சுவரில் சாய்ந்து நின்றபடி அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த பஞ்சவன், ஒரு கட்டத்துக்கு மேல் தன் பொறுமையை எல்லாம் காற்றில் பறக்க விட்டு, “சோ என்கிட்டே உன்னால எதையும் பகிர்ந்துக்கொள்ள முடியாது. உன் வேதனையை சொல்லி என் கிட்ட ஆறுதலும் வாங்க முடியாது... ரைட்...” என்று அடக்கப்பட்ட கோவத்துடன் அவன் கேட்க படுக்கை விரித்துக் கொண்டு இருந்தவள் திகைத்துப் போனாள். மூச்சு அப்படியே ஒரு கணம் நின்றுப் போனது. விழிகளில் பயம் அப்ப பஞ்சவனை திரும்பிப் பார்த்தாள் மகரா...
அன்று மத்தியம் மகராவுக்காக பஞ்சவன் உணவு எடுத்துக் கொண்டு மேலே வர, “ம்ம் பொண்டாட்டி மேல ரொம்ப தான் கருணை” என்று கேலி செய்து சிரித்தாள் மகரா.
“என் பொண்டாட்டி மேல எனக்கு அக்கறையும் இருக்கு கருணையும் இருக்கு... உனக்கு என்னடி” என்று அவளுக்கு ஊட்டிவிட வர திகைத்துப் போனாள்.
“சார் நீங்க என்ன செய்துட்டு இருக்கீங்க?” என்று இவள் பதற,
“ஏன் ஊட்டி விடுறேன்” என்றான் கொஞ்சமும் அலட்டிக் கொள்ளாமல்.
“அது சரி” என்றவள், “குடுங்க நானே சாப்பிட்டுக்குறேன்...” என்று அவனிடம் இருந்து உணவு தட்டை வாங்கிக்கொள்ள முயல, அவளின் கையை தட்டி விட்டு,
“யாரோ ஊர்ல இருக்கும் பொழுது சொன்னாங்க... ஊட்டி விட ஆளு இல்லன்னு. அது தான் இப்போ ஊட்டி விடுறேன்” என்றான்.
“அது நான் அங்க சொன்னேன். இங்க ஊர்ல வந்து ஒன்னும் சொல்லல்ல... குடுங்க ப்ளீஸ்” என்று முகம் சிவந்தாள்.
“உன் வெட்கத்தை துடைக்க ஆவணம் செய்யவா?” என்று கேட்டுக் கொண்டே அவளை நெருங்கி வர, ஒற்றை விரலால் அவனின் நெஞ்சை தொட்டு தள்ளி நிறுத்தியவள்.
“அதுக்கு இப்போ நேரம் இல்ல டிஎல் சார்.. கீழே உங்களை காணோம்னு தேடுறாங்க போங்க” என்று சிரித்தவள் அவனது கையில் இருந்த தட்டை வாங்கிக்கொண்டு உண்ண ஆரம்பித்தாள்.
“அப்போ எப்போ தான் என்னை அனுமதிப்ப” என்று கேட்டவனை புரியாமல் பார்த்தவள், “உன் வெட்கத்தை துடைத்துப் போட” என்று இறுதி வாக்கியத்தை சொல்லி முடித்தான்.
“ப்ளீஸ்” என்று சொன்னவளின் தவிப்பு அவனுக்கு நன்கு புரிய,
“இப்போ தப்பிச்சுட்ட... ஆனா என் கிட்ட ஒரு நாள் வசமா சிக்குவடி. அப்போ வச்சுக்குறேன்” என்று கறுவியவன் அவளை மேலும் தொந்தரவு செய்யாமல் கீழே போய் விட்டான். பெண் வீட்டு ஆட்கள் எல்லோருக்கும் குகனை பிடித்து விட அதோடு சேர்ந்து சொத்தும் வீடும் இருக்க திருமணத்துக்கு எந்த தடையும் சொல்லாமல் அடுத்த கட்டத்துக்கு கொண்டு சென்றார்கள்.
கல்யாண உறுதி நாளை தேர்ந்தெடுத்து விட்டு அதை ஒட்டியே திருமணத்தையும் வைத்துக் கொள்ளலாம் என்று முடிவு செய்துக் கொண்டு அடுத்த கட்ட வேலையை பார்க்கத் தொடங்கினார்கள்.
அன்றிரவு குளித்து விட்டு வந்த பஞ்சவன் மகராவின் பின்னாடி நெருக்கமாக நின்றுக்கொண்டு அவளின் பின் கழுத்தில் தன் கன்னத்து முடியை சொரசொரவென்று தேய்த்து எடுத்தான்.
அதில் அவளுக்கு அந்த இடமே எரிய,
“ப்ச் இம்சை பண்ணாதீங்க ங்க... அந்த இடம் எப்படி எரியுது தெரியுமா?” என்று உடலை சற்றே குறுகிக் கொள்ள அதற்கு விடாமல் இதழ்களால் அவளின் வெற்று முதுகில் ஊர்வலம் போனான்.
“என்கிட்ட எதுவும் சொல்லணுமா மகரா?” என்று கேட்டான் அவளிடம் இளைந்துக்கொண்டே.
“அப்படி எல்லாம் எதுவும் இல்லங்க” என்று இவள் சொல்லிக் கொண்டே அவனின் முகத்தை பின்னாடி கை விட்டு இழுத்து தன் கழுத்தில் புதைத்துக் கொண்டாள்.
அவளின் இழுப்பில் அவனும் கரைந்தவன் இதழ்களால் அவளின் கழுத்தை சுற்றி ஊர்வலம் போக ஆரம்பிக்க சொல்லொண்ணாத நூதன உணர்வு அவளை ஆக்கிரமிப்பு செய்தது. அதில் அவனின் முகத்தை தன்னை விட்டு விலக்கப் பார்த்தாள். அவனோ அடமாய் அவளிடம் ஒன்றிக் கொண்டான்.
அந்த நேரம் பார்த்து பிள்ளைகள் இருவரும் தூக்கத்துக்கு சிணுங்க... “கிரேட் எஸ்கேப்டி” என்று விட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.
போகும் அவனை இதழ்களில் கசிந்த புன்னகையுடன் பார்த்தவள் பிள்ளைகளை தூங்க வைக்க ஆரம்பித்தாள். பாட்டு பாடி, பாலூட்டி பிள்ளைகளை தூங்க வைத்து விட்டு கீழே இவர்கள் இருவருக்கும் படுக்கை விரித்துக் கொண்டு இருந்தாள் மகரா...
குளித்து விட்டு வெளியே வந்தவன் தலையை துவட்டியபடியே சுவரில் சாய்ந்து நின்றான். அவன் கதவு திறந்து வந்த பிறகு இவளின் முகத்தில் இருந்த சிவப்பு மாறவே இல்லை.
அவளின் முகச்சிவப்பை பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு பெருமூச்சு வந்தது. அவளையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டு இருந்த பஞ்சவனுக்கு ஒரு கட்டத்துக்கு மேல் தன் பொறுமையை எல்லாம் காற்றில் பறக்க விட்டு,
“சோ என்கிட்டே உன்னால எதையும் பகிர்ந்துக்கொள்ள முடியாது. உன் வேதனையை சொல்லி என் கிட்ட ஆறுதலும் வாங்க முடியாது... ரைட்...” என்று அடக்கப்பட்ட கோவத்துடன் அவன் கேட்க படுக்கை விரித்துக் கொண்டு இருந்தவள் திகைத்துப் போனாள். மூச்சு அப்படியே ஒரு கணம் நின்றுப் போனது. விழிகளில் பயம் அப்ப பஞ்சவனை திரும்பிப் பார்த்தாள் மகரா...
அவள் விழிகளில் இருந்த பயத்தை கண்டு பல்லைக் கடித்தான்.
“குகனுக்கு பார்த்த பெண்ணோட அக்கா தான் நீ இல்லையா?” என்று மேலும் கேட்டான்.
அவள் தலையை மட்டும் ஆட்டினாள்.
“என்னை பிடிக்கலையா?” என்று கேட்டான். பட்டென்று நிமிர்ந்து அவனை பார்த்தாள் மகரா. அவள் பார்த்த பார்வையில் இருந்த குற்றச்சாட்டுக் கண்டு உள்ளுக்குள் உல்லாசம் பிறந்தது. ஆனாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் வீம்புக்கு என்று நின்றான் பஞ்சவன்.
“எவ்வளவு பெரிய விசயத்தை மறைச்சு இருக்க தெரியுமாடி நீ...” என்று ஆதங்கப் பட்டவன், “நீ இன்னும் என்னை ஏத்துக்கவே இல்லடி. நான் தான் உன் கால்ல விழுந்து கிடக்குறேன்.. நீ உன் எல்லையிலையே தான் இருக்குற... நான் தான் காதல் குடும்பம் கத்திரிக்கான்னு என்னன்னெவோ யோசிச்சிட்டு இருக்கேன்..”
“நீ உன் வரையில் சரியா தான் இருக்க... என்னை நீ எள்ளு முனையளவு கூட நம்பலன்னு இந்த ஒரு விசயத்துலயே நல்லா காட்டிட்ட. நான் யோரோ தானே... அப்படி இருக்கப் போய் தானே உன் சம்மந்தப் பட்ட எதிலும் என்னை ஒதுக்கி வைக்கிற..” என்று அவன் பாட்டுக்கு பேசிக்கிட்டேப் போக கையில் இருந்த ரஜாய் மெத்தையை அப்படியே போட்டு விட்டு அவனை வேகமாய் நெருங்கினாள்.
வேகமாய் வரும் அவளை கொஞ்சம் கூட சளைக்காமல் எதிர்நோக்கினான்.
“என்ன என்னை சமாதனம் செய்ய போறியா...? யாருக்குடி வேணும் உன் சமாதனம்.. போய் குப்பையில போடு உன் வெட்டி சமாதானத்தை.. வந்துட்டா பெருசா....” என்று அவன் சொல்லிக் கொண்டு இருக்கும் பொழுதே அவனின் உயரத்துக்கு எம்பியவள் அவனின் கழுத்தை தன் உயரத்துக்கு வளைத்து அவனின் திண்மையான இதழ்களில் வன்மையாக முத்தமிட்டாள்.
பஞ்சவனுக்கு ஒரு நிமிடம் தன் கண்களையே நம்ப முடியவில்லை.
“ஹேய்...” என்று அவன் கத்த,
“ஷ்...” என்று அடக்கியவள் அவனின் கையை எடுத்து அவளின் இடையில் அவளே வைத்துக் கொண்டு அவன் கொடுத்த முத்தக் கணக்கை இப்பொழுது அவள் கையில் எடுத்துக் கொண்டாள்.
அவளின் மென்மையான இடையில் தன் கையை வைத்து தன் உள்ளத்து உணர்வுகளை எல்லாம் போட்டு கொட்டி கவிழ்க்க தவித்துப் போனாள்.
அவனின் இதழ்களில் இருந்து தன் இதழ்களை எடுத்துக் கொள்ளப் பார்க்க, பஞ்சவன் விட வேண்டுமே... அவளின் பின்னந்தலையை அழுந்தப் பற்றி தன் முகத்தோடு வைத்து அழுத்திக் கொண்டவன் அவளை இம்மி அளவு கூட விலக விடவே இல்லை.
அவளின் இடையில் ஆராய்ச்சி செய்வதையும் அவன் விடவே இல்லை. உறங்கும் பிள்ளைகளை ஒரு பார்வை பார்த்தவன் சட்டென்று அவளை மிக மிக வன்மையாக கையாள ஆரம்பித்தான்.
இதுவரை அவளை பெரிதாக கலவரப்படுத்தியது எல்லாம் இல்லை. ஆனால் இன்று பஞ்சவன் அந்த வேலையில் இறங்கினான்.
இடையை தாண்டி மேலே அவனது கை வெகு சுதந்திரமாக பயணிக்க முதுகு தண்டில் மின்னல் வெட்டியது மகராவுக்கு.
“நோ” என்று அவள் பதறிப் போக,
“ஐ வான்ட்” என்று அவளை தன்னிடம் இன்னும் நெருக்கமாக இழுத்துக் கொண்டான். அவனது கைகள் அவளில் ஆராய்ச்சி செய்ய ஆரம்பிக்க பட்டென்று அவனது கைகளை தட்டி விட்டு திரும்பிக் கொண்டாள்.
திரும்பியவளின் முதுகோடு அழுந்த படிந்துக் கொண்டவனுக்கு இன்னும் வாகாகிப் போனது.
“நான் தெரியாம முத்தம் கொடுத்துட்டேன்.. சாரி” என்று விலகப் போக,
“ஆரம்பம் வேணா உன்னோடதா இருக்கலாம்டி ஆனா அதுக்கு பிறகு எல்லாமே நான் தான்...” என்று அவளின் காதை கடித்து இயம்பியவனின் கைகள் முற்றும் முழுதுமாக அவளை கொண்டாட ஆரம்பித்தது.
“நான் சோகமா இருக்கேன்” என்றாள்.
“அதுக்காக நான் ஆறுதல் எல்லாம் குடுக்க முடியாது” என்றவன் அவளை படுக்கையில் சரித்தான். அவனை முறைத்துப் பார்த்தாள் மகரா.
“என்னடி லுக்கு.. புருசன் காரன் கிட்டயே உண்மையை மறைச்சில்ல. அதுக்கு தண்டனை குடுக்க வேணாம். சோ உனக்கு என்னிடம் இருந்து எந்த ஆறுதலும் வராது...” என்றவன் அவள் மீது படர்ந்துக் கொண்டான்.
“நல்ல கணவன் என்ன பண்ணுவான் தெரியுமா?” இவள் கேள்வி கேட்டாள்.
“மேட்டர் பண்ணுவான்..” என்றான் பட்டென்று.
“ச்சீ பேச்சை பாரு” என்று அவனது தோளிலே அடித்தவள், அந்த தோளிலே முகம் புதைத்துக் கொண்டாள்.
“அவங்களை இங்க நம்ம வீட்டுல பார்த்த உடனே ரொம்ப ஷாக் ஆகிட்டேன் ங்க...” என்றாள் மெல்ல. அவன் எதுவும் சொல்லவில்லை. அதே போல அவளிடம் இருந்து விலகவும் இல்லை. அவள் மீது அப்படியே படுத்து இருந்தான்.
அவனை தன்னில் தாங்கியபடியே,
“அவங்க தான் பெண் வீடுன்னு முதல்ல தெரியாதுங்க.. ஆனா பேச்சு ஆரம்பித்த பிறகு தான் தெரிந்தது. அப்பவும் உங்களை என்னை நம் பிள்ளைகளை அவங்களுக்கு அறிமுகம் செய்து வைக்கும் பொழுது கூட அப்பாவும் சரி அம்மாவும் சரி ஏன் தம்பியும் சரி யாரோ போலவே இருந்தாங்க... அந்த சபையில என்னை அவங்க பொண்ணுன்னு சொல்லிக்க கூட மனம் வரலங்க...” என்று அவள் குரல் கமறிப் போக நிமிர்ந்து அவளை பார்த்தான்.
“அழறியா?” என்று கேட்டான்.
“மறுத்துப் போச்சு... எப்போ நான் மாசமா இருக்கேன்னு தெரிஞ்சும் கூட நான் வீட்டை போனப்ப யாரும் என்னை தடுத்து நிறுத்தவே இல்லை. அட்லீஸ்ட் பிள்ளை பிறந்த பிறகாவது நீ போன்னு சொல்ல அங்க யாருக்கும் மனதே இல்லை” என்று அவள் வேதனையுடன் சொல்ல பஞ்சவனின் பாரம் அவள் மீது அதிகமானது.
பட்டென்று அவனது முகத்தை பார்க்க விளைந்தாள். அவன் காட்ட மறுத்தான்.
“என்ன ஆச்சுங்க?” என்று அவள் பதறிப் போக,
“ஒன்னும் இல்லை” என்று சொல்லும் பொழுதே அவனது குரல் கரகரப்பாய் ஒலித்தது.
தனக்காக அவன் வேதனை படுகிறான் என்று புரிந்துப் போனது அவளுக்கு. இதழ்களில் மெல்லிய புன்னகை மலர்ந்தது மகராவுக்கு.
பஞ்சவனின் பின்னந்தலையை அழுந்தக் கோதி விட்டவள், அவனின் காதோரம் எதையோ சொன்னாள். பஞ்சவன் பட்டென்று அவள் மீது இருந்து தலையை மட்டும் தூக்கிப் பார்த்தவன் தலையை மட்டும் ஆட்டி உண்மையாவா என்று கேட்டான்.
“உண்மை மட்டும் தான்” என்று அவனது நெற்றியில் அழுந்த முத்தமிட்டு சொன்னாள்.