கைக்கு அருகில் வந்த எதிரியின் ஆளை தப்பிக்க விட்டுட்டு காலுக்கு கீழ் இருந்த தன் மனைவியை பூப்போல கையில் ஏந்திக் கொண்டான் தயாகரன்...
எதிராளியின் பின்னாடியே கொஞ்சமும் அரவம் செய்யாமல் சென்று கவனித்து விட்டு வந்த பிரபாகரன் “அண்ணா அவன் ஓடிட்டான்” தகவல் சொன்னான்.
“வலை வீசி இருக்கேன்.. கண்டிப்பா சிக்கும்” என்று சொன்னவனின் கண்களில் இருந்த ஆத்திரமும் சீற்றமும் அதிக அளவு இருந்தது.
“அண்ணா” என்று சமாதானமாக அவனின் தோளை தொட்டான் குணா.
“இத்தனை நாள் நான் எதுக்கு காத்துக்கிட்டு இருந்தானோ அதுக்கான நேரம் வரப்போகுதுடா.. இனி நம்ம ஆட்டம் உச்சக் கட்டத்துல போகப் போகுது” என்று சொன்னான் தயாகரன்.
அவனின் கண்களில் இருந்தது என்ன? ஆக்ரோஷமா? அடக்க முடியாத கோவமா? ஆழ்கடலின் சீற்றமா? இல்லை இத்தனைக்கு மீறிய பழிவெறியா? துரோகமா? எது என்று கண்டு பிடிக்க முடியாத அளவுக்கு இருந்தது.
“அண்ணிய கையிலேயே வச்சு இருக்கீங்க அண்ணா.. அவங்களை உள்ள போய் படுக்க வைங்க.. மயக்கத்துலையே இருக்காங்க.. எழுப்பி விடுங்க” என்றான் குணா.
“ம்ம்” என்று உருமினானே தவிர இடத்தை விட்டு கொஞ்சமும் அசையவில்லை.
“அண்ணா ப்ளீஸ் கண்ரோல் பண்ணிக்கோங்க.. இவ்வளவு நாள் பொறுத்தாச்சு... இனி கொஞ்ச நாள் தான். நீங்க நினைச்சதை செஞ்சிடலாம்” பிரபாகரன் சொன்னான். ஆனாலும் தயாகரனை அசைக்க முடியவில்லை.
வேறு வழியில்லாது குணா அருகில் இருந்த பைப்பில் தண்ணீரை பிடித்து தயாழினியின் முகத்தில் அடித்து எழுப்ப, சுயத்துக்கு வந்தாள்.
வந்த பிறகு தான் தான் கணவனின் கையில் இருக்கிறோம் என்று புரிந்துக் கொண்டவள் சட்டென்று அவன் கையில் இருந்து குதித்தாள்.
அவளின் அசைவில் தான் தன் இறுக்கத்தில் இருந்து வெளியே வந்தான் தயாகரன்.
“என்ன ஆச்சு? யார் அவன்? அவனை எதுக்கு கொன்னாங்க? எங்களை சுத்தி என்ன தான் நடக்குதுங்க.. ப்ளீஸ் தயவு செஞ்சு சொல்லுங்க.. பைத்தியம் பிடிக்கிற மாதிரி இருக்கு.. எதுக்காக நீங்க எங்களை கடத்துனீங்க, எதுக்காக எங்களுக்கு போதை மருந்து குடுக்குறீங்க.. இப்போ எங்க அப்பா அம்மாவை எதுக்கு காப்பாத்துறீங்க? ஏன் அவங்களை கொலை பண்ண முயற்சி நடக்குது.. இது எல்லாத்தையும் விட நீங்களும் எங்க அண்ணனும் எப்படி ஒரே போட்டோவில். அதுவும் தோள் மேல கை போட்டு அவ்வளவு நெருக்கமா இருக்கீங்க? இன்னொரு அண்ணன் என்ன ஆனான்..? இந்த எல்லா கேள்விக்கும் நீங்க பதில் சொல்லி தான் ஆகணும். சொல்லாம உங்களை விட மாட்டேன்” என்று தயாகரனின் சட்டையை பிடித்து உலுக்கு உலுக்கு என்று உலுக்கு கேள்வி மேல் கேள்வி கேட்டாள்.
அவளின் கேள்விகளை எப்பொழுதும் போல சட்டை செய்யாமல் சாதாரணமாக எடுத்துக் கொண்ட தயாகரன்,
“சொல்ல முடியாதுடி” இறுகிய குரலில் சொன்னவன் அவளை கடந்து வீட்டுக்குள் நுழைந்தான்.
“என்னை ஒரு பொருட்டாவே நீங்க எடுத்துக்கவே இல்லல்ல.. இப்போ காட்டுறேன் நான் யாருன்னு..” ஆவேசத்துடன் கேட்டவள், ஒரு கணம் கூட தாமதிக்காமல் வீட்டுக்குள் நுழைந்து மொட்டை மாடிக்கு ஓடினாள்.
அவளின் எண்ணம் புரிய சட்டென்று சுதாரித்து அவளின் பின்னோடு ஓடினான் தயாகரன்.
“ஏய் நில்லுடி லூசு” திட்டிக் கொண்டே அவளை துரத்திப் பிடிக்கப் பார்க்க, அவனது கைக்கு சிக்காமல் வேகமாக மொட்டை மாடியின் சுவரில் ஏறி நின்றாள்.
“ஏய் லூசு முதல்ல கீழ இறங்குடி...” பல்லைக் கடித்தான்.
“நீ தான்டா லூசு...” அவனை திட்டியவளை முறைத்துப் பார்த்தான் அவளின் கணவன்.
பின்னோடு பதறியடித்துக் கொண்டு வந்த குணாவும் பிரபாவும் திகைத்துப் போனார்கள். தன் அண்ணனை லூசு என சொல்ல கேட்டு.
இருவரும் ஒரு கணம் பார்வையை பரிமாறிக் கொண்டார்கள். கமுக்கமாக சிரிக்கவும் செய்துக் கொண்டார்கள்.
“வாயை உடைக்கப் போறேன்டி” கத்தியவன்,
“எல்லா உண்மையும் கேட்டியே.. சொல்றேன். முதல்ல கீழ இறங்குடி” என்றான்.
“நீ முதல்ல சொல்லுடா பிறகு நான் கீழே இறங்கி வரேன்” என்றாள் பிடிவாதமாய்.
“லூசு.. கீழே குனிஞ்சி பாருடி.. எவ்வளவு உயரத்துல நிக்கிறன்னு.. கொஞ்சம் ஸ்லிப் ஆனாலும் ஒரு எலும்பு கூட தேறாது பார்த்துக்க.. அப்புறம் கீழே விழுந்து செத்துப் போயிட்டின்னா எந்த உண்மையும் தெரிஞ்சுக்க முடியாம ஆவியா சுத்தி வருவடி. அதுக்கு தான் சொல்றேன் நீ முதல்ல கீழ இறங்கு” என்று அவளை நெருங்கினான்.
“என்ன சொல்றீங்க?” என்று பயந்துக் கொண்டே கீழே குனிந்துப் பார்த்தாள்.
“அய்யய்யோ” என்று அலறியவள் பேலன்ஸ் தவறி கீழே விழப் போக, ஒரே தாவில் ஓடி வந்து அவளை இறுக்கிப் பிடித்துக் கொண்டான்.
எதற்கும் அஞ்சாதவன் அவளின் இடுப்போடு இறுக்கிப் பிடித்தவனின் நெஞ்சு ஒரு கணம் அஞ்சி தான் போனது. அவனையே பதற வைத்து விட்டாள் அவனின் மனைவி.
பத்திரமாக கீழே இறக்கி விட்டவன், கொஞ்சமும் யோசிக்காமல் அடுத்த நொடியே அவளின் கன்னத்தில் ஓங்கி ஒரு அறை விட்டான்.
“ஆ..” என்று கன்னத்தை பொத்திக் கொண்டாள் தயாழினி.
“இன்னொரு முறை இந்த முட்டாள் தனம் பண்ணின... நீ கீழ குதிக்க வேணாம்.. நானே இங்க இருந்து உன்னை தள்ளி விட்டுடுவேன்டி” ஆத்திரத்தில் உறுமினான்.
“ம்கும்..” என்று நொடித்துக் கொண்டவள்,
“ப்ளீஸ் ங்க.. எனக்கு பயங்கரமா தலை வெடிக்குது... உண்மை என்னன்னு உடைச்சி சொல்லிடுங்க.. என்னால இந்த பிரஷரை தாங்கிக் கொள்ளவே முடியல.. நீங்க யாரு? நீங்க நல்லவரா கெட்டவரா? எங்களை கொடுமை பண்றீங்களா? இல்ல கண்னுக்கு தெரியாத எதிர்க்கிட்ட இருந்து பாதுகாக்குறீங்களா? இதெல்லாம் யோசிச்சு யோசிச்சு மண்டை எல்லாம் வெடிக்கிது.. என் தங்கச்சிங்க மாதிரி எனக்கு எதுவும் தெரியாம இருந்துட்டா பரவாயில்ல. ஆனா எனக்கு சில விசயங்கள் புரியிது.. சில விசயங்கள் தெரியுது.. அதனால தான் இப்படி பைத்தியம் புடிக்கிற அளவுக்கு போறேன்..”
“ப்ளீஸ் தயாகரன்.. உண்மையை உடைச்சி சொல்லுங்க... அது எப்படியாப்பட்ட உண்மை என்றாலும் நான் தாங்கிக்குவேன். நாங்க ஏன் இந்த இடியாப்ப சிக்கல் குள்ள மாட்டி இருக்கோம். எங்களுக்கு உங்களுக்கும் என்ன சம்மந்தம். குறிப்பா என் அண்ணனுக்கும் உங்களுக்கும் என்ன சம்மந்தம் இது எல்லாவற்றையும் நான் தெரிஞ்சுக்கணும்” அவனை உலுக்கி எடுத்து கேட்டவளை பெருமூச்சு விட்டுப் பார்த்த தயாகரன்,
“நான் சொல்லுவேன். எல்லா உண்மையையும் உடைச்சு சொல்லுவேன். ஆனா அதை கேட்டுட்டு நீ உன் தாலியை கழட்டி என் கையில குடுத்துட்டு என்னை விட்டு போயிடனும் அதுக்கு சம்மந்தமா?” என்று கேட்டான்.
தயாழினிக்கு பக்கென்று இருந்தது.. “என்ன சொல்றீங்க ங்க?” என்று நெஞ்சை பிடித்துக் கொண்டாள்.
“நான் சொன்னா சொன்னது தான்.. தாலியை கழட்டி குடுத்துட்டு என்னை விட்டு நிரந்தரமா போகணும். உனக்கும் எனக்கும் இடையில எதுவும் இருக்கக் கூடாது... அதுக்கு சம்மந்தம்னா சொல்லு இப்பவே ஆதி முதல் அந்தம் வரை எல்லாவற்றையும் சொல்றேன். அப்படி இல்லன்னா என்கிட்டே இருந்து ஒரு சொல் கூட வெளிய வராது” அரக்கனுக்கு எல்லாம் அரக்கனாய் தெரிந்தான் தயாகரன்.
“தாலியை போய் கழட்ட சொல்றீங்களேங்க?” அதிர்ச்சியில் கண்களில் இருந்து கண்ணீர் திரண்டது.. இந்த இடைப்பட்ட காலத்தில் அவன் மீது சொல்லறியா நேரம் வந்து விட்டது.
தன் குடும்பத்தை கொத்தாக தூக்கி வந்து மொத்தமாக பழி வாங்குகிறான், போதை மருந்து தூக்க மருந்து தருகிறான். உச்சக்கட்டமாக தன்னை ஒருவனுக்கு விலை பேசுகிறான். போதாதற்கு கொடுமை படுத்துகிறான். ஆனால் பொன்மாரி வந்த பிறகு அந்த கொடுமை மட்டும் மாறி இருந்தது. மத்தபடி அவளின் மொத்த குடும்பத்துக்கும் அரக்கனாக தான் இருக்கிறான். ஆன பொழுதும் அவன் மீது இந்த பாழாய் போன காதல் வந்து தொலைந்து விட்டது அவளுக்கு.
தன்னை எண்ணியே கூனி குறுகிப் போனவள், விழிகளில் வழிந்த கண்ணீரை துடைத்துக் கொண்டாள்.
“என்னண்ணா இதெல்லாம்..?” தம்பிங்களுக்கே அவது செயல் மனம் ஒப்பவில்லை.
அவர்களை ஒரு பார்வை பார்த்தான். அவனது பார்வையில் இருந்த செய்தியில் தலையை குனிந்துக் கொண்டார்கள் தம்பிகள் இருவரும்.
தயாகரனின் பார்வையில் இருந்த செய்தி தயாழினிக்கு கொஞ்சமும் புரியவில்லை. ஆனால் இவன் ஒருவனுக்காக பார்த்து தன் மொத்த குடும்பத்தையும் காவு வாங்க முடியாதே. அதனால் துணிந்து ஒரு முடிவை எடுத்தாள்.
“சரி நான் நீங்க சொல்றதுக்கு ஒத்துக்குறேன்.. எங்களை சுத்தி என்ன நடக்குது? அதை முதல்ல சொல்லுங்க” என்றவளுக்கு தெரியவில்லை.
அவனை விட்டு போகும் பொழுது கொஞ்சமும் கணக்காத தாலியை அவன் கையில் குடுத்து விட்டு, வயிறு கணக்க அவனின் பிள்ளையை சுமந்துக் கொண்டு அவனை விட்டு போகப் போகிறாள் என்று தெரிந்திருக்கவில்லை..
தயாழினி வாக்கு குடுக்கவும் தன் மௌனத்தையும் இறுக்கத்தையும் முதன் முறையாக அவளிடம் உடைத்து தன் வாழ்க்கையிலும் அவளின் மொத்த குடும்பத்திலும் என்ன நடந்தது, என்ன நடக்கிறது, என்ன நடக்கப் போகிறது என்பதை எல்லாம் மனம் திறந்தான்..
அவன் சொல்ல சொல்ல தயாழினிக்கு விழிகளில் கண்ணீர் நில்லாமல் வழிந்தது. மூச்சே ஒரு கணம் அடைத்துப் போனது. அவன் பாதி சொன்னதுக்கே அவளால் இயல்பாக மூச்சு எடுக்க முடியவில்லை. மிகவும் திணறிப் போனாள்.
அதுவும் அவன் மேற்கொண்டு சொல்ல சொல்ல வலி எடுத்த நெஞ்சை தொட்டு தடவி நீவி விட்டவள், அதற்கு மேல் தாங்க மாட்டேன் என்று தவி அவன் மீது விழுந்தவள் கொஞ்சமும் யோசிக்காமல் அவனின் இதழ்களில் தன் இதழ்களை புதைத்தாள்.
அவனுக்குள் மின்சாரம் பாய்ந்த உணர்வு ஏற்பட, அவளின் இடையோடு தன் முரட்டுக் கரங்களை வைத்து இறுக்கமாக பிடித்துக் கொண்டு, அவளின் முத்தத்தை தனதாக்கிக் கொண்டு அவளின் மென்மையான இதழ்களை மென்று, ருசித்து, கடித்து, பருகி, கசக்கி, தடவி என ஒரு வழி செய்தான். மீண்டும் மீண்டும் அவளிடம் மல்லுக் கட்டியவன் அவளுக்கும் தான் அனுபவித்த மின்சார முத்தத்தை உணர்த்தினான்.
அவன் உணர்த்திய உணர்வுகளில் சிக்கி தவித்து தகித்துப் போனவள் அவனின் உயரத்துக்கு தன் கால்களை எக்கி நின்றவள் அவனின் பிடரியை இறுக்கிப் பிடித்து கசக்கி எடுத்தாள்.
இருவரும் ஒருங்கே மின்சார முத்தத்தை எந்த தடையும் இல்லாமல் அனுபவிக்க, குணாவும் பிரபாவும் ஓடியேப் போனார்கள்.
அவர்கள் போனதை கூட உணராமல் இருவரும் ஒருவரில் ஒருவர் ஐக்கியமாகி போனார்கள். அவளின் சரிவான கழுத்தில் இறங்கி தன் முத்திரைகளை இட்டவன் அவளை முழுமையாக தனக்குள் அடைக் காத்துக் கொண்டான்.
அவளின் முதுகு தண்டில் பல மின்னல்கள் மின்னி செல்ல அவனை இழுத்து தன் மார்பில் ஒளித்துக் கொண்டாள் தயாகரனின் தயாழினி..
முதல் பாகம் முடிவடைந்து விட்டடது..
கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளுங்கள் தோழமைகளே...
Super super சொல்லிட்டான்.....
ஆன யாழி ஏன் இந்த முடிவு?????
இதுக்கு நீ வருத்த பட போற போ.....