“நீங்க ஒரு இந்திய உளவாளின்னு சொல்றீங்க.. ஆனா உங்க நடவடிக்கையும் செயலும் அந்த மாதிரி இல்லையே..” என்றாள்.
அவளை கூர்ந்து பார்த்தான்..
அவனது பார்வையில் “இல்ல உளவாளின்னா கரெக்ட்டா இருக்கணும். ஆனா நீங்க நாட்டுக்கு நல்லது பண்ற அதே சமயத்துல எங்களுக்கு போதை மருந்து குடுக்குறீங்களே இது தான் உங்க கொள்கையா? இது தான் நீங்க நாட்டை காக்கிற லட்ச்சனமா?” ஆதங்கத்துடன் கேட்டவளை கண்கள் சுருக்கிப் பார்த்தவன்,
“இந்த நாட்டுக்கு நல்லதுன்னா என் அம்மாவுக்கு கூட போதை மருந்தை குடுப்பேன்டி” என்றான். அவனது வார்த்தையில் தொக்கி இருந்தது எல்லாமே இந்த நாட்டின் மீது அவன் வைத்து இருந்த பற்று மட்டும் தான். அதை புரிந்துக் கொண்டவளுக்கு இன்னும் இடியாப்ப சிக்கல் அவிழவில்லையே என்று அவனிடமே கேட்டாள்.
“என்ன காரணத்துக்காக இப்படி எல்லாம் பண்றீங்க? இப்படி பெண்களை போதை மருந்துக்கு அடிமை ஆக்கி விக்கிறது தான் உளவாளிகளின் தலையாய வேலையா? இன்னும் எங்களை மாதிரி எத்தனை பெண்களை இப்படி அடிமையாக்கி வச்சு இருக்கீங்க? எப்போ எங்களை எல்லாம் விடுதலை செய்வீங்க?” ஆதங்கத்துடன் கேட்டவள்,
“நீங்க உண்மையாவே ராவை சேர்ந்தவர் தானா? இல்ல என்னை ஏமாற்ற பொய் வேசம் போடுறீங்களா?” சந்தேகத்துடன் தயாகரனிடம் கேட்டாள்.
அவன் பதில் சொல்லாமல் போகப் பார்க்க,
“ப்ளீஸ் சொல்லுங்க?” என்றவளின் கெஞ்சலில்,
தீர்க்கமாக அவளை பார்த்தவன்,
“நீ நம்பணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை.. நம்புனா நம்பு நமாட்டி போடி” என்று போகப் பார்க்க,
“இல்லல்ல உங்களை நான் நம்புறேன்” என்று சொன்னவள்,
“எங்களுக்கு எப்போ முழுமையா விடுதலை தருவீங்க... எனக்கு இங்க இருக்க கொஞ்சமும் பிடிக்கல.. ஐ வான்ட் பீஸ் புள் லைப்.. இந்த மாதிரி இவ்வளவு ட்ராஜடிய ஏத்துக்குற அளவுக்கு என் மனதுல வலிமை இல்லை..” என்றாள்.
“எனக்கும் உன்னை இங்க இழுத்து பிடிச்சு வச்சுக்க விருப்பம் இல்ல.. பட் உன்னை வச்சு ஒரு ஆப்ரேஷன் இருக்கு. அது சரியா முடிஞ்ச உடனே நீ கிளம்பலாம்” என்றான்.
“ஏதே ஆப்ரேஷனா?” ஒற்றை நொடியில் வியர்த்துப் போனாள். தன்னை பெரிய சிக்கலில் மாட்டி விட பார்க்கிறானே என்று பயம் வந்து கவ்விக் கொண்டது அவளை.
“எஸ்” என்றான் அழுத்தமாய்.
“யாரை கேட்டு எங்களை இதுல இன்வால்வ் பண்றீங்க? நாங்க இதுக்கு எப்படி சம்மதிப்போம்னு நீங்க நினைச்சீங்க.. உங்க ஆப்ரேஷனுக்கு என்னால சம்மதிக்க முடியாது.. முதல்ல எங்களை இங்க இருந்து போக விடுங்க. இல்ல...”
“இல்லன்னா என்னடி பண்ணுவ?” முறைத்தான்.
“என்ன வேணாலும் பண்ணுவேன். உங்க அம்மாக்கிட்ட போய் நியாயம் கேட்பேன். என்னை இந்த ஆப்ரேஷன்ல அடமானம் வைக்க உங்களுக்கு என்ன உரிமை உண்டு? முதல்ல நீங்க எல்லாம் யாரு எங்களுக்கு?” என்று எடுத்தெறிந்து பேசியவளை விழிகள் சிவக்கப் பார்த்தவன்,
“இந்த நாட்டை காப்பாத்த நீ ஒரு துருப்பு அவ்வளவு தான். அந்த துருப்பை பயன்படுத்திக்க நான் யார் கிட்டயும் அனுமதி வாங்கனும்னு எந்த அவசியமும் இல்லடி. நான் நினைச்சா என்ன வேணாலும் செய்ய எனக்கு முழு அனுமதி உள்ளது.. நீ இல்ல வேற எந்த கொம்பன் வந்தாலும் என்னை ஒன்னும் செய்ய முடியாது. நீ இந்த ஆப்ரேஷனுக்கு ஒத்துக்கிட்டே தான் ஆகணும். உனக்கு வேற ஆப்ஷனே கிடையாது” என்றான்.
“முடியவே முடியாது” என்று மறுத்தாள்.
“அப்போ எதிரிங்க கையாள மொத்த குடும்பமும் செத்து ஒழிங்க” என்றான்.
“ஹாங்” என்று மிரண்டுப் போனாள்.
“என்ன பார்க்கிற? எங்களுக்கு எப்படி இந்த ஆப்ரேஷனுக்கு நீ தேவை படுறியோ அது மாதிரி தான் இந்த நாட்டோட எதிரிக்கும் நீங்க தேவை படுறீங்க.. அதனால தான் உங்களை கொலை பண்ண இவ்வளவு முயற்சி நடந்துக்கிட்டு இருக்கு.. நீ சம்மதம்னு சொன்னா உன் குடும்பத்தை காப்பாத்துறேன். இல்லன்னா உன் ஒட்டு மொத்த குடும்பத்தையும் அவனுங்களுக்கு காவு குடுத்துட்டு எப்படியோ போ...” என்றான்.
“என்ன சொல்றீங்க?” மேலும் பயந்துப் போனாள். அச்சம் அவளின் அடி நெஞ்சுவரை ஊடுருவி உள் நுழைந்தது.
“என்னை வச்சு அப்படி என்ன ஆப்ரேஷன் பண்ண போறீங்க? நான் அந்த அளவுக்கு எல்லாம் ஒர்த் இல்லை.. என்னை விட்டுடுங்களேன்..”
“நான் விட்டுடுவேன். ஆனா எதிரிங்க விட மாட்டானுன்களே” புருவம் தூக்கி கேட்டவனின் பேச்சில் காலுக்கு கீழ் நிலம் நழுவியது பெண்ணவளுக்கு.
மனதுக்குள் பலவற்றை போட்டு யோசித்தவள்,
“உங்க ஆப்ரேஷனுக்கு நான் மட்டும் போதுமா? இல்ல என் தங்கைகளும் வேணுமா?” என்று கேட்டவள் தயாகரனின் பார்வையை உணர்ந்து “இல்ல அவங்களுக்கும் போதை மருந்து குடுக்குறீங்களே அது தான் கேட்டேன்” என்றாள்.
“உங்க மூணு பேருல யார் அதிக நேரம் போதையை தடுத்து நிருத்துறீங்கன்னு பார்க்க செக் பண்ணி பார்த்தேன். அதுல நீ தான் அதிக நேரம் நீடிச்சு நின்ன. சோ உன்னை மட்டும் சூஸ் பண்ணி இருக்கேன்..” என்றான்.
“ஓ..” என்று கேட்டுக் கொண்டவள்,
“எங்களை அடிச்சு கொடுமை படுத்துனது எல்லாம்?” கேள்வியாக அவனை பார்த்தாள்.
“எல்லாமே ட்ரைனிங் தான்...” சிம்பிலாக சொன்னான்.
ஆனால் இவளுக்கு தான் உள்ளுக்குள் கிலி பிடித்தது. “நான் உங்களுக்கு ஒத்துழைச்சா என் குடும்பத்தை விட்டுடுவீங்களா? இந்த ஆப்ரேஷன்ல எனக்கு ஒன்னும் ஆகிடாதே” பயத்துடன் கேட்டவளை பார்த்த தயாகரன்,
“எதுவும் இப்போதைக்கு சொல்ல முடியாது... உன் உயிர் போனாலும் சொல்றதுக்கு இல்ல.. அதனால எல்லாத்துக்கும் தயாரா இரு” என்றான் இழுத்து பிடித்த பொறுமையுடன்.
“என்ன ஆப்ரேஷன்னு நான் தெரிஞ்சுக்கலாமா?” கேட்டவளிடம் “இது வரை நீ தெரிஞ்சுக்கிட்டதே போதும். போய் படு” என்றவன் தனித்து இருந்த நிலவை வெறித்துப் பார்க்க ஆரம்பித்து விட்டான்.
அவன் எங்கோ வெறிப்பதை பார்த்த தயாழினி, சட்டென்று யோசனையாகி,
“அப்போ எங்க அண்ணனுங்க உங்ககிட்ட கடன் வாங்கினது எல்லாம் பொய்யா?” நெஞ்சை பிடித்தாள்.
அதை சட்டை செய்யாமல், “நீ இன்னும் போகலையா?” கடுப்படித்தான் தயாகரன்.
“இல்ல எனக்கு தெரிஞ்சு ஆகணும்?” என்றவளை முறைத்து திரும்பிப் பார்த்தவன்,
“ரேப் பண்ணா தான் போவியாடி” எரிந்து விழ அடித்து பிடித்துக் கொண்டு ஓடியே விட்டாள் தயாழினி.
“ஏன் அண்ணா அண்ணி கிட்ட எதையுமே முழுசா சொல்லல” தம்பிகள் கேட்க,
“இதுக்கே இன்னைக்கு நைட் அவளுக்கு குளிர் காய்ச்சல் வந்திடும்டா.. இதுக்கும் மேல சொல்லி அவளை மேலும் கலவரம் செய்ய வேணாம்னு தான்.. பார்ப்போம் அதுக்குன்னு நேரம் வரும் இல்லையா? அப்போ சொல்லிக்கலாம்” என்றவன் திரும்பி இருளை வெறிக்க ஆரம்பிக்க, தம்பிகள் இருவரும் அவனை தொந்தரவு செய்யாமல் கீழே இறங்கி விட்டார்கள்.
தயாகரன் சொன்னது போல தான் தயாழினிக்கு அன்றிரவு கடுமையான குளிர் காய்ச்சல் வந்தது. அவளது பூஞ்சையான மனதால் எதையும் அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. மிகவும் பயந்துப் போய் விட்டாள்.
குளிர் காய்ச்சலில் நடுநடுங்கிக் கொண்டு இருந்தாள். மொட்டை மாடியில் நின்று இருந்தவன் கொஞ்ச நேரத்திலே கீழே இறங்கி வந்தான். அவனது அறையில் தான் பொன்மாரி வந்த பிறகு உறங்க ஆரம்பித்து இருந்தாள் தயாழினி.
அவள் ஒரு புறமாக படுத்து இருப்பதை பார்த்தவன் கட்டிலில் தலைக்கு அட்டியில் இரு கைகளையும் கொடுத்து மேற் கூரையை வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான்.
அவனின் செவியில் மெல்லிய முணகல் கேட்க, “ப்ச் ஆரம்பிச்சுட்டா” என்று கடுப்பாக வந்தது அவனுக்கு.
கண்களை மூடி அவளின் முணகள்களை விரட்டப் பார்த்தான். ஆனால் அவனின் காதுக்குள் நுழைந்து அவனை அசைத்துப் பார்த்தது அவளின் மெல்லிய முணகல்கள்.
அறையின் ஏசியை அனைத்து விட்டு அவள் புறம் திரும்பி படுத்தான். நடுநடுங்கிக் கொண்டு இருந்தாள் தயாழினி.
“ப்ச்” என்று எரிச்சல் தான் வந்தது அவனுக்கு. “இவ்வளவு நோஞ்சானா இருந்தா எப்படி இவளை வச்சு காரியத்தை சாதிக்கிறது?” கடுப்படித்தவன், அவளை இழுத்து தன் நெஞ்சின் மீது போட்டுக் கொண்டவன், போர்வையால் அவளை மூடினான்.
அப்பொழுதும் நடுக்கம் அவளுக்கு குறையவில்லை. என்னை வச்சு என்ன செய்ய காத்து இருக்கானோ இந்த அரக்கன் என்று இருக்க இருக்க பயம் தான் அதிகரித்துக் கொண்டே போனது.
ஒரு சமயம் கடவுளாக தெரிந்தவன், இப்பொழுது அவளை வைத்து தன் காரியத்தை சாதிக்க பார்ப்பவனை அரக்கனாக உருவகித்தாள்.
அவளின் நடுக்கம் கண்டு எழுந்து தன் சட்டையை அவிழ்த்து விட்டு வெற்று மார்பில் அவளை இழுத்துப் போட்டவன், தன் மார்பு சூட்டை அவளுக்கு கொடுத்தான். அவனின் மார்பில் முகம் புதைத்துப் படுத்து இருந்தவளுக்கு அவனை விட்டு விலக வேகம் வந்தது. இதெல்லாம் வேண்டாம் என்று எண்ணினாள். ஆனால் அவளால் கொஞ்சமும் அசைய முடியவில்லை. அவனின் கை வளைவில் தான் இருந்தாள் இரவு முழுக்க..
அவள் நாசி எங்கும் அவனின் ஆண் வாசனை தான் மோதிக் கொண்டே இருந்தது. அதை சுவாசிக்க பிடிக்காமல் தலையை அங்கும் இங்குமாய் திருப்பியவளின் செயலில் தன் தூக்கத்தை தொலைத்து நின்றான் தயாகரன்.
“ஏய் அசையாம படுடி” என்று அதட்டினான். ஆனால் அவளால் அவனது வாசனையை உரிமையாக நுகர முடியாமல் நெளிந்துக் கொண்டு இருந்தாள். உடம்பு தான் காய்ச்சலில் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு இருந்தது. ஆனால் அவளின் உணர்வுகள் எல்லாம் விழிப்புடன் இருந்தது. அதனால் தானோ என்னவோ அவளால் அவனுடன் ஒன்ற முடியவில்லை.
நகர முயன்றவளை இழுத்து தன் நெஞ்சின் மீது போட்டு இருகையாலும் அவளின் இடையை சிறை செய்துக் கொண்டான்.
“எப்போ பாரு நெளிஞ்சுக்கிட்டே இருடி.. தூக்கி வெளில போடுறேன் பாரு” கடுப்படித்தவன் அவளை நெளிய விடாத அளவுக்கு இறுக்கிப் பிடித்துக் கொண்டான். அவனது இறுக்கத்தில் அவளின் குளிர் இன்னும் கொஞ்சம் அதிகமானது தான் மிச்சம்.
பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அவனது அருகாமையை ஏற்றுக் கொள்ள ஆரம்பித்தவளுக்கு அதிகாலையில் தான் நடுக்கம் மெல்ல குறைய ஆரம்பித்தது. காய்ச்சலும் விட்டுப் போனது.
கண்களை மலர்த்தி எழுந்தவளுக்கு நேற்று நடந்தது எல்லாம் கனவாக இருக்கக் கூடாதா என்று தான் தோன்றியது. ஆனால் அது கனவில்லையே.. பச்சை வலியை குடுக்க கூடிய உண்மை அல்லவா அது.
தன் வாழ்க்கையை இரணமாக்க காத்திருக்கும் உயிர் கொல்லி அல்லவா.. வேதனையுடன் படுக்கையில் இருந்து எழுந்துக் கொண்டாள். என்னவோ ஒரு சோகம் அவளை தொற்றிக் கொண்டது. அவள் உயிரை பணையமாக வைத்து ஆட்டத்தை ஆடிக் கொண்டு இருக்கும் கணவனின் செயலில் எரிச்சலும் கோவமும் ஆத்திரமும் வந்தது.
ஆனால் அவனிடம் எதையும் கேட்க முடியாதே.. கேட்டால் இவனே அவளை போட்டு தள்ளவும் வாய்ப்பு உள்ளது. எனவே எதையும் யோசிக்காமல் வருவதை அப்படியே எதிர்க்கொண்டு தான் ஆகணும் என்ற முடிவுக்கு வந்து விட்டாள்.
சரி இருக்கிற நாளையாவது மகிழ்ச்சியுடன் கழிப்போம் எண்ணி நல்ல முடிவை எடுத்தாள் தயாழினி.
Wow... நா நினைச்ச மாறி தயா இருக்கான்.....
Super super.....
யாழி ஓட எதார்த்தம் புரியுது தான்.....பாவமா கூட இருக்கு