இருவரும் மட்டும் இருந்த தருணம்... நீண்டுக் கொண்டே போன உரையாடல்... அதன் பிறகு பஞ்சவன் ரொம்ப இன்டிமேட்டாக போகவில்லை... அவளின் தயக்கமும் நாணமும் கண்டு ஒதுக்கி விட்டான். ஆனால் அவளை முழுவதுமாக தன் கையணைவிலே வைத்துக் கொண்டான்.
அவள் தவிப்பாக அவனை பார்க்க,
“சில் பேபி..” என்று அவளையும் சமாதனம் செய்துக் கொண்டான். அவள் சமைத்துக் கொடுக்க யுவனையும் வரச்செய்து மூவரும் உண்டு விட்டு பிள்ளைக்கும் ஊட்டி விட, பஞ்சவனும் யுவனும் ஊருக்கு கிளம்பினார்கள்.
மகராவின் விழிகளில் தெரிந்த பிரிவு உணர்வை கண்டு தவித்துப் போனவன், அவளின் கண்களிலும் இதழ்களிலும் அழுத்தமாக முத்தம் வைத்தவன், அவளுக்கு பல கவனங்களை சொல்லி விட்டு கிளம்பினான்.
பஞ்சவனும் யுவனும் அவர்களின் காரிலே கிளம்பினார்கள். ஒரு நாளுக்கு முன்னாடி தான் கார் டெலிவரி செய்து இருந்தார்கள். அதனால் இந்த முறை வாடகை கார் எடுக்காமல் தங்களின் காரிலே கிளம்பி சென்றார்கள்.
இங்கே மகராவுக்கு இருப்பே இல்லை. மனமெல்லாம் பஞ்சவனிடம் தான் இருந்தது. இரு பிள்ளைகளையும் மாற்றி மாற்றி பார்த்துக் கொண்டவளுக்கு மன்னவனின் நெஞ்சில் சாய்ந்துக் கொள்ள வேண்டும் என்று இருந்தது. ஆனால் இப்பொழுது அது இயலாதே...
பெருமூச்சு விட்டவள் இரண்டு நாள் எப்பொழுது கடந்துப் போகும் என்று காத்திருக்க ஆரம்பித்தாள். என்னவோ பஞ்சவனின் முகம் தான் கண் முன் வந்து நின்றது.. இரண்டு நாள் பொழுதை கழிப்பதற்குள் பெரும் யுகத்தையே கடந்து வந்தது போல உணர்ந்தாள் மகரா.
மூன்றாம் நாள் காலையில் தான் வருவதாக சொல்லி சென்று இருந்தான் பஞ்சவன். அதனால் அந்த விடியலுக்காக காத்திருக்க ஆரம்பித்தாள் பெண்ணவள்.
இரண்டாம் நாள் இரவு விளக்கை எல்லாம் அனைத்து விட்டு பிள்ளைகளுடன் படுத்துக் கொண்டாள். அவளை நம்பி அவன் பிள்ளையை தந்து விட்டு சென்றது மகராவை மிகவும் நெகிழ்த்தி இருந்தது.
பிள்ளைகள் இருவரையும் கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொண்டாள். போனில் கூட இருவரும் பேசிக்கொள்ளவில்லை. மெசேஜ் மட்டும் தான் அவனிடம் இருந்து இவளுக்கு வந்தது.
“வந்துட்டேன்...” என்று.
“ம்ம்ம்” என்று இவள் அனுப்ப,
“ஒழுங்கா சாப்பிடு” என்று மிரட்டி அனுப்பி இருந்தான்.
“ஊட்டி விட ஆள் இல்லை” என்று இவள் அவனை வம்பிழுத்தாள்.
சிறிது நேரம் வரை அவனிடம் இருந்து மெசேஜ் எதுவும் வரவில்லை. ஆனால் அவன் இந்த மெசேஜை பார்த்து விட்டதர்க்கான ப்ளூ கலர் டிக் வந்து இருந்தது.
“சாரி” என்று இவள் டைப் பண்ணிக்கொண்டு இருக்கும் வேளை அவனிடமிருந்து ஒரு வாய்ஸ் மெசேஜ் வந்து இருந்தது.
சாரியை சென்ட் பண்ணாமல் அவனது மெசேஜை டவுன்லோட் செய்து கேட்டாள்.
“ஆள் வரும் பொழுது நீ நாணக்குடையின் கீழ் ஒளிந்துக் கொள்ள கூடாது.. டீல் ஓகேயா?” என்று கேட்டு அனுப்பி இருந்தான்.
நெஞ்சம் கொஞ்சம் படபடப்பாய் ஆனது. ஆனாலும் இந்த தவிப்பும் உணர்வும் அவளுக்கு மிகவும் பிடித்து இருக்க,
“பெண்ணின் நாணம் ரொம்ப இயல்பானது டிஎல் சார்... அதை போக்கிக் கொள்வது உங்க வேலை” என்று அவனிடமே வேலையை கொடுத்து விட்டு,
“குட்நைட் பாய்” என்று வைத்து விட்டாள்.
“நானா இப்படி எல்லாம் பேசுறேன்...” “கடவுளே” என்று முகத்தை போனில் புதைத்துக் கொண்டாள். முகம் முழுவதும் அவ்வளவு புன்னகை நிரம்பி இருந்தது அவளுக்கு.
திரும்பி கண்ணாடியை பார்த்தாள். அவளின் முகத்தில் இதுநாள் வரை தென்படாத ஒரு உயிரோட்டம் இருப்பதை இரசித்துப் பார்த்தாள். இதுக்கெல்லாம் காரணம் பஞ்சவன் தான் என்று உணர்ந்தவள் தன் போனில் இருந்த அவனது புகைப்படத்தை தேடி எடுத்து அவனுக்கு அழுத்தமாய் முத்தம் வைத்தாள்.
“என்னை எனக்கே அறிமுகம் செய்து வைக்கிற மாதிரி இருக்குங்க” என்று நெகிழ்ந்துக் கொண்டாள்.
அப்பொழுது தான் இரவு விளக்கு எல்லாவற்றையும் அனைத்து விட்டு படுத்தாள். படுத்த கொஞ்ச நேரத்திலே வீட்டு காலிங்க்பெல் அடிக்க பதறிப் போனாள். இந்த நேரத்துல யாரு என்று அவள் பயந்துப் போனாள்.
இந்த வீட்டுக்கு வந்த புதிதில் இது போல இரவு நேரத்தி யாராவது வந்து கதவை தட்டுவார்கள். பயத்துடனே நாதா இரவு பொழுது எல்லாம் கழித்து இருந்தாள். சமீப காலமாக தான் அதெல்லாம் இல்லாமல் இருந்தது. இப்பொழுது மறுபடியும் அதே போல நடக்க நெஞ்சம் முழுவதும் பயம் அப்பிக் கொண்டது.
யார் என்று கேட்க கூட பயமாக இருந்தது. அதனால் சத்தமே இல்லாமல் கதவு பக்கத்தில் வந்து நின்று வெளியே கேட்கும் பேச்சுக் குரலை அவதனிக்க ஆரம்பித்தாள். ஆனால் ஒரு பேச்சுக் குரலும் கேட்காவில்லை. மாறாக கதவு தட்டும் சத்தமும் காலிங்க்பெல் சத்தமும் கேட்க அதில் அவளுக்கு இன்னும் பயம் பிடித்துக் கொள்ள கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.
குப்பென்று வியர்த்துப் போனது. கண்கள் கலங்கிக்கொண்டு வந்தது. “கடவுளே இந்த ஒரு பொழுதை மட்டும் எப்படியாவது கடத்தி விடு ப்ளீஸ்...” என்று அவளின் மனம் ஊமையாக அழுதது.
விடாத தட்டலில் மகராவுக்கு உடம்பு தூக்கிவாரிப் போட்டது... கடவுளே கடவுளே என்று அவள் கதறிக் கொண்டு இருக்க அவளின் காதில் அவளது போன் இசைக்கும் சத்தம் கேட்க வேகமாய் அதை ஓடிப்போய் எடுத்தாள்.
பஞ்சவன் என்று வந்து இருக்க அவ்வளவு பயத்திலும் அவளுக்கு ஒரு துளி மகிழ்வு கிட்டியது.
எடுத்த எடுப்பிலே “பஞ்சவா” என்று அழைத்தாள். ஒரு கணம் அந்த பக்கம் இருந்து எந்த சத்தமும் இல்லை.
“பஞ்சவா” என்று அவனின் மௌனத்தை கண்டு இவள் இன்னும் பதறிப்போனாள்.
“கதவை திறடி” என்றான் அவன்.
“ஹாங்” என்று அவள் திருதிருக்க,
“வெளில நிக்கிறேன் வா” என்றான். வேகமாய் ஓடிப்போய் கதவை திறந்தாள். கண்களில் நீர் கசிந்துக் கொண்டு இருக்க முகமும் உடம்பும் வியர்த்துப் போய் உடை அவளின் யாக்கையோடு ஒட்டிக்கொண்டு இருக்க, உடலில் மெல்ல நடுக்கமும் தென்பட்டது. பயத்தின் ரேகைகள் இன்னும் அவளிடம் மிச்சம் இருந்ததை கண்ணுற்றவன்,
“பயந்துட்டியா?” என்று கேட்டான் அவளின் நிலையை நொடியில் புரிந்துக்கொண்டு.
“ம்ம்ம்... நீங்க நாளைக்கு தானே வர்றேன்னு சொன்னீங்க. இப்போ இந்த நேரத்துக்கு வரவும்... அது தான்” என்றாள்.
“இதுக்கு முன்னாடி இப்படி நடந்து இருக்கா?” என்று கேட்டான். அதற்கு பதில் சொல்லாமல்,
“சாப்பிட்டீங்களா?” என்று கேட்டாள்.
“நான் கேட்ட கேள்விக்கு இது பதில் இல்லடி” என்று பல்லைக் கடித்தான்.
“ப்ச் அதை விடுங்க...” என்றவள் அவன் கையில் இருந்த பையை வாங்கிக் கொண்டாள்.
“சிசிடிவியை செக் பண்ணவா?” என்றதில் அவள் நடை தடை பட திரும்பி அவனை பார்த்தாள்.
“இப்போ சமீபமா இந்த மாதிரி எல்லாம் எதுவும் இல்லை” என்றாள்.
“அதாவது நாங்க வந்த பிறகு இதுமாதிரி இல்லை இல்லையா?” என்று நிதானமாக கேட்டான்.
அவள் ஆமாம் என்று சொல்ல, பெருமூச்சு விட்டவன்,
“குளிச்சுட்டு வரேன். டிபன் ஏதாவது செய்து தா” என்று முன் கதவை தாளிட்டு விட்டு அவளின் படுக்கை அறைக்குள் நுழைந்துக் கொண்டான். அங்கே தூங்கும் குழந்தைகளை கொஞ்சியவன் குளிக்க சென்றான்.
அவனுக்கு நெய் தோசை ஊற்றி கார சட்னி செய்து வைத்தாள். முறுகல் தோசை இரண்டு வார்த்து வைக்க அவளின் பின்னோடு வந்து ஈரத்துடன் கட்டிக் கொண்டான்.
அவனின் வரவையும் ஈரத்தையும் உணர்ந்தவள்,
“என்ன இது இவ்வளவு ஈரமா இருக்கீங்க.. துடைக்கலையா?” கேட்டாள்.
“துடைச்சி விடு” என்றான்.
“நானெல்லாம் துடைக்க மாட்டேன்” என்று பிணங்கிக் கொண்டாள்.
“ஏனாம்?”
“வர்றதை சொல்லவே இல்லல்ல. அதனால நான் துடைக்க மாட்டேன்” என்றாள்.
“நோ ப்ராப்ளம்” என்றவன் ஒரு கையால் அடுப்பை அணைத்தவன் அவளை திருப்பி அவளின் முன் மேனியை வைத்து தன்னை துடைத்துக் கொண்டான்.
“ஹே...” என்று அவள் அலற அவளின் இதழ்களை தன் இதழ்களால் அடைத்தவன் முழுமையாக தன் ஈரத்தை அவளின் மேனிக்கு கடத்தி விட்டே ஓய்ந்துப் போனான்.
கோவைப்பழம் போல சிவந்துப் போனவளை இரசித்தவன்,
“பசிக்கிதுடி” என்றான்.
“முன்னாடி உட்காருங்க... நான் எடுத்துட்டு வரேன்” என்று மேசையில் அவனை அமரவைத்து விட்டு அவனுக்கு எடுத்துக்கொண்டு வந்தாள். அவளை மடியில் அமர்த்திக் கொள்ள பார்த்தவனை முறைத்தவள்,
“சாப்பிட்டுட்டு ஒழுங்கா எழுந்திரிங்க.. நான் போய் பால் காய்ச்சிட்டு வந்திடுறேன்” என்று மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள். அவள் வந்து ஒரு நிமிடம் கூட ஆகி இருக்காது தட்டுடன் இவனும் வந்து விட்டான்.
“ஏங்க”
“தனியா சாப்பிட நல்லாவே இல்லடி” என்றவன் அவளுக்கு ஒரு வாயை ஊட்டி விட்டு தான் உண்ண ஆரம்பித்தான்.
“ஆமா யுவன் அண்ணா வரலயா?”
“ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு. அதனால அவனை அங்கேயே விட்டுட்டு வந்து இருக்கேன். டூ டேஸ்ல வந்திடுவான்”
“கேர் டேக்கர் ஓகே தானே” என்று கேட்டான். புதிதாக அவன் வேலைக்கு வைத்து இருந்தான். ஆனால் இவள் தான் பிள்ளையை கொடுக்கவில்லையே. இப்பொழுது தான் இரண்டு நாட்கள் இவளது வீட்டுக்கு வந்து இருந்தார் அந்த பெண்மணி. அதனால் அவளிடமும் ஒப்பினியன் கேட்டான்.
“ம்ம்ம் ஓகே தான்”
“இப்பவாவது என் மகனை யுவன் கிட்ட குடுத்துட்டுப் போவியா?” என்று கேட்டான்.
மகரா நிமிர்ந்து அவனை பார்த்தாள்.
“அண்ணா வருத்தப் பட்டாங்களா?” கேட்டாள்.
“ம்ம்ம் அவன் மேல நம்பிக்கை இல்லன்னு நினைச்சுட்டான்”
“இனி அப்படி பண்ண மாட்டேன்” என்றாள்.
“அவன் கிட்ட சொல்லிட்டேன்” என்றான் இவன். அவள் அதிர்ந்துப் பார்க்க,
“ஐ நோ யுவர் தாட்ஸ்” என்றான் சிம்பிளாக. மெலிதாக புன்னகைத்துக் கொண்டாள்.
“ஊர்ல என்ன ப்ராசஸ்?” கேட்டாள்.
“நான் மும்பையில இருக்கும் பொழுதே நம்ம வயலுக்கு பக்கத்துல உள்ள இடம் விற்பனைக்கு வந்தது. அது தான் வாங்கிப் போடலாம்னு சென்னைக்கே மாத்திட்டு வந்தேன். ஆனா அதுக்குள்ள நமக்கு சொந்தமான நிலத்தையே விற்க வீட்டுல வேலை பார்த்துட்டு இருக்காங்க” என்று பெருமூச்சு விட்டான்.
“பக்கத்து காட்டுகாரங்கவங்க மூலமா தான் அங்க என்ன நடக்குதுன்னு இவ்வளவு நாளும் தெரிஞ்சுக்கிட்டேன். பரம்பரை நிலத்தை விற்க ஏற்பாடு பண்ணவும் உடனடியாக வரவேண்டியதா போச்சு. அதோட இங்க சென்னையில நம்ம கம்பெனிக்கு நியூ ப்ராஜெக்ட் வரவும் அதுக்கு கைட் பண்ணி டிஎல்லாவும் வர சொல்லி ரொம்ப ரெக்வெஸ்ட் பண்ணாங்க. சோ கிளம்பி வந்துட்டேன். இப்போ அந்த நிலத்தை ரெஜிஸ்டர் பண்ணிட்டு வர சொல்லி சொல்லி இருக்கிறேன். அதோட நம்ம குத்தகை காரருக்கு கோர்ட் மூலமா நோட்டிஸ் ஒன்னு அனுப்ப ஏற்பாடு பண்ணிட்டு வந்து இருக்கிறேன்” என்றான்.
“கட்டலா(கஷ்ட்டமா) இருக்காங்க?”
“ப்ச்... அதை எல்லாம் பார்த்தா வேலைக்கு ஆகுமா மகரா? பார்த்துக்கலாம் நீ எதையும் மைன்ட் பண்ணிக்காத. தாத்தா தான் இப்போ எல்லாவற்றையும் பார்த்துக்குறாரு. யுவன் ஜஸ்ட் சப்போர்ட் மட்டும் தான் பண்றான். நான் திரும்பி வந்ததே அவருக்கு பெரிய மாரல் சப்போர்ட்டா இருக்கு. இனி கவலை இல்லை அவரே அவரோட மகன்களை வழிக்கு கொண்டு வந்திடுவாரு” என்றான்.
அவனது தட்டை வாங்கி அவனுக்கு அவளே ஊட்டி விட பஞ்சவனின் விழிகள் அவளையே பார்த்தது. அவனது பார்வையை எதிர்க்கொள்ள முடியாமல் அவனின் இதழ்களிலும் மீசையிலுமே அவள் பார்வையை வைத்து இருந்தாள்.
“குகனுக்கு ஒரு வரன் வந்து இருக்கு” என்றான்.
“அப்படியா? வீட்டுல எல்லோருக்கும் ஓகேயா.. டேட் பிக்ஸ் ஆகிடுச்சா?” என்று கேட்டாள்..
“ம்ம்ம் எல்லோருக்கும் ஓகே தான். மேபி நாம அடுத்த வாரம் ஊருக்கு போற மாதிரி இருக்கும். மாப்பிள்ளை வீடு பார்க்க வராங்க. சோ நாம அங்க இருக்கணும்” என்றான்.
“நான் வந்தா அங்க எதுவும் பிரச்சனை வராதாங்க” என்று கேட்டாள் தவிப்பாக.
“குகனுக்கு நல்லாவே தெரியும் நீ அவனோட அண்ணி என்று” என்றான் அழுத்தமாய்.
“நான் குகனை சொல்லவில்லை...” என்றாள்.
“கல்யாண மாப்பிள்ளை அவனே ஒன்னும் சொல்லல. வேற யாரு உன்னை சொல்லப்போறா?” என்று கேட்டவன், அவளின் மௌனத்தை கண்டு பெருமூச்சு விட்டு,
“உன் உரிமையை யாரும் தரணும்னு எதிர் பார்க்காதடி. அது என்னை விட்டுக் குடுத்த மாதிரி இருக்கு. எனக்கு வலிக்கும்” என்று நெஞ்சை நீவினான்.
“என்னங்க” என்று பதறிப்போனாள்.
“என்னை ஏத்துக்கிட்ட தானே...”
அவள் தலையை ஆட்ட,
“அப்போ என் சம்மந்தப் பட்டது எல்லாமே உன்னையும் சேரும் மகரா”
அவள் சம்மதமாக தலையை ஆட்டினாள்.
“கட்டல்(கஷ்ட்டப்) படுத்துறனாடி?”
அவனது வாயை பொத்தியவள் அப்படியே அவனது மடியில் பட்டென்று அமர்ந்துக் கொண்டாள்.
அவளின் இடையை சுத்தி வளைத்துக் கொண்டவன் அவளின் தோளில் அழுத்தமாக முகம் புதைத்துக் கொண்டான்.
அவனது மீசை உரசலில் இருந்த உரிமையை முழுமையாக உணர்ந்துக் கொண்டாள். அதே போல தன் மடியில் வந்து அமர்ந்தவளின் உரிமையை நன்கு உணர்ந்துக் கொண்டவனுக்கு அவளிடமிருந்து இதை தானே நான் எதிர் பார்த்தேன் என்று நெஞ்சம் மலர்ந்தது.
அன்றிரவு இருவரும் ஒரே படுக்கையில் படுத்துக் கொண்டார்கள். இருவரின் மத்தியிலும் இரு பிள்ளைகள் படுத்து இருக்க இவர்கள் ஆளுக்கு ஒரு பக்கமாய் படுத்துக் கொண்டார்கள்.
ஆனால் பஞ்சவனுக்கு பெண்ணவளின் அருகமை வேண்டும் போல இருக்க அவளை பார்த்துக் கொண்டே கீழே போர்வையை விரித்துப் போட்டான். அதில் இவளுக்கு முதுகு தண்டில் மின்னல் வெட்டியது.
பஞ்சவன் வாய் திறந்து எதுவும் கேட்கவில்லை. ஆனால் அதை பார்வையிலே அவன் உணர்த்த இதழ்களை கடித்துக் கொண்டாள். பஞ்சவன் கீழே படுத்து ஐந்து நிமிடம் ஆகி இருக்கும். ஆனால் அவன் அழைக்கவே இல்லை. அவளால் போகாமல் இருக்க முடியவில்லை.
மெல்ல எழுந்து அமர்ந்தவள் இரு பிள்ளைகளின் ஓரத்திலும் தலையணைகளை அடுக்கி வைத்தவள் தயங்கிய கால்களை எட்டி அடி எடுத்து வைத்து அவனை நோக்கி நடந்தாள்.
ஒழுங்காக இருந்த சேலையை கூட நீவி விட்டுக் கொண்டே அவனருகில் போய் நின்றாள்.
தன்னை தேடி வந்தவளின் காதலில் சிலிர்த்தவன் பட்டென்று அவளை பிடித்து இழுத்து தன் மீது விழ வைத்தான் பஞ்சவன்.