட்டாமல் சாத்தி வைத்து இருக்க, அதை ஒட்டி இருந்த இரும்பு கேட் கதவு வெளிப்பக்கமாக பூட்டி இருந்தது. அவன் தான் பூட்டி சென்றான். தூக்கத்தில் இருப்பவளை கலைக்காமல்.
வீட்டை சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து இருந்தது. நல்ல காற்றோட்டம் வந்தது. கூடவே குளுமையாகவும் இருந்தது. அவனது உடைகள் அழுக்கு கூடையில் இருக்க அதை துவைத்து போட்டுவிட்டு, படுக்கையை உதறி சுத்தம் செய்து வீட்டைக் கூட்டிவிட்டாள். வெளியே காய்ந்துக்கொண்டு இருந்த கூரை புடவையை எடுத்து வைக்க முடியாமல் கதவு பூட்டி இருக்க போய் படுத்துவிட்டாள்.
மாலை ஐந்து மணி போல யாரோ கதவை தட்ட யாராக இருக்கும் என்று கதவுக்கு பின் இருந்து எட்டி பார்த்தாள். அங்கே ஒரு புது ஆண் நின்றிருக்க தயக்கமாய் இருந்தது. அதுவும் தான் போட்டு இருக்கும் கணவனது உடையில் மற்றவர்கள் முன் போய் நிற்க முடியாமல் தயங்கி கதவை திறக்க மறுத்தாள்.
“நறுமுகை...” அவளது பெயர் சொல்லி அழைக்க திகைத்து தான் போனாள். கதவை திறக்காமலே, “யார் நீங்க?” கேட்டாள்.
“உன் கணவனோட வீணா போன நண்பன் நான் தான்மா. என் பெயர் தீபன்.” என்று சொல்ல அவளால் நம்ப முடியவில்லை.
“அவரு இல்லைங்களே. அப்புறமா வர்றீங்களா?” கதவுக்கு இந்த புறம் இருந்து தயக்கமாய் கேட்டாள்.
அவளின் தயக்கம் புரிய, “ஒண்ணும் பிரச்சனை இல்லமா. ஒரு புது போன் வாங்கிட்டு வர சொன்னான். நீ உன் குடும்பத்துக்கு பேசுவல்ல. அதை கேட்ல மாட்டிவிட்டுட்டு போறேன். எடுத்து உன் குடும்பத்துக்கு முதல்ல பேசிடும்மா. உங்க அப்பாவும் அம்மாவும் ரொம்ப தவிச்சி போயிட்டாங்க.” என்று அவன் போய் விட, லேசாக மர கதவை திறந்து அதை ஒட்டி இருந்த இரும்பு கம்பி போட்ட கேட்டில் மாட்டி இருந்த கவரை எடுத்துக்கொண்டு வந்து அமர்ந்தாள்.
போனோடு சில ஸ்நேக்ஸ் பாக்கெட்டும் இருந்தது. பசிக்கு அதை சாப்பிட்டுக்கொண்டே போனை நோண்டினாள். போனில் எல்லோருடைய எண்ணையும் பதிந்து வைத்து இருந்ததான் அவளின் கணவன். எடுத்து முதலில் தந்தைக்கு போட்டாள்.
“அம்மாடி.” என்று அவரின் தளுதளுப்பான குரலில் இவளுக்கு கண்கள் கலங்கி கொண்டு வந்தது. அதை அவரிடம் காட்டிக்கொள்ளாமல்,
“அப்பா எப்படி இருக்கீங்க? இங்க நான் நல்லா இருக்கேன். உங்க மாப்பிள்ளை என்னை சூப்பரா பார்த்துக்குறாரு ப்பா.” என்று அவள் சொல்ல, அதை கேட்டு பெற்றவர்களின் மனம் குளிர்ந்துப் போனது.
“அவர் அப்படி முரட்டு தனமா எழுந்து போனதும் கொஞ்சம் பயமா போச்சுடா. அது தான் உன்னையும் போக சொன்னேன். அப்பா மேல எதுவும் கோவமாடா?” பரிதவித்து போனார் கந்தன்.
“உங்க மேல எனக்கு என்னப்பா கோவம். கணவன் எங்க இருக்கணுமோ அங்க தானே மனைவியும் இருக்கணும். அதோட அவரு என்னை நல்லா பார்த்துக்குறாருப்பா நீங்க கவலை படாதீங்க” என்றாள்.
“அம்மாடி உன் உடையெல்லாம் இங்கயே இருக்கு. குடுத்துவிடவாடா?”
“அப்பாவும் அம்மாவும் தங்கச்சியை விட்டுட்டு இப்போ வர முடியாதுடா. அவளுக்கு கல்லூரி இருக்கு.” என்று தயக்கமாய் பேச,
“அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை இல்லப்பா. இங்க அவரே உடையெல்லாம் வாங்கி குடுத்துட்டாரு. என்னை பத்தி நீங்க கவலை பட வேணாம். உங்க மருமகன் என்னை பத்திரமா பார்த்துகுறாரு.” என்று அவர்களை சமாதானம் செய்து போனை வைத்தவளுக்கு ஏனோ அவனது உடையை போட்டு பழகிய இந்த ஒரு நாளில் அவனது வாசம் அவளோடு ஒட்டிக்கொண்டு இருப்பதை கண்டு நேசம் பூண்டது மனது.