நிதானமின்றி பஞ்சவன் முத்தமிட அவனை சமாளிக்க முடியாமல் தடுமாறி பின்னால் இன்னும் வளைந்தாள் மகரா...
ஆழ்ந்து அனுபவித்து ஒரு இதழ் முத்தம் கொடுத்தவன் சற்று விலகி அவளின் முகத்தை பார்த்தான். அவளின் முகத்தில் இன்பத்தின் சாயல் இருக்கக்கண்டு மென்மையான அவளது கன்னத்தில் தன் மீசை முடி உரச அழுத்தமாய் ஒரு சிறு முத்தம் கொடுத்தவன்,
“இதுக்கு மேல இங்க இருந்தா இன்னும் நிலைமை மோசமாகி விடும்டி... நான் அங்க போறேன்” என்று சொல்லி விட்டு அவன் போக, போகும் அவனையே விழி அகலாது பார்த்தாள்.
என்னவோ அவனது சட்டையை பிடித்து இழுத்து தன்னுடனே வைத்துக் கொள்ள ஆசை பிறந்தது. ஆனால் அதை செய்ய விடாமல் நாணம் வந்து தடுக்க முகம் சிவக்க வீட்டுக்குள் நுழைந்துக் கொண்டாள். இரவு முழுவதும் இருவருக்கும் கொஞ்சம் கூட தூக்கமே வரவில்லை.
வேலையும் எதுவும் செய்யவில்லை. என்னவோ ஒரு ஏகாந்த நிலையில் தான் இருந்தார்கள் இருவரும்.
அடுத்த நாள் காலையில் கதவு தட்டப்பட்டது. குளித்த ஈரத்துடன் வந்து கதவை திறந்தாள் மகரா. அவளை ஏமாற்றாமல் பஞ்சவன் தான் நின்றிருந்தான்.
“குட்மார்னிங்” என்று சொல்லிக் கொண்டே குழந்தையோடு உள்ளே நுழைந்தான். “குட்மார்னிங்” என்று இவளும் சொல்ல அவளை திரும்பி பார்த்தவன்,
“இந்த மார்னிங் கிஸ் எல்லாம் எதுவும் கிடைக்காதா?” அவளின் எழில் மிகுந்த முகத்தை பார்த்துக் கொண்டே கேட்டான்.
“ஷ்... காலையிலையே படுத்தாதீங்க... நேத்திக்கு குடுத்ததுலையே லிப்ஸ் எல்லாம் சிவந்து போய் எரியுது. இதுல இன்னைக்கும்னா வாய்ப்பு இல்லை. நீங்க இங்கயே இருங்க நான் பாப்பாவை கவனிச்சுட்டு வந்திடுறேன்” என்றவள் பிள்ளையை வாங்கிக்கொண்டு அறைக்குள் நுழைந்துக் கொண்டாள்.
பிள்ளையை கவனித்துக் கொண்டு இருக்கையிலே அவளின் முதுகுக்குப் பின்னால் கதவடைக்கும் சத்தம் கேட்க அடிவயிற்றில் மின்னல்கள் பல வெட்டியது. கண்களை அழுந்த மூடிக் கொண்டாள்.
திரும்பாமல் போனவளின் முதுகில் தன் முழு பாரத்தையும் போட்டு சாய்ந்து அமர்ந்துக் கொண்டான் பஞ்சவன்.
நேற்றைக்கு போலவே செய்கிறாரே...” என்று மனம் பதறிப் போனாள்.
அவனது முரட்டுக் கைகள் அவளின் மெல்லிய இடையில் பதிய முதுகு தண்டில் மின்சாரம் பாய்ந்தது. அதை தொடர்ந்து அவளின் முதுகில் அவனது மூச்சுக்காற்றுப் பட்டு அவளை கூச வைக்க ஆழ்ந்த மூச்சை எடுத்து விட்டாள்.
அவளை நெருங்கி அமர்ந்தவன்,
“ரொம்ப தொல்லை பண்றனாடி” என்று மீசை உரச அவளது காதில் கேட்டான்.
இல்லை என்று தலையை ஆட்டியவள், “எப்ப ஊருக்கு போகணும்” என்று கேட்டாள். அவளது தோள் பட்டையில் முகத்தை ஊன்றி பிள்ளையின் கால்களை வருடி விட்டவன்,
“இன்னைக்கு” என்றான்.
“தனியாகவா?”
“ம்ம்ம்”
“பேபியை நான் பார்த்துக்குறேன். நீங்க தனியா போக வேண்டாம். யுவன் அண்ணாவையும் கூட கூட்டிட்டுப் போங்க” என்றாள்.
அவளது அக்காரையில் மனம் கரைந்தவன்,
“ரெண்டு பேபியை வச்சு எப்படிடி சமாளிப்ப... யுவன் இங்க இருக்கட்டுமே” என்றான்.
“அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்... மண்டே தானே அடுத்த சப்மிட். நாளைக்கு ஒரு நாள் நைட் உட்கார்ந்தா ப்ராஜெக்ட் செய்து முடிச்சுடுவேன்” என்றாள்.
“வேணா யுவனை செய்ய சொல்லவா?” என்று அக்கறையாக கேட்டான்.
“எதுக்கு மீட்டிங்ல வச்சு என்னை கேள்வி மேல கேள்வி கேட்டு திணறடிக்கவா? ஒன்னும் வேணாம் நானே பார்த்துக்குறேன்” என்றாள்.
“அது சும்மாடி... நீ என்னை பார்க்கவே இல்லை. என் பேச்சை கேட்கவே இல்லல்ல அதனால நான் கொஞ்சம் கடுப்பாயிட்டேன்” என்று பிள்ளையின் கால்களை ஒரு கையால் வருடி விட்டபடி இன்னொரு கையால் அவளின் மெல்லிய இடையை வருடி விட்டு அழுத்திப் பிடித்தான். இருவரான அவனது செயலில் ஜெர்க்கானாள்.
“எப்போ பாரு ஏதாவது செஞ்சா உடனே முதுகு தண்டு விரைச்சிக்கும்டி உனக்கு...” என்று கேலி செய்தவன் பிள்ளையின் கால்களை வருடி விட்டு அதே கையால் அவளின் முதுகை வருடி விட்டு அவளை இயல்புக்கு கொண்டு வந்தான்.
“ஈசியா இருடி”
“ம்ம்ம்”
“எங்க சொல்ற நேரம் தான். அதுக்கு பிறகு பக்கத்துல வந்தாலே விறைச்சிக்கிற” என்றவனின் முகம் அவளின் கழுத்தில் உரிமையாக பதிந்துக் கொண்டது. அவனின் முகத்தோடு தன் கையை கொண்டு சென்று தன்னோடு இன்னும் அழுத்திக் கொள்ள ஆசை வந்தது மகராவுக்கு. ஆனாலும் அவளால் அவளின் கூச்சத்தையும் நாணத்தையும் தாண்டி வரமுடியவில்லை.
அதை அவன் உணர்ந்தானோ என்னவோ அவளின் வலக்கையை எடுத்து தன் கன்னத்தோடு வைத்து அளித்துக் கொள்ள அதன் பிறகு அவளே தன்னோடு அவனை பிடித்து அழுத்திக் கொண்டாள்.
இருவரின் நெருக்கமும் அவ்வளவு கவிதையாய் இருந்தது. இந்த நெருக்கம் இப்படியே நீளாதா என்கிற தவிப்பு இருவரிடமும் இருந்தது.
தன்னை உரசும் அவனின் அணலை(கன்னத்து முடி-தாடி) இரசித்துக் கொண்டே “காபி போடவாங்க?” என்று கேட்டாள்.
“ம்ம்ம் தூங்கி எழுந்த உடனே இவள் அழவும் அப்படியே தூக்கிட்டு வந்துட்டேன்... இனி தான் பரேஷ் பண்ணனும்” என்றான்.
“புது பிரஷ் இருக்கு தரவாங்க” என்று இவள் கேட்க அவளை இன்னும் நெருக்கமாக அழுத்திப் பிடித்தவன்,
“வேணாம்” என்று மறுத்தான். அதில் அவள் மனம் வாடிப்போனது. தான் அதிகப்படியான உரிமை அவனிடம் எடுத்துக் கொண்டோம் என்று தவித்துப் போனாள்.
“சாரி” என்று அவள் சொல்ல,
“உன் பிரஷ் போதும்” என்று அவளின் முகத்தை வளைத்துப் பிடித்த பஞ்சவன்,
“தப்பா நினைச்சியா?” கேட்டான். மகரா தலையை குனிந்துக் கொள்ள,
“எனக்கு இங்க உன் கூடவே இருக்க ஆசை... ஆனா நீ என்ன சொல்லுவியோன்னு தான் தயக்கம்” என்று சொன்னவன்,
“குளிக்க உன் சோப்பையும் யூஸ் பண்ணிக்கிறேன்” என்று அவளின் காதோரம் சொல்ல,
“வாட்?” அதிர்ந்துப் போனாள்.
அவளின் அதிர்வை உள்வாங்கியவன் “ஒய்...?” என்றான்.
“நோ...” என்றாள் இதழ்களை கடித்து.
“உன் மேனி தொட்ட சோப்பு என் மேனி தீண்டக் கூடாதா...?” காதோடு அவன் கேட்க இவளுக்கு மூச்சு முட்டிப் போனது.
“ப்ளீஸ்” என்று அவனது இதழ்களை தன் கைக்கொண்டு மூடப் பார்க்க.
“அது தான் ரீசனா?” என்று கண்கள் சிரிக்க அவன் கேட்டான். இதழ்களோ இறுக்கமாக இருந்தது. அவளின் உள் உணர்வுகளை கண்டுக் கொண்டவனுக்கு ஏகத்துக்கும் உல்லாசம்.
“ப்ளீஸ் ங்க” என்று நாணம் மிகுதியில் அவள் கெஞ்ச,
“உன்னை தொடத்தான் அனுமதி இல்லை. உன்னை தொட்ட சோப்பு என் தேகம் தொட்டு விளையாடட்டுமே... அதுக்கு கூடாவா உனக்கு இரக்கம் வரவில்லை” மேலும் அவளை வம்பு பண்ண, ஏகத்துக்கும் நாணம் பொங்கியது மகராவுக்கு.
“நான் போய் காபி போடப்போறேன்” என்று பிள்ளையை கீழே படுக்க வைத்து விட்டு அவள் எழ,
“ஆடையை சரி செய்யும் வழக்கம் இல்லையோ?” என்று பஞ்சவன் கேட்க பதறிப் போனவள் கீழே குனிந்துப் பார்த்தாள். சேலை நன்றாக மறைத்து இருந்தது. அவனுக்கு முன்னாடி எப்படி ஆடையை சரி செய்வது என்று எண்ணி எழுந்துக் கொண்டாள். ஆனால் கவனமாக சேலையை நன்றாக இழுத்து முழுவதுமாக மறைத்துக் கொண்டாள்.
அப்படி இருந்தும் இவன் இப்படி கேட்க ஒரு கணம் விதிர்விதிர்த்துப் போனாள்.
“ரிலாக்ஸ் எதுவும் தெரியல” என்று அவன் கண் சிமிட்ட, அவனை அடிக்க கைகள் பரபரத்தது. ஆனால் இருக்கும் நிலையில் கைகளை தூக்கி அவனை அடிக்கவும் முடியாதே...
முகம் சிவக்க “நான் போறேன்” என்று நழுவிக் கொண்டாள். அவளை மேலும் சீண்ட எண்ணம் வந்தது. ஆனால் அவளின் நாணம் கண்டு தன்னை பொறுத்துக் கொண்டவன் தலையை அழுந்தக் கோதிக் கொண்டான்.
அவளின் குளியல் அறைக்குள் நுழைந்துக் கொண்டான். வெறும் கைலியுடன் வெற்று மார்பில் அவளது துண்டை மட்டும் போட்டுக் கொண்டு வந்தான். அவள் முன்பு வெறும் துண்டுடன் நிற்க தான் ஆசை. ஆனால் அவள் கலவரம் ஆவாளே என்று கைலியை கட்டிக் கொண்டு அவளிடம் வந்தான்.
இரு பிள்ளைகளும் நன்றாக தூங்கிக் கொண்டு இருந்தது. காபி போட்டு முடித்து அவனுக்காக காத்துக் கொண்டு இருந்தாள்.
பஞ்சவன் வரவும் இருவருக்கும் ஊற்றி எடுத்துக் கொண்டு வந்தாள். அவள் கையில் இருந்த ட்ரேயை வாங்கி அருகில் வைத்தவன் அவளை சுழட்டி எடுத்து தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
“காபி குடிக்கலையா?” கேட்டாள்.
“ம்ம்ம் குடிச்சுக்கலாம்” என்றவன் அவளின் கழுத்தில் முகம் புதைத்துக் கொண்டான்.
அவனது ஆனா வாசத்தோடு அவளின் சோப்பு வாசமும் வர முகம் சிவந்துப் போனாள்.
“உன் சோப்பு போட்டு தான் குளித்தேன்” என்று அவன் சொல்ல, அப்பட்டமாய் அவளின் முகம் சிவந்துப் போனது.
“பரவாயில்லை” என்று அவள் நாணத்தை மறைத்துக் கொண்டு சொல்ல,
“இல்ல உன் எல்லா அங்கங்களையும் தொட்ட சோப்பாச்சே அது தான்” என்றான்.
“ப்ளீஸ்” என்றாள் காதுமடல்கள் கூச.
“இந்த நாணம் இந்த வெட்கம் எனக்கு ரொம்ப பிடிச்சு இருக்குடி... கிஸ் பண்ணிக்கவா?” அவளிடம் அனுமதி கேட்டவன் அவளின் ஒப்புதல் கிடைக்கும் முன்பே அவளின் இதழ்களை ஆவேசமாக கவ்விக் கொண்டான்.
கைகள் அவளின் மேனியில் விளையாடத் தொடங்க தவித்துப் போனாள்.
அவளின் மிக அந்தரமாய் ஒரு கேள்வி கேட்க வேகமாய் அவனை விட்டு அவள் விலக, அவளை விலக விடாமல் மீண்டும் தன் மடியில் அமர்த்திக் கொண்டான்.
“பஞ்சவா ப்ளீஸ்” என்று அவள் முகம் சிவக்க,
“ஒரே ஒரு கேள்வி தானே கேட்டேன். கொக்கி போட்டுட்டியா இல்லையான்னு..? அதுக்கு உன்னால பதில் சொல்ல முடியாதா?” மீண்டும் அவன் அதிலே நிற்க,
“போடா” என்று சொல்லி விட்டு வேகமாய் அவனை விட்டு விலகி அடுப்படிக்குள் நுழைந்துக் கொண்டாள். அவளின் பின்னோடு போய் கட்டிக் கொண்டவன் அவளின் முகத்தை திருப்பி தன்னை பார்க்க வைத்தவன்,
“பிடிக்கலையாடி?” என்று கேட்டான். மகராவின் விழிகளில் கண்ணீர் அரும்பியது.
“ப்ச் அழாம பதில் சொல்லு” என்று அவளின் கண்ணீரை துடைத்து விட்டான்.
அவள் அவனையே பார்த்தாள். அவளது பார்வையில் அவன் மெல்ட்டாக,
“என்னடா?” என்று வாஞ்சையாக கேட்டான். அவனது கையை தட்டி விட்டவள் வேகமாய் அவனது வெற்று மார்பில் முகம் புதைத்துக் கொண்டாள்.
அவளின் தலையை கோதி விட்டபடி அப்படியே நின்றான் பஞ்சவன்.
“நல்ல மூட ஸ்பாயில் பண்ணிட்டேனா?” அவனது நெஞ்சில் இருந்தபடியே நிமிர்ந்து பார்த்துக் கேட்டாள்.
“இது போல எத்தனையோ தருணம் நமக்குள்ள வரும்டி.. பட் திசிஸ் மை ஸ்பெஷல்...” என்று தன் மார்பில் அவளே வந்து தஞ்சம் கொண்டு இருந்தது அவனுக்கு அவ்வளவு பிடித்து இருந்தது.
இருவரும் மட்டும் இருந்த தருணம்... நீண்டுக் கொண்டே போன உரையாடல்... அதன் பிறகு பஞ்சவன் ரொம்ப இன்டிமேட்டாக போகவில்லை... அவளின் தயக்கமும் நாணமும் கண்டு ஒதுக்கி விட்டான். ஆனால் அவளை முழுவதுமாக தன் கையணைவிலே வைத்துக் கொண்டான்.
அவள் தவிப்பாக அவனை பார்க்க,
“சில் பேபி..” என்று அவளையும் சமாதனம் செய்துக் கொண்டான். அவள் சமைத்துக் கொடுக்க யுவனையும் வரச்செய்து மூவரும் உண்டு விட்டு பிள்ளைக்கும் ஊட்டி விட, பஞ்சவனும் யுவனும் ஊருக்கு கிளம்பினார்கள்.
மகராவின் விழிகளில் தெரிந்த பிரிவு உணர்வை கண்டு தவித்துப் போனவன், அவளின் கண்களிலும் இதழ்களிலும் அழுத்தமாக முத்தம் வைத்தவன், அவளுக்கு பல கவனங்களை சொல்லி விட்டு கிளம்பினான்.